மழை பாதிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை பாதிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
18 நவம்பர் 2015
அஜித் ரசிகனும், கடலூர் வெள்ளமும்!
ஆமா! அஜித் மட்டும்தான் நல்லவர்; மத்த நடிகரெல்லாம் திருடனுங்க. அஜித்
நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர்; ஆமா! மத்த கூத்தாடிகளெல்லாம்
கேடுகெட்டவனுங்க. படத்தை படமாக மட்டும் பார்க்க தவறிய தமிழனின் தலைமைத்துவ துதி இப்படித்தான் இருக்கிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் 'வேதாளம்' மிக அதிக வசூலை பெற்றதாக பட்டியலிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த பல கோடிகள் வசூலித்த தொகையில் ஒருசில கோடிகளை சென்னை - கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் மழை வெள்ள பாதிப்புகளுக்காக கொடுத்திருந்தால் பெருமை படலாம். அதை விட்டுவிட்டு, "தலடா, தெறிடா, இத்தனை கோடிடா!" ன்னு மழையால் வீடிழந்த மக்கள் அவதிப்படும் இம்மாதிரியான சூழலில் பீற்றி கொள்வதில் என்ன பெருமை கிடைக்கிறதோ, சில டேஷ்களுக்கு...

16 நவம்பர் 2015
கடலூரும் - ஆர்.கே.நகரும்!
ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடல்ல. தமிழகத்தின் தலைநகரிலேயே
பல பகுதிகளில் இடுப்புக்கும் மேலே மழை நீர் தேங்கி நிற்கிறது. கடலூர் போன்ற
கடலோர வெளி மாவட்டங்கள், மழையால் சின்னாபின்னமாகி இருக்கிறது.
ஆர்.கே.நகரில் மட்டும் 48 இடங்களில் மீட்பு பணி செய்து, தான் வரும்
வழியெங்கும் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி இரைத்துவிட்டால், ஒட்டுமொத்தமாக
மற்ற பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரெல்லாம் வடிந்து விடுமா என்ன?
ஆர்.கே.நகர் ஒரு தொகுதியால் மீண்டுமொரு முறை எம்.எல்.ஏ. ஆகிவிடலாம். மற்ற
மாவட்ட தொகுதிகளிலும் பாதிக்கப்பட்ட இடங்களை விரைவாக சரி செய்தால் தான்
மீண்டும் முதல்வராக முடியும். ஏனெனில், ஆர்.கே.நகர் மட்டுமே ஒட்டுமொத்த
தமிழ்நாடல்ல!
அடுத்த மாதமே கடலூரில் இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கட்டும். நாளைக்கே அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழு, வார்டு வாரியாக அங்கு அனுப்பப்படும்.
திராவிடம், தீரா விடம்!
- இரா.ச.இமலாதித்தன்.

12 நவம்பர் 2015
நிவாரணம் கேட்டால் அடி உதையா?
சிதம்பரம் அருகே, வெள்ளக்காடான கிராமத்தை சேர்ந்த வீடுகளை இழந்த மக்கள்
தன்னெழுச்சியாக நிவாரண பணிகளை விரைவாக செய்யச்சொல்லி ஜனநாயக நாட்டில் சாலை
மறியல் மூலமாக அடையாள அறவழி போரட்டத்தை நடத்திய, முதியோர் - பெண்கள் -
சிறியோரென அனைவரையும் காவல்துறையினர் கேவலமான முறையில் பேசி, அடித்து
விரட்டி ஓடவிடும் காட்சிகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.
மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் மக்கள் சேவை செய்யும், மக்கள் தொகையில் நூறில் ஒரு பங்கு கூட இல்லாத காவல்துறையின் அடக்குமுறை தட்டி கேட்க யாருமே இல்லை. ஏனெனில், காவல்துறை அமைச்சத்தை கையில் வைத்தல்துள்ள தலைமையே, 144 தடையையும், 110 விதியையும் நம்பித்தானே ஆட்சி நடத்தும் அவலம் இங்கே அரங்கேறி கொண்டிருக்கிறது.
- இரா.ச.இமலாதித்தன்

09 நவம்பர் 2015
மழைக்காலங்களில்...
ஏரி - குளம் - குட்டைகளையெல்லாம் ஆக்கிரமித்ததன் எதிர்வினையாக தான்,
வீட்டிற்குள்ளும் மழை தண்ணீர் வந்து போகிறது. குறைந்த பட்சம், ரியல்
எஸ்டேட்கள் மூலமாக புதுப்புது நகர்களை உருவாக்கும் போதாவது
நீர்தேக்கத்திற்காக இடம் ஒதுக்கினால் தான் ஓரளவுக்கு மழைக்காலங்களை
சமாளிக்க முடியும்.
08 நவம்பர் 2015
நாடு போற்றும் நான்காண்டு சாதனை!

கைக்குழந்தைகளோடும், தீபாவளி சாமான்களோடும், முதியோர்களும், பெண்களும் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்மில்லை. பேருந்தின் எல்லா இடங்களிலும் மழை தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தை பற்றி நடத்துனரிடம் கேட்டால், விரக்தியில் பேருந்து பணிமனை அலுவலர்கள் தான் காரணமென பல விசயங்களை சொன்னார்.
தொ.மு.ச., அ.தொ.ச., என தொழிற்சங்க தேர்தலுக்கும், பதவிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நான்கில் ஒரு பங்கையாவது பேருந்துகளின் பழுதை சரி செய்ய கொடுத்தால், வாங்கும் சம்பளத்திற்கு ஓரளவு தொழிற்தர்மமாவது இருக்கும்.
நாகை பேருந்து
நிலையமே பெரிய குட்டை போல, சாக்கடையும் சகதியுமாக மழைத்தண்ணீரில்
மிதக்கிறது. இலக்கு வைத்து குடிக்க வைக்கும் அரசாங்கத்தின் சட்டமன்ற
அலுவலகமும் நாகை பேருந்து நிலையத்திற்கு அருகில் தான் இருக்கிறது என்பதும்,
அதுதான் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபாலின் அலுவலகம் என்பதும்
குறிப்பிடதக்க விசயம்.
மேலும், நாகூர் - வேளாங்கண்ணி என ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்ட பயணிகள் எல்லாம் காறி துப்புறாங்க; நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகையில், பலரது நாக்கில் உமிழும் எச்சிலும் மிதந்து கொண்டிருக்கிறது, நாடு தூற்றும் நான்காண்டு வேதனையை சொல்லி...

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)