Posts

Showing posts from March, 2017

பெருந்தமிழர் வள்ளல் பச்சையப்பருக்கு புகழ் வணக்கம்!

Image
சென்னை பெரியபாளையத்தில் பிறந்து, வேதாரண்யத்தில் மணமுடித்து, தஞ்சாவூரில் குடியேறி, பல ஆன்மீக-கல்வி சேவைகளை செய்து கடைசியாக தன் விருப்பப்படியே திருவையாறில் தன்னுயிரை 40வது வயதிலேயே விண்ணுக்கு கொடுத்து இறைவனடி சேர்ந்த, ஆன்மீக செம்மலும், கல்வி வள்ளலுமாகிய அகமுடையார் குலத்தோன்றலான பச்சையப்ப முதலியாரின் 223வது நினைவுநாள் இன்று.

கோயில்களிலும், மடங்களிலும் நிரந்தர அண்ணதானம் வழங்கியதோடு மட்டுமில்லாமல், பல்வேறு கோவில்களுக்கு திருப்பணி செய்திருக்கிறார். இன்றளவும் ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் அவருடைய பெயரில் தருமங்கள் நடக்கின்றன. காஞ்சிபுரம், சென்னை, சிதம்பரத்தில் இலவச பள்ளிகளை துவங்கினார். தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கபட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்பர் சொத்தில் இருந்தே தொடங்கபட்டது. தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருபணிகளை மேற்கொண்டார். இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகளும், 16 பள்ளிகளும், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் இருக்கின்றன. தஞ்சை அரசருக்கே, ஒரு லட்சம் வராகன் கடன் தருமளவு உயர்ந்தார். தன்னுடைய சொத்து யாவையும் பொதுதர்மத்திற்கே உயில் எழுதி வைத்தார்…

முதுகெலும்பில்லாத ஹிந்தியா!

இம்மண் சார்ந்த பிரச்சனைகளுக்காக யார் போராடினாலும் ஆரம்பத்திலேயே அந்த போரட்டத்தை பல்வேறு வடிவங்களில் நீர்த்து போக செய்வதில் இந்த ஹிந்திய ஆட்சியாளர்கள் ரொம்பவே திறமைச்சாலிகள். இவர்களின் முதல் ஆயுதம், தேசத்துரோகி. இந்த ஒற்றை வார்த்தையை வைத்து, போராளிகளுக்கு எதிராக தேசத்துரோக வழக்காக பதிய வைத்து கைது செய்து சிறையிலும் அடைப்பார்கள். எது தேசத்துரோகம்? பன்னாட்டு கார்ப்ரேட் கம்பெனிகளுக்காக இம்மண்ணின் வளத்தையே சூறையாடி வாரி கொடுப்பது தானே தேசத்துரோகம். அந்த இழிசெயலை எதிர்க்கும், மண்ணின் மைந்தர்கள் எப்படி தேசத்துரோகி ஆக முடியும்?

மதத்தை வைத்து தீவிரவாதி, கட்சியை வைத்து நக்சலைட், மொழியை வைத்து பொறுக்கி, இனத்தை வைத்து ஈழவியாபாரிகள், என இப்படியாக பல அடைமொழிகளை கொடுத்து விட்டு இவர்கள் மட்டும் உத்தமனாகி விடுகிறார்கள். இங்குள்ள அனைவருக்குமே ஏதோவொரு வகையில் ஒரு பின்புலம் இருக்கத்தான் செய்கிறது. அதை தேடிப்பிடித்து அவர்களை தனிநபர் தாக்குதல் நடத்தி உளவியல் ரீதியாக ஒடுக்கும் யுக்தியை இந்த ஹிந்திய ஆட்சியாளர்கள் முறையாக கையாளுகின்றனர். அப்படித்தான், ஹிந்திய கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் நடக்கும…

அரசியலுக்கு லாயக்கற்ற கருணாஸ்!

Image
ஏற்கனவே, 'இரட்டை இலை' சின்னத்தில் நிற்பதற்காகவே, தன்னை அரசியலில் அடையாளப்படுத்திய அமைப்பின் பெயரான 'முக்குலத்தோர் புலிப்படை' என்பதையே வெறும் 'புளிப்படை'யாக மாற்றி சமத்துவ காவலனாக இரட்டை வேடம் போட்ட போதே உடனிருந்தவர்களின் ஆதரவும் குறைந்து போனது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில், முக்குலத்தோர் என்பதே போலியான ஒரு கூட்டமைப்பு; அந்த வார்த்தையால் கள்ளர் - மறவர் என்ற இருகுலத்தோர் மட்டுமே பயன்பெற்று வருகிறார்கள்; இந்த எதார்த்த கள நிலவரங்களையெல்லாம் அகமுடையாரான கருணாஸ் கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை. அதற்கடுத்து, கூவத்தூரில் கூத்தடித்த கோமாளிகளின் தேவைகளுக்காக கண்டதையெல்லாம் 'சேவை' செய்த போதே கொஞ்சம் நஞ்சமிருந்த மானமரியாதையும் போச்சு.

இனிமேல் அந்த லெட்டர்பேடு அமைப்பில் தலைவராக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதே கருணாஸை, தமிழ்நாடு தேவர் பேரவையினர் கடுமையாக போரட்டம் நடத்தி எதிர்த்த போது, அகமுடையார் இனக்குழுவை சார்ந்தவரென்பதால் எவ்விடத்திலும் விட்டுகொடுக்காமல் ஆதரவளித்த எங்களை போன்றவர்களையும், கூவத்தூர் கூத்துகளால் கேவலப்படுத்திய கருணாஸை இம்முறை எதி…

இரு செய்திகளுக்கு பின்னாலுள்ள அரசியல்!

இருகுலத்தோர் அரசியல்:

சின்னத்தை மட்டுமல்ல; கட்சிப்பெயரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. தமிழக அரசியலில் அதிமுக என்ற கட்சி, கள்ளர் அணி; மறவர் அணியென இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த போலியான முக்குலத்து சாதி அரசியலில், எப்போதுமே அகமுடையார் தனி என்ற நிலையும் மீண்டும் தெளிவாகியுள்ளது.

தமிழகத்தில் இத்தனை வருடங்களாக, கள்ளராலும் - மறவராலும் கட்டமைக்கப்பட்ட போலி சாதி கூட்டமைப்பான 'முக்குலத்தோர் அரசியல்' கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகிறது. இத்தனை காலம், மக்கள்தொகைக்கேற்ற உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட அகமுடையார் பேரினம், இனி மெல்ல மெல்ல தன் இருப்பை நிலை நிறுத்துமென நம்பிக்கையும் துளிர்விடுகிறது. மகிழ்ச்சி!

கூத்தாடி அரசியல்:

தமிழரல்லாத ரஜினி, சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கூட இருந்துவிட்டு போகட்டும். காலாவதியான அந்த பட்டத்தைப்பற்றியெல்லாம் கவலையேதுமில்லை. ஆனால், அரசியலில் அவர் செல்லாக்காசாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இலங்கைக்கு போனால் என்ன? போகவிட்டால் என்ன? ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவன அதிபரின் படமான 2.0 வில் நடிப்பதற்காக வ…

ராயல்டி விசயத்தில், ராகங்கள் மட்டுமல்ல; ராஜாவும் புதிது தான்!

Image
எஸ்.பி.பி Vs இளையராஜா என்பது போன்ற இசை சார்ந்த இணையப்போர் ஒருசில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரங்களையெல்லாம் கவனிக்கையில், 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ’இதய கோவில்’ என்ற படத்தில், ”இதயம் ஒரு கோவில்; அதில் உதயம் ஒரு பாடல்” என்ற ஒரு பாடலை ’இசை ஞானி’ இளையராஜாவே எழுதி, இசையமைத்து அவரே பாடியும் இருப்பார். அந்த பாடலிலுள்ள சில வரிகள், தற்போதைய சூழலில் உண்மைக்கு அருகில் இருப்பதாக தோன்றுகிறது.

”ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை”

இது அந்த பாடலிள்ள முதல் சரணத்தில் வருகின்ற வரிகள். இந்த நான்கு வரிகளிலேயே இசையின் எதார்த்தம் அப்படியே பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் என்ற இம்மூவரின் கீர்த்தனைகளையோ அல்லது இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த தமிழிசை மும்மூர்த்திகளான, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர்,…

அரசியலில் ஆன்மிகமும் - அரசாங்கத்தில் ஊழலும்!

