ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
28 நவம்பர் 2017
27 நவம்பர் 2017
தமிழ் மாவீரர் பெருநாள்!
தேசிய மாவீரர் நாளில், பிரபஞ்சமெங்கும் நட்சத்திரங்களாக கலந்திருந்து நம்மோடு தொடர்பிலிருக்கும் கரும்புலிகளுக்கு வீரவணக்கம்.
ஈழத்திலும் சோழத்திலும் அகமுடையார்!
பிள்ளை பட்டமும், தேவர் பட்டமும் இயல்பாகவே தன்னகத்தே கொண்ட இனக்குழு அகமுடையார் மட்டுமே. ஈழமண்டலத்தை சோழர்களின் கீழ் ஆட்சி செலுத்திய போது, எம் தஞ்சை மண்ணிலிருந்து படைத்தளபதிகளாகவும், நிர்வாக பொறுப்பாளர்களாகவும் அகமுடையார்களே அங்கு குடியமர்த்தப்பட்டவர்கள்.
அதன் நீட்சியாக இலங்கை அரசு இணையதளத்தில் அகமுடையார் பற்றிய குறிப்பு: (http://www.e-thaksalawa.moe.gov.lk/…/139-hired-soldiers-aga…)
26 நவம்பர் 2017
தமிழினத்தின் தலைவன்!
ஓர் உயரிய கொள்கைக்காக ஒரு தலைவன் போராடினான் என்பதை விட, எத்தனை பேரை போராட வைத்தான் என்பதில்தான் அந்த போராட்டத்தின் வெற்றியே இருக்கிறது. அந்த வகையில் என் அண்ணன் மேதகு. வேலுப்பிள்ளை பிராபகரன் தான், சமகால வரலாற்றில் யாருக்கும் நிகரற்ற தலைவன் என்பதில் மாற்றுகருத்தே இல்லை.
நீ இருக்கிறாயா? இல்லையா? என்று ஆராய விரும்பவில்லை; தலைவனாகவோ - இறைவனாகவோ தமிழர்கள் அனைவரும் உன்னை போற்றிக்கொண்டே இருப்போம். உன் மீதான நம்பிக்கையில் நாங்கள் என்றும் உன்னோடும் - உணர்வோடும் - தமிழோடும் - புலிக்கொடியோடும் இருப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!
எங்களின் தாகம்! தமிழீழ தாயகம்!
21 ஏப்ரல் 2017
சமகால அரசியலில் மொழி திணிப்பு!
ஈழம் ஒருகாலத்தில் தமிழர் மண். கலிங்கமென்ற ஒரிசாவிலிருந்து பெரும்படையோடு நாடுகடந்து இடம்பெயராமல் இருந்திருந்தால் அங்கும் அனைத்து ஊர்களின் பெயர்களும் இன்றளவும் தமிழிலேயே இருந்திருக்கும். ஆனால் பல சூழ்ச்சிகளால் இனக்கலப்பு ஏற்பட்டு உருவான பெளத்த சிங்கள இனவாதிகளால், ஈழமண்டலத்தின் பெரும்பாலான பகுதிகள் சிங்களப்பெயர்களோடு தான் மொழிமாற்றப்பட்டு இருக்கின்றன. விடுதலைப் புலிகளால் வடகிழக்கு பகுதிகள் மட்டும் கொஞ்சம் தமிழில் தாக்குபிடித்திருந்தது. அதிலும் கூட அழகான யாழ்பாணம் என்ற பெயரும் 'ஜப்னா'வாக உருமாறியதும் மொழியழிப்பின் அடையாளமே.
இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன? எங்கள் வேல்நெடுங்கன்னி, வேளாங்கன்னி ஆனது; திருவல்லிக்கேணி, ட்ரிப்லிக்கேன் ஆனது; செங்குன்றம், ரெட்ஹில்ஸ்; பாரிமுனை, பாரீஸ் கார்னர் என பல இடங்களிலும் மேற்கத்திய மொழி மாற்றம். அதுபோல எங்கள் திருமறைக்காடு, வேதாரண்யம் ஆனது; எங்கள் மயிலாடுதுறை, மாயவரம் ஆனது; முதுகுன்றம், விருத்தாச்சலம் ஆனது. இப்படியாக ஆங்கில / சமகிருத மொழிதிணிப்பு எல்லா ஊர்களிலும் அரங்கேறி பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.
தமிழனால் தமிழர்களை வைத்து கட்டிய பெருங்கோவில்களிலெல்லாம், சமகிருத மொழியால் தான் முதன்மை பூசை. தமிழ் தெரியாத கடவுள்கள் தமிழ்நாட்டில் தான் அதிகமுண்டு. அதை தட்டிக்கேட்ட ஆறுமுகசாமி போன்ற தமிழர்கள், வானிலிருந்து அனுப்பட்டதாக கருதப்படும் தீட்சிதர்களால் விரட்டி அடித்து இன்றவரே விண்ணிற்கே சென்றுவிட்டார். அந்த தில்லை சிதம்பரம் கோவிலில் பட்டியல் சாதியை சேர்ந்தவரான நந்தனார் சென்ற வழியையே அடைத்து வைத்து ஆளுமை செய்கிறது, யாராலும் பேசப்படாத மொழியான சமகிருத ஏகாதிபத்தியர்களால். இதுதான் இங்கு நிகழ்ந்த, நிகழும் நிலவரம்.
ஆட்சி மொழியாக்கக்கூடிய எல்லா தகுதியும் இருந்தும் புறக்கணிப்பட்ட தமிழ் மொழியை பேசும் தமிழ்நாட்டின் சாலையெங்கும் கூட ஹிந்தியில் மைல்கற்களை அமைத்து வருகிறது ஹிந்திய அரசு. இப்படியான மொழியழிப்பு கொள்கைகள் எல்லாவற்றோடும் ஒத்துப்போகும் சீனாவை மட்டும் ஏன் கண்டிக்க வேண்டும்? என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் தோன்றுவது இயல்பான ஒன்று. இந்த எதார்த்ததை புரிந்து கொண்டாலே அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனத்தில் பெயர் வைப்பத்திருக்கும் சீனாவின் செயல்பாடும் தவறில்லையென்றே தோன்றும்.
20 நவம்பர் 2015
ஆவணத்தான்கோட்டை பிரபாகரனுக்கு ஜாமீன்!
ஈழ விசயத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எம்.கே.நாராயணனை செருப்பால் அடித்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான் கோட்டையை சேர்ந்த, உறவின்முறை சகோதரர் திரு.பிரபாகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி! மேலும், இதற்கு பின்புலமாக இருந்த அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி.
சகோ.பிரபாகரன், பிறப்பாலும், சாதியாலும் அகமுடையாராக இருக்கலாம். ஆனால் அவர் இனத்தாலும், செயலாலும் சுத்த தமிழன் என்பதாலேயே, அவருக்கு பின்னால் அனைத்து தமிழ் அமைப்பினர்களும் துணை நின்றார்கள் என்ற இந்த ஒற்றை நிகழ்வே மறக்க முடியாத சமகால வரலாறு!
இனிவரும் காலங்களில் ஏற்றத்தாழ்வின்றி தமிழர்களாகவே பயணிப்போம்.
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
04 நவம்பர் 2015
துரோகிக்கான செருப்படி!
விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தோல்வியிலும், ஈழத்தமிழர்களின் ஒவ்வோர்
இழப்பிலும், 'இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்' என்ற பெயரை
கேட்கும்போதெல்லாம் ஆத்திரமடைந்திருக்கிறேன். அதை இத்தனை வருடங்கள் கழித்து
தமிழ்நாட்டின் தலைநகரில் வீரமிகு. புதுக்கோட்டை பிரபாகரனின் செருப்படி
ஓரளவுக்கு தீர்த்து வைத்திருக்கிறது.
15 மார்ச் 2015
தமிழும் மோடியும்!
