30 மே 2015

ஐ.ஐ.டி. அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டத்திற்கு பின்னால்...



ஐ.ஐ.டி.,யில் அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்திருப்பது மிகவும் கேவலமான அடக்குமுறை. எது 'தேச விரோதம்' என்பதை யார் வரையறுப்பது? பார்பன - பாசிச - ஹிட்லரிய - ஹிந்துத்வ சித்தாந்தங்களை எதிர்க்கும் வார்ணாசிரம அடிப்படையில் அடையாளப்படும் எளிய கூட்டத்தையெல்லாம், தேச துரோகியென சொல்லி விடுவது தான் இங்கே எளிதாக போய்விட்டது. மேலும், பார்பன சித்தாந்தங்களை ஹிந்து என்று பொது புத்தியில் ஓர் அணி திணிப்பதும், அதற்கு எதிராக இன்னொரு அணி பார்பன எதிர்ப்பு என்பதை பார்பனர்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த ஹிந்துக்களையே எதிர்ப்பதும் என இங்கே நடக்கும் பெரும் குழப்பங்களுக்கு இந்த புரிதல் இல்லாத நிலையே காரணமாக அமைந்து விட்டது.

படிப்பு மட்டுமன்றி அரசியலை பேசும் உரிமையும் தகுதியும் மாணவ சமுதாயத்திற்கு உண்டு. அவர்கள் தான் வருங்கால அரசியலை கட்டியெழுப்ப கூடியவர்கள். அப்படிபட்ட அந்த மாணவர்களின் கூட்டமைப்பிற்காக எந்த பெயரிலும் இணையலாம். அது தனி மனித உரிமை. அந்த அமைப்பின் பெயரால் ஒரு கருத்தை சொல்வதோ, பரப்புவதோ முற்றிலும் சட்டத்திட்டத்திற்கு உட்பட்ட ஒன்றே. மேலும், "தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து பேசுவது கூட தவறில்லை!"யென ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ள நிலையில், நரேந்திர மோடியின் தவறான செயல்திட்டங்களை விமர்சிப்பதும் கூட தனி மனித கருத்து/பேச்சுரிமையே. நரேந்திரமோடியோ, பா.ஜ.க.வோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. தவறை சுட்டிக்காடும் உரிமையானது, ஹிந்திய குடிமகனாக வர்ணாசிரம தமிழனுக்கும் உண்டு என்பதை பார்பன சித்தாந்தவாதிகள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். ஐ.ஐ.டி.யிலும் இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டம் தான் நடந்ததுள்ளது. ஆனால். முன்னறிவிப்போ, எச்சரிக்கையோ இல்லாமல் நரேந்திர மோடிக்கு ஆதரவாக விழிப்புணர்வு கூட்டத்தை ரகசியமாக இல்லாமல் பொது அரங்கில் நடத்திய காரணத்திற்காகவே, அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்திருக்கிறது பார்பன சித்தாந்த கூட்டம்.

அது தொடர்பாக இன்றைய தந்திடிவி விவாதத்தில் கலந்து கொண்ட மாணவர் அமைப்பு சார்பாக பங்கேற்ற 'மருது' மிகத்தெளிவாக கருத்துகளை பகிர்ந்தார். மேலும் அவர் சொன்ன, "ஐ.ஐ.டி., என்றாலே அது, ஐயர் ஐயங்கார் இன்ஸ்ட்டியூட்" என்ற ஒற்றை வரிதான் என்னை மிகவும் கவர்ந்தது. மருது என்ற அவரின் பெயரிலேயே தெரிந்து விட்டது அவரது அரசியல் தெளிவும், போராட்ட குணமும்! மருது போன்ற இளம் அரசியல்வாதிகள் தான் இனி காலத்தின் தேவை. வாழ்த்துகள் மருது!

- இரா.ச.இமலாதித்தன்

அதிமுக அமைச்சர்களின் பதவிக்காலம் எதுவரை?

இன்னைக்கு எங்க ஊர் நாகப்பட்டினத்துல, "நாகையின் சூப்பர் சிங்கர்" என்ற நிகழ்ச்சியின் இறுதி சுற்று லலிதா மஹாலில் நடந்துச்சு. கொஞ்ச நேரம் பார்க்கலாமேன்னு போனோம். கடைசி ரெண்டு மூனு வரிசைக்கு முன்னாடி உள்ள சீட்ல உட்கார்ந்தோம். கொஞ்ச நேரத்துல அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் வேளாண் அமைச்சருமான திரு.ஜீவானந்தம் அவரது சகாக்கள் இருவரோடு அரங்கிற்குள் வந்தார். பெரும்பாலனோர் அவரை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. ஒருசிலர் எழுந்து வணக்கம் சொல்லிட்டு, அமர்ந்து விட்டனர். அவரும் எனது இருக்கைக்கு அருகிலேயே தான் அமர்ந்திருந்தார். கொஞ்ச நேரத்துல விழா ஏற்பட்டாளர்கள், அவரை கண்டுகொண்டு முதல் வரிசையிலுள்ள இருக்கையில் அமர வைத்தனர். பரிசு பெறணுமேன்னு உயிரை கொடுத்து ஒரு பொண்ணு பாட்டு பாடிட்டு இருந்துச்சு. எப்போ பாடி முடிக்கும்ன்னு காத்திருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், திரு. ஜீவானந்தத்தை வரவேற்றார். "அமைச்சர் ஜீவானந்தம் அவர்களை வரவேற்கிறோம்!" என இருமுறை அமைச்சரென கூறினார். ஆனால், திரு.ஜீவானந்தம் இன்று எம்.எல்.ஏ.வும் இல்லை, மா.செ.வும் இல்லை. அதை யாரும் மறுப்பேதும் சொல்லவில்லை. சொல்ல வந்தது அதைப்பற்றி இல்லை.

அதிமுக அரசில் யார் எம்.எல்.ஏ? யார் அமைச்சர்? என்பது கூட ஓட்டு போட்ட வாக்களனுக்கே தெரியாமல் போய்விடுகிறது. அது தான் ஜெயலலிதாவின் சாதனையென நினைக்கிறேன். யார் எத்தனை மாதம்? எந்தெந்த பதவியில் இருப்பாரென கூட தெரியாத நிலையில் எப்படி ஸ்திர தன்மையோடு செயலாற்ற முடியும்? பரவாயில்லை, இப்போதைய மா.செ.வும், மீன்வளத்துறை அமைச்சருமான திரு.ஜெயபால் அவர்கள் இத்தனை மாதங்கள் தாக்கு பிடித்திருக்கிறார் என்பது பெரும் சாதனை தான். அதற்கும் இடையூறுகளாக பல உண்மை செய்திகள் மேலிடத்திற்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு கூட நாகை நீலாயதாட்சி உடனுறை சிவன் கோவில் தேரோட்டத்தில் இரு மீனவ கிராம அமைப்புகளுக்கு இடையே பெரும் மோதல். இரு தரப்பிலும் பலருக்கு காயம். பத்திரிகையாளர்கள் கூட தாக்கப்பட்டிருக்கின்றனர். பார்க்கலாம், என்ன நடக்குமென்பதை...

- இரா.ச.இமலாதித்தன்

29 மே 2015

ஃபீலிங் என்றால் என்ன? :)



கேள்வி:

ஃபீலிங் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்? அதை உதாரணத்துடன் விளக்குக.


ஃபீலிங் என்பது மனம் சார்ந்த ஒன்று. அது மனக்குமுறலாகவும் இருக்கலாம். இந்த ஃபீலிங்கானது மனதுக்கும் அறிவுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். அது பல வகைப்படும். இப்போது உதாரணமாக திருமண விழாமேடையை எடுத்து கொள்ளலாம். அதாவது, கல்யாண வீட்டுக்கு போறோம், அங்க புதுப்பொண்ணு புது மாப்பிள்ளையெல்லாம் பாக்குறோம். அப்போ நிறையா ஃபீல் வரும்.

01. நமக்கு எப்போடா கல்யாணம்ன்னு ஃபீல் பண்ணலாம்.

02. அந்த பொண்ணுக்கு மாப்பிள்ள சுத்தமா மேட்ச் இல்லையேன்னு ஃபீல் பண்ணலாம்.

03. ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கேன்னு ஃபீல் பண்ணலாம்.

04. இந்த மூஞ்சிக்கெல்லாம் இப்படிப்பட்ட பார்ட்னரா?ன்னு ஃபீல் பண்ணலாம்.

05. மணமேடையில நிக்கிற மத்த எந்த பொண்ணையாவது பார்த்து ஃபீல் பண்ணலாம்.

06. கல்யாணமே பண்ண கூடாதுடா சாமின்னும் ஃபீல் பண்ணலாம்.

07. இந்த பயலுக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சிடுச்சே? நம்மளும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்ன்னு ஃபீல் பண்ணலாம்.

08. கல்யாணத்தை பிரமாண்டமா பண்ணிருக்காய்ங்களே. நம்மாள இந்த அளவுக்கெல்லாம் பண்ண முடியாதேன்னு ஃபீல் பண்ணலாம்.

09. இதை விட கிராண்டா கல்யாணம் பண்ணனும்ன்னும் ஃபீல் பண்ணலாம்.

10. இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணலாம்ன்னு ஃபீல் பண்ணலாம்.

இதுபோல, பல மாதிரியாகவும் ஃபீல் பண்ணலாம். மேலும் இந்த ஃபீலிங்கானது இடத்துக்கு இடம் மாறுபடும்.

- இரா.ச.இமலாதித்தன்

28 மே 2015

எதையுமே தலைகீழாக செய்யும் அரசாங்கம்?!

மாஸ்ன்னு ஆங்கிலத்துல படத்துக்கு பேரை வச்சுட்டு, கடைசி நேரத்துல தமிழ் மொழியில வைத்தால் வரிவிலக்கு கிடைக்குமேன்னு மாசு என்கிற மாசிலாமணின்னு மாத்திக்கிறதெல்லாம் இங்க மட்டும் தான் நடக்கும். ஏற்கனவே மாஸ் என்ற பெயரை அனைவரது மனதிலும் பதிய வைத்து விட்டு, இப்போது மாசுன்னு மாத்தினால் எல்லாம் சரியாகிடுமா என்ன? இந்த திரைப்படத்து தலைப்புல தான் தமிழ்மொழி வாழுதா என்ன? முதலில் இந்த வரிவிலக்கு கண்றாவியையெல்லாம் எடுத்து தொலைங்கய்யா... பள்ளிக்கூடங்களில் வளர்க்க வக்கில்லாமல், திரைப்பட தலைப்புகளில் வளர்க்கிறார்களாம் தமிழை?!


 ஆரம்பத்தில்,  ”மாஸ்”

 பிறகு வரிவிலக்குக்காக...  “மாசு என்கிற மாசிலாமணி”

27 மே 2015

அரசியல் வியாபாரிகளின் கையில் அரசு இயந்திரம்!

அரசியல் வியாபாரம்:

எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து இறுதிவரை நான் விடுதலைப்புலிகள் மீதும், அண்ணன் பிரபாகரன் மீதும் அதீத பற்றுள்ளவன் தான். என்ன மாதிரியோ அல்லது என்னை விடவோ அதிக பற்றுள்ள எத்தனையோ பேரை என் சமகாலத்தில் நான் பார்த்து பழகிருக்கிறேன். ஆனால், திரு.சீமான் ஒரேவொரு தடவை ஈழத்தில் அண்ணன் பிரபாகரனோடு பேசி வந்த ஒரே காரணத்திற்காக, தன் வாய்க்கு வந்ததையெல்லாம் பொது மேடையில் உளறி தள்ளுவதை ஓர் ஈழ ஆதரவாளனாக என்னால் துளி கூட ஏற்க முடியவில்லை. அண்ணன் பிரபாகரன் படத்தை வைகோவுக்கு அடுத்த படியாக பாரிய அளவில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமை திரு.சீமானுக்கு உண்டு. அதற்காக, அவர் சொல்லும் கதையையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பது, அண்ணன் பிரபாகரனுக்கு செய்யும் துரோகமாகும். தமிழக அரசியலில் நல்ல அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள திரு.சீமானுக்கு வாழ்த்துகள். மேலும், திராவிடத்தின் நீட்சியான தமிழ் தேசியத்தை சொல்லி ஆட்சி அமையுங்கள், கெஜ்ரிவால் போல முதலமைச்சர் ஆகுங்கள். என் ஓட்டும், என் வாழ்த்தும் உங்களுக்கு உண்டு. ஆனால் பா.ம.க.வை வன்னியர் சாதி கட்சியென்று சொல்லிக்கொண்டு, நாடர் சாதியை சார்ந்த ஆதித்தனார் அன்று ஆரம்பித்த நாம் தமிழர் கட்சியை இன்றும் வைத்து கொண்டு, வைகுண்டராஜனோடு சேர்ந்து கொண்டு நாடார் சாதி அரசியலை தமிழ்தேசியம் என, அப்பாவி இன உணர்வாளர்களான என் சக இளந்தமிழர்களை தயவு செய்து ஏமாற்றாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்


அரசு இயந்திரம்:


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதிக்கும் ஆர்கேநகர் இடைத்தேர்தல் தேதிக்கும் உள்ள காலஇடைவெளியை கணக்கிடுகையிலேயே தேர்தல் ஆணையத்தின் நடுநிலை புரிகிறது. யார் சொன்னது? நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் சுயாட்சி அதிகாரம் கொண்டதென்று...? எல்லாமும் அரசியலாகி விட்டது. பணம் தான் அதை ஆட்டி வைக்கிறது. வாழ்க அரசியல்வாதிகளின் வியூகம்!

அரசியலுக்குள் ஊழல்!

ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத போது எந்தெந்த துறைகளில் முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்த, முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் மூலம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய இரு துறைகளிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அந்த ரகசிய குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

- விகடன்


இரண்டு துறைகளிலும் வெறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் ஊழல் நடத்து இருக்கா? ச்சே, ஊழலுக்கு இருக்கிற கெளரவத்தையே குறைச்சிட்டாய்ங்களே. எங்க ஊரு காரர் ஜெயபால்கிட்ட இருக்கிற மீன்வளத்துறை உள்பட மிச்சம் இருக்கிற அமைச்சகங்களை விசாரணை பண்னி பாருங்கய்யா. அப்போதான் ஊழல் பண்னின தொகைக்கு ஒரு மரியாதையே கிடைக்கும்.

25 மே 2015

ஓகே காதல்! ஓகே கல்யாணம்! ஓகே கண்மணி!



”ஆதித்யா வரதராஜன், தாரா காலிங்கராயர், கணபதி அங்கிள், பவானி ஆன்ட்டி...” ச்சே என்ன மாதிரியான கதை மாந்தர்கள்? இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களோடு வரும் இன்னும் சிலரின் சிறுச்சிறு பாத்திரங்களின் நடிப்பும் சான்சே இல்ல.மணிரத்னத்தின் ஃப்ரெஷான கதைக்களத்துடன் கூடிய திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் நேர்த்தியான பின்ணனி / பாடல் இசை, பி.சி.ஸ்ரீராமின் காணொளி உருவாக்கமென எல்லாமும் நச்சுன்னு பொருந்திருக்கு. முதல்நாள் திரையரங்கில் பார்க்கும் போது என்னையும் சேர்த்து ஆக மொத்தம் பத்தே பேர் தான் இருந்தனர். எத்தனை தடவ பார்த்தாலும் அலுப்பே வராத காதல் காவியமான, ஓ காதல் கண்மணி, அடுத்த தலைமுறையினரையும் காலம் கடந்து நிச்சயம் ரசிக்க வைக்கும். என்னை வெகுவாக பாதித்த காதல் திரைப்படங்களில் மெளனராகம், இயற்கை, சங்கமம், அலைபாயுதே, கல்லூரி, நீதானே என் பொன்வசந்தம் போன்றவற்றையெல்லாம் விட, இந்த ஓ காதல் கண்மணி ஒரு படி மேலாகவே மனதை கவர்கிறது. ரஹ்மான், மணிரத்னம், ஸ்ரீராம் என அனைவருமே வயதில் நாற்பத்தந்தை கடந்த பின்னாலும், இன்னமும் இளமையை கொட்டி கொடுப்பதில் தான் அடங்கிருக்கிறது இவர்களின் வெற்றியின் ரகசியம்!

- இரா.ச.இமலாதித்தன்

21 மே 2015

கல்யாணம் முதல் கலாய்த்தல் வரை!

அண்ணன் ஒருத்தரு சாட்ல வந்து, மிச்சத்த உன் கல்யாணத்துல பேசிக்கலாம்ன்னு சொன்னாரு. அதுக்கு இன்னும் காலம் இருக்குண்ணான்னு சொன்னேன். ஏன் உன் லவ்வை இன்னும் உங்க அப்பாகிட்ட சொல்லலையான்னு கேட்குறாரு. என்னது லவ்வா?ன்னு கேட்டேன். பதிலே சொல்லாம ஆஃப்லைன் போயிட்டாரு.


-o-o-o-o-o-o-o-o-o-

 பங்காளிக யெல்லாம் கல்யாண பத்திரிகை வைக்கிறாய்ங்க. இல்லைன்னா ஜாதகம் பொண்ணுன்னு பேசுறாய்ங்க. ப்ரொஃபைல்ல என்கேஜூடுன்னு மாத்திடுறாய்ங்க. யோவ், உங்களையெல்லாம் நம்பித்தான் கொஞ்சம் ஆறுதலா இருக்கேன். நீங்க பாட்டுக்கு திடுதிப்புன்னு இப்படி பண்ணிட்டா நான் எங்கய்யா போறது? தனிமரமா ஆக்கிட்டு போய்டாதீங்கய்யா... என் மனசு தாங்காது!

20 மே 2015

தாலியும் தலைவனும்!

தாலியை எடுத்து கொடுக்க சொன்னா, கல்யாண பொண்ணு கழுத்துலயே தாலியை கட்ட நினைச்ச சு.சுவாமிக்காக வெட்கப்படுறதா? மாப்பிள்ளைக்காக வருத்தப்படுறதா?

ட்வீட் எடு கொண்டாடு! -2

ஆர்.கே.நகரில் யாரை நிறுத்துவதென மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி தீவிர ஆலோசனை

அப்படியே ஓட்டுக்கு எவ்ளோ பணம் கொடுக்கணும்ன்னு ஆலோசனை பண்ணுங்க

-o0o-

2002ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதியான இதே நாளில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார்.
13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று

-o0o-

மத்தவன் பண்றதெல்லாம் தப்புன்னு குறை சொல்லிக்கிட்டு தன்னை யோக்கியன் மாதிரியே எவன் காட்டிக்கிறானோ, அவன் தான் அயோக்கியன்!
- இமலாதித்தவியல்
-o0o-  

சோழதேசம் - நேதாஜி - பிரபாகரன் என கொடியாய் உலகெல்லாம் பறக்கும் ”புலி”யை பிடிக்காதவர் யாருமெண்டோ? கூடவே விஜய்யையும் பிடிக்கும்.
‪#‎WeLovePuli‬

-o0o-  

இங்கே கண்ணகிகளும் உண்டு், மாதவிகளும் உண்டு. கோவலன்கள் தான் குழம்பி நிற்க வேண்டிருக்கு!

-o0o-  

21 மே 1991ல் இழந்த ஒரேவோர் உயிருக்காக, 18 மே 2009ல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொன்றொழிக்க காரணமாக இருந்த ராஜீவ் நினைவுநாள் இன்று.

-o0o-  

வாழ்க்கையை போலவே பெரும்பாலான காதல்களும் உணரும் முன்பாகவே முடிந்து விடுகிறது, வேறொருவரோடு திருமணமாய்...

