Posts

Showing posts from June, 2017

சான்டோ சின்னப்பா தேவர் எனும் தன்னம்பிக்கை சகாப்தம்!

Image
'தேவர் மகன்' போல எத்தனை திரைப்படங்கள் வருடத்திற்கு வந்தாலும், என்றைக்குமே திரைத்துறையின் ஒரே "தேவர்", அகமுடையார் குலத்தோன்றல் சான்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் மட்டுமே! ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருக்கும் போது, மிகப்பெரிய நீதித்துறை பதவியிலிருருந்த யாரோ ஒரு தயிர்சாத பிரியர் கேள்வி கேட்டிருந்தார், "காளைகளுக்கு பதிலாக காட்டிலுள்ள சிங்கத்தை அடக்க முடியுமா?" என்று. அப்போதைய நேரத்தில் சாண்டோ சின்னப்பா தேவர் சிங்கத்தின் மீது கை வைத்து தடவி கொடுக்கின்ற படமும், எங்கள் வேதாரண்யம் பி.வி.தேவர் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் படமும் தான் அதிகளவில் சமூக தளங்களில் பரபரப்பாக பரவிக்கொண்டிருந்தது என்பதும் இங்கே நினைவு கூற வேண்டிருக்கிறது.


தீவிர முருக பக்தர்
பாமர ரசிகர்
ஆகச்சிறந்த உழைப்பாளி
கட்டழகான மாவீரர்
மிகச்சிறந்த மனிதர்
மாபெரும் தயாரிப்பாளர்

இப்படியான பல அடையாளங்களும், பெருமைகளும் அவருக்கு இருந்தாலும், "மருதமலை மாமணியே முருகையா... தேவரின் குலம் காக்கும் வேலையா..." என்ற பாடலில் கூறப்படும் வரிகளுக்கு சொந்தக்காரரான தேவரின் குலம் சார்ந்த எம்மை காக்கும் எம்பெரும…

இமலாதித்தவியல்

"எதற்கெடுத்தாலும் எல்லா இடங்களிலும் தன்னை மிகைப்படுத்தி கொள்கின்ற அனைத்துமே, தன்னை விரைவாகவே அழித்து கொள்ளும்; தன்னிருப்பை, தன்னுழைப்பை வெளிக்காட்டுவதற்காக மட்டுமென சொல்லிக்கொண்டாலும், தற்புகழ்ச்சிக்காக செய்யப்படுகின்ற புகழ் என்ற போதைக்கு, நிச்சயம் தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும் வல்லமை உண்டு. தனக்கான தனித்துவ அடையாளத்தை நிலைநிறுத்த விரும்பினால், தன் அடையாளத்தை எல்லா இடங்களிலும் நிறுவிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றிலும் 'நான், நாங்கள், என்னுடைய, எனது, எமது, எங்கள், எங்களுடைய' என்ற எண்ணங்களே எதிர்மறை கருத்தியலை தனக்குத்தானே உருவாக்கி தன்னையே வீழ்த்தும். செயலை தொடர்ந்து, தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் அநேகரோடும் இணைந்து வேடிக்கை போல, தன்னையும், தன் செயல்களையும் பார்த்து கடந்து செல்ல பழகிக்கொள்வதே, நிலைத்த வெற்றிக்கான ஒரே வழி."

- இமலாதித்தவியல்

கண்ணதாசன் என்றும் நிரந்தரமானவன்!

Image
"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு" என்று வெளிப்படையாகவே தன்னைப்பற்றி விமர்சனம் செய்து கொண்ட கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே. தான் எழுதிய சினிமா பாடல்களில், அரசியல், காதல், தத்துவம், ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், அனுபவம் என அனைத்தையுமே விரிவாக வரிகளாக்கிய பெருமை கவியரசரை மட்டுமே சேரும்.

தன்னை கவிஞராக மட்டுமின்றி, நடிகராகவும், இதழாசிரியராகவும் பன்முகத்தன்மையை வெளிக்காட்டியவர். அதிலும் முக்கியமாக சிவகங்கையில் நகரத்தார் பின்புலத்தில் பிறந்து வளர்ந்ததால், சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை பெரும்பொருட்செலவில் 'சிவகங்கை சீமை' என்ற பெயரில் திரைக்காவியத்தையும் தயாரித்து தன் ஊருக்கு பெருமை சேர்த்தவர். மேலும், கவியரசர் எப்போது வெளிநாடு போவதாக இருந்தாலும் அகமுடையார் குலத்தோன்றலான சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார் என்பதும் குறிப்பிடதக்க …

சூப்பர் ஸ்டார் விஜய்!

Image
ஏறுதழுவும் காளைகள் பின்புலத்தில் மட்டுமில்லாது படத்தின் தலைப்பிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. தந்தையின் உதவியால் 'இளைய தளபதி' விஜயாக சினிமாவுக்குள் வந்தாலும், அதன் பின்னால் தன் உழைப்பால், தன் திறமையால் மட்டுமே உண்மையான 'சூப்பர் ஸ்டார்' விஜயாக வளர்ந்து நின்றாலும், 'தமிழன்' விஜய் என்பது தான் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது. ஹேட்டர்ஸ்களால் எத்தனை விதமான தரக்குறைவான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், அனைத்தையுமே தனக்கான படிகற்களாக நினைத்து மேலேழுந்து நிற்கும் திரு.விஜயின் திரைவருகைக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எத்தனையோ பிரபலமான அப்பாக்கள் தன் மகனை, சினிமாத்துறையில் நிலை நிறுத்த இன்றளவும் மெனக்கெடுகின்றனர்; ஆனால், யாரும் அவர்களது இலக்கை எட்டியதாக தெரியவில்லை. எத்தனை பெரிய ஜாம்பவான்களால் ஆரம்ப கால வாய்ப்பை மட்டுமே தன் மகனுக்கு உருவாக்கி கொடுக்க முடியும். அதை தொடர்ந்து தன்னை நிரந்தரமாக்க, நிச்சயமாக சுய திறமையும், கடின உழைப்பும், உண்மையான ஈடுபாடும் வேண்டும். அந்த வகையில் 'எங்கள் சூப்பர் ஸ்டார்' விஜய்க்கு நிகர் என்றைக்கும் அவர் மட்டுமே!

(கண்ணாடி பார்வை…

தந்தையர் திருநாள் வாழ்த்துகள்!

Image
ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கையின் முழுமைத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பிப்பதே, தனக்கென ஒரு குழந்தை பிறந்ததற்கு பிறகு தான்! அதுவரையிலும், எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலின்றி ஊர்சுற்றியாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் ஊதாரியாக இருந்த அனைத்து ஆண்களும், அப்பா என்ற பதவிக்கு வந்தபின்னால் தனக்கான பொறுப்புகளை உணர்ந்து தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள்; எதையுமே பொறுமையாக, கவனமாக, ரொம்பவே யோசித்து செயல்படுத்துகிறார்கள். இளமையின் வேகம் குறைந்து, அனுபவமிக்கவராகவும் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமைகொண்ட மாண்புமிகு அப்பா என்ற பதவியை வகிக்கும் திரு. இரா.சம்பந்த தேவரான என் அப்பாவின் தியாகத்தையும் உழைப்பையும் இந்நாளில் நினைவுகூர்கிறேன்.

தமிழுணர்வு, அரசியல் ஆர்வம், விடுதலைபுலிகள் ஆதரவு, தலைமைத்துவ பண்பு, சிக்கனமாக கையாளுதல், ஆடம்பரமில்லா வாழ்வு, தாய் பாசம், குடும்ப பொறுப்பு, சமுதாய பங்களிப்பு, மற்றவர்களை அணுகும் விதம், நாட்குறிப்பு போலவே கணக்கு வழக்குகளை கையாளும் உத்தி, எளியோரையும் தன் வசப்படுத்தும் குணம், இடர்பாடான சுப/துக்க நிகழ்வுகளை கூட நேர்த்தியாக ஒருங்கிணைக்க…

எங்களிலிருந்து ஒரு இசை நாயகன் உதயமாகிறான்!

