மாவலி மாவேந்தன்

மாவலி யென்பானொரு மாபெருஞ் சேரவேந்தன்,
மானமிகுந் தமிழ மறவனன்றோ.
பாவலரும் பின்னரே பகையொடு சேர்ந்தவனைப்
பழித்துவரும் மடமைத் திறமும் நன்றோ

நாவலந் தீவிலெங்கும் நாயகச்செங் கோலோச்சி
நன்மை பலவுஞ் செய்த காவலனே
யாவரும் எதிர்க்கினும் யானைத்திரளைக் கொல்லும்
யாளிபோல் வெல்லும் பெருமாவலனே

தேவருக் கென்றும்பல தீமைசெய்து வந்ததால்
திருமாலின் அடியினால் தீர்ந்தான் என்பார்
தேவுரையே மாற்றிலும் திருப்பற்று வாய்மை வண்மை
திடமாயவன் கொண்டதைத் தேர்ந்து முன்பார்

மாவலி மரபிலே வந்த சீர்த்தியைக் கிள்ளி
வளவனுந் தேவியாக மணந்திருந்தான்
மாவலி மருகராம் வாணகோ வரையரும்
வளவன்கீழ்ச் சிற்றரசாய் இணைந்திருந்தார்

ஆரியத்தை யெதிர்த்த அருந்தமிழ் வேந்தரெல்லாம்
அசுரரென்றே பண்டைநாள் அழிக்கப்பட்டார்
சீரிய அறிவியல் செழித்துவரு மிந்நாளும்
செந்தமிழ்த் தலைவரே பழிக்கப்பட்டார்

திருவோண நாளிலின்றும் குடிகளின் நலங்காணத்
திரும்பிவரும் மாவலி என்று சொல்வார்
அருளோடும் அவன்அந்நாள் அரசுபுரிந்த வுண்மை
அறிவிக்கும் இதுவொன்றே கண்டு கொள்வீர்

- ’மொழிஞாயிறு’ ஞா.தேவநேயப் பாவாணர்,
(”இசைத் தமிழ்க் கலம்பகம்”, 51. மாவலி மாவேந்தன்)

சைவ 'நந்தி தேவரே' சமணத்தில் 'ரிஷப தேவரா'கவும் இருக்கிறார். அந்த ரிஷபதேவரின் மகனுடைய பெயர்தான் 'பாகுபலி'. அப்படிப்பட்ட மாவீரனின் பெயரில் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் பெயர் அகமுடையாரின் மரபுவழித்தோன்றலான வாணாதிராய வம்சத்தை சேர்ந்த 'மகாபலி' என்ற பேரரசனின் பெயரை வைப்பார்களென நினைக்கிறேன்.

#வெட்டுமாவலிஅகம்படி

திருவள்ளுவரும் சாதி தலைவராகிறார்!


திருவள்ளுவர் தலித் என்பதால் தான் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ அனுமதிக்கவில்லையென நவீன பார்பனராகி போன, திராவிட வைரமுத்து சொல்லிருக்கிறார். வடக்கத்தியனுக்கு தமிழ்நாட்டுக்காரன் எல்லாருமே தலித் தான் என்ற விசயம் கள்ளரான வைரமுத்துக்கு தெரியாது போல. திருவள்ளுவர் இந்த சாதியென சர்டிபிகேட் கொடுக்க யாருக்கும் இங்கே அறுகதை இல்லை. ஏனெனில் திருவள்ளுவர் பிறந்த ஊரையே இதுவரைக்கும் யாராலும் சரியாக நிரூபிக்க முடியவில்லை. மேலும், திருவள்ளுவர் இந்த சாதிதானென உறுதியாக சொல்லவும் எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. இதுதான் எதார்த்தம்.

கீழே இருக்கிற போஸ்ட்ரல இருக்கிற, 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பறையர் முதற்கே உலகு' என்ற புதுக்குறள் மாதிரி, ஒருசில வார்த்தையை மட்டும் மாற்றி புதிதாக போலியான வரலாற்றை உருவாக்கிட முடியுமே தவிர, ஒருபோதும் உண்மையை இவர்களால் வெளிக்கொணர முடியாது. அந்த முதற்குறளிலுள்ள 'பகவான்' என்ற சொல்லுக்கே பல பஞ்சாயத்து நடந்துக்கிட்டு இருக்கு. ஏனெனில், திருக்குறள் ஒரு சமணநூல். திருவள்ளுவரே சமண மதத்தை சார்ந்தவர் தான். எனவே அந்த குரலில் சொல்லப்பட்ட பகவான் என்பது சமணர்களின் கடவுளான ஆதிநாதரையே குறிப்பதாக பல சான்றுகளை இப்போது திரு.பானுகுமார் போன்ற பல ஆய்வாளர்கள் நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்று சொன்னவருக்கே தாடி ஜடைமுடி கொடுத்த உலகமிது. இவர்களிடமிருந்து, திருவள்ளுவரையும், பா.ரஞ்சித்தையும் தலித் ஆக்க முடியுமே தவிர, கடைசி வரை தமிழராக்கவே முடியாது.

