Posts

Showing posts from March, 2015

கொம்பனுக்கு பின்னாலுள்ள அரசியல்!

Image
-001-

கருணாநிதியின் பேரனான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்(?) உருவாகியுள்ள "நண்பேன்டா" திரைப்படம், ஏப்ரல் 2ம் தேதி வெளிவருகிறது. அதற்காக தமிழ்நாடெங்கும் கட்சி மாநாட்டு அழைப்பு போல சுவர் விளம்பரங்களெல்லாம் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரும் பார்த்திருக்க கூடும். அதே ஏப்ரல் 2ம் நாளில், கார்த்தி நடிப்பில் தெற்கத்தி மண் சார்ந்த கதைக்களத்தோடு ”கொம்பன்” திரைப்படமும் திரையரங்குகளுக்கு வருகிறது. தென்னாட்டு மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை பதிவு செய்த எந்த திரைப்படமும் இதுவரை மோசமாக தோல்வி அடைந்ததாக வரலாறில்லை. அந்த வகையில் நிச்சயம் கொம்பனும் ஹிட் தான். இவ்வேளையில், தலித் கோட்டா அடிப்படையில் திருமாவளவனுக்கு மாற்றாக, தற்போது மீண்டும் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் கிருஷ்ணசாமியின் தொடர் முயற்சியால், கொம்பன் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டிகள் ஏதுமின்றி, உன்னத கருத்துகளை உலகிற்கு சொல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள "நண்பேன்டா" திரைக்காவியம் வெற்றிப்பெற கிருஷ்ணசாமி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள்!

-002-
ஏப்ரல் 2ம் தேதி வெளி…

ஹாரிஸ் ஜெயராஜ் - காப்பிகேட் ரசிகன்!

'நண்பேன்டா' படத்துல க்ளாசிக்கல் சாயலில் "ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா?" என்ற பாட்டு கேட்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. காப்பியடிச்சாலும் கேட்டு ரசிக்கிற மாதிரி ட்யூன் போடுறதுல, ஹாரிஸ் ஜெயராஜை அடிச்சிக்க இங்கே ஆளே கிடையாது. மியூசிக் காப்பிக்கேட் விசயத்துல தேவா தொடங்கி அனிருத் வரை ஒரு ஆளு கூட ஹாரிஸ் பக்கதுல கூட வரவே முடியாது. அதுக்கெல்லாம் ஒரு சின்ன உதாரணம் என்னன்னா, ரஹ்மான் எந்த பாட்டு போட்டாலும், அடுத்த சில மாதங்களிலேயே ரஹ்மான் பாட்டுல பாடுன அதே சிங்கரை வைத்து, அதே இன்ஸ்ட்ரூமெண்ட்களை பயன்படுத்தி, அதே மாதிரி ட்யூன் போடுற தைரியம் ஹாரிஸை தவிர வேற யாருக்கும் இங்க இல்லை. திருட்டுத்தனம் பண்ணினாலும் நாலு பேருக்கு தெரியாத மாதிரி நாசூக்கா பண்ணனும்ன்னு வடிவேலு சொல்ற மாதிரியான தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பல பாடல்களுக்கு நான் பெரிய ரசிகன். அதுல சில கீழே:-

12பி - பூவே வாய் பேசும் போது
உள்ளம் கேட்குமே - என்னை பந்தாட பிறந்தவளே, ஓ மனமே
லேசா லேசா - லேசா லேசா
உன்னையறிந்தால் - உனக்கென்ன வேணும் சொல்லு
இரண்டாம் உலகம் - கனிமொழியே, மன்னவ…

உலக கோப்பை துளிகள்!

-001-

உலக கோப்பைல இந்திய அணி தோற்று போனது கூட கஷ்டமா இல்ல. அதை மத ரீதியாக தங்களின் வெற்றின்னு நினைக்கிற, பாஸ்போர்ட்ல இந்தியன்னு சொல்லிக்கிட்டு வெளிநாட்டுல ஒட்டகம் மேய்ச்சிக்கிட்டு இருக்கிறதுங்கள நினைச்சாதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.


