ஏ.ஆர்.ரஹ்மானை பின் தொடரும் ஹாரிஸ் ஜெயராஜ்!

"கெத்து" படத்தில் வரும் 'தேன்காற்று வந்தது' பாடலும், அப்படியே "ஐ" படத்தில் வரும் 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' என்ற பாடலை அச்சு அசலாக வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து காப்பியடித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ட்யூன் மட்டுமில்லாமல் இடையில் வரும் ஆர்கெஸ்ட்ரா இன்ஸ்ட்ருமெண்ட் வரைக்கும் காப்பியடித்திருக்கிறார்.

ரஹ்மானின் ஒரு பாடல் ஹிட்டான உடனேயே அந்த பாடலை பாடிய அதே பாடகர்களை அழைத்து வந்தே, அதே ட்யூனில் அடுத்த ஒருசில மாதங்களில் ஹாரிஸ் ஜெயராஜ் ட்யூன் போட்டு அந்த பாடலை ஹிட்டாகி விடுவார். இதை அவரின் பாடல்களையும், ரஹ்மானின் பாடல்களையும் நன்றாக கவனித்தால் எளிதாக புரிந்து கொள்ளலாம். இன்னொரு பக்கம், ரஹ்மானும் யாரையோ பார்த்து இன்ஸ்பையர் ஆகிதான் ட்யூன் போடுகிறார். ஆனால் ஹாரிஸை போல அப்படியே காப்பியடிக்கவில்லை என்ற புரிதலும் எனக்குண்டு.
ஐ படத்தில் அந்த பாடலை ஹரிசரணையும், ஸ்ரேயாகோஷலையும் பாட வைத்திருப்பார் ரஹ்மான். கெத்து படத்தில் ஹரிசரணையும், ஷாசாதிருப்பதியையும் பாட வைத்திருக்கிறார் ஹாரிஸ். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

சமீபத்தில் ரஹ்மானிடமிருந்து உடனுக்குடன் காப்பியடித்தது, "கடல்" படத்தில் வரும் சக்திஸ்ரீ கோபாலன் பாடிய 'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்' பாடல் தான். அந்த பாடகியையே பாட வைத்து, அதே ட்யூனில், அதே ஆர்கெஸ்ட்ரா அமைப்போடு இன்னொரு பாடலையும் தன்னோட ஹிட் லிஸ்டில் சேர்த்த கொண்ட பெருமைக்குரியவர், ஹாரிஸ் ஜெயராஜ்.
மின்னலே தொடங்கி, 12பி, உன்னாலே உன்னாலே, லேசா லேசா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், சாமுராய், தொட்டி ஜெயா, தாம் தூம், கோ, என்றென்றும் புன்னகை, உள்ளம் கேட்குமே என ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பல படங்களின் பாடலுக்கு நான் பரம ரசிகனாக இருந்தாலும், அவர் காப்பிகேட் செய்வதை ஏற்கவே முடியவில்லை. இதுவும் ஒரு (கலைத்)திருட்டு தான். அவரிடம் இதைப்பற்றி கேட்டால், கமல் மாதிரி நானும் மற்றவர்களிடமிருந்து இன்ஸ்பையர் ஆகினேனே தவிர காப்பியடிக்கவில்லையென சொல்லக்கூடும்.

இசை நம் வாழ்வியலோடு இரண்டற கலந்த முதன்மை கூறாகி விட்டது. அதனால் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள், சொந்தமாக ட்யூன் போட்டால் இன்னும் புதுப்புது இசைவடிவங்கள் நமக்கு கிடைக்கலாம். காலம் எல்லாவற்றையும் மாற்றும்; ஹாரிஸ் ஜெயராஜும் ஒருநாள் மாறுவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

தேசியம் என்பது கொடியில் இருக்கிறதா?!

ஒரு நாட்டின் தேசிய கொடியில் தான், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் தேசியமும் அடங்கிருப்பது போன்ற மாயை மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியா என்பது பலதரப்பட்ட தேசிய இனங்களின் (சமஸ்தானங்களின்) கூட்டாட்சி தத்துவமுடைய ஒரு நாடு. ஆனால் கூட்டாட்சி போலவா இந்தியா செயல்படுகிறது? பாகிஸ்தானில் கடற் எல்லையில் சிக்கினால் அவன் இந்திய மீனவன்; அதுவே இலங்கை எல்லையில் சிக்கினால் தமிழ் மீனவன். இதுதான் இந்திய தேசியத்தின் அளவீடு.

பண்டைய தமிழகத்திலேயே சேர - சோழ - பாண்டிய - பல்லவ என நான்கு பெரிய நாடுகளும், அதற்கு கட்டுப்பட்ட நடுநாடு, சேதிநாடு போன்ற பல சிற்றரசு நாடுகளும் இருந்திருந்தன. ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனி கொடியும் - இலச்சினையும் இருந்தது. அந்த கொடிகளெல்லாம் அந்த நாட்டின் எல்லைக்கும், அதிகாரத்திற்குமான ஓர் அடையாளமாகத்தான் பார்க்கப்பட்டது. இப்போதும் கூட கொடியை அடையாளமாக மட்டுமே பார்த்தாலே போதும்.

ஆனால், இன்றைக்கு எவனோ ஒருவன் இந்திய கொடியை எரித்து, அதை மெனக்கெட்டு போட்டோவும் எடுத்து விளம்பர நோக்கில் சமூகசலைதளங்களில் பகிர்கிறானெனில் அதை நாமும் ஏன் மீண்டும் பகிர்ந்து விளம்பரப்படுத்த வேண்டும்? தமிழனாக ஹிந்திய தேசியத்தின் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் கூட, இந்திய கொடியை எரித்ததை நான் ஆதரிக்கவுமில்லை. ஆனால் ஒரு நாட்டின் மீதான வெறுப்பு சாமானியனுக்கும் ஏற்படுகிறதென்றால், அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்க்கே இருக்கிறது. மோடிக்கள் எல்லாம் அதானிகளையும், சோனியாக்கள் எல்லாம் அம்பானியையும் நண்பர்களாக்கி கொண்டால், நாலாபுறமும் வெறுப்பு உண்டாகி ஹிந்திய தேசியம் என்பது யாரோ ஒருவனால் நாளுக்கு நாள் தினந்தோறும் எரிக்கப்பட்டே தீரும்.

- இரா.ச.இமலாதித்தன்

பழ.கருப்பையா எனும் அரசியல்வாதி!

எம்.எல்.ஏ.வாக தோற்று விட்டேன்; துறைமுக மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எதிர் கருத்து சொல்பவர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிர்கருத்து சொல்பவர்களை ஆள் வைத்து அடிப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. எதிர் கருத்துகளை ஏற்க முடியாத கட்சி, காலப்போக்கில் காணாமல் போகும்.

- பழ.கருப்பையா

பழ.கருப்பையாவின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன். பத்திரிகையாளர் சங்கத்தில் அதிமுக அரசின் தவறையெல்லாம் கிழி கிழியென கிழித்து தொங்க போட்டு கொண்டிருக்கிறார். மது, இலவசம், ஊழல், ஜெயலலிதாவின் மறதி, சென்னை துறைமுக பள்ளிகூடத்து சேர்ந்த பல கோடி மதிப்புள்ள வளாகத்தை அபகரித்த அதிமுக நிர்வாகி, உட்கட்சி ஆட்களின் ஊழல்யென பல விசயங்களை மிகவும் வெளிப்படையாக உண்மையையெல்லாம் போட்டு உடைத்து கொண்டிருக்கிறார்.

