விவேகானந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவேகானந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 நவம்பர் 2015

நரேந்திர மோடிக்களால் நரேந்திரனாக முடியாது!



சிகோகோவில், அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! என புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்தி, இந்திய ஆன்மீகத்தை வெளியுலகிற்கு அடையாளப்படுத்திய விவேகானந்தரை, அங்கு அனுப்பி வைத்ததே பாசுகர சேதுபதி என்ற தமிழர் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தனக்கு வந்த அழைப்பை பெருந்தன்மையாக, என்னை விட விவேகானந்தர் சென்றால் பொருத்தமாக இருக்குமென எண்ணி அனைத்து பயண செலவுகளையும் செய்து வைத்தவர் பாசுகர சேதுபதி.

நேற்று, மலேசியாவில் விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்து, சகோதர சகோதரிகளே என உரையாற்றியதற்காக நரேந்திர மோடியை விவேகானந்தரோடு ஒப்பிட்டு புகழ்வதை ஏற்க முடியவில்லை. விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன் என்பதால், மோடியின் பெயரோடு மட்டும் ஒப்பிடுவதோடு நிறுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், எத்தனை பிறப்பெடுத்தாலும் மோடி விவேகானந்தர் ஆக முடியாது.

அரசியலில் நேதாஜியையும், ஆன்மீகத்தில் விவேகானந்தரையும் பின்பற்ற சொன்ன பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும் உறவுகள் இந்த மாதிரியான, தவறான ஒப்பீடுகளையும் கண்டிக்க வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

04 ஜூலை 2014

விவேகானந்தரின் பார்வையில் தமிழன்!

"சென்னை மாகாணத்திலிருந்தே (தமிழ்நாட்டிலிருந்தே) தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று 'சுமேரியா நாகரிக'த்தை உருவாக்கி, அதன் பிறகு 'அசிரியா', 'பாபிலோனியா' போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே 'பைபிள்' உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் 'எகிப்திய நாகரிக'த்தை உருவாக்கினர்."

- சுவாமி விவேகானந்தர்

பண்டைய உலக நாகரீக வளர்ச்சியில் தமிழரின் பங்கை தெளிவாக / எளிதாக குறிப்பிட்டு தமிழனை பற்றி நன்றாக புரிந்து கொண்டிருந்த விவேகானந்தரை, பாஸ்கர சேதுபதி என்ற தமிழரும் நன்றாக புரிந்து கொண்டதால் தான், 1893 ல் சிகோகோவில் உரையாற்ற தனக்கு வந்த அழைப்பை விவேகானந்தருக்காக விட்டுக்கொடுத்து வாய்ப்பளித்தார்.

இன்று சுவாமி பரமஹம்ச விவேகானந்தரின் நினைவுநாள்!

- இரா.ச.இமலாதித்தன்