பைக்ல பின்னாடி பயணிக்கிறவங்களும் ஹெல்மெட் போடணும்ன்னு சட்டம் போடுறதுக்கு
முன்னாடி, தமிழ்நாடெங்கும் குண்டும் குழியுமாக உள்ள சாலையை ஒழுங்க
போடணும். அதுக்கு முன்னாடி குடியும் குடித்தனமாக சாலையோர டாஸ்மாக் வாசலில்
சரக்கு அடிச்சிட்டு எது ப்ரேக்? எது ஆக்சிலேட்டர்?ன்னு தெரியாம வண்டிய ஓட்ட
வக்கிறவனை ஊக்கப்படுத்தும் டாஸ்மாக்கை இழுத்து மூடணும். அதையெல்லாம் செய்த
பிறகு அரசாங்க சம்பளம் வாங்கியும், நூறு ரூபா இருக்கா? இருநூறு ரூபா
இருக்கா?ன்னு காக்கி உடையில் பிச்சையெடுக்கும் கயவர்களை கண்டிக்கணும்.
அதுக்கெல்லாம் வக்கில்லாமல் சாலை விபத்தை தடுக்கிறோம்ன்னு குடிமக்கள் மேல
நீங்க அக்கறை வைக்கிற உங்க புத்தியை த்தூ ன்னு துப்பத்தான் தோணுது. தேர்தல்
நிதிக்கு, எந்த ஹெல்மெட் கம்பெனி காரன் சிக்கினான்னு தெரியல.
விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
18 ஜூன் 2015
26 ஜூன் 2014
அரசு மருத்துவமனையில் ஒரு நாள்!
நேற்று
முழுவதும் நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் தான் என் பொழுது
கழிந்தது. என் மச்சானுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதால்,
மருத்துவமனையிலேயே அண்ணன் தம்பி மாமன் மச்சான்களோடு அஞ்சு ஆறு பேரா
சுத்திக்கிட்டு இருந்தோம். ஒரு பெண் தீக்குளிப்பு, ஒரு இளைஞன் பைக்
விபத்து, ஒரு நடுத்தரவயதுள்ளவரின் வெட்டுக்குத்து கேஸ் என மூன்று சம்பங்களை
மருத்துவமனை வளாகத்துக்குள் பார்க்க முடிந்தது.
அந்த பெண்ணின் தீக்குளிப்புக்கான காரணம் தெரியவில்லை. சொந்த பந்தமெல்லாம் சேர்ந்து பொம்பளய்ங்களோட அழுகுரலை கேட்கமே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.
பைக் விபத்தில் இறந்தவரின் வயது 30க்குள் தான் இருக்கும். பொலிரோ ஜீப் மோதி ஸ்பாட் அவுட். அண்ணன் தம்பி நண்பர்கள் அப்பா அம்மான்னு எல்லாரும் இறந்த இளைஞனை பற்றி சொல்லி அழும் போது மனசே உடைஞ்சிருச்சு. நண்பர்கள் யார் யாருக்கோ போன் போட்டு "என் தம்பி என்னைய விட்டு போய்ட்டான். என் தம்பி செத்துட்டான்"னு சொல்லி சொல்லி அழும் அண்ணனின் குரலை கேட்டும் ஒவ்வொருத்தனுக்கும் கண்ணில் கண்ணீர் வந்தே தீரும்.
மூனாவது வந்த வெட்டுகுத்து கேஸ்ல, கடப்பாறையால முகத்துல குத்தி இருக்காய்ங்க. அந்த நடுத்தர வயதுள்ளவர் கொஞ்சம் குடிபோதையில் இருந்ததால் படுகாயம் அடைந்திருந்தார். கையில் அரிவாள் வெட்டு, நெத்தியில் கடப்பாறை குத்துயென மிக மோசமான நிலையில் அட்மிட் செய்யப்பட்டார்.
