நரிக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரிக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 மார்ச் 2016

'சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த அகமுடையார்!'


முக்குலத்தோர் என்ற பெயரில் நடத்தப்படும் எந்த போராட்டத்தாலும் வெற்றி கிடைத்ததில்லை என்பதே கடந்தகால வரலாறு. இந்த மாதிரியான போரட்டங்களுக்கு பிறகு, புதுப்புது அமைப்புகளும், புதுப்புது தலைவர்களும் தான் உருவெடுப்பார்கள். அதுவும் இப்போதைய சூழல் என்பது தேர்தல் நேரமென்பதால், இந்த மாதிரியான போரட்டங்களால் சிலர் அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். ஏதாவதொரு திராவிட கட்சிகளிடம் கூடிய கூட்டத்தை கணக்கு காட்டி, முக்குலத்தோர் இளைஞர்களெல்லாம் எங்கள் பக்கம். அதனால் இம்முறை உங்களுக்காக தேர்தல் பணியாற்றுகிறோம் என்று கூறி சாதியை ஓட்டு என்ற பெயரில் அடகு வைக்க கூடும்.

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட அகமுடையார் அமைப்புகள் மட்டும் போராட்டம் செய்வதுதான் சரியான நடைமுறை. மாறாக, முக்குலத்தோர் அமைப்புகளை வைத்து போராட்டம் செய்வதால் எந்த பயனும் கிடைக்க போவதில்லை.
ஏனெனில், இதே முக்குலத்தோர் அமைப்புகள் தான், சிவகங்கை சமஸ்தானத்தில் ஆட்சியாளர்கள் பட்டியலுள்ள கல்வெட்டில் மாமன்னர் மருதுபாண்டியர் பெயர்களை இடம்பெற செய்யாமல் விட்ட போதும், மாமன்னர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை திட்டமிட்டு அழித்தொழிக்கும் செயலுக்கு மறைமுகமாக ஆதரவும் தந்து கொண்டிருப்பவர்கள்.

நரிக்குடி பிரச்சனையை முதலில் அங்குள்ள அகமுடையார்களோடு கலந்து பேசி சரி செய்து, மணிமண்டபம் பற்றிய கோரிக்கையை அரசுக்கு நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லாமல், செய்யப்படுகின்ற இந்த மாதிரியான போராட்டங்களால் எந்த பயனுமில்லை என்று நிச்சயமொரு நாள் புரிந்து கொள்ளப்படும் அனைவராலும்.

- இரா.ச. இமலாதித்தன்

19 டிசம்பர் 2015

முக்குளத்தை முக்குலத்தோருக்கு தெரியுமா?


அகமுடையார் முதுகில் சவாரி செய்யும் முக்குலத்து அமைப்பினரே!

இந்த வீடு யாருடைய வீடு?
இங்கு யார் பிறந்தார்கள்?
இந்த வீடு எங்குள்ளது?

இதெல்லாம் தெரியுமா? அக்டோபர் மாதம் மட்டும் அரசியல் செய்யும் உங்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இந்த புண்ணியபூமியில் உங்களது பாவப்பட்ட பாதங்கள் பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

இடம்: நரிக்குடி-முக்குளம்.

இங்குதான் மாமன்னர் மருது பாண்டியர்கள் அவதரித்தனர். அப்படிப்பட்ட பெருமைமிகு இந்த வீட்டை சீரமைக்கவோ, இங்கு மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் கட்டவோ, அவர்கள் பிறப்பெடுத்த இவ்வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூட வக்கில்லை. கேட்டால் 'வாழும் மருது' என அடைமொழியை பெயருக்கு முன்னால் வெட்கமே இல்லாமல் போட்டுகொள்வீர்கள்.

வாழ்க முக்குலம்! ஒழிக முக்குளம்!

- இரா.ச.இமலாதித்தன்

15 நவம்பர் 2015

மருதுபாண்டியர்களை அவமதிக்கும் அரசாங்கம்!







அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசியத்தின் முன்னோடி அமைப்பின் மூலமாக கி.பி.1800 களிலேயே அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த, மருது சகோதரர்களின் வீரத்தை எந்தவொரு தமிழனும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழனின் வீரத்தையும், கொரில்லா போர்முறையும் அன்றைக்கே வெளிக்காட்டி, 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட, முதல் சுதந்திர போராட்ட வீரர்களான 'வெள்ளை மருது - சின்ன மருது' என்ற மருது சகோதர்களின் வெண்கல சிலைகளின் அவலத்தை பாருங்கள். சிவகங்கை அருங்காட்சியகத்தின் வெளியே புல் மண்டி கிடக்கும் இடத்தில் வெண்கல சிலைகளின் இழிநிலையை பார்த்தும் சலனம் ஏதுமின்றி நகர்ந்து சென்றால் நீங்களும், உணர்வுள்ள அக்மார்க் பச்சை தமிழனே!

