என் பார்வையில் இந்த வாரம்!

பல நாட்கள் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட "நமக்கு நாமே" படத்தை, ஒரே "த்தூ" வில் அனைத்து தியேட்டரிலிருந்து தூக்கி அடிச்சிருக்கும் விஜயகாந்த், அனைத்து மக்களையும் அவரைப்பற்றியே பேச வைத்திருக்கிறார்; அது நெகடிவாகவோ - பாசிடிவாகவோ, ஆனால் ஜெயலலிதாவுக்கு அடுத்து விஜயகாந்த்தான் என்ற மாயை உருவாக்கவே, தஞ்சையில் ஜெயலலிதா படத்தை கிழிக்க சொன்னதன் நோக்கமாக கூட இருக்கலாம். இது அந்தகால கருணாநிதியின் யுக்தி என்றாலும் அதை இப்போது செய்து கொண்டிருக்கும் விஜயகாந்த், 2016க்கான சட்டமன்ற தேர்தல் வியூகங்களில் தெளிவாகத்தான் இருக்கிறார்.

#

வேளாண் விஞ்ஞானி திரு. கோ.நம்மாழ்வார், விண்வெளி விஞ்ஞானி திரு. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் போன்ற பெருந்தமிழர்களின் படங்களை கூட தங்களின் சுய பெருமைக்காகவும் - புகழுக்காகவும் தான் ப்ரோபைல் படமாக சிலர் வைத்துள்ளனர்; ஆனால், இருவரின் அடிப்படை வாழ்வியல் கொள்கையான சுய ஒழுக்கத்தை துளி கூட பின்பற்றாமலேயே!
த்தூ...

#

'ஐயா' என்ற சரியான பதத்தை மறைத்து, 'அய்யா' என தவறாக எழுதிக்கொண்டு, நான் தமிழனென பெருமைப்படுவதில் என்ன நியாயம்?

#

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனரும், மதுரை மீனாட்சி மருத்துவமனையின் நிறுவனருமான, மருத்துவர் திரு. ந.சேதுராமன் அகமுடையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! (டிசம்பர்  30)

#

ஊடக தர்மத்தை தன் முதலாளிகளிடம் விற்றுவிட்ட பத்திரிகையாளர்கள், விஜயகாந்தின் அரசியல் நாகரீகத்தை பற்றி பேசவே தகுதியற்றவர்கள்!

சுமேரியர் என்ற தமிழர் நாகரீகம்!

சுமேரிய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமென்ற ஆராய்ச்சிகளை பலர் செய்து, அதற்கான ஆய்வு காணொளிகளை ஆதாரமாக வெளியிட்டுள்ளனர். சுமெரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் பல தொடர்புண்டு என பல தரவுகள் கிடைத்துள்ளன. இந்த சுமேரிய தமிழ் தொடர்பான ஆய்வு காணொளிகளை யூ ட்யூப்பில் கூட பல ஆவணமாக்க பட்டிருக்கின்றன.

தமிழில் ”சின்னையா தேவர்” என்பதை ஆங்கிலத்தில்
CHINNAYYA THEVAR, SHINNAYYA DEVAR என்று இரு மாதிரியாக எழுதலாம். இங்கே ச என்ற எழுத்தை SA, CHA என இருமுறையாக எழுதினால் ஒலியளவு ஏறத்தாழ ஒன்றாகத்தான் இருக்கும். Thevar - Devar என எப்படி முதலெழுத்து THE , DE மாறினாலும் தே என்ற ஒலியோடு தேவர் என்ற ஒரே ஒலியைத்தான் நமக்கு தருகிறது.

A - Y
B - P
C - S
D - T
E - I

இப்படியாக இரு எழுத்துகள் மாறினாலும் ஒலியொன்று தான் என்று பல உதாரணங்களை சொல்லலாம். அப்படி பார்த்தால், SUMERIAN என்ற இந்த நாகரீகத்தை குமரியன் நாகரிகம் எனவும் சொல்லலாமே.

SUMERIAN - CUMERIAN - KUMARIAN

- இரா.ச.இமலாதித்தன்

திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டு துளிகள்!

01. அதிக பெரும்பான்மையாக உள்ள 62 தொகுதிகளில் அகமுடையாரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு. இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம்.

02. முக்குலம் தேவையில்லை; (அகமுடையார் என்ற) இக்குலம் போதும்!


03. அகமுடையார்கள் மற்ற தமிழ் சாதிகளிடம் நட்பு பாராட்டுவது போலவே, இனி கள்ளர் - மறவர்களிடம் நண்பர்களாகவே இருக்க விரும்புகிறோம். அகமுடையார்களுக்கு மாமன் - மச்சான் - மாப்பிள்ளைகளாக கள்ளரும், மறவரும் இருக்கட்டும்; ஆனால், பங்காளிகளாக அகமுடையார்களுக்குள் மட்டும் இருந்து விடுகிறோம். எங்களுக்கு முக்குலம் தேவையில்லை.

04. இராமநாதபுரத்தில் "அகமுடையார் பல்கலை கழகம்!" விரைவில் தொடங்கப்படும்.

- ஸ்ரீபதி செந்தில்குமார், நிறுவனத்தலைவர்,
தமிழக தலைமை அகமுடையார் சங்கம்.
திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டில் கொடுக்கப்பட்ட நாட்காட்டி!


வேட்டவலம் அகமுடையாரின் ப்ளக்ஸ்!

திருக்கோவிலூர் தொழிலதிபர் திரு. டி.கே.டி.முரளி அவர்களால் அகமுடையார் மாநாட்டு கொடியேற்றம்!

அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டின் நிறுவனர் திருச்சி திரு. எம்.எல்.சதீஸ்குமார் அகமுடையார் அவர்களால் அகமுடையார் சங்கப்பாடல்களின் இரண்டாம் பாகம் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

அனைத்துலக அருணகிரிநாதர் அறங்காவலர் குழுத்தலைவரான ஐயா. தனுசு அகமுடையாரின் எழுச்சி உரை!

அகமுடையார் சங்க பாடல்கள் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது!

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அகமுடையார் மடத்தை மீட்ட, ஆதமங்கலம் லட்சுமணன் அகமுடையாருக்கு ரூ.10,000/- நன்கொடை அருணாச்சால முதலியாரால் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அகமுடையார் சங்க பொதுசெயலாளர் முனைவர் தி.அரப்பா அவர்களின் அரசியலுரை!

வருங்கால சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செந்தில் அகமுடையாரின் எழுச்சி உரை!

நிறுவனத்தலைவர் திரு. ஸ்ரீபதி செந்தில்குமார் அவர்களின் சிறப்புரை!

அகமுடையார் மாநாட்டு மலர், தம்பிக்கோட்டை எம்.கே.செந்தில் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அகமுடையார் மாநாட்டு விழா மேடையை அலங்கரித்து கொண்டிருக்கும் அனைவருக்கும், மருது பாண்டியர்கள் படம் பதித்த காலண்டர் வழங்கப்பட்டது.

கமுதி நாராயணமூர்த்தி அவர்களால் அகமுடையார் மாநாட்டு தீர்மான உரை!தென் மண்டலத்தை பொறுத்தவரை 90%க்கும் மேற்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் முறையான மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும், மதுரை - திண்டுக்கல் - தேனி - இராமநாதபுரம் - சிவகங்கை உள்ளிட்ட அனைத்து அகமுடையார் சங்கங்களின் பிரதிநிதிகளும் திருவண்ணாமலை மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்து சிறப்பித்தார்கள். குறிப்பாக மதுரை திருமங்கலம் கீழமண்டு - மேலமண்டு அகமுடையார் சங்கங்கள் சார்பாக அச்சங்கங்களின் பொறுப்பாளர்களான திரு.மருதுபாண்டியன் மற்றும் துர்கா தேவனுக்கு நேரடியாக அழைப்பு கொடுக்கப்பட்டது. இந்த மாநாட்டு அழைப்பிதழானது இம்முறை அனைத்து அகமுடையார் சங்கங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டதே தவிர சங்க உறுப்பினர்களுக்கு என தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் அளிக்கவில்லை. அழைப்பிதழ் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து தலைவர்களும் மேடையில் அமர இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வரமுடியாத சங்க பிரதிநிதிகள் தொலைபேசியிலும் கடிதம் மூலமாகவும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். 90%க்கும் மேற்பட்ட அனைத்து அகமுடையார் சங்க தலைவர்களின் பெயர்கள், மாநாட்டு விழா அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடதக்க விசயம்.
இதில் இன்னும் சந்தேகம் இருந்தால் தெளிவு பெற அழைக்கவும்.

திரு. தி.அரப்பா (9943713797)முக்குலத்திலா அகமுடையார்?

முக்குலம் என அடையாளப்படும் மூன்று சாதிகள், கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட இந்த மூன்று மட்டுமே. ஆனால், வல்லம்பர் என்ற நான்காவதாக ஒரு சாதியை முக்குலத்தில் யார் இணைத்தது? அப்படி இணைத்தால் அது முக்குலமா? சாதி சான்றிதழில் அகமுடையாரென இருக்கும் உடையார் - முதலியார் - பிள்ளை பட்டம் போடும் வடக்கத்திய அகமுடையாரை ஏற்க மனமில்லாத கள்ளரும் - மறவரும், சாதி சான்றிதழில் வல்லம்பர் என இருக்கும் இன்னொரு சாதியை முக்குலத்தில் இணைத்து கொள்ள முயல்கிறார்கள் என்பது வெட்கக்கேடு.

நத்தம் விஸ்வநாதன் கூட வல்லம்பர் சாதி தான். ஆனால் அவருக்கு பட்டம் சேர்வை என்பதால், நத்தம் விஸ்வனாதன் அகமுடையார் ஆகிவிட முடியுமா? இப்படி பல குழப்பங்கள் நிறைந்த முக்குலம் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் தனித்த அடையாளத்தோடு அகமுடையராகவே இருந்து விட்டு போகிறோம். இன்னும் எத்தனை காலம் தான் முக்குலம் என்ற பெயரில் கள்ளர் - மறவரான உங்களை முதுகில் சுமப்பது? இப்போது போதாகுறைக்கு வல்லம்பர் சாதியையும் சுமக்க அகமுடையாருக்கு சகிப்புத்தன்மை இல்லை. நீங்கள் வேண்டுமானால் அவர்களை நிரந்தரமாக உங்களோடு முக்குலமாக சேர்த்து கொண்டு, அகமுடையாரை விட்டு விடுங்கள். உங்கள் குலங்களுக்கு புண்ணியமாக போகும்.

- இரா.ச.இமலாதித்தன்

மூன்று தேசியங்களுக்குள் டிசம்பர் 25!

நாகை மாவட்டம் கீழ வெண்மணியில், கூலி உயர்வுக்காக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக குரலெழுப்பிய சக தமிழ்குடிகளான பள்ளர்-பறையர்களின் உரிமைக்குரல்வளையை ஒரே குடிசையில் வைத்து 44 உயிர்களை கொன்றொழித்த வடுக பண்ணையாரின் வஞ்சகம் நிறைந்த நாள் இன்று.

‪#‎தமிழ்தேசியம்‬

பல சிற்றரசுகளையும், பல மாகாணங்களையும், பல சமஸ்தானங்களையும், வல்லபாய் படேல் போன்றோரின் முயற்சியால் இந்தியம் என்ற ஒற்றைச்சொல்லில் கட்டமைக்கப்பட்ட இந்த நவீன தேசத்தின் அப்பழுக்கற்ற ஓர் உன்னத தலைமை அமைச்சராக விளங்கிய, முன்னாள் பிரதமரான உயர்திரு. அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் பிறந்தநாள் இன்று.

‪#‎இந்தியதேசியம்‬

உலகெங்கும் வணிகமும் மொழியும் உலகமயமாக்கல் ஆக்கப்பட்ட அதே நேரத்தில், தன் பங்கிற்கு உலகமாயாக்கப்பட்ட மதம் தான் கிருத்துவம். எங்கெல்லாம் இம்மதம் பரப்பப்பட்டதோ அங்கெல்லாம் அம்மக்களின் வாழ்வியல் கலச்சாரத்தோடு தன்னையும் உருமாற்றி கொண்டு, அம்மண்ணில் பேசப்பட்ட மக்களின் மொழியின் வாயிலாகவே எளிய மக்களையும் மனரீதியாக மதமாற்றம் செய்த மதமான கிருத்துவத்தின் அதிமுக்கியமான கிருஸ்துமஸ் நாள் இன்று.

‪#‎சர்வதேசியம்‬

துக்கமும் - மகிழ்ச்சியும் - வாழ்த்துகளும் என கலவையாக நிறைந்த நினைவேந்தல் அனுசரிக்கக் கூடிய மறக்க முடியாத நாள் இந்த டிசம்பர் 25!

- இரா.ச.இமலாதித்தன்

அகமுடையார் ஓட்டு, அந்நியருக்கு இல்லை!திமுகவோ அதிமுகவோ தேமுதிகவோ, எந்த கட்சியாக இருந்தாலும் அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் அகமுடையார் வேட்பாளரையே நிறுத்திட வேண்டும். அப்படி பார்த்தால் குறைந்த பட்சம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அகமுடையார்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே. காரணம் என்ன? முக்குலமென சொல்லி அகமுடையார் மிகப்பெரும்பான்மையாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளெல்லாம் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

டெல்டாவிலோ, வடக்கிலோ மறவருக்கு வாக்கு வங்கி இல்லை. வடக்கிலோ, கடைகோடி தெற்கிலோ கள்ளருக்கு வாக்கு வங்கி இல்லை. ஆனால், அகமுடையாருக்கு தெற்கு - வடக்கு - டெல்டா - கொங்கு என எல்லா பக்கமும் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய வாக்கு வங்கி உண்டு.
முக்குலமென சொல்லி அகமுடையாருக்கென கிடைக்க வேண்டிய பதவிகளையும் விழுங்கி ஆக்டோபஸ் போல அனைத்து பதவிகளையும் அனுபவித்து வருவதை இனியும் தட்டி கேட்காமல் இருக்க முடியாது. அந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய சொல்லி, ஆளும் - ஆளப்போகின்ற அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவே திருவண்ணாமலையில் அகமுடையார் திருப்புமுனை மாநாடு.

அகமுடையாருக்கான மாநாடு என்பது யாருக்கும் எதிரானதல்ல. எனவே மறுக்கப்பட்ட சமநீதியை நிலை நாட்ட 27.12.2015 அன்று திருவண்ணாமலையில் அகமுடையார்களாய் அணிதிரண்டு ஆளப்போகின்ற அரசாங்கத்திற்கு அடையாளப்படுத்தி கொள்ளலாம், அகமுடையார் என்ற சாதி தமிழகமெங்கும் பெரும்பான்மையாக இருக்கின்றதென!

- இரா.ச.இமலாதித்தன்

பீப் பாடலுக்கெதிரான போராளிகள்!

