அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஜூன் 2024

கள்ளக்குறிச்சியை பற்றி பேசி பலனில்லை!

       அதிமுக ஆட்சியில் போராளி வேடமிட்ட சூர்யா, ஜோதிகா, கோவன் என பலரும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் ஓடி ஒளிந்து விட்டனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்களெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் விழித்தெழ வாய்ப்புண்டு. திராவிட மாடல் என பீற்றிக்கொண்டு திரியும் இவர்களது லட்சணத்தை ஊரே காறி உமிழ்கிறது. உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ரேசன் பொருட்களுக்கு கூட கடும் தட்டுப்பாடு. மாணவர்களுக்கு கொடுக்கப்படும் லேப்டாப் முதற்கொண்டு இடை நிறுத்தம். ஆனால், கஞ்சா மட்டும் அனைத்து கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதுபோக, மாணவர்களின் பெற்றோர்களுக்காக கள்ளச்சாராயமும், டாஸ்மாக் சரக்கும் பாலாறும் தேனாறுமாய் ஊரெல்லாம் ஓடுகின்றன.


 மகளிருக்கான இலவச பேருந்துகளால் ஒட்டுமொத்த போக்குவரத்துத்துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது. கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து முனையம் சந்தி சிரிக்கும் வேளையிலும், கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக கணக்கு மட்டும் காட்டப்படுகிறது. போதிய அளவிலான புதிய பேருந்துகளையும் வாங்கவில்லை. பழைய பேருந்துகளையும் சரியாக சீரமைக்கவில்லை. லாஜிக் படி பார்த்தால் ஊழியர்களும், பேருந்துகளுமே பற்றாக்குறை. ஆனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும், விடுமுறை தினத்திற்காக கூடுதல் பேருந்துகளை இயக்குகிறோம் என ஊடகங்கள் வாயிலாக தம்பட்டம் அடிக்கின்றனர். இருக்கின்ற பேருந்துகளின் டயர் தனியே ஓடுகிறது. படிக்கட்டுகள் தரையில் கிடக்கின்றன. சிறு தூறலுக்கே பேருந்துக்குள்ளே மொத்தமாய் மழை நீர் கசிய தொடங்குகின்றன.


    ஒருவேளை எல்லாம் சரியாக அமைந்து பேருந்து இயங்கினால் குடிமகன்கள் பஸ்ஸை வழிமறித்து 'எங்களால் தான் கவர்மெண்ட்டே இயங்குது. என்னை மீறி பஸ்ஸை எடுத்துடுவியா?' என்ற ரேஞ்சுக்கு சாலையின் நடுவில் நின்று அரசியல் விவாதம் செய்கின்றனர். இடைமறித்து பேருந்துக்கு வழிவிட நினைக்கும் போலிஸிடமும் 'நீ ஏன் விக்கிற? அதான் குடிக்கிறேன்!' என லெப்டில் டீல் செய்யும் குடிமகன்களின் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.


ஐ.பி.எல். போட்டிக்கெல்லாம் இலவச பஸ் டிக்கெட் கொடுக்க முன்வந்தவர்கள், பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸை கொடுக்க தவறும் நிர்வாகத்தை எவன் கேள்வி கேட்டாலும், சங்கியென முத்திரை குத்தி பாஜகவை வளர்த்து விடுகின்றனர். அச்சு/காட்சி ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சமூக ஊடகங்களில் இவர்களது லீலைகள் அம்பலப்பட்டு விடுகின்றன. அதற்காகவே நெட்டிசன்களை மடைமாற்றம் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக சோசியல் மீடியாவில் பலான வீடியோக்களை சமயத்திற்கேற்ப பரப்பி விடுகின்றனர். இம்மாதிரியான ஃபார்மலா எல்லா நேரமும் எடுபடாது என்பதை இவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதே இல்லை.


    காவல்துறையை தங்களது பவுன்சர்கள் போல பாவித்து எதிர்க்கேள்வி கேட்பவனையெல்லாம் கைது, மிரட்டல் செய்ய உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். இப்படியான ஆணவத்தில் ஆடியதால் தான் பத்து வருடங்கள் அதிகாரத்திற்கு வர முடியாமல் போனது என்பதை மறந்து, திரும்ப தலைகால் தெரியாமல் பிணந்திண்ணி வவ்வால் போல் ஆட்சிக்கட்டிலில் தொங்கி கொண்டிருக்கின்றனர். காலம் அனைத்தையும் மாற்றும். இந்த அதிகார மமதையில் அனைவரையும் ஒடுக்கி, ஜால்ராக்களின் துதிகளை நம்பி கண்மூடி புகழ் போதையில் உழலும் இந்த திராவிட மாடல் ஃபெயிலர் என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.


- இமலாதித்தன்

29 அக்டோபர் 2019

ஆழ்துளை கிணறுக்கு பின்னாலுள்ள அரசியல்!



ஆழ்துளை கிணறை மூடாமல் இருந்தது யார் தவறு? இதற்கு மேல் ஓர் அரசாங்கம் என்னதான் செய்ய முடியும்? இராணுவத்தை ஏன் அழைக்கவில்லை? மத்திய பேரிடர் மீட்புப்படையை தாமதித்து அழைத்தது ஏன்? ஆகாரம் தண்ணீர் இல்லாமல் நான்கு நாட்களாக ஒரு குழந்தை எப்படி உயிரோடு இருக்கும்? இன்னும் எத்தனையோ ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமலேயே திறந்து தான் கிடக்கின்றன; அத்துறைக்கான அரசு ஊழியர்கள் ஏன் இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்கவில்லை? ஊடகங்களின் வாயிலாக காதில் பூவை சுற்றி நம்மை ஏமாற்றி விட்டனர்; குழந்தை விழுந்த அன்றே இறந்திருக்குமல்லவா? அரசிற்கு பழிச்சொல் வரதாவாறு என்னென்ன செய்ய முடியுமோ அதைத்தானே செய்ய முடியும்? அந்த ஆழ்துளை கிணறை மூடாமலிருந்த அந்த குடும்பத்தினரை கைது செய்யுமா அரசு?இந்த உயிரிழப்பிற்கு எத்தனை லட்சம் இழப்பீடு கொடுக்கலாம்? சந்திராயன், மங்கல்யான் என விண்ணுக்குள் நுழைய முடிந்த இவர்களால், நூறடி மண்ணுக்குள் நுழைய முடியவில்லையா?

இப்படியாக ஆளாளுக்கொரு கேள்விக்கணைகளும், முன்முடிவுகளும் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

சுர்ஜித் என்ற பெயருக்கு பின்னாலுள்ள வில்சன் தான் இங்கே மிகநுட்பமாக அரசியலாக்கப்படுகிறது. வாட்சப் குழுக்களில் ஃபார்வார்டு செய்யப்பட்ட, ஆழ்துளை கிணறு மீட்பு வழிகளுக்கான அநேக பரிந்துரைகள் ஆலோசிக்கப்பட வேண்டியவைகள் தான். இதே போன்றதொரு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை சீன பாதுகாப்பு படையினர் எளிய தொழிற்நுட்பம் வாயிலாக சில நிமிடங்களில் மீட்டெடுத்த காணொளிகள் இன்னும் நமக்கு பல பாடங்களை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ட்விட்டர் டாப் ட்ரெண்டிங் வாயிலாக மோடி, ராகுலின் அனுதாபத்தை தவிர வேறேதும் நடந்ததாக தெரியவில்லை. இது தொடர்பாக மற்ற மாநிலங்களில் எவ்வித அதிர்வலைகளும் ஏற்படவில்லை.

பின்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்று அங்குள்ள தொழில்நுட்பங்களை அறிந்து வந்த முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர் பெருமக்கள், ஏன் ஆழ்துளை கிணற்றை மறந்து போனார்கள்? 'அறம்' என்ற திரைப்படம், சமீபத்தில் நினைவூட்டியும் கூட இன்னமும் பல ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமலேயே கிடக்கின்றன என்பதுதானே உண்மை.

புதிய கருவிகளையோ, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளையோ வெளிக்கொண்டு வரும் எளிய விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால், அவர்களை உதாசீனப்படுத்தி அலைய விடுவதாலேயே அவர்களின் அறிவின் வெளிப்பாட்டில் உருவான கண்டுபிடுப்புகளெல்லாம் அடுத்த நாட்டின் அரசுடைமையாகி விடுகிறது.

