30 அக்டோபர் 2010

தேவர் ஜெயந்தி வாசகங்கள்!


நாங்கள் ஆளப்பிறந்த கூட்டம்
யாராலும் அடக்கியாள முடியாது
அடக்கநினைத்தாலும் அது முடியாது
ஆர்ப்பரிப்போம் பசும்பொன்னில்
ஆட்சியை பிடிப்போம் தமிழகத்தில்...!

மூவேந்தர் வழிவந்த முக்குலத்தோர்
முத்துக்குளிக்கும் பசும்பொன் சமுத்திரத்தில்
முரசுக்கொட்டி முழக்கமிட்டு
முத்தமிழ் நாட்டை மீட்டெடுப்போம்...!

வாளெடுத்த கூட்டம் நாங்கள்
வாலாட்ட நினைக்காதே
வெள்ளோட்டம் காட்டினால்
உன் நிலைமைதான் தள்ளாட்டம்...!

பச்சோந்திகளை விரட்டியடிக்கும்

பயமறியா பாசக்கூட்டம் - நாங்கள்
பதுங்கி நிற்கும் புலிக்கூட்டம்
பாய்ந்து வந்தால் நீயும் ஓட்டம்...!


வீறுகொண்ட கொண்டு சீறிப்பாயும்
வில்லும் வேலும் வாளும் தாங்கிய
வீரம் விளைந்த வெற்றிக்கூட்டம்
எங்களிடம் யார்மோதினாலும் வெற்றிடம்...!

 எக்குலத்தையும் ஆளப்பிறந்த
முக்குலத்து தேவர் வம்சம்
அடக்கி ஆளப்பிறந்த கூட்டம்
ஆர்பரிப்போம் பசும்பொன்னில்
அக்டோபர் முப்பதில்...!

வீராப்பாய் பேசித்திரியும் வீணர்களை விரட்டியடித்து
வீற்றிடுவோம் மூவேந்தர் ஆட்சியினை
வீரத்தமிழ் நாட்டினிலே வெற்றிக்கொடியை பறக்கவிட
வீரமுழக்கமிட்டு வெகுண்டெளுவோம் பசும்பொன்னுக்கே ...!


 - இரா.ச.இமலாதித்தன்

#  நான் எழுதிய இந்த ஏழு வாசங்களையும், பலபேரு காப்பியடிச்சு அவர்களது பதிவாகவே போடும்போதுதான் லைட்டா வலிக்குது! :))

17 மார்ச் 2010

சமுதாய வளர்ச்சியில் பெண்கல்வி


இன்றைய காலக்கட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்களும் எல்லாத்துறைகளிலும் வளர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றனர்.அதை மட்டுமே ஒரு காரணமாகக்கொண்டு பெண்கள் அனைவரும் முழுவதுமாய் வெற்றிப் பெற்று விட்டார்களென கணக்கீடு செய்வது தவறான முன் உதாரணமாகவே இருக்கும்.

ஒரு பெண் உலகில் உதிக்கின்ற நேரம் முதலே அவளுக்கு சோதனைகளும்  நிழல் போல பின்தொடர ஆரம்பிக்கின்றது.ஒரு பெண்குழந்தை பிறந்த முதல்நாளே பெண்ணை ஈன்றெடுத்த தாய்,தகப்பன் முதற்கொண்டு குடும்பத்தினர் அனைவரும் இருவது வருடம் கழித்து நடக்க போகின்ற அந்த பச்சிளங் குழந்தையின் திருமணச் செலவைப் பற்றி ஆராய ஆரம்பித்து விடுகின்றனர்.அதானால் பெண்குழந்தையை ஒரு செலவீனமாகவும்,ஒரு சுமையாகவுமே கருதத் தொடங்குகின்றனர்.