தாய்மையின் அடையாளத்தையே பாடலின் வரிகளில் சேர்த்த சிம்பு கண்டனத்து உரியவர் தான். அதில் எந்த மாற்று கருத்துமில்லை. அதற்காக கைது - சிறை என்ற நிலையெல்லாம் தேவையேயில்லை. அந்த பீப் பாடலில் சம்பந்தப்பட்ட அனிருத் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த பீப் பாடலை உருவாக்கியதில் பாதி பங்கு, இசையமைத்த அனிருத்துக்கும் உண்டு. ஆனால் அவரை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

மாதர் சங்கம் போன்ற பெண்ணுரிமை போராளி சங்கங்களெல்லாம் பீப் பாடலுக்கு கொடுக்கும் அதிமுக்கியத்துவத்தை பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் வாரமொருமுறை பாலியல் வன்புணர்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அதையெல்லாம் செய்திதாள்களின் ஏதோவொரு மூலையில் போடப்பட்டுள்ளதை எளிதாக கடந்து விட்டு ஒரு நடிகனிடம் ஏன் இவ்வளவு மல்லுக்கட்டுகிறீர்கள்?

தான் செய்ததது தவறென உணர்ந்து மன்னிப்பு கேட்ட சிம்பு மற்றும் அவரது சார்பாக சிம்புவின் பெற்றோர்களும் ஊடகங்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரிய பின்னும், போராளிகள் சங்கங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதும் புரியவில்லை. விஜய் டிவியின் நீயா நானாவில் இதை ஒரு விவாத பொருளாக எடுக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள் என தெரிகிறது.
தன்னுடைய தவறை ஒப்பு கொண்டு பொதுவெளியில் மன்னிப்பு கேட்ட பின்பே அந்த தவறின் வீரியத்தை சிம்பு உணர்ந்திருப்பார். இனி ஒருபோதும் அவர் இதுபோன்ற தவறை செய்ய மாட்டார் என உறுதியாக நம்பலாம். தன் தவறுக்கு மன்னிப்பு கேட்ட பின்னும் தனிப்படைகள் அமைத்து கைது செய்வேனென மனரீதியான தாக்குதல்களை மதரீதியாகவும் சிலர் செய்கிறார்கள். அன்பும் கருணையும் தான் அனைத்து மதங்களின் அடிப்படை. எனவே, சிம்பு என்ற நபரை மன்னித்து விடுங்கள் மனிதர்களே!

- இரா.ச.இமலாதித்தன்.


தமிழர்களின் பாரம்பரிய கலச்சார பண்பாட்டு கூறுகளை அழித்தொழிப்பது தான் இல்லுமினாட்டிகளின் நோக்கமாக இருக்க கூடும். ஏனெனில் இல்லுமினாட்டிகளின் அடிப்படை தத்துவங்களே தமிழர்களிடமிருந்து திருடப்பட்டது தான்.

ஏற்கனவே என்னுடைய பதிவில் ஷங்கர் எடுத்த 'ஐ' படம் இல்லுமினாட்டிகள் சார்ந்த படம் என்பதை சொல்லிருந்தேன். அதன்படி பார்த்தால், ஐ படத்திற்காக மேற்கத்திய அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எமி ஜாக்சன் என்ற பெண் இல்லுமினாட்டி வகையறாவாக இருக்கலாமென்ற சந்தேகம் வலுக்கிறது.

காரணம் என்னவெனில், அரப்பா நாகரீகத்திலிருந்து தொடர்ந்து வரும் போர்க்குடிகளான தமிழர்களின் 'ஏறு தழுவதல்' என்ற ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க வேண்டுமென்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார் எமி ஜாக்சன் என்ற அந்நிய நாட்டு கூத்தாடி.

- இரா.ச.இமலாதித்தன்.

முக்குளத்தை முக்குலத்தோருக்கு தெரியுமா?


அகமுடையார் முதுகில் சவாரி செய்யும் முக்குலத்து அமைப்பினரே!

இந்த வீடு யாருடைய வீடு?
இங்கு யார் பிறந்தார்கள்?
இந்த வீடு எங்குள்ளது?

இதெல்லாம் தெரியுமா? அக்டோபர் மாதம் மட்டும் அரசியல் செய்யும் உங்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இந்த புண்ணியபூமியில் உங்களது பாவப்பட்ட பாதங்கள் பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

இடம்: நரிக்குடி-முக்குளம்.

இங்குதான் மாமன்னர் மருது பாண்டியர்கள் அவதரித்தனர். அப்படிப்பட்ட பெருமைமிகு இந்த வீட்டை சீரமைக்கவோ, இங்கு மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் கட்டவோ, அவர்கள் பிறப்பெடுத்த இவ்வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூட வக்கில்லை. கேட்டால் 'வாழும் மருது' என அடைமொழியை பெயருக்கு முன்னால் வெட்கமே இல்லாமல் போட்டுகொள்வீர்கள்.

வாழ்க முக்குலம்! ஒழிக முக்குளம்!

- இரா.ச.இமலாதித்தன்

ஆகவிதியும் அட்ராசிட்டியும்!

நல்ல நாள் அதுவுமா, கோவில் வாசல்ல ஐம்பது ரூபாய்க்கு அர்ச்சனை தட்டு வாங்கி, கோவில் அலுவலகத்துல பத்து ரூபாய்க்கு அர்ச்சனை சீட்டு வாங்கி, அர்ச்சகர் கிட்ட போய் நம்ம ராசி - நட்சத்திரத்தை சொன்னா, அதை காதுலேயே வாங்காம காணிக்கையை போடுங்கன்னு மிரட்டுற தொனியில சொல்ற அர்ச்சகரை தான் நூத்துக்கு தொன்னுத்தொன்பது இடத்துல பாத்துருக்கேன். இதெல்லாம் என்ன எழவு விதியோ? என்ன மானங்கெட்ட குலத்தொழிலோ?

#

குலதெய்வம் கோவில்களிலும், ஊர்புற அம்மன் கோவில்களிலும் எந்த ஆகமவிதிப்படி அர்ச்சனை நடக்கிறது? எந்த ஆகமவிதிப்படி கடவுள் பூசாரியின் உடலில் வந்து தெய்வ வாக்காக குறி சொல்கிறார்? பூசாரி மட்டுமல்ல, கோவிலுக்கு வந்த யார் மீது வேண்டுமானாலும் அந்த கடவுள் அடிக்கடி வந்து போகிறாரோ? எனக்கு ஆகமவிதியை புறந்தள்ளிய இந்த கடவுளே போதும்! இறக்குமதி செய்யப்பட்ட எந்த கடவுளும் தேவையில்லை.

#

நான் தீவிர கடவுள் நம்பிக்கையாளன். என் ஆன்மீகறிவுக்கு எட்டியபடி, ஆகம விதிப்படி தான் கடவுளை ஆராதனை பண்ணமுடியும்ன்னு எந்த கடவுளும் உட்சபட்ச நீதியை வழங்கவில்லை என்பதை அறிவேன். ஏனெனில், எந்த கடவுளும் பூநூலை போட்டுக்கொண்டு மேல்தட்டு சாதியவாதியாக இருக்கவில்லை.

#

'சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்ற காமெடி போலத்தான், இந்த ஆகமவிதியும்!

#

சங்கரராமன்களும், தேவநாதன்களும் தான் ஆகமவிதிக்கு உரிமை கொண்டவர்களா? கோவில் கட்டி மண்ணையே ஆண்ட பரம்பரை என வீர முழக்கமிடும் என் அகமுடையார் குடியில் பிறப்பெடுத்த இந்த இமலாதித்தன் போன்றவர்களுக்கு வெறும் தலைவிதி மட்டும் தானா சொந்தம்?

#

"சாதியும் - நிறமும் ஆன்மீகத்திற்கு சர்வ நிச்சயமாக கிடையாது!"
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

குலத்தொழிலில் போர்குடிகளை தவிர்த்த ஏனையர்களும் வீரம் செறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கடந்தகால / நிகழ்கால வரலாறு. அதனால் குலத்தொழில் என்பதெல்லாம் ஒரு மாயை.
கோவில் கருவறையில் காம களியாட்டம் ஆடிய காஞ்சிபுரம் தேவநாதனின் குலத்தொழில் எது?

சித்தர்களில் - நாயன்மார்களில் - நால்வர்களில் - ஆழ்வார்களில் எத்தனை பேர் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்? இவர்களில் எத்தனை பேர் ஆகமவிதியை பயின்றவர்கள்?

அனைத்து சாதியிலிருந்தும் முறையாக பயின்று வரும் நபர்கள் சரியான முறையில் ஆன்மீக சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அன்று கோவில் கட்டிய தமிழ்குடிகளின் வருங்கால தலைமுறைகள், இன்று முறையாக பயின்ற பின்னால் கோவில் கருவறையில் நுழைய யாரும் தடை போட கூடாது. அப்படி இருந்தால் அந்த தடையை உடைப்போம் தமிழனாய்!

#

எங்க நாகப்பட்டினத்தில் மீனவனாய் பரதவர் குலத்தில் பிறந்த 'அதிபத்த நாயனார்' எந்த ஆகமவிதிப்படி வெறும் நாற்றம் பிடித்த மீனை கொடுத்து கடவுளை வணங்கி, அவரையே நேரில் வர வைத்தார் என்பதை சட்டமேதை என்ற அறிவுஜீவிகளால் பதில் சொல்ல முடியாது.
கடவுள் என்பது உணர்வு. அதுவொரு உட்சம் தொட்ட அறிவுநிலை. அது வேறுபாடற்ற அன்பின் நிறைவு. நான் யாரென்ற புரிதலோடு இயற்கை சூழ் இந்த உலகமடங்கிய ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை அணு அணுவாக அனுபவித்து, அணுவாகவே இடம் பெயர்ந்து அதுவாகவே ஆகிவிடும் பெரும்போதை. அதை இந்த ஆகம விதி, ஆகாத விதியென ஒப்பிட்டு இனியும் ஏமாற்றாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

மகிழ்வான தருணம்!

 பரமக்குடி கார்த்தி - திருமண நிகழ்வில்!
அகமுடையார் உறவின்முறை இணையதள பங்காளிகளின் ‪#‎Groupie‬!என் பார்வையில் இந்த வாரம்!

மானை கொன்னா என்ன? மனுசனை கொன்னா என்ன? எல்லா கானும் நிதியை வைத்து நீதியை தான் தினமும் கொல்றாங்க.

‪#‎சல்மான்கான்‬

#

போர்குடிகளுக்கு அடையாளமான முறுக்கிய மீசையின் அழகும் கம்பீரமும், என் பாட்டன் பாரதிக்கும் கச்சிதமாய் பொருந்தியது என்பதுதான் தமிழின் வீரமிகு அடையாளம்! (டிச 11)

#

ஆக்கிரமிப்புகளை குடிசைகளிலிருந்து அகற்ற துவங்கி இருக்கிறீர்கள். துணிச்சலான விசயம். ஆனால், இதை குடிசைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள குடிகாரர்களின் கல்லூரிகளையும் அகற்றுங்கள்! கூடவே, உங்களது ஆணைப்படியோ அல்லது உங்களது உத்தரவுப்படியோ குளம் குட்டைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அரசு அலுவலகங்களையும் அப்புறப்படுத்துங்கள்.

செய்வீர்களா?!

#குத்திக்காட்டுற நேரமா இது?

ஒட்டுமொத்த ஹிந்துக்களுமா, முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போன்னு சொன்னாங்க? முஸ்லீம் ஃப்ரெண்ட் இல்லாத ஹிந்துவோ, ஹிந்து ஃப்ரெண்ட் இல்லாத முஸ்லீமோ இங்கே கிடையாது. மாமன் மச்சான்களாகத்தான் நாங்கள் (ஹிந்து + முஸ்லீம்) பழகி வருகிறோம். இதெல்லாம் தேவையில்லாத ஒப்பீடு.

#

தமுமுக, TNTJ, PFI போன்ற இசுலாமிய அமைப்புகளின் அற்பணிப்பில் சற்றும் குறைந்தது இல்லை, RSS போன்ற ஹிந்து அமைப்புகளின் சேவையும்! ஹிந்து அமைப்புகளின் பெயர்களை சொன்னால் தமிழ் தேசியமோ, திராவிடமோ, கம்யூனிசமோ, பெரியாரியமோ, நடுநிலையோ கேள்விக்கு உள்ளாக்கப்படுமென்ற நினைப்பை முதலில் கைவிடுங்கள்.
‪#‎ChennaiRains‬

#

ஊருக்கே சோறு போட்ட சோழநாட்டுக்கும் சோதனையா? எங்க டெல்டா பகுதிகளில் தொடர்ச்சியாக கொட்டி தீர்க்கிறது மழை!

#

கேமரா மேன்கள், பாதுகாப்பு வீரர்கள், படைசூழ ஆட்கள், புதுப்புது உடைகள் என்ற எதுவுமே இல்லாமல் வெள்ள நிவாரண உதவிகளை செய்துவரும் இளைஞர்களின் சேவைக்கு பெயர் தான் உண்மையான 'நமக்கு நாமே'!

நான் நேரில் கண்ட சம்பவம்!மிகப்பெரிய பதவியில் இருக்கும் அந்த அரசியல்வாதி, மழைவெள்ளத்தால் தேங்கிநின்ற தண்ணீரை வடியவைக்க நாற்பது அம்பது ஆட்களோடு வருகிறார். தன் சகாக்களின் வண்டியையெல்லாம் பக்கத்து தெருவில் வரிசையாக நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரம் நடக்கிறார். தூர்வாறும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அருகில் வருகிறார். சட்டென தேங்கிருந்த நீரின் ஒருதுளி, அவரது சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் பட்டுவிடுகிறது. உடனே கோபம் கொப்பளித்து, தன் உதவியாட்களிடம் சொல்லி வாட்டர் பாட்டிலை கொண்டு வரச்சொல்லி, அந்த தண்ணீரையே தண்ணீரால் துடைக்கிறார். இதையெல்லாம் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் செல்போனில் போட்டோ பிடிக்கிறது. ஆனால், அவரின் எடுபிடிகளால் மிரட்டப்பட்டு எடுத்த போட்டோக்களையெல்லாம் டெலிட் செய்யப்படுகிறது. இதற்கிடையில், அவருக்கு அருகில் சென்ற அவருடைய கேமராமேன்கள் "அண்ணன்! இப்போ அந்த மம்வெட்டிய கையி் பிடிச்சு க்ளீன் பண்ணுங்க அண்ணன்..." ன்னு சொன்ன உடனேயே மூன்று போட்டோகிராஃபரின் கேமராக்களையும் பார்க்காமலேயே போட்டோவுக்கு வெகு இயல்பாக போஸ் கொடுத்து விட்டு, மடித்து கட்டிருந்த தன் கட்சிக்கரை போட்ட வெள்ளவேட்டியை இறக்கி விட்டு காரில் பறந்து விட்டார். காத்திருக்கிறோம் 2016 தேர்தலுக்காக! அவரை பதவியில் இருந்து பறக்க வைக்க...

- இரா.ச.இமலாதித்தன்.

சென்னை வெள்ளத்திற்கு பின்னால், மனிதமும் - வேசமும்!


மழை வெள்ளத்திற்காக மசூதிகள் இடம் கொடுத்து உதவுவதையும், மதம் பிடித்த சிலர் இசுலாமிய சார்பு துதி பாட ஆரம்பிக்கின்றனர். செய்த உதவியை சொல்லிக்காட்டி மனிதாபிமானத்தை மதமாக்கி அவமான படுத்தாதீர்கள்


நாட்டை ஆளும் முதல்வரின் வயது 67, பாட்டை ஆளும் இசைஞானியின் வயது 72!


வெள்ள நிவாரணத்திற்காக டிவிட்டர் மூலமாக ட்ரெண்ட் உருவாக்கி, நேரடியாக களத்திலும் உதவிகளை ஒருங்கிணைத்த, சித்தார்த் - RJ பாலாஜியை பார்க்கும்போது "ஆய்த எழுத்து" படம் தான், நினைவுக்கு வருகிறது! இனியாவது இளைஞர்கள் அரசியலை கைப்பற்ற வேண்டும்.


தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க... த்தூ

(கன்னட + மராட்டிய) ரஜினி என்ற போலி தமிழனை விட, அல்லு அர்ஜுன் என்ற நிஜ தெலுங்கனுக்கு, தமிழனாக எம் நன்றி!

#

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு நாகையில் இருந்து கூட நூற்று கணக்கான பேரு போனாங்க. இது மாதிரி எல்லா மாவட்டத்திலிருந்தும் ஒன்றியம் வாரியாக தேர்தல் பணிக்கு ஆட்களை வர சொன்ன அதிமுகவின் ராஜ'தந்திரம்', இப்போதும் சென்னை மழைவெள்ள மீட்பு பணிக்கு பயன்பட்டிருந்தால் பெருமைப்படலாம். ஆனால்... இப்போதுதானே அது வெறும் தந்திரமென சாமானியனுக்கும் புரிகிறது.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வலது கை கொடுக்கிறதை, இடது கைக்கு கூட தெரியக்கூடாது!ன்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே உதவியை கூட ஓட்டுக்களாக மாற்ற நினைக்கும் ஈனத்தனமான புத்தியை என்ன சொல்லி திட்டுவது? ஜெயலலிதா படம் போட்ட பை பிரிண்ட் அடிக்க நேரமானதால், நூற்று கணக்கான சாப்பாட்டு பொட்டலங்கள் வீணாகி போனதாகவும் செய்தி வருகிறது. ஜெயலலிதா படம் போடலைன்னா, தெய்வ குத்தமாவா ஆகிடும்? காங்கிரஸ் போலவே திராவிட அடிமைகள் நம்பியிருக்கும் இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியும் தமிழ்நாட்டில் ஒழியணும்.

#

பெருமழை/புயல் உண்டுயென சொல்லப்பட்டிருந்த பஞ்சாங்கத்தை பழித்த பஹூத்தறிவு கி.வீரமணி எங்க இருக்காப்ள?

#

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், பாதியிலேயே பேட்டியை முடித்து கொண்டு அமைச்சர்கள் - அரசு அலுவலர்கள் ஓட்டம்.
இதுதான் "அம்மாவின் ஆணைக்கினங்க ஆட்சியின்" ஒர்த்!


#

மழை வெள்ளத்தை பயன்படுத்தி, அன்றாட பொருட்களின் விலையை பலமடங்கு விலையேற்றி விற்கும் வியாபாரிகளின் பணத்தையெல்லாம் கொள்ளையடிக்க ஒருத்தன் பிறக்காமலா போய்ட போறான்?!

#

இலங்கை இராணுவத்தால் மீனவன் சாகும் போதெல்லாம் கண்டுகொள்ளாத மக்களையெல்லாம், இன்று இந்திய இராணுவத்திற்கு முன்பாகவே தன் படகுகளை கொண்டு தானாகவே முன்வந்து காப்பாற்றி வருவபவனும் மீனவனே!

மீனவர் சூழ் நாகப்பட்டினத்து காரனாய் நான் பெருமை கொள்கிறேன்.

#


அனைத்து பள்ளிவாசல்களையும் திறந்துவிட சொல்லி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத வேறுபாடின்றி அடைக்கலம் கொடுக்க சொன்ன ஜமாத்தை மறந்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லும் மீரான் மாதிரியான இசுலாமியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

"தண்ணீரில் தத்தளித்த தமிழகத்தை தனித்து நின்று காப்பாற்றிய தரணி போற்றும் தாயே!"

#

பறையருக்கான அரசியல் கட்சியென்று அடையாளப்படுத்தி கொண்டு அரசியலுக்கு வந்த திருமாவளவனெல்லாம் இந்நேரம் என்ன செய்கிறார்? சென்னையில் குடிசை வீடுகளை இழந்த பெரும்பாலான விளிம்புநிலை மக்களை வைத்து அரசியல் செய்யும் திருமாவளவனுக்கு இந்த மழைவெள்ள பாதிப்பெல்லாம் தெரியாதா? அடங்க மறுக்க சொன்னவரே, இந்த மழைக்கு ஒரேயடியாக அடங்கி விட்டார் போல.

#

'மழைய பத்தி இன்னைக்காவது இந்தம்மா வாய தொறந்துச்சே!'ன்னு டீக்கடையில பெரியவர் ஒருத்தர் சொல்லிட்டு இருக்காரு. அவரு இன்னும் ஜெயா நியூஸ் பார்க்கலன்னு நினைக்கிறேன்.

#

இவ்ளோ மழை பேய்ஞ்சு மேடான ஏரியாவே குளமா மாறினதுக்கு அப்பறமும், வயல்வெளி - குளம் - குட்டை - ஏரியில வீட்டுமனை போட்டு ரியல் எஸ்டேட்ங்கிற பேர்ல விளம்பரம் பண்றவனெல்லாம் அடங்க மாட்றாய்ங்க.

#

இந்தியாவின் மெட்ரோ சிட்டி என சொல்லப்படுகின்ற சென்னையை தவிர்த்த டெல்லி - மும்பை - கொல்கத்தாவில் இந்த மாதிரியான மழை பொழிந்திருந்தால், இந்நேரம் நாடே மூழ்கி விட்டது போன்ற பிம்பத்தை இந்திய ஊடகங்கள் உருவாக்கி ஒப்பாரி வைத்திருக்கும்!

#

எதற்கெடுத்தாலும் 'நான்' என்ற ஆணவத்தை இயற்கையாக மாற்றிக்கொள்ளாவிட்டால், இயற்கையே மாற்றும் என்பதை ஆள்பவர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

#

இவ்வளவு நடந்து தலைநகரமே தண்ணியில மிதக்குது. இந்த மானங்கெட்டவனுங்க நான்காண்டு சாதனை பற்றிய செய்தியை வெட்கமே இல்லாமல் போட்டுக்கிட்டு இருக்காய்ங்க. த்தூ

#

ஜெயாடிவி அலுவலகத்துக்குள்ளயே மழை தண்ணீர் புகுந்தது தான் ஹைலைட்டே... பேச்சாடா பேசுனீங்க?! இனிமே நீச்சலடிச்சுக்கிட்டே, "அம்மாவின் ஆணைக்கினங்கே, ஜெயாடிவி அலுவலகத்தில் மழைநீர் புகுந்து புண்ணியம் தேடிக்கொண்டது" என வழக்கம்போல செய்தியை சொல்லிட்டா கணக்கு சரியாயிடும்.

#

சென்னைக்கு கடலூர் இளக்காரமா தெரிஞ்சது போலவே, டெல்லிக்கு சென்னை இளக்காரமா தெரியுது.

#

உலகம் முழுக்க சுற்றினாலும் தமிழக மழை வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டரில் வந்து நேரில் பார்த்து உடனடியாக ரூ.1940 கோடி ஒதுக்கிய மோடியிடமிருந்து, இந்த லேடி கத்துக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு.
தங்களது கட்சி வேட்பாளர் ஊராட்சி மன்ற தலைவராக இல்லாத கிராமத்திற்கு அரசாங்க சலுகைகளை கொடுக்கக்கூட மனமில்லாத இந்த லேடியை விட, தன் கட்சி ஆட்சியை பிடிக்கவே வாய்ப்பில்லாத ஒரு மாநிலத்திற்கு நேரடியாக களத்திற்கே வந்த மோடி போற்றுதலுக்கு உரியவர்.
இனியாவது தமிழக மழை வெள்ள பாதிப்புகளை இந்திய ஊடகங்கள் பேசட்டும் நன்றி, பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி!
- இரா.ச.இமலாதித்தன்

என் பார்வையில் இந்த வாரம்!

தந்தி டிவி ஒருங்கிணைத்த கருணா அம்மானின் நேர்காணலில், தலைவர் வே.பிரபாகரனை அவர் புகழ்ந்து பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. வீரம் என்ற குணத்தை எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் மெச்சுவார்கள் என்பதற்கு கருணாவின் பேச்சு ஓர் உதாரணம்.

#

உண்மையான புரட்சி திலகம், சரத்குமார் கிடையாது; கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு தான்!

#

பிரபு - பாரதி - குமார் என்கவுண்டரை ஞாபகப்படுத்துகிறது, சுசீந்திரனின் "பாயும் புலி" ட்ரைலர்.

#

துரோகிகளை தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களும், நிச்சயம் ஒருநாள் துரோகிகளாக மாறும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் வரலாறானது கரிகாலபெருவளத்தான், மாமன்னர் மருதுபாண்டியர்கள் முதற்கொண்டு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வரையிலும் உண்டு. துரோகிகளை தூரமாக கூட வைக்க கூடாது. அப்பறம் ஏன் தோள் கொடுக்க வேண்டும்? தனித்திரு.

#

புண்ணாக்கு விக்கிறவன், புடலங்காய் விக்கிறவனெல்லாம் வரலாற்று ஆய்வாளர்ன்னு சொல்லிக்கிட்டு மேதை ஆகிடுறானுங்க. எந்த சாதிக்காவது அவங்க போடுற எச்சி துண்டுக்காக ஜால்ரா அடிச்சு ஒரு வரலாறு எழுதினா, அவய்ங்க மெத்த அறிவுஜீவி ஆய்டுறாய்ங்க.

#

மழை வெள்ள பாதிப்புக்காக அரசியல்வாதி என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரவனுங்க, மடிப்பு கலையாத வெள்ளை சட்டை வேட்டியில தான் வரானுங்க. 'நாங்க ஓட்டு போட்டு தானே நீ வெள்ளையும் சொள்ளையுமா அலையுற?'ன்னு சாமானியன் ஒருவன், வாக்களனாக யோசிக்கும் அடுத்த கணமே அரசியல்வாதி அம்மணமாக்கப்படுகிறான்.

#

தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வரிப்பணத்தையும், அரசாங்கத்தையும் பற்றி வெளிப்படையாக விமர்சித்த கமல்ஹாசனோட அடுத்த படம், அநேகமாக போயஸ்கார்டன்ல தான் ரிலீஸ்ன்னு நினைக்கிறேன்.

#

அரசாங்கத்தை பற்றி கமல் சொன்னதுல ஒரு வார்த்தைகூட தவறில்லை. ஆனால் அதையும் ஜெ சார்பாக ஓபிஎஸ் காட்டமான தொனியில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.

#

மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் தருகிறது மத்திய அரசு.
நரேந்திர மோடிக்கு நன்றி!


#

பொம்பள புள்ளைங்க லெக்கின்ஸ் போடுவதை பற்றி விமர்சனம் பண்ணுங்க, தப்பே இல்ல. அதுக்கு முன்னாடி, ஜட்டி தெரியிற மாதிரி லோஹிப் பேண்ட் போடுற ஆம்பள பசங்களையும் திருத்துங்கன்னு தான் சொல்றோம்.

தந்தி டிவி ஒருங்கிணைத்த கருணா அம்மானின் நேர்காணலில், தலைவர் வே.பிரபாகரனை அவர் புகழ்ந்து பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. வீரம் என்ற குணத்தை எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் மெச்சுவார்கள் என்பதற்கு கருணாவின் பேச்சு ஓர் உதாரணம்.

#

உண்மையான புரட்சி திலகம், சரத்குமார் கிடையாது; கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு தான்!

#

பிரபு - பாரதி - குமார் என்கவுண்டரை ஞாபகப்படுத்துகிறது, சுசீந்திரனின் "பாயும் புலி" ட்ரைலர்.

#

துரோகிகளை தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களும், நிச்சயம் ஒருநாள் துரோகிகளாக மாறும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் வரலாறானது கரிகாலபெருவளத்தான், மாமன்னர் மருதுபாண்டியர்கள் முதற்கொண்டு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வரையிலும் உண்டு. துரோகிகளை தூரமாக கூட வைக்க கூடாது. அப்பறம் ஏன் தோள் கொடுக்க வேண்டும்? தனித்திரு.

#

புண்ணாக்கு விக்கிறவன், புடலங்காய் விக்கிறவனெல்லாம் வரலாற்று ஆய்வாளர்ன்னு சொல்லிக்கிட்டு மேதை ஆகிடுறானுங்க. எந்த சாதிக்காவது அவங்க போடுற எச்சி துண்டுக்காக ஜால்ரா அடிச்சு ஒரு வரலாறு எழுதினா, அவய்ங்க மெத்த அறிவுஜீவி ஆய்டுறாய்ங்க.

#

மழை வெள்ள பாதிப்புக்காக அரசியல்வாதி என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரவனுங்க, மடிப்பு கலையாத வெள்ளை சட்டை வேட்டியில தான் வரானுங்க. 'நாங்க ஓட்டு போட்டு தானே நீ வெள்ளையும் சொள்ளையுமா அலையுற?'ன்னு சாமானியன் ஒருவன், வாக்களனாக யோசிக்கும் அடுத்த கணமே அரசியல்வாதி அம்மணமாக்கப்படுகிறான்.

#

தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வரிப்பணத்தையும், அரசாங்கத்தையும் பற்றி வெளிப்படையாக விமர்சித்த கமல்ஹாசனோட அடுத்த படம், அநேகமாக போயஸ்கார்டன்ல தான் ரிலீஸ்ன்னு நினைக்கிறேன்.

#

அரசாங்கத்தை பற்றி கமல் சொன்னதுல ஒரு வார்த்தைகூட தவறில்லை. ஆனால் அதையும் ஜெ சார்பாக ஓபிஎஸ் காட்டமான தொனியில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.

#

மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் தருகிறது மத்திய அரசு.
நரேந்திர மோடிக்கு நன்றி!


#

பொம்பள புள்ளைங்க லெக்கின்ஸ் போடுவதை பற்றி விமர்சனம் பண்ணுங்க, தப்பே இல்ல. அதுக்கு முன்னாடி, ஜட்டி தெரியிற மாதிரி லோஹிப் பேண்ட் போடுற ஆம்பள பசங்களையும் திருத்துங்கன்னு தான் சொல்றோம்.

தமிழர்களின் எழுச்சிமிகு விடுதலை நாள்!

என் ராசி, என் நட்சத்திரம், என் தலைவன்! தமிழ் தேசிய தலைவனின் பிறந்தநாளே, தமிழர்களின் எழுச்சிமிகு விடுதலை நாள்!

(அடியேனும் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் தான்)


(படம்: மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் ஜாதகம்.)

தமிழ் தேசியத்தலைவர் அண்ணன் வே.பிரபாகரனின் பிறந்த நாளான இன்றைக்கும் கூட, இனத்தாலும் - மொழியாலும் தமிழர்களான இசுலாமியர்களில் பெரும்பான்மையானோர் வடக்கத்திய அந்நிய மொழி பேசும் ஆமீர்கானுக்காக மல்லுக்கட்டி கொண்டிருக்கின்றனர்.

ஆக, இவர்களின் முதன்மை அடையாளம் மொழி, இனம் இல்லை; மதம் தான் இவர்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்பது போலவே செயல்படுவது வேதனையான விசயம்.

- இரா.ச.இமலாதித்தன்

கார்த்திகை தீபஒளி திருநாள் வாழ்த்துகள்!

தமிழர்களின் பெரும்பாலான விழாக்கள் முழுநிலவு பெருநாளில் தான் இருந்தது. அதற்கு மற்றுமொரு சான்றாக, உலகத்திற்கே வழிகாட்டிய பெருந்தமிழர்கள் கொண்டாடும் கார்த்திகை தீபஒளி திருநாள் வாழ்த்துகள்!

ரஹ்மானென்ற தமிழன்!2009ம் ஆண்டு உலக ஊடகங்களே உற்று நோக்கிய ஆஸ்கார் மேடையில், 'எல்லா புகழும் இறைவனுக்கே!' என தாய்த்தமிழில் முழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானை, அன்றைய வட இந்திய ஊடகங்கள் மொழிரீதியாக மென்மையாக சாடின. இரண்டு ஆஸ்கார் விருதுகளை இந்தியனாக வாங்கி இந்தியாவிற்கு கெளரவம் சேர்த்த போதும், தென்னிந்தியனாகவும், தமிழனாகவும் தான் ரஹ்மான் வடக்கத்திய ஊடகங்களுக்கு தென்பட்டார். இப்போதும் கூட அவர் சொன்ன கருத்தை பெரிதாக்கி அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க மற்றுமொரு காரணம் தமிழன் என்பதால் கூட இருக்கலாம்.

அமீர்கானின் பின்புல வரலாறு எதுவும் தெரியாது. அந்த வரலாறை தேடவும் விரும்பவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின், தந்தையும் தாயும் தமிழர்கள் என்பதும், ரஹ்மானின் அப்பாவான இசையமைப்பாளர் திரு.சேகர் அவர்கள் தமிழ் இனக்குழுவான முதலியார் பட்டமுள்ள அகமுடையார் தான் என்பதும், ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார் என்பதும் தான் எனக்கு தெரிந்த ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தமிழனின் கடந்தகால பின்புல வரலாறு.

இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு ரஹ்மானின் இசைக்கு பரம ரசிகன் என்பது மட்டுமல்ல; மேலும் இளையராஜாவை விட ரஹ்மானின் தனிப்பட்ட குணநல பண்புகளுக்கும், தன்னடக்கத்திற்கும் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில், ஊடகங்கள் என்ன சொன்னாலும், சக தமிழ் பேரினத்தவனாக, மதம் கடந்து ஏ.ஆர்.ரஹ்மானை ஆதரிக்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

என் பார்வையில் இந்த வாரம்

விஜய் தொலைக்காட்சியின் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கின்ற மாணவர்களுக்கான அறிவுபூர்வமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் இன்றைய பகுதியில், பெரும்பாலான வார்த்தைகளில் தமிழில்லை; சமக்கிருதம் தான்!

#விகடன் மீது அ.தி.மு.க.விற்கும், தந்தி மீது தி.மு.க.விற்கும், ஆமீர்கானின் மனைவி சொன்ன 'அது' இல்லை போல!


#

பல லட்ச மக்களை தங்களது பேச்சுகளாலும், எழுத்துகளாலும் கட்டிப்போட்டு ஆட்சியை பிடித்த தி.மு.க., இன்று தந்தி டி.வி.போன்ற ஊடக விவாதக்களங்களில் ஒருசிலர் மத்தியில் கூட தனது ஆளுமையை நிரூபணம் செய்ய முடியாமல் ஒதுங்கி செல்வது ஆச்சர்யம் தான்.
களத்தில் வெற்றி தோல்வி என்பதை விட, தோல்வியடைவோம் என்ற எண்ணத்தில் அந்த களத்தையே இழப்பது தான் பலவீனம் என்பது போலவே தி.மு.க.வின் இந்த முடிவும் அமைந்திருக்கிறது.

#

திரு. நெப்போலியன் ரெட்டியாரும், பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவரானார்!

வாழ்க தமிழக பா.ஜ.க.!

#

கருணாநிதியை சந்தித்த கோவன் மீதான புரட்சி - புடலங்காய் - நம்பிக்கையெல்லாம், இனி சந்தேகத்திற்கு உள்ளானாலும் துளியும் தவறில்லை.

#
கூகிள் போன்ற இணைய தேடுபொறிகளில், Tiger என தேடினால் புலி வருமா என தெரியாது. கண்டிப்பாக எம் அண்ணன் பிரபாகரன் வருவார்.
‪#‎Hbd_TamilTiger‬
#

கோமள விலாஸ் உணவகம்
தமிழ் முரசு பத்திரிகை
தமிழ்

சிங்கப்பூர்!

இந்தியா
நரேந்திர மோடி
ஹிந்தி

#

நரேந்திர மோடிக்களால் நரேந்திரனாக முடியாது!சிகோகோவில், அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! என புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்தி, இந்திய ஆன்மீகத்தை வெளியுலகிற்கு அடையாளப்படுத்திய விவேகானந்தரை, அங்கு அனுப்பி வைத்ததே பாசுகர சேதுபதி என்ற தமிழர் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தனக்கு வந்த அழைப்பை பெருந்தன்மையாக, என்னை விட விவேகானந்தர் சென்றால் பொருத்தமாக இருக்குமென எண்ணி அனைத்து பயண செலவுகளையும் செய்து வைத்தவர் பாசுகர சேதுபதி.

நேற்று, மலேசியாவில் விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்து, சகோதர சகோதரிகளே என உரையாற்றியதற்காக நரேந்திர மோடியை விவேகானந்தரோடு ஒப்பிட்டு புகழ்வதை ஏற்க முடியவில்லை. விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன் என்பதால், மோடியின் பெயரோடு மட்டும் ஒப்பிடுவதோடு நிறுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், எத்தனை பிறப்பெடுத்தாலும் மோடி விவேகானந்தர் ஆக முடியாது.

அரசியலில் நேதாஜியையும், ஆன்மீகத்தில் விவேகானந்தரையும் பின்பற்ற சொன்ன பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும் உறவுகள் இந்த மாதிரியான, தவறான ஒப்பீடுகளையும் கண்டிக்க வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

அமீர்கான்களும் - கமல்ஹாசன்களும்!

அமீர்கான்களுக்காக சிரியாக்களும், கமல்ஹாசன்களுக்காக இஸ்ரேல்களும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. சகிப்புத்தன்மை இல்லாத இந்த நாட்டில் இனிமேலும் இருந்து என்ன கிழிக்க போகிறீர்கள்? குரைக்கிற நாய்கள் பெரும்பாலும் இங்கே கடிப்பதேயில்லை என்ற பழமொழியை இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் பழமைவாதிகளின் நாட்டில், புதுமை படைக்கவே அவதரித்த நீங்கள் பிறந்ததே ஓர் அதிசயம் தான். உங்களது சாதனைகளுக்கு நன்றி!

சீக்கிரம் கிளம்புங்கள்.

ஆவணத்தான்கோட்டை பிரபாகரனுக்கு ஜாமீன்!ஈழ விசயத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எம்.கே.நாராயணனை செருப்பால் அடித்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான் கோட்டையை சேர்ந்த, உறவின்முறை சகோதரர் திரு.பிரபாகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி! மேலும், இதற்கு பின்புலமாக இருந்த அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி.

சகோ.பிரபாகரன், பிறப்பாலும், சாதியாலும் அகமுடையாராக இருக்கலாம். ஆனால் அவர் இனத்தாலும், செயலாலும் சுத்த தமிழன் என்பதாலேயே, அவருக்கு பின்னால் அனைத்து தமிழ் அமைப்பினர்களும் துணை நின்றார்கள் என்ற இந்த ஒற்றை நிகழ்வே மறக்க முடியாத சமகால வரலாறு!
இனிவரும் காலங்களில் ஏற்றத்தாழ்வின்றி தமிழர்களாகவே பயணிப்போம்.

- இரா.ச.இமலாதித்தன்

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம்!
இதைத்தான் எதிர்பார்க்கிறோம் ஒவ்வொரு முறையும். முன்னாள் முதல்வராக, நிதித்துறை அமைச்சராக இருந்த போதும் பொது இடங்களில் தலைமையின் காலைத்தேடி முதுகு குனிந்தே பார்த்த நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம். தரையில் அமர்ந்திருந்தாலும் கம்பீரமாய், முதுகெலும்போடு, தமிழனாய் நிமிர்ந்த இந்த ஒரு படம் போதும்.

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம் என்ற நம்பிக்கை விதையை, சாமானியன் மத்தியிலும் ஆழமாய் விதைத்த, மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம் கையிலும் தேநீர் கோப்பை, கடலூர் வெள்ள நிவாரண பணிகளின் போது!

- இரா.ச.இமலாதித்தன்

ஆளும் வர்க்கத்தின் அரஜாகம் - மருதுபாண்டியர் நினைவுத்தூண் அகற்றம்!விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஆத்திப்பட்டியில், சுதந்திர போராட்ட வீரர்களும், தமிழ் தமிழ் தேசியம் காத்தவர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் உருவம் பதித்த நினைவுத்தூணை அரசு சார்பில் தரைமட்டமாக அகற்றப்பட்டுள்ளது. தமிழக தலைநகரிலே, நாட்டிற்காக என்ன சாதனை செய்தாரென்றே தெரியாத தெலுங்கர் சோபன்பாபு சிலையெல்லாம் பாதுபாப்பாக இருக்கையில், ஏதோவொரு கிராமத்து மூலையில் பெருந்தமிழர்களான மருது சகோதர்களின் நினைவுத்தூணை அகற்றுவதுதான் நாடு போற்றும் நான்காண்டு சாதனை போல.
ஆளும் வர்க்கத்தின் அராஜக போக்கான இச்செயலை, அனைத்து தமிழ் உறவுகளும் நிச்சயம் கண்டிப்பார்களென நம்புகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

நயன்தாராவுக்கு வாழ்த்துகள் சொல்வது சரியா?

தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காத வரையிலும், அயோக்கியன் கூட மற்றவர்களின் பார்வையில் நல்லவன் தான். அதே மாதிரிதான் நயன்தாரா விசயமும், மற்றவர்கள் பார்வையில் பார்க்க படுகிறது. இன்றைக்கு நயன்தாரா பிறந்தநாள் என்பதால், எதிர்ப்பும் - ஆதரவுமாக, வாழ்த்துகளும் - அவதூறுகளுமென பல பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.
நயன்தாராவை விமர்சிக்கும் எத்தனை பேர், தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்க சீலராக வாழ்கின்றனர் என்பது அவர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம். சினிமா என்பது பொது ஊடகம். அதில் நடிப்பர்களை திரையில் ரசிப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள். நடிகைகளை வெறும் உடலாக மட்டும் பார்க்காமல், அவர்களது படுக்கையறை திரையை நீக்கி எட்டிப்பார்த்து எச்சில் விட்டு, உங்களது வன்மங்களை வார்த்தைகள் ஆக்காதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

தமிழக வெள்ள நிவாரணமாக பா.ஜ.க. ஒரு கோடி!தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பிற்காக, நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாயை பா.ஜ.க.தலைமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்புலமாக இருந்த, தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதும் நம் கடமையாகிறது.

அஜித் ரசிகனும், கடலூர் வெள்ளமும்!

ஆமா! அஜித் மட்டும்தான் நல்லவர்; மத்த நடிகரெல்லாம் திருடனுங்க. அஜித் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர்; ஆமா! மத்த கூத்தாடிகளெல்லாம் கேடுகெட்டவனுங்க. படத்தை படமாக மட்டும் பார்க்க தவறிய தமிழனின் தலைமைத்துவ துதி இப்படித்தான் இருக்கிறது.
 
தமிழ் சினிமா வரலாற்றில் 'வேதாளம்' மிக அதிக வசூலை பெற்றதாக பட்டியலிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த பல கோடிகள் வசூலித்த தொகையில் ஒருசில கோடிகளை சென்னை - கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் மழை வெள்ள பாதிப்புகளுக்காக கொடுத்திருந்தால் பெருமை படலாம். அதை விட்டுவிட்டு, "தலடா, தெறிடா, இத்தனை கோடிடா!" ன்னு மழையால் வீடிழந்த மக்கள் அவதிப்படும் இம்மாதிரியான சூழலில் பீற்றி கொள்வதில் என்ன பெருமை கிடைக்கிறதோ, சில டேஷ்களுக்கு...

வ.உ.சி.யும் சாதி தலைவரானார்!

வரலாற்றில் தன் நாட்டுக்காக தனிக்கப்பலையே வாங்கி, கப்பலோட்டிய சுதேசித்தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாள் இன்று! ஆனால், அவரையும் சாதி தலைவராக்கி அரசியல் ஆதாயம் தேடும் அமைப்புகளெல்லாம் வ.உ.சி.பிள்ளையின் நேரடி வாரிசு தாரர்களின் குடும்பத்தினர், இன்று வறுமையில் வாடுவதை கண்டும் தோள் கொடுக்கவில்லை என்பதும் கூட வருத்தமான வரலாறு தான்!

விமர்சகரெல்லாம் யோக்கியரா?

தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காத வரையிலும், அயோக்கியன் கூட மற்றவர்களின் பார்வையில் நல்லவன் தான். அதே மாதிரிதான் நயன்தாரா விசயமும், மற்றவர்கள் பார்வையில் பார்க்க படுகிறது. இன்றைக்கு நயன்தாரா பிறந்தநாள் என்பதால், எதிர்ப்பும் - ஆதரவுமாக, வாழ்த்துகளும் - அவதூறுகளுமென பல பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

நயன்தாராவை விமர்சிக்கும் எத்தனை பேர், தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்க சீலராக வாழ்கின்றனர் என்பது அவர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம். சினிமா என்பது பொது ஊடகம். அதில் நடிப்பர்களை திரையில் ரசிப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள். நடிகைகளை வெறும் உடலாக மட்டும் பார்க்காமல், அவர்களது படுக்கையறை திரையை நீக்கி எட்டிப்பார்த்து எச்சில் விட்டு, உங்களது வன்மங்களை வார்த்தைகள் ஆக்காதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

திருத்துறைப்பூண்டி அகமுடையார்களால் ஒருங்கிணைக்கும் கந்த சஷ்டி பெருவிழா!
டெல்டா பகுதியான திருத்துறைப்பூண்டி நகர அகமுடையார்களால் ஒருங்கிணைக்கப்படும் எம்பெருமான் திருமுருகனின், 'கந்த சஷ்டி பெருவிழா' அழைப்பிதழ்! அருகிலுள்ள ஆன்மீக சொந்தங்கள் கலந்து கொள்ளுங்கள்.

அனைவருக்கும் கந்த சஷ்டி பெருவிழா வாழ்த்துகள்!

கடலூரும் - ஆர்.கே.நகரும்!

ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடல்ல. தமிழகத்தின் தலைநகரிலேயே பல பகுதிகளில் இடுப்புக்கும் மேலே மழை நீர் தேங்கி நிற்கிறது. கடலூர் போன்ற கடலோர வெளி மாவட்டங்கள், மழையால் சின்னாபின்னமாகி இருக்கிறது. ஆர்.கே.நகரில் மட்டும் 48 இடங்களில் மீட்பு பணி செய்து, தான் வரும் வழியெங்கும் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி இரைத்துவிட்டால், ஒட்டுமொத்தமாக மற்ற பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரெல்லாம் வடிந்து விடுமா என்ன? ஆர்.கே.நகர் ஒரு தொகுதியால் மீண்டுமொரு முறை எம்.எல்.ஏ. ஆகிவிடலாம். மற்ற மாவட்ட தொகுதிகளிலும் பாதிக்கப்பட்ட இடங்களை விரைவாக சரி செய்தால் தான் மீண்டும் முதல்வராக முடியும். ஏனெனில், ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடல்ல!

அடுத்த மாதமே கடலூரில் இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கட்டும். நாளைக்கே அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழு, வார்டு வாரியாக அங்கு அனுப்பப்படும்.
திராவிடம், தீரா விடம்!

- இரா.ச.இமலாதித்தன்.

வாழ்த்துகள் அகமுடையாரே!


சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பட்டறைபாக்கத்தில், தனியொருவனாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தன் பணி சுமைகளுக்கிடையே தன் சொந்த செலவில் சாப்பாட்டு பொட்டலங்களை தயார் செய்து, நேரடியாக களத்திற்கும் சென்று அன்னதானம் செய்யும் அன்பு சகோதரர். மருது பரணி அகமுடையார் அவர்களின் செயல்களால் பெருமை கொள்கிறோம்.

பெயருக்கு பின்னால் சாதியை போட்டு கொள்வது பெருமையுமல்ல, அவமானமும் அல்ல. ஆனால், நம் செயல்களால் அந்த சாதி பெயருக்கு புகழையும் மரியாதையும் தேடித்தருவதில் தான், உண்மையான பெருமையே அடங்கி இருக்கிறது. வாழ்த்துகள் அகமுடையாரே!

- இரா.ச.இமலாதித்தன்

குறிஞ்சாக்குளத்து பிரச்சனை துணை நிற்குமா தேவரினம்?

குறிஞ்சாக்குளத்து கோவில் பிரச்சனைக்கு முக்குலத்தோர் அமைப்புகளும், மாமன்னர் மருதுபாண்டியர் அமைப்புகளும் துணை நிற்குமா?
கலிங்கப்பட்டியை தெரிந்து வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு அதன் அருகிலுள்ள குறிஞ்சாக்குளத்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள குறிஞ்சாக்குளத்தில் 1992ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி அப்பகுதி வடுகர்களால், அதே பகுதியை சார்ந்த மண்ணின் மைந்தர்களான நான்கு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த அப்பாவி தமிழ்ச்சாதி இளைஞர்கள் நான்கு பேர் கண்டந்துண்டமாக ஏன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்கள்? என்பதை பற்றி கவலைப்படவோ, யோசிக்கவோ கூட நமக்கு நேரமில்லை. காரணம் கேட்டால், அது 'பறையர் - நாயக்கர்' சாதி பிரச்சனையென சொல்லி எளிதாக கடந்து, மறந்து விடுகிறோம்.

உண்மை என்னவெனில் அங்குள்ள தங்கள் பட்டா நிலத்தில் சாமி கும்பிட கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதுதான் துயரமான செய்தி. அக்குள்ள பெரும்பாலான நிலப்பகுதி வடுகர்களிடம் இருந்ததால், தமிழனுக்கு கோவில் கட்ட இடம் கொடுக்க மனம் வரவில்லை; அதனால் தான் நால்வர் படுகொலை அரங்கேறியது.

இந்த கொலைக்கு, கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அவரின் மாமா திரு. சங்குவெட்டி மோகன்தாசு நாயக்கர் தான் என திருவேங்கடம் காவல்துறை குற்றஞ்சாட்டியும் பலன் ஏதுமில்லை. காரணம் என்னவெனில் மதிமுக பொது செயலாளர் வைகோவின் உடன் பிறந்த தம்பிதான், இந்த கொலை வழக்கின் முதல் குற்றவாளியான ரவிச்சந்திரன்.

இதெல்லாம் கடந்த கால வரலாறு. இப்போதைய சூழல் மிக மோசமாக இருக்கிறது. குறிஞ்சாக்குளத்தில், கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக கொலை செய்யப்பட்ட நால்வரின் கனவைவும், தமிழர்களின் உரிமையையும் நிறைவேற்றும் நோக்கத்தோடு தமிழின உணர்வாளர்களால் அங்கே, கந்தாரி அம்மனுக்கு கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மீண்டும் ஒரு யுத்தக்களம் வெடித்துள்ளது.

மதுரையில் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுத்த முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும் முக்குலத்தோர் அமைப்புகளும், கி.பி.1800 களிலேயே சாதி மத வேறுபாடின்றி 'வீரசங்கம்' என்ற அமைப்பின் மூலம் அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் ஒன்றிணைத்து காளையார்கோவில் கோபுரத்தை கட்டி காத்து, சிவகங்கையை கி.பி 1780 முதல் கி.பி 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் கொள்கைகளை பின்பற்றும் அனைத்து மாமன்னர் மருதுபாண்டியர் அமைப்புகளும், அகமுடையார் அமைப்புகளும், இந்த கோவில் கட்டும் பிரச்சனையை கையில் எடுத்து, சாதி என்ற வட்டம் தாண்டி சக தமிழர்களின் பிரச்சனைக்கும் தோள் கொடுப்பதுதான் காலத்தின் தேவை.

மண்ணின் மைந்தர்களான சக தமிழ் இனக்குழுக்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையை, தன் மக்கள் பிரச்சனையென முடிவு செய்து, குறிஞ்சாக்குளம் காந்தாரி அம்மனுக்கு கோவில் கட்ட தடையாய் இருக்கும் அனைத்து எதிர்ப்புகளையும் உடைத்து, தமிழர்களாக ஒன்றிணைந்து ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

- இரா.ச.இமலாதித்தன்

மருதுபாண்டியர்களை அவமதிக்கும் அரசாங்கம்!அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசியத்தின் முன்னோடி அமைப்பின் மூலமாக கி.பி.1800 களிலேயே அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த, மருது சகோதரர்களின் வீரத்தை எந்தவொரு தமிழனும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழனின் வீரத்தையும், கொரில்லா போர்முறையும் அன்றைக்கே வெளிக்காட்டி, 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட, முதல் சுதந்திர போராட்ட வீரர்களான 'வெள்ளை மருது - சின்ன மருது' என்ற மருது சகோதர்களின் வெண்கல சிலைகளின் அவலத்தை பாருங்கள். சிவகங்கை அருங்காட்சியகத்தின் வெளியே புல் மண்டி கிடக்கும் இடத்தில் வெண்கல சிலைகளின் இழிநிலையை பார்த்தும் சலனம் ஏதுமின்றி நகர்ந்து சென்றால் நீங்களும், உணர்வுள்ள அக்மார்க் பச்சை தமிழனே!

இதை இத்தனை நாட்களாக கண்டும் காணாமல் ஒன்றுமே செயல்படுத்தாத சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனிக்குமா? வருடந்தோறும் அக்டோபர் 24ம் தேதி மருது சகோதரர்களுக்கு அரசு விழா மட்டும் எடுக்கிறது இந்த அரசாங்கம். ஆனால், அவர்களின் முழு உருவ வெண்கல சிலைகளை இப்படி கேட்பாரின்றி அவமானப்படுத்திருக்கும் இச்செயலை கண்டிக்க கூட ஆளில்லை என்பது தான் வருத்தமான விசயம்.

மேலும், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி அருகிலுள்ள முக்குளம் கிராமத்தில் அவர்கள் வாழ்ந்த அந்த வீட்டை சீர்படுத்தி அங்கேவொரு மணிமண்டபம் கட்டவும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யுமா இந்த அரசாங்கம்?


- இரா.ச.இமலாதித்தன்

பாரீஸ் முதல் கடலூர் வரை!

நாம் எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும்? எதைப்பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும்? எதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதை கூட ஊடகங்களே தீர்மானிக்கின்றன என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் தான், 'சப்போர்ட் பாரீஸ்' என்ற தற்காலிக ப்ரோஃபைல் மாற்றம்.

முள்ளிவாய்க்காலில் பல லட்சம் உயிர்கள் கொலை செய்யபட்ட போது, அது அடுத்த நாட்டு பிரச்சனை. ஆனால், பாரீஸ் மட்டும் பக்கத்து வீட்டு பிரச்சனை. டெல்லி கற்பழிப்புக்காகவும், ஆந்திர வெள்ளத்திற்காகவும் நிதியுதவி - போராட்டம். ஆனால், தமிழகத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளோ, கடலூர் மழை வெள்ளத்தால் வீடிழந்த மக்களோ, இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்களோ, வேற்றுகிர வாசிகளாக போய் விடுகின்றனர், புரட்சி பேசும் போராளிகளுக்கு.
த்தூ...

பாரீஸ் படுகொலைகளுக்கு பின்னாலுள்ள வல்லாதிக்கம்!

பாரீஸ் படுகொலைகள் கண்டிக்கப்பட வேண்டியவையே. மும்பை கூட முன்னோடிதான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு. இந்த கொலைகளெல்லாம் யாரால்? எந்த அமைப்பால்? செய்யப்படுகின்றது என்ற ஆய்வெல்லாம் தேவையில்லை; உடனடியாகவே அவர்களாகவே பொறுப்பேற்று கொள்வார்கள். உடனே, அல்-கொய்தா, தாலிபான்கள், சிமி, இந்தியன் முஜாகிதீன், ஐஎஸ்ஐஎஸ் என படுகொலைகள் செய்த பயங்கரவாத அமைப்புகளை ஒருபக்கம் கண்டிப்பதும், மறுபக்கம் அவர்கள் போராளிகள், ஜிகாதிகள் என போற்றுவதும், இன்னொரு பக்கம் இசுலாமிய மதவெறியர்கள் என ஒட்டுமொத்த மார்க்கத்தினரையே இழிவு படுத்துவதும் தொடர்ந்து கொண்டே வருவதைத்தான் பார்க்க முடிகிறது.

எய்தவன் யாரென ஆராயாமல், அம்பை வசை பாடி என்னாக போகிறது? வில்லாளன் யாரென யூகித்து, உலகின் பொது எதிரியின் நோக்கம் எதுவென பொறுமையாக சிந்தித்து விட்டு, உணர்ச்சிவசப்படுங்கள். அப்போதுதான் அந்த உணர்வுக்கும் ஏதாவது மதிப்புண்டு. நேற்று தாலிபான்கள்; இன்று ஐஎஸ்ஐஎஸ்கள்; நாளை இன்னொரு புதிய பெயரிலான ஏதோவோர் அமைப்பு இதுபோன்ற பல படுகொலைகளை செய்து கொண்டே தான் இருக்க போகிறது; உண்மையான எதிரி யாரென உலகம் அறியாத வரை.

- இரா.ச.இமலாதித்தன்.

மானிய கேஸ் சிலிண்டர் ரத்து!

ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு மானிய கேஸ் சிலிண்டர் ரத்து.

- வெங்கய்யா நாயுடு, நடுவண் அமைச்சர்.

நல்லது.

அப்படியே, எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர், சபாநாயகர், ஆளுநர், ஜனாதிபதி போன்ற பதவியில் ஒருமுறை இருந்துவிட்டு, காலம் முழுக்க கோடிக்கணக்கில் பணம் புரளும் அரசியல்வாதிகளுக்கான அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய உத்தரவிடுங்கள்.

சமத்துவ குழந்தைகள் விழா!

'நமக்கு நாமே'வுக்கு போட்டியாக தான், இந்த போட்டோ ஷூட் நடத்திருக்காரு போல... ஹிந்து - முஸ்லீம் - கிருஸ்துவம் என சரியான காம்பினேசனில் குழந்தைகள். இந்த திரைக்காட்சியிலும் குறை சொல்லவே முடியாது. அதுதான் தலைவருக்கும், தளபதிக்கும் உள்ள வித்தியாசம். கலைஞன்யா!

நேரு மாமா தின வாழ்த்துகள்!

மவுண்ட்பேட்டன் மனைவியின் மனம் கவர்ந்தவரும், பல துரோக வரலாறுகளுக்கு சொந்தக்காரருமான நம்ம நேரு மாமா தின வாழ்த்துகள்! இணையத்தில் நேரு மாமா கழுவி ஊற்றப்படுவதை பார்த்து வளர்ந்து வரும் இளம் மாணவ சமுதாயம், இன்னும் சில ஆண்டுகளிலேயே 'குழந்தைகள் தினம்' என்ற பெயரை நீக்க சொல்லி போரட்டம் நடத்தலாம்.

நிவாரணம் கேட்டால் அடி உதையா?

சிதம்பரம் அருகே, வெள்ளக்காடான கிராமத்தை சேர்ந்த வீடுகளை இழந்த மக்கள் தன்னெழுச்சியாக நிவாரண பணிகளை விரைவாக செய்யச்சொல்லி ஜனநாயக நாட்டில் சாலை மறியல் மூலமாக அடையாள அறவழி போரட்டத்தை நடத்திய, முதியோர் - பெண்கள் - சிறியோரென அனைவரையும் காவல்துறையினர் கேவலமான முறையில் பேசி, அடித்து விரட்டி ஓடவிடும் காட்சிகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.


மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் மக்கள் சேவை செய்யும், மக்கள் தொகையில் நூறில் ஒரு பங்கு கூட இல்லாத காவல்துறையின் அடக்குமுறை தட்டி கேட்க யாருமே இல்லை. ஏனெனில், காவல்துறை அமைச்சத்தை கையில் வைத்தல்துள்ள தலைமையே, 144 தடையையும், 110 விதியையும் நம்பித்தானே ஆட்சி நடத்தும் அவலம் இங்கே அரங்கேறி கொண்டிருக்கிறது.

- இரா.ச.இமலாதித்தன்

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும்!

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும் ஒரே மாதிரியாக செயல்படுகிறார்கள். ஒரு பக்கம் கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு, இன்னொரு பக்கம் கடவுள் அழிச்சாத சொல்ற நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அந்த பக்கம் பார்த்தால், வர்ணாசிரம கொள்கையெல்லாம் இனி தேவையில்லை; நாமெல்லாம் ஒன்றென சொல்லி, கடவுள் கொல்றதெல்லாம் தமிழன் என்பது மாதிரியே கதை புனைகிறார்கள்.
திராவிட-ஆரிய கூத்தாடிகளுக்கு, தமிழன் என்ற ஒருவன் இல்லையென்றால் அரசியல் பிழைப்பே இருக்காது போல.

முருகபெருமானின் பக்தரான முத்துசுவாமி தீட்சிதர்!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், சோழநாடான டெல்டாவின் திருவாரூரில் அவதரித்து, எட்டையபுரத்தில் ஐப்பசி அமாவசை நாளில் இசையாலேயே இறைவனோடு ஐக்கியமான நாள் இன்று! திருமுருகனின் அருளால் திருத்தணியில் இந்திய (கர்நாடக+ஹிந்துஸ்தானி) இசைகளுக்கான விதைகளை அழியா கீர்த்தனைகளாக தந்த மகானின் ஜீவன் திருமுருகனிடம் சராணாகதி அடைந்த நாள் இன்று!

திருமுருகா!

கந்த ஷஷ்டி திருநாள் நல்வாழ்த்துகள்!சிக்கல் சிங்காரவேலனை தரிசிக்க வருபவர்கள், அரை மைல் தொலைவிலுள்ள பொரவச்சேரி என்கிற பொருள்வைத்தசேரி திருமுருக பெருமானையும் தரிசிக்க மறவாதீர்கள்.

எட்டுக்குடி, என்கண், பொரவச்சேரி இந்த மூன்று கோவில்களில் தான், ஒரே ஸ்தபதியால் உருவாக்கப்பட்ட மூலவர் சிலை உள்ளது. மேலும், சிக்கல் கோவிலில் திருமுருகரின் உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். மூலவர் சிலை பொரவ்ச்சேரியில் தான் இருக்கிறது. மேலும், பொரவச்சேரியில் முதலில் சிலை செதுக்கிய சிற்பியின் கட்டைவிரலை மன்னன் துண்டித்து விட்டார். ஏனெனில் இதுபோனற அழகானதொரு திருமுருக சிலையை வேறெங்கும் இந்த சிற்பி செதுக்கிவிட கூடாதென்பதால்.

ஆனால் அந்த சிற்பி, எட்டுக்குடியில் கட்டைவிரல் இல்லாமலேயே பக்தியின் விளைவால் மீண்டும் அதே போன்ற அழகான சிலையை செதுக்கியதால் கண்களும் மன்னனால் பறிக்கப்பட்ட பின்னாலும், என்கண்ணிலும் மீண்டும் அழகான திருமுருக சிலையை அதே மாதிரியே உருவாக்கியதால், அந்த சிற்பிக்கு திருமுருகரே காட்சியளித்து தன்னோடு ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு.

பொரவச்சேரி - எட்டுக்குடி - என்கண் உள்ளிட்ட இந்த மூன்று ஊர்களிலும் உள்ள திருவுருவ சிலைகளிலும் தத்துரூபமாக மிகவும் நேர்த்தியாக அழகாக ஒரே மாதிரியாகவே திருமுருகன் காட்சியளிப்பார். என்பதே சிறப்பம்சம். மயில்களின் கால்கள் இரண்டில் மட்டுமே வள்ளி தெய்வயானை முருகனென ஒட்டுமொத்த சிலையும் தாங்கி நிற்கும் அற்புதத்தை பார்க்கவே கண்கள் கோடி வேண்டும்.

மேலும், கந்த ஷஷ்டி அன்று திருச்செந்தூர் சூர சம்ஹாரத்திற்கு முந்தைய நாள் சிக்கலில், வேல்நெடுங்கன்னி (வேளாங்கன்னி மாதா உருவான கதையும் சிக்கல் பார்வதியால் தான் என்பது தனிக்கதை) என்ற பார்வதி தாயிடம் வேல் வாங்கி, கடல் மார்க்கமாக திருச்செந்தூர் கொண்டுன்போய் போரில் சூரனை வீழ்த்துவது தான் மற்றுமொரு வரலாறு. அப்படி வேல் வாங்கும் ஷஷ்டிக்கு முந்தைய நாள், சிக்கலிலுள்ள திருமுருகனின் சிலை வேர்த்து வேர்வை நீர் சுரக்கும் நிகழ்வும் பெரும் அதிசய நிகழ்வாகும்.

வெற்றி வேல்! வீர வேல்! திருமுருகா!


இன்றிலிருந்து இந்த ஒருவார கால 'கந்த ஷஷ்டி பெருவிழா'வின் போது, மற்றவர்களை போல விரதம் இருங்கன்னு சொல்லல; அசைவம் சாப்பிடாம இருந்தா நல்லாருக்கும்ன்னு தான் சொல்றேன்.


தமிழின உறவுகள் அனைவருக்கும் கந்த ஷஷ்டி திருநாள் நல்வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நாகை ’தேவ நதி'யின் ஒரு பகுதி!இந்த பெருமழையின் விளைவாக, எங்க நாகப்பட்டினத்தின் எல்லையான 'கோட்டைவாசல்' பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்தோடும், 'தேவ நதி'யின் ஒரு பகுதி!

தீபாவளி வாழ்த்துகள்!அடுத்த வருசம் "தலை தீபாவளி" கொண்டாட காத்திருக்கும், அனைத்து பங்காளிகளுக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்!
தீபாவளி வாழ்த்துன்னா, இப்படி சொல்லணும்... டாட்.

நரகாசுரன் யார்? தீபாவளி, தமிழர் பண்டிகையா? - ஓர் ஆய்வு.


நராகசுரனை கொன்றொழித்த நாள் தான் தீபாவளியென வரலாறு சொல்கிறது. ஆனால் இந்த புராண வரலாறெல்லாம் முற்று முழுதாக உண்மையில்லை. புராணங்களெல்லாம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, ஏதாவதொரு கதாபாத்திரத்தை கடவுளோடு ஒப்பிட்டு நம்பும்படியாக செய்வதுதான் ஆன்மீக நூலோரின் கடமையாக இருந்தது.

வள்ளுவன் சொன்ன அந்த ஆதிபகவனான சிவஜோதியை முதலாம் தீர்த்தங்கர் ரிஷபதேவரான நந்திதேவர் முதற்கொண்டு 24ம் தீர்த்தங்கராக அவதரித்த மகாவீரர் வரையிலும் சமணம் என்ற மார்க்க பெயரில் பாரத தேசமெங்கம் சாதி வேறுபாடின்றி உண்மையான ஆன்மீகத்தை அவரவர் தாய் மொழிகளின் வாயிலாகவே பரவ செய்தனர்.

இன்றைய நாட்களில் ஹிந்து பண்டிகைகளில் முதன்மையானதாக தீபாவளியே அறியப்படுகிறது என்பதற்கு, கத்தோலிக்க வாடிகனின் வாழ்த்து செய்திகளில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற நாளை நினைவு படுத்தவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்றும், இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பியது நாள்தான் தீபாவளி என்பதே பலரின் நம்பிக்கை.

ஹிந்து என்பது ஒரு மதமென அறியப்படும் முன், பாரதம் உள்ளிட்ட பழம்பெரும் நாடுகளில் ஆதிமதமாக சமணமே விளங்கியது. உலகில் மூத்தக்குடியென அறியப்படும் நம் தமிழர்களின் ஆதிமதத்தின் பெயரே ஆசீவகம் தான். அந்த ஆசீவகமும், சமணமும் ஒன்றே. அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என, தமிழின் பழைய அகராதிகளான, திவாகர நிகண்டும் - பிங்கல நிகண்டும் குறிப்பிடுகிறது.

"சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீவகரும் அத்தவத் தோரே"
- திவாகர நிகண்டு

நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குக் கற்பித்த மகாவீரரை, 'வென்றவர்' என்ற பொருளில் 'ஜெயனா' என்று மக்கள் அழைத்தனர். இவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர்கள் என்று அழைக்கப் பெற்றனர்.சம்மணம் போட்டு தியானத்தில் இருப்பதால் ச(ம்)மணர் என்றும், அம்மணமாய் இருந்ததால் அ(ம்)மணர் என்றும், அன்றைய சமகாலத்தில் இவர்கள் அறியபட்டதாகவும் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்தில் இரவு முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி கொண்டிருக்க, விடியற்காலையில் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தவாறே இறந்து விடுகிறார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அவர் முக்தியடைந்த நாளில், மக்கள் அனைவரும் வீட்டினுள் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர்.

தீப+ஆவளி =தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்று பொருள். மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்ததாலேயே தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது.

"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!"

- ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி, (புத்தகம்: சமணமும் தமிழும்)

வர்ணாசிரமங்களை கொண்டு சாதிய அடிப்படையில் கடவுளை வணங்க மனிதனால் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட போலி கொள்கைகளை உடைத்தெறிந்து, உண்மையான ஆதி மார்க்கத்தை வழிகாட்டிய 24வது தீர்த்தங்கரான மகாவீரரின் இறப்பானது, ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. அதனாலேயே, மகாவீரரை அசுரனாக்கி, பெருமாள் வதம் செய்ததாக பொய் பரப்புரையை புராணக்கதைகள் மூலமாக பரப்பிட காரணமாகவும் அமைந்தது. இது போன்ற பொய் புராண கதையை திருவோணம் பண்டிகையிலும் காணலாம். தமிழ் அகம்படி குலத்தில் உதித்த மாவலி சக்கரவர்த்தியின் இறப்பின் பின்னாலேயே கேரளத்தில் சமகிருதம் கோலோச்சியது. கேரள தமிழ் மன்னனை கொன்றொழித்த நாளே ஓணம் பண்டிகையென அம்மக்களையே நம்ப வைத்தது கூட பொய் புராணக்கதைகள் தான் என்பதும் சிந்திக்க வேண்டிய விசயமாகும். எது எப்படியோ, தமிழர்களின் ஆதி மதமான ஆசிகவத்தின் இறைத்தூதரான மகாவீரரின் நினைவுநாளை தீபமேற்றி மனதில் ஏற்றுவோம் அவரது நினைவேந்தலை!

கொல்லாமை வேண்டாமென்று சொன்ன மகாவீரரின் நினைவுநாளிலேயே அசைவம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்; இதுதான் கால மாற்றம். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழின உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

- இரா.ச.இமலாதித்தன்

மழைக்காலங்களில்...

ஏரி - குளம் - குட்டைகளையெல்லாம் ஆக்கிரமித்ததன் எதிர்வினையாக தான், வீட்டிற்குள்ளும் மழை தண்ணீர் வந்து போகிறது. குறைந்த பட்சம், ரியல் எஸ்டேட்கள் மூலமாக புதுப்புது நகர்களை உருவாக்கும் போதாவது நீர்தேக்கத்திற்காக இடம் ஒதுக்கினால் தான் ஓரளவுக்கு மழைக்காலங்களை சமாளிக்க முடியும்.

பா.ஜ.க!?

மாபெரும் மாட்டுத்தீவன ஊழலையே மறக்கடித்து மாட்டுக்கறி பிரச்சனை பீகாரில் ஆட்சியமைக்க உதவியுள்ளது. இனியாவது பாஜக பக்குவப்படட்டும் பேச்சுகளில்!

நாடு போற்றும் நான்காண்டு சாதனை!

திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துக்குள் வரிசையாக குடையோடு பயணிகள் பயணிக்கும் அவல நிலைதான், நாடு போற்றும் நான்காண்டு சாதனை!

கைக்குழந்தைகளோடும், தீபாவளி சாமான்களோடும், முதியோர்களும், பெண்களும் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்மில்லை. பேருந்தின் எல்லா இடங்களிலும் மழை தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தை பற்றி நடத்துனரிடம் கேட்டால், விரக்தியில் பேருந்து பணிமனை அலுவலர்கள் தான் காரணமென பல விசயங்களை சொன்னார்.

தொ.மு.ச., அ.தொ.ச., என தொழிற்சங்க தேர்தலுக்கும், பதவிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நான்கில் ஒரு பங்கையாவது பேருந்துகளின் பழுதை சரி செய்ய கொடுத்தால், வாங்கும் சம்பளத்திற்கு ஓரளவு தொழிற்தர்மமாவது இருக்கும்.

நாகை பேருந்து நிலையமே பெரிய குட்டை போல, சாக்கடையும் சகதியுமாக மழைத்தண்ணீரில் மிதக்கிறது. இலக்கு வைத்து குடிக்க வைக்கும் அரசாங்கத்தின் சட்டமன்ற அலுவலகமும் நாகை பேருந்து நிலையத்திற்கு அருகில் தான் இருக்கிறது என்பதும், அதுதான் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபாலின் அலுவலகம் என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

மேலும், நாகூர் - வேளாங்கண்ணி என ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்ட பயணிகள் எல்லாம் காறி துப்புறாங்க; நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகையில், பலரது நாக்கில் உமிழும் எச்சிலும் மிதந்து கொண்டிருக்கிறது, நாடு தூற்றும் நான்காண்டு வேதனையை சொல்லி...

- இரா.ச.இமலாதித்தன்

இமலாதித்தவியல் (ஆக - நவ 2015)

சூழ்நிலையை மட்டும் காரணம் சொல்லி தப்பித்து கொள்வதை விட, இதுநாள் வரை நமக்கு இந்த வாழ்க்கை கற்று கொடுத்த அனுபவங்களை கொண்டு நமக்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொள்வதே வெற்றி பெற எளிதான ஒரே வழி!


ரத்த சொந்தங்களையெல்லாம் எதிரிகளாக்கி விட்டு உறவினர்களின் திருமண வீட்டிலோ, நெருங்கியவர்களின் துக்க வீட்டிலோ பார்த்தும் பார்க்காதது போல் கடந்து செல்லும் காலம் இது. பெத்தெடுத்த தாய் தகப்பனை கூட சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு தனக்கெல்லாம் தெரியுமென கடுஞ்சொல்லால் காயப்படுத்தி விட்டு, பொதுவெளியில் வேடம் தரித்து உலவும் உலகம் இது. இந்த போலிகள் சூழ் வாழ்வில் உண்மையை எளிதாக உணரவே முடியாது. பொய்யாக வாழ்வது தான் எளிது.

தனித்து இருப்பதற்கும், தனிமையாய் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனித்திருத்தல் நம்மை உலகறிய வைக்கும்;தனிமை நம்மையே உணர வைக்கும்!

இருக்கும் வரையிலும் அதன் அருமை புரியாமல், இழந்த பின்னால் வருந்த வைக்கும் எல்லா விசயங்களுக்கு பின்னாலும் ஈகோ மட்டுமே ஒளிந்திருக்கிறது!

தான் அடைந்த அவமதிப்புகளையும், புறக்கணிப்புகளையும் மறக்காமல் மனதினுள் சேமித்து வைத்தவர்களுக்கு, வாழ்க்கையின் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட பின்னாலும் தலைக்கணமும், புகழ்போதையும் வருவதேயில்லை!

எண்ணங்களுக்கு தான் எத்தனை வலிமை? எதையும் தன் வசப்படுத்த முதலில் உங்கள் எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, அதை தீவிரமாக நம்புங்கள். இந்த உலகமே உங்கள் வசமாகும்!

மிகப்பெரிய அளவிலான தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை பதில் கொடுக்க தோன்றினால், 'அமைதி' தான் ஆகச்சிறந்த பதில். கூடவே, அன்றாட வேலையை தொடர்ச்சியாக செய்து இயல்பாகவே இருப்பதும் தான்.

வெளிப்படை தன்மையில்லாத உண்மைகளும், தனக்கான முன்னுரிமை கொடுக்காத புறக்கணிப்புகளும், இருவர் பயணிக்கும் அன்பின் பாதையை ஒருநாள் பழுதாக்க கூடும்!

கமல் எனும் நாயகன்!

மேற்குலக சினிமாவை காப்பிகேட் செய்யும் காலமெல்லாம் மலையேறி போனதால் தான், உன்னைப்போல் ஒருவன், பாபநாசம் போன்ற இந்திய துணைக்கண்டத்தின் படங்களையும் காப்பி அல்லது இன்ஸ்பியர்ட் பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

"அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே, முருகா! முருகா! முருகா!" ன்னு முதல் படத்திலேயே அப்படி நடித்ததால் தான் 50 வருடங்கள் கழித்தும் இங்கே நீடித்து நிலைத்து நின்று, "கடவுள் இல்லைன்னு சொல்லல; இருந்தால் நல்லாருக்கும்ன்னு தான் சொல்றேன்" ன்னு கைத்தட்டல்களுக்காக போலியாக உரத்த குரலில் கரகரவென பேச முடிகிறது கமலால்!

 பேச்சளவில் மட்டும் பகுத்தறிவு என பேசிக்கொண்டு, தன் படங்களில் வைணவனாகவே கதாப்பாத்திரத்தை உருவாக்கி, ஹேராம், பஞ்ச தந்திரம், ஆளவந்தான், தசாவதாரம், விஸ்வரூபம் என படங்களின் பெயர்களில் கூட தன் மார்க்கமான வைணவத்தை மறவாத, அன்பே பாபநாசம் சிவமென சொன்ன "illuminati"கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்! எம்பெருமான் முருகன் அருளோடு வாழ்க வளமுடன்...

கூடவே, ஸ்ருதிஹாசன் பற்றி கருத்து தெரிவித்தன் விளைவாக, கமல் ரசிகர்களால் தாக்குதலுக்கு உள்ளான சிவகார்த்திகேயனுக்கு இன்றைய நாளில் வீரவணக்கம்!

வாழ்த்துகளும், வஞ்சங்களும்!

தமிழகத்தின் முதல் (திருநங்கை) காவல்துறை துணை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள ப்ரீத்திகா யாஷினிக்கு, இங்கே சிலர் வாழ்த்துகள் சொல்வது போல, குத்திக்காட்டிக்கிட்டே இருக்காங்களோன்னு தோணுது.

காங்கிரஸ் தலைவர்!?

காங்கிரஸ் கட்சி தமிழர் விரோத கட்சியாகவே இருந்து விட்டு போகிறது. ஆனால் அந்த கட்சியின் அடிமட்ட தொண்டன் அப்பாவி தமிழன் தானே? அந்த கட்சியின் கடைசி உறுப்பினர் இருக்கும் வரையிலும், அதன் அரசியல் அதிகாரமும் தமிழ் மண்ணில் இருக்கவே செய்யும். அதனால், அந்த அரசியல் அதிகாரத்தை முற்றிலும் அழித்தொழிக்கலாம். அது அவ்வளவு எளிதாக செய்ய முடியாத செயல். ஆனால் அந்த கட்சியின் தமிழக தலைமையை ஒரு தமிழனே கைப்பற்ற மறைமுக ஆதரவு தெரிவிக்கலாம். அதனாலேயே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ற தெலுங்கு நாயக்கரை விட, கே.வி.தங்கபாலு என்ற தமிழ் அகமுடையாரை ஆதாரிப்பதில் தவறில்லை.

‪#‎ISupportKVThangabaluAgamudayar‬

வைகோ - சீமானின் அரசியல் நகர்வு!

திரு. வைகோ தாயாரின் மறைவுக்காக திரு. சீமானின் இரங்கல் அறிக்கையும், கலிங்கப்பட்டிக்கே சென்று நேரில் அஞ்சலி செலுத்தியதையும், அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்கின்றேன். ஒருமுறை ஈழ ஆதரவு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ஒரே திரையரங்கினுள் அருகருகே திரு.வைகோவும் - திரு. சீமானும் அமர்ந்திருந்து பார்த்திருந்தும், இருவரும் முகம் பார்த்து கூட பேசிக்கொள்ளவில்லை. அதே போல எங்கள் நாகப்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த பொது கூட்டத்தில் திரு. சீமான் அவர்களின் பேச்சில் கூட முழுக்க முழுக்க திரு. வைகோவின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் விளக்கமாக சாடி விமர்சித்து பேசினார்.

அப்படி இருந்தும் இப்போதைய அரசியல் சூழலில் தெய்வத்திருமதி வை.மாரியம்மாளின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டது, தன் மீதான தெலுங்கு அமைப்புகளுடைய எதிர்ப்பின் வீரியத்தை திசை திருப்பவே என எண்ணுகிறேன். மேலும், திரு. வைகோவோடு இணக்கமாக இருந்த விடுதலைகளத்தை சேர்ந்த திரு. நாகராஜன் போன்றோரெல்லாம் திரு. சீமானின் இந்த அரசியல் காய் நகரத்தலை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

விவேகமுள்ள வீரம் கண்டிப்பாக வெற்றிக்கு வித்தாகும். வாழ்த்துகள், திரு. சீமான்!

- இரா.ச.இமலாதித்தன்.

துரோகிக்கான செருப்படி!

விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தோல்வியிலும், ஈழத்தமிழர்களின் ஒவ்வோர் இழப்பிலும், 'இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்' என்ற பெயரை கேட்கும்போதெல்லாம் ஆத்திரமடைந்திருக்கிறேன். அதை இத்தனை வருடங்கள் கழித்து தமிழ்நாட்டின் தலைநகரில் வீரமிகு. புதுக்கோட்டை பிரபாகரனின் செருப்படி ஓரளவுக்கு தீர்த்து வைத்திருக்கிறது.

சில தொண்டு நிறுவனங்களின் நோக்கம்!?

"கல்யாண் ஜூவல்லர்ஸ்"க்கு நிகராக டிவி சேனல்களுக்கு விளம்பரம் தர ஒரே நிறுவனம், இப்போதைக்கு "சிவானந்தா குருகுலம்" மட்டும் தான்னு நினைக்கிறேன். இந்த மாதிரியான தொண்டு நிறுவனங்களின் பண பரிவர்த்தனையும், அதன் செயல்பாடுகளும் கூட கவனிக்கப்பட வேண்டிய விசயம் தான்!

ஆயிரம் கோடி ஊழலையும் ஆதரிக்கும் சாதி பாசம்!

"சாதி என்பது பச்சை அநாகரிகம். சாதியையும், நிறத்தையும் பார்ப்பவன்
அரசியலுக்கு லாயக்கில்லை. சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன், அரசியலில் புகுந்தால் அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை; ஆன்மீகத்துக்குமி்ல்லை."

- பசும்பொன் தேவர்.

சசிகலா கும்பல் ஆயிரம் கோடிகளுக்கு தியேட்டரை வாங்கி இருக்கிறார்களென ஊடகங்கள் ஆதாரத்தோடு நிரூபித்தும், அதை தி.மு.க. என்ற கட்சியின் ஊழலோடு ஒப்பிட்டு திசை திருப்பி விடுவதை போன்றதொரு கேவலமான செயல் வேறொன்றுமில்லை. பி.ஆர்.பி கிரானைட் ஊழலையும், சசிகலா ஊழலையும் சாதி பாசத்தோடு அணுகும் ஒவ்வொருவரும், பசும்பொன் தேவரின் கொள்கையை தங்களது செருப்பால் மிதித்து, அவரின் உடலின் நெஞ்சத்து குருதியை உறிஞ்சி குடிப்பதற்கு சமம். நேர்மையாக இருக்க தெரியாதவனுக்கு எதற்கு மீசை மயிர்? அதையெல்லாம் மழித்து விட்டு மானம் ரோசமில்லாமல் ஊர் பணத்தை ஊழல் செய்து சுகபோகமாய் வாழும் யாருடைய காலையாவது கழுவி வயிற்றை கழுவலாம். அடத்தூ!

- இரா.ச.இமலாதித்தன்

கோவன் கைதை கண்டிப்போம்!தமிழக அரசின் மதுக்கடைகளை எதிர்த்து 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் மூலமாக, “மூடு டாஸ்மாக்கை மூடு", "ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது 124 ஏ - தேசத்துரோக நடவடிக்கை, 153 - சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 - அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரிமை, பேச்சுரிமையை கூட கொடுக்க இயலாத கையாலாகாத மக்களாட்சி அரசின் வெளிப்பாடுதான் இந்த செயல். தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களை கூட ஆதரித்து பேச, எழுத, செயல்பட உரிமை கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வழங்கிய ஜனநாயகத்தின் நேர்மை இதுதானா?
எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும் என்பதை கூட ஆளும் அரசாங்கங்கள் முடிவெடுத்தால், அது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? சர்வாதிகாரத்தின் உட்சம் இது. நாட்டுப்புற பாடகர் தோழர் கோவனை அரசு விடுதலை செய்ய அனைத்து தமிழ் அமைப்புகளும் மிகப்பெரிய அளவிலான போரட்டக்களங்களை உருவாக்க வேண்டும்.

நம்மை அடிமை படுத்திய அந்நியன் அன்று, பேச்சுரிமையை அடக்க பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மீது வாய்ப்பூட்டு சட்டம் தான் போட்டான். இன்று தேவரது ஜெயந்தி நாளில் அவருக்கு போட்ட வாய்பூட்டு சட்டத்தை விட மோசமான கைதை அரங்கேற்றிய அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன? குடிபோதைக்கு அடிமையாகி தமிழன் தன் சுயத்தை இழக்க வேண்டும் என்பது தானா? தமிழனின் சிந்தனையை மழுங்கடித்தால் தானே, அந்நியர்கள் ஆட்சியில் அமர முடியுமென்ற ராஜதந்திரமா? தமிழனே போதையிலிருந்து விழித்தெழுந்து தமிழ் மண்ணை தமிழனே ஆள வழிவகை செய்!

- இரா.ச.இமலாதித்தன்

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

பசும்பொன் தேவரை மட்டும் தலைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் வழிகாட்டிய, ஆன்மீக தலைவராக விவேகானந்தரையும், அரசியல் தலைவராக நேதாஜியையும் ஏற்று கொள்ளுங்கள். மற்ற யாரும் உங்களுக்கு தலைவனாக இருக்க முடியாது. அக்டோபர் மாதம் மட்டும் உயிர்த்தெழும் சாதிக்காரனையெல்லாம் தலைவனென நினைக்காதீர்கள். அந்த மாதிரியான நபர்களையெல்லாம் உறவுக்காரனாகவோ, சாதிக்காரனவோ பாருங்கள், தயவு செய்து தலைவனென சொல்லாதீர்கள். அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு சட்டமன்ற தொகுதிகளை யாசகம் கேட்பவன் தலைவனில்லை.
இசுலாம் மார்க்கத்தில் இறைவன் ஒருவனே; ஆனால் இறைத்தூதர்கள் இருப்பது போல, தலைவன் ஒருவனாக பாவியுங்கள். சொந்த பலத்தோடு ஒரு தொகுதியில் சுயேட்சையாக தனித்து நின்று வெற்றி பெற வக்கிலாதவர்களின் பின்னால், மாநில - மாவட்ட - ஒன்றிய பதவிக்காக தயவு செய்து விலை போகாதீர்கள்.

 "அரசியலிலும், ஆன்மீகத்திலும் சாதி பார்க்க கூடாது" என்று சொன்ன பசும்பொன் தேவரையே, சாதி தலைவனாக்கிய பெருமை முழுக்க முழுக்க சாதி அமைப்புகளையே சாரும். "தேசியம் எனது உடல். தெய்வீகம் எனது உயிர்!" என்ற தன் சொல்லுக்கேற்ப வாழ்ந்துகாட்டிய பசும்பொன் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

மனிதர் குல மாணிக்கத்தை, மறவர் குல மாணிக்கம் என்றீர். பொதுவுடைமை சித்தாந்தவாதியை, பெண் பித்தர்களோடு ஒப்பீடு செய்தீர். விவேகமில்லாத வீரம் முரட்டுத்தனம் என்றவரை, கையில் அரிவாள் கொடுத்தீர். பெண்களின் கூந்தல் மீது கால் வைக்கமாட்டேனென்று சொன்னவரை, கால் மேல் கால் போட்டு எடிட் செய்தீர். உடல் முழுக்க திருநீர் சந்தனத்தோடு மாலை அணிவித்து இருந்தவருக்கு, கிலோ கணக்கில் தங்க சங்கிலிகளை கொடுத்தீர். ஆங்கிலேயன் அஞ்சி வாய்பூட்டு சட்டம் போட்டதை, உங்கள் வாயாலே அசிங்க படுத்தினீர். சாதி வேறுபாடின்றி தன் சொத்தான 32 கிராமங்களையே பகிர்ந்த ஈகியை, தன் வாழ்நாளில் பெண் வாசமின்றி வாழ்ந்த யோகியை, உங்கள் செயல்களாலேயே பாவி ஆக்கினீர். அந்நியரிடமிருந்து நாட்டை காக்க இராணுவத்திற்கு ஆட்களை அனுப்பியவரின் படத்தை வைத்து, தமிழர்களுக்குள் சாதி சண்டையை உருவாக்கினீர். உலக அரசியல் பேசியவரை, உள்ளூர் சாதி அரசியலுக்கு பயன்படுத்தினீர். தேசியத்தலைவனை, உங்க அரசியல் போதைக்காக சாதி தலைவனாக்கினீர். இன்னமும் என்ன செய்ய காத்திருக்கிறீர்?! உங்க அரசியல் அரிப்புக்கு தேவரை சொறியாதீர்.

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நாம் தமிழரே மாற்று!நாம் தமிழர் கட்சியிடமிருந்து அனைத்து கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களில் முதன்மையானது, சுவரொட்டி, பதாகைகளில் தான். யாருக்காக, எந்த நிகழ்வுக்காக பதாகை-சுவரொட்டி வைக்கிறோமென்ற செய்தியே வெளித்தெரியாமல், தலைமையை துதி பாடி, தலைமையின் பெயரும் படமும் மட்டுமே பெரிதாக இருக்கும். அவர் அழைக்கிறார், இவர் அழைக்கிறாரென இருக்குமே தவிர, யார் விழாவிற்கு, எந்த நிகழ்விற்கு என்பதே தெரியாமல் போய்விடும்.

முதலில், ஒரு தலைவனை ரொம்பவே மெனக்கெட்டு பெரிய பிம்பமாய் நிலை நிறுத்துகிறார்கள். பிறகு தங்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் தலைவனென்ற வெறும் பிம்பத்தோடு அருகே நின்று படம் பிடித்து படம் காட்டுகிறார்கள்.

இந்த விதத்தில் நாம் தமிழரே மாற்று.

மருது பாண்டியர் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணி மண்டபம்!

அனைத்து இணையமெங்கும் - இதயமெங்கும் - இவ்வூரெங்கும் - மாமன்னர் மருதுபாண்டியர்களாக தென்படுகின்றனர். தமிழ் தேசியத்தின் முன்னோடிகளை நினைவுபடுத்தும் அனைவருக்கும்,
தமிழ் தேசியத்திருநாள் நல் வாழ்த்துகள்!

 ~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி-முக்குளத்தில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும். அக்டோபர் மாதம் மட்டும் மாலை அணிவித்துவிட்டு போகும் அரசியல்-சாதி கட்சிகள் இதை முன்னெடுக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட விருப்பப்படும் அனைத்து உறவுகளும், கீழே உள்ள கோரிக்கையை காப்பி செய்து, http://www.cmcell.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக முதல்வர் தனிப்பிரிவுக்கு இதை அனுப்பலாம். நாம் அனுப்பும் இந்த கோரிக்கையானது அதிகமானால் மணிமண்டபத்தை அரசங்கமே விரைவாக கட்டி முடிக்க வாய்ப்பு அதிகமுள்ளது.

-------------------------------------------
வணக்கம்!
முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது சகோதரர்களின் நாட்டுப்பற்றையும், தியாகத்தையும் போற்றும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆண்டுதோறும் அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூரில் அரசுவிழா நடைபெற்று வருகிறது. இது தமிழக அரசின் முன்னெடுப்பால் தான் சாத்தியாமானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின / குடியரசு தின உரையில், மாமன்னர் மருதுசகோதரர்களின் சுதந்திர போராட்ட வீரத்தை பறைசாற்றும் வகையில் அவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டி, கூடவே அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஊதியத்தொகையை அதிகரித்து கொடுத்து வரும் தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவிக்க நாங்கள் அனைவருமே கடமைப்பட்டிருக்கின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, உத்ரகாண்ட் நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு. தருண்விஜய் அவர்கள் கூட, ”நாட்டுக்காக உயிர் நீத்த மருது சகோதரர்கள் பற்றிய வரலாற்று செய்தியை நாடு முழுவதுமுள்ள பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்படிப்பட்ட நாடுபோற்றும் சுதந்திர போராட்டவீரகளான மாமன்னர் மருதுசகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி-முக்குளம் என்ற ஊரில் அவர்களது நாட்டுப்பற்றை உலகறிய செய்யும் வகையில் அங்கே ஒரு மணிமண்டபம் கட்டி, அவர்கள் பிறந்த வீட்டை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வருக்கு, ஒட்டுமொத்த இந்திய குடிமக்களின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம். எந்தவிதமான செயற்கரிய கோரிக்கையை கூட செயல்படுத்தும் வல்லமையும், தாயுள்ளமும் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணான நரிக்குடியில் மணிமண்டபத்தை ஏற்படுத்துவார்களென நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
நன்றி.
---------------------------------

அதிமுகவும் - ஆட்சித்தலைவரும்!"ஆட்சித்தலைவர்" என்ற உடன் அதையும் கட்சிப்பதவின்னு நினைச்சிட்டாய்ங்க போல... கலெக்டரையும் கட்சிக்காரனுக்கும் திறமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உண்டு.
சு.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்.,
நாகப்பட்டினம் ஆட்சியர்.

ராஜராஜசோழன் பற்றி தி தமிழ் ஹிந்து!

ராஜராஜ சோழனை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் அடையாளப்படுத்துவது பெரும் தவறு.
- தி தமிழ் இந்து.

ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளைத் தஞ்சையில் ஆண்டுதோறும் தமிழக அரசே நடத்திவருகிறது. அவ்விழாவில் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாளர்களாக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு கவிதை பாடி, பட்டிமன்றம் நடத்தி, பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். ஆனால், சில வருடங்களாக ராஜராஜ சோழன் அரசின் ஆதரவை மட்டுமின்றி மக்களின் ஆதரவையும் பெற ஆரம்பித்திருக்கிறார்.

மாநகரின் சுவர்களில் மட்டுமல்லாது, பிரதான சாலைகளிலிருந்து விலகிக் கிடக்கும் கிராமங்களிலும்கூட ராஜராஜனின் பிறந்த நாளைக் கொண்டாட அழைப்பு விடுத்து விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விளம்பரப் பணிகள் ஒரு மாத காலத்துக்கு முன்ன தாகவே தொடங்கிவிட்டன. அவ்வாறு அழைப்பு விடுப்ப வர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி சாதிய அடிப்படையில் இயங்கும் அமைப்புகள்தான்.

விபரீத நோக்கம்

இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடிச் சூழலில் வறுமைக்கோட்டைத் தொட்டும் தாண்டியும் சடுகுடு விளையாடிக்கொண்டிருக்கும் இடைநிலைச் சாதிகள், தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள வரலாற்று ஆளுமைகளைச் சொந்தம் கொண்டாட ஆரம்பித்திருக் கின்றன. தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மன்னர்களின் பெயர்களைச் சொல்லி விடுதலை உணர்வு ஊட்டப்பட்டது. ஆனால், இன்று ஒவ்வொரு சாதியும் சரித்திரத்தில் தமது கொடிவழியில் ஒரு மன்னனைத் தேடிக்கொண்டிருப்பது விடுதலை உணர்வால் மட்டுமல்ல, அதில் விபரீதமான நோக்கமும் கலந்திருக்கிறது. சாதிய அடிப்படையில் மக்களை ஒருங்கிணைத்து அரசியல் பேரங்களில் லாபம் ஈட்ட விரும்புவோரே இந்த வரலாற்று நாயகர்களை உரிமை கொண்டாட வருகிறார்கள். மேலும், தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கையுடன் இணைந்து செயல்பட முன்வரும் சாதிகளுக்கான வரலாற்றுப் பெருமைகளை ஆராய்ச்சியாளர்கள் என்ற பெயரில் இயங்கும் இந்துத்துவவாதிகளே உருவாக்கியும் கொடுக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர் கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டு, அது தடை செய்யப் படும் நிலைவரைக்கும் வந்தது. அதற்கு மாற்றாக, பாண்டி யர்களை மற்ற சாதிகளோடு இணைத்து அடையாளம் காட்டும் ஆராய்ச்சிகளும் நடந்தவண்ணமே உள்ளன. அரசாண்ட வம்சங்களின் அடிமுடி தேடும் வரிசையில் இப்போது சோழர்களின் முறை வந்திருக்கிறது.

ராஜராஜ சோழன் எந்த இனக் குழு?

ராஜராஜ சோழன் வரலாற்று உணர்வு நிரம்பப் பெற்றவன். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி செய்த ஆண்டு களையும் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற போர்களையும் கால வரிசைப்படி கல்வெட்டுகளில் குறித்துவைக்கும் வழக்கம் ராஜராஜனின் காலத்தில் இருந்தே தொடங்குகிறது.
மேலும், பாண்டிய நாட்டுப் பழைய வட்டெழுத்துப் பாணியைத் தவிர்த்துவிட்டுப் புதிய தமிழ் வடிவத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டதும் அவன் காலத்தில்தான். கல்வெட்டுகளின் மெய்ப்புகழில் போர்களைக் குறித்த ராஜராஜன், தாம் எந்த இனக் குழுவைச் சேர்ந்தவன் என்று குறிக்கவில்லை.
ராஜராஜனுக்கு மிகத் தெளிவான சமய அடையாளம் உண்டு. அவன் சைவ சமயத்தினன். எனினும், அவன் பிற சமயத்தாரையும் ஆதரித்தான். ஆனால், அவனுக்கு சாதி அடையாளம் வெளிப்படையாக இல்லை. ராஜராஜனின் பெயருக்கு முன்னால் உடையார் என்ற சிறப்புப் பெயர் இருக்கிறது.

பெயருக்குப் பின்னால் தேவர் என்ற பட்டப் பெயர் இருக்கிறது. இவை மட்டு மல்லாது, சோழ அரசர்கள் மண உறவு கொண்ட சிற்றரசர்களின் பெயர்களும் ஏதாவது ஒரு இனக் குழுவோடு தொடர்புடையதாய் இருக்கிறது. ராஜராஜனின் மனைவியர் எத்தனை பேர் என்பதும் தெளிவில்லை. கல்வெட்டுகளில் மட்டுமே 15 பெயர்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று துணிந்து ஒரு முடிவுக்கு வரலாம்.

சோழர்கள் தனித்த இனக் குழுவாகத் தம்மைச் சுருக்கிக்கொள்ளாமல், தமக்கு அருகில் இருந்த பிறரோடும் மண உறவு பூண்டு தம்மை வலுப்படுத்திக்கொண்டதாலேயே தென்னிந்தியாவில் பேரரசை உருவாக்கிக் கட்டிக் காக்க முடிந்தது. இந்த மண உறவு முறை ராஜராஜனுக்குப் பல தலைமுறைகள் முன்பே வழக்கத்துக்கு வந்துவிட்டது.

ஆதித்த சோழனின் மனைவியான சோழ மாதேவியின் அன்னை அதாவது அவனது மாமியார் காடுபட்டிகள் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. முதல் பராந்தகச் சோழனின் மகளான அநுபமா என்பவர் கொடும்பாளூர் முத்தரையரை மணந்தார். அதே கொடும்பாளூர் அரச குடும்பத்தில் பிறந்த பூதி ஆதிச்ச பிடாரி என்பவரை முதல் பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தார். அதாவது, இரண்டு குடும்பத்தாரும் பெண் கொடுத்துப் பெண் எடுத்திருக்கிறார்கள். பராந்தகன் இப்படிப் பல்லவர்களோடும் முத்தரையர்களோடும் சேரர் களோடும் கொண்ட மண உறவின் காரணமாகவே பாண்டிய மன்னனை வெற்றி கண்டு இலங்கைக்குத் துரத்தினான் என்பது வரலாறு.

சோழர்களின் வழக்கம்

தாம் வென்ற பகுதிகளில் அங்கு ஏற்கெனவே ஆண்டவர்களை அதிகாரிகளாக நியமிக்கும் வழக்கமும் சோழர்களிடம் இருந்தது. சிற்றரசுகளின் வலுவான கூட்டாட்சியாகவே சோழப் பேரரசு விளங்கியது. சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்கள் பெற்றிருந்த செல்வாக்கும் மதிப்பும் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படிக்கிற ஆரம்பநிலை வாசகர்களுக்கே தெளிவாகப் புரியும். சோழ நாட்டு எல்லைக்குள்ளேயே தனக்கென்று தனிக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்த பழுவேட்ட ரையர்கள் அரச குடும்பத்தோடு மண உறவு கொள்ளும் அளவுக்கு முன்னுரிமை பெற்றிருந்தனர். மேலும், சோழ நாட்டின் வட எல்லையை ஆண்ட சாளுக்கியர்களோடும் சோழர்கள் மண உறவு பூண்டனர். சாளுக்கியர்களுடன் கொண்ட உறவின் காரணமாகவே சோழப் பேரரசு அதன் இறுதிக் காலத்தில் மேலும் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.
வரலாற்றில் யார், எங்கு, எப்போது என்பதெல்லாம் மிகவும் மேலோட்டமான விவரங்கள். அரிச்சுவடிப் பாடம். அவற்றால் யாருக்கும் ஒருபோதும் எந்தப் பயனுமே இல்லை. ஏன் என்ற கேள்வி எழும்போதுதான் வரலாற்றுத் துறை நமக்கு மேலான பாடங்களை வழங்குகிறது. சோழர்கள் யாராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், சோழர்களால் 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஒரு பேரரசை எப்படிக் கட்டியெழுப்ப முடிந்தது?

எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறோமே, அதே வழிமுறையைப் பின்பற்றி தமது அரசாட்சி எல்லைக்குள் வாழ்ந்த அனைத்து இனக் குழுக்களோடும் ஒருங்கி ணைப்பை உண்டாக்கித்தான் இடைக்கால சோழர்களின் சாம்ராஜ்யம் எழுந்தது. அந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றியதால்தான் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கவும் முடிந்தது.

பல்லவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட கோயில் கட்டிடக் கலையை மேலும் செம்மைப்படுத்தியது, சைவத் திருமுறைகளைத் தொகுத்தது, கோயில் நிர்வாகத்தை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்தியது, நெடுங்கடலில் கலம் செலுத்தும் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தது, அதன் துணைகொண்டு வணிகத்தை மேற்கொண்டது என்ற வரலாற்றுப் பெருமைகள் எல்லாம் பல்வேறு இனக் குழுக்களின் கூட்டுறவின் அடிப்படையில் மலர்ந்ததுதான். இந்த வரலாற்றுப் பாடத்தைப் புறந்தள்ளி, ராஜராஜனின் வெற்றியை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் அடையாளப்படுத்துவது தவறு.

செல்வ புவியரசன், வழக்கறிஞர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: selvapuviyarasan@gmail.com