கிரேட்!

எல்லா ஊடகங்களும் இன்றைக்கு விவாதப்பொருளாக பழ.கருப்பையாவை வைத்திருப்பதே அவருக்கு கிடைத்த வெற்றிதான்!

அதிமுக முக்குலத்தோர் கட்சியாம்!அப்பறம் ஏன் இன்னமும் ஒரு சீட்டுக்கும் ரெண்டு சீட்டுக்கும் அம்மா தாயேன்னு ஜெயலலிதா கிட்ட பிச்சை எடுக்குறீங்க? நேரா அதிமுகவில் இணைந்துவிட வேண்டியது தானே? தேவையில்லாமல் லெட்டர் பேடு அமைப்பு வச்சிக்கிட்டு நானும் தலைவனென பீற்றி என்ன ஆகிவிட போகிறது? அக்டோபர் மாதம் தவிர மற்ற நாட்களெல்லாம் நீண்ட உறக்கத்தில் தானே இருக்கிறீர்கள்? தேர்தல் நேரத்தில் மட்டும் 'வாழும் வேலுநாச்சியார்' என ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போஸ்டர் அடிச்சு அந்த வீரப்பேரரசி வேலுநாச்சியாரையே இழிவு படுத்துவீர்கள்.

முக்குலத்தோர் கட்சியென அதிமுகவில் இருக்கும் அகமுடையார்களே, முக்குலத்தோரில் எத்தனை அகமுடையாருக்கு எம்.எல்.ஏ. தொகுதிகளை ஜெயலலிதாவும் - சசிகலாவும் கொடுக்கிறார்களென கணக்கு பாருங்கள். அதன் பிறகு தெரியும். அதிமுக முக்குலத்தோர் கட்சியா? இல்லை, அகமுடையார் விரோத கட்சியா? என...

- இரா.ச. இமலாதித்தன்

குடியரசு - குடிக்க வைக்கும் அரசு!

குடிமகன்களையெல்லாம் டாஸ்மாக் வாசலில் காத்திருக்க வைத்து, போதைக்கு அடிமையாக்கிய குடியரசு நாடு இதுவென பெருமை கொண்டு வாழ்த்தி கொள்ளலாம்.

மூன்று மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான உள்ளரசியலை உணர வக்கற்ற சமூகம் தான், குடியரசு நாளுக்கு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆரிய வந்தேறிகளின் குடிகள் ஆளும் ஹிந்திய அரசில், மும்முடியரசுகளை யெல்லாம் இழந்த தமிழனுக்கு ஏது குடியரசு?! வா வழக்கம் போல அடித்து கொள்வோம்...

இனிய குடியரசுநாள் வாழ்த்துகள்!

தமிழ் தேசியவாதிகள் பின்னுள்ள சில குழப்பங்கள்!

நான் தமிழ் தேசியத்தின் மீது தீவிர நம்பிக்கை உள்ளவன். நான் தமிழனென அடையாளப்பட, என் சாதியான அகமுடையார் என்பது தான் முதன்மையாகிறது; ஆனாலும் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருவதால் ஓ.பி.சி. என்ற பிரிவாலும் ஹிந்திய அரசியலால் அடையாளப்படுகிறேன். ஆனால், நான் ஒருபோதும் தமிழல்லாத மற்ற மொழி பேசும் ஓ.பி.சி.யினருக்கு ஆதரவாக பொங்குவதில்லை. ஆனால் தமிழ் தேசியம் பேசிக்கொண்டே ஹிந்திய அரசியலால் எஸ்.சி/எஸ்.டி என அடையாளப்படும் தமிழ் சாதிகளான பள்ளர்களும் - பறையர்களும் பல இடங்களில் தமிழ் தேசியத்தை விட்டு விலகி தடம் மாறுவதாக உணர்கிறேன்.

தமிழ் தேசியம் என மூச்சு தம் கட்டி பேசுன பெரும்பாலான ஆட்கள், தெலுங்கு மாணவனின் தற்கொலைக்காக பக்கம் பக்கமாக பல நாட்கள் இங்கே கண்ணீர் வடித்தார்கள். காரணம் "குறிப்பட்ட ஒரு சாதியை சார்ந்தவர் என்பதால் தான், அந்த தெலுங்கு மாணவனுக்காக தமிழ் தேசிய வாதிகளான இவர்கள் பொங்குகிறார்கள்" என மாற்று கருத்துடையோர் அனைவரும் சொன்னார்கள்; அது உண்மையெனவே இப்போது தோன்றுகிறது. ஏனெனில், விழுப்புரத்தில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல் அனைத்து துவாரங்களையும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கும் போது தான் தோன்றுகிறது; இங்குள்ள தமிழ் தேசியவாதிகளுக்கு, தன் சுயசாதிப்பற்றுக்காக தமிழ் சாதிகளின் ஒற்றுமையை கடந்தும் ஹிந்திய தேசிய அடையாளத்துடனும் தான் பயணிக்க விரும்புகிறார்கள் என...
தங்களை தலித் என சொல்லக்கூடாது என சொல்லிக்கொண்டே தமிழ் தேசியம் பேசும் தமிழ்சாதியினரின் கொள்கை என்பது ஹிந்திய எஸ்சி/எஸ்டி பாசத்தால் குழம்பி போவதாக உணர்கிறேன். ஒரே சமயத்தில் ஹிந்திய தேசியத்திலும் + தமிழ்தேசியத்திலும் பயணித்து மற்ற தமிழ் சாதிகளை குழப்பாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

அகமுடையாராக...

இசைஞானி இளையராஜாவை தமிழ் குடிகளான பறையர்கள், தங்களது சாதியின் அடையாளமாக அடையாளப்படுத்தி பெருமைப்படும் போது வராத கோபம், என் இனக்குழுவான அகமுடையார் உறவுகள் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பிறப்பால் அகமுடையாரென அடையாளப்படுத்தும் போது மட்டும் சிலருக்கு கோபம் வந்து விடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்ல; அவரின் மருமகன் ஜி.வி.பிரகாஷ்குமாரும் அகமுடையாரென பெருமைப்பட்டு கொள்வோம். தவறில்லையே?!

‪#‎

சொந்த காலில் நிற்க அகமுடையாருக்கு திராணி இருக்கிறது. ஆனால், அகமுடையார் முதுகிலேயே இத்தனை நாட்களாக சவாரி செய்தவர்களுக்கு தான் தனியாக நிற்க முடியாமல் நிலை தடுமாறும். அதனால் தான் மூச்சு தம் கட்டி என்னமோ உளறி கொண்டிருக்கிறார்கள். அனைத்து தமிழ் சாதிகளுடன் இணக்கமாக நட்போடு இருக்க விரும்புகிறோம். ஆனால் முக்குலமென சொல்லி இனியும் முதுகில் சுமப்பதை வெறுக்கிறோம்.

‪#‎

இன்னைக்கு தமிழரல்லாத யாராரோ சூப்பர் ஸ்டாரென போட்டி போட்டுக்கொள்கிறார்கள். ஆனால், அன்றைக்கே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராகவும், பெருந் தமிழராகவும் வாழ்ந்து மறைந்தவர், எங்கள் திருமிகு. பி.யூ.சின்னப்பா!

‪#

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென 1919ம் ஆண்டிலேயே, அகமுடையார் குலத்தோன்றலான திருமிகு. த.வே.உமாமகேசுவரன் பிள்ளையால் உருவாக்கப்பட்ட "கரந்தைத் தமிழ்ச்சங்கம்" தீர்மானத்தை நிறைவேற்றியது.

#

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்! - திருவள்ளுவர்

தனக்கு தீமை செய்யும் பரம எதிரியிடம் உடனுக்குடன் கோபப்படாமல், அந்த எதிரியை வெல்வதற்கான சரியான காலம் வரையிலும் காத்திருந்து அக்கோபத்தை மனதினுள் மறைத்து வைத்திருக்கும் தன்மை அறிவுடையாருக்கு உண்டு. இந்த குறளானது, அறிவுடையாரான அகமுடையாருக்கும் பொருந்தும்.

#

அகம்படி - அகம்படியன் - அகம்படியர் - அகம்படியான் - அகம்படியார் - அகம்படையர் - அகம்படையார் - அகமுடியர் - அகமுடியார் - அகமுடையர் - அகமுடையார் என பல்வேறு காலக்கட்டங்களில் அழைக்கப்பட்ட அகமுடையார் பேரினத்தை, முக்குலம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சில இழிபிறவிகள், குழப்பம் விளைவித்து வருகின்றனர். அகமுடையார் ஒற்றுமையை கண்டு வயிற்றெரிச்சலில் உளறும், அந்த நபர்களால் தான் அகமுடையாரின் ஒற்றுமை மென்மேலும் அதிகரித்தும் வருகிறது.

நய வஞ்சகர்களுக்கு, அகமுடையார் பேரினம் சார்பாக நன்றி!


நேதாஜி சிலையும் - அகமுடையாரும்!
மருதுசீமையான சிவகங்கையில் பல எதிர்ப்புகளுக்கும் - இடையூறுகளுக்கும் - அச்சுறுத்தலுக்கும் அசராமல், உலகிலேயே முதன்முறையாக நேதாஜி உயிரோடு இருக்கும் போதே, அவருக்கு சிலை வைத்த பெரும்புகழ் அகமுடையார் குலத்தோன்றல் ஐயா கே.சுந்தராஜன் சேர்வையையே சேரும். இன்று உலகெங்கிலும் ஊருக்கொன்றும் கூட நேதாஜியின் சிலையை திறக்கலாம்; ஆனால் அன்றைய காலச்சூழல் என்பது முற்றிலும் வேறு; அப்படியானதொரு காலவெளியான 1944 யில் இந்திய தேசிய இராணுவம் மணிப்பூரில் இம்பால் வழியாக இந்தியாவில் நுழைந்ததன் வெற்றியைக் குறிப்பதற்காக, நேதாஜியின் சிலை சுதந்திரமடைவதற்கு முன்பாகவே சிவகங்கையில் நிறுவப்பட்டது. 1946யில் நேதாஜி பிறந்தநாளான ஜனவரி 23ம் தேதியன்று அவரது சிலையை கம்பீரத்தோடு திறந்து வைத்தார் கே.சுந்தர்ராஜன் சேர்வை!


நேதாஜி கட்டமைத்த தேசிய இராணுவத்தில் பணியாற்றிய எங்கள் பெரிய தாத்தாவான அ.பக்கிரிசாமித்தேவரின் பிறந்தநாள் எதுவென தெரியாது; ஆனாலும், தமிழ் தேசிய தலைவர் அண்ணன் வே.பிரபாகரனின் வழிகாட்டியான நேதாஜியின் பிறந்தநாளில், வீரமிகு அ.பக்கிரிசாமித்தேவரையும், வீரமிகு கே.சுந்தர்ராஜன் சேர்வையையும் அவர்களது பேரனாக நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி.

தேச தந்தைக்கு புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

#நேதாஜி #சுந்தர்ராஜன்சேர்வை #அகமுடையார்

தைப்பூச திருநாள் நல் வாழ்த்துகள்!

அழகில் மயிலோன்
ஆண்மையில் சேவற்கொடியான்
என்றுமே அவன் வெற்றி வேலன்!

தலைவனாக - அண்ணனாக - நண்பனாக - ஆசானாக என்னுளிலிருந்து என்னை இயக்கும் என் இறைவனவன், எம்பெருமான் திருமுருகன்.
உறவுகள் அனைவருக்கும் தைப்பூச திருநாள் நல் வாழ்த்துகள்!

நேதாஜி ஜெயந்தி வாழ்த்துகள்!

என்னோட பெரிய தாத்தா வீரமிகு. அ.பக்கிரிசாமி தேவரும், நேதாஜி வழிநடத்திய ஐ.என்.ஏ என்ற இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதில் எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் பெருமையே!

(அடைக்கலத்தேவர் வகையறா)

எம் அண்ணன் மேதகு வே.பிரபாகரனின் அரசியல் ஆசானான உலகத் தலைவன் நேதாஜி மட்டும் தான், இந்தியாவின் தேசத்தந்தை என்பதை அனைத்து தரப்பட்ட இளைஞர்களும் ஏற்கும் காலத்தில் தான் இந்தியா என்றொரு நாடு வல்லரசாக முடியும்.

நேதாஜி ஜெயந்தி வாழ்த்துகள்!

அதிமுகவை அகமுடையார்கள் ஆதரிக்கலாமா?

அகமுடையார்கள் ஏன் அதிமுகவை ஆதரிக்க கூடாது என்பதற்கான ஒரு சின்ன உதாரணத்தை இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு தானே, விருப்ப மனுவை வாங்கி தொடங்கி இருக்கிறார் ஜெயலலிதா. இதன் பின்னால், சசிகலாவின் சாதியான கள்ளர்களுக்கே அதிக பட்ச தொகுதிகள் வழங்கப்படும். ஆனால் கள்ளர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த தொகுதிகளெல்லாம் முக்குலத்தோர் வேட்பாளர்கள் என ஊடகங்கள் மூலம் சொல்ல வைப்பார்கள். முக்குலத்தோரில் மூன்றில் இரண்டு பங்கு இருக்கும் அகமுடையாருக்கு, ஒருசில தொகுதிகள் சசிகலாவின் கருணையால் கிடைக்க கூடும். அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளிலும் கள்ளர்களும், மறவர்களும் வேட்பாளர் ஆவார்கள். இது தான் ஜெயலலிதாவின் திராவிட அரசியல். இதுதான் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் முக்குலத்து அரசியல்.

உதாரணமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதிமுகவின் மாவட்ட செயலாளர் பட்டியலை கவனித்து பார்த்தால் ஒன்று புரியும்; சசிகலாவின் கருணையால் எத்தனை கள்ளர்கள் மா.செ. பதவியில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் புரிய வரும். ஓர் அகமுடையாரை மாவட்ட செயலாளராக கூட ஆக்க மனமில்லாத சின்னம்மா சசிகலாவா, எம்.எல்.ஏ. ஆக்க போகிறார்? கள்ளர்கள் சிறுபான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் - அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் கூட, கள்ளரே மா.செ. ஆக நியமிக்கப்பட்டதன் உள்ளரசியல் புரிகிறதா? கள்ளருக்கும் - மறவருக்கும் பதவியை கொடுத்துவிட்டு, அகமுடையாருக்கு அல்வா கொடுத்து கொண்டிருக்கும் அதிமுகவை நிச்சயம் சொரணைவுள்ள அகமுடையார்கள் இந்த தேர்தலில் புறக்கணிப்பார்களென நம்புகிறேன். பார்க்கலாம்...

- இரா.ச.இமலாதித்தன்

என் பார்வையில் இந்த வாரம்!