தீக்குளிப்பை தவிர மற்ற இரண்டு சம்பவமும் மது போதையில் வந்தது தான். சாலையோரமெல்லாம் டார்கெட் வைத்து டாஸ்மாக்கை திறக்கும் இந்த அரசாங்கம் பாவத்தை மட்டுமே சம்பாரித்து கொண்டிருக்கின்றது. தமிழன் தினம் தினம் குடிபோதையில் மரணித்து கொண்டிருக்கின்றான்.
ஒரு மணிநேரம் கழித்து என் மச்சான்கள் மூவரும் வா மார்சரி போய் அந்த ரெண்டு பாடியையும் பார்த்துட்டு வருவோம்ன்னு கட்டாயபடுத்தி என்னை பிணவறைக்கு அழைச்சிட்டு போனாய்ங்க. தீக்குளித்த பெண்ணை கண்ணாடி பாக்ஸ்ல வைத்திருந்தனர். ஆக்ஸிடண்ட் ஆனவரை அப்படியே தரையில் போட்டு வைத்திருந்தனர். பிணவறை பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னலோரம் உறவினர்கள் எல்லாம் அவனது உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுதவாறு நின்று கொண்டிருந்தனர். அந்த இளைஞனை பெத்த தகப்பன், ஒரு கையில் அந்த இளைஞனின் நண்பனனையும், இன்னொரு கையில் மூத்த மகனையும் இறுக பிடித்து மெதுவாக அந்த பிணவறையை விட்டு தூர அழைத்து வந்தார். அதுவரை அவர் அழவில்லை. மற்ற இருவரும் தான் விடாமல் அழுது கொண்டிருந்தனர். பிணவறையை விட்டு கொஞ்ச தூரம் போனதும் மூனு பேருமே ஒப்பாரி வைத்து அழுததை பார்க்கும் போது என் மனசு வலிக்கிற மாதிரி இருந்துச்சு. இறப்பின் வலியும், இழப்பின் வலியும் என்னால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.
அநாதை போல அவனது உடல் அந்த பிணவறையில் ஜன்னலோரம் கிடந்த காட்சியை பார்த்து விட்டு. "மனுசனோட வாழ்க்கை இவ்வளவு தான்!" என்று, முரட்டுத்தனமான என் மச்சான்களே என்கிட்ட சொன்னாய்ங்க. நாலு பேருமே கணத்த இதயத்துடன் வெளியேறினோம் பிணவறையை விட்டு!
- இரா.ச.இமலாதித்தன்

10 செப்டம்பர் 2009
உயிரின் விலை ஐந்து லட்சம்!
நான் பனிரெண்டாம் வகுப்பை மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்து முடித்ததும், என்ன படிப்பது? எங்கு சேருவது? என்று எத்தனித்து நிற்கும் நேரம் பார்த்து,எங்களது நாகை வி.டி.பி கல்லூரியில் அறிமுகமான தகவல் தொழிற்நுட்பம் பிரிவில் அனைவருக்கும் இடம் கிடைக்க, என்னை போல் பலரும் நேரிடையாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தோம்.
நாங்கள் எங்களது கல்லூரி வாழ்க்கையைஇரண்டு ஆண்டுகளே கழித்தோம்.என்னோடு பல மாணவர்கள் பயின்றாலும் சரவணன் குறிப்பிடத்தக்கவன்.அவன் மிகவும் அமைதியானவன்.சரவணனுக்கு ரொம்ப பெருந்தன்மையான மனது.எப்போதும் எந்தவித ஆர்ப்பாட்டமில்லாமல் கல்லூரி வாழக்கையை என்னோடு கடந்து சென்றவன்.நான் டிப்ளோமாவோடு முடித்துகொண்டாலும் , சரவணன் பொறியியல் படிப்பை முடித்து,இரண்டு ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியனாக பணியாற்றி வருகிறான்.
அவன் என்னோடு தொழிற்நுட்ப கல்வி பயிலும் நாட்களில், அதிகநெருக்கம் இல்லாத போதும் இடையிடையே வழிபயனங்களில் சந்தித்து உரையாடிய அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இன்னுமும் என் நினைவில் நிற்கிறது.
சரவணனுக்கு ஒரு கல்லூரியில் ஆசிரியர் பதவி கிடைத்த பின்பும் கூட
வழக்கம் போல் அவனது அண்ணன் நடத்துனராக பணி புரியும் அந்தவொரு தனியார் பேருந்திலேயே பயணித்து வருவது வழக்கம்.அந்த பேருந்தில் அவனுக்கு டிக்கெட் கிடையாதென்பதால்,வருவதும் போவதும் அந்த பேருந்தில்தான். அவன் மீது எல்லோரும் பாசம் வைத்திருந்தாலும்,ஒரு படி மேலாகவே சரவணனின் அக்கா பாசம் வைத்திருந்து படிக்க வைத்தார்.கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தம்பியை கூடவே தங்கவும் வைத்துக்கொண்டார்.
அன்று வழக்கம் போல் பேருந்து நிறுத்தத்தில், அந்த பேருந்துக்காக காத்திருந்தும் பேருந்து இவனது நிறுத்தத்தில் நிற்காமலே சென்று விட்டது.சரியென்று அக்கா வீட்டிற்க்கு சென்று அத்தானின் பைக் ஐ எடுத்து கொண்டு ,கல்லூரிக்கு சென்றுவிட்டான்.மாலை அன்று வழக்கத்திற்கு மாறாக அனைத்து சக ஆசிரியர்களிடமும் நலவிசாரிப்புகளுடன், என்றைக்கும் இல்லாமல் மிகவும் முக மலர்ச்சியுடன் காணப்பட்டான்.எப்போது பைக் ஐ சரவணன் எடுத்து வந்தாலும், சக தோழன் சக ஆசிரியருடன் சேர்ந்து மூவருமாக பயணிப்பதே வழக்கம்.ஆனால் அன்று அவனுக்கு பல தடங்கள் ஏற்பட்டு மூவர் சேர்ந்து பயணிக்காமல்,இருவர் மட்டுமே பயணிக்க தொடங்கினர்.வளைவில் கடக்கும் போது தினமும் வந்து போகும் பேருந்துக்காகவே வழிவிட ஒதுங்கி பைக் ஐ திருப்பும் போது பள்ளத்தில் விட்டு,சருக்கியவாறே இருவரும் கிழே விழுந்தனர்.இருவருக்கும் காயம் அதிகம் இல்லாமல் இருந்தும்,பின்புறம் வந்த பைக் மோதியதில் சரவணின் இதயம் வெடித்து,ரத்தகுலாய்கள் தெறித்து மூளையும் செயலந்துவிட்டதாக மருத்தவறிக்கையில் தகவல் கூறப்பட்டது. உயிர் பிரிந்தது கூட அறியமுடியாமல் மயக்கநிலையில் தான் சரவணன் உள்ளான் என எண்ணி அலைபேசி மூலமாக தகவலை அளிக்க முற்ப்பட்டார் உடன் வந்த சக ஆசிரியர்.அதே நேரத்தில், அங்கே வந்த காவல்துறையின் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.பின்புறம் வந்து மோதியவனையும் கைது சென்றனர்.
இறுதிசடங்குக்கான அந்த இரு தினங்களும் கல்லூரி மாணவர்கள்,கல்லூரி ஆசிரியர்கள்,முதல்வர் உட்பட ஆயிரகணக்கான மாணவர்களின் கூட்டம் அலைமோத சரவணனின் ஊரே ஸ்தம்பித்து போனது.சரவணனை காதலித்து வந்த பெண்ணின் கண்ணீரும்,அப்பா,அண்ணனின் அலறல் சத்தத்திலும் ஊரே துக்கத்தில் மிதந்தது.
"இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" என்ற பாடலுக்கினங்க எல்லோரும் சரவணனின் புகழ் பேசி கண்கலங்கி நின்றனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் சரவணனின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் தர முன்வந்துள்ளது. எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும், அவனின் காதலிக்கும், பெற்றோருக்கும், அண்ணனுக்கும், அக்காவிற்கும் அவனுக்கு இணையாக யார் வரமுடியும்?
சரவணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்!
- இரா.ச.இமலாதித்தன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)