தா.கிருட்டிணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தா.கிருட்டிணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 நவம்பர் 2017

அரசக்கொலை, ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!


அகமுடையாரான மதுரை தா.கிருட்டிணனையும், பார்பனரான காஞ்சிபுரம் சங்கரராமனையும் திட்டமிட்டு படுகொலை செய்த கொலைகாரர்களான மு.க.அழகிரியையும் - ஜெயந்திரரையும் பதிலுக்கு பதிலாக இந்த அரசு என்கவுண்டர் செய்து விட்டதா? ஆனால், ஆல்வின் சுதனை கொன்றதாக குற்றஞ்சாட்டி ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டிலிருந்த அரசாங்க காவல்துறையால் பிரபு - பாரதியை திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட நாள், நவம்பர் 30. இவர்களை தொடர்ந்து இதே நிகழ்விற்காக குமாரையும் என்கவுண்டர் செய்து பழிதீர்த்து கொண்டது அரசு காவல்துறை. (30.11.2012)
ஒரு கொலைக்கு இன்னும் பல கொலைகள்தான் தீர்வென்று அரசும் - காவல்துறையும் முடிவெடுத்தால், இந்த மக்களாட்சி தத்துவமே தேவையில்லை. ஆனால் அதில் ஏன் இவ்வளவு பாகுபாடு? ஆண்டுகள் ஐந்தானாலும் அகம்படியானாய் அரசக்கொலையை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை.
”செல்வி” ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த நன்றிகள்!

20 மே 2017

தா.கி.யும் திமுகவும்!




சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொம்புக்கரனேந்தல் எனும் ஊரில் 10.02.1937ல் அகமுடையார் இனக்குழுவில் பிறப்பெடுத்த மேனாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருட்டிணன், தி.மு.க.வின் தென்மண்டல அடையாளமாக திகழ்ந்தவர். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், அதனை தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய இவரை 'தா.கி' என்றே அழைக்கலாயினர்.

சிவகங்கையின் மாவட்டச் செயலாளராக தனது ஆதரவாளர் சிவராமனைக் கொண்டு வர அழகிரி கடும் முயற்சி செய்தார். இதற்கு தா.கி முட்டுக்கட்டையாக இருந்தார். இதுபோன்ற பல விசயங்களில் கட்சி வளர்ச்சிக்காக அழகிரியின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திய தா.கி.யை ஒழித்துக்கட்ட வேண்டுமென அழகிரி நினைத்தார். தென் தமிழகத்தில் தா.கி.யின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத மு.க.அழகிரியின் தூண்டுதலால் அவரது கூலிப்படையினர் வெட்டிக்கொலை செய்த நாள் இன்று; சரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக 20.5.2003ல் மதுரையில் தா.கி. கொலை தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மு.க.அழகிரி, மேனாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, தி.மு.க நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தது;

மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 2006ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சித்தூர் நீதிமன்றமோ, தா.கி. தன்னைத்தானே வாக்கிங் செல்லும் போது தன் கழுத்தை வெட்டிக்கொண்டார் என முடிவு செய்து, மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்தது.

அழகிரி தன்னை மிரட்டியதாகவும், அழகிரியின் நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதிக்கே பல கடிதங்களை எழுதியுள்ளார் தா.கி. அந்தக் கடிதங்களையெல்லாம் தன் மகனுக்காக கண்டுகொள்ளாமல் மெளனம் காத்தவர் தான் இந்த கருணாநிதி. பக்கத்து நாட்டு பிரச்சனையை, 'தமிழினத்தின் தலைவர்' என்று அழைக்கப்படும் கருணாநிதியால் தீர்க்க முடியாதென ஈழ விசயத்தில் முட்டுக்கொடுப்பதை கூட பெரும்பாலானோர் ஏற்கவில்லை. ஆனால் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டதை கூட கண்டுகொள்ளாமல் தன் பிள்ளை, தன் குடும்பமென கை கட்டி வேடிக்கை பார்த்த கருணாநிதியை தா.கி.யின் ஆன்மா கூட மன்னிக்காது.

சொல்லி வைத்தாற்போல் சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் தான், கருணாநிதியின் மகளான கனிமொழியும் 2ஜி வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல், எந்த அதிகார பதவி ஆசைப்பட்டு தா.கி.கொலை செய்யப்பட்டாரோ, அந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே இன்றைக்கு அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அடையாளமற்று கிடக்கின்றனர் என்பது மட்டும் தான் ஓரளவுக்கு ஆறுதலான விசயம்.

தா.கி. என்ற மாபெரும் ஆளுமைமிக்க செயல்வீரர் துரோகிகளால் கொலை செய்யப்பட்ட நாள் இன்று. (20 மே 2003)

14ம் ஆண்டு நினைவேந்தல் வீர வணக்கம்

- இரா.ச. இமலாதித்தன்

05 பிப்ரவரி 2016

அழகிரி கனவும் கலையும் தா.கி. ஆன்மாவால்!

தன் குடும்ப அரசியலின் அதிகார போட்டியில் மேலே எழ தடையாய் இருப்பாரென பயந்து, திரு. தா.கிருட்டிணன் அகமுடையாரை நடைபயிற்சியின் போது வெட்டி கொன்ற அஞ்சாநெஞ்சன் அழகிரியின் பிறந்தநாள் அலப்பறையெல்லாம் இந்த வருடம் அவ்வளவாக ஏதுமில்லை. போக போக நேற்றைக்கு இருந்த கொஞ்சநஞ்ச விளம்பரமும் இல்லாமல் போகும். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கின்றன; ஆனாலும் அழகிரியின் ஆட்சியதிகார கனவோ ஒருபக்கம் காற்றொடு கரைந்து கொண்டிருக்கிறது, ஸ்டாலினால்.

பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி போன்ற படையும் சிதறும். அழகிரியின் கனவு கோட்டையும் தகறும். அப்போது தான் தா.கி. ஆன்மாவும் உறங்கும்.

26 மார்ச் 2014

அழகிரியின் அஸ்தமனம்!

மு.க.அழகிரியை திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக நீக்கியுள்ளதால் தமிழ்நாட்டில் புதிதாக ஒன்றும் நடந்துவிட போவதில்லை. மிஞ்சிப்போனால் இன்னொரு திராவிட கட்சி உதயமாகும். இல்லையென்றால் தேசியக்கட்சியில் அழகிரி தனது சகாக்களுடன் ஐக்கியமாகக்கூடும். நாடாளுமன்றத்தில் பேசாமலேயே பயந்து ஓடிய அஞ்சாநெஞ்சன் அழகிரி, இப்போது அடாவடித்தனமாய் பேசிமட்டும் என்னவாகிவிட போகிறது?

முதுபெரும்தலைவர் தா.கிருட்டிணனை வெட்டிக்கொன்று அரசியலில் முன்னுக்கு வந்தாலும் கூட, அந்த இழிஅரசியல் அஸ்தமனம் ஆனதை எண்ணி ஒருவகையில் மகிழ்ச்சியே. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் 2ஜி ஊழல், அடாவடி அரசியல், நில அபகரிப்பு, வார்டு செயலாளர் கூட முதலமைச்சர் போல செயல்பட்டவிதம், தமிழீழ பிரச்சனையில் போலியான தமிழ்பாசம் காட்டி மறக்கமுடியாத அளவுக்கு செய்த வரலாற்றுபிழை, பதவி சுகத்திற்காக கேவலமானதொரு கொள்கை, பேரன் மருமகன் உட்பட்ட அனைவருக்கும் பதவி தந்து வாரிசு அரசியலை பெருமளவுக்கு தமிழக அரசியலில் அறிமுகபடுத்திய திமுகவை வீழ்த்த திமுகவின் மற்றொரு அரசியல் வாரிசான அழகிரியே தனது தம்பி ஸ்டாலினை வீழ்த்த நினைப்பதை சகதமிழ் வாக்களனாக வரவேற்கிறேன்.

ஆக மொத்ததில் இப்போது நடக்கும் அழகிரி உடனான திமுக அரசியல் நாடகத்தை காண்கையில், "நீ காதலிச்சா என்ன? நான் காதலிச்சா என்ன? மொத்ததில் அந்த குடும்பம் நாசாமா போனா சரி..." யென்று வின்னர் படத்தில் வடிவேலு சொல்லும் வசனம்தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.

- இரா.ச.இமலாதித்தன்