Image
# அரசுத்துறை தேர்வுகளில் உள்ள ஊழல்:

டி.என்.பி.எஸ்.சி என்ற தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணைய தேர்வுக்குழுவை நிர்ணயம் செய்ததில் சட்டவிதிமீறல் இருப்பதாக கூறி, அந்த குழுவே ஓரிரு மாதங்களுக்கு முன்பாக கலைக்கப்பட்டது. ஆனால், மத்திய தேர்வுக்குழுவில் உள்ள ஊழலை யார் களையெடுப்பது? ஆர்.ஆர்.பி. என்ற ரயில்வே துறை தேர்விலும், தென்னக ரயில்வே வேலைவாய்ப்பிலும் வடக்கத்தியர்கள் தான் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றதாக அறிவிப்பு வருகிறது. அதுபோலவே மத்திய தபால்துறை தேர்விலும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து தேர்வெழுதியதிலும் கூட வடக்கத்தியர்கள் தான் அதிகளவில் தேர்ச்சிப்பெற்றிருப்பதாக சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்பது? இந்த சதியின் பின்னணியிலுள்ள ஊழலை யார் வெளிக்கொண்டு வருவது? சமுதாய பிரச்சனையை வெட்டவெளிச்சம் போட்டு தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்களெல்லாம் ஊமையாகி போய்விட, ஆட்சி அதிகாரமோ ஊனமாகி போய்விட்டது. :(  ஏமாளிகள் தமிழர்கள் தான்!


 # உத்ரபிரதேச முதல்வர் தொகுதியின் பின்புலம்:

உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கும், நாகப்பட்டினத்திற்கும் ஏதோவொரு வகையில் தொடர்பிருக்கிறது. அவர் தொடர்ச்சியாக ஐந்து…

மதம் எனும் வெறி!

Image
பகுத்தறிவு என்ற கொள்கைக்காக கடவுளே இல்லையென்று யார் பேசினாலும் எதிர்ப்பு மட்டுமே வரும். ஆனால் ஓர் இசுலாமியன் அதே கடவுள் மறுப்பை பேசினால் கொலையே விழும். இதுதான் அமைதி மார்க்கமா? இசுலாமியர்கள் அல்லாதவர்கள் வணங்கும் அனைத்து கடவுளையும் எப்படி வேண்டுமானாலும் அனைவரும் விமர்சிக்கலாம்; அந்த கடவுளெல்லாம் இல்லவே இல்லையென வாய்கிழியவும் பேசலாம்; ஆனால் இதுபோல் பலரது நம்பிக்கைக்கு எதிராக பேசினாலும் கூட பெரும்பான்மையாக உள்ளவர்கள், வாய் உள்பட அனைத்தையும் மூடிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். அதையே ஓர் இசுலாமியன், கடவுள் மறுப்பு கொள்கையை பொதுவெளியில் பேசினால், அவர் சார்ந்த மதவெறியர்களாலேயே வெட்டிக் கொல்லப்படுவார். அதை எதிர்த்து எந்த மாட்டுக்கறி கும்பலோ, தாலியறுக்கும் கழகமோ, பிரியாணி பிரியர்களோ வாய் திறக்க மாட்டார்கள். காரணம், சிறுபான்மை அரசியல்; போலி நடுநிலைவாத அரசியல். த்தூ... இசுலாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பாரூக் அவர்களின் ஆன்மா இளைப்பாறட்டும். பாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு அவர் சார்ந்த அமைப்பு உறுதுணையாக இருக்கட்டும்.

உளவியல் கொலைக்கு உள்ளான தமிழன்!

சேலத்திலுள்ள அரிசிபாளையத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற (ஜெ.என்.யூ) தமிழ் மாணவர், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திலேயே தூக்கிட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். மூன்று முறை முயற்சித்து, நுழைவுத்தேர்வு மூலமாக ஆய்வு மாணவனாக சென்றவரின் உடலே இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது எத்தனை கொடுமையான விசயம். எளிய குடும்பத்தில் பிறந்த போதும் இத்தனை துன்பங்களையெல்லாம் கடந்து டெல்லி சென்றது, இளம் வயதிலேயே இறப்பதற்காகவா?யென அவரை சார்ந்தோரும், அவரை போன்றோரும் கொதித்தெழுவது இயல்பு தான்.
இன்னும் சொல்லப்போனால் பட்டியல் சாதியை சேர்ந்தவரென்பதால் தானே, முத்துக்கிருஷ்ணன் கொல்லப்பட்டிருக்கிறார்; அதற்கான எதிர்வினையாகத்தான் சாலமனின் செருப்பும் இருந்திருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்ட இச்செயலை கண்டிக்கும் யாருமே, இறந்த முத்துக்கிருஷ்ணனின் உயிரை பற்றி கவலை கொள்ளவே இல்லை. இணையதள ஆதரவாளர்களான இவர்களெல்லாம் தாங்கள் தான் ஹிந்தியாவையே ஆட்சி செய்வது போல, என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனசாட்சிப்படி பார்த்தால், மேல் வகுப்பென அறியப்படும் அந்த சிறுபான்மை சாதியவா…

இனக்குழுவின் மூத்தோருக்கு வீர வணக்கம்!

Image
மார்ச் - 13: மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மேதகு இராச.பாஸ்கர் ஐயாவின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்.

மார்ச் - 14: தனித்தமிழர் சேனையின் நிறுவனர் மேதகு க.நகைமுகன் ஐயாவின் முதலாமாண்டு நினைவேந்தல்.மார்ச் - 15: லெனின் கம்யூனிஸ்ட் நிறுவனர் மேதகு கூத்தக்குடி ச.சண்முகம் ஐயாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.


அகமுடையார் பேரினத்தின் போற்றுதலுக்குரிய அடையாளமாய் திகழ்ந்த தமிழுணர்வுமிக்க இம்மூன்று மாபெரும் தலைவர்களையும் ஒரே மாதத்தில் இழந்தோம் என்பது சோக வரலாறாகி போனாலும் கூட, தமிழ் இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக சமுதாய பணியாற்றிய இம்மூத்தோரின் வழித்தடத்திலேயே நாங்களும் பயணிக்கிறோம்.

வீர வணக்கம்!

கமலின் அரசியல்!

Image
தமிழ்நாட்டில் அரசியல் செய்ய ஜெயலலிதாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது. அது, தனக்கு இணையான எதிரிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்வது; மற்ற யாரும், ஜெயலலிதாவை நேரடியாக தாக்கி பேசியோ, அறிக்கை விட்டோ விமர்சனம் செய்தால் கூட அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லாமல் கடந்து விடுவது; வேண்டுமென்றால், தன் கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து, பதிலடி கொடுப்பது; அந்த முறையில், கடைசி வரை ஜெயலலிதா எதிர்த்தது கருணாநிதியை மட்டும் தான்.

இதையெல்லாம் கவனிக்க தெரியாமல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக முதலமைச்சர் பதவியை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியோ, கமல்ஹாசனுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றார். நடப்பதை பார்க்கும் போது, சிவாஜி படத்தில் வரும் "சும்மா இருந்தவனை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டுட்டோம்" என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. என் கணிப்பு சரியாக இருக்குமெனில், ஒருவேளை கமல்ஹாசன் நேரடி அரசியலுக்கு வந்தால், பல பேரின் அரசியல் கனவு சுக்குநூறாகும் அளவுக்கு, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கமல் இருப்பார்.
அன்று, ஜெயலலிதாவிற்காக தான் ப…

அரசியல் கூத்து!

Image
போராளிகளுக்கான அரசியல் எது?

மணிப்பூரிலுள்ள தோபால் தொகுதியில் மொத்தமாக பதிவான 27271 வாக்குகளில், நோட்டாவிற்கு கூட 143 வாக்குகள் பதிவாகிருக்கிறது. ஆனால் இரோம் ஷர்மிளா என்ற பெண் போராளிக்கு வெறும் 90 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தெரியவருவது என்னவெனில், போராளிகளுக்கு மக்களாட்சியும் கை கொடுப்பதில்லை; அம்மண் சார்ந்த மக்களும் தோள் கொடுப்பதில்லை. ஹிந்தியாவில் அரசியல் செய்து வெற்றிப்பெற வேண்டுமென்றால், ஐஸ்வர்யா தனுஷ் போன்ற சிறுபான்மையினரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் தேசியக்கட்சிகளுக்கான வாய்ப்பு:

ஜெயலலிதாவின் மரணத்தால், கருணாநிதியின் உடல்நலக்குறைவால், வைகோ உள்ளிட்ட மநகூவினர் போன்றவர்களின் செயல்பாட்டால், தமிழ்நாட்டு அரசியலும் உத்திரப்பிரதேச அரசியல் போல குழம்பிய குட்டையாக மாறி இருக்கலாம். ஆனால், அந்த குட்டையில் ஹிந்திய மீனவன் என அடையாளப்படும் யாரும் மீன் பிடிக்க முடியாது. ஏனெனில், அரசியலில் மட்டுமல்ல; அனைத்திலுமே தமிழ்நாடு, தனி நாடு தான்! இத்தனை வருட திராவிட அரசியல் தோற்கும் நேரம், அந்த இடத்தை நிரப்ப தமிழ் தேசிய அரசியலே தன்னெழுச்சியாக மேலெழும். இத்தனை ஆண்ட…

சினிமாத்துறையில் திராவிடம்!

Image
சங்கத்தின் பெயரில் மட்டும் தான், தமிழ் இருக்கிறது. வேட்பாளர்களில் விஷால், தெலுங்கன்; பிரகாஷ்ராஜ், கன்னடன்; கெளதம் வாசுதேவ் மேனன், மலையாளி.

தமிழன் ரொம்ப பாவம் :(

இசுலாம் என்பது மொழியின் அடையாளமா?

Image
எப்படி பார்த்தாலும் தாய்மொழி தமிழ்தான்; வந்தேறிய தந்தையின் மொழி தான், உருதுவாகவோ - அரபியாகவோ இருக்க முடியும். உண்மையான வரலாற்றை தெரிந்த எவனும் மதத்தை தூக்கி வைத்து கொண்டாடவே முடியாது. இந்த மாதிரியான அரை கிறுக்குகளுக்கு, ஆப் கீ பார் குரூப் தான் லாயக்கு.

ஓர் அரசியல்வாதி உருவாகின்றான்!

Image
கொஞ்சம் கூட கூச்சம், வெட்கம் இதெல்லாம் இருக்காதா? தன்னெழுச்சியாக இளையோர் கையிலெடுத்து வெற்றிக்கண்ட ஜல்லிக்கட்டு போரட்டத்தை, தன்னுடைய சுயலாபத்திற்காகவும், புகழ் போதைக்காகவும் சுய இன்பம் செய்து கொள்வது போல கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கும்மியடித்து விட்டால் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ஆகிவிட முடியுமா? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போல, 'ஒரு கோடி ரூபாய் தரேன்!' என வாயாலேயே வடை சுட்டுவிட்டால் மக்கள் எல்லாரும் நம்பி விடுவார்களா என்ன? சூப்பர் ஸ்டாரென அடையாளப்படும் ரஜினியையே மக்கள் அனைவரும் தற்போதைய சூழலில் ஏற்று கொண்டுள்ளனரா என்பதே கேள்விக்குறி தான். தமிழ்நாட்டை பொறுத்த வரை மக்கள் ஏற்று கொண்டுவிட்டால், மாட்டு சாணம் கூட (பிடி பிள்ளையார்) கடவுள் தான். வக்கிருந்தால், சென்னைக்காரன் என பில்டப் கொடுக்கும் லாரன்ஸ், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மக்கள் சூப்பர் ஸ்டாரென தன்னை நிரூபிக்கட்டும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மானங்கெட்ட பொழப்பு எதற்கு? த்தூ...

கடல் மேல் கசியும் ஓர் இனத்தின் குருதி!

இரு நாடுகளுக்கான கடல் எல்லையை பிரிக்கும் அளவிற்கான தொலைவே இல்லாத பகுதியில் தான் இலங்கை என்ற குட்டித்தீவு இருக்கின்றது. ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது ஏறத்தாழ 12 நாட்டிக்கல் மைல்; அதாவது 22 கி.மீ. அளவுக்கு அந்த நாட்டின் கடல் எல்லையை வகுத்து கொள்ள முடியும். அப்படி பார்த்தால் ஹிந்தியாவிற்கும், ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள கடற்தொலைவை வைத்து கணக்கிட்டால், தமிழர் பெருங்கடலிலுள்ள சில கடலோர பகுதிகளுக்கு எல்லையே பிரிக்க முடியாது. கோடிக்கரை, முத்துப்பேட்டை பக்கமெல்லாம் உள்ள கடலின் இருபக்க கரையோரங்களுக்கு இடைபட்ட தொலைவு மிகக்குறைவு. அந்த பகுதிகளுக்கெல்லாம் சர்வதேச எல்லையே பிரிக்க முடியாது.

