கொம்பனுக்கு பின்னாலுள்ள அரசியல்! -001-

கருணாநிதியின் பேரனான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்(?) உருவாகியுள்ள "நண்பேன்டா" திரைப்படம், ஏப்ரல் 2ம் தேதி வெளிவருகிறது. அதற்காக தமிழ்நாடெங்கும் கட்சி மாநாட்டு அழைப்பு போல சுவர் விளம்பரங்களெல்லாம் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரும் பார்த்திருக்க கூடும். அதே ஏப்ரல் 2ம் நாளில், கார்த்தி நடிப்பில் தெற்கத்தி மண் சார்ந்த கதைக்களத்தோடு ”கொம்பன்” திரைப்படமும் திரையரங்குகளுக்கு வருகிறது. தென்னாட்டு மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை பதிவு செய்த எந்த திரைப்படமும் இதுவரை மோசமாக தோல்வி அடைந்ததாக வரலாறில்லை. அந்த வகையில் நிச்சயம் கொம்பனும் ஹிட் தான். இவ்வேளையில், தலித் கோட்டா அடிப்படையில் திருமாவளவனுக்கு மாற்றாக, தற்போது மீண்டும் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் கிருஷ்ணசாமியின் தொடர் முயற்சியால், கொம்பன் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டிகள் ஏதுமின்றி, உன்னத கருத்துகளை உலகிற்கு சொல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள "நண்பேன்டா" திரைக்காவியம் வெற்றிப்பெற கிருஷ்ணசாமி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள்!

-002-
ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவிருக்கும் நண்பேன்டா படத்தின் ஹீரோவான உதயநிதி ஸ்டாலினின் அப்பாவும், திரைப்பட தணிக்கை குழுவின் உறுப்பினராக இருக்கும் எஸ்.வீ.சேகரும் நல்ல நண்பர்கள்ன்னு ஊருக்கே தெரியும். அதிமுகவுல இருக்கும் போதே, திமுகவை பாராட்டியவர். அடுத்து பிஜேபில் இணைந்த பிறகு, இம்முறை புதிய தலைமுறையின் விவாதத்தில் பிஜேபியில் இருந்து யாரும் கலந்து கொள்ள கூடாதுன்னு சொன்ன பிறகும் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக கலந்து கொண்ட அஞ்சா நெஞ்சனான எஸ்.வீ.சேகர், கொம்பன் படத்தை பற்றி ஊடகங்களுக்கு ஏன் பேட்டி கொடுக்கிறாருன்னு தான் புரிய மாட்டுது. எது எப்படியோ, நண்பேன்டா படம் மிகப்பெரிய வெற்றி பெற ஸ்டாலினின் நண்பனான எஸ்.வீ.சேகர் சார்பாக வாழ்த்துகள்!

-003-

பீட்டர் ரமேஷ்குமார்ன்னு ஒருத்தரு, தந்தி டிவியின் விவாதத்தில் கிருஷ்ணசாமியின் வழக்குரைஞராக கலந்து கொண்டு கொம்பன் படவிவகாரம் தொடர்பாக ஒன்றரை மணி நேரம் விவாதத்தில் பேசினார். பேச்சு முழுக்க முக்குலத்தோர், கவுண்டர் மீதான வக்கிரமும், காழ்ப்புணர்ச்ச்சியும் தான் தெள்ளத்தெள்வாக தெரிந்தது. நீதிபதியையே சந்தேகிக்கும் இவரை போன்ற வழக்குரைஞரை தான் முதலில் தடை செய்ய வேண்டும். கொம்பன் பட பாடலின் வரியையெல்லாம் படிச்சு காட்டினாரு. அதுலயும் அவ்வளவு சாதிவெறி தெரிந்தது. பாலுத்தேவர் கதாப்பாத்திரம், தெய்வத்திருமகன் படத்தின் பெயரை தெய்வமகள் என பெயர் மாற்றம் செய்தது, மருதநாயகம் வெளிவராமல் இருப்பதற்கு பூலித்தேவரின் வீழ்ச்சியை சொல்லிவிடும் என்பதால் தான் என்ற பிதற்றல், என அவர் சொன்ன எல்லாமும் தேவர் சாதிக்கு எதிராகவே முழுக்க முழுக்க இருந்தது. ஒரு சாதி மக்கள் மீது இவ்வளவு வன்மத்தை கக்கும் இது போன்ற நபர்களின் பேச்சை, அந்த வன்மத்திற்கு உள்ளாகும் சாதியை சார்ந்த ஒருவன் கேட்பதும் ஒருவகையில் நல்லது தான்ன்னு நினைக்கிறேன். இதுனால இன்னைக்கு ஒரு கூடுதல் இலக்கும் எனக்குள் சேர்ந்திருக்கு. கண்டிப்பா ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும், அப்போது இதை விட வேறொரு மிகப்பெரிய பொதுவெளியில் வீரியமாய் பதிவு செய்வேன். நன்றி பீட்டர் ரமேஷ்குமார்!

-004-
கிருஷ்ண சாமிக்களே, கும்புடுறேன் சாமிக்களே அந்த சாமி மேல சத்தியமா இன்னமும் எனக்கு புரியல... சண்டியர், கொம்பன், குட்டிபுலி, சண்டக்கோழி இதெல்லாம் தேவர் சாதியை தான் குறிக்கிறதுன்னு நீங்களே ஏன்யா நம்புறீங்க? நாங்களே அதை நம்புறது இல்ல...

-005-

எங்கப்பன் சாமி மாதிரின்னு பெருமையா உண்மையை சொன்னால் மத்தவனுக்கு ஏன் எரியணும்? அவன் அப்பன் பொம்பள பொறுக்கியா இருக்கிறதுக்கு நான் என்னய்யா பண்ண முடியும்? வக்கிருந்தா உன் அப்பன் பெருமையா ஊர கூட்டி சொல்லு. அதவிட்டுட்டு என் அப்பனை பத்தி பேசாதன்னு பஞ்சாயத்தை கூட்டுறதெல்லாம் கேவலமா இருக்கு. என்னைக்குமே என் அப்பன் கொம்பன்யா...

-006-

சிவக்குமார், ஸ்டாலின், விஜயகாந்த் என்ற இந்த மூவருடைய வாரிசுகளின் படமும் நாளைக்கு வருது. சேர,சோழ,பாண்டிய தேசம் தான் இம்மூவரும் பிறந்து வளர்ந்தது என்பதும் குறிப்பிடதக்கது. சகாப்தம் படத்துல கூட தான், குறிப்பிட்ட அந்தவொரு சாதியினை பற்றிய காட்சி இருக்குன்னு சொல்றாங்க. கொம்பன் பிரச்சனையில விஜயகாந்துக்கும் ஒரு வகையில் ஆதாயம் இருக்கிறதுனால தான், முன்னாள் நடிகர் சங்க தலைவர், சமகால எதிர்க்கட்சி தலைவர், ஓர் அரசியல்வாதி, சக நடிகன் என எந்த முறையிலும் கூட இதுவரை வாயையே திறக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment