வ.உ.சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.உ.சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 நவம்பர் 2015

வ.உ.சி.யும் சாதி தலைவரானார்!

வரலாற்றில் தன் நாட்டுக்காக தனிக்கப்பலையே வாங்கி, கப்பலோட்டிய சுதேசித்தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாள் இன்று! ஆனால், அவரையும் சாதி தலைவராக்கி அரசியல் ஆதாயம் தேடும் அமைப்புகளெல்லாம் வ.உ.சி.பிள்ளையின் நேரடி வாரிசு தாரர்களின் குடும்பத்தினர், இன்று வறுமையில் வாடுவதை கண்டும் தோள் கொடுக்கவில்லை என்பதும் கூட வருத்தமான வரலாறு தான்!

26 செப்டம்பர் 2015

ஆதீனமும் சாதீனம் ஆனது!




திருவாடுதுறை ஆதீனத்தின் ஆதரவோடும், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் ஆசியோடும், "தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க"த்தின் முப்பெரும் விழா! ஆன்மீகத்திற்கு ஏது சாதி?

05 செப்டம்பர் 2015

வ.உ.சி. என்ற வெள்ளாளர்!

தமிழார்வமிக்க வழக்குரைஞராக இருந்தும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த தன் தாய்நாட்டுக்காக பலரிடம் பணம் திரட்டி சுதேசி கப்பலை ஓட்டி, ஆங்கில வணிகத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்ததால் சிறை தண்டனை பெற்றும் கூட, வாழ்நாளில் கடைசிகாலத்தில் வறுமையால் அவதிப்படும் போது, தோள்கொடுக்க யாருமில்லை.

இப்போது கூட அவரது பேரன் குடும்பம் பொருளாதார ரீ்தியாக கஷ்டப்படும் கூட யாரும் உதவிட முன்வரவில்லை. சமீபத்தில் தான் அரசாங்கம் கூட பொருளாதார உதவியை செய்தது. ஆனால் வ.உ.சி என்ற பெயரை பயன்படுத்தி பேரவை, இயக்கம் என புற்றீசல் போல இன்று பல வெள்ளாளர் பிள்ளைமார் சாதி சங்கங்கள் உருவாகி விட்டன. 

எங்க நாகப்பட்டினத்தில் கூட இன்று காலை 9 மணிக்கு பேருந்து நிலையம் அருகே பெரிய பதாகையுடன் கூடிய வ.உ.சி படத்திற்கு, அனைத்து வெள்ளாளார் பிள்ளைமார் சங்கத்தினர் மாலை அணிவித்தனர். தங்கத்தாலும் ஆகாது, இது போன்ற இலக்கில்லா சங்கத்தாலும் ஒன்னும் ஆகாது என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. தேசிய தலைவரையெல்லாம் சாதி தலைவராக்கி பதவி சுகம் அனுபவிக்கும் சுயநலவாதிகள் நிறைந்த உலகில் வேற எதையும் எதிர்பார்க்க முடியாது!

- இரா.ச.இமலாதித்தன்