உலகெங்கும் "தமிழர்கள்" என்ற அடையாளத்தை மொழியால் அடையாளப்படுத்தி
கொண்டிருக்கும், ஈழ மண்ணின் பழம்பெருநகரமான ஆசியாவின் மிகப்பெரிய தமிழ்
நூலகம் இருந்த யாழ்பாணத்தில் ஹிந்தியில் பேசிய மோடி, இலன்கையின் சிங்கள
நாடாளுமன்றத்தில் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசினார்? ஹிந்திக்காரய்ங்க
யாழ்பாணத்துலயா பானிபூரி விக்கிறாய்ங்க? தமிழன் கிட்ட ஓட்டு கேட்க சிங்கள
இனவெறியனான மகிந்த ராஜபக்சாவே எழுதி வைத்து தமிழில் பேசினான்.
குறைந்தபட்சம், சிங்களவனிடம் பேசியது போலவே, தமிழனிடமும் உலகின் பொது
இணைப்பு மொழியான ஆங்கிலத்திலேயே பேசி
இருக்கலாமே. இதை கேட்டால், மோடியின் தாய்மொழியே குஜராத்தி தானே? அவர் தன்
தாய்நாட்டின் மொழியாக தானே ஹிந்தியை பேசினார்ன்னு யாராவது வக்கனையா ஜால்ரா
அடிப்பாங்க. ஹிந்தி மட்டும் தான் இந்தியாவின் தேசிய மொழியா என்ன? தமிழும்
தான் அதில் அடக்கம். உலகில் பலருக்கும் வெவ்வேறு மொழிகள் தாய் மொழியாக
இருக்கலாம். ஆனால், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழிதான் தகப்பன் மொழி.
மோடியோ, காவியோ எந்த கும்பலும் சமகிருதத்தை வைத்து தமிழை அழித்து விட
முடியாது. ஆயிரம் ஹிந்து கோவில்களை இடித்து தரை மட்டமாக்கிய பெளத்த சிங்கள
பயங்கரவாதிகளிடம், விடுதலைபுலிகளை பயங்கரவாதிகளென சொல்லி, அவர்களை அழித்ததை
பற்றியெல்லாம் பெருமையாக பேசி வந்திருக்கலாம். இந்த தமிழ்நாட்டிலும்
அப்படியொரு பயங்கரவாதம் ஏற்படாது என்பதற்கு யார் உத்திரவாதம் தருவார்கள்?
எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லியே தீரும்.
09 ஜனவரி 2015
இலங்கையும் ஈழமும்!
"அரசன் அன்றே கொல்வான்;தெய்வம் நின்று கொல்லும்!"ன்னு பழந்தமிழர்
சொல்வாங்க. அரசனாக இருந்த மகிந்த ராஜபக்சே ஒரே நாளில் பல்லாயிரம் பேரை போர்
என்ற பெயரில் கொன்றான். இனி தெய்வம், தேர்தலில் நின்று தோற்றதினால்
கொல்லப்போகிறது. மகிந்த ராஜபக்சேவிற்கு அதிபர் தேர்தலில் வெற்றி பெற
வாழ்த்துகள் சொன்ன நரேந்திர மோடிக்கு இன்னும் அதிக பயிற்சி தேவைப்படும்,
இனி மைத்ரிபால சிறிசேனாவுக்கும் அடிக்கடி வாழ்த்துகள் சொல்ல வேண்டி வரும்.
ஏனெனில் சீன கம்யூனிஸ்ட் கட்சி 6.48 கோடி உறுப்பினர்களை சேர்த்து
நிகழ்த்தியுள்ள உலக சாதனையை பா.ஜ.க. முறியடிக்கணும்ல...
மகிந்த ராஜபக்சேவோடு சுப்ரமணியசுவாமி நெருக்கமாக இருந்த போதே தெரிஞ்சிடுச்சு, மைத்ரிபால ஸ்ரீசேனாவின் வெற்றி. மேலும், பெளத்த-சிங்களவனை திருப்பதி பெருமாள் கோவிலுக்கு வரவழைத்து ஹிந்துவென கூச்சலிட்ட பா.ஜ.க.வினரின் ராஜதந்திரம் தான் இப்போது பல்லிளிக்கிறது. இனி இலங்கை உறவை மேம்படுத்தும் நோக்கில் பாரத ரத்னாவை மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கும் கொடுக்க வாய்ப்பிருக்கு. ஆனால், பாவம் எம் மீனவன்

28 நவம்பர் 2014
மிகப்பெரும் தமிழர் அடையாளம்!
சிங்களத்
தீவோ, ஈழ மண்டலமோ, இலங்கையோ அல்லது சேது நாடோ, சின்ன மறவர் நாடோ,
சிவகெங்கையோ இந்த பெயரிலுள்ள வேறுபாட்டை விட, பகுதி சிறியது என்றாலும்
உயிர்கொடை கொடுக்கும் படை வீரர்கள் - சாதி மத வேறுபாடில்லா மக்களின் பலம் -
அம்மக்களுக்கான உயரிய கொள்கையுடன் கூடிய நேர்மையான ஆட்சி - எதிரிகளுக்கு
எதிரான அதிகார பகிர்மானம் - தொலைநோக்கு பார்வை என மேம்பட்ட ஆட்சி செய்த
’தமிழீழ விடுதலைப்புலிகள்’ இயக்கத்தின் ’தமிழ் தேசிய தலைவர்’ பிரபாகரனும்,
’மாமன்னர்’ மருதுபாண்டியர்களும், எதிரிகளும் - துரோகிகளும் கூட மறுக்க
முடியாத மாட்சிமை பொருந்திய மிகப்பெரும் தமிழர் அடையாளமாய் திகழும்
வரலாற்று பொக்கிசம்.
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
19 ஜூன் 2014
தமிழ் இசுலாமியர் மீதான தாக்குதலை எப்படி பார்ப்பது?
இயற்கை எனது நண்பன்;
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்;
வரலாறு எனது வழிகாட்டி!
- அண்ணன் வே. பிரபாகரன்
இலங்கையில் நடைபெறும் தமிழ் இசுலாமியர் மீதான சிங்கள-பெளத்த இனவெறியர்களின் தாக்குதலை நான் எப்படி பார்ப்பது? யென்ற கேள்வி என்னை போலவே பலருக்கும் இருக்கலாம்.
அன்று ஈழத்தமிழர்களை இதே சிங்கள-பெளத்த இனவெறியர்கள் அழித்தொழித்த போது, கைத்தட்டி ஆராவாரித்து வெற்றி முழக்கமிட்டது இதே தமிழ் இசுலாமியர்கள் தானே? மேலும், இங்குள்ள தமிழ்நாட்டு இசுலாமிய அமைப்புகளும் கூட அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையென ஒதுங்கி கொண்டு கைக்கட்டி வேடிக்கை பார்தது ரசித்தது. ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டு இசுலாமிய அமைப்புகள், அங்குள்ள இசுலாமியர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தமிழ்தேசிய அமைப்புகளின் பெயர்களையும் போட்டு இங்கே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றது. இந்த தமிழ்நாட்டு இசுலாமிய அறிவுஜீவிகளுக்கு இப்போது மட்டும் அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனயென்று தெரியவில்லையா?
மதத்தின் பெயரால் சக நாட்டினத்தவரிடம் பிரிவினை ஏற்படுத்தி மதவெறியால் தமிழ்மொழியை அழிக்கும் இசுலாமியர்கள் ஒருபோதும் தமிழரில்லை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அப்படியென்றால், சக தமிழனாக, இலங்கையில் நடக்கும் இசுலாமியர் மீதான தாக்குதலை எதிர்க்க வேண்டிய அவசியமும் எந்தவொரு தமிழனுக்கும் அவசியமில்லை. என்னை பொறுத்தவரை இசுலாமியர் மீதான தாக்குதலை எதிர்க்க மனமே வரவில்லை. எப்போதுமே, எதிரியை விட துரோகி மிக மோசமானவர்கள் என்பதை கடந்த கால வரலாறு சொல்கிறது. நான் வரலாற்றை நேசிப்பவன்; வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்பவன்; நீங்கள் எப்படி?