இன்று, ஐதராபாத் கல்லூரி மாணவர் ரோஹித் வெமுலாவை தற்கொலை செய்ய வைத்த, பண்டாரு தத்தாத்ரேயா போன்ற வந்தேறிகளின் ஆரிய வெறி கருத்துகளை வளரவிட்டால், நாளை தமிழ்நாட்டிலும் பிராமணரில்லாத (சூடு - சொரணை - மானம் - அறிவுள்ள) அனைத்து சாதி மாணவர்களும் தூக்கில் தொங்கும் நிலை தான் ஏற்படும்.

#

தலித் என்று சொல்லக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கிங்க. இன்னொரு பக்கம், இப்போ தந்தி டிவியின் ஆய்த எழுத்து விவாதத்தில் கலந்து கொண்டுள்ள அனைவருமே தலித் என்று தானே சொல்லி கொண்டிருக்கிறார்கள். சிவகாமி - ஹரிஹரன் - ரவிக்குமார் என அனைவருமே மூச்சுக்கு முந்நூறு தடவை தலித் என்றுதான் சொல்லி கொண்டிருக்கிறார்கள். குறைந்த பட்சம் ஊடகங்களுக்காவது கண்டனத்தை தெரியபடுத்துங்கள்.

#

கலிங்கப்பட்டிக்கு பக்கத்து ஊரான குறிஞ்சாக்குளத்தை பற்றி வாயை திறக்காத வைகோ, உலக நாடுகளை பற்றியெல்லாம் தோள் உயர்த்தி பேசிக்கொண்டிருக்கிறார்.தன் பல்லாயிர ஆண்டு வரலாற்றை வடுகர்களால் இழந்து சாலையோரம் தனித்து கிடக்கும், காந்தாரி அம்மனுக்கு கோவில் கட்ட தமிழர்கள் தோள் கொடுப்போம்.

#

ஒருபக்கம் 'தமிழ் தேசியம், தமிழ் இனக்குழுக்களின் ஒற்றுமை' என வாய் கிழிய பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் அடுத்த சாதிக்காரனின் முதுகு மேல மிக எளிதாக சவாரி செய்ய முனைகிறார்கள். இனி, 'அகமுடையார்' பற்றி மட்டும் பேசிட்டு, தனி வழியில போய்டலாம் போல...அரசியலை கைப்பற்றாமல் எதுவுமிங்கே சாத்தியமில்லை!

செய்தி: 01

இன்றைய காலக்கட்டத்தில் நடைபெறும் திருமணங்களில் பைக்கோ - காரோ சீர்வரிசைகளில் முக்கிய இடம் பிடிக்காமல் இருப்பதே இல்லை. மேலும் எளிய தவணை முறையிலும் பைக் - கார் லோன் கிடைத்து விடுவதால் கூட, சர்வ சாதாரணமாக அனைவரது வீட்டிலும் பைக் - கார்களின் எண்ணிக்கை அதிக அளவில் நம்மிடையே புழக்கத்திற்கு வந்து விட்டன. அதனால் தான் சுற்று சூழல் கேடும் அதிகமாகி, அதிக மழை - அதிக வெயில் - அதிக பனியென பருவநிலையும் தலைகீழாக மாறி போனது.

செய்தி: 02

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு விலை சரிவு ஏற்பட்டும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காமல் இருக்க என்ன காரணம்? உதாரணமாக சென்ற காங்கிரஸ் ஆட்சியில் தோராயமாக 130 டாலர்களாக இருந்த விலை, தற்போது வெறும் 30 டாலர்கள் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இப்போதும் வெறும் பைசா கணக்கில் லிட்டருக்கு விலையை குறைப்பதால் பாதிக்கப்படுவது (எங்களை போன்ற) நடுத்தர வர்க்கம் தானே?

மேற்கண்ட இந்த இரண்டு செய்திகளை நாம் கண்டும் காணாமல் சென்று விட்டு, அரசியல் சாக்கடை; சமூகம் மோசமாக போய் விட்டது; அரசியல் வாதிகள் ஊழல் செய்கிறார்களென எளிதாக சொல்லிவிட்டு எளிதாக நகர்ந்து விடுகிறோம். ஆனால் கட்சி தாண்டிய பார்வையோடு இந்த அரசியலை இளைஞர்கள் அணுகாத வரை, குவார்ட்டருக்கும் - பிரியாணிக்கும் ஆசைப்பட்டு வாக்களிக்கும் இயந்திரமாகவே மாறி போவார்கள். இதுவே இனியும் தொடர்ந்தால் நம் அடுத்த தலைமுறை, இலவசங்களுக்காக காத்திருந்து கையேந்தும் அடிமைகளாகி போவதை யாராலும் தடுக்கவே முடியாது.

களத்திற்கு வா! ஒன்று சேர்! போராடு! அரசியல் அதிகாரத்தை கைப்பற்று! நீயே ஆட்சி செய்!

- இரா.ச.இமலாதித்தன்

தடை போட்டாலும் நாகையில் ஜல்லிக்கட்டு!

எங்க நாகப்பட்டினம் மாவட்டம், தண்ணிலாபாடி என்ற என் மச்சான் ஊருல கூட இந்த வருசம் சல்லிக்கட்டு நடத்தி இருக்காங்க. தண்ணிலாபாடியில் அகமுடையார்களும் - படையாட்சிகளும் பெரும்பான்மையாக வாழும் கிராமம். இவர்கள் தவிர பள்ளர்களும் - பறையர்களும் என இந்த நான்கு தமிழ்சாதிகள் மட்டுமே உள்ள அந்த கிராமத்தில், சல்லிக்கட்டுக்காக முறையாக வளர்க்கபடாத 30 முரட்டு காளைகளை ஒரு திடலில் இறக்கி விட்டு இளைஞர்களெல்லாம் அடக்கி வீர விளையாட்டு ஆடியிருக்கிறார்கள்.


இதுவரை எங்களது பகுதியில் இது மாதிரியாக மஞ்சுவிரட்டு நடந்தது கிடையாதென நினைக்கிறேன். ஆனால் PETA போன்ற பீப் அமைப்புகளால் சல்லிக்கட்டே இதுவரை நடக்காத ஊர்களிலும் இம்முறை இவ்விழா நடத்தப்பட்டிருக்கிறது. முறையாக, வாடி வாசல் போன்ற கட்டமைக்கப்பட்ட திடல் எதுவுமில்லாத போதும் தடையை உடைக்க நினைத்திருக்கிறார்கள் என்பது தான் பெருமையான விசயம். தென் தமிழகத்தில் நான்கைந்து பகுதியில் நடைப்பெற்று கொண்டிருந்த சல்லிக்கட்டை, தமிழ்நாடெங்கும் நடைபெற வைத்திருக்கும் சல்லிக்கட்டை எதிர்த்த துரோகிகளுக்கும் - எதிரிகளுக்கும் நன்றி கூற வேண்டியது அவசியமாகிறது.

மேலும், எங்க நாகப்பட்டினத்திலும் சல்லிக்கட்டு நடந்தது என பெருமைப்பட வைத்து, தண்ணிலாபாடியில் மஞ்சுவிரட்டை நடத்துவதற்காக 30 காளைகளை மாரியம்மன் கோவில் திடலில் கொண்டு வர சொல்லி, உள்ளூர் உறவுக்கார இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விழாவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய, முன்னாள் ஊ.ம.தலைவரான அத்தான் திரு. வி.எஸ்.குமார் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

என் பார்வையில் இந்த வாரம்!

இந்த டாஸ்மாக் போராளிகள், ஏற்கனவே ஆளும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகரில் ட்ராபிக் ராமசாமியை வெற்றிப்பெற வைத்து எம்.எல்.ஏ.வாக ஆக்கிவிட்டார்கள். அடுத்து ஐ.ஏ.எஸ் சகாயத்தையும் முதல்வர் ஆக்காமல் ஓய மாட்டார்கள்!

#

கீதை நாயகர்களுக்கு குரான் மீது தான் வெறுப்பு போல. பைபிளை ஆரத்தழுவி அணைத்து கொள்வது எந்த வேதநியாயமென தெரியவில்லை.
சத்தியம் டிவி கூட ஸ்லீப்பர் செல் தான்!

#

நாகப்பட்டினம் அகமுடையார் நலச்சங்கத் தொடக்க விழா!
லலிதா மகால், 20.12.2015.
திரு. பி.வி.ராஜேந்திரன்
திரு. மரு. டி.ராஜா
திரு. ஏ.கே.எம்.காசிநாத தேவர்
திரு. ஏ.ஆர்.வடிவேல் தேவர்
திரு. மரு. எஸ்.தர்மராஜ்
திரு. தி.அரப்பா
திரு. பாலமுருகன் அகமுடையார்

உள்ளிட்ட அகமுடையார் பெருமக்களின் வருகையோடும், பெருமளவிலான பெண்களின் வருகையோடும் ஆயிர கணக்கான உறவினர்களின் மத்தியில் நாகையில் அகமுடையார் விழா சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

#

தஞ்சையை சுற்றி 111 கி.மீ. வரை, சிம்ம ராசி.
இது மனிதர்களுக்கான ராசி அல்ல; மண்ணுக்கான ராசியை பற்றிய பதிவு.
சோழநாட்டு டெல்டாகாரன்!

#

சத்தியம் டிவி கூட இல்லுமினாட்டி வகையறா தான். இளையராஜா கிட்ட கேட்ட மாதிரி ஜெயலலிதா கிட்ட பீப் சாங் பத்தி கேட்க இவிங்களுக்கு வக்கிருக்கா ?

#

பீப் சாங் பற்றிய நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, இளையராஜா என்னதான் பேசிருந்தாலும், அதை விமர்சிக்க யாருக்கும் அறுகதை இல்லை. இந்த விசயத்தில் நான் இளையராஜா பக்கம்.

இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல; சொரூபம், ஜெபம்ன்னு... இனிமேலாவது இளையராஜா கிட்ட காப்பி அடிக்காம, சொந்தமா ட்யூன் போடுங்க. நாங்களும் உங்கள பாராட்ட காத்துக்கிட்டு இருக்கோம்!

#

பங்காளி பங்காளி என கூப்பிட்டதால், என் பெற்றோர் வைத்த பெயரான இமலாதித்தன் என்ற என்னுடைய பெயரையே மறந்து விட்டேன்.
உங்களை விட்டால் எனக்கென்று யாருமில்லை!

#

கண்கள் பணித்தது; இதயம் இனித்தது!
இனி தந்தி டிவி விவாதங்களில் தி.மு.க பங்கேற்கும்.

பொங்கல் வாழ்த்துகள் 2016!

தன்னோட மனைவியோடு உறவு வைத்து கொள்வதா? வேண்டாமா? என்பதை பக்கத்து வீட்டுக்காரன் சொல்வது போன்ற ஒரு சூழல், தமிழரின் நிலை ஆகிபோனது. இன்னும் கொஞ்ச நாளில் பொங்கலுக்கு கூட தடை சொல்லலாம், சல்லிக்கட்டை போல...

இதற்கெல்லாம் ஒரே காரணம், ஹிந்து என்ற மதத்திற்காக ஆதித்தமிழர்களின் ஆன்மீகத்தை மறந்தது தான். நூறு வருட ஹிந்தியன் என்பதற்காக, பல்லாயிர வருட தமிழன் என்ற அடையாளத்தை இழந்தது தான். தமிழருக்கென தனி இன அடையாளங்களை மீட்டெடுக்க இனியும் தவறினால், ஆரிய விழாக்களை மட்டுமே தமிழன் கொண்டாட முடியும்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள், தீபாவளி வாழ்த்துகள், ஹோலி பண்டிகை வாழ்த்துகள் என சொல்லப்பழகி ஏற்கனவே பாதி அடையாளங்களை ஹிந்தியன் - ஹிந்து என இழந்தாகி விட்ட தமிழனுக்கு இந்த பொங்கலும் ஒரு கேடா? என்று காறி துப்பிக்கொண்டிருக்கும் ஆரிய - வடுகர்களுக்கு மத்தியில் தான், இது மாதிரியான தமிழர் விழாக்களை நாம் கொண்டாடி வருகிறோம்.
பிரபஞ்சமும் இயற்கையும் கூடிய முன்னோர்களை நினைத்து சூரியனுக்கு நன்றி சொல்லும் வழிபாட்டு திருநாளான தைப்பொங்கல் வாழ்த்துகள்!
ஒரு பக்கம் ஆடு மாடுகளை குளிக்க வைத்து, அலங்கரித்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கறிக்கடை வாசல்களில் ஆட்டுக்கறி, கோழிக்கறி வாங்க வரிசை கட்டி நிற்கிறார்கள்.

இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

ஜல்லிக்கட்டு தடையும் இல்லுமினாட்டிகளும்!

சல்லிக்கட்டு நடக்கும் ஊர்களுக்கு நேரடியாக சென்று அங்கே வாடி வாசலில் கூடி இருப்பவர்களோடும், அங்குள்ள ஊர் பெரியவர்களோடும், நேரில் கலந்து பேசி ஊக்கம் கொடுத்து கொண்டிருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமானுக்கு நன்றி! வேறெந்த அரசியல் கட்சிகளும் நேரடியாக ஆதரவு தெரிவிக்காத நிலையில், மாடுபிடி வீரர்களையும், சல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களையும் சந்தித்து புது உத்வேகம் தரும் இம்முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறுமென நம்புகிறேன். ஏனெனில், திரு. சீமானின் உணர்ச்சி மிகு பேச்சுக்கு ஓர் அதிர்வு கண்டிப்பாக இருக்கும்.

#

தமிழ் தேசியம் பேசும் பள்ளர் சாதி நண்பர்கள், "ரெட்டி" என சொல்லப்படுகின்ற 'புதிய தமிழகம் கட்சி'யின் தலைவரான மருத்துவர். கிருஷ்ணசாமி பேசிய சல்லிக்கட்டு தடை பற்றிய கருத்தை ஏற்பார்களா? என்பதில் தான், தமிழ் தேசியத்தின் வெற்றி அடங்கிருக்கிறது.

#

ஆண்ட பரம்பரை - ஷத்ரியர் - மீண்டெழும் பாண்டியர் என திமிரி எழுந்து திருப்பி அடிக்கும் வீரத்தமிழர்களின் வீரத்தை சோதிக்கும் வல்லமை PETA என்ற பீப் அமைப்புக்கு இருக்கிறது. ஆனாலும் இந்த விசயத்துல் வீரம் என்ற ஒன்று எந்த தமிழ் சாதிகிட்ட இருக்குன்னு தான் இன்னும் தெரியல.

#

சென்னை - கடலூர் வெள்ளத்திற்கு, தெக்கத்திக்காரன் கூட பதைபதைத்து நிவாரணம் அனுப்பினான். ஆனால், தெக்கத்திக்காரனின் வாழ்வியல் விழாவான சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு அடையாள போராட்டம் நடத்தினானா சென்னைவாசி? ஆதரவு போரட்டம் கூட வேணாம். ஆனால் சல்லிக்கட்டுக்கு எதிர்குரல் அல்லவா கொடுக்குறான். பாரம்பரியம் மட்டுமல்ல, பாசம் கூட கிராமத்தான் கிட்ட தான் இருக்கு.