2014ம் ஆண்டில் டிசம்பர் 26ம் தேதி எங்கள் நாகப்பட்டினமே கடலுக்குள் மூழ்கி விட்டதாக பரப்புரை செய்தது ஊடகங்களெல்லாம்; இன்றும் அதே பழைய உயிர்ப்போடு தான் நாகை உள்பட தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளெல்லாம் மீனவர்களின் ஒத்தழைப்போடு இயங்குகிறது. சுனாமியென்ற கோரத்தாண்டவத்தின் சோக சுவடுகளை கடந்த பின்னும், தமிழர்கள் மீதான சிங்கள வல்லாதிக்கத்தின் இனவெறி குறைந்தபாடில்லையென்றே தொடர்ச்சியான மீனவ படுகொலைகள் மூலமாக உணர முடிகிறது. …

இனிய மகளிர்நாள் வாழ்த்துகள்!

பெண்களை ஆண்கள் அடக்கி ஆள்வது போன்ற மாயையை இன்னும் எத்தனை காலத்திற்கு சொல்லிக்கொண்டே இருக்க போகிறார்களென தெரியவில்லை. யார் அந்த ஆண்கள்? என அவர்களுக்கு இன்னும் தெரியவே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பெரிய வட்டம், ஒரு புள்ளியிலிருந்தே தொடங்குவது போல, அவர்களை அடக்கும் ஆண்களும் கூட தங்கள் குடும்பத்தில் தான் இருக்கிறார்களென்ற உண்மையை ஒத்துக்கொள்ள பழகிக்கொள்வது தான் நேர்மையாகவும் இருக்க முடியும். ஆணாதிக்கம் என்ற போர்வைக்குள், ஒட்டுமொத்த ஆண்களையும் இன்னும் தூற்றிக்கொண்டிருக்காமல்ம், தன் வீட்டிலிருந்தே ஆணாதிக்கம் என்ற அடிமைதனத்தை எதிர்க்கும் சக்தியை எல்லாம்வல்ல அந்த பரம்பொருளின் அம்சமான பராசக்தி அவர்களுக்கு இந்நாளிலாவது அளிக்கட்டும்!

இனிய மகளிர்நாள் வாழ்த்துகள்!

தமிழர் கடலில் செத்து மடியும் மீனவ சமூகம்!

Image
இரு நாடுகளுக்கான கடல் எல்லையை பிரிக்கும் அளவிற்கான தொலைவே இல்லாத பகுதியில் தான் இலங்கை என்ற குட்டித்தீவு இருக்கின்றது. ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது ஏறத்தாழ 12 நாட்டிக்கல் மைல்; அதாவது 22 கி.மீ. அளவுக்கு அந்த நாட்டின் கடல் எல்லையை வகுத்து கொள்ள முடியும். அப்படி பார்த்தால் ஹிந்தியாவிற்கும், ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள கடற்தொலைவை வைத்து கணக்கிட்டால், தமிழர் பெருங்கடலிலுள்ள சில கடலோர பகுதிகளுக்கு எல்லையே பிரிக்க முடியாது. கோடிக்கரை, முத்துப்பேட்டை பக்கமெல்லாம் உள்ள கடலின் இருபக்க கரையோரங்களுக்கு இடைபட்ட தொலைவு மிகக்குறைவு. அந்த பகுதிகளுக்கெல்லாம் சர்வதேச எல்லையே பிரிக்க முடியாது.

2014ம் ஆண்டில் டிசம்பர் 26ம் தேதி எங்கள் நாகப்பட்டினமே கடலுக்குள் மூழ்கி விட்டதாக பரப்புரை செய்தது ஊடகங்களெல்லாம்; இன்றும் அதே பழைய உயிர்ப்போடு தான் நாகை உள்பட தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளெல்லாம் மீனவர்களின் ஒத்தழைப்போடு இயங்குகிறது. சுனாமியென்ற கோரத்தாண்டவத்தின் சோக சுவடுகளை கடந்த பின்னும், தமிழர்கள் மீதான சிங்கள வல்லாதிக்கத்தின் இனவெறி குறைந்தபாடில்லையென்றே தொடர்ச்சியான மீனவ படுகொலைகள் மூலமாக உணர முடிகிறது. பெ…