கடந்த நான்கு நாட்களும் பலரது தூக்கங்களை கலைத்து, நேரலை வர்ணனை செய்து இறந்த சடலத்தை உயிரோடு இருக்கலாமென சொல்லிச்சொல்லியே தங்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கை போட்டிப்போட்டு ஏற்றிக் கொண்டன அனைத்து செய்திச்சேனல்களும். நாம் எதை பார்க்க வேண்டும்? எதை நோக்கி சிந்திக்க வேண்டும்? எதற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டுமென்பதை இந்த ஊடகங்களே முடிவு செய்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று. எல்லாவற்றிற்கும் கருத்துச்சொல்லிகளாக உருமாறிப்போன பத்திரிகையாளர்கள், தமிழ்நாட்டில் தான் அதிகமிருப்பதாக இம்மாதிரியான செய்திச்சேனல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

#SaveSurjith #PrayforSurjith #RipSurjith என ஹாஷ்டேக்கில் பதிவிட்டு கடந்து செல்வதோடு இல்லாமல், இம்மாதிரியான விபத்தை தடுப்பது எப்படியென்று ஊடகங்களை பேச வைப்பதும், இவ்விபத்துகளால் மரணம் நிகழாமலிருக்க இனிமேல் என்னென்ன வழிமுறைகளை எடுக்க போகிறது இந்த அரசாங்கம் என்ற கேள்விகளை கேட்பதும் நம் கடமை தான். வழக்கம்போல, நாங்கள் எவ்வளோ முயற்சித்தோம் பலனிக்கவில்லையென்ற சினிமாவில் வரும் டாக்டர்களின் பதில் போல சமாளிக்காமல் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் இறங்குவதே ஆள்வோரின் உடனடித்தேவை. மேலும், மக்களின் அனுதாபத்தையும், கண்ணீரையும் தங்களது டீ.ஆர்.பி.க்காக பரபரப்பாக்கும் ஊடகங்களெல்லாம் தங்களைத்தாங்களே திறனாய்வு செய்து திருந்த வேண்டியதும் இப்போதைய தேவை தான். நூறடி ஆழத்திலிருந்து மட்டுமல்ல, இவர்களிடமிருந்தும் மீட்டெடுக்கப்பட்ட சுர்ஜித் வில்சனென்ற அந்த பிஞ்சுக்குழந்தையின் ஆன்மா, இறைவனடியலாவது இனி இளைப்பாறட்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

05 மே 2019

மதவெறி அரசியல் இம்மண்ணுக்கு தேவையற்றதே!


இசுலாமிய பகுதிகளில் மாற்று மதத்தினர் உள்ளே நுழையவே கூடாதென்ற சட்டம் ஏதும் இருக்கின்றதா என்ன? இசுலாமிய பெண்கள் டிக்டாக் விடியோவை வெளியிடுவதற்கும், மதத்திற்கும் என்ன சம்பந்தம்? தனிப்பட்ட விருப்பத்தில் டிக்டாக் செய்த பெண்களை மதத்தின் அடிப்படையில் கண்டிக்கிறேனெ நினைத்து, மாற்று மதத்தினரை வம்பிழுப்பது சரியே அல்ல. இசுலாமியர்களுக்கு ஜமாத் என்ற கட்டமைப்பு இருப்பதும், பொருளாதார பின்புலம் இருப்பதும், சிறுபான்மை என்ற பெயரில் ஓட்டு வங்கி இருப்பதும் அவர்களது பாதுகாப்புக்கு அரணாக இருக்க வேண்டுமே ஒழிய மாற்று மதத்தினரை இழிவாக நினைப்பதற்காக இருக்க கூடாது.

இந்த நாட்டில் பெரும்பான்மை மதத்தை சேர்ந்த பெரும்பான்மையானவர்களின் சகிப்புத்தன்மையால் தான் சிறுபான்மையினரென சொல்லப்படும் இசுலாமியர்கள் நட்புறவாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கின்றார்கள். அதை அடிப்படைவாத மதவெறியால் சீரழிக்க முற்பட வேண்டாம். அதன் விளைவால் பாதிப்படைய போவது, அப்பாவி இசுலாமியர்களே என்பதை இந்த அடிப்படைவாத மதவெறியர்கள் புரிதல் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் போன்ற ஹிந்து அமைப்புகளை எதிர்க்கும் இசுலாமியர்களின் எண்ணிக்கையை விட ஹிந்துக்களின் எண்ணிக்கையே அதிகம். காரணம், அடிப்படைவாத மதவெறியை யார் செய்தாலும் எதிர்ப்பதே இம்மண்ணின் பண்பாட்டு கூறுகளில் ஒன்று. ஏனெனில் வெறுப்புணர்வை தூண்டும், தான் சார்ந்த மத அமைப்புகளே எதிர்க்கும் நேர்மை ஹிந்துக்களிடம் உண்டு. அந்த நேர்மையையே இசுலாமியர்களிடம் எதிர்பார்க்கிறோம். 'இசுலாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் சிரியா' என்ற ISIS அமைப்பை போல இம்மண்ணிலும் தனித்தனி இசுலாமிக் பஞ்சாயத்துகளை ஒவ்வொரு ஊரிலும் கட்டமைக்கலாமென நினைப்பதை கைவிடுவதே இன்றைய காலத்திற்கு நல்லது.

- இரா.ச. இமலாதித்தன்

03 மே 2019

’சுயமரியாதை சுடரொளி’ எஸ்.இராமச்சந்திரனார்!



வாங்காத விருதுக்கு 250 பக்கத்தில் ஒரு புத்தகம் ஒரு கேடா? ஒருபக்கம், ஈ.வெ.ரா. தான், சாதியை ஒழித்தாரென திராவிடவாதிகளெல்லாம் தம்பட்டம் அடிக்கின்றனர். ஆனால், ஈ.வெ.ரா பற்றிய படத்திற்கு தலைப்பே நாயக்கர் என்ற அவரின் சாதிப்பெயரிலேயே வெளியிட்டனர். வைகோ கூட முன்பொருமுறை, ஈ.வெ.ரா.வின் நாயக்கர் என்ற அவரது சாதிப்பட்டத்தை சேர்த்தே கடிதம் எழுதி கேரள முதல்வருக்கு அனுப்பிருந்தார். இதுபோல பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

எதற்கெடுத்தாலும் ஈ.வெ.ரா. புராணம் பாடும், திராவிட வாதிகளுக்கு, தன் இறுதி மூச்சு வரை,தனிமனித ஒழுக்கம், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, மதுஒழிப்பு, பெண்விடுதலை போன்ற தளங்களை தென்மாவட்டங்களில் உருவாக்கி, தன் வாரிசுகளும் அதைக்கடைப்பிடிக்கும் வகையில் செய்த எஸ்.இராமச்சந்திரனாரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1929ம் ஆண்டு பிப்ரவரி 17,18ம் தேதிகளில் செங்கற்பட்டில் நடைபெற்ற 'தமிழ் மாகாண சுயமரியாதை' மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னாலுள்ள “சேர்வை”எனும் அகமுடையாருக்கான சாதிப்பட்டத்தைத் துறந்த 'சுயமரியாதை சுடரொளி' வழக்குரைஞர் சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் போன்றோரின் புகழை மறைத்தது தான் திராவிடத்தின் வெற்றி.

யார் அந்த எஸ்.இராமச்சந்திரனார்?


1925ம் ஆண்டில் பனகல் அரசர் தலைமையில் அம்ரோட்டில் நடைபெற்ற பிராமணர் அல்லாதார் மாநாட்டில் பங்கேற்ற தமிழக பிரதிநிதி இவர்தான்.

1926ஆம் ஆண்டு முதல் அரசியல் அதிகாரப்பணியான ஜில்லா போர்டு தலைவராகவும், இராமநாதபுரம் மாவட்ட கல்விக்கழகம்,மதுவிலக்கு கமிட்டி,தேவஸ்தான கமிட்டிகளில் பொறுப்பு வகித்து,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிந்தார்.

1927ம் ஆண்டு சூலை 20,21ம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட மாநாடு, ஈரோட்டில் நடைபெற்ற மதுவிலக்கு மாநாடுகளில்.தலைமை தாங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களின் குறைகளை உடனுக்குடன் போக்கிட பாடுபட்டார்.

நீதிமன்றங்களில் தன் வாதத்திறமையால் சமஸ்தானத்துக்கும் தான் சார்ந்த இயக்கத்துக்கும் நற்பெயர் பெற்றுக்கொடுத்தார்.

சிவகங்கை நீதிமன்றத்தில் பிராமணர்களுக்கு தனியாக குடிநீர் பானை இருந்ததை நீதிபதி முன்பாக போட்டு உடைத்து சமூகநீதி பற்றி அவர் செய்த வாதம் இன்றும் அங்கு முத்தாய்ப்பாக பேசப்படுகிறது.

”இந்தக்கையால் எந்த பிராமணருக்கும் ஆதரவாக கையெழுத்திட மாட்டேன்”என்று சபதம் செய்தவர்.

நீதிகட்சி ஆட்சியில் சட்ட அமைச்சராக ஆகிட இவருக்கு வாய்ப்பு வந்தபோது, சமூகப்பணியாற்றிட அமைச்சர் பதவி தடையாக இருக்கும் என்பதால் அந்த வாய்ப்பை உதறியவர்.

இவர் போன்ற திறமை வாய்ந்த வழக்கறிஞர் காங்கிரசுக்கு வரவேண்டும் என மதுரை வைத்தியநாத ஐயர் இவரை அணுகிய போது,”மனிதரில் ஏற்ற தாழ்வைக்குறிக்கும் பூணூலை நீங்கள் கழற்றினால் அது பற்றி ஆலோசிக்கலாம்”என்று சொன்னவர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இவர் நடத்திய ஆதிதிராவிடர்கள் மாநாடு தான், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச்சென்ற நிகழ்வுக்கு முன்னோடி சம்பவமாகவும் அமைந்தது.

- இரா.ச. இமலாதித்தன்


(தகவல்: திரு.அரப்பா)

08 நவம்பர் 2018

தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர் தேர்வின் அத்துமீறல்!



தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் இனி ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கப்போவதாக அறிவிப்பு செய்திருக்கின்றனர். தமிழரல்லாதவர்களை தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்களாக திணிக்கவே இம்முயற்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தமிழில் கேள்வித்தாளை அமைப்பதற்கான நபர்கள் இல்லையென்று காரணம் சொல்லிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பாகவே வெளி மாநிலத்தவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுதி தமிழ்நாட்டு அரசின் ஊழியர்களாக வரலாமென திருத்தம் செய்தனர்.

இப்போது குரூப் 2 தேர்வுகள் போன்றவற்றிலும் தமிழ் மொழி வழியிலான கேள்விகள் இல்லையென்றால், வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும், ஆங்கில வழிக்கல்வி பயின்றவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் எளிதாக தமிழக அரசாங்க பணியாளர்களாக அமர்த்தப்படுவார்கள். PSTM என்ற தமிழ்மொழி வழியிலான பள்ளிப்படிப்பை படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இங்கிருக்கிறது. அதை இல்லாதொழிக்கவும், தாய்மொழி, மாநில மொழிகளின் அடிப்படையிலான இடப்பகிர்வை பறித்து கொள்ளவுமே இம்மாதிரியான அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன.


பொருளாதார அடிப்படையில் இடைநிலை/கீழ்நிலை குடும்பத்தில் பிறந்து, முதல் பட்டதாரியாக உருவெடுத்து, சமூகத்தில் புறக்கணிக்கப்படும் எத்தனையோ லட்சம் பேருக்கான கடைசி நம்பிக்கை இந்த டி.என்.பி.எஸ்.சி. போன்ற தேர்வுகள் தான். இந்த தேர்வுகளுக்காக, தனியார் வேலைகளை துறந்து, வாடகைக்கு தனியறை எடுத்தும், கோவில்களில் தங்கியும், கூட்டாக படித்து மாத கணக்கில் அல்லும் பகலும் தங்களை தகுதிப்படுத்தி வருகின்றனர். அந்த எளியோரின் கனவெல்லாம் அரசு வேலை மட்டுமே. அதற்கு பின்னால் தான், அவர்களது வாழ்க்கையே தொடங்கவிருக்கிறது. அந்த கனவில் மண்ணையள்ளி போடும் கயவர்களை கண்டிக்க இளையோர் ஒன்று கூட வேண்டும்.

இட ஒதுக்கீடு / அரசு ஊக்கதொகை / கல்லூரி சேர்க்கை உள்பட, எல்லா வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கும் அகமுடையார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கென இருக்கும் ஒரே ஆயுதம், அரசு வேலை தான். குறிப்பாக பெரும்பான்மையானோரில் தமிழ்வழி கல்வி பயில்வோரின் எண்ணிக்கையே அதிகம்; அதிலும் இப்படியான குளறுபடி. அனைவரும் தங்களது பக்கத்தில், இச்செயலை எதிர்த்து பதிவு செய்து கண்டியுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

#TNPSC#TNPSCExam

06 நவம்பர் 2018

சர்கார் - திராவிட அரசியலின் முகமூடி அவிழ்ப்பு!



சூப்பர் ஸ்டார் விஜயின் 'சர்கார்' படத்தில் முழுக்க முழுக்க குறியீடுகளே நிரம்பிருக்கின்றன; அனைத்துமே அரசியல் குறியீடுகள். கடந்த ஐம்பதாண்டு கால திராவிட அரசியலின் ஆணிவேரை அசைத்து பார்த்திருக்கிறது இந்த படம். திராவிட அரசியலில் நடந்த / நடக்கின்ற, நாம் கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்ற அத்தனை அவலங்களையும், இந்தப்படம் பேசி இருக்கிறது.

பழ.கருப்பையா பாத்திரம் அப்படியே கருணாநிதியை நினைவுபடுத்துகிறது. ராதாரவியின் பாத்திரம் மூன்றுபேரை ஒத்திருக்கிறது; ராதாவியை 'ரெண்டு' என அடையாளப்படுத்தப்படுவதிலும் குறியீடு இருக்கிறது. அந்த இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் அன்பழகன் - துரைமுருகன் - ஸ்டாலின். இந்த மூவரில் குறிப்பாக ஸ்டாலினையும் துரைமுருகனையும், ராதாரவியின் செயல்பாடுகள் நினைவுபடுத்துகிறது. தாய் கழகத்துடன் இணைப்பு விழா என்பது போன்ற அரசியல் நிகழ்வில் மின்னொளி விளக்கில் பழ.கருப்பையாவின் உருவம் அப்படியே கருணாநிதியை போலவே இருக்கும்.

பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமியின் பாத்திரம், மூன்றுபேரை நினைவுபடுத்துவதாக இருக்கிறது; ஒன்று, கனிமொழி; இரண்டு, ஜெயலலிதா; மூன்று, சசிகலா. அடுத்து, பழ.கருப்பையாவும், ராதாரவியும் வரலட்சுமியை 'பாப்பா' என்றே எல்லா இடங்களிலும் அழைப்பதும், விஜய் கூட ஓரிடத்தில் 'பாப்பா' என நேரடியாக சொல்வதும், வரலட்சுமியின் கதாபாத்திர பெயர் 'கோமளவல்லி' என்று இருப்பதும், அப்படியே ஜெயலலிதாவையே நினைவூட்டுகிறது. மேலும் அந்த வரலட்சுமியின் கதாபாத்திரம் மூவரை உள்ளடக்கிய கலவையான பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அம்மூவரின் குணாதிசயங்களையும், நடவடிக்கைகளையும் அந்த பாத்திரம் வெளிக்காட்டுகிறது.

படத்தின் டைட்டிலில் சூரியனோடு சிங்கம் இருக்கின்ற கொடியை கொண்ட அரசுக்கும், புலிக்கொடியை கொண்ட அரசுக்கும் போர் நடந்து, இறுதியாக புலிக்கொடி வெல்வதாக காட்டிருக்கின்றனர். மேலும், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆக்கிரமிப்பது போலவும் ஒரு காட்சி கட்டப்பட்டிருக்கும். பிறகு, நேதாஜியும் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஜானகி தேவரும் இராணுவ உடையோடு படை வீரர்களுக்கு இடையே நடந்து வரும் காட்சி காட்டப்படும்; அதனை தொடர்ந்து காந்தி, நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் என பட்டியல் நீளும். கடைசியாக ஒரு கருடன் பறந்து வந்து, இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டுக்குள் புகுவதை போன்றதொரு காட்சியும் அமைத்து இருப்பார்கள். கூடவே புலிக்கொடி பெரிதாக காட்டப்படும்.

இந்த புலிக்கொடிக்கு பின்புலமாக மூன்று வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றன; முதலாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற) சோழர்கள் தெற்காசியாவையே புலிக்கொடியோடு ஆண்டனர். அதற்குப் பிறகான நேதாஜியின் புலிக்கொடியும், ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனியின் வணிக கூட்டாட்சிக்கு எதிராக இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்து, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியது. மூன்றாவதாக, புலிக்கொடி அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூலம் மீண்டும் பட்டொளி வீசி பறக்க விடப்பட்டது; உலக வரலாற்றில்ல் ஒரு போராளி இயக்கம் முப்படைகளை வைத்திருந்த பெருமைமிகு சாதனையையும் தமிழீழ புலிக்கொடி உருவாக்கி கொடுத்தது.



சுந்தர் ராமசாமியாக வரும் விஜய் தன்னை மீனவனாகவே பல இடங்களில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தனது பூர்வீகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவக் குடும்பம் என்பதாகவும், தன்னுடைய அப்பா சிங்கள ராணுவத்தால் கடலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சொல்லிருப்பார். தொடர்ச்சியாக பக்கத்து நாட்டு இராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டுக் கொல்கிறது என்பதையும் பேசிருப்பார்.

மெர்சலில் பல இடங்களில் வருவது போல தன்னிரு கைகளை குறுக்கு வெட்டாக வைத்து கருட முத்திரையை சர்க்காரிலும் அரசியல் மேடையில் க்ளோசப் காட்சியாக விஜய் காட்டியிருப்பார். மேலும் நான்கைந்து காட்சிகளில் இரண்டு கைகளையும் விரித்து சிறகுகள் போல ஒரு குறியீட்டை காட்டியிருப்பார்.

கருணாநிதி, அண்ணாதுரை, அண்ணா அறிவாலயம், அண்ணா சிலை, மதிமுக கட்சிக்கொடி, ஸ்டாலின், துரைமுருகன், சூரிய சிங்கக் கொடி, புலிக்கொடி, கிழக்கிந்திய கம்பெனி, கருடன், ஜெயலலிதா, கனிமொழி, சவுக்கு சங்கர், மெரினா சமாதி, அ.இ. என தொடங்குகின்ற கட்சிப்பெயர், அப்போலோ மருத்துவமனை வீடியோ காட்சிகள், ஒரு தலைவரின் மரணத்தை வைத்து செய்யப்படுகின்ற அரசியல், இப்படியான அனைத்து தரப்பட்ட திராவிட அரசியலின் இன்னொரு முகத்தை பல குறியீடுகளோடு இந்த சர்க்கார் சொல்லிருக்கிறது.

கோமலவள்ளி என்ற பெயருக்கு பதிலாக வேறொரு பெயரை வைத்திருந்தால், திமுக, அமமுக போல அதிமுகவும் நேரடியாக சர்காரை எதிர்த்திருக்க மாட்டார்கள். கோமலவள்ளி தான் ஜெயலலிதா என நம்பும் இவர்களுக்கு மாசிலாமணியாக வரும் பழ.கருப்பையா யார்? ஐம்பத்தைந்து வருட அரசியல், மூன்றாம் தலைமுறை அரசியல், தலைவர் முகமே ஒரு பிராண்ட், என்பதெல்லாம் தமிழக அரசியலில் யாரை குறிக்கிறது? பெயரளவில் மட்டும் கோமலவள்ளியாக வரும் வரலட்சுமியின் நடை, உடை, பேச்சு, உடல்மொழி இவையெல்லாம் யாரை குறிக்கிறது? தலைவர் தலைவரென சொல்லும் 'ரெண்டு' ராதாரவியின் உடல்மொழி யாரை முன்னிறுத்துகிறது? இவையெல்லாம் யாருக்குமே தெரியவில்லையா? இல்லை; தெரிந்தும் தெரியாததது போலவே இருக்கின்றீர்களா?

விஜயின் அரசியல் வருகையை பற்றியெல்லாம் இன்றைக்கு தலைப்பு செய்திகளாக ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தனது முதல் அரசியல் நகர்வை 2011ம் ஆண்டே நாகப்பட்டினத்தில் தான் விஜய் தொடங்கினார். குறிப்பாக மீனவர்கள் பிரச்சினைக்காக அவரது முதல் அரசியல் கூட்டம் நாகையில் தான் நடந்தது. இந்த கண்டன கூட்டமானது, பெரிய கட்சியின் அரசியல் மாநாடு போல மாறிப்போனது. அன்று கூடிய கூட்டத்தையும், நிரம்பிருந்த வாகன நெரிசலையும் அவ்வளவு எளிதாக இங்குள்ள எந்த அரசியல்வாதியாலும் மறந்துவிட முடியாது. அன்றைய கூட்டத்தில், "தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி, கொன்று கொண்டிருந்தால் உலக வரைபடத்தில் இருந்து இலங்கை காணாமல் போகும்" என்று அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பின்னால் அவரது படங்களெல்லாம் இலங்கையில் திரையிட முடியாத அளவுக்கு கூட பிரச்சினை உருவானது.

இந்த படத்திலும் சாட்டை முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர் சேகரித்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை, நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவரே கொடுப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது விஜய் சொல்லுவார் "இந்த இன்னிங்சில் முக்கியமான ஓவரின் பெரிய சிக்ஸர் நீங்கள்தான்" என்று... இதை அந்த அரசியல் கண்ட பொதுக்கூட்டத்தோடும் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

டைட்டில் காட்சியில் ஈ.வெ.'ராமசாமி'யின் படத்தை காட்டியும், கதாநாயகனுக்கு சுந்தர் 'ராமசாமி' என்ற பெயரை வைத்திருந்தும், அந்த ஈவேராவின் அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்திய 50 ஆண்டுகால திராவிட அரசியலின் மற்றொரு முகத்தை கிழித்திருக்கும் துணிச்சலுக்கு பாராட்டுகள்!மற்றபடி இந்த படம் அனைவருக்கும் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. நம்மை சுற்றியுள்ள ஓட்டரசியலை யார் தான் பேசுவது? என்ற பூனைக்கு மணி கட்டிருக்கின்றனர். அன்று விஜய் சொன்னது போல, உண்மையாவே அரசியலில் மெர்சல் செய்திருக்கின்றனர். உள்ளூர் அரசியலுக்குள்ளும் உலகரசியலின் பங்கு இருப்பதை புரிந்து கொண்டவர்களுக்கு சர்க்காரின் தேவையும் புரியக்கூடும். ரசிகனாக, தமிழனாக, வாக்காளனாக, இந்த சர்க்கார் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்




01 ஜனவரி 2018

தமிழ்நாட்டை தமிழன் ஆளக்கூடாது!

Image may contain: 1 person, smiling

இதையே நாங்க சொன்னால், கண்டவனுக்கு பிறந்தவனெல்லாம் தமிழனை கன்னடனோ - தெலுங்கனோ - மலையாளியோ - மரட்டியனோ தான் ஆள வேண்டுமென அவனின் காலை நக்குவார்கள். ஆன்மீக அரசியலென்ற வேதம் சொல்லி ஆளத்துடிக்கும் பூதங்களின் கனவை கலைத்து, ஆண்மையான அரசியலை - ஆளுமையான அரசியலை நாம் தமிழராக எழுந்து செய்ய வேண்டும். "நல்லவன் வாழ்வதும், வல்லவன் ஆள்வதும் தான்!" காலம் நமக்கும் உணர்த்தும் உண்மை. காலம் நம் பக்கம் சிறகுகளை விரித்து காத்துக் கொண்டிருக்கிறது; இம்மண்ணை நாமே ஆள்வோம்!

27 டிசம்பர் 2017

ரஜினி, டிசம்பர் 31!

தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை 31ம் தேதி அறிவிப்பதாக ரஜினி சொல்லிருக்கிறார். இதில் எந்த ஆண்டின், எந்த மாதத்தின் 31ம் தேதியென்றே தெரியவில்லையென்று குழப்பம் தான் பலருக்குள்ளும் இருக்கிறது. ஒருவேளை அந்த 31ம் தேதி இம்மாதமென்றால், 31.12.2017 தேதியில் தன் அரசியல் பிரவேசத்தை அவர் அறிவிப்பாரென கணக்கில் கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசி - பெளர்ணமி - ஞாயிறு என பல கணக்கீடுகள் அந்நாளை தொடர்பு படுத்தி இருந்தாலும், ராகு+சனி ஆதிக்கத்தோடு இருக்கின்ற அந்த 31ம் தேதி அறிவிப்பால், ராகு காலமோ, ஜென்ம சனியோ இம்மக்களுக்கு பீடித்திருக்காமல் இப்பிரபஞ்சம் பேரருள் புரியட்டும்.

26 டிசம்பர் 2017

குருக்கள் மூர்த்தியின் ஆண்மையான அரசியல்!

ஆண்மையை பற்றி எவனவன் பேசணும்ன்னு அருகதையே இல்லாம போச்சு. 'பொட்ட பயலுக' என்ற தொனியில் விமர்சித்திருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தியை கைது செய்ய வக்கிருக்கிறதாயென பலரும் அதிமுகவின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணியினரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கைது கூட வேண்டாம்; அவாளை எதிர்த்து அதே பாணியில் பதிலுரைத்தாலே போதுமென நினைக்கிறேன். ஏனெனில் ஆண்மையற்றவர்களை ஆண்ட பரம்பரையென சொல்வதில் அர்த்தமே இல்லை.

Image may contain: 2 people, text

14 டிசம்பர் 2017

சாதி மறுப்பு திருமணத்தின் மறுபக்கம்!

இந்த அரச கொலைக்கு எதிராக பதிவிட அவர்கள் குடும்பம் சார்ந்த குறிப்பிட்ட சாதியான கள்ளர் என்பது காரணமில்லை. பக்கத்து வீடு தீப்பற்றி கொண்டால் நம் வீடும் நாளை பற்றிக்கொள்ளும் என்ற அடிப்படையில் தான் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். இதில் அகமுடையார் மட்டுமல்ல; திருமணம் என்பதே குடும்ப கெளரவம் சார்ந்தது என்ற அடிப்படையில் வாழும் அனைத்து இனக்குழுக்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். குடும்பமென்ற உயரிய அமைப்பின் கெளரவத்தை பாதிக்கும் பிரச்சனையாக பார்க்கும் பெற்றோர்களின் ஆதரவு இல்லாத சாதி மறுப்பு திருமணங்களை எதிர்க்கும் அனைவருமே இந்த நீதிமன்ற கொலையை எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள். இதில் முக்குலமும் இல்லை; அதில் அகமுடையாரும் இல்லை.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்ற கணக்கீடெல்லாம் இதற்கு ஒத்து போகாது. அப்படி பார்த்தால், இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் வன்னியரும், நாடாரும் கூட இருக்கின்றனர். அவர்களுக்கும் கள்ளருக்கும் என்ன சதை உறவு இருக்கிறது? இதை குறிப்பிட்ட சாதியின் பிரச்சனையாகவோ, சில சாதி கூட்டமைப்புகளின் பிரச்சனையாகவோ பார்க்க வேண்டியதில்லை.
எல்லா சாதிகளிலும் பெரும்பான்மையானோர் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய சாதியை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்வதற்கே இங்கு எதிர்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதில் சாதி மட்டும் பிரச்சனை இல்லை; சாதியோடு சேர்ந்த பொருளாதார நிலையும் தான் ஒவ்வொரு திருமணங்களையும் முடிவு செய்கின்றன. இந்த விசயத்தில் சாதிக்கும் சதைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. ஏனெனில் ஒரே இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ள அதே சாதியில் காதலித்து திருமணம் செய்வதும் கூட இப்போதெல்லாம் எளிதல்ல.

12 டிசம்பர் 2017

கெளசல்யா!

தன்னை பின்னாலிருந்து இயக்குபவர்களை பற்றி தன் வாயாலேயே இதே ஊடகங்கள் முன்பாக பச்சை பச்சையாக கிழித்தெறியும் நாளும் தொலைவில் இல்லை. அப்போ வந்து, ”பார்த்தீங்களா வீரத்தை; இவள் எங்க குல நாச்சியார்டா!”ன்னு எவனும் கம்பு சுத்திடாதீங்க.

சாதி மறுப்பு திருமணங்கள் தோல்வியே!

Image may contain: 2 people, text



சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொண்ட 99% பெண்கள், தங்களது பெற்றோர்களின் அருமை பெருமைகளை திருமணமாகி சரியாக ஆறு மாதத்திற்குள்ளாகவே தெரிந்து கொள்கிறார்கள். எத்தனையோ பெண்கள், வெளியே சொல்ல முடியாமலும் - வேற வழியில்லாமலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறன்றனர் என்பதே எதார்த்த கள நிலவரம். இது நாமாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கை; அதனால் நடப்பவைகளை வெளியே சொன்னால் நம்மளோட முடிவை எல்லாரும் ஏளனம் செய்வார்களென்ற எண்ணத்தாலே போலியாக வாழும் பெண்களே இங்கு அதிகம். இந்த சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக இவ்வளவு பேச வேண்டியதே இல்லை. ஓர் ஆய்வுக்காக, சாதி மறுப்பு செய்த பெண்களின் தங்கைக்கோ - நெருங்கிய தோழிகளுக்கோ, தன்னைப்போலவே சாதி மறுப்பு திருமணத்தை செய்ய அறிவுரை கூற சொல்லுங்கள் பார்ப்போம்; கண்டிப்பாக ஒருபோதும் அப்படியோர் அறிவுரையை கூற மாட்டார்கள்.
குடும்ப கெளரவத்தை மீறி, தங்களின் சம்மதமின்றி சங்கரை திருமணம் செய்து கொண்டதை கேள்விபட்ட போதே கெளசல்யாவின் தந்தை இறந்திருப்பார்; இப்போது விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையானது அவரது உடலுக்கு மட்டும் தான். என்னை பொறுத்தவரை, சங்கரை இவர்கள் ஒன்றும் செய்யாமல் விட்டிருந்தாலேயே, கெளசல்யாவே கதறிக்கொண்டு இவர்களை தேடி ஆறு மாதத்திற்குள் வந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இப்போதோ, மனம்பிறழ்ந்த நிலையில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொல்ல வேண்டுமென்ற மூளை சலவை செய்யப்பட்டவராக உருவாக இவர்களே ஒருவகையில் காரணமாகி விட்டனர்.
ஐந்து வயது கூட நிரம்பாத விழுப்புரம் நந்தினியை பாலியல் கொலை செய்த ஜெயபிரகாஷிற்கு மரண தண்டனை கொடுத்தாகி விட்டதா? சமீபத்தில், கடலூர் ஆனந்தனை தீயிட்டு கொளுத்திய சாதிவெறி கும்பல்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாகி விட்டதா? சென்னையில் ஹாசினி என்ற பச்சிளங்குழந்தையை பாலியல் கொலை செய்து ஜாமீனில் வெளிவந்து, தான் பெத்தெடுத்த தாயையும் கொன்று விட்டு மும்பையில் கைதான பின், தன் தந்தையையும் கொல்லத்தான் திட்டமிட்டிருந்தேனென கெளரமாக சொன்ன ஆணவ கொலையாளி தஷ்வந்த் போன்றவர்கள் தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை காறி உமிழ சரியான நபர்கள். ஒரு கொலைக்காக, ஆறு கொலைகளை திட்டமிட்டு செய்ய தீர்ப்பு வழங்கிய சட்டமும் தீர்ப்புகளும் வாழும் இம்மண்ணில், இனி பல பாலியல் கொலைகளும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்க போகிறது... த்தூ

10 டிசம்பர் 2017

மார்க் ஜூகர்பர்க்கின் மன்னிப்பு!

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இணைய ஊடகமான இந்த முகநூலும் கூட அவர்களின் மற்றுமோர் ஆயுதம் தான். அதையும் நமதாக்கி கொண்டதற்கு தைப்புரட்சியும் ஒரு சின்ன எடுத்துக்காட்டே! இங்கே நடப்பவையெல்லாம் நிகழ்காலமோ - எதிர்காலமோ சம்பந்தப்பட்டதல்ல; கடந்தகால தொடர்புள்ளது. அதனால் தான் இத்தனை ஆண்டுகளாக முயற்சித்தும் இவ்வினத்தை யாராலும் வெற்றிப்பெற முடியவில்லை. கடைசியில் வெளிப்படையாக யாரிடமோ மன்னிப்பெல்லாம் கேட்டு, தோல்வியை மறைமுகமாக ஒத்துக்கொண்டார் மார்க் ஜூகர்பர்க்.


06 நவம்பர் 2017

கார்ட்டூன் மட்டுமல்ல; கந்து வட்டியும் கூட வன்மம் தான்!






இந்த ஒரேவொரு கார்ட்டூனுக்காக பாலா கைது செய்யப்பட்டிருக்கிறார்; இப்போது இதை ஓராயிரம் பேர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போது எத்தனை பேரை கைது செய்ய போகிறது இந்த பினாமி அரசு? நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கார்ட்டூனிஸ்ட் பாலாவின் பக்கம் நிற்கிறேன். இந்த கார்ட்டூனை வெளியிட்டதே கேவலமான மனநிலையென்றால், ஒரு குடும்பத்தையே கொலையிட வைத்தவர்களின் மனநிலையும் கேவலமான, அருவருப்புதான் என்ற எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாகரீகம் அநாகரீகம் என்பது அவரவர் பார்வையை பொறுத்தது; சிலருக்கு லெக்கின்ஸ் நாகரீகமாகவும், பலருக்கும் அநாகரீகமாகவும் தெரியும். அது போலத்தான் இந்த குறைபாடும். கார்ட்டூன் என்பதே சொல்ல வருகின்ற கருத்தை பொட்டில் அறைந்தாற் போல் சொல்வதற்காக தான். இங்கே மயிலிறகோடு தேனை தடவியெல்லாம் சொல்ல முடியாது. அந்த படத்தில் சொல்லப்பட்டது தாழ்ந்த போனதாக தெரியும் பலருக்கு , ஒரு படத்திற்காக தேடிப்போய் கைது செய்திருக்கும் தாழ்வானது தான் என்பது புரியவில்லை என்பதும் ஆச்சர்யம் தான். இங்கே லெக்கின்ஸ் என்பது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. கலச்சாரம் வரை செல்லவேண்டியதில்லை; ஏனெனில் அன்று, ஆண்களுக்கு மேல் சட்டை அணியாத கோமணமும் கலச்சாரமாக தான் இருந்திருக்கிறது. அன்றைய பெண்களுக்கு மாரப்பு மட்டுமே கலச்சாரம். இதை இதோடு தொடர்பு படுத்தி வேண்டிய அவசியமில்லை. எது நாகரீகம்? எது அநாகரீகம் என்பதை பற்றிய அளவீடு காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல் மாறிக்கொண்டே போகும். எடுத்துக்காட்டான அதை விடுத்து, கந்து வட்டியை பேசிய அந்த கருத்துப்படம் சரியானதே. கொசு தொல்லையாக இருந்தால் அதை தடவி கொடுக்க முடியாது; அடிக்கத்தான் வேண்டும். அதை அநாகரீகம் என நினைத்து கொசுவை மட்டுமே ஓட்டிக்கொண்டிருப்பது தான் உங்களுக்கு நாகரீகம் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.


நூறு வார்த்தைகள் சொல்ல வேண்டியதை ஒரு கருத்து படம் சொல்லும்; சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என்ன? அதுபோல, பெரும்பாலானோரின் கருத்தை படமாக்கி இருக்கும் ஒருவரை கைது செய்திருப்பது அயோக்கியத்தனம். ஆளும் வர்க்கத்தை விமர்சனம் செய்யவே கூடாது என்பது காட்டாட்சியின் எடுத்துக்காட்டாகவே அமையும். சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் வேண்டுமென்றால் குறை காண முடியும்; சொல்லிய கருத்தில் குறையே இல்லை. படைப்பாளிகளை கைது செய்தால் மட்டுமே, வெகுஜன எதிர்ப்பை கட்டுப்படுத்தி விட முடியாது என்பதை காலம் உணர்த்தும்.  அமெரிக்கா பற்றிய கார்ட்டூனில் கூட அம்மணமாக்க பட்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதனால் அங்கே இதுபோன்றதொரு கைது நடக்கவில்லை.




கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கருத்து படம் அநாகரீகமாக தெரிந்தால், ஒரு கருத்து படத்திற்காக கைது செய்திருக்கும் இந்த அரசின் போக்கு பச்சை அநாகரீகம் தானே? கருத்தை கருத்தால் எதிர் கொள்ள பக்குவம் வேண்டும். வானாளவிய அதிகாரம் இருப்பதாக இவர்கள் நினைத்து கொண்டால், அந்த அதிகாரத்திமிர் உடைத்த்றியப்படும். கந்து வட்டி கொடுமையால் பல முறை மனுகொடுத்தும் கண்டு கொள்ளாமல், மெளனித்திருந்தது யார்? இந்த மெளனத்திற்கு பின்னால் பலர் இருக்கின்றனர். அதில் முதன்மையான மூவரை மட்டுமே பாலா சுட்டிக்காட்டிருக்கிறார். தீக்குளித்து கொண்ட பகுதியையே அவசரகதியில் சுவர் எழுப்பி அடைத்தது எதனால் என்பதை யோசித்தாலே புரியும்; இவர்களுக்கு கந்து வட்டி கொடுமையை விட, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நம் வாசலில் கொளுத்திக்கொள்ள கூடாது என்பது மட்டும் தான் என்ற கையாலாகத தனம் புரிய வரும். அந்த கையாலாகத தனத்தை தான் பாலா படத்தில் வரைந்திருக்கிறார் என்று பார்க்கிறேன். இந்த கைது விசயத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை ஆதரிப்பது தான் எதிர்கால நலனுக்கானதாக இருக்க கூடும்.

வடக்கத்திய ஊடகங்கள் வரைக்கும் கொண்டு சேர்த்த அரசுக்கு பாலா கடமைபட்டவராகிறார். 

- இரா.ச.இமலாதித்தன்

04 அக்டோபர் 2017

அரசியல் களத்தில் ரஜினியும் கமலும்!



அரசியலுக்குள் வரத்துடிக்கும் ரஜினி - கமல் என்ற இரு நடிகர்களையும், கருணாநிதி - ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் - சிவாஜி என இந்த கூட்டணிகளோடு ஒப்பிட்டு, சில ஒற்றுமைகளை மட்டும் பார்ப்போம்.

01. இறை நம்பிக்கை:

அ. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, ரஜினி
ஆ. கமல், கருணாநிதி,


02. மொழி:

அ. சிவாஜி
ஆ. எம்.ஜி.ஆர், கமல்
இ. கருணாநிதி
ஈ. ரஜினி, ஜெயலலிதா

03. இனம்:

அ. ஜெயலலிதா, கமல்
ஆ. எம்.ஜி.ஆர்., ரஜினி, கருணாநிதி, சிவாஜி

04. மண்ணுரிமை:

அ. சிவாஜி
ஆ. ரஜினி, கமல், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா

05. மக்கள் செல்வாக்கு:

அ. கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினி
ஆ. சிவாஜி, கமல்

06. பேச்சு

அ. கருணாநிதி, ஜெயலலிதா, கமல்
ஆ. எம்.ஜி.ஆர்., ரஜினி, சிவாஜி

07. வசீகரம்:

அ. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கமல்
ஆ. கருணாநிதி, சிவாஜி, ரஜினி

- இது போல கலவையான பல ஒப்பீடுகள் இவர்களுக்குள் உண்டு. இவர்களில் இருவரும் நேரடியாக அரசியலுக்கு வந்தால், இழப்பு இருவருக்கும் ஏற்படும்; ஆனால், இருவருமே பண விசயத்தில் விசயாதிகள் என்பதால், இவர்களை நம்பி தேர் இழுப்பவர்கள் அடையாளமற்று போகவே வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை வருங்கால ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக, கருணாநிதிக்கு மாற்றாக கமலும், ஜெயலலிதாவுக்கு மாற்றாக ரஜினியும் உலகாளும் மேலிடத்தினரால் களமிறக்கப்பட்டிருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கமல் மட்டுமே கடைசியில் களத்தில் நிற்பார்.

- இரா.ச. இமலாதித்தன்

14 ஆகஸ்ட் 2017

அரசியல் ஆளுமைகளை அகமுடையார் என்பதால் ஏற்கிறோமா?- sarahah



ஐயா தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ஆகட்டும், அண்ணன் ஜாம்பவனோடை கருப்பு முருகானந்தம் ஆகட்டும் டெல்டாவிலிருந்து அரசியல் களம் கண்டு, மிகப்பெரும் பதவிகளையும் பொறுப்புகளையும் அவர்களது கட்சியில் பெற்றிருக்கின்றனர். டெல்டாவின் அரசியல் என்பதே கள்ளரான சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்த போது, அங்கிருந்து மற்ற சாதியை சேர்ந்தோர் மேலெழுவது அவ்வளவு எளிதான விசயமில்லை. அதிலும் டெல்டாவை பொறுத்தவரை தேவர் என அறியப்படும் அகமுடையார்களுக்கும் - கள்ளர்களுக்கும் எல்லா விசயங்களும் எதிரெதிர் துருவங்களில் தான் இருக்கின்றன; அதில் அரசியல் முதன்மையானது. குறிப்பாக சசிகலாவின் குடும்பத்தை பொறுத்தவரை அகமுடையார்கள் அரசியலில் மேலெழுவதை தடுப்பதற்காகவே தனித்த எச்சரிக்கையோடு காய் நகர்த்தி கொண்டிருக்கும் வேளையில், சுயம்பாக எழுந்து தாக்குபிடித்து தேசிய கட்சியின் மாநில பொறுப்பை ஏற்றிருக்கும் அந்த ஆளுமையை கொண்டாடமல் இருக்க முடியவில்லை. கடந்த சட்டமன்ற/ நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் கருப்பும், ஐயா டீ.ஆர்.பி.யும் எதிரெதிர் அணிகளாக தான் களம் கண்டார்கள் என்பது தனிக்கதை.

டெல்டாவிலுள்ள அகமுடையார் அனைவருமே ஏதோவொரு வகையில் தூரத்து உறவினராகவே இருப்பார்கள் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். டெல்டாவில் அகமுடையாரில் கோட்டைப்பற்று உட்பிரிவை சேர்ந்தவர்களே பெரும்பான்மை என்பதாலும், தளிக்கோட்டையை சுற்றியும், ஜாம்பனோடையை சுற்றியும் எனக்கு உறவினர்கள் இருப்பதாலும், அவர்களுக்கு இந்த இருபெரும் தலைவர்களும் உறவினர்கள் என்பதாலும், உறவு அடிப்படையில் பொது விசயங்களில் ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலும் அரசியலை ஏற்பது என்பது வேறு; அவர்களது ஆளுமையை போற்றுவது என்பது வேறு. தமிழ் தேசிய ஆதரவாளனான எனக்கு, மு.கருணாநிதியின் தளபதியென அறியப்படும் டீ.ஆர்.பாலு ஐயாவும், தமிழகத்தின் மோடியென அடையாளப்படும் கருப்பு முருகானந்தம் அண்ணனும் உறவினர்களாக தெரிகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

31 ஜூலை 2017

ரேசன் பொருட்கள் மானிய ரத்து - ஒரு பார்வை



வயல்களெல்லாம் வீடுகளாகி பல வருடங்கள் ஆகியாச்சு. ஊரோர ஒதுக்குபுறமெல்லாம் நியூ சிட்டிகளாகவும், புது நகரங்களாகவும் மாறி, முப்போகம் விளைந்த நிலங்களிலெல்லாம் வீடுகள் முளைத்து நிற்கின்றன. ப்ரீட்ஜுக்கு முன்பாகவே புளிசோறுவை கண்டுபிடித்த ஆதித்தமிழனின் எச்சங்களெல்லாம் ஏசி, ப்ரீட்ஜ்களோடு வாழத்தொடங்கி வருடங்கள் பல கடந்து விட்டன. குழந்தைகளாலும் மருமகள்களாலும் கைவிடப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் பென்ஷன் பணத்தையும் ரேசன் மானிய பொருட்களையும் நம்பியே ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதே எதார்த்தம்.

கல்விக்கு லோன் தர மறுக்கும் இதே வங்கிகள் தான், காருக்கு லோன் தர நடையாய் நடக்கிறார்கள். டோல்கேட் தொடங்கி ஜி.எஸ்.டி. வரைக்கும் வரிகட்டியே வாழ்க்கை நடத்தும் அனைவரையுமே பான்கார்டு முதற்கொண்டு ரேஷன்கார்டு வரைக்கும் ஆதார் கார்டோடு இணைக்க சொல்லும் போதே தெரியும்; ஹைடெக் பிச்சைக்காரர்கள் அதிகம் வாழும் நாடாக ஹிந்தியா மாறுமென!

த்தூ... உங்க ரேஷன் பொருட்கள் மட்டுமல்ல; உங்க டெல்லியும், உங்க ஹிந்தியும், உங்க ஆட்சியும் கூட எங்களுக்கு வேண்டாம். ஜென்ம சனி போல் பாடுபடுத்தும், எம்மை விட்டு எப்போது தொலையப் போகிறீர்கள்? அறுபது ஆண்டுகாலம் இல்லாது சமீப காலங்களாக அடிமையாக்க நினைக்கும் வடக்கத்திய ஆண்டைகளே, எம்மண்ணை எமக்கே கொடு; நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம்.

ஒருபக்கம், தமிழ்நாட்டை தாங்கள் தான் ஆள்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் பாஜகவின் பினாமி ஆட்சியான எடப்பாடி அரசாங்கமோ மாநிலத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதமானவர்களுக்கு மாத சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.

மறுபக்கம், அம்பானி - அதானி போன்ற வணிகர்களுக்கு பினாமியாக இருந்து கொண்டு, மதத்தையும் - பேச்சையும் மட்டுமே முதலீடாக கொண்டு மாநிலங்களிலெல்லாம் குட்டைகளை குழப்பி ஆட்சியென்ற மீன் பிடிக்கும் ஹிந்திய அரசாங்கமோ, நடுத்தர/ஏழை குடும்பங்களின் வாழ்வாதரங்களில் ஒன்றான மானியமாக தரப்பட்ட ரேசன் பொருட்கள் வரைக்கும் ரத்து செய்ய துடிக்கிறது.

சவலப்பிள்ளை போல தலை மட்டும் பெரிதாகி, உடல் முழுதும் சுருங்கி கிடக்கும் வருங்கால வல்லரசுக்கு நடுத்தர வர்க்கத்தில் பிறப்பெடுத்த உழவர் பெருங்குடி மகனாக எம் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

21 ஜூன் 2017

சூப்பர் ஸ்டார் விஜய்!






ஏறுதழுவும் காளைகள் பின்புலத்தில் மட்டுமில்லாது படத்தின் தலைப்பிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. தந்தையின் உதவியால் 'இளைய தளபதி' விஜயாக சினிமாவுக்குள் வந்தாலும், அதன் பின்னால் தன் உழைப்பால், தன் திறமையால் மட்டுமே உண்மையான 'சூப்பர் ஸ்டார்' விஜயாக வளர்ந்து நின்றாலும், 'தமிழன்' விஜய் என்பது தான் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது. ஹேட்டர்ஸ்களால் எத்தனை விதமான தரக்குறைவான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், அனைத்தையுமே தனக்கான படிகற்களாக நினைத்து மேலேழுந்து நிற்கும் திரு.விஜயின் திரைவருகைக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எத்தனையோ பிரபலமான அப்பாக்கள் தன் மகனை, சினிமாத்துறையில் நிலை நிறுத்த இன்றளவும் மெனக்கெடுகின்றனர்; ஆனால், யாரும் அவர்களது இலக்கை எட்டியதாக தெரியவில்லை. எத்தனை பெரிய ஜாம்பவான்களால் ஆரம்ப கால வாய்ப்பை மட்டுமே தன் மகனுக்கு உருவாக்கி கொடுக்க முடியும். அதை தொடர்ந்து தன்னை நிரந்தரமாக்க, நிச்சயமாக சுய திறமையும், கடின உழைப்பும், உண்மையான ஈடுபாடும் வேண்டும். அந்த வகையில் 'எங்கள் சூப்பர் ஸ்டார்' விஜய்க்கு நிகர் என்றைக்கும் அவர் மட்டுமே!