#

ஒட்டுமொத்த தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்து, களத்தில் நிற்கும் 'வீரகுல அமரன் இயக்கம்' தலைவர் திரு. கி.இரா. முருகன் அகமுடையாருக்கு எம் வாழ்த்துகள்!

#

'கன்னட மராட்டியன்' ரஜினியோட மனைவி 'ஆரிய பார்பன' லதா, இந்த இருவர்களின் மருமகன் தான், 'வந்தேறி வடுகன்' தனுஷ்!
இவர்களுக்கு எப்படி தமிழனின் பாரம்பரிய சல்லிக்கட்டு மேல் பற்று இருக்கும்? தமிழில் பேசினால் மட்டும், தமிழனாகிட முடியாது என்பதற்கு இந்த மாதிரியான கோடாரி காம்புகளும் ஓர் உதாரணம்.

#

உலகிலேயே மிக அதிக அளவிலான மாட்டுக்கறியை உணவுக்காக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தை பெற்றுள்ள நாடான ஹிந்தியாவில் தான், "PETA - தி.க." போன்ற இல்லுமினாட்டிகளின் எடுபிடி பீப் அமைப்புகளும் இருக்கின்றன.

#

சத்குரு ஜக்கி வாசுதேவ், இந்த சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிருப்பது ஆச்சர்யமாக இருந்தாலும் அவரது பேச்சின் ஒவ்வொரு வரியோடும் உடன்பட வேண்டி இருக்கிறது. இதனால் அவரது மேலிடத்திலிருந்து என்ன பாதிப்புக்கு உள்ளாக போகிறாரோ அவர்?!சல்லிக்கட்டை எதிர்க்கும் PETA என்ற பீப் அமைப்புக்கும், அமெரிக்க வேளாண்துறைக்கும், இல்லுமினாட்டிகளுக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா?ன்னு இதன் மூலமாக கூட தெரிஞ்சிக்கலாம்.

#

இல்லுமினாட்டிகளை அழித்தொழித்தால், இவ்வுலகில் போரும், வறுமையும், ஆட்க்கொல்லி நோயும், பொருளாதார வீழ்ச்சியும், கலச்சார சீர்கேடும் கண்டிப்பாக வராது. ஆனால் அவர்களை நாம் நெருங்கவே முடியாது. அதற்கு ஒரு சின்ன உதாரணம், சல்லிக்கட்டுக்கு அவசர அவசரமாக தடை வாங்கிய, அந்த இல்லுமினாட்டி வகையறாவான PETA என்ற அமைப்பும் தான்.

#

PETA என்ற அமைப்பின் தலைமைகம் எது? அவர்களின் நோக்கம் என்ன? உலகெங்கும் கிளைகள் வைத்து உள்ளதன் காரணம் என்ன? அவர்களை வழிநடத்துவது யார்? அந்த அமைப்பின் உறுதுணையோடு செயல்படும் துணை அமைப்புகள் எதெது? உலகின் எங்கேயோ தலைமையகத்தை கொண்டுள்ள அவர்கள் தென்தமிழ்நாட்டில் நடக்கும் சல்லிக்கட்டை தடை கேட்கும் பின்னணி என்ன? என்ற பல கேள்விகளுக்களான பதில்களை தேடிப்பாருங்கள். இல்லுமினாட்டிகளை பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.

#

இந்த தேர்தல்ல ஜெயலிதா ஜெயிக்க முடியுமா?ன்ன்னு விஜயகாந்த் கிட்ட கேள்வி கேட்ட பத்திரிகை காரங்க, "மோடி பொங்கல், மோடி சல்லிக்கட்டு" என பெயர் வைக்க சொன்ன, பொன்.ராதாகிருஷ்ணன் கிட்ட இன்னும் கேள்வி கேட்கலயா?

கோவில்களின் அர்ச்சகராக ஆகமவிதி, பசு வதை தடை, கோவில்களில் ஆடை கட்டுப்பாடு... என்ற அனைத்திலும் பார்பனர்களின் விருப்பம் தான் அரசியல் சட்டமாகி, நீதிமன்ற தீர்ப்பானது. மேலோட்டமாக பார்க்கும் போது, இவையெல்லாம் பெரும்பான்மை ஹிந்துக்களின் பாரம்பரியமாக தெரியும். மேலும் இது போன்ற தீர்ப்புகளில் ஹிந்துக்களின் பாரம்பரியம் காக்கப்பட்டதாக தெரிந்தாலும், உண்மையில் அங்கே வெற்றி பெற்றது ஆரிய பாரம்பரியமே. அதே ஹிந்து என அடையாளப்படும், தமிழர்களின் ஆதிவழிபாட்டு முறைகளில் ஒன்றான, நாட்டார் வழிபாட்டு குலதெய்வ கோவில்களில் பன்நெடும் காலம் காலமாக ஆடு-கோழி பலியிட்டு வந்ததை தடைவிதித்தது கூட அதே ஆரிய பாரம்பரியம் தான் என்பதும் குறிப்பிட தக்க விசயம். மேலும், தமிழர்களுக்கென இருக்கும் ஒவ்வொரு சமகால வரலாற்று பாரம்பரிய கூறுகளை அழித்தொழிப்பது தான் ஹிந்திய நீதிமன்றங்களில் தீர்ப்பாக இனிவரும் காலங்களில் இருக்கும் என்பதற்கு சல்லிக்கட்டும் ஓர் உதாரணம்.

#

ஒட்டுமொத்த தமிழர்களின் விளையாட்டான சல்லிக்கட்டை, முக்குலத்தோரின் வீர விளையாட்டு என பெருமை பேசும் எந்த சாதி அமைப்புக்காவது உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட துணிவிருக்கிறதா? அதற்கான செயல்முறை திட்டம் ஏதாவது இருக்கிறதா? உங்களது திட்டமெல்லாம் வருடத்தில் அக்டோபர் மாதம் பசும்பொன் போவது மட்டும் தானே. அதற்கடுத்து, தேர்தல் சமயத்தில் திராவிட கட்சிக்கு காவடி எடுப்பது. இன்னும் ஒருபடி மேலே சென்று, "வாழும் வேலுநாச்சியாரே!" ன்னு ஜால்ரா போஸ்டர் அடித்து, ஜெயலலிதா காலில் விழுவது; அப்போதும் கூட உங்களது முறுக்கிய மீசையில் மண் ஒட்டுவது உங்களுக்கு தெரிவதில்லை.

#

சல்லிக்கட்டு தடைக்கு எதிராக வந்த தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது? சல்லிக்கட்டை இந்த வருசம் எப்படி நடத்துவது? இனி வரும் வருடங்களிலும் தடை இல்லாமல் சல்லிக்கட்டை நடத்த என்ன மாதிரியான செயல்பாட்டு அணுகுமுறைகளை கையாளுவது? இது மாதிரியான அத்தியாவசிய விசயங்களை பலதரப்பட்ட தமிழ் அமைப்புகளும் போட்டியரசியல் இல்லாமல் ஓரிடத்தில் ஒன்றுகூடி விவாதித்து நிரந்தர தீர்வை எட்ட முன்வர வேண்டும். ஆனால் யார் ஒருங்கிணைப்பது? அவர்கள் எங்களை விட சிறிய அமைப்பு; நாங்கள் அவர்களை விட பழைமையான அமைப்பு; அவர்கள் ஊடக புகழுக்காக செய்கிறார்கள்; இப்படி ஏதாவதொரு காரணத்தை குறையாக சொல்லி தனித்தனி அணியாக பயணிப்பார்கள், கேட்டால் இலக்கு ஒன்றுதான் என கைகளை உயர்த்துவார்கள். த்தூ!

