தேசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஜனவரி 2016

தேசியம் என்பது கொடியில் இருக்கிறதா?!

ஒரு நாட்டின் தேசிய கொடியில் தான், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் தேசியமும் அடங்கிருப்பது போன்ற மாயை மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியா என்பது பலதரப்பட்ட தேசிய இனங்களின் (சமஸ்தானங்களின்) கூட்டாட்சி தத்துவமுடைய ஒரு நாடு. ஆனால் கூட்டாட்சி போலவா இந்தியா செயல்படுகிறது? பாகிஸ்தானில் கடற் எல்லையில் சிக்கினால் அவன் இந்திய மீனவன்; அதுவே இலங்கை எல்லையில் சிக்கினால் தமிழ் மீனவன். இதுதான் இந்திய தேசியத்தின் அளவீடு.

பண்டைய தமிழகத்திலேயே சேர - சோழ - பாண்டிய - பல்லவ என நான்கு பெரிய நாடுகளும், அதற்கு கட்டுப்பட்ட நடுநாடு, சேதிநாடு போன்ற பல சிற்றரசு நாடுகளும் இருந்திருந்தன. ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனி கொடியும் - இலச்சினையும் இருந்தது. அந்த கொடிகளெல்லாம் அந்த நாட்டின் எல்லைக்கும், அதிகாரத்திற்குமான ஓர் அடையாளமாகத்தான் பார்க்கப்பட்டது. இப்போதும் கூட கொடியை அடையாளமாக மட்டுமே பார்த்தாலே போதும்.

ஆனால், இன்றைக்கு எவனோ ஒருவன் இந்திய கொடியை எரித்து, அதை மெனக்கெட்டு போட்டோவும் எடுத்து விளம்பர நோக்கில் சமூகசலைதளங்களில் பகிர்கிறானெனில் அதை நாமும் ஏன் மீண்டும் பகிர்ந்து விளம்பரப்படுத்த வேண்டும்? தமிழனாக ஹிந்திய தேசியத்தின் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் கூட, இந்திய கொடியை எரித்ததை நான் ஆதரிக்கவுமில்லை. ஆனால் ஒரு நாட்டின் மீதான வெறுப்பு சாமானியனுக்கும் ஏற்படுகிறதென்றால், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்க்கே இருக்கிறது. மோடிக்கள் எல்லாம் அதானிகளையும், சோனியாக்கள் எல்லாம் அம்பானியையும் நண்பர்களாக்கி கொண்டால், நாலாபுறமும் வெறுப்பு உண்டாகி ஹிந்திய தேசியம் என்பது யாரோ ஒருவனால் நாளுக்கு நாள் தினந்தோறும் எரிக்கப்பட்டே தீரும்.

- இரா.ச.இமலாதித்தன்

25 டிசம்பர் 2015

மூன்று தேசியங்களுக்குள் டிசம்பர் 25!

நாகை மாவட்டம் கீழ வெண்மணியில், கூலி உயர்வுக்காக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக குரலெழுப்பிய சக தமிழ்குடிகளான பள்ளர்-பறையர்களின் உரிமைக்குரல்வளையை ஒரே குடிசையில் வைத்து 44 உயிர்களை கொன்றொழித்த வடுக பண்ணையாரின் வஞ்சகம் நிறைந்த நாள் இன்று.

‪#‎தமிழ்தேசியம்‬

பல சிற்றரசுகளையும், பல மாகாணங்களையும், பல சமஸ்தானங்களையும், வல்லபாய் படேல் போன்றோரின் முயற்சியால் இந்தியம் என்ற ஒற்றைச்சொல்லில் கட்டமைக்கப்பட்ட இந்த நவீன தேசத்தின் அப்பழுக்கற்ற ஓர் உன்னத தலைமை அமைச்சராக விளங்கிய, முன்னாள் பிரதமரான உயர்திரு. அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் பிறந்தநாள் இன்று.

‪#‎இந்தியதேசியம்‬

உலகெங்கும் வணிகமும் மொழியும் உலகமயமாக்கல் ஆக்கப்பட்ட அதே நேரத்தில், தன் பங்கிற்கு உலகமாயாக்கப்பட்ட மதம் தான் கிருத்துவம். எங்கெல்லாம் இம்மதம் பரப்பப்பட்டதோ அங்கெல்லாம் அம்மக்களின் வாழ்வியல் கலச்சாரத்தோடு தன்னையும் உருமாற்றி கொண்டு, அம்மண்ணில் பேசப்பட்ட மக்களின் மொழியின் வாயிலாகவே எளிய மக்களையும் மனரீதியாக மதமாற்றம் செய்த மதமான கிருத்துவத்தின் அதிமுக்கியமான கிருஸ்துமஸ் நாள் இன்று.

‪#‎சர்வதேசியம்‬

துக்கமும் - மகிழ்ச்சியும் - வாழ்த்துகளும் என கலவையாக நிறைந்த நினைவேந்தல் அனுசரிக்கக் கூடிய மறக்க முடியாத நாள் இந்த டிசம்பர் 25!

- இரா.ச.இமலாதித்தன்

23 நவம்பர் 2015

அமீர்கான்களும் - கமல்ஹாசன்களும்!

அமீர்கான்களுக்காக சிரியாக்களும், கமல்ஹாசன்களுக்காக இஸ்ரேல்களும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. சகிப்புத்தன்மை இல்லாத இந்த நாட்டில் இனிமேலும் இருந்து என்ன கிழிக்க போகிறீர்கள்? குரைக்கிற நாய்கள் பெரும்பாலும் இங்கே கடிப்பதேயில்லை என்ற பழமொழியை இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் பழமைவாதிகளின் நாட்டில், புதுமை படைக்கவே அவதரித்த நீங்கள் பிறந்ததே ஓர் அதிசயம் தான். உங்களது சாதனைகளுக்கு நன்றி!

சீக்கிரம் கிளம்புங்கள்.