-002-

தோனி ஆஸ்திரேலியாவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, ஒருபய கூட தோனியை மறந்தும் புகழ்ந்துட கூடாதுன்னு, நம்ம கோஹ்லி முத்தரப்பு தொடர் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே மூனு விசயத்தை முடிவு பண்ணி வச்சிருந்தாப்ள. அதுல ரெண்டாவதா தோனி கதையும் ஓகே ஆய்டுச்சு. அல்ரெடி அனுஷ்கா ஷர்மாவும் ஓகே. இப்போ மிச்சம் இருக்கிறது, மூனாவதா கேப்டன் பதவி மட்டும் தான். அதுவும் ஐபிஎல் முடிஞ்ச உடனே அறிவிப்பு வந்துடும். ஓர் அமாவாசை, இனி நாகராஜ சோழனாகிறான்! வாழ்த்துகள்டே... "என்னுடைய சாதனைகளை இன்னொரு இந்தியனே முறியடிக்க ஆசைப்படுறேன்"னு சொன்ன நம்ம சச்சினின் வாக்கை காப்பாற்றக்கூடிய தகுதியுள்ள கோஹ்லி, இனியாவது பிசிசிஐ டீமுக்காக ஆடுவாப்ள நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை! 

-003-

ஒரேவொரு ரன் அடிக்க பதிமூனு பாலை வேஸ்ட் ஆக்கினதை விட, அந்த ஒரு ரன் அடிக்கிற லட்சணத்த …

உலகில் மதம் எனும் அரக்கன்!

கொள்ளையடிப்பதற்காக நாடு கடந்து போர் புரியும் இடத்தில், தங்களது மார்க்கத்தை ஏற்காதவர்களை கொலை செய்து, பெண்களை கற்பழித்து தன் கருவை வளர செய்தது ஒரு கூட்டம். ஒருபடி மேலாக, இன்னொரு மதவெறி கூட்டம், நாடு விட்டு நாடு வந்து வியாபாரம் செய்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அங்குள்ள மக்களிடம் தன் மதத்தையும், மொழியையும் அன்பெனும் ஆயுதம் கொண்டு நாகரீகம் என்ற பெயரில் திணித்தது. அந்த மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், அறிவையும் கண்டஞ்சி பூர்வகுடிகளின் வம்சாவழிகளையே கொத்து கொத்தாக நயவஞ்சகத்துடன் இனவழிப்பு செய்தது. இன்றைக்கு உலகளாவிய பிரச்சனைக்கு இந்த இரண்டு மதங்களும் காரணமாக இருந்த போதும், இரண்டாவதாக சொல்லப்பட்ட மதமே எல்லாவற்றுக்கும் ஊன்றுகோலாக இருந்து உலகையே ஆட்டிவிக்கிறது. இந்த மாதிரி அடிக்கிற ஆடி காத்தில், சாதியற்ற ஆதிகுடியான அனைத்து தமிழனும் பாவம் தான்.

தமிழக பட்ஜெட்டும் டாஸ்மாக் தமிழனும்!

நட்ட இடத்திலேயே வருடாவருடம் மரக்கன்றுகளை நடும் சமூக ஆர்வலர்கள் போல, வீழ்ச்சியடைந்த பொருளாதரத்திற்கு நடுவே பட்ஜெட் என்ற பெயரில் வருடாவருடம் அறிவிப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன ஆளும் அரசியல்வாதிகளால். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை 500 ரூபாய் போதும் இந்த இளிச்சவாய வாக்களனுக்கு. எவன் குடி கெட்டால் இவனுக்கு என்ன? சாயுங்காலமானால் மூச்சு முட்ட குடிக்க டாஸ்மாக் வாசலில் தவமிருக்க தான் நேரம் சரியா இருக்கே தவிர, மற்ற சிந்தனையே இவனுக்கு வருவதில்லை. அப்படியொரு சிந்தனையை மழுங்கடிப்பதற்காகவே, டாஸ்மாக் கடைகளை ஊருக்கு ஊரு திறந்து வச்சுருக்கு ஆளும் அரசாங்கம். இந்த சாராயக்கடை வருமானத்தை நம்பித்தானே அரசாங்க பட்ஜெட்டே வருடாவருடம் போடுறாங்க. இவங்க பட்ஜெட்டோ, திட்டமோ எதை போட்டாலும், அது அப்பாவி மக்களின் சோற்றின் மீதுதான் மண்ணை அள்ளி போடுவதாக இருக்கிறது; இதுதான் எதார்த்தம். இங்க பணக்காரன் பணக்காரனாகவே வளருறான். ஏழை பரம ஏழையாகவே தேயுறான். ஆனால், இந்த நடுதரவர்க்கம் தான் நாசமா போய்கிட்டு இருக்கு.

66 ஏ சட்டம் ரத்து!

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தனி நபர்களின் கருத்துகளை வைத்து, கைது - சிறையென அச்சமூட்டி கொண்டிருந்த 66-ஏ சட்டத்தை உச்சநீதிமன்றம் இன்று தடைவிதித்துள்ளது. “தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.” எனவே அதை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளதை வரவேற்றும் அதே சமயம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வரையறையே இல்லாமல் அவதூறு பரப்புவதை நாம் மறுபரிசீலனை செய்து சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியதும் இனி அவசியமாகிறது. ஆதாரமே இல்லாமல், யாரை வேண்டுமானாலும் அவன், இவளென்று ஒருமையில் பேசி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கருத்து சுதந்திரம் என்ற வகையில் வெளிப்படுத்துவதையும் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதந்திரம் என்பதிலும் ஒருவித கட்டுப்பாடு இருக்க வேண்டும். அப்போதுதான் அது நமக்கு நிலையாக கிடைக்கும். தவறு எங்கிருப்பினும் தயக்கமில்லாமல், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது தான் கருத்து சுதந்திரம். ஆனால், நமக்கு வேண்டாதவர்களை அனுமானத்தின் அடிப்படையில் எதை வேண்டுமானாலும் சொல்வது என்பதெல்லாம் கருத்து சுதந்திரம் என்ற வரைவுக்குள் வருவதில்லை. உச்சநீ…

தமிழனின் அனுதாபம்!

Image
தமிழன் எப்போதுமே, தமக்கு ஆதரவானவர்களையோ, பிடித்தவர்களையோ, அறிவாளிகளையோ, சாதனையாளர்களையோ இதுபோல யாராக இருந்தாலும் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தையும் கொடுக்காமல், அவர்களை பற்றி வாயை கூட திறக்காமல், இறந்த பின்னால் வானளவு புகழ்வான் என்பதற்கு இன்றைக்கு மீண்டும் ஓர் உதாரணம்; சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் தந்தையென்ற போற்றுதலுக்குமுரிய லீ குவான் யூ இன்று மரணத்தை தழுவினார் என்பது தான்.

திராவிடமெனும் தீரா விடம்!

Image
உயிர்பலி கூடாது!ன்னு சொன்ன வள்ளலார் இராமலிங்க சுவாமிகளும் ஹிந்து மதம் தான். ஆனால், ஹிந்து மதத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பின்னோக்கி சொல்லும் திராவிட கழக கொழுந்துகள், மாட்டை அறுக்கும் போராட்டத்தை தமிழ் புத்தாண்டான்று அரங்கேற்ற ஆயத்தமாகியுள்ளது. பகுத்தறிவு என்பது "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற குறளின் அடிப்படையில் தான் அமைய வேண்டும். ”நான் சொல்றதையும் அப்படியே நம்பாத. அது உன் அறிவுக்கும் சரின்னு பட்டால் மட்டும் ஏற்றுக்கொள்!”ன்னு திராவிடர் கழகத்தை உருவாக்கிய ஈ.வெ.ரா.வே சொல்லியிருக்கிறார். ஆனால் வீரமணி போன்றோர் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இது மாதிரியான புரட்சி(?)களையெல்லாம் ஓட்டாக்கி, எந்த கட்சிக்காவது தந்துவிட கணக்கு போடுகிறார். தப்பு கணக்கு என்றைக்கும் பலிக்க போவதில்லை.

திராவிட கழகத்திற்கு உண்மையாகவே ஹிந்துத்துவ ஆதிக்க பொது புத்தியை எதிர்க்க வேண்டுமென்ற கொள்கை இருந்தால், நேருக்கு நேராக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளுக்கு சவால் விடுத்து பாரிய அளவில் போராட்டம் நடத்தலாம். ஆனா…

நான் போலிஸ் இல்ல பொறுக்கி!

Image
இந்த கன்றாவியையெல்லாம் ”போக்கிரி” படத்துலயே பார்த்தாச்சு!

https://soundcloud.com/poomozhi/audmp3

தமிழும் மோடியும்!

உலகெங்கும் "தமிழர்கள்" என்ற அடையாளத்தை மொழியால் அடையாளப்படுத்தி கொண்டிருக்கும், ஈழ மண்ணின் பழம்பெருநகரமான ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் நூலகம் இருந்த யாழ்பாணத்தில் ஹிந்தியில் பேசிய மோடி, இலன்கையின் சிங்கள நாடாளுமன்றத்தில் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசினார்? ஹிந்திக்காரய்ங்க யாழ்பாணத்துலயா பானிபூரி விக்கிறாய்ங்க? தமிழன் கிட்ட ஓட்டு கேட்க சிங்கள இனவெறியனான மகிந்த ராஜபக்சாவே எழுதி வைத்து தமிழில் பேசினான். குறைந்தபட்சம், சிங்களவனிடம் பேசியது போலவே, தமிழனிடமும் உலகின் பொது இணைப்பு மொழியான ஆங்கிலத்திலேயே பேசி இருக்கலாமே. இதை கேட்டால், மோடியின் தாய்மொழியே குஜராத்தி தானே? அவர் தன் தாய்நாட்டின் மொழியாக தானே ஹிந்தியை பேசினார்ன்னு யாராவது வக்கனையா ஜால்ரா அடிப்பாங்க. ஹிந்தி மட்டும் தான் இந்தியாவின் தேசிய மொழியா என்ன? தமிழும் தான் அதில் அடக்கம். உலகில் பலருக்கும் வெவ்வேறு மொழிகள் தாய் மொழியாக இருக்கலாம். ஆனால், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழிதான் தகப்பன் மொழி. மோடியோ, காவியோ எந்த கும்பலும் சமகிருதத்தை வைத்து தமிழை அழித்து விட முடியாது. ஆயிரம் ஹிந்து கோவில்களை இடித்து தரை மட்ட…

இமலாதித்தவியல்

001

இந்த உலகத்துல பணமும் பலமும் இருந்தா போதும்; எதையும் சாதிச்சிக்கலாம். பணமிருந்தால் கூலிக்கு பலம் கிடைக்கும். பலமிருந்தால் கூலியே பணம் தான்!

002

இங்க எல்லாருமே புகழுக்கு அடிமை. நீ எவனை ஏமாத்தணும்னு நினைச்சாலும், மொதல்ல உனக்கு புகழ தெரிஞ்சிருக்கணும்!

003

எதை கொடுக்கிறோம்ங்கிறது முக்கியமில்ல. ஆனால் அதை தகுதியானவங்க கிட்ட கொடுக்கணும். அதுல தான் சுவாரஸ்யமே இருக்கு!

ஐவராட்டம் - விமர்சனம்!

Image
சிவகங்கையும், ஐவர் ஆடும் கால்பந்தாட்டமும் தான் கதைக்களம். சீனியர் - ஜூனியர் விளையாட்டு வீரர்களுக்கிடையில் ஊருக்கு பொதுவான கால்பந்தாட்ட மைதானத்தை யார் பயன்படுத்துவது என்பதற்கான ஈகோவுடன் கூடிய போட்டி, இரு அணிகளுக்கு இடையே பந்தயமாகிறது. இரு அணிகளுக்கு இடையேயான பந்தயத்தில் தோற்பவர்கள் அந்த மைதானத்தை பயன்படுத்த கூடாது என்ற இலக்குடன் களமிறுங்கி, கடைசியில் ஜூனியர் அணி தோல்வியை தழுவுகிறது.

மாவட்ட அளவிலான பந்தயத்தில் கடந்த இரு வருடங்களாக கோப்பையை சீனியர் அணியே கைப்பற்றிய நிலையில், அந்த வெற்றிக்கு காரணமான பயிற்சாளர் ஜெயபிரகாஷின் இரண்டாவது தம்பி வேற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு புறக்கணிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேறொரு பயிற்சியாளரை வைத்து களம் காண்கிறது ஜெயபிரகாஷுடைய முதல் தம்பியின் சீனியர் அணி. மற்றொரு அணியான ஜூனியர் அணிக்கு தானாக முன் வந்து பயிற்சி அளிக்கிறார் மாஜி பயிற்சியாளர். ஜூனியர் - சீனியர் என்ற அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் ஆட்டத்தில் வெற்றி யாருக்கு என்பது தான் படத்தின் க்ளைமேக்ஸ். படத்தில் காதலுக்கும் பஞ்சமில்லை. மெல்லிய இழை போ…

சினிமாவுக்கு பின்னாலும் அரசியலே

கிட்டத்தட்ட பதினோறு வருசங்களுக்கு முன்னாடி ”சண்டியர்”ன்னு பெயர் வைக்க கூடாதுன்னு மிரட்டல் விட்ட புதிய தமிழகத்தின் தலைவர் கிருஷ்ணசாமிக்காக ”விருமாண்டி”ன்னு பெயரை மாற்றி படத்தை வெளியிட்டார் கமல்ஹாசன். கோடி கணக்குல பணத்தை செலவு பண்றவனுக்கு தானே வலி தெரியும். எத்தனை பைனான்சியர்கிட்ட எவ்வளவு வட்டிக்கு பணத்தை வாங்கி படத்தை தயாரிப்பாளர் தயாரிச்சாரோ? கடனை வாங்கி ஒரு படம் வெளியீட்டுக்கு தயாரானாலும் கூட தியேட்டர் கிடைக்கிறதுல்ல. அப்படியே தியேட்டர் கிடைச்சாலும் வெடிகுண்டு மிரட்டல் விட்டு, தியேட்டர் பக்கம் வர ஒன்னு ரெண்டு கூட்டத்தையும் பயமுறுத்தியே காலி பண்ணிடுறாய்ங்க. இந்த மாதிரி இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் படத்தை ஒருவழியா வெளியிட்ட பிறகும், அந்த படம் ஓரளவுக்காவது ஓடுமா? ஓடாதா?ன்னு பிரசவ வலி போல மொத்த பட யூனிட்டும் துடிச்சிக்கிட்டு இருக்கிறப்போ, அரசியல்வாதிகளினாலும் இடையூறும் வந்துடுது.

தேர்தல் நேரத்துல அதிமுக, திமுகன்னு மாறி மாறி காலில் விழுந்து ஒன்னு ரெண்டு சீட்டுகளை பிச்சை வாங்கி எம்.எல்.ஏ. / எம்.பி ஆனதுக்கு பிரயோசனமா, மக்களுக்கு ஏதாவது உருப்படியா நல்லது பண்ண பாருங்கய்…

ஹிந்து!

-01-

ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இராவணன் புஷ்பரக விமானத்தை வைத்திருந்த பெருமைகளை பற்றி பேசிக்கிட்டு இருக்கிற இந்நேரத்துல, இராவணன் ஒரு பார்பனர்ன்னு இன்னொரு குரூப் சொல்லிக்கிட்டு கிடக்கு.

-02-

தகுதிக்கேற்ப கடவுள் பெயர் மட்டுமல்ல, கடவுளே மாறி விடுகிறது. பல புதுப்பணக்காரர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் தான் குலசாமி!

-03-

தமிழ்நாட்டிலுள்ள வாகனங்களில் முன்னும் பின்னும் விநாயகருக்கு அடுத்தப்படியாக அதிகமாக இடம்பிடித்திருப்பது சமீபகாலமாய் சாய்பாபா தான்!

-04-

ரெண்டு பேருக்குள்ள ஏற்கனவே சண்டை இருக்குன்னு வச்சிப்போம். இந்த ரெண்டு பேருல ஒருத்தனை வேற எவனோ ஒருத்தன் அடிச்சாலும், மிச்சமிருக்க ஒருத்தன் மேல தான் அந்த பழிச்சொல் விழும். இது அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் தமிழ் சாதி மோதல்களுக்கு பின்னாலுள்ள திராவிட சூழ்ச்சிக்கும் பொருந்தும். அடுத்து, தற்போது "புதிய தலைமுறை தொலைக்காட்சி" அலுவலகத்தின் மீது வீசப்பட்ட டிபன்பாக்ஸ் குண்டுக்கும் பொருந்தும். இனி எவன் தாக்குதல் நடத்தினாலும், அதற்கு ஹிந்து அமைப்புகள் தான் பலியாடு.

