பா.ஜ.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ஜ.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
18 நவம்பர் 2015
08 நவம்பர் 2015
பா.ஜ.க!?
மாபெரும் மாட்டுத்தீவன ஊழலையே மறக்கடித்து மாட்டுக்கறி பிரச்சனை பீகாரில்
ஆட்சியமைக்க உதவியுள்ளது. இனியாவது பாஜக பக்குவப்படட்டும் பேச்சுகளில்!
29 ஜனவரி 2015
மாவீர மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிலை - கோரிக்கை!
தன்னை சிறையில் அடைத்த வெள்ளைக்காரனிடம் கருணை மனு கொடுத்த விநாயக் தாமோதர
சாவர்க்காரை, ஹிந்து மத ஆதரவாளர்கள் வீர சாவர்க்கர் என்று கூட
சொல்லிக்கொள்ளட்டும். ஆனால், தீவிர சிவ/முருக பக்தர்களான அவர்களின்
ஆட்சிக்குட்பட்ட தங்களது மண்ணில் அவர்களின் முழு முயற்சியால கட்டப்பட்ட
காளையார்கோவிலின் கோபுரங்களை தகர்த்தெறிவோம் என்ற வெள்ளைக்காரனின்
எச்சரிக்கைக்காக தங்களது உயிரையே தந்த மாவீர மாமன்னர் மருதுபாண்டியர்களை,
ஹிந்து மத ஆதரவாளர்கள் புறக்கணிப்பது ஏன்? வீர மருதுபாண்டியர்களை தங்களது
அடையாளமாக காட்டிக்கொள்ளும் ஆளும்
பா.ஜ.க.வில் இருக்கும் அகமுடையார்கள் யாராவது இதைப்பற்றி என்றைக்காவது
யோசித்தது உண்டா? பா.ஜ.க. எப்போதுமே பார்பன சித்தாந்தங்களை உள்ளடக்கிய
கட்சி. அகமுடையானுக்கு அதிகாராத்தை கொடுப்பது போல் பாசாங்கு காட்டிக்கொண்டு
பார்பானியத்துக்கு அடியாளாக தான் பயன்படுத்தும் என்பதையும் முதலில்
புரிந்து கொள்ள வேண்டும். ஏறு தழுவதலுக்கு எதிராக வெளிப்படையாவே பா.ஜ.க.
அமைச்சர் மோனிகா காந்தி அறிக்கை விட்டவர் என்பதையெல்லாம் உடனுக்குடன் நாம்
மறக்கும் வரையிலும் தமிழ்நாட்டு பண்பாடும், தமிழனின் பாரம்பரியமும்
படிப்படியாக சிதைவுறும். ஆனால், தமிழர்களை ஹிந்து என்று கூறி,
பார்பனர்களின் விநாயகரை கும்பிட வைப்பார்கள். கடைசியில் நம்முடைய
ஆதிக்கடவுளான மாயோனான (பெருமாளையும்) , சேயோனான (முருகனையும்)
நம்மிடமிருந்து அந்நியப்படுத்தி விடுவார்கள்.
கோட்சேவுக்கு சிலை வைக்கணும்ன்னு ஆட்சி அதிகாரம் கையில் வந்தவுடன் பார்பன அமைப்புகளின் துணையோடு அறிக்கைவிடும் எவனாவது, தமிழ் மண் காத்த மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்களின் ஆட்சி நடத்தப்பட்ட தலைமையிடமான சிவகங்கை சீமையில் ஒரு சிலை வைக்க மூச்சு விடுவானுங்களா? கேட்டால் நாங்க பா.ஜ,க.ன்னு சொல்லிக்கிட்டே, அந்த பக்கமா அகமுடையார்களின் அடையாளமாகவும் மருதுபாண்டியர்களை காட்டிப்பாய்ங்க. இந்த பக்கம் பார்பானுக்கு ஆதரவாக கொடி புடிச்சு யார்யாருக்கோ சிலையும் வைக்க சொல்லுவாய்ங்க. தமிழ் நாட்டை விட்டு தள்ளி இருக்கிற நரேந்திரமோடியின் மாநிலத்தவரான (டிசம்பர் 15, 1950ல் இறந்த) வல்லபாய் படேலுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தவரான (நவம்பர் 15, 1949ல் இறந்த) பார்பன கோட்சேவுக்கும் மல்லுக்கட்டுற இந்த சாதிக்காரன் எவனும், அக்டோபர் 24, 1801ல் வீர மரணமடைந்த மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிலை வேணும்ன்னு வாயை கூட திறக்க மாட்டாய்ங்க. இந்த மாதிரி உள்ளுக்குள்ளாகவே ஆதரவு இல்லாத நிலையிலும் சிவகங்கை சீமையில் தன்னெழுச்சியாக மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிலை எழுப்ப வலியுறுத்தி இன்று போராடிய அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும், சக உறவுக்காரனாய் என் நன்றியும் வாழ்த்துகளும்!
- இரா.ச.இமலாதித்தன்

23 ஜனவரி 2015
நேதாஜி விசயத்தில் பா.ஜ.க.!
தேர்தலுக்கு
முன்னாடி ஒன்றை சொல்வது, வெற்றி பெற்றபின் ஒன்றை சொல்வது என வழக்கமான
அரசியல்வாதியாக மாற முயற்சிக்கும் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு
துணிவிருந்தால், அவர் தலைமை வகிக்கும் மத்திய சர்க்காரின் வசமுள்ள
தேசத்தந்தை நேதாஜியின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடட்டுமே.
தேர்தலுக்கு முன்பாக நேதாஜியின் ஆவணங்களை வெளிக்கொண்டு வருவேனென நேதாஜியின்
குடும்பத்தினரிடம் மார்தட்டி உறுதிமொழி கூறிய, மோடி அவர்கள் இப்போது
மட்டும் ஏன் பின்வாங்குகிறார். மற்ற நாடுகளுக்காக பயந்து, ஒரு
தேசத்தந்தையின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களையே வெளியிட அஞ்சும் பாரதம்,
எப்படி மற்ற நாடுகளுக்கு தலைமையேற்கும் பண்பை வளர்த்து கொள்ள போகிறது?
கடைசி வரை அடிமையாகவே வாழ பழகிக்கொள்ள வேண்டியது தான் நமக்கெல்லாம்
எளிதாகிவிட்டது.
Narendra Modi #DeclassifyNetajiFiles
Narendra Modi #DeclassifyNetajiFiles
19 ஜனவரி 2015
09 ஜனவரி 2015
இலங்கையும் ஈழமும்!
"அரசன் அன்றே கொல்வான்;தெய்வம் நின்று கொல்லும்!"ன்னு பழந்தமிழர்
சொல்வாங்க. அரசனாக இருந்த மகிந்த ராஜபக்சே ஒரே நாளில் பல்லாயிரம் பேரை போர்
என்ற பெயரில் கொன்றான். இனி தெய்வம், தேர்தலில் நின்று தோற்றதினால்
கொல்லப்போகிறது. மகிந்த ராஜபக்சேவிற்கு அதிபர் தேர்தலில் வெற்றி பெற
வாழ்த்துகள் சொன்ன நரேந்திர மோடிக்கு இன்னும் அதிக பயிற்சி தேவைப்படும்,
இனி மைத்ரிபால சிறிசேனாவுக்கும் அடிக்கடி வாழ்த்துகள் சொல்ல வேண்டி வரும்.
ஏனெனில் சீன கம்யூனிஸ்ட் கட்சி 6.48 கோடி உறுப்பினர்களை சேர்த்து
நிகழ்த்தியுள்ள உலக சாதனையை பா.ஜ.க. முறியடிக்கணும்ல...
மகிந்த ராஜபக்சேவோடு சுப்ரமணியசுவாமி நெருக்கமாக இருந்த போதே தெரிஞ்சிடுச்சு, மைத்ரிபால ஸ்ரீசேனாவின் வெற்றி. மேலும், பெளத்த-சிங்களவனை திருப்பதி பெருமாள் கோவிலுக்கு வரவழைத்து ஹிந்துவென கூச்சலிட்ட பா.ஜ.க.வினரின் ராஜதந்திரம் தான் இப்போது பல்லிளிக்கிறது. இனி இலங்கை உறவை மேம்படுத்தும் நோக்கில் பாரத ரத்னாவை மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கும் கொடுக்க வாய்ப்பிருக்கு. ஆனால், பாவம் எம் மீனவன்

02 டிசம்பர் 2014
ஈ.வெ.ரா. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?