Image
இசைஞானி இளையராஜா என்ற பெயர் போல, 'போத்திராஜா' என்ற பெயரும் இனி இசைத்துறையில் நீங்காதவொரு இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகமாகவே இருக்கிறது. தெற்கத்தி மண்ணின் மணம் சார்ந்த மக்களிசையை பாடலாக்கிருக்கும் முதற்முயற்சியே முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது. தானே எழுதி, தானே இசையமைத்து, தானே பாடி, சகோ.போத்திராஜா உருவாக்கி இருக்கும் 'மொய் - தாய்மாமன் வாரான்டி' என்ற பாடல் அனைவரையும் நிச்சயமாக கவரும். இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இதுவரையிலும் தாய்மாமன் வாரான்டி பாடலை எத்தனை முறை கேட்டேனென தெரியவில்லை; கணக்கு வழக்கில்லாமல் கேட்டு கொண்டிருக்கிறேன். தாய் மாமனின் உரிமையையும், சீர் பற்றியும், மொய் பற்றியும் பெருமைகளை பாடும் இப்பாடல் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்.

ஏறி இறங்கி கொண்டிருக்கும் பொருளாதார சூழலிலும், தன் உழைப்பில் சம்பாரித்த பணத்தையே முதலீடாக போட்டு, தன் திறமையால் மட்டுமே சிங்கிள் பாடலை வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். சினிமாத்துறையில் பிரபலமான தனுஷ், சிம்பு போன்றவர்கள் பலரின் உதவியோ…

யார் அகமுடையார் என தீர்மானிப்பது யார்?

Image
ஊருக்கொரு சங்கம் வைத்திருக்கும் மேன்மை பொருந்திய அகமுடையார் பெரியோர்களுக்கு, தன் இனக்குழுவிற்கான பட்டங்களை பற்றிய அடிப்படை அறிவே அறவே இல்லாமல் இருக்கிறது. தேவர் என்பதோ, சேர்வை என்பதோ, பிள்ளை என்பதோ சாதி அல்ல. அவையெல்லாம் வெறும் பட்டம் மட்டுமே. இவற்றுள், தேவர் என்ற பட்டம் மூன்று சாதிகளுக்கு உண்டு; அதுபோல, சேர்வை என்ற பட்டம் எட்டு சாதிகளுக்கு உண்டு; இந்த வரிசையில் பிள்ளை என்ற பட்டமோ எழுபதுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கு உண்டு. ஒரே மாதிரியான பட்டங்களை மட்டும் வைத்து, ஒரு இனக்குழுவை ஒன்றாக்கி விட முடியாது.

ஒரு காலத்தில், சேர்வை பட்டம் உள்ளவர்களே அகமுடையார் என தென்னக உறவுகளில் சிலர் நினைத்து கொண்டிருந்தனர்; அதே காலத்தில் டெல்டா உறவுகளில் சிலரோ, தேவர் என்ற பட்டமுள்ளவர்களே அகமுடையார் என நினைத்திருந்தனர். கொங்கு பகுதிகளிலும், அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே என்பதால், கொங்கு - தெற்கு - டெல்டா என ஒரே இனக்குழு என்ற உண்மையை உணரத்தொடங்கினர். காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதற்கிணங்க டெல்டா - தெற்கு என பிரிவினையில்லாமல் பட்டங்களை கடந்து, இன்று அனைவரும் அகமுடையாராக ஒன்றிணைந்து இருக்கின்றன…

216 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்புத்தீவு பிரகடன நிகழ்வு!

Image
மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்தது அகமுடையார் இனக்குழு என்பதால் அவரை அகமுடையார் இனக்குழுவை சேர்ந்தவர் மட்டுமே உரிமை கொண்டாட வேண்டிய கட்டாயமில்லை. எடுத்துக்காட்டாக, அம்பேத்கர், ஈ.வெ.ரா., வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் போன்றவர்களை தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும், ஹிந்துத்துவ அமைப்புகளும், இன்னபிற புரட்சிகர அமைப்புகளும் பயன்படுத்துகின்றனர்; இப்படி இவர்களை பலரும் பயன்படுத்துவதால் எவ்வித குழப்பமும் யாருக்கும் வந்ததில்லை. எத்தனை பேர் இவர்களின் படங்களையும், பெயர்களையும் பயன்படுத்தினாலும் கூட அவர்களது தனித்த அடையாளம் ஒருபோதும் மாறப்போவதே இல்லை.


தாய் மண்ணில் கோலோச்சிய அந்நியர்களின் அடக்குமுறைக்கு எதிராக, அனைத்து இனக்குழுக்களையும் இணைத்து தான் 'வீரசங்கம்' என்ற அரசியல் கூட்டமைப்பையே மருதுபாண்டியர்கள் உருவாக்கினர். பொது ஆண்டு 1801 ஜுன் மாதம் 12ம் தேதி, ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகிலேயே முதன் முதலாக 'ஜம்புத்தீவு' போர் பிரகடனத்தை 'வீரசங்கம்' என்ற கூட்டமைப்பின் சார்பாக திருச்சி-திருவரங்கத்தில் சின்ன மருதுபாண்டியர் வெளியிட்டார்.

வரலாற்…

பெயருக்கு பின்னால் சாதி அவசியமா?

சாதி சார்ந்த பட்டப்பெயரை தன் பெயருக்கு பின்னால் போடலாமா? வேண்டாமா? என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கரு.பழனியப்பன் அடிக்கடி கருத்து பழனியப்பனாக உருமாறி சொல்லும் எல்லாவற்றையும் அனைவரும் ஏற்க மாட்டார்கள்; ஏற்கவும் முடியாது. தொட்டதற்கெல்லாம் ஹிந்தியத்தை தூக்கிப்பிடிக்கும் நபர்கள் கூட சாதிப்பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டுக்கொள்ளும் பெரும்பான்மையான ஹிந்தியர்களை பற்றி பேசுவதே இல்லை.

இந்த விசயத்தில் ஹிந்தியவாதிகள் மட்டுமல்லாது, திராவிடத்தை தோள் மீது சுமக்கும் நபர்களும் கூட, திராவிட நாடுகளென அடையாளப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் வசிக்கும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்கள் தன் சாதிப்பெயரை போட்டு கொண்டு கெட்டா போய்விட்டார்கள்? என்பதை பற்றி வாய் திறப்பதே இல்லை. மேனன்களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும், கவுடாக்களும், நாயுடுக்களும் இதுபோன்ற திராவிட சாதிப்பெயர்கள் இன்றளவும் ஹிந்திய அரசியலோ, திராவிட அரசியலோ, கம்யூனிச அரசியலோ செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

திராவிடவாதிகள் கொண்டாடும் ஈ.வெ.ரா.வை பற்றிய திரைப்படத்தை தமிழ்நாட்டில் 'பெரியார்' என்ற பெயரிலும், தமிழகம் தாண்ட…

தமிழக அரசியலில் வரலாற்றில் தவிர்க்க முடியா பக்கம்!

முள்ளி வாய்க்காலுக்கு முன்பும் சரி; பிறகும் சரி, ஆயிரம் விமர்சனங்களும் துரோகங்களும் இருந்தாலும், ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தமிழக அரசியலில் கருணாநிதி என்ற பெயரை உச்சரிக்காமல் அரசியல் பேசாதவர் யாருமில்லை. கருணாநிதியே பேச முடியாமல் ஒதுங்கி இருக்கும் இன்றைக்கும் கூட அவரை விமர்சித்தாவது பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களாலே அரசியலில் வளர்ந்தவர்கள் இங்கே ஏராளம். அந்த வரிசையில் கருணாநிதி என்ற பெயர் என்றைக்கும் தமிழக அரசியலில் இடம்பெற்றே தீரும். எங்களது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற சிறிய கிராமத்திலிருந்து வெறும் மஞ்சள் பையோடு மட்டும் சென்று, உலகளாவிய புகழ் பெற்ற கருணாநிதியின் ஆற்றல் வியப்பிற்குரியது.

தன் பேச்சையும், எழுத்தையும் மட்டுமே முதலீடாக கொண்டு உலக பணக்கார வரிசையில் தன் குடும்பத்தை நிலைநிறுத்திய வல்லமை இனி வேறு யாருக்கும் வாய்க்க போவதில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனையோ பேர் திருட்டு ரயில் ஏறி தினம் தினம் சென்னைக்கு வந்திருக்கலாம். ஆனால் யாருமே மற்றொரு கருணாநிதியாக புகழ் வெளிச்சத்திற்கு வர முடியவில்லை என்பதே எதார்த…