விஷால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஷால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 ஏப்ரல் 2017

தமிழகத்தை ஆளப்போகும் விஷால் ரெட்டிக்கு வாழ்த்துகள்!



தமிழ் திரைத்துறைக்கு சம்பந்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக தெலுங்கரான விஷால் ரெட்டி ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார்; இப்போது தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் விஷால் ரெட்டியே வெற்றி பெற்று தலைவராகவும் ஆகிவிட்டார். அடுத்து வழக்கம்போல தமிழர் பெயரிலோ, திராவிடர் பெயரிலோ ஒரு கட்சியை ஆரம்பித்து வருங்கால தமிழக முதலமைச்சராக வேண்டியதுதான் மிச்சமிருக்கிறது. புரட்டாசி தளபதி, புண்ணாக்கு தளபதியென ப்ளக்ஸ் பேனர் வைத்து காலில் விழுந்துகிடக்க காத்திருக்கிறது அடிமைகளின் பொதுபுத்தியை கொண்ட தமிழினம்.

தமிழர்களுக்கு தலைவனாக தமிழனுக்கு தகுதி இல்லையென்ற பெரும்பான்மை சாமானியர்கள் கருத்துருவாக்கத்தை உடைக்கவே வெள்ளையாக இருக்கிற தமிழரல்லாத அந்நியர் வேறு யாரோ சொன்னால் தான் எடுபடும் நிலை இங்குள்ளது. அதுபோலவே சண்டக்கோழி, திமிரு, மருது போன்ற தென் தமிழகம் சார்ந்த கதையில் நடித்த ஒரே காரணத்தினாலே விஷால் ரெட்டி கூட, இங்குள்ளவர்களுக்கு தெக்கத்திக்காரனாகி விடுகிறார். மேலும், மலையாளியையும், கன்னடனையும் தலைவனென தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மாதிரியான செம்மறியாட்டு அடிமைகளை அரசாள விஷால் ரெட்டி போன்ற தெலுங்கன் தான் லாயக்கு.

வாழ்த்துகள் விஷால்!

18 அக்டோபர் 2015

நடிகர் சங்கத்தேர்தலில் உள்ள அரசியல்!

'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயரை கூட மாற்ற வக்கில்லாதவர்கள், விஷாலை தெலுங்கு ரெட்டியாரென சொல்வது சுத்த அயோக்கியத்தனம். விஷால் அணியினரான பாண்டவர் அணியில் உள்ள மற்ற நால்வரில் நாசர் - தமிழ் இசுலாமியர், கருணாஸ் - அகமுடைய தேவர், பொன் வண்ணன் - கொங்கு செட்டியார், கார்த்தி - கொங்கு வெள்ளாளர் என அனைவருமே தமிழர்கள் தானே?

சரத்குமார், ஏற்கனவே நாடார் கட்சிக்கு தலைவர். அவர் மனைவி ராதிகா கூட வீரவேசமாக 'என் கணவர் தமிழரென' உசுப்பேற்றி பேட்டி கொடுத்திருப்பதை காண முடிகிறது. ஆனால் ராதிகாவின் மற்ற இரு முன்னாள் கணவர்களும் தமிழரா என்பது ஊருக்கே தெரியும். மூன்றாவது கணவருக்காக தமிழச்சி வேடம் போடும் இந்த ராதிகா, சிங்கள-தெலுங்கு கலப்பு தானே? மேலும் சரத்குமார் அணியில் உள்ள ராதாரவியும் தெலுங்கு நாயக்கர் தானே? இரண்டு அணியிலும் தமிழ் + தெலுங்கு கூட்டணி இருக்கத்தானே செய்கிறது? அப்பறமும் ஏன் இந்த கூச்சல்?
தமிழ் நாடாரான சரத்குமாருக்கு முன்பாக இத்தனை ஆண்டுகளாக தெலுங்கு நாயக்கரான விஜயகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவராக ஏற்று கொண்ட தமிழ்தேசிய வாதிகளுக்கு, விஷால் மட்டும் ஏன் எதிரியானார்? யென்று மட்டும் புரியாத புதிராக இருக்கிறது. விஷால் மட்டும் தான் தெலுங்கரா?

தமிழ் தேவரான பாரதிராஜா அவரது படத்தில் அறிமுகபடுத்திய அனைத்து கதைநாயகிகளில் தமிழச்சி யாராவது உண்டா? பெரும்பாலும் மலையாளிகளுக்கு தானே வாய்ப்பளித்தார். அப்பறமென்ன, தமிழ் பாசத்தை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் திணிக்கிறார்? தமிழ் வெள்ளாரான இயக்குனர் சேரனும் தமிழரல்லாதவரையே அதிகம் அறிமுகம் செய்தார். அவரும் விஷாலை மொழி ரீதியாக தாக்கி பேசுகிறார் என்பது விசித்திரமாகவே இருக்கிறது.

தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக சரத்குமார் செய்த ஊழல்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இத்தனை ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்த பிறகும், தனக்கென ஒரு சாதிக்கட்சி உருவாக்கி அதன் மூலம் ச.ம.உ. ஆன பிறகும் இந்த பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லையென்றால் அது ஏனென்று யோசிக்க வேண்டிய விசயம் தானே? தே.மு.தி.க. ஆரம்பித்த உடன் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்த தெலுங்கரான விஜயகாந்த் இந்த விசயத்தில் பாராட்டுக்குரியவர்.

இதற்கிடையில், அந்தரங்க நண்பரான தமிழ் வேளாரான விஜயகுமாரோடு கூட வந்த கன்னடரான ரஜினி சொன்ன யோசனையான 'தமிழ்நாடு நடிகர் சங்க'மும், இந்தி தெலுங்கு பட உரிமைக்காகவும், ஸ்ருதி ஹாசனுக்காகவும், 'இந்திய நடிகர் சங்கம்' என்ற யோசனை சொன்ன, பாதி மலையாளியான கமல்ஹாசனும் நடிப்பை தொழிலாக செய்யும் நல்ல வியாபாரிகள் என்பதும் இன்றைக்கு பலருக்கும் புரிந்திருக்கும்.

இப்படியான சூழலில் தமிழர் சரத்குமார் செய்த தவறை தட்டிக்கேட்ட தெலுங்கர் விஷாலை பாரட்டுவதே சரியான மனுநீதி முறை. ஏனெனில், சக தமிழனின் தவறை தட்டிக்கேட்க வேறெந்த தமிழனுக்கும் திராணியில்லை என்றே இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். முதலில் ரெளத்திரம் என்ற அறச்சீற்றத்தை வளர்த்து கொண்டு, தமிழ் தேசியத்தை கையிலெடுங்கள்.

இந்த நடிகர் சங்க தேர்தலில் யார் வென்றாலும் எங்களை போல் இணையத்தில் செயல்படுவர்களால், சினிமா காரர்களுக்கு பாதிப்புதான் அதிகம். ஏனெனில் டோரண்ட்ல படத்தை டவுன்லோட் பண்ணி விமர்சனம் எழுதியே படத்தை காலி பண்ணுவோம். யாரா இருந்தாலும் நீங்க ஜெயிச்சு வாங்க. அப்பறமா, வச்சு செய்யுறோம்!

- இரா.ச.இமலாதித்தன்.