-o0o-  


வீட்ல கூட்டி பெருக்கி, துணி துவைச்சு, ஏனம் கழுவி, சமையல் செய்றதுக்கு பயந்துகிட்டு புத்தகத்தை புரட்டினதுனால தான்!
‪#‎WhyGirlsGotHighMarks‬

-o0o-  

இந்த பொண்ணுங்களோட வாழ்க்கை டிகிரி படிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதோட முடிஞ்சிடுது. ஆனா பசங்க வாழ்க்கை கல்யாணத்துக்கு அப்பறம் தான் ஆரம்பிக்குது.

-o0o-  

பரீட்சையில அதிக மார்க் வாங்கினவங்க மட்டும் தான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்ன்னு இருந்திருந்தா, இந்நேரம் மத்த 90% பேரு தோத்துருக்கணுமே?!

-o0o-  

பத்தாவதுல ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அறிவியலில் நூத்துக்கு நூறு வாங்கிருக்காங்க. வருங்கால சயின்டிஸ்ட்களுக்கு வாழ்த்துகள்!

-o0o-  

”ஒருபக்கம் நாங்கயெல்லாம் பத்தாவது படிக்கும் போது”ன்னு ப்ளாஷ்பேக் ஆரம்பிப்பாங்க. மறுபக்கம் ”டாக்டராகி சேவை செய்வேன்”னு டிவில பொய் சொல்வாங்க.

-o0o-  

டிவிட்டர் ட்ரெண்ட் கூட மோடிமோடின்னு தான் கூவுது. 11பேர் கொண்ட குழுவை பக்காவா வேலை செய்ய சொல்லிட்டு, இவரு உலக மேப்பை பார்த்துகிட்டு இருக்காரு 

-o0o-  

எங்க ஏரியாவுல மக்குபையன் ஒருத்தன் 450மார்க் எடுத்திருக்கான்.அவன் பேப்பரை திருத்தின வாத்தியாரு பேரு குமாரசாமின்னு நினைக்கிறேன்.வாழ்த்துகள்டே! 

-o0o-  

”தம்பி நல்லா படிப்பாப்ள” ன்னு ஊரு உலகமே சொன்னுச்சு.நானும் 450க்கு மேல மார்க் வரும்ன்னு சும்மா அடிச்சு விட்டேன்.ஆனா வாங்குனது என்னவோ 348 தான்

-o0o-  

கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துர்கமினிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் இங்கெல்லாம் ஜூலை மாதம் நம்ம உலகம் சுற்றும் வாலிபன் மோடி பயணிக்கிறார்

-o0o-  


நிருபரிடம் ”நீங்கள் முதலில் அம்மா என்று சொல்லுங்கள். அவரது பெயரை சொல்லாதீர்கள்”என பார்த்திபன் MP கூறியுள்ளார்.
மரியாதையை கேட்டு வாங்க கூடாது!

-o0o-

வாழும் வேலுநாச்சியாரே! மருதுபாண்டியரின் பேத்தியே! ராஜராஜசோழனின் வாரிசே! ன்னு, இனிமே ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்க அடிமைங்க கிளம்பிடுவாய்ங்க.

-o0o-

மணிரத்னம் படத்துல வர வசனம் போல, சாட் பண்றது கூட நல்லாதான் இருக்கு? என்ன பண்ற? யாரு? ஏன்? அதுதான் எப்படி? எதுக்கு? ஹ்ம்ம். ஓ! சரி அப்படியா?

-o0o-

வாழ்வதற்கென தனி கோட்பாடுகள் ஏதுமில்லை, அதன் போக்கிலேயே சமரசத்தோடு நீயாக இருந்து விடு!
#இமலாதித்தவியல்

-o0o-

"மக்களின் தலைவி"ன்னு அவிங்களே புதுசா ஆரம்பிச்சு விட்ருக்காய்ங்க. அப்போ இனிமே "மக்களின் முதல்வர்" ஓபிஎஸ் தான் போல!

-o0o-

நீ நான் அன்பு குழப்பம்.நான் நீ அன்பு தேடல்.எது நான்?எது நீ?புரிதல் மாயம்.காதல் கொஞ்சும், கடவுள் கொஞ்சம்!மனமே சிவனேன்னு இரு. நீயொரு குரங்கு.

