29 செப்டம்பர் 2017

அகமுடையாருக்கு பட்டம் தான் முக்கியமா?





முக்குலத்தோர் என்றோ முதலியார் என்றோ எந்தவொரு சாதியும் இல்லாத போது, முப்பது வருடங்களுக்கும் மேலாக அதை மட்டுமே வைத்து அரசியலுக்காக பகடைக்காய் ஆக்கப்பட்டிருந்த அகமுடையார்களெல்லாம், எப்போது இந்த பட்டங்களை கடந்து அகமுடையார்களாக ஒன்றிணைவார்களென உண்மை உணர்ந்த உணர்வாளர்கள் பலரும் ஏங்கிய நாட்கள் உண்டு. இது எவ்வளவு கடினமானது என்ற எதார்த்தத்தை அறிந்து எத்தனையோ பேர் 'அகமுடையார்' என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தி வெவ்வேறு வழிகளில் அந்த இலக்கை அடையும் நேரத்தில் சிலர் செய்யும் குழப்பங்கள் கோபத்தை மட்டுமே வர வைக்கிறது.


என்னளவில் எனக்கு தந்தை வழியில் தேவர் பட்டம்; தாய் வழியில் பிள்ளை பட்டம். இந்த இரு பட்டங்களை மட்டுமே எல்லா இடங்களிலும் தூக்கி கொண்டிருந்தால் அகமுடையார் என்ற அடையாளத்தோடு எல்லாவற்றிலும் இயங்க முடியாது. ஆனால் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தன் சுயபெருமை பேசுவதற்காக மட்டுமே தனிப்பட்ட பட்டங்களை முன்னிறுத்தி அகமுடையார் என்ற எழுச்சியை சிலர் பாழாக்கி கொண்டிருக்கிறார்கள்.

வெண்ணெய் நிரம்பும் நேரத்தில் பானையை உடைத்த கதை போல சிலர் செய்யும் செய்கைகளால், இனி அகமுடையார் சார்ந்த அனைத்து பதிவுகளிலும் தேவன்டா என்றோ, தேவர் என்ற என் பட்டத்தையோ கீழே பதியலாமென இருக்கிறேன். சொந்த வரலாற்றையும் தேடத்தெரியாது. அகமுடையார் யாரென்ற வரலாறும் தெரியாது. தற்போதைய தேவை எதுவென்றும் தெரியாது. ஒற்றுமைக்கான வழியும் தெரியாது. ஆனால், சாதிப்பெயரான அகமுடையார் என்பதை கூட சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டுக்கொண்டு பட்டத்தை மட்டுமே தூக்கி சுமக்கும் இந்த கூட்டத்தை நம்பி ஒரு மயிரையும் பிடுங்க முடியாது.

- இரா.ச. இமலாதித்தன் தேவர்

#Mukkulathor #Mudaliar #Thevar #Agamudayar


பட்டத்தை மட்டுமே தூக்கி பிடிக்கும் அகமுடையார்கள், இந்த பறையர் இனக்குழுவை சேர்ந்த ஒருவரின் பதிவுக்கு பதில் சொன்னால் மகிழ்ச்சி. போற போக்கை பார்த்தால், அகமுடையார் என்ற இனக்குழுவே வரலாற்றில் இல்லைன்னு சொல்லிடுவாய்ங்க போல.

கோட்டைப்பற்று தேவன்டா! :)

(லிங் கீழே கமென்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.)

ஆயுதபூஜை வாழ்த்துகள்!



அரைகுறையான பகுத்தறிவு என்ற பெயராலோ, இடையில் வந்த மதத்தின் பெயராலோ இம்மாதிரியான சிறப்புமிக்க நாளை கொண்டாடமல் இருக்காமல் இருப்பது தான் மூடநம்பிக்கை. 'தூய்மை'யை போலியான விளம்பரத்திற்காக செயல்படுத்தாமல், அறிவுப்பூர்மாக அன்றைக்கே ஆண்டுக்கொரு ஒரு நாளை ஒதுக்கி நமக்குள் கட்டாயமாக திணித்தவர்களுக்கு நன்றி!

உறவுகளுக்கு, ஆயுதபூஜை வாழ்த்துகள்!

24 செப்டம்பர் 2017

அகம்படி குல வாணாதிராயர்கள் வெளியிட்ட நாணயங்கள்!







காலம்: கி.பி. 15ம் நூற்றாண்டு.
இடம்: மானாமதுரை (வாணாதிராய மதுரை) & மதுரை/அழகர்மலை
சிறப்பு: அனைத்து நாணயங்களிலும் ஒரு பக்கம் 'கருடன்' படம் பொறிக்கப்பட்டுள்ளது.

21 செப்டம்பர் 2017

மெர்சல் - டீசர்!






அடியேன் பிறந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில் பிறப்பெடுத்திருக்கும் அன்பிற்கினிய உடன்பிறவா இளைய சகோதரர் இயக்குனர் Atlee Kumar க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 'தளபதி' சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களின் 'மெர்சல்' ட்ரைலரையும் இந்நாளில் வெளியிட்டமைக்கும் ரசிகனாக வாழ்த்துகள்!

(விஜய் + ரஹ்மான் + அட்லி என்ற தமிழ் அக தமிழர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'மெர்சல்' நிச்சயம் மிரட்டலான வெற்றியை பெறுமென நம்புகிறேன்.)

மிகச்சிறப்பு!



"இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது" என்ற விவேகத்தில் பேசிய அஜித் பஞ்ச் போல, இந்த மாதிரியான தடையெல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்!

"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும்; நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்"

#PeaceBro!



எண்ணம் போல் வாழ்க்கை; ஆளப்போறான் தமிழன்!

ஒருவேளை மெர்சல் படத்தலைப்பு பிரச்சனைக்கு தீர்வே கிடைக்கவில்லையென்றால் 'ஆளப்பிறந்தவன்' என்று கூட வைக்கலாம்.

20 செப்டம்பர் 2017

அகமுடையார் குல வாணாதிராயர்!


பெயருக்கு பின்னால் வலுக்கட்டாயமாக 'பாண்டியன்' என்பதை சேர்த்து கொண்டும், 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' யென்ற சுயசாதி வரலாற்று நூலை எழுதிக்கொண்டும், தாங்களே பாண்டியர் என நிறுவ முயற்சிக்கும் பள்ளர் சாதி வரலாற்று(?) ஆர்வலர்கள், பாண்டியர்களை வீழ்த்திய 'வாணாதிராயர்'களையும் தாங்கள் தான் என சொல்லும் புனைவுகளையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பதா? வருத்தப்படுவதா? என்றே சில சமயம் குழப்பம் வருகிறது. இந்த வரலாற்று போதை எந்தளவுக்கு தலையேறி இருந்தால், சம்பந்தமே இல்லாதவற்றையெல்லாம் ஒன்றாக இணைத்து உளறிக்கொண்டிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
பாண்டியர் யார்? என்ற பஞ்சாயத்தே இன்னும் முடிவுக்கு வராத போது, அகமுடையார்களான வாணாதிராயர்களையும் பள்ளர் சாதி வரட்டு வரலாற்று(?) ஆர்வலர்கள் உரிமை கோருவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? சிவாஜி படத்தில் ரஜினி சொல்லும் "ஹிரோவும் நான் தான்; வில்லனும் நான் தான்" என்பது போல அனைவரது வரலாற்றையும் தன்னோட வரலாறென சொல்வதற்கெல்லாம் கூசவில்லையா?

16 செப்டம்பர் 2017

சிவகங்கை சீமை: துரோகமும் - பாசமும்!









மலேசியத்தமிழரான ப.சந்திரகாந்தம் எழுதிய "ஆளப்பிறந்த மருது மைந்தன்" நூலிலுள்ள கடைசி அத்தியாத்தில் சொல்லப்பட்ட செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும் - படமாத்தூர் கெளரி வல்லப தேவருக்கும் இடையேயுள்ள உட்பகையையும், சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும், மாமன்னர் சின்ன மருதுபாண்டியரின் வாரிசான துரைச்சாமி சேர்வைக்கும் உள்ள பாசப்பிணைப்பையும் விவரிக்கும் சில செய்திகள் இந்த பக்கங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.


- இரா.ச. இமலாதித்தன்

14 செப்டம்பர் 2017

மாமன்னர் மருதுபாண்டியர்கள்! - ஓர் அலசல்






புலியை அடித்த கொன்ற இடமான 'புலியடி தம்மம்',

மாமன்னர் மருதுபாண்டியரை, ஆங்கிலத்தளபதி வெல்ஷ் ஒப்பீட்டளவில் புகழும் வார்த்தையான கீழ்திசை நாடுகளின் 'நிம்ராட்',

மருதரசர்களின் நினைவுபடுத்தும் தற்போது இடமாற்றிய 'மருத மரம்',

மதுரை தெப்பக்குளக்கரையில் இக்கரைக்கும் அக்கரைக்கும் இலக்கு வைத்து தாக்கி தன்னகத்தே வரும் 'வளரி',

அனைத்தையுமே தனி ஆளாக களம்காணும் யுக்தியான 'வேட்டை',

மருதரசர்கள் வளர்த்த (குதிரையை விற்று வாங்கக்கூடிய அளவுக்கு வீரமிக்க) 'கோம்பை நாய்',

மாமன்னர் மருதுபாண்டியர்களின் படங்களாக உருவாக்கப்பட்ட சிங்க ரதம், குதிரைப்பயணம் என்ற அனைத்துமே எவ்வித தொடர்புமில்லாமல் போல இருக்கலாம். இவை அனைத்திற்குள்ளும் ஆயிரக்கணக்கான ஆண்டின் வரலாறு புதைந்திருக்கிறது என்பதை ஆய்வு நோக்கில் கவனிக்கும் போது, ஆச்சர்யத்தின் எல்லை முடிவிலியாக விரிகிறது. "இங்குள்ள அனைத்துமே தனித்தில்லை; ஒன்றோடொன்று தொடர்பிலேயே தான் இருக்கின்றன" என்ற என் எண்ணத்தை மேலும் அழுத்தமாக வலுவாக்கிக் கொண்டிருக்கிறது. காலத்தாலும், துரோகத்தாலும் அழிக்க முடியாத மிக நீண்ட வரலாறுக்கு உரிமையானவன் என்ற உண்மையை உணர்ந்த பிரமிப்பில் தேடிக்கொண்டிருக்கிறேன், தொலைத்தவற்றை...

- இரா.ச. இமலாதித்தன்

09 செப்டம்பர் 2017

அமீர் - அகமுடையாரே!



இன்று இசுலாம் மதத்தை தழுவி இருந்தாலும் அமீர் ஆதியிலிருந்தே அகம் கொண்ட தமிழனே; அதனால் தான் தமிழ், தமிழர், பிரபாகரன் என தமிழியம் பக்கம் நிற்கிறார். இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் போன்ற ஆதித்தமிழர்களையெல்லாம் புறக்கணித்து விட்டு, இயக்கிய படமெங்கிலும் நீலத்தையும், அம்பேத்காரையும், தலித்தியத்தையும் மட்டுமே தூக்கி பிடித்து அந்நியமாகவே தெரிகிறார் ரஞ்சித்.

மராட்டியரான ரஜினியை வைத்து எங்களின் கதையை திருடி, அதையே திரித்து கபாலி போன்ற ஒரு படத்தை எடுத்ததால் மட்டுமே போராளி என்று தனக்குத்தானே நினைத்து கொண்டால், அந்த போர்க்குணத்தின் நிஜங்களெல்லாம் எப்படியான எதிர்வினையாற்றுவார்கள் என்பதையும் தமிழ் தேசியத்தை எதிர்க்கும் தலித்திய ரஞ்சித் புரிந்து கொள்ள வேண்டும். ஊரு உலகமே அனிதாவிற்கு ஆதரவாக போரடுவது அந்த தங்கையின் சாதிக்காகவா? என்று அடிப்படை அறிவே இல்லாமல் பொதுமேடையில் எதை பேச வேண்டுமென்ற அறிவு கூட இல்லாமல் மைக்கை பிடிங்கி பேசுவதால் பெரிய புடுங்கியெல்லாம் ஆகிவிட முடியாதென்ற எதார்த்தத்தையும் ரஞ்சித் போன்ற தலித் போராளிகள் உணர்வது நலம்.

- இரா.ச.இமலாதித்தன்

பெற்றெடுத்தவர்களின் திருமண நாள்!




இந்த உடலுயிர் உருவாக காரணமாக இருந்த என்னை பெற்றெடுத்தவர்களின் திருமண நாள் இன்று! எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளுக்கு நன்றி.
09/09
இரா.சம்பந்த தேவர்
(த/பெ. அ.இராமமிர்த தேவர்)
தி.இந்திரா
(த/பெ. வ.திருவேங்கடம் பிள்ளை)

வல்லப சித்தர் எனும் மகான் சுந்தரானந்தர் போற்றி அகவல்


1
மூவுலகை காத்தருளும் ஈசா உந்தன்
முடிவுயில்லா திருவடியை பணிந்து போற்றி
மேவுமொரு பராபரையின் அருளை கொண்டு
மொழிந்திடுவோம் பிருகுயான் சீவ சூட்சம்
2
சூட்சமாய் எங்களது குடிலம் தொட்டு
சுகப்படுத்தும் பூசைவிதி காலம் தன்னை
நுட்பமாய் XXXXXXXXX மகன் தனக்கு
நடப்புவழி ஆசியதை சித்தம் கொண்டான்
3
கொண்டவிதம் மாந்தர்களும் அறியும் வண்ணம்
குருவாக யாமிருந்து விளம்பி வாறோம்
விண்ணமற சித்தர்களை போற்றி நின்று
வித்தரிக்க ஆன்மபலம் இம்மாந்தர்கள் அறிய
4
அரியபல பொதுஞானம் அறிவுரைகள்
அகமகிழ்ந்து இக்காலம் விடயம் கூற
குறிப்பான தனுர் திங்கள் ஏகாதசியும்
கோமகளின் வால்பிடித்து பித்ருக்கள் யாவும்
5
பிதுர்கள்யாவும் திருப்திக்க லோகத்தோர்கள்
பூரணமாய் நிச்சயித்த அனுட்டிப்பாலே
மாதவனாம் ஆசிபடவும் அரண் அயனின்
மலர்பாதங்கள் நாடிடவும் பொருட்டு எங்கள்
6
எங்களது பூசை யதை நிச்சயித்தோம்
எதிர் நோக்கா வந்தாலும் அவர்களுக்கு
மங்களங்கள் தான் அளித்து மறுசுகமும்
மகத்துவமும் பெறும்பொருட்டு திங்கள்தோறும்
7
திங்கள்தோறும் குருமார்க்க நியதி கொண்டோர்
தனக்குரிய ஆசிரமத்தில் நினைவு கொண்டு
மங்களமாய் சங்கமித்து தியானம் கொள்ள
மொழியுரைத்தோம் இயமம்யதும் கடந்து ஞான
8
ஞானமெனும் ஆத்துமநிலை பொலிவும் ஒங்க
ஞானமதின் புருடர்களுக்கு ஜெனன காலம்
தான்என்ற எல்லையில்லை அவர்கள் சிந்தை
தனைகொள்ள விண்மீனும் கடை மீனாய்
9
மீனதிலே கலசமதின் திங்கள் தன்னில்
முக்கியமாய் சுந்தரனந்தன் தன்னை நன்றாய்
ஊனமில்லா நினைவுறுத்தி பூசை கொள்வீர்
உத்தமமாய் நெடியதொரு குருபக்தி கொண்டான்
10
கொண்டமகன் சட்டைமுனி ஞானம் பெற்று
குருவினது போதனைகள் யாவும் பெற்று
விண்ணமிலா விட நிவாரணம் வாக்கியஞானம்
விளம்பநல் கோள்ஞானம் முப்பு ஞானம்
11
ஞானமதாம் கிருஷிகளும் மூலி சூட்சம்
ஞால தீட்சை பூசையதாம் விதியது செய்தான்
மோனமென்ற நிலையிவன் நின்றால் கூட
முக்கியமாய் உயிர்கள்எல்லாம் உய்யும் பொருட்டு
12
பொருட்டுமே வல்லபங்கள் செய்ததாலே
பூரணமாய் அந்நாமம் பெற்றார் திண்ணம்
குருமுனியின் அருள்பெற்று ஞான லிங்கம்
காண நலம் சதுரகிரியில் செய்தானப்பா
13
அப்பனே அவனுக்குரிய மூலம் தன்னை
அகம்நிறுத்த வல்லதொரு மூலம் அப்பா
செப்பவே ஒம் XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சீர்பெற்ற ஓம் சுந்தரனந்தன் எனும் வல்லபனே
15
வல்லபனே என்றழைத்து சோதி கொண்டால்
வந்திடுவார் தங்கமயமான ஆனந்தனாக
நல்லதொரு விழாப்பொருட்டு மாந்தர் சூழ
நலமான அன்னமுடன் விடமுறிவான
16
விடமுறிவான ஔடதங்கள் ஈய நன்மை
வாக்குப்படி நாகமதின் பாம்பு போன்ற
விடமெல்லாம் வசியமது ஆகும் அப்பா
வீர்யமாய் லோகத்தோரின் அறியா பீடை
17
பீடையெல்லாம் முறிக்கவே சித்தம் கொண்டார்
பிசகில்லா வரவேற்று ஆசி கொள்வீர்
சோடை யில்லா கூடலதனின் நாதனம்மை
சீர்பெற்ற அழகனவன் ஆசி நன்றாய்
18
நன்றான #அகமுடையான் என்று சித்தர்
நீடுழி குலபந்தம் கொண்டார்கள் அப்பா
முன்னம்பல ஞானவழி கொண்ட சங்கமம்
மொழிந்தோமே சீவமதாம் சூட்சம் முற்றே
(நன்றி: ஹரி மணிகண்டன், சதானந்தா சுவாமிகள் தளம்)

மகான் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா!





(09.09.2017*)

(*ஆண்டுதோறும் தேதி மாற்றத்திற்குட்பட்டது)

பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
குலம்: அகமுடையார்
குரு: சட்டை முனி
ஜீவ சமாதி: மதுரை

சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் சோதிட காவியம்
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் மூப்பு
சுந்தரானந்தர் தண்டகம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் தீட்சா விதி
சுந்தரானந்தர் பூசா விதி
சுந்தரானந்தர் அதிசய காரணம்
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை;

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)

பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)

சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)

தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர்மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)

பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)

சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.

மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

04 செப்டம்பர் 2017

திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!



அகம்படி குலத்தில் உதித்த தமிழ் அசுரனான மகாபலி சக்கரவர்த்தியை நினைவு கூறும் திருவோணத் திருநாள் வாழ்த்துகள்!

(வேதாரண்யம் என்கிற திருமறைக்காட்டு கோவிலில் எலியாய் இருந்த முற்பிறவி பயனால் மகாபலியாய் உருவெடுத்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது)

#Agambadi #Mahaabali #Maaveli #Onam #Vaanar

01 செப்டம்பர் 2017

அனிதாக்களின் எதிர்காலம் 'நீட்'டிக்க படுவதில்லை


தமிழ்நாடு அரசு நடத்திய பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், ஹிந்திய அரசின் நீட் தேர்வில் அதற்கு இணையான மதிப்பெண்களை எடுக்க முடியாமல் போனதற்கான காரணம் எது? நடந்து போறவனும், வாகனத்தில் போறவனுக்கும் ஒரே நேர அளவையும், ஒரே தூர தொலைவையும் வைத்தால் வெற்றிப்பெறுவது வாகன ஓட்டி தானே? நீட் என்பது மாநில கல்வித்திட்டத்திற்கு இணையானதா? சி.பி.எஸ்.இ., ஸ்டேட் போர்டு என பலவித பாகுபாடுகள் இருக்கும் கல்வித்துறையில் நீட் என்ற தகுதித்தேர்வு மட்டும் ஒரே மாதிரியாக இருந்தால், இனி ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கனவுகளை தொலைத்த ஆயிரம் அனிதாக்கள் தற்கொலை செய்து கொண்டேதான் இருப்பார்கள். என்.டி.டிவி போன்ற வடக்கத்திய ஊடகங்கள் அனிதாவை 'தலித் மாணவி' என்று அடையாளப்படுத்தியே அவரது உணர்வை வெறும் சாதியத்தால் கொல்கிறது.

இதற்கெல்லாம் மையமாக இருப்பது மத்திய அரசுடன் கூடிய, யாருக்கு பினாமியாக இருக்கிறோமென்றே தெரியாமல் அலங்கோலமாய் ஆட்சி செய்யும் இந்த கோமாளிகளின் கூடாரமும் தான் என்பது அனிதாவின் ஆன்மாவுக்கும் தெரிந்திருக்கும். இந்த விசயத்தில் கிஷோர் சாமிக்களையும், கிருஷ்ண சாமிக்களையும் ஒரே மாதிரியாக பேச வைத்தது தான் ஹிந்திய சூழ்ச்சியின் வெற்றியே அடங்கிருக்கிறது. இந்த மாதிரியான உணர்வுப்பூர்வமான விசயத்திலும் கூட, தலித்தியவாதிகளின் கொண்டை வெளியே வருவதை பார்க்கும் போதுதான் எரிச்சலும் கோபமும் வருகிறது. தாழ்வு மனப்பான்மையை எளிய மாணவர்களின் மனதில் விதைத்து, அதை சிறுபான்மையினரான ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டும் தங்களுக்கான அறுவடையாக்கி கொள்ளும் அந்த ஈனபுத்திக்கும் ஆழ்ந்த வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

#BanNEET