18 ஜூன் 2014
இலங்கையில் இசுலாமியர் மீதான தாக்குதலும், பசும்பொன் தேவரும்!
குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்திற்கு பிறகு, சிவகாசியில், தேவர் திருமகனாருக்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது.
‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான். பசும்பொன் தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.
இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான். பசும்பொன் தேவரும் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.
எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் பசும்பொன் தேவர்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்றார்.
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், 2009 காலக்கட்டத்தின் போது, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தங்களை தமிழர்களாக மனதில் கொள்ளாமல், இலங்கை வாழ் இசுலாமியர்கள் அனைவரும் தங்களை மதவாதிகளாகவே கணக்கில் கொண்டு, பெளத்த-சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாக நின்று, மகிந்த ராஜபக்சேவை பாராட்டி ஊர்வலம் போனார்கள். ஆனால் இன்றைய நிலைமையில் தமிழர்களை அழித்த அதே பெளத்த-சிங்கள இனவெறியர்கள் தமிழ் இசுலாமியர்கள் மீதும் அடக்குமுறையை ஏவியுள்ளனர். அன்றைக்கு, தமிழன் வீடு பற்றி எரியும்போது கைக்கட்டி வேடிக்கை பார்த்ததன் விளைவு, இன்று தன் வீடும் பற்றி எரிகிறது. எதிலும் ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும் என்பதை அன்றைக்கே பசும்பொன் தேவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து சென்றுவிட்டார். இனியாவது தமிழ் இசுலாமியர்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்வார்களா?
- இரா.ச.இமலாதித்தன்
13 மே 2014
இணைய போராளிகளுக்கிடையில் ஈழம்!
ஈழத்தமிழர்களுக்காக
ஃபேஸ்புக் போன்ற சமூக இணையங்களில் புரட்சிகரமாகவும், உணர்ச்சிகரமாகவும்
எழுதும் பலர், ஈழம் சார்ந்த எந்தவொரு போராட்டக்களங்களிலும் நேரடியாக கலந்து
கொள்ளதவர்களாகவே இருக்கின்றனர் என்பதுதான் எதார்த்தம். இவர்களின் உணர்வு
சற்றும் குறைவானதில்லை என்றாலும் கூட, அந்த உணர்வை மற்றவர்களுக்கு
திணிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, இவர்கள் லாவகமாக ஓய்வெடுத்து
கொள்கின்றனர்.
வெறும் எழுத்துகளால் மட்டுமே ஒரு இனத்தின் லட்சியம் வெற்றி பெறுவதில்லை; அதன் நீட்சியாக அனைவரும் களத்திற்க்கு வரும்போதுதான் அந்த போராட்டம் முழுமையடைந்து, வெற்றிக்கான வழிகளும் விரிவடைகின்றது.
தாங்கள் அறிவுஜீவிகள் என்ற அளவீடோடு இணையத்தில் மட்டுமே பக்கம் பக்கமாய் எழுதி செல்வது, சிலரது அன்றைய நாளின் உணர்வை மட்டுமே தட்டியெழுப்புமே தவிர வேறெதையும் செய்துவிடாது. அடுத்த நாள் அனைவரது கவனமும் அடுத்த வேறொரு பதிவை நோக்கி நகரும். போராட்டக்களத்தின் வடிவம் எதுவாகினும் அது தொடர்ச்சியாக செல்லக்கூடிய மாதிரியான நீண்டகால வடிவமைப்பை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் முழுமையாகவும், விரைவாகவும் வெற்றிப்பெறும் என்பதே எதார்த்தம். எனவே, எழுத்துகளால் மட்டுமே புரட்சி செய்யாமல், கொஞ்சம் களத்திற்கும் வர முயற்சி செய்யுங்கள். இங்கே சொல்லப்பட்ட அனைத்து விமர்சனத்திற்க்கும் யாரும் அப்பாற்பட்டவர் கிடையாது நான் உள்பட.
தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)