இதை இத்தனை நாட்களாக கண்டும் காணாமல் ஒன்றுமே செயல்படுத்தாத சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனிக்குமா? வருடந்தோறும் அக்டோபர் 24ம் தேதி மருது சகோதரர்களுக்கு அரசு விழா மட்டும் எடுக்கிறது இந்த அரசாங்கம். ஆனால், அவர்களின் முழு உருவ வெண்கல சிலைகளை இப்படி கேட்பாரின்றி அவமானப்படுத்திருக்கும் இச்செயலை கண்டிக்க கூட ஆளில்லை என்பது தான் வருத்தமான விசயம்.

மேலும், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி அருகிலுள்ள முக்குளம் கிராமத்தில் அவர்கள் வாழ்ந்த அந்த வீட்டை சீர்படுத்தி அங்கேவொரு மணிமண்டபம் கட்டவும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யுமா இந்த அரசாங்கம்?


- இரா.ச.இமலாதித்தன்

27 அக்டோபர் 2015

மருது பாண்டியர் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணி மண்டபம்!

அனைத்து இணையமெங்கும் - இதயமெங்கும் - இவ்வூரெங்கும் - மாமன்னர் மருதுபாண்டியர்களாக தென்படுகின்றனர். தமிழ் தேசியத்தின் முன்னோடிகளை நினைவுபடுத்தும் அனைவருக்கும்,
தமிழ் தேசியத்திருநாள் நல் வாழ்த்துகள்!

 ~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி-முக்குளத்தில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும். அக்டோபர் மாதம் மட்டும் மாலை அணிவித்துவிட்டு போகும் அரசியல்-சாதி கட்சிகள் இதை முன்னெடுக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட விருப்பப்படும் அனைத்து உறவுகளும், கீழே உள்ள கோரிக்கையை காப்பி செய்து, http://www.cmcell.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக முதல்வர் தனிப்பிரிவுக்கு இதை அனுப்பலாம். நாம் அனுப்பும் இந்த கோரிக்கையானது அதிகமானால் மணிமண்டபத்தை அரசங்கமே விரைவாக கட்டி முடிக்க வாய்ப்பு அதிகமுள்ளது.

-------------------------------------------
வணக்கம்!
முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது சகோதரர்களின் நாட்டுப்பற்றையும், தியாகத்தையும் போற்றும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆண்டுதோறும் அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூரில் அரசுவிழா நடைபெற்று வருகிறது. இது தமிழக அரசின் முன்னெடுப்பால் தான் சாத்தியாமானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின / குடியரசு தின உரையில், மாமன்னர் மருதுசகோதரர்களின் சுதந்திர போராட்ட வீரத்தை பறைசாற்றும் வகையில் அவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டி, கூடவே அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஊதியத்தொகையை அதிகரித்து கொடுத்து வரும் தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவிக்க நாங்கள் அனைவருமே கடமைப்பட்டிருக்கின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, உத்ரகாண்ட் நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு. தருண்விஜய் அவர்கள் கூட, ”நாட்டுக்காக உயிர் நீத்த மருது சகோதரர்கள் பற்றிய வரலாற்று செய்தியை நாடு முழுவதுமுள்ள பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்படிப்பட்ட நாடுபோற்றும் சுதந்திர போராட்டவீரகளான மாமன்னர் மருதுசகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி-முக்குளம் என்ற ஊரில் அவர்களது நாட்டுப்பற்றை உலகறிய செய்யும் வகையில் அங்கே ஒரு மணிமண்டபம் கட்டி, அவர்கள் பிறந்த வீட்டை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வருக்கு, ஒட்டுமொத்த இந்திய குடிமக்களின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம். எந்தவிதமான செயற்கரிய கோரிக்கையை கூட செயல்படுத்தும் வல்லமையும், தாயுள்ளமும் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணான நரிக்குடியில் மணிமண்டபத்தை ஏற்படுத்துவார்களென நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
நன்றி.
---------------------------------

20 செப்டம்பர் 2015

நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பதாகை அவமதிப்பு

நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பதாகை அவமதிப்பு செய்யப்பட்டதற்காக, சென்னை, திருவண்ணாமலை-ஆரணி, திருப்பத்தூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை விளாங்குடி, இராமநாதபுரம், சிவகாசி, விருதுநகரென தமிழகமெங்கும் கண்டன போஸ்டர்களும், தன்னெழுச்சியாக நடைப்பெற்ற களப்போரட்டங்களும், அமைப்பு வேறுபாடின்றி பல்வேறு வகையில் எதிர்ப்புகளை பதிவு செய்து களத்தில் நின்ற அகமுடையார் அரண், வீரகுல அமரன் இயக்கம், அகில இந்திய அகமுடையார் மஹா சபை, தமிழக தலைமை அகமுடையார் சங்கம், அகமுடையார் மக்கள் மகாசபை, அனைத்து மாமன்னர் மருதுபாண்டியர் சங்கங்கள் என அனைத்து அகமுடையார் இயக்கங்களுக்கும், புதிய நீதிக்கட்சிக்கும், முகநூலில் உடனுக்குடன் கள நிலவரங்களை பகிர்ந்து மிகப்பெரிய போராட்ட களத்தை ஏற்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றி!