 -o0o-

சாதியை வைத்து கண்ட ஜென்மங்களுக்கு ஜால்ரா அடிப்பவரின் மீசை மயிரானது, மறைவிட மயிருக்கு சமமானது. ஒட்டுமொத்த சாதிக்கும் எவனுமிங்கே தலைவனில்லை.

-o0o- 

உங்க அரசியல் போதைக்கு சாதியென்ற ஊறுகாயை ஏன்டா சின்ன பசங்கள விட்டு வாங்க வைக்கிறீங்க? காறி துப்பி ஏறி மிதிப்பாய்ங்க. வெயிட் பண்ணுங்க.

-o0o-

பவளவிழா காணும் ’காமெடி கிங்’ கவுண்டமணி அண்ணனுக்கு இனிய வாழ்த்துகள்!அடுத்த தலைமுறையும் கவுண்டர் அட்டாக்கை மறக்காது.
‪#‎HappybirthdayGoundamani‬

-o0o- 

பல தலைமுறைகளோடும், நான்கு தமிழக முதலமைச்சர்களோடும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமாக்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்து, எங்க டெல்டாவான மன்னார்குடியில் பிறந்த வீரத்தமிழச்சியான பத்மஸ்ரீ மனோரமா ஆச்சிக்கு இனிய வாழ்த்துகள்!
‪#‎HappyBirthdayManoramaAchi‬

-o0o-  

ஆர்கே நகர் தொகுதியில ஆளுங்கட்சியை எதிர்த்து யாருமே போட்டி போடலைன்னா,ஐநூறு ஆயிரமெல்லாம் கிடைக்காம போய்டுமேன்னு வாக்களர்கள்தான் கவலைப்படுவாங்க

-o0o-  


கருணாநிதிக்கு அன்பழகன்;ஜெயலலிதாவுக்கு பன்னீர்செல்வம். இது மாதிரி சோனியாவுக்கு மன்மோகன்சிங்!
பினாமி அறிக்கையை மன்மோகனும் வெளியிட்டு விட்டார்

-o0o-

ஆரம்பத்துல நம்ம சாட் பண்ற பொண்ணுகிட்ட வேற யாரும் சாட் பண்றாங்கன்னு தெரியும்போது மனசு கஷ்டமாத்தான் இருக்கும்.பொறுமையா இருந்தா அதுவே பழகிடும்

-o0o-

ஈழப்படுகொலைகளை கண்டு குதூகலித்த இசுலாமிய தமிழர்களும், பர்மா படுகொலைகளை கண்டு கூக்குரலிடும் இந்து தமிழர்களும் இங்கே மட்டும் தான் உண்டு.

-o0o-

பள்ளிக்கூடங்களில் வளர்க்க வக்கில்லாமல், திரைப்பட தலைப்புகளில் வளர்க்கிறார்களாம் தமிழை?! தமிழனோட நிலைமை எப்பவுமே மானங்கெட்ட பொழப்பு தான்...

-o0o-

டிச25 வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் கம்யூகாரய்ங்க, சாதிகட்சின்னு சொல்லிட்டு திருமாவை உள்ளே நுழையவிட மாட்டாய்ங்க.இப்போ ரெண்டும் கூட்டணியாம்

-o0o-

நேத்து சரியான மழை. முந்தாநாள் ரமணனோட ஆள்காட்டி விரலை தொட்டு இருப்பாய்ங்களோ?

-o0o-

ட்வீட் எடு கொண்டாடு! -1

இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை.
- ஜெயலலிதா

ஆமா ஆமா, பா.ஜ.க.வுக்கும் கிடைத்த வெற்றி

 -o0o-

பொய் சொல்லியே வாதடுற வக்கிலுங்க தானே, பின்னாடி ஜட்ஜ் ஆகுறாங்க. ஜட்ஜ் ஆன உடனே ஞானோதயமா கிடைச்சிட போகுது?

 -o0o-

பொய்யாக எதையாவது கிறுக்கி கவிதையென நம்ப வைத்து விட முடியும் உலகில், பொய்யாக நடிப்பது தான் சிரமமாய் இருக்கிறது.
- இமலாதித்தவியல்


 -o0o-


இந