கபாலிடா
பறையர்டா
ரஞ்சித்டா
தலித்டா
திருவள்ளுவர்டா

இப்படியே கத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான், கடைசிவரைக்கும்...

- இரா.ச. இமலாதித்தன்

விஜய் டிவியின் டி.ஆர்.பி.க்கு பின்னாலுள்ள சாதி கோட்டா சிஸ்டம்!

இந்த விஜய் டிவிக்காரன் முன்னாடியெல்லாம் மெரிட்ல சீட் கொடுத்தாய்ங்க; க்வாலிட்டி இருந்துச்சு. ஆனா இப்போ ரெகமன்டேஷன் மூலமா மேனேஜ்மென்ட் கோட்டாவுல சீட் கொடுக்கிறாய்ங்க; அதுனால இப்போயெல்லாம் ஒர்த்தான க்வாலிட்டிவுள்ள அவுட்புட் ஒன்னுமே வர போறதில்ல... விஜய் டிவியோட மேனேஜ்மென்ட் கோட்டோவுல கூட, உள் ஒதுக்கீடுல கம்யூனிட்டி கோட்டா இருக்கு. அதுல ஒன்னு, பிராமின் கோட்டா; ரெண்டாவது கிருஸ்டியன் கோட்டா.

இந்த உள் ஒதுக்கீட்டில் இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா, சூப்பர் சிங்கர் மாதிரியான ரியாலிட்டி ஷோவுல நான்கு விதமான ரோஸ்டர் முறை உண்டு. அதுல ஒரு ஃபாரினர் ( ஈழத்தமிழருக்கு முன்னுரிமை), ஒரு மலையாளி, (கண்டிப்பா) ஒரு தெலுங்கர், போனா போகட்டும்ன்னு கஷ்டபடுற தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர்னு ஆட்களை ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க.

ஏற்கனவே சொன்ன அந்த பிராமின் - கிருஸ்டியன் கோட்டாவுல கூட சில ப்ரொசிஜர்ஸ் இருக்கு. பிராமின்ல (வைஷ்ணவ)ஐயங்கரா இருந்தாலும், கிருஸ்டியன்ல நாடாரா இருந்தாலும் சிறப்பு சலுகை உண்டு. இப்படியான கேஸ்ட் சிஸ்டத்துல தான் விஜய் டிவி செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இதுக்கிடையில, அடிக்கும் ஜால்ரா மற்றும் அட்ஜஸ்ட்மெண்ட்டை பொறுத்து, சில விதிவிலக்குகாக சிலர் உண்டு.

தேவர் பெயரில் போலி சாதி அரசியல்!

'தேவர் யாரு?'ன்னு டெல்டா முழுக்க உள்ள எந்த சாதிக்காரன் கிட்ட கேட்டாலும், அகமுடையாரை மட்டும்தான் எல்லாரும் காமிப்பாங்க. இங்கே தேவர் என்ற பட்டம் அகமுடையாருக்கானது. டெல்டா மட்டுமில்லாது, கோவை - திருப்பூர் - திருச்சி - விருதுநகர் என பல்வேறு பகுதிகளிலும் தேவர் பட்டம் அகமுடையாருக்கு உண்டு. அகமுடையாராகிய எங்களுக்கு, பட்டம் தேவர் - சேர்வை - முதலியார் - உடையார் - பிள்ளை எதுவென்றாலும் சாதி ஒன்று தான்!

பிள்ளை என்கிற பட்டம் அகமுடையாருக்கு இருப்பதால் வெள்ளாளரோடு மண உறவு கொள்வதில்லை; முதலியார் என்ற பட்டம் அகமுடையார்களுக்கு இருப்பதால் செங்குந்தரோடு மண உறவு கொள்வதில்லை; உடையார் என்ற பட்டமிருப்பதால் பார்க்கவ குலத்த்தோடு மண உறவு கொள்வதில்லை. சேர்வை என்ற பட்டம் இருப்பதால், எட்டுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கும் சேர்வை என்ற பட்டம் இருக்கின்ற காரணத்தால் அகமுடையார் அல்லாத எந்த சாதியோடும் மண உறவு கொள்வதில்லை; அது போலவே, தேவர் என்ற பட்டமும் அகமுடையாருக்கு இருப்பதால், பிரான்மலை கள்ளர் - மறவர் போன்ற மற்ற சாதிக்களோடும் மண உறவு செய்ய விரும்பியதில்லை.

இரா.ச. இமலாதித்தன்
பட்டம்: தேவர்
பிரிவு: பதினெட்டு கோட்டைப்பற்று
சாதி: அகமுடையார்

சாதியம் தாண்டி, சாதித்த காமராஜர்!

கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட காமராஜர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல இந்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் இங்கே இல்லாமலே போயிருந்திருக்கும். மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையை, 27000 பள்ளிகளாக தன் ஆட்சிக்காலத்தில் மேம்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை முதன்முதலாக உருவாக்கிய உத்தமர் காமராஜர்.

மேலும், ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டதை ரத்து செய்த சமதர்மவாதி அவர். இந்திய அரசியலில் கிங்மேக்கராக விளங்கிய காமராஜர் காலத்தில் தான் என்.ஐ.டி. போன்ற தேசிய அளவிலான கல்வி நிலையங்களும் தமிழகத்தில் கால் பதித்தன. இது தவிர அவரால் தான் தமிழகத்தின் நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டது. காவிரி, அமராவதி, வைகை, மணிமுத்தாறு, மேட்டூர் போன்ற பல நீர்பாசன திட்டங்களும் காமராஜர் காலத்தில் தான் உருவாகப்பட்டது.

01. பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)

02. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

03. மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
(MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

04. இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)

05. நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

06. கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

07. மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

வெறும் வாய்ச்சொல் வீரராக மேடையில் மட்டும் பேசி கைத்தட்டி வாங்கிக்கொள்ள விரும்பாத கர்மவீரர் காமராஜர் என்ற பச்சைத்தமிழனால் தமிழ்நாட்டிற்கு இவையெல்லாம் அற்பணிக்கப்பட்டவை என்பதை நினைக்கையிலேயே தமிழனாக பெருமையாக இருக்கிறது. படிக்காத மேதை காமராஜர் அவதரித்த நாளான ஜூலை 15ம் தேதியை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவோம்!

காமராஜரை அகமுடையார்கள் ஏன் போற்ற வேண்டும்? என்று கேள்வி கேட்பதை விட, காமராஜரை ஏன் அகமுடையார்கள் புறக்கணிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது. ஏனெனில்,காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான், தென் தமிழகத்தில் அகமுடையாருக்கு அதிக அளவில் தேர்தலில் நிற்க தொகுதிகள் வழங்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் உள்ள அகமுடையார் உள்பட அனைவருமே காமராஜரின் பக்கமே நின்றார்கள். அந்த காலந்தொட்டே, அகமுடையார்களுக்கும் காமராஜருக்கும் ஒருவித இணக்கமான நிலையே இருந்து வந்திருக்கிறது. அதுபோலவே நாடார்களுக்கும் அகமுடையார்களுக்கும் எந்த நேரத்திலும் தனிப்பட்ட பகை வந்தது இல்லை. அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லும் அகமுடையார் சமூகத்திற்கு யாரும் எதிரியில்லை என்பதை உணர்வோம். சிலர் சாதிக்காக காமராஜரை எதிர்க்கலாம். நாம் சாதித்த காமராஜரை ஆதரிப்போம்.

தன் காலத்தில் அரசியல் செய்தவர்களெல்லாம் மைக் பிடித்து பல மணி நேரம் பேசி மக்களின் கைத்தட்டலை மட்டுமே வாங்கிய நேரத்தில், தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை பேசாமல் செயல்படுத்தி காட்டியவர் கிங்மேக்கர் காமராஜர்.இத்தனை வருடங்கள் கழித்த பின்னாலும் கர்மவீரர் காமராஜரை அவரது சாதியினர் அல்லாத மாற்று சாதியினரும் வருடாவருடம் போற்றுக்கின்றனர் என்பதே அவருக்கான அங்கீகாரம். இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும், தமிழக தேர்தல் பரப்புரையில் "மீண்டுமொரு காமராஜர் ஆட்சியை நாங்கள் தருவோம்!" என்று முழுக்கமிடாத கட்சிகளே இருக்க போவதில்லை.

சாதி அடையாளம் கடந்து சாதித்த பெருந்தலைவரின் பிறந்தாள் ஜூலை 15!
பெருந்தமிழருக்கு சக தமிழனாக புகழ் வணக்கம்!

மருதுபாண்டியர்களின் பள்ளிவாசல்!


1780 முதல் 1801ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், நரிக்குடி-முக்குளத்தில் கட்டியெழுப்பிய "ஜமால் அவுலியா" என்ற பள்ளிவாசல்!