-05-

கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பாக, பசும்பொன் தேவர் நினைவிடத்த…

நிலம் கையக்கபடுத்துதல் மசோதா!

நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா மக்களவையில் ஒருவழியாக நிறைவேறியுள்ளது. பா.ஜ.க.வோடு மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியிலுள்ள சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கும் வேளையில் ”மோடியா? லேடியா?” என பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. கட்சியானது, இந்த மசோதாவிற்கு முழு மனதாக ஏன் ஆதரவு தெரிவித்துள்ளது? மேலும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி என பல கட்சிகள் இந்த மசோதவிற்கு எதிராக செயல்படும் போது, காங்கிரஸ் - பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை அமைப்போம் என்று சொல்லிக்கொண்ட அ.இ.அ.தி.மு.க., விவசாய நிலங்களை கேட்பாரற்று கைப்பற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவிற்கு ஏன் ஆதரவளிக்கிறது? 

அடிப்படை அறிவே இல்லாமல் தலைமை எது செய்தாலும் அதை ஆதரித்து துதி பாடும் அரசியலடிமைகளுக்கும் இதை பற்றி கவலையே இல்லை. கேட்டால், காவிரித்தாயேன்னு காலில் விழுவார்கள். காவிரியோ, பெரியாரோ, கிருஷ்ணாவோ எந்த நதி நீர் வந்தாலும், அதை வைத்து விவசாயம் செய்ய கொஞ்சம் நிலமும் வேண்டும் விவசாயிக்கு.…

அய்யா பழ.நெடுமாறனுக்கு வாழ்த்துகள்!

Image
அய்யா பழ.நெடுமாறனுக்கு வாழ்த்துகள்!

யார் தமிழன்?

Image
யார் தமிழன்? என்பதை கண்டுபிடிக்க தெரியாத அளவுக்கு ஆற்றல் பெற்றவன் தான் தமிழன்!

குற்ற பின்னணிக்கு பின்னால்

குற்ற பின்னணி இருப்பதாக கூறி அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் / மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விட்டு நீக்கிய அ.இ.அ.தி.மு.க தலைமையின் நேர்மையை பாராட்டும் அதே நேரத்தில், சொத்து குவிப்பு வழக்குகளில் குற்ற பின்னணியிலுள்ள ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்கி தனது நேர்மையை தக்க வைக்க அ.இ.அ.தி.மு.க விற்கு திராணி இருக்கிறதா? என்று யாராவது கேட்டால், இல்லைன்னு தான் சொல்ல வேண்டிருக்கு. இதுலருந்து நாம கத்துக்க வேண்டிய ஒரு விசயம் என்னன்னா, தலைவனாக இருக்கிறதுக்கான தலைமைத்துவ பண்பை வளர்த்துக்கணுங்கிறது தான். அப்போதான் நாம செய்ற தப்ப கூட சரின்னு மத்தவங்களும் நம்புவாங்க.

மகளிர் தினம்!

மகளிர் தினமென்று தனியாக வருடத்திற்கு ஒரு நாளை ஒதுக்க வேண்டிய அவசியமே இங்கு தேவையில்லை. ஏற்கனவே மண்ணிலிருந்து ஆறு தொடங்கி நாடு முதல் மொழி வரைக்கும் பெண்ணாகவே பார்த்து பழக்கப்பட்ட சமூகம் இது. அதனால் பெண்களை தனிமைப்படுத்தி தனித்துவமாய் அடையாளப்படுத்த வேண்டிய அவசியமே தேவையில்லை. மார்ச் 7 முதல் மார்ச் 9 வரை தற்காலிக பெண்ணியவாதிகளாக மாறப்போகும் அனைத்து ஆண்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அதற்கு முன்பாக, வீட்டுக்குள் பெண்ணிடம் அடங்கி அடிமைப்பட்டு கிடப்பதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யவும் வாழ்த்துகள்!

மோக்கா மோக்கா!

223 ரன் கூட அடிக்க முடியாம 34 ஓவர்லேயே ஆல் அவுட் ஆகுறவய்ங்களுக்கு ’மோக்கா மோக்கா’ன்னு பெருசா பில்டப் கொடுத்தாய்ங்களே, வழக்கம் போல இந்த வேர்ல்ட் கப்லயும் கோட்டை விட்டுடுவாய்ங்களோ... காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ள ஆசிய/அண்டை நாடான பாகிஸ்தானுக்கு வாழ்த்துகள்!

இமலாதித்தவியல்!

”உங்களை யாரும் அவமானப்படுத்திட கூடாது என விரும்பினால், யாருக்குமே முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து விடுங்கள்!”

- இமலாதித்தவியல்

அஜீத்தின் இரண்டாவது குழந்தை!

நடிகனோட படுக்கையறை வரைக்கும் போற புத்தி தமிழனுக்கு மாறாவே மாறாது. அஜீத் கல்யாணம் பண்ணின உடனேயே குழந்தை பெத்துக்கலன்னு ஒருமாதிரியா பேசுனாய்ங்க. இப்போ ரெண்டாவது குழந்தையை பெத்தக்கிட்ட உடனே குட்டித்தல, சின்னத்தலன்னு வேறமாதிரி பேசுறாய்ங்க. ஒரு தனிமனிதனின் குடும்பத்திற்கு சம்பந்தபட்ட குழந்தை பெத்ததையெல்லாமா ட்விட்டர் ட்ரெண்ட்ல கொண்டுவரணும்ன்னு துடிப்பாய்ங்க? குழந்தை பெத்துக்கிறதெல்லாம் அவ்ளோ பெரிய சாதனையா என்ன? மன்னராட்சி காலத்திற்கெல்லாம் கூட இளவரசன் பொறந்ததா ஊர் முச்சந்திக்கு வந்து ஒருமுறை தண்டோரா தான் போடுவாய்ங்க. ஆனால் இவிய்ங்க, மூச்சு முன்னூறு தடவ அந்த தாம்பத்ய சாதனையையே பேசிக்கிட்டு கிடக்குறாய்ங்க. ஓர் ஆணும், பெண்ணும் இணைந்தால் குழந்தை பிறக்கத்தான் செய்யும். அதுதான் உடலியல் சார்ந்த மரபு. அந்த காலத்துல நம்ம தாத்தா பாட்டிகயெல்லாம் பத்து பதினைஞ்சு புள்ளக்குட்டிகள பெத்து போடலயா? 

இதை சாதனை மாதிரி பேசுற பொதுபுத்தியை திணிப்பது ஒரு காலத்தில் ஊடகங்களின் பங்கு இருந்தது. ஆனால், இன்னைக்கு நிலைமையே வேற. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் விவாதிக்கப்படும் விசயங்களை தான், தொலை…

மக்களாட்சி அரசியல்!

பிப்ரவரி 24ல் பிறந்தநாள் கொண்டாடிய ஜெயலலிதாவிற்காக வைக்கப்பட்ட ப்ளக்ஸானது, மார்ச்1ம் தேதி பிறந்தாள் கொண்டாடும் ஸ்டாலினுக்காக வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ்க்கு போட்டியாகவே ஒரு வாரமாகியும் இன்னும் கழற்றப்படாமலே இருக்கின்றது. இது ஆளுங்கட்சி அரசியல்.

இதனாலேயே டெல்டா பகுதிகளுக்குட்பட்ட கிராமம்/நகரம் என்ற பாகுபாடின்றி எல்லா ஊர்களிலும், எதிரும் புதிருமாக ஜெயலலிதா - ஸ்டாலின் ப்ளக்ஸ்கள் மட்டுமே தென்படுகின்றன. இது தமிழக அரசியல்
இன்னும் ஓரிரு நாட்கள் கழித்து பெரும்பாலான ப்ளக்ஸ்கள், தன் தலைவன்/தலைவிக்காக கடன் வாங்கி பெருமைக்கு ப்ளக்ஸ் அடித்தவனின் ஓட்டை விழுந்த குடிசைகளை போர்த்தி கொண்டிருக்கும். இது எதார்த்த அரசியல்.

இந்த எதார்த்தத்தையெல்லாம் புரிந்து கொள்ளாமல், இருநூறு ரூபாய்க்கும், ஐநூறு ரூபாய்க்கும் உடலை விற்கும் விபச்சாரி போல, ஓட்டை விற்கும் வாக்களன் இருக்கும் வரை மக்களாட்சி அரசியலிலும் குடிமக்களாகிய நாம் அடிமைகள் தான்.