மருது சகோதரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருது சகோதரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 அக்டோபர் 2015

மருதுபாண்டியருக்காக குரல் கொடுத்த தருண்விஜய் எம்.பி!



தமிழரல்லாத உத்ரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு. தருண் விஜய் அவர்கள் சொன்ன மாமன்னர் மருதுபாண்டியர்கள் பற்றிய கோரிக்கையை நினைத்து, இத்தனை வருடங்களாக வாயே திறக்காத தமிழ்நாட்டு மாநிலங்களவை - மக்களவை உறுப்பினரெல்லாம் இனி வெட்கி தலை குனிய வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழனத்தின் சார்பாக நன்றி மாண்புமிகு. தருண் விஜய்க்கு!

24 அக்டோபர் 2015

போற்ற வேண்டிய தெய்வங்கள் மருதுபாண்டியர்!


உலகிலேயே முதன்முறையாக ஆங்கில ஏகாபத்தியத்திற்க்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டு, நேரடியாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் புரிய தமிழகத்தை அன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட அனைத்து தரப்பட்ட மன்னர்களையும், சிற்றரசர்களையும், பாளையககாரர்களையும் ஒன்றுபடுத்தி "வீரசங்கம்" என்ற அமைப்பை உருவாக்கிய சிவகெங்கை சீமையின் மன்னர்கள் மருதுசகோதரர்களை இன்றைக்கு சாதீய பின்புலத்தில் அடையாளப்பட வைத்தது வேதனையான விசயம்.

பழந்தமிழர்களின் போர்க்கருவியான பூமாரங் என்ற வளரி பயன்பாட்டை அன்றைய நாட்களில் போர்களங்களிலும், வேட்டையாடும் களங்களிலும் பயன்படுத்தியவர்களில் மிக கைத்தேர்ந்தவர்களாக மருது சகோதரர்கள் மட்டுமே விளங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும், அவர்களது ஒப்பிடமுடியாத வீரத்தை - கடின உழைப்பை - நாட்டுப்பற்றை - தன்னம்பிக்கையை - இறை பக்தியை - அனைத்துதரப்பட்ட மக்களையும் அரவணைத்து சென்ற ஆளுமையை யாராலும் மறக்கடிக்க முடியாது. உலகிலேயே வெள்ளையர்களால் தனது எதிராளியின் பச்சிளங்குழந்தைகள் உள்பட குடிவழி ஆண் சந்ததியினரையும் ஒருவர் விடாமல் ஒட்டுமொத்தமாக கொன்றொழித்த ஒரே சம்பவம் மருதுசகோதரர்களது விசயத்தில் மட்டுமே நடந்தேறியது என்பதை நினைக்கையில் மருதுசகோதரர்களின் வீரத்தையும் ஆளுமையையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

ஆட்சியை பிடிப்பதற்காக துரோகிகளின் தூண்டதலால் மெய்க்காப்பாளன் கருத்தன் மூலமாக காட்டிக்கொடுக்கப்பட்டு மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிடும்போது அவர்களுக்கு ஆதராவாக கடைசிவரை நின்ற அனைத்து தரப்பட்ட மக்களான 500க்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட அதிர்ச்சிகரமான மாபெரும் துயர சம்பவமும் இங்கேதான் அரங்கேறியது.

இன்றைய காலக்கட்டங்களில் விடுதலைப்புலிகள் உள்பட பல இராணுவ இயக்கங்கள் பயன்படுத்தி வருகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கொரில்லா போர்முறையை மிக நேர்த்தியாக அன்றைக்கே பயன்படுத்தி வெற்றிவாகை சூடிய மருதுபாண்டியர்களை வெறும் சாதீய வட்டத்தில் மட்டும் அடைக்க நினைப்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

ஆன்மீகப்பணியில் கிருத்துவம் - இசுலாம் - ஹிந்து என்ற பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களையும் திருப்பணி செய்த மண்ணுரிமை போராளிகளான வெள்ளை மருதுவும் - சின்ன மருதுவும் நாம் போற்றி வணங்க வேண்டிய காவல்தெய்வங்கள் என்பதை நினைவில் கொண்டு எந்நாளும் அவர்களது ஆளுமையையும் வீரத்தையும் விவேகத்தையும் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இன்று 214வது வீரவணக்க நினைவேந்தல் நாள்!

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்.

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?


உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.

எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!
எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி 500 க்கும் மேற்பட்ட மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 214 வது நினைவேந்தல் நாள் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!

- இரா.ச.இமலாதித்தன்

மருது பாண்டியர் நினைவேந்தல்!