#

இந்த வார ’நீயா நானா’வில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய திரு. சேனாதிபதியுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நச்! ரொம்ப நாளுக்கு பிறகு நீயா நானாவில் ஒரு நல்ல விவாதமாக அமைந்தது.

#

நான் சொல்றது கற்பனையாகவும் தெரியலாம்; உண்மையாகவும் இருக்கலாம். அது அவரவர் பார்வையை பொறுத்தது.

விசயம், இல்லுமினாட்டி மற்றும் சல்லிக்கட்டு பற்றியது தான்.
இயக்குனத் ஷங்கர் ஓர் இல்லுமினாட்டி ஆதரவாளர் என்று வைத்து கொள்வோம். அதனால் தான், "ஐ" என்ற இல்லுமினாட்டி படத்தை பல கோடி செலவில், உலகின் அதிகபட்ச மொழிகளில் மொழிபெயர்த்து அந்த "ஐ" படத்தை வெளியிட்டார்.

இங்கே ஐ என்பது Eye என்ற கண்ணை குறிக்கலாம். அல்லது I For Illuminati என்றும் குறிக்கலாம். இங்கு கண் என்பதுதான் இல்லுமினாட்டிகளின் அடையாள சின்னம்.

அந்த "ஐ" படத்தின் நாயகி 'எமி சாக்சன்' கூட அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இல்லுமினாட்டிகளின் ஆதரவாளராக இருக்கலாம். இந்தியரும் அல்லாத தமிழரும் அல்லாத இந்த எமி ஜாக்சன் தான் முதன்முதலாக சல்லிக்கட்டை தடை செய்ய ட்விட்டரில் வலியுறுத்திய திரை நட்சத்திரம்.
இன்றைக்கு சல்லிக்கட்டுக்கு தடை வாங்கியிருக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "PETA" என்ற இல்லுமினாட்டிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த அமைப்பின் ஆதரவாளர்களில் எமி ஜாக்சனும் ஒருவர்.

அப்படிப்பட்ட இல்லுமினாட்டிகளின் ஆதரவாளரான எமி ஜாக்சன் நடித்த 'தங்கமகன்' என்ற திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷ் தான், இன்றைக்கு சல்லிக்கட்டை முற்றிலுமாக தடை செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
நான் மேலோட்டமாக சொல்லிருக்கும் இந்த விசயம் பலருக்கு புரியுமாயென தெரியவில்லை. ஆனால்,

நான் சொல்றது கற்பனையாகவும் தெரியலாம்; உண்மையாகவும் இருக்கலாம். அது அவரவர் பார்வையை பொறுத்தது.

- இரா.ச.இமலாதித்தன்

அகமுடையார் அரசியல்!

அகமுடையார் சாதியிலுள்ள வாக்காளர்களுக்கு தற்போதைய அரசியல் சூழலை ஆழமாக உணரும் பக்குவம் இருந்தால், நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்க மாட்டார்கள். அதிமுகவை வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

என் ஓட்டு, இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிராகவே இருக்கும். இந்த விசயத்தில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை விட, முதலில் யாரை புறக்கணிக்கணும் என்பதில் ஒரு தெளிவு இருக்கணும்.

அகமுடையார் ஓட்டு அந்நியருக்கும் இல்லை!
அகமுடையார் ஓட்டு அதிமுகவும் இல்லை!

#

முதலியார் - சேர்வை - தேவர் - உடையார் - பிள்ளை - வாணாதிராயர்- மணியக்காரர் - பல்லவராயர் - நாட்டார் - நாயக்கர் - அம்பலம் - தந்துடையார் - அதிகாரி - தேசிகர் உள்ளிட்ட பல பட்டங்களை கொண்ட "அகமுடையார்" தமிழ்க்குடியானது தமிழகமெங்கும் பூர்வகுடிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
ஒரே பட்டம் பல சாதிகளுக்கும் இருப்பதால் தான், இங்குள்ள பல சாதிகளுக்குள் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் சாதி சான்றிதழ் வாயிலாகவும், வரலாற்றின் வாயிலாகவும், பல பட்டங்களை கொண்ட "அகமுடையார்" சாதியானது, ஒரே மரபு வழி வந்தவர்களே என்பது நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று.
(பட்டம் : தேவர், பிரிவு : பதினெட்டு கோட்டைப்பற்று நாடு, சாதி : அகமுடையார்)
அகமுடையார்களாக ஒன்றிணைவோம்!
- இரா.ச.இமலாதித்தன்.

பாண்டியர்கள் - வடுகர்கள்!

பாண்டியர்களின் ஆட்சி அழித்தொழிக்கப்பட்ட பிறகுதான், அந்நியரான வடுகர்களின் ஆட்சி தெற்கில் புதிதாய் உருவெடுத்தது. அதன் பின்னால் தான் பல பாளையங்களும், நிர்வாக கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு நாங்கள் தான் பாண்டியரென தெற்கில் உள்ள அனைத்து சாதிகளும் சொல்ல தொடங்கி, கல்வெட்டு ஆதாரங்களையும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்ட வடுக ஆட்சி அதிகாரத்தின் நீட்சியான, திருமலை நாயக்கருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசுவிழா என ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளதை எதிர்க்காதவன் தமிழனே இல்லை.
பெயருக்கு பின்னால் பாண்டியர் என போட்டுக்கொண்ட அனைவருமே பாண்டியராகி விட முடியாது என்பதை இதுபோன்ற நிகழ்வில் தெரிந்துவிடும். பார்க்கலாம், பாண்டியர் நாங்களென சொல்லிக்கொள்ளும் எத்தனை சாதிகள் இந்த தெலுங்கு நாயக்கருக்கான அரசு விழாவை எதிர்ப்பார்களென!

- இரா.ச.இமலாதித்தன்

ஜல்லிக்கட்டு தடையும்! நீக்கமும்!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைச்சதுல ஒருபக்கம் சந்தோச பட்டாலும், எல்லாருக்கும் நன்றி போஸ்டர் அடிச்சு இம்சை பண்ணுவாங்களே கஷ்டமா இருக்கு.

உண்மை என்னவெனில், இந்த வருடமும் ஜல்லிக்கட்டை தடை செய்திருந்தால் யாரும் ஒன்றுமே செய்யாமல் போஸ்டர் அடித்து அடையாள உண்ணாவிரம் இருந்திருப்பார்கள் அமைப்பு ரீதியாக. மத்திய அரசை எதிர்க்கும் இந்த பலத்தை - கூட்டத்தை அப்படியே மாநில சட்டமன்ற தேர்தலுக்கு கணக்கு காட்டி, திராவிட கட்சிக்கு அடமானம் வைத்திருப்பார்கள். ஆனால், இவர்களையெல்லாம் நம்பிய மாடு பிடி வீரர்களும், மாட்டு உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் ரொம்பபே ஏமாந்து நின்றிருப்பார்கள். ஜல்லிக்கட்டு இந்த தேர்தல் வாக்குறுதியில் கடைசி இடம் தான் பிடிக்கும் போல. அதனால் எதிர்பார்த்தது போல டாஸ்மாக் தான் இந்த வருட வாக்குறுதியில் முதலிடத்தில் இருக்க போகிறது.

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு, எல்லாருமே நாங்க தான் காரணமென மார்தட்டி கொள்கிறார்கள். ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு எதிராக 'ஹிந்திய இல்லுமினாட்டிகள்' உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்காக கூட முன்கூட்டியே மத்தியரசு அனுமதி அளித்திருக்கலாமென சந்தேகம் வருகிறது. தோல்வியென்றால் மத்திய அரசுக்கு கண்டன போஸ்டர் அடித்து போராட்டம் செய்து ஒதுங்கி கொள்வது. வெற்றியென்றால் தங்களுக்கே நன்றி போஸ்டர் அடித்து மார்தட்டி கொள்வது; இதுதான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் நிலைமை.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருந்தால், மீசை முறுக்கி - நெஞ்சு நிமிர்த்தி - குரல் உயர்த்தி பேட்டி கொடுத்துவிட்டு தேர்தல் அரசியலுக்குள் மூழ்கி போயிருப்பார்கள். மற்றபடி இங்குள்ள அரசியல் - சாதி அமைப்புகளால் ஒரு மண்ணும் பிடிங்கிருக்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. அதனால் கொஞ்சம் ஓரமாக போய் போஸ்டர் அடிச்சு விளையாண்டு, தனக்குதானே பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

சர்வதேச வேட்டி திருநாள் வாழ்த்துகள்!
'சர்வதேச வேட்டி தினம்'ன்னு எல்லாரும் வேட்டி கட்டிய போட்டோவை போடுறாங்க. என் வாழ்வில் எனக்கு விவரம் தெரிந்து இன்று வரையிலும், வேட்டி சட்டைன்னா அது எங்க அப்பா (இரா.சம்பந்த தேவர்) மட்டும் தான் ஞாபகத்துக்கு வருவாங்க. எங்க அப்பா தன்னோட 17 வயசுல இருந்து இதே மாதிரியான வேட்டி சட்டையில தான் இன்னைக்கு வரைக்கும் இருக்காங்க.
அனைவருக்கும் சர்வதேச வேட்டி திருநாள் வாழ்த்துகள்!

இல்லுமினாட்டிகள் யார்?

இல்லுமினாட்டி யாரென்று சமீப காலமாக பலரும் கேட்க தொடங்கி இருக்கின்றார்கள்.

உலகெங்கும் ஆதித்தமிழனின் காலடி படாத நாடுகளே இல்லை. அப்படி ஆதிகுடிகளின் பாரம்பரியம் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு வகையில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிறது. அந்த கலாச்சாரத்தை அடியோடு இல்லாதொழிப்பது தான் இல்லுமினாட்டிகளின் நோக்கம். மேலும், வளர்ச்சியடைந்த மனித நாகரீகத்தை ஒரே புள்ளியில் இணைத்து அவர்களின் பண்பாட்டு கூறுகளை அழித்து அடையாளமற்றவர்களாக மாற்றுவதும் கூட அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

பொதுவாக இல்லுமினாட்டி என்பவர்கள் பெரும்பாலும் யூதர்களென அடையாளப்படுத்த பட்டாலும், அந்த இல்லுமினாட்டிகளின் ஏஜெண்ட்களாக ஒவ்வொரு நாட்டிலும் ஒரு கும்பல் உருவாகி கொண்டே இருக்கின்றது. அப்படியாக நம் நாட்டில் ஆரிய வருகைக்கு பிறகு தான் இல்லுமினாட்டிகள் பலம் பெற்றனர் என்பதை நாம் தெளிவுபெற முடியும்.

இப்போது கூட ஒன்றை உற்று கவனித்தால் இல்லுமினாட்டிகளின் கூட்டத்தை எளிதாக அடையாளம் காண முடியும். நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவதல் என்ற ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் எதிர்க்கும் அனைவருமே இல்லுமினாட்டிகளின் ஏஜெண்ட்களே. இந்த இழிபிறவிகள் ஏன் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, சிந்துசமவெளி நாகரிகத்தின் நீட்சியாக இன்றும் அதே மரபணுவோடு உயிர்ப்போடு இருக்கும் நம் மாடுகளில் கலப்பினத்தை உருவாக்க முடியவில்லை என்ற வெறிதான் முழுமுதற்காரணம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றுவிக்கப்பட்ட ஜல்லிக்கட்டானது ஒரு குறிப்பிட்ட சாதியின் விளையாட்டு அல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளம். எனவே இல்லுமினாட்டிகளுக்கு எதிராக தமிழர்கள் அனைவரும் ஓரணியில் நின்று, நம் பாரம்பரியத்தை காப்போம். சட்டம் தடுக்காத வகையில், ஜல்லிக்கட்டை நாமே நடத்த வழிவகை செய்வோம்.

- இரா.ச.இமலாதித்தன்

அகமுடையார் யாரென அளவீடு செய்ய நீங்கள் யார்?

அகமுடையார், அகம்படியார், அகம்படியர், அகம்படி, அகம்படை, அகம்படையினர், என எந்த பதத்தில் அழைக்கப்பட்டாலும் அது ஒரே சாதியைத்தான் குறிக்கும். ஆனால், முக்குலத்தோர் என சொல்லிக்கொள்ளும் சிலர், தங்களது தனிப்பட்ட சாதியின் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ளாமல், அகமுடையார் பற்றிய பொய்யான வரலாற்று தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் அகமுடையார் வரலாற்றை சீர்குலைத்து, அகமுடையார் சாதிக்குள் பிரிவினையை விதைக்க முற்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அகமுடையார் பற்றிய வரலாற்றை அகமுடையார் சாதியை சார்ந்த நாங்களே மீட்டெடுத்து கொள்கிறோம். தயவு செய்து, சாதியால் அகமுடையாராக இல்லாத நபர்கள், தவறான தகவல்களை கொடுத்து, குழப்பம் விளைவிக்க வேண்டாம். ஏனெனில் உங்களது வரலாறையே இன்னும் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாக நிறுவ முடியாமல் இருக்கின்றீர்கள். அதனால் உங்கள் வரலாற்றை முதலில் முழுமைப்படுத்தி, நடுநிலையாளர்களான மாற்று சாதியை சார்ந்த வரலாற்று ஆர்வலர்களும் உங்களது வரலாற்றை ஏற்கட்டும். அதன் பின்னால் அகமுடையார் வரலாற்றுக்குள் நீங்கள் மூக்கை நுழைக்கலாம்.

அகமுடையார்களாகிய நாங்கள், எங்களது வரலாற்றை (அது ஆண்ட பரம்பரையோ, அடிமை பரம்பரையோ) ஆதாரத்தோடு நிரூபணம் செய்ய தனித்தனிக் குழுவாக முயன்று வருகிறோம். அதுவரையிலும், உங்களது வரலாற்றை ஓரளவுக்காகவது உண்மையான தரவுகளோடு நிரூபிக்க முயற்சி எடுங்கள். வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! - 2016

உணவு, உடை, கலாச்சாரம், மொழியென எல்லாவற்றுள்ளும் ஆங்கிலம் கலந்துவிட்ட பின்னால், தமிழ் மாதங்களை சுப துக்க நிகழ்வில் மட்டும் பயன்படுத்தி கொண்டு, நாட்காட்டியில் கூட ஆங்கில வருடத்தின் மாதங்களை பின்பற்றும் கட்டாயத்திற்கு ஆளான அனைவருக்கும், இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!