முருகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூன் 2014

வைகாசி விசாக திருநாள் வாழ்த்து!

தொல்காப்பியம் உள்பட ஆதிகால தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இரு வழிபாட்டு தெய்வங்கள், மாயோன் - செயோன் மட்டும்தான். (மாயோன் - வேங்கடமலைபெருமாள், சேயோன் - முருகபெருமான்) சேய் என்றால் குழந்தை, குமரன் என்று பொருள். மேலும் சிவப்பு நிறத்திற்கும், செவ்வாய் கிழமைக்கும், சேயோன் என்ற பெயருக்கும் மிகப்பெரும் தொடர்புண்டு. ஏனெனில் இந்த நான்குக்கும் முருகபெருமானுக்கும் சம்பந்தமுண்டு.

சேய் - செவ்வாய் - சிவப்பு - சேயோன்

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று அவதரித்த முருக பெருமானின் அவதார திருநாளான இன்று, அனைவருக்கும் வைகாசி விசாக திருநாள் நல்வாழ்த்துகள்!

சரவணபவ! அரோகரா! வெற்றிவேல்! வீரவேல்!

26 மார்ச் 2014

சிங் + காரவேலன்!



ஒரிசா என்ற கலிங்க நாட்டை கி.மு. 170 முதல் கி.மு. 159
வரை காரவேலன் என்ற புகழ்மிக்க பேரரசன் ஆண்டான். இந்த காரவேலனே "திராமிள சங்காதம்" என்ற தமிழ்வேந்தர் மூவரின் கூட்டணியை அழித்து, வடக்கத்தியர் யாருமே வெல்ல முடியாத சேர-சோழ-பாண்டிய பேரரசுகளை வென்றான் என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பும் காணப்படுகின்றது. இன்றளவும் ஒரிசாவில், கந்தகிரி - உதயகிரி என்ற இரு மலைகளுண்டு. கந்தன் என்றால் எம்பெருமான் முருகன் என்று தெரியும்; எம்பெருமான் முருகன் என்றால் சிங்காரவேலன் என்று தெரியும். இந்த காரவேலனுக்கும், சிங்காரவேலனுக்கும் என்ன தொடர்பு என்பதையும், எதனால் எம்பெருமான் முருகனுக்கு சிங்காரவேலன் என்ற பெயர் வந்ததென்று ஆராய்ந்தாலும் பல புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும். மேலும், எங்க நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கடையூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமெய்ஞ்ஞானம் என்ற ஊரிலுள்ள சிவாலயத்தின் வரலாற்று குறிப்பில் எம்பெருமான் முருகன் படையெடுத்து மெளரிய பேரரசை வீழ்த்தியதாக குறிப்பு உள்ளது. எல்லாம் எல்லாம்வல்ல எம்பெருமான் முருகனுக்கே வெளிச்சம்.

வெற்றி வேல்! வீர வேல்! அரோகரா!

- இரா.ச.இமலாதித்தன்