உலக வரலாற்றில் சாதி மத வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்டோரை தங்களது மன்னனுக்காக தூக்கிலிடப்பட்ட ரத்த சரித்திரம் 1801ம் ஆண்டு அக்டோபர் 24...

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழ் மண்ணில் அரசாண்ட அனைத்து சிற்றரசர்களையும் சாதி மத வேற்றுமையின்றி தமிழ் இனக்குழுக்களையெல்லாம் ஐரோப்பிய வல்லாதிக்கத்திற்கு எதிராக, "வீரசங்கம்"என்ற பேரமைப்பு மூலம் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியர்கள், தமிழ்தேசியத்தின் முன்னோடி!

‪#‎மருதுபாண்டியர்‬

உலகிலேயே முதன் முறையாக ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக, திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கம் கோவில் வாசலிலும் "ஜம்புத்தீவு" போர் பிரகடனத்தை அறிவித்த முதல் சுதந்திர போரின் மாவீர்களின் வீரம் விதைக்கப்பட்ட நாள் இன்று.

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னோடியாக, "கொரில்லா போர்யுக்தி முறை"யை கையாண்டு வெற்றி கண்ட மாமன்னர்களின் மரணம் முத்தமிட்ட நாள், அக்டோபர் 24.

‪#‎மருதுபாண்டியர்‬

சிவகங்கை சமஸ்தானத்தை 1780 முதல் 1801 வரை ஆட்சி செலுத்தி தமிழ்தேசிய மாமன்னர்களான வெள்ளை மருது - சின்ன மருது இரு மருதரசர்களையும் சூழ்ச்சியின் வலைபின்னி கரடி கருத்தான் மூலமாக துரோகிகளால் காட்டிக்கொடுத்து வரலாற்றில் துயரம் விளைவித்த நாள் இன்று. அக்டோபர் 24...

‪#‎மருதுபாண்டியர்‬

அக்டோபர் 24, கி.பி.1801...
மாமன்னர் மருதுபாண்டியர்களால் எடுப்பித்த காளையார்கோவில் கோபுரங்கள் தகர்க்கப்படுமென்ற ஐரோப்பியர்களின் தந்திரத்தை முறியடித்த ஆன்மீகப்பற்றாளர்களான தீவிர முருக-சிவ பக்தர்களான மருதீசர்களின் 214 வது நினைவேந்தல் இன்று.

‪#‎மருதுபாண்டியர்‬

மறக்க முடியுமா?
மாமன்னர் மருதுபாண்டியர்களை!
அடக்க முடியுமா?
அரசாண்ட அகமுடையார்களை!
அக்டோபர் 24 - அரசு விழா, திருப்பத்தூர்.
அக்டோபர் 27 - அரசியல் விழா, காளையார்கோவில்.

‪#‎மருதுபாண்டியர்‬

தங்கள் மன்னனுக்காக தங்களது உயிரை துச்சமென நினைத்து, சாதி மத வேறுபாடின்றி தங்கள் உயிரை கொடுத்த 500க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீரமும் ஈரமும் உலகிலேயே இதுவரை நடந்ததில்லை; நடக்க போவதுமில்லை.
அது, கி.பி.1780 முதல் கி.பி.1801 வரையிலான மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆட்சிக்காலம்.

‪#‎மருதுபாண்டியர்‬





12 ஜூன் 2014

ஜம்புதீவு பிரகடன நாள்!

”இதை ஏற்றுக்கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது. இதனை ஏற்றுக்கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்கு தன்னுடைய மனைவியைக்கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!” யென்று உலகிலேயே முதன்முதலாக ஆங்கிலேயனுக்கு எதிராக போர்பிரகடனம் செய்த வரலாற்று சிறப்புமிக்க நாள் (ஜூன் 12 1801) இன்று. அன்றைய தமிழகத்தில் இருந்த 72 பாளையத்து அரசுகளையும் #வீரசங்கம் என்ற அமைப்பின் மூலமாக ஒன்றிணைத்து, திருச்சி - திருவரங்கத்தில் ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை மாமன்னர் மருதுபாண்டியர் வெளியிட்ட வீரம்செறிந்த நினைவேந்தல் நாளில், அன்றைக்கே தமிழ் சிற்றரசர்களை ஒன்றிணைத்து இன்றைய தமிழ்தேசியத்திற்கு வித்திட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை அனைவரும் போற்றுவோம்!

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்

11 ஏப்ரல் 2014

திருமணம் என்ன பெரும்பிழையா?

மணமாகாத (மோடி)அவர் காமராஜர் போல கடைசிவரை தேசத் தொண்டு ஆற்றப் போகிறார் என எண்ணினோம்.

- திரு. மு.கருணாநிதி



18ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருது சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டவர்களே; பூமரங் என்ற வளரி வீச்சு, கொரில்லா போர்முறை போன்ற பல்வேறு யுக்திகளை கற்றுதேர்ந்து, வெள்ளையனுக்கு எதிராக உலகிலேயே முதன் முறையாக ஜம்புத்தீவு பிரகடனத்தை வீரசங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் போர் பிரகடனத்தை வெளியிட்டவர்கள் தானே?

19ம் நூற்றாண்டில் என் தலைவன் தேசத்தந்தை நேதாஜி கூட எமிலி செனகலை காதல் திருமணம் தான் செய்து கொண்டார்; ஆனாலும், அவர் கொண்ட கொள்கைக்காக அந்நியனை விரட்டி தேசத்தை காப்பாற்ற இந்திய தேசிய ராணுவத்தையே கட்டியமைக்கவில்லையா?

20ம் நூற்றாண்டில் என் அண்ணன் பிராபகரன் கூட மதிவதனியை திருமணம் செய்து கொண்டார்; தமிழனின் புறநானூற்று வீரத்தை உலகளாவிய அளவில் வெளிக்காட்டி, உலகிலுள்ள போராளி இயக்கங்களில் முப்படையையும் உருவாக்கி எதிரிகளின் இனவழிப்பை எதிர்த்து தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டிமையக்கவில்லையா? 

படுக்கையறையை பற்றி பொதுமேடையில் பேச வேண்டியதன் அவசியம் என்ன? தாலி கட்டினாலே பிரம்ச்சர்யம் போய்டுமா என்ன? மோடி தனது திருமணத்தை முற்றிலுமாக மறைக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், தனிக்கட்டையென்றே சொல்லி இருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது தானே? தாலி கட்டினாலும் அவர் தனிக்கட்டையாகத்தானே வாழ்ந்திருக்கிறார்.

என் கேள்வி, அவர் ஏன் திருமணம் செய்ததை மறைத்தார் என்பதை பற்றியல்ல... அவரது திருமணத்தை காரணம் காட்டி கீழான அரசியல் செய்வது ஏன்? திருமணமான அடுத்தநாளே தனியாக போயிருந்த கதைகள இங்கே ஏராளம் உண்டு. அவர் கல்யாணம் செய்ததால் காமராஜ் மாதிரி ஆட்சி செய்ய முடியாதா என்ன? அன்றைய தமிழகத்தின் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காமராஜருக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பென்று சொன்னது இதே வாய் தானே?

திருமணத்தை மறைத்ததவர் இன்று ஒத்து கொண்டு விட்டார்; அதை வரவேற்க வேண்டுமே தவிர, அதையே சொல்லி அவருக்கு மனவருத்ததை ஏற்படுத்த கூடாது. மேலும் திருமணம் என்பது அவரது தனிப்பட்ட விசயம். அதை அரசியல் ஆக்குவது கேவலமான செயல் தானே? தனது தனிப்பட்ட திருமண வாழ்க்கையை பற்றி பேச இது சரியான தருணம் இல்லையென்று மோதி நினைத்திருக்கலாம். அவரது படுக்கையறையை விமர்சித்து என்னவாகி விட போகிறது? காங்கிரஸ் காரர்களுக்கும், காங்கிரஸோடு தான் தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க போகிறோம் என்ற மனநிலையொடு இருக்கும் திரு கருணாநிதி போன்றோருக்கும், காமராஜர் ஓர் ஊறுகாய்... மற்றபடி சொல்வதற்கொன்றுமில்லை.

இந்த வயதிலும் மனைவி துணைவி யென்று குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் தந்து கட்சி மேடையிலும் தனக்கருகே அவர்களை அமர வைத்து கொண்டும், இவ்விருவர்களுக்கு முன்னாடி ஏற்கனவே ஒரு திருமணத்தையும் செய்த நீங்கள், சிறப்பாக ஆட்சி செய்யவில்லையா என்ன? மணமாகாதவர்கள் மட்டும்தான் தேசத்தொண்டு ஆற்ற முடியுமென்ற தொனியில் நீங்கள் சொல்லிருப்பது நகைப்புக்குரியதாகவே பொருள் கொள்ளப்படும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன? அரசியலில் விமர்சனம் என்ற போர்வையில் படுக்கையறையை பற்றியெல்லாம் பொது இடத்தில் பேசுவது உங்களை போன்ற மூத்த அரசியல் தலைவருக்கு சரியான முறையா?

- இரா.ச.இமலாதித்தன்