பாம்பாட்டி சித்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாம்பாட்டி சித்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 டிசம்பர் 2017

பாம்பாட்டியாரின் புரட்சி வரிகள்!

பொய் மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி
ஆடாய் பாம்பே! (09)
நாறும் மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினாலும் அதன் நாற்றம் போமோ?
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே! (65)
காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ?
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையில் நின்று ஆடாய் பாம்பே. (88)
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ?
அஞ்ஞானம் போகாது மூடர்க்கு என்று ஆடாய்பாம்பே! (92)
சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல
தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம்
விதவிதமான தான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே!
(98)
பூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ?
பூமிவலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
அடையலாமென்று துணிந்து ஆடாய் பாம்பே! (100)
- பாம்பாட்டியார்
(எளிய தமிழில் அமைந்துள்ள இப்பாடல்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டோருக்கு நன்றி!)

பாம்பாட்டியார் குருபூசை!



நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள திருக்கடவூர் மயானத்தில் அமைந்துள்ள பாம்பாட்டி சித்தர் பீடத்தில், வருகின்ற திசம்பர் 4ம் தேதி (கார்த்திகை 18ம் தேதி) திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ள பாம்பாட்டியார் குருபூஜையில் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்! வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
சார்பாக,

06 அக்டோபர் 2017

டெங்கு - சித்த மருத்தமே தீர்வு

டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள, ஆங்கில மருத்துவம் உச்சத்தில் இருக்கும் இந்நாளிலும் கூட வேற வழியே இல்லாமல், நிலவேம்பு கசாயம் குடிக்க சொல்லி அரசாங்கமே ஊரெங்கும் பரப்புரை செய்கிறது. சித்தர்களின் மருத்துவம், வலியோருக்கு மட்டுமில்லாது எளியோருக்கும் மகத்துவம் தந்து கொண்டிருக்கிறது.
பாம்பாட்டி சித்தர் பீடம் - திருக்கடவூர் மயானம், நாகை சார்பாக புண்ணிய ஆத்மாக்களுக்கு நன்றி!