(கண்ணாடி பார்வையில் மெர்சல் என்பது விஜய் போல தெரியும். ஆக்கம்: பிரகாஷ் காளீஸ்வரன்)


எங்கள் நாகப்பட்டினத்தில் முதன்முறையாக மாபெரும் அரசியல் அடையாள மாநாடு போட்டு, 'எங்கள் தமிழ் மீனவனை சிங்களவன் தாக்கினால், இங்குள்ள தமிழர்களெல்லாம் ஒன்றிணைந்து இலங்கையையே உலக வரைபடத்திலிருந்து நீக்குவோம்' என உணர்ச்சி வசப்பட்டு பேசியதால் சிங்கள இனவாத அரசால் அவரது படம் திரையிடப்படாமல் முடக்கப்பட்டும் கூட, தன் படத்திற்கு தமிழர்களின் அடையாளமான 'புலி' என பெயர் வைக்கும் போதும், 'அகதியான மக்களுக்கு தனி நாடு வேண்டும்' என 'வில்லு' பட காலத்திலேயே பாடல் வரிகளில் தன் விருப்பத்தை சேர்க்கும் போதும், சமீபத்தில் BehindWoods கொடுத்த 'People's most favorite and most popular actor' என்ற விருதை பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை பற்றி பேசாமல் விவசாயிகளுக்காக, 'வல்லரசு ஆவதை பிறகு பார்க்கலாம்; விவசாயிகளுக்கான நல்லரசாக இருங்கள்' என அரசாளும் அரசாங்கங்களை எதிர்த்து உணர்வோடு குரல் கொடுக்கும் போதும் தமிழனாக விஜய் பலரது மனங்களுக்கு நெருக்கமாகி விடுவதை எந்தவொரு ஹேட்டர்ஸாலும் தடுத்துவிட முடியாது.

எங்கள் சகோதரர் இயக்குனர் அட்லியின் மெர்சல் திரைப்படம், மெர்சலான வெற்றிபெற்று ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துகள்! வருங்காலத்தில் நிச்சயமொரு நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்க போகும், எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு 43ம் அகவை நல் வாழ்த்துகள்!

  ரசிகனாக,
- இரா.ச. இமலாதித்தன்

#IamWaiting 4 #Mersal

03 ஜூன் 2017

தமிழக அரசியலில் வரலாற்றில் தவிர்க்க முடியா பக்கம்!


முள்ளி வாய்க்காலுக்கு முன்பும் சரி; பிறகும் சரி, ஆயிரம் விமர்சனங்களும் துரோகங்களும் இருந்தாலும், ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தமிழக அரசியலில் கருணாநிதி என்ற பெயரை உச்சரிக்காமல் அரசியல் பேசாதவர் யாருமில்லை. கருணாநிதியே பேச முடியாமல் ஒதுங்கி இருக்கும் இன்றைக்கும் கூட அவரை விமர்சித்தாவது பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களாலே அரசியலில் வளர்ந்தவர்கள் இங்கே ஏராளம். அந்த வரிசையில் கருணாநிதி என்ற பெயர் என்றைக்கும் தமிழக அரசியலில் இடம்பெற்றே தீரும். எங்களது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற சிறிய கிராமத்திலிருந்து வெறும் மஞ்சள் பையோடு மட்டும் சென்று, உலகளாவிய புகழ் பெற்ற கருணாநிதியின் ஆற்றல் வியப்பிற்குரியது.

தன் பேச்சையும், எழுத்தையும் மட்டுமே முதலீடாக கொண்டு உலக பணக்கார வரிசையில் தன் குடும்பத்தை நிலைநிறுத்திய வல்லமை இனி வேறு யாருக்கும் வாய்க்க போவதில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனையோ பேர் திருட்டு ரயில் ஏறி தினம் தினம் சென்னைக்கு வந்திருக்கலாம். ஆனால் யாருமே மற்றொரு கருணாநிதியாக புகழ் வெளிச்சத்திற்கு வர முடியவில்லை என்பதே எதார்த்தம். நரேந்திர மோடி, பன்னீர்செல்வம், இளையராஜா, ரஜினிகாந்த் போல எளியவர்களும் மிகப்பெரிய உச்சத்தை தொட முடியுமென்ற நம்பிக்கையை அன்றைக்கே விதைத்த கருணாநிதியை புறக்கணித்து விட்டு, தமிழக அரசியலின் முழுமையான வரலாற்று பக்கங்களை ஒருபோதும் நிரப்ப முடியாது.

- இரா.ச. இமலாதித்தன்

27 மே 2017

சைவம்? அசைவம்!


எந்த கடவுளும் நேரடியாக வந்து, இதை சாப்பிடு; அதை சாப்பிடாதே என யாரிடமும் சொல்லவில்லை. தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தெந்த பகுதிகளுக்கேற்ப கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட்டு பரிணாம வளர்ச்சியடைந்தவன் மனிதன் தான். அதன் பிறகு பகுத்தறிந்து இதை சாப்பிடலாம்; அதை சாப்பிட வேண்டமென்று பட்டியலிட்டதும் இந்த மனிதன் தான்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி, முனிவராய், தேவராய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார்.

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என சொன்ன இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் கீரையை கூட சாப்பிடுவதில்லை; காரணம் கீரையை வேர் வரை பிடிங்கி ஓர் உயிரை சாகடித்து உண்பதால் அம்மார்க்கத்தினர் அதை உணவில் சேர்ப்பதில்லை. மாடு மட்டுமல்ல; மாடு சாப்பிடும் புல் கூட ஓர் உயிர் தான். அந்த மாட்டின் ரத்தத்தின் ஒருபகுதியான பால் கூட அசைவம் தான்.

எனவே கடவுளின் பெயரைச்சொல்லியோ, மதவாதிகளின் ஆதரவிற்காகவோ, எதையும் அதிரடியாக தடை செய்வதில் உடன்பாடில்லை. இவ்வுலகில் 'உணவுச் சங்கிலி' என்பது சரியான விகிதத்திலேயே தான் இயற்கையால் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றின் தேவை அதிகமானால், அந்த தேவைக்கான உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே தவிர, அந்த தேவையையே முடக்க கூடாது. உலகளாவிய அளவில் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஹிந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதை கவனித்தாலே, தடை செய்ய வேண்டியது எதுவென புரியும். வணிக சூழ்ச்சிகளால் சூழப்பட்ட உலகமயமாக்கலில் இனப்பெருக்கம் என்பதை கூட மேற்கத்திய நாட்டவன் கொடுக்கும் ஊசியை நம்பி வாழ பழகி விட்டோம். எனவே, நாம் இப்படித்தான் கருத்தடை, பலித்தடையென தடை போட்டு நம் வீரியத்தை தொலைத்து, கண்டவனிடமும் ஜெர்சி மாடுகளை போல இனி வருங்கால சந்ததி உள்பட எல்லாவற்றையும் யாசகம் தான் பெறுவோம்.

மாட்டின் கொம்புகளுக்கு கூட வண்ணம் தீட்ட கூடாதென்று தடை போடும் காரணத்தை கூட ஏனென யாரும் கேட்டதாக தெரியவில்லை. ஒருவேளை கொம்புகளுக்கு வண்ணம் பூசினால் மாடு இறந்துவிடுமா? ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொம்புக்கு வண்ணமடித்தால் தானே தனி மிடுக்கே வரும்? இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இன்னைக்கு மாட்டுக்கு தடை போட்டதும் மனமகிழ்கிறோம். ஒருவேளை ஜெயலலிதாவின் அறிவிப்பு போல, நாளை நம் குலசாமி கோவில்களில் பலியிடும் ஆட்டையும், சேவலையும் தடை போடும் சூழல் வரும் போது தான், அதன் தேவை புரியும். மாட்டுக்கறிக்காக எதையும் இங்கு சொல்லவில்லை; மாட்டுக்கறியெல்லாம் சாப்பிடும் பழக்கமும் எனக்கில்லை.

- இரா.ச. இமலாதித்தன்