பீம்ராவ் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்!"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக்கப்பட்ட மனோன்மணீயம் நூலிலுள்ள நீக்கப்பட்ட பாடல் வரி இது. வழக்கொழிந்த ஆரியம் என்ற உண்மையை சொன்னதற்கே அவ்வரி தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இப்படி கோலோச்சிக்கொண்டிருந்த அப்போதைய ஆரிய பார்ப்பனீய அரசியல் சூழலில் கூட, "நான் என்ன செய்ய வேண்டும் என்பதே என் கவலை. அடுத்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பது அல்ல!" என அழுத்தம் திருத்தமாக சொல்லி தனது கொள்கையிலிருந்து கடைசிவரை மாறாமல் அரசியலில் பயணித்து இன்றளவும் உயிர்ப்போடு அடையாளப்பட்டு கொண்டிருக்கும் பிராமணரல்லாத பீமராவ் அம்பேத்கர் அவர்களுக்கு பிராமணரல்லாதவனாய் புகழ் வணக்கம்!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment