தமிழகத்தை ஆளப்போகும் விஷால் ரெட்டிக்கு வாழ்த்துகள்!தமிழ் திரைத்துறைக்கு சம்பந்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக தெலுங்கரான விஷால் ரெட்டி ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார்; இப்போது தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் விஷால் ரெட்டியே வெற்றி பெற்று தலைவராகவும் ஆகிவிட்டார். அடுத்து வழக்கம்போல தமிழர் பெயரிலோ, திராவிடர் பெயரிலோ ஒரு கட்சியை ஆரம்பித்து வருங்கால தமிழக முதலமைச்சராக வேண்டியதுதான் மிச்சமிருக்கிறது. புரட்டாசி தளபதி, புண்ணாக்கு தளபதியென ப்ளக்ஸ் பேனர் வைத்து காலில் விழுந்துகிடக்க காத்திருக்கிறது அடிமைகளின் பொதுபுத்தியை கொண்ட தமிழினம்.

தமிழர்களுக்கு தலைவனாக தமிழனுக்கு தகுதி இல்லையென்ற பெரும்பான்மை சாமானியர்கள் கருத்துருவாக்கத்தை உடைக்கவே வெள்ளையாக இருக்கிற தமிழரல்லாத அந்நியர் வேறு யாரோ சொன்னால் தான் எடுபடும் நிலை இங்குள்ளது. அதுபோலவே சண்டக்கோழி, திமிரு, மருது போன்ற தென் தமிழகம் சார்ந்த கதையில் நடித்த ஒரே காரணத்தினாலே விஷால் ரெட்டி கூட, இங்குள்ளவர்களுக்கு தெக்கத்திக்காரனாகி விடுகிறார். மேலும், மலையாளியையும், கன்னடனையும் தலைவனென தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மாதிரியான செம்மறியாட்டு அடிமைகளை அரசாள விஷால் ரெட்டி போன்ற தெலுங்கன் தான் லாயக்கு.

வாழ்த்துகள் விஷால்!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment