கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஜூன் 2017

தமிழக அரசியலில் வரலாற்றில் தவிர்க்க முடியா பக்கம்!


முள்ளி வாய்க்காலுக்கு முன்பும் சரி; பிறகும் சரி, ஆயிரம் விமர்சனங்களும் துரோகங்களும் இருந்தாலும், ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தமிழக அரசியலில் கருணாநிதி என்ற பெயரை உச்சரிக்காமல் அரசியல் பேசாதவர் யாருமில்லை. கருணாநிதியே பேச முடியாமல் ஒதுங்கி இருக்கும் இன்றைக்கும் கூட அவரை விமர்சித்தாவது பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களாலே அரசியலில் வளர்ந்தவர்கள் இங்கே ஏராளம். அந்த வரிசையில் கருணாநிதி என்ற பெயர் என்றைக்கும் தமிழக அரசியலில் இடம்பெற்றே தீரும். எங்களது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற சிறிய கிராமத்திலிருந்து வெறும் மஞ்சள் பையோடு மட்டும் சென்று, உலகளாவிய புகழ் பெற்ற கருணாநிதியின் ஆற்றல் வியப்பிற்குரியது.

தன் பேச்சையும், எழுத்தையும் மட்டுமே முதலீடாக கொண்டு உலக பணக்கார வரிசையில் தன் குடும்பத்தை நிலைநிறுத்திய வல்லமை இனி வேறு யாருக்கும் வாய்க்க போவதில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனையோ பேர் திருட்டு ரயில் ஏறி தினம் தினம் சென்னைக்கு வந்திருக்கலாம். ஆனால் யாருமே மற்றொரு கருணாநிதியாக புகழ் வெளிச்சத்திற்கு வர முடியவில்லை என்பதே எதார்த்தம். நரேந்திர மோடி, பன்னீர்செல்வம், இளையராஜா, ரஜினிகாந்த் போல எளியவர்களும் மிகப்பெரிய உச்சத்தை தொட முடியுமென்ற நம்பிக்கையை அன்றைக்கே விதைத்த கருணாநிதியை புறக்கணித்து விட்டு, தமிழக அரசியலின் முழுமையான வரலாற்று பக்கங்களை ஒருபோதும் நிரப்ப முடியாது.

- இரா.ச. இமலாதித்தன்

20 மே 2017

தா.கி.யும் திமுகவும்!




சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொம்புக்கரனேந்தல் எனும் ஊரில் 10.02.1937ல் அகமுடையார் இனக்குழுவில் பிறப்பெடுத்த மேனாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருட்டிணன், தி.மு.க.வின் தென்மண்டல அடையாளமாக திகழ்ந்தவர். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், அதனை தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய இவரை 'தா.கி' என்றே அழைக்கலாயினர்.

சிவகங்கையின் மாவட்டச் செயலாளராக தனது ஆதரவாளர் சிவராமனைக் கொண்டு வர அழகிரி கடும் முயற்சி செய்தார். இதற்கு தா.கி முட்டுக்கட்டையாக இருந்தார். இதுபோன்ற பல விசயங்களில் கட்சி வளர்ச்சிக்காக அழகிரியின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திய தா.கி.யை ஒழித்துக்கட்ட வேண்டுமென அழகிரி நினைத்தார். தென் தமிழகத்தில் தா.கி.யின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத மு.க.அழகிரியின் தூண்டுதலால் அவரது கூலிப்படையினர் வெட்டிக்கொலை செய்த நாள் இன்று; சரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக 20.5.2003ல் மதுரையில் தா.கி. கொலை தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மு.க.அழகிரி, மேனாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, தி.மு.க நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தது;

மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 2006ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சித்தூர் நீதிமன்றமோ, தா.கி. தன்னைத்தானே வாக்கிங் செல்லும் போது தன் கழுத்தை வெட்டிக்கொண்டார் என முடிவு செய்து, மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்தது.

அழகிரி தன்னை மிரட்டியதாகவும், அழகிரியின் நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதிக்கே பல கடிதங்களை எழுதியுள்ளார் தா.கி. அந்தக் கடிதங்களையெல்லாம் தன் மகனுக்காக கண்டுகொள்ளாமல் மெளனம் காத்தவர் தான் இந்த கருணாநிதி. பக்கத்து நாட்டு பிரச்சனையை, 'தமிழினத்தின் தலைவர்' என்று அழைக்கப்படும் கருணாநிதியால் தீர்க்க முடியாதென ஈழ விசயத்தில் முட்டுக்கொடுப்பதை கூட பெரும்பாலானோர் ஏற்கவில்லை. ஆனால் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டதை கூட கண்டுகொள்ளாமல் தன் பிள்ளை, தன் குடும்பமென கை கட்டி வேடிக்கை பார்த்த கருணாநிதியை தா.கி.யின் ஆன்மா கூட மன்னிக்காது.

சொல்லி வைத்தாற்போல் சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் தான், கருணாநிதியின் மகளான கனிமொழியும் 2ஜி வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல், எந்த அதிகார பதவி ஆசைப்பட்டு தா.கி.கொலை செய்யப்பட்டாரோ, அந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே இன்றைக்கு அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அடையாளமற்று கிடக்கின்றனர் என்பது மட்டும் தான் ஓரளவுக்கு ஆறுதலான விசயம்.

தா.கி. என்ற மாபெரும் ஆளுமைமிக்க செயல்வீரர் துரோகிகளால் கொலை செய்யப்பட்ட நாள் இன்று. (20 மே 2003)

14ம் ஆண்டு நினைவேந்தல் வீர வணக்கம்

- இரா.ச. இமலாதித்தன்

12 டிசம்பர் 2016

தமிழ்நாட்டு அரசியலில் டெல்டாவின் ஆதிக்கம்!

கால்நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் கவனிக்கதக்க விசயங்களாக, தஞ்சாவூர் மற்றும் 'So Called' முக்குலத்தோர் என்ற இந்த இரண்டு மட்டுமே தோன்றுகிறது.

முதலில் தஞ்சாவூர்...

தமிழக அரசியலில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய டெல்டா பகுதியே மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது; பங்காற்றி கொண்டும் இருக்கிறது. திமுகவில் மு.கருணாநிதி, க.அன்பழகன், முரசொலிமாறன், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு எனவும்... அதிமுகவில் எம்.நடராஜன் குடும்ப உறுப்பினர்களெனவும் பலரது பங்களிப்பு உலகறிந்த விசயம். ஆளுங்கட்சி - எதிர்கட்சி என்ற எல்லா நிலைகளிலும் டெல்டாவை சார்ந்தவர்களின் பங்கு பெருமளவு இருந்து கொண்டே வந்திருக்கிறது.

அடுத்ததாக 'So Called' முக்குலத்தோர்...

தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களாக வன்னியர், கொங்கு வெள்ளாளர், பட்டியல் சாதியினர் இருந்த போதும் கூட கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட 'So Called' முக்குலத்தோர் என்ற கூட்டமைப்பை சேர்ந்தவர்களே அரசியலில் அதிகளவுக்கு ஆளுமை செய்திருக்கிறார்கள். அது பரபரப்பான சூழலான இப்போதும் கூட தொடந்து கொண்டேதான் வருகிறது.

மூன்றாவதாக இடம் யாருக்கு?

அடுத்து தற்போதைய அரசியல் கட்சிகளின் வலிமை, அவர்களின் ஓட்டு சதவீதம், எத்தனையாவது இடம் என்ற நம்பர்களை பற்றியெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால், அதிமுக - திமுக - பாஜக என்ற நிலை வந்துவிட்டது. மேலும், தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக பாஜக தன்னை பிரகடனப்படுத்த தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது. சென்ற தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, தவறாம முடிவுகளால் வைகோவுடன் கூட்டணி வைத்து தங்களது சின்னத்தையே இழந்து தடுமாறி நிற்கிறது.

எதிர்கட்சியாக திமுக இல்லாத போது எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் செய்ய தவறிய அரசியலை, பாமக சரியாக செய்த போதும், தற்போதைய சூழலில் கடந்த கால சாதி முத்திரையை அன்புமணி ராமதாஸ் தலையெடுத்த பின்னால் ஓரளவுக்கு மறைய தொடங்கிருக்கிறது. அதன் நீட்சியாக 2021 தேர்தலில் பாமகவின் பங்கு முக்கியத்துவம் பெறக்கூடும். ஆனால் இப்போதைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக, தென்னிந்திய அரசியலில் முழுமையாக களமிறங்க காத்துக்கொண்டே இருந்தது. கர்நாடகாவை தொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் தமிழகத்திலும் பாஜகவிற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அரசியல் செண்டிமெண்ட்டில், 'So Called' முக்குலத்தோரும் - தஞ்சாவூரும்...

ஆட்சியமைக்கும் திராணியுள்ள திராவிட கட்சிகளில், திமுகவின் தலைமையானது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. அதுபோலவே, அதிமுகவின் தலைமையானது 'So Called' முக்குலத்தோர் + ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. தேசிய கட்சிகளில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கட்சி மாறி வந்த திருநாவுக்கரசருக்கு கொடுத்திருக்கின்றனர். காரணம் 'So Called' முக்குலத்தோர் கோட்டாவில் அவர் மறவர். இந்த கணக்கீட்டின் படி பார்த்தால், மூன்றாவது கட்சியாக பரிமாணம் பெற்றுள்ள பாஜக, இந்த வாய்ப்பை நழுவ விடாமல், பாஜகவின் தலைமையை 'So Called' முக்குலத்தோருக்கு வழங்கலாம். அதுவே சரியான காய் நகர்த்தலாக இருக்க முடியும்.

இப்படியானதொரு தகுதியுள்ளவராக 'So Called' முக்குலத்தோராகவும், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரராகவும் உள்ள திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு பாஜகவின் தலைமை பொறுப்பை கொடுக்கலாம். மத்திய இணையச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவராகவும், மாநில செயலாளர், மாநில பொது செயலாளர், மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட முக்கிய கட்சி பதவியில் இருந்த கருப்பு முருகானந்தம் அவர்களை, பாஜகவின் மாநில தலைவராக்கினால் தமிழக அரசியலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

- இரா.ச.இமலாதித்தன்

25 நவம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்

விஜய் தொலைக்காட்சியின் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கின்ற மாணவர்களுக்கான அறிவுபூர்வமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் இன்றைய பகுதியில், பெரும்பாலான வார்த்தைகளில் தமிழில்லை; சமக்கிருதம் தான்!

#



விகடன் மீது அ.தி.மு.க.விற்கும், தந்தி மீது தி.மு.க.விற்கும், ஆமீர்கானின் மனைவி சொன்ன 'அது' இல்லை போல!


#

பல லட்ச மக்களை தங்களது பேச்சுகளாலும், எழுத்துகளாலும் கட்டிப்போட்டு ஆட்சியை பிடித்த தி.மு.க., இன்று தந்தி டி.வி.போன்ற ஊடக விவாதக்களங்களில் ஒருசிலர் மத்தியில் கூட தனது ஆளுமையை நிரூபணம் செய்ய முடியாமல் ஒதுங்கி செல்வது ஆச்சர்யம் தான்.
களத்தில் வெற்றி தோல்வி என்பதை விட, தோல்வியடைவோம் என்ற எண்ணத்தில் அந்த களத்தையே இழப்பது தான் பலவீனம் என்பது போலவே தி.மு.க.வின் இந்த முடிவும் அமைந்திருக்கிறது.

#

திரு. நெப்போலியன் ரெட்டியாரும், பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவரானார்!

வாழ்க தமிழக பா.ஜ.க.!

#

கருணாநிதியை சந்தித்த கோவன் மீதான புரட்சி - புடலங்காய் - நம்பிக்கையெல்லாம், இனி சந்தேகத்திற்கு உள்ளானாலும் துளியும் தவறில்லை.

#
கூகிள் போன்ற இணைய தேடுபொறிகளில், Tiger என தேடினால் புலி வருமா என தெரியாது. கண்டிப்பாக எம் அண்ணன் பிரபாகரன் வருவார்.
‪#‎Hbd_TamilTiger‬
#

கோமள விலாஸ் உணவகம்
தமிழ் முரசு பத்திரிகை
தமிழ்

சிங்கப்பூர்!

இந்தியா
நரேந்திர மோடி
ஹிந்தி

#

14 நவம்பர் 2015

சமத்துவ குழந்தைகள் விழா!

'நமக்கு நாமே'வுக்கு போட்டியாக தான், இந்த போட்டோ ஷூட் நடத்திருக்காரு போல... ஹிந்து - முஸ்லீம் - கிருஸ்துவம் என சரியான காம்பினேசனில் குழந்தைகள். இந்த திரைக்காட்சியிலும் குறை சொல்லவே முடியாது. அதுதான் தலைவருக்கும், தளபதிக்கும் உள்ள வித்தியாசம். கலைஞன்யா!

04 ஜூன் 2015

ஜூன் 1,2,3,4

ஜூன் 1:

திருமுருகனின் அவதார திருநாளான வைகாசி விசாகத்திருநாள் நல் வாழ்த்துகள்!

ஜூன் 2:

தென்கோடி பண்ணைபுரத்தை பலகோடி பேர்களுக்கு பாதை போட்டு காட்டி, இசை போதையூட்டிய இளைய இசையரசனுக்கு என்றும் பதினாறே! ‪#‎HBDRajasir‬

ஜூன் 3:

எளியவனும் உச்சத்தை தொட முடியுமென்ற நம்பிக்கையை ஊட்டிய திருக்குவளையாருக்கு 92ம் அகவை வாழ்த்துகள்!

ஜூன் 4:

நான்கு தலைமுறைகளாக பல்வேறு மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடிவரும் எஸ்.ப்பி.பிக்கு இனிய வாழ்த்துகள்!
‪#‎HBDspb‬

03 ஜூன் 2015

மு.க. 92 !

இன்னும் கூட மிகப்பெரிய வளர்ச்சியடையாத திருக்குவளை போன்ற ஒரு கிராமத்திலிருந்து சென்று, இத்தனை சாதனை செய்த ஒரு காரணமே போதும் திரு.கருணாநிதியின் திறமையை உணர. மஞ்சப்பையோடு திருட்டு ரயிலிலில் வந்ததாக திரு.கருணாநிதி அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும் கூட, அப்படி மஞ்சப்பையோடு வந்த எத்தனை பேர் இதுவரையிலும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கின்றனர் என்பதை யோசித்தாலே தெரியும் அவரின் வெற்றியின் தன்மையை. பார்பன - ஆரிய சக்திகள் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், வெகுஜன சாமானியனாக ஒரு கட்சியின் தலைமைக்கு வந்து, அதை தொடர்ந்து தக்க வைப்பதும் அவ்வளவு எளிதான செயல் கிடையாது. சாமானியனும் சரித்திரத்தில் இடம்பெற முடியுமென்ற சாதனையை நிகழ்த்திக்காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர்களை போலவே, எந்தவித அரசியல்/சாதிய/வாரிசு/நட்சத்திர பின்புலமும் இல்லாமல் தமிழக அரசியல் சரித்திரத்தில் நீக்கமுடியாத அளவுக்கு நிரந்தரமாய் இடம்பிடித்த திரு.கருணாநிதிக்கு, சக நாகை மாவட்டத்துக்கு காரனாய் என் வாழ்த்துகள்!

28 நவம்பர் 2014

வாசனுக்கு வாழ்த்துகள்!

ஏற்கனவே உள்ள பழைய பெயரை கட்சிக்கு வைத்தாலும் கூட சோழ நாட்டிலிருந்து ஒருவர், மாநில கட்சிக்கு தலைமை வகிப்பது சோழநாட்டானாக எனக்கு பெருமையே. மாநில கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மாநில தலைவராக பொறுப்பேற்கும் திரு. ஜி.கே.வாசனுக்கும், மேலும் சோழ நாட்டிலிருந்து தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு மாநிலத்துணை தலைவராக பதவி வகிக்கும் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கும் தமிழக வாக்களனாக என் வாழ்த்துகள்!

ஃபேஸ்புக் போன்ற சமூக இணைய பக்கங்களில் பின்னி பெடலெடுக்க பதினோறு பேர் கொண்ட ஒரு குழுவை ஜி.கே.வாசன் ஏற்கனவே நியமிச்சிட்டாருன்னு நினைக்கிறேன். முகநூல் உள்ளிட்ட இணையபக்க நண்பர்களுக்கும் நன்றின்னு மாநாட்டு மேடையிலேயே சொல்கிறார். டெல்டா காரய்ங்களான்னா வெவரம் தான்!

G.K.Vasan GK Vasan Tamil Maanila Congress

தி.மு.க. தலைவரான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையின் திரு மு.கருணாநிதி, த.மா.க. முன்னாள் தலைவரான தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தின் திரு ஜி.கே.மூப்பனார், பா.ஜ.க. மாநில துணைத்தலைவரான திருவாரூர் மாவட்டம் ஜாம்பனோடையின் திரு கருப்பு மு.முருகானந்தம் உள்ளிட்ட இம்மூன்று தலைவர்களுக்கு பிறகு டெல்டாவிலிருந்து உருவெடுத்திருக்கும் அடுத்த மாநில தலைவரான திரு ஜி.கே.வாசனுக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

11 அக்டோபர் 2014

மு..க. - ஜெ. - ஓ.பி..எஸ்.

# அனைத்திந்திய அ.தி.மு.கட்சி முதல் நேற்று தொடங்கிய லெட்டர்பேடு கட்சி வரைக்கும், செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு (ஆதாயத்திற்காக) ஆதரவாக இன்னைக்கு தமிழ்நாடெங்கும் உண்ணாவிரதம் இருக்காய்ங்க. இவிய்ங்க எவ்ளோதான் பண்ணினாலும், தமிழீழ தனிநாட்டு விடுதலைக்காக திரு மு.கருணாநிதியின் மூனு மணி நேர உண்ணாவிரத ரெக்கார்டை எந்த கொம்பனாலயும் உடைக்கவே முடியாது.

# இந்த ’மக்கள் முதல்வர்’ என்ற பட்டத்தையெல்லாம் ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடியே புதுச்சேரியில திரு.என்.ரெங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கும் போதே பார்த்தாச்சு. புதுசா ஏதாவது சொல்லிருக்கலாம்.

# இறைவா, எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்; நண்பர்களை நீ பார்த்து கொள்! - இது ரஜினியோட பஞ்ச் டயலாக். இப்போது செல்வி. ஜெயலலிதாவுக்கும் இது பொருந்துகிறது. சொந்த கட்சி காரய்ங்களே ஆர்வ கோளாறுல கவுத்து விட்டுருவாய்ங்க போலிருக்கு.

# தகுதி இல்லாதவரிடம் மிகப்பெரிய பதவி வந்தால், அந்த பதவியின் தகுதியும் ஏளனமாக்கப்படும் என்பதற்கு ஓ.பி.எஸ். உதாரணமாகிவிட கூடாது. மேலும், ஓ.பி.எஸ். வேண்டுமென்றால் அதிமுக தலைமைக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைவரென்ற பொறுப்பில் இருக்கின்றார். பொறுமையாவே இருக்காமல் கொஞ்சமாவது முதல்வர் என்ற பொறுப்போடு இருக்கலாம்.

# போற போக்கை பார்த்தால் ஜெயா ப்ளஸ் சேனல் கூட செல்வி.ஜெயலலிதாவை மறுந்துடும் போலிருக்கு! திரு.ராமதாஸ், திரு.கருணாநிதி பற்றிய செய்திகள் தான் அதிகமா வருது.

# இலங்கையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட எங்க நாகை மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரும், "மக்கள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு நன்றி!ன்னு சொன்னதாக ஜெயாடிவில சொல்றாய்ங்க. ”ஒருத்தனுக்கு எழுந்திருச்சு நிக்கவே முடியலையாம்; அவனுக்கு ஒன்பது பொண்டாட்டியாம்!”ன்னு சொல்ற சந்திரமுகி படத்துல வர வடிவேலு வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.

# தற்போது திரு. ஓ.பி.எஸ் தலைமையிலான தமிழக அரசின் சார்பில் வெளிவரும் வாழ்த்து / கண்டன அறிக்கைகளுக்கும், செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சார்பில் முன்பு வெளிவந்த வாழ்த்து / கண்டன அறிக்கைகளுக்கும் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த 11 பேர் கொண்ட குழுக்கு வாழ்த்துகள்!

# உண்ணாவிரதம் இருக்குறதுக்கே, கையில பணம் கொடுத்து, வயித்துக்கு குவார்ட்டரும் - பிரியாணியும் கொடுக்குறாய்ங்க. இதுல எப்படி சுத்த பத்தமா விரதம் இருக்க முடியுமாக்கும்?

# இதுவரை திரு. மு.கருணாநிதியின் வயதை காரணம் காட்டி முதுமையை விமர்சித்து வந்த அ.இ.அ.தி.மு.க.வினர், இப்போது உச்சநீதிமன்றத்தில் வயதை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு காத்திருக்கும் செல்வி. ஜெ.ஜெயலலிதாவையும் விமர்சிக்க தி.மு.க.வினருக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர் என்பதுதானே உண்மை.

# திரு. மு.கருணாநிதியை விமர்சிக்கும் போதுதான் முறுக்கிய நரம்புகளோடு தெறிக்கும் பேச்செல்லாம் திரு. சீமானுக்கு வரும் போல! ஜாமீனுக்கு ஜால்ரா அடித்தால் தான் திரு. வைகுண்டராஜனுக்கு பிடிக்கும் என்பதால், அநேகமாக 2016 தேர்தலின் போதுதான் இனி களமாடுதல் இருக்கும்ன்னு நினைக்கிறேன். வருங்கால முதலமைச்சர் என்ற கனவில் இருப்பவருக்கே இந்த நிலைமையா?

- இரா.ச.இமலாதித்தன்

12 ஏப்ரல் 2014

அரசியலில் மதம்!

நேற்று மயிலாடுதுறையில் 'மனிதநேய மக்கள் கட்சி'யின் சார்பாக 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தில் வேட்பாளராக களம்காணும் திரு ஹைதர் அலியை அறிமுகம் செய்யும் போது, "ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்று திரு. கருணாநிதி குறிப்பிட்டார். ஐக்கிய என்ற வார்த்தை புதுசா ஐக்கியமாகி இருக்கே, என்ன காரணமா இருக்கும்? யென்று யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

"கழகத்தின் கடமை கண்ணிய கட்டுப்பாடோடு அமைதி காக்கவும்; இப்போது தலைவர் கலைஞர் பேசப்போகிறார். அனைவரும் அமைதியாக இருங்கள்; குண்டூசி விழுந்தாலும் அதன் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி காக்கவும்!" யென்று முன்னுரை கொடுத்துவிட்டு உடன்பிறப்பு ஒருவர் அமர்ந்த உடன் கலைஞரும் பேச ஆரம்பித்தார். உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் முன்னோக்கி கலைய ஆரம்பித்து கொண்டிருந்தது. அது அவரை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி கூட இருக்கலாம். ஆனால் உடன்பிறப்பு சொன்ன, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடெல்லாம் கொஞ்சம் காற்றில் பறக்க விடப்பட்டு கொண்டிருந்தது.

Photo: நேற்று மயிலாடுதுறையில் 'மனிதநேய மக்கள் கட்சி'யின் சார்பாக 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தில் வேட்பாளராக களம்காணும் திரு ஹைதர் அலியை அறிமுகம் செய்யும் போது, "ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்று திரு. கருணாநிதி குறிப்பிட்டார். ஐக்கிய என்ற வார்த்தை புதுசா ஐக்கியமாகி இருக்கே, என்ன காரணமா இருக்கும்? யென்று யோசித்தும் விடை கிடைக்கவில்லை.

"கழகத்தின் கடமை கண்ணிய கட்டுப்பாடோடு அமைதி காக்கவும்; இப்போது தலைவர் கலைஞர் பேசப்போகிறார். அனைவரும் அமைதியாக இருங்கள்; குண்டூசி விழுந்தாலும் அதன் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி காக்கவும்!" யென்று முன்னுரை கொடுத்துவிட்டு உடன்பிறப்பு ஒருவர் அமர்ந்த உடன் கலைஞரும் பேச ஆரம்பித்தார். உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் முன்னோக்கி கலைய ஆரம்பித்து கொண்டிருந்தது. அது அவரை அருகில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிகுதி கூட இருக்கலாம். ஆனால் உடன்பிறப்பு சொன்ன, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடெல்லாம் கொஞ்சம் காற்றில் பறக்க விடப்பட்டு கொண்டிருந்தது.

அதைவிட இன்னொரு உறுத்தல் என் மனதுக்குள் இருந்தது. அது, திரு கருணாநிதி பேசி முடிக்கும் வரை திரு ஹைதர் அலி அவர்கள் வாக்கள பெருமக்களாகிய யாரிடமும் ஒருமுறை கூட வணக்கம் சொல்லவே இல்லை. அதற்க்கு அவரது மதம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இதுவே செல்வி, ஜெயலலிதாவோ, திரு விஜயகாந்த்தோ, திரு வைகோவோ, திரு இராமதாசோ இப்படி யாராக இருந்தாலும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் போது ஒருமுறையாவது வாக்காள பெருங்குடி மக்களை பார்த்து வணங்குவதுதானே முறையாக இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் மதத்தோடு ஓப்பிட்டு செயல்பட்டால் அது சிறுபான்மையினர் உணர்வு; அதுவே பெரும்பான்மை சமூக மக்கள் செய்ய முற்பட்டால் அது மதவெறி! ஒன்னும் சொல்றதுக்கில்ல....

- இரா.ச.இமலாதித்தன்

அதைவிட இன்னொரு உறுத்தல் என் மனதுக்குள் இருந்தது. அது, திரு கருணாநிதி பேசி முடிக்கும் வரை திரு ஹைதர் அலி அவர்கள் வாக்கள பெருமக்களாகிய யாரிடமும் ஒருமுறை கூட வணக்கம் சொல்லவே இல்லை. அதற்க்கு அவரது மதம் கூட காரணமாக இருந்திருக்கலாம். இதுவே செல்வி, ஜெயலலிதாவோ, திரு விஜயகாந்த்தோ, திரு வைகோவோ, திரு இராமதாசோ இப்படி யாராக இருந்தாலும் வேட்பாளரை அறிமுகம் செய்யும் போது ஒருமுறையாவது வாக்காள பெருங்குடி மக்களை பார்த்து வணங்குவதுதானே முறையாக இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் மதத்தோடு ஓப்பிட்டு செயல்பட்டால் அது சிறுபான்மையினர் உணர்வு; அதுவே பெரும்பான்மை சமூக மக்கள் செய்ய முற்பட்டால் அது மதவெறி! ஒன்னும் சொல்றதுக்கில்ல...

- இரா.ச.இமலாதித்தன்

11 ஏப்ரல் 2014

திருமணம் என்ன பெரும்பிழையா?

மணமாகாத (மோடி)அவர் காமராஜர் போல கடைசிவரை தேசத் தொண்டு ஆற்றப் போகிறார் என எண்ணினோம்.

- திரு. மு.கருணாநிதி



18ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருது சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டவர்களே; பூமரங் என்ற வளரி வீச்சு, கொரில்லா போர்முறை போன்ற பல்வேறு யுக்திகளை கற்றுதேர்ந்து, வெள்ளையனுக்கு எதிராக உலகிலேயே முதன் முறையாக ஜம்புத்தீவு பிரகடனத்தை வீரசங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் போர் பிரகடனத்தை வெளியிட்டவர்கள் தானே?

19ம் நூற்றாண்டில் என் தலைவன் தேசத்தந்தை நேதாஜி கூட எமிலி செனகலை காதல் திருமணம் தான் செய்து கொண்டார்; ஆனாலும், அவர் கொண்ட கொள்கைக்காக அந்நியனை விரட்டி தேசத்தை காப்பாற்ற இந்திய தேசிய ராணுவத்தையே கட்டியமைக்கவில்லையா?

20ம் நூற்றாண்டில் என் அண்ணன் பிராபகரன் கூட மதிவதனியை திருமணம் செய்து கொண்டார்; தமிழனின் புறநானூற்று வீரத்தை உலகளாவிய அளவில் வெளிக்காட்டி, உலகிலுள்ள போராளி இயக்கங்களில் முப்படையையும் உருவாக்கி எதிரிகளின் இனவழிப்பை எதிர்த்து தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டிமையக்கவில்லையா? 

படுக்கையறையை பற்றி பொதுமேடையில் பேச வேண்டியதன் அவசியம் என்ன? தாலி கட்டினாலே பிரம்ச்சர்யம் போய்டுமா என்ன? மோடி தனது திருமணத்தை முற்றிலுமாக மறைக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், தனிக்கட்டையென்றே சொல்லி இருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது தானே? தாலி கட்டினாலும் அவர் தனிக்கட்டையாகத்தானே வாழ்ந்திருக்கிறார்.

என் கேள்வி, அவர் ஏன் திருமணம் செய்ததை மறைத்தார் என்பதை பற்றியல்ல... அவரது திருமணத்தை காரணம் காட்டி கீழான அரசியல் செய்வது ஏன்? திருமணமான அடுத்தநாளே தனியாக போயிருந்த கதைகள இங்கே ஏராளம் உண்டு. அவர் கல்யாணம் செய்ததால் காமராஜ் மாதிரி ஆட்சி செய்ய முடியாதா என்ன? அன்றைய தமிழகத்தின் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காமராஜருக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பென்று சொன்னது இதே வாய் தானே?

திருமணத்தை மறைத்ததவர் இன்று ஒத்து கொண்டு விட்டார்; அதை வரவேற்க வேண்டுமே தவிர, அதையே சொல்லி அவருக்கு மனவருத்ததை ஏற்படுத்த கூடாது. மேலும் திருமணம் என்பது அவரது தனிப்பட்ட விசயம். அதை அரசியல் ஆக்குவது கேவலமான செயல் தானே? தனது தனிப்பட்ட திருமண வாழ்க்கையை பற்றி பேச இது சரியான தருணம் இல்லையென்று மோதி நினைத்திருக்கலாம். அவரது படுக்கையறையை விமர்சித்து என்னவாகி விட போகிறது? காங்கிரஸ் காரர்களுக்கும், காங்கிரஸோடு தான் தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க போகிறோம் என்ற மனநிலையொடு இருக்கும் திரு கருணாநிதி போன்றோருக்கும், காமராஜர் ஓர் ஊறுகாய்... மற்றபடி சொல்வதற்கொன்றுமில்லை.

இந்த வயதிலும் மனைவி துணைவி யென்று குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் தந்து கட்சி மேடையிலும் தனக்கருகே அவர்களை அமர வைத்து கொண்டும், இவ்விருவர்களுக்கு முன்னாடி ஏற்கனவே ஒரு திருமணத்தையும் செய்த நீங்கள், சிறப்பாக ஆட்சி செய்யவில்லையா என்ன? மணமாகாதவர்கள் மட்டும்தான் தேசத்தொண்டு ஆற்ற முடியுமென்ற தொனியில் நீங்கள் சொல்லிருப்பது நகைப்புக்குரியதாகவே பொருள் கொள்ளப்படும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன? அரசியலில் விமர்சனம் என்ற போர்வையில் படுக்கையறையை பற்றியெல்லாம் பொது இடத்தில் பேசுவது உங்களை போன்ற மூத்த அரசியல் தலைவருக்கு சரியான முறையா?

- இரா.ச.இமலாதித்தன்