பெண்ணின் பெற்றோர்கள் பெரும்பாலும், குழந்தையை என்ன படிக்க வைப்பது,மேலும் அப்பெண்ணின் எதிர்காலத்தை எப்படி மாற்றியமைப்பது என்பதை பற்றி துளியும் சிந்திக்காமல் எப்போதோ நடக்கவிருக்கும் திருமணத்தின் சுமையை இன்றே தனக்குள் உள்வாங்கிக் கொள்கின்றனர்.கவலைக்கு உள்ளாகி பெண் குழந்தையையே வெறுக்கும் நிலைக்கும் செல்கின்றனர்.அந்த திருமணத்தை எப்படி செய்யப்போகிறோமென்ற எண்ணத்திலேயே ஏற்படும் இயலாமையை பெண்ணின் மீது திணிக்கின்றனர்.அந்த திணிப்பு முதலில் அப்பெண்ணின் கல்வியில் தொடங்குகிறது.அதிகம் படிக்க வைக்க முடியாது யென்று ஆரம்பத்திலேயே அன்பு கட்டளையை அமல் படுத்த தொடங்குகின்றனர்.
பெண் அதிகம் படிக்க வைத்தால் திருமணத்தின் போது ஏற்படும் வரன் பிரச்னையை இப்போதிலிருந்தே எண்ணி ஆதங்கப்பட்டுக் கொள்ளகின்றனர்.
எத்தனையோ பெண்களுக்கு கல்வி மீதான ஏற்படும் ஆசைகளை,  திருமணத்தை காரணம் காட்டியே இன்றை காலம்வரை நிராகரிக்கப்பட்டு வருகின்றது.

ஒரு ஆண் கல்வி கற்றால் அவனை மட்டுமே உயர்த்தும் வாய்ப்பு அதிகம்.மாறாக ஒரு பெண் கல்வி கற்றால், அது அவளை சார்ந்த ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உதவும்.செலவீனங்களை கட்டுப்படுத்தி வீட்டை நல்ல முறையில் நடத்துவது முதற்கொண்டு,தன் குழந்தைகளுக்கு கல்வியறிவை புகட்டுவது வரையிலான எல்லாவற்றிற்கும் ஒரு பெண்ணின் கல்வி முக்கியத்துவமாகிறது.

மாற்றமடையும் சமுதாயத்தில் பெண்களின் கல்வியும்,வளர்ச்சியும் சமுதாயத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.இன்று இந்திய அரசாங்கம் பல எதிர்ப்புக்கு முகம்கொண்டு உலகுக்கே முன்னுதாரணமாய் 33% இட ஒதுக்கீடு அளித்திருந்தாலும்,அதன் பயனை எத்தனை படிப்பறிவுள்ள பெண்கள் உபயோகிக்க முடியும் என்பதை யோசித்தால் குழப்பமே மிஞ்சுகிறது.இந்த இட ஒதுக்கீடுக்குள்ளேயும் உண்மையான பெண்களின் சக்தி வெளிப்படப்போவதில்லை.தன் கணவனாலும்,தந்தையாலும் ஆளுமை செய்யபட்டும்,தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் வெறும் கைப்பொம்மையாகவே செயல்படும் அபாயம் அதிகம் உள்ளது.எந்தவொரு பெண்ணும் தான் சார்ந்த துறையில் முன்னுதாரணமாய் வர முயற்சிக்க வேண்டும்.தன்னுடைய ஆளுமை திறனை, அழகு சார்ந்த துறைகளில் மட்டும் வெளிப்படுத்தாமல் அறிவு சாந்த துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த முன்வர வேண்டும்.

மேற்ச்சொன்ன எல்லாவற்றுக்குமே மூலக்கார
ணியாய் திகழ்வது ஒரு பெண்ணின் கல்வியறிவு மட்டுமே.அதனால் பெண்களின் உண்மையான வளர்ச்சி கல்வியை சார்ந்தே அமைகிறது.நாளைய நாட்களிலாவது பெண்ணின்  கல்வியை தடை செய்யும் பெற்றோர்கள் உணர்ந்து புத்தம்புதிய சமுதாயத்தை உருவாக்க உதவிட முன்வர வேண்டும்.மேலும், பெண்களின் கல்வி பற்றிய தெளிவும் எல்லாருக்கும் ஏற்ப்பட்டால் முழுமையான வளர்ச்சியை நமது சமுதாயம் வெகு விரைவிலேயே அடைந்தே தீரும் என்பதில் மாற்றுகருத்தில்லை.