25 மார்ச் 2018

எம்.ஜி.ஆர் - சான்டோ சின்னப்பாதேவர் - அகமுடையார் வரலாற்று தொடர்பு!



எம்.ஜி.ஆருக்கும் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவருக்கும் பல ஒற்றுமை உண்டு. அவற்றுள் ஒன்று, மருதூர்.

எம்.ஜி.ஆரின் முழுப்பெயர்:மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்.

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரின் முழுப்பெயர்:மருதூர் மருதாசலமூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்.

அகமுடையார்களில் பலருக்கு இன்றைய கேரளத்தில் குலதெய்வ கோவிலும், திருமண உறவும் உண்டு. போக்குவரத்து சிரமங்களுக்காக கேரளாவிலிருந்து பிடிமண் எடுத்து வந்து அதே பெயரில் தங்களது பகுதியிலேயே குலசாமி கோவிலை கட்டியெழுப்பினார்கள். சேரநாடு என்ற பெயரில் ஆதித்தமிழகமாக இருந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட இராஜகுல அகமுடையார்களுக்கு பாத்தியபட்ட விருதுநகர் மாவட்டத்திலுள்ள மருதூர் ஐயனார் கோவில் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்த மருதூர் ஐயனார் கோவிலானது கேரளாவில் உள்ள கோவில்; இந்த ஐயனார் தான் எம்.ஜி.ஆரின் குலசாமி; இதே மருதூர் தான் எம்.ஜி.ஆரின் பூர்வீக ஊர்; இவையெல்லாம் கவனிக்கதக்க விசயம். கேரளாவிலுள்ள நாயர் சாதி என்பது பல இனக்குழுக்களின் கூட்டமைக்காகவே பிற்காலங்களில் உருவெடுத்தது. 13ம் நூற்றாண்டில் சேரநாடான கேராளவில் ஏற்பட்ட எழுச்சியில் அகம்படியர் மற்றும் வேளாளர் (நாயர்) என்போர் ஈடுபட்டதாக வரலாற்று குறிப்புகளை நோக்கும் போது, அகமுடையார்களின் கிளைக்குடிகளாக மேனன் பட்டமுள்ளோர் இருந்திருக்க கூடும்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் தாய் தந்தை வழி குலசாமிகளான, மருதங்குடி மருதாருடையாரும், வாணியங்குடி மருதப்ப ஐயனாரும் கூட ஒருங்கிணைந்த இராமநாதபுரத்திற்கு (விருதுநகர், சிவகங்கை) அருகிலுள்ள ஊர்கள் என்பதும், அங்கெல்லாம் அகமுடையார்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதும், மருது என்பது இயல்பாக இவர்களுக்கு சூட்டும் பெயராகவும் இருப்பதை கவனித்தாலே பல வரலாற்று உண்மைகள் புரியும். வாணியங்குடி மருதப்ப ஐயனார் மற்றும் மருதங்குடி மருதாருடையார் என்பதன் நினைவாகவே மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு, வெள்ளை மருது - சின்ன மருது என்ற பெயர்கள் அவர்களுக்கு வைக்கப்பட்டது.
இதுபோலவே கோயம்புத்தூரிலும் ஒரு மருதூர் உண்டு; அவ்வூரிலும் அகமுடையார்களே பெரும்பான்மை. கோவை - திருச்சி சாலையிலிருந்து சிக்னலில் தெற்கு நோக்கி நஞ்சுண்டாபுரம் சாலையின் கிழக்கு பகுதி மருதூர், மேற்கு பகுதி இராமநாதபுரம், (ஸ்டாக் மார்க்கெட்டிலிருந்து சிக்னல் வரை உள்ள பகுதி மருதூர்) பொதுவாக கிழக்கால ஊர், மேற்கால ஊர் என அழைப்பார்கள், இரட்டை கிராமம்.

சோழநாடான டெல்டா பகுதியிலுள்ள அகமுடையார்களுக்கு தேவர் பட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல விருதுநகர் மாவட்டத்திலும் அகமுடையாருக்கு தேவர் பட்டமென்பதை பார்வார்ட் ப்ளாக் தேசியத்தலைவராக இருந்த ஏ.ஆர்.பெருமாள் தேவர் மூலமாகவும், இராஜகுல அகமுடையார்களுக்கு பாத்தியப்பட்ட மருதூர் ஐயனார் கோவிலிலுள்ள பங்காளிகளின் பெயர் அச்சிடபட்டுள்ள அழைப்பிதழிலும், பெயர் பலகையிலும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யத்திற்கு அருகேயுள்ள மருதூரிலும் அகமுடையார்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்த மருதூருக்கு அருகிலுள்ள ’கடிநெல்வயல்’ வேம்படி ஐயனார் / வேம்புடையார் கோவில் தான் எங்களுக்கு குலசாமி.

இதே வேம்புடையார் என்ற பெயர்கொண்ட ஐயனார் சிவகங்கை அருகிலுள்ள பில்லூரிலுள்ள முத்தையா கோவிலில் வீற்றிருக்கிறார்; அவ்வூருக்கு ஓரிருமைல் தொலைவில் தான் வேம்பத்தூர் என்ற ஊரும் இருக்கிறது. இந்த வேம்பத்தூரும், வேம்புடையாரும் தொடர்புடையதாக இருக்கலாம். இன்றைக்கு அந்த வேம்புடையார் என்ற பெயர், வேகமுடையார் என மாற்றமடைந்திருந்தாலும் வேம்புடையாராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். மேலும், அவ்வூரில் அகமுடையாரே பெரும்பான்மை என்பதும், பில்லூர் அகமுடையார் என்ற தனித்த அடையாளமும் அவர்களுக்கு உண்டு என்பது கூடுதல் தகவல். வேதாரண்யம் அருகிலுள்ள இந்த மருதூர் ஐயனார் கோவிலின் பெயரிலும் ’வாணர்’ என்ற பெயர் உள்ளீடாக இருக்கின்ற ‘துயில் வாண ஐயனார்’ என்பதை கவனித்தால் மாவலி பூமியின் வரலாற்று தொடர்பு எளிதில் விளங்கும்.

#சின்னப்பாதேவர் #எம்ஜிஆர் #மேனன் #ஐயனார் #தேவர் #அகமுடையார்#வாணியங்குடி #மருதங்குடி #மருதூர் #கடிநெல்வயல் #வேம்புடையார்#பில்லூர் #விருதுநகர் #இராஜகுலம் #வாணர் #மாவலி #கோவை #ஏஆர்பெருமாள்தேவர் #மருதாருடையார் #மருதப்பஐயனார்


(இந்த பதிவோடு தொடர்புடைய படங்களெல்லாம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆருக்கும் அகமுடையாருக்கும் தொடர்புள்ள செய்திகளை பகிர்ந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர் எஸ்.இராமச்சந்திரன் ஐயாவுக்கும், அகமுடையார் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளரான நண்பர் சோ.பாலமுருகனுக்கும், கோவை மருதூர் பற்றிய தகவல்களை தந்த பழ.செல்வராஜூ அண்ணனுக்கும் நன்றி.)