எப்போதோ ஈ.வெ.ரா.வை அவதூறாக பேசிவிட்டதாக ஹெச்.ராஜா மீது இரு பிரிவுகளில்
இப்போது வழக்கு போட்டிருக்கின்றனர். ஆனால் சமீபத்தில் வைகோ பற்றி
பேசியதற்கான எதிர்வினையா இதுவென தெரியவில்லை. ஆனால் இதிலுள்ள ஒற்றுமை
என்னவெனில் ஈ.வெ.ரா.வும், வைகோவும் நாயக்கர் சாதியை சார்ந்தவர்கள் என்பது
தான். மேலும், திராவிடர் கழகம் என்ற பெயரில் ஊர் ஊராக மேடை போட்டு சகட்டு
மேனிக்கு இவனே, அவனேன்னு ஹிந்து மத கடவுளையே (மட்டும்) இழிவு படுத்தும்
போது அப்போதெல்லாம் யாரும் இவர்கள் மீது வழக்கு கொடுத்த மாதிரி தெரியவில்லை.
தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும், தமிழனை முட்டாள், அயோக்கியன்,
தகுதியற்றவன் எனவும் பேச்சிலும் - எழுத்திலும் விசத்தன்மையான அவதூறுகளை
தெளித்த ஈ.வெ.ரா. ஒன்னும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லையே. இந்த
ஈ.வெ.ரா விசயத்தில் ஹெச்.ராஜா மீது தவறேதுமில்லை. அப்படி அவர் மீது
தவறென்றால் காலம் காலமாக ஹிந்து மத கடவுள்களை மட்டும் ஒருமையில் பேசி வரும்
ஈ.வெ.ரா.வை பின்பற்றும் அனைத்து திராவிடர் கழகங்களையெல்லாம்
தமிழகத்திலிருந்து ஹிந்து மத உணர்வாளர்கள் தான் காலி செய்ய வைக்க வேண்டும்.
14 நவம்பர் 2014
பதவியேற்பு வாழ்த்துகள்!
தமிழக பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்கும் திரு. கருப்பு
முருகானந்தம் அவர்களின் பணி சிறக்க எம்பெருமான் திருமுருகன் அருள்
புரியட்டும்! டெல்டாவிலிருந்து தேசியக்கட்சியின் மாநிலத்துணை தலைவரென்ற
பெரிய பதவியை அலங்கரிக்கும் உங்களுக்கு உறவுக்காரனாக என் மனம் நிறைந்த
வாழ்த்துகள்!
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
12 நவம்பர் 2014
இந்த வார தமிழக அரசியல்!
-001-
அரசியலில் நுழைவதை வெளிக்காட்டி கொள்ளாத கமலஹாசனுக்கு க்ளீன் இந்தியாவில் பொறுப்பும், தன் படம் வரும்போதெல்லாம் அரசியலில் நுழைவதை பற்றி ஊடகங்களை பேசவைக்கும் ரஜினிகாந்துக்கு திரையுலக பிரமுகர் விருதும் கொடுக்கும், ஆளும் பா.ஜ.க. சர்க்காரின் நகர்வை பார்க்கும் போது தமிழ்நாடு தான் அடுத்த இலக்கு போல. தமிழகத்திலும் தாமரை மலரட்டும்!
-002-
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவும் புதுப்புது தடுப்பணைகளை கட்ட போகிறார்களாம். அன்று, சோழநாட்டின் விவசாயம் பாதிக்கப்படுவதை எண்ணி கர்நாடகத்தில் போர் தொடுத்து, அங்குள்ள அணையை தரைமட்டமாக்கி விட்டு திருச்சியிலே கல்லணையை கட்டியெழுப்பிய முற்கால சோழமன்னன் இளஞ்செட்சென்னியின் மகனான கரிகாலசோழ பெருவளத்தான் போலொருவன் மீண்டுமிங்கே பிறப்பெடுத்தால் ஒழிய, விவசாயிகளுக்கு அதிசயம் ஒன்றும் நடந்துவிட போவதில்லை.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)