புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 டிசம்பர் 2016

ஆண்டின் முதல் நாள் உறுதிமொழி ஏதெனில்...

31 டிசம்பர் 2016க்கும், 01 ஜனவரி 2017க்கும் இடையே ஒரேவொரு நாள் மட்டுமே வித்தியாசம். மற்றபடி எந்தவித மாற்றமும் வந்துவிட போவதில்லை. நாம் நமக்குள்ளாகவே சிலவற்றை மாற்றிக்கொள்ளாத வரை எந்த மாற்றமும் நம்மை சுற்றி நடந்து விடாது. புத்தாண்டிலிருந்து ஏதாவதொரு கெட்டப்பழக்கத்தை விடப்போவதாக பலரும் சொல்லிக் கேள்விப்படுகிறோம். உண்மையில் எது கெட்டப்பழக்கம்?யென தெரிந்த பின்பே அந்த பழக்கம் நம்மோடு நிரந்தரமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் மனதளவில் அது கெட்ட பழக்கமென ஆழமாக பதிந்த பிறகு, அந்த பழக்கம் படிப்படியாக நம்மை விட்டு விலகிவிடும். முதலில் எது கெட்ட பழக்கம்? எது நல்ல பழக்கம்? என்ற சுய மதிப்பீடு செய்து பார்த்தாலே போதுமானது. தனியாக அதற்கென நாள் குறித்து எதையும் விட்டொழிக்க வேண்டியதில்லை.

பெரும்பான்மையானவர்கள் கெட்டப்பழக்கம் என அவர்களுக்குள்ளாகவே கருதுவது, குடிபழக்கத்தையும் - புகை பழக்கத்தையும் தான். தெரிந்த தவறுகளுக்கு தீர்மானம் போட்டு திருத்த வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர்களால் விட்டொழிக்க முடியாமல் போனபின்பு தான் இப்படியெல்லாம் மெனக்கெட வேண்டிருக்கிறது. இப்படியான புகை/மது போன்ற உடல் நலத்திற்கு சம்பந்தப்பட்ட பழக்கத்தை விடுவதற்கு முன்னதாக, மனதளவிலான சில பழக்கங்களை உங்களின் ஆழ்மனதுக்குள் மாற்றிக்கொள்ளுங்கள். 'நான் என்ற ஈகோ - தனிப்பட்ட புகழ் பேசி கிடைக்கின்ற சுய பெருமை - தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பொறாமை படுவது - இவற்றிற்கெல்லாம் பின்விளைவாக உருவாகின்ற அர்த்தமற்ற அதீத கோபம்' யென்ற இதுபோன்ற பழக்கங்களை விட்டொழித்து பாருங்கள். 2017 மட்டுமல்ல; ஒவ்வொரு புத்தாண்டும் மகிழ்வாகவே அமையும்.

- இரா.ச. இமலாதித்தன்

01 ஜனவரி 2016

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! - 2016

உணவு, உடை, கலாச்சாரம், மொழியென எல்லாவற்றுள்ளும் ஆங்கிலம் கலந்துவிட்ட பின்னால், தமிழ் மாதங்களை சுப துக்க நிகழ்வில் மட்டும் பயன்படுத்தி கொண்டு, நாட்காட்டியில் கூட ஆங்கில வருடத்தின் மாதங்களை பின்பற்றும் கட்டாயத்திற்கு ஆளான அனைவருக்கும், இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

31 டிசம்பர் 2013

புது ஆண்டு புகுதல்

2013 ம் ஆண்டு எத்தனையோ சுக துக்கங்களை கலவையாக தந்தாலும், இயற்கை வேளாண் ஞானி தெய்வத்திரு. கோ. நம்மாழ்வார் அவர்களின் மரணம், கொஞ்சம் அதிகமான வலியையே தருகிறது.

எனக்கு ஏற்கனவே மது - புகை பழக்கம் இல்லாததால் எதையும் கைவிட வேண்டிய அவசியமில்லை என்பதால், இணைய செயல்பாடுகளில் வருகின்ற ஆண்டும், வழக்கம் போல யாருக்காகவும் சுயத்தை இழக்காமல் இருப்பதே சரியானதென்று, புதுவருட கொள்கையாக முடிவெடுத்துள்ளேன். மேலும், வருகின்ற ஆண்டில் செய்ய வேண்டியவைகளென, இன்னும் பலவற்றை மனதிற்குள்ளாக பட்டியலிட்டு வைத்திருக்கின்றேன். அதை இப்போதே பொதுவில் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். மற்றபடி ஜோதிட கணிப்பீடின் படி, வரும் ஆண்டு முதல் இன்னும் 15 ஆண்டுகள் எனக்கு சிறப்பாக இருக்கும் என்பதால், இந்த புத்தாண்டை மகிழ்வோடும் - எதிர்பார்ப்போடும் வரவேற்கிறேன்!


என்னதான் தமிழனாக இருந்தாலும், ஹிந்து கலாச்சார விழாக்களை தவிர்த்து, ஏனைய (குறிப்பாக, அரசாங்க பதிவேடுகள், சம்பளம், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட) பல செயல்பாடுகளுக்கு ஆங்கில தேதியைதான் நாம் பயன்படுத்துகிறோம். அதனாலேயே, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!