ஆணவ கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆணவ கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 டிசம்பர் 2017

சட்டம் ஒரு சார்பானது!

"பொம்பள புள்ளைகள ஆசையாசையா பெத்தெடுத்து வளர்த்தவனெல்லாம், இனிமே பேசாம எவன் கூட வேணும்னாலும் கூட்டி கொடுத்துட்டு போய்டுங்க!"ன்னு இதன் மூலம் புரிஞ்சிக்கலாமா?
இப்படித்தான் பாமரனின் கேள்விகளும் இருக்கும். நான் அப்படியல்ல; ஒரு கொலைக்கு எதிர்வினையாக ஆறு பேரையல்ல, ஆயிரம் பேரை கூட கொலை செய்யலாமென்று நீதிமன்றம் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களில் நானும் ஒருவன். காலம் முழுக்க பொய்யையே முதலீடாக்கி வாதாடிய வக்கீல் திடீரென கணம் நீதிபதியாகும் உயரிய நடைமுறை பற்றி எம்.ஆர்.ராதா அன்று சொன்ன வார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும், இவ்வேளையில் நினைவுக்கு வருவது 'கடுப்பேத்துறார் மை லார்ட்' என்ற வார்த்தைகள் மட்டும் தான்!
(இதுபோன்ற எக்கசக்கமான காமெடி வார்த்தைகள் கொண்ட பல மீம்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதற்கான காரணமே கீழே படத்திலுள்ள இருவரின் மோதல்களால் தான்)

14 மார்ச் 2016

காதல் திருமணங்களுக்கு யார் காரணம்?

வெவ்வேறு சாதிகளை சேர்ந்த ஆண் பெண் இருவருக்குள் ஏற்படும் காதல் திருமணங்களுக்கு, டீ சர்ட் ஜீன்ஸ் பேண்ட்டோ - செல்போனோ - சாதிக்கட்சி அமைப்புகளோ காரணமில்லை. அப்பெண்ணை வளர்க்கும் விதமும், அந்த பெண்ணின் உடன்பிறந்த ஆண்கள் அப்பெண்ணிடம் அடக்குமுறையோடு பழகும் விதமும், பெற்றவர்கள் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளும், தன் குடும்ப சூழ்நிலையை பற்றி அந்த பெண்ணோடு வெளிப்படையாக பேசி புரிய வைக்காத ஒட்டுமொத்த பெண் வீட்டார்களே காரணம்; காதல் திருமணங்களுக்கு!

ஒரு பெண்ணோட கற்பில் தான், தங்களுடைய குலப்பெருமை காக்கப்படுகிறதென நினைத்தால், முதலில் அந்த பெண்ணை மதியுங்கள்; அந்த பெண்ணுக்கான அடிப்படை உரிமையை கட்டுப்படுத்தாதீர்கள்; அந்த பெண்ணின் சின்னசின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்; மனம் விட்டு அந்த பெண்ணோடு பேசுங்கள்; வெளியுலக நடப்புகளை வெளிப்படையாக சொல்லி புரிய வையுங்கள்; அந்த பெண்ணுக்கு தேவையான பணத்தை கொடுத்து அனுப்புங்கள்; அந்த பெண்ணுக்கு பிடித்த ஒருசில விசயங்களுக்காவது தடை சொல்லாதிருங்கள்;சினிமா, பார்க், பீச் என மாதம் ஒருமுறை அழைத்து செல்லுங்கள்; ஐஸ் க்ரீம், சாக்லெட் என தாராளமாக வாங்கி கொடுங்கள்.

கண்டிப்பாக உங்கள் வீட்டு பெண், யாரோ பெயர் தெரியாத ஒருவனோடு காதலிக்கிறேன் என்ற பெயரில் உங்களது குடும்ப கெளரவத்தை சீர்குலைத்து ஓடிப்போக மாட்டாள். இதுவரை இப்படி இல்லாவிட்டாலும், இனிமேலாவது மேலே சொல்லிருக்கும் விசயங்களை நடைமுறைப்படுத்தி பாருங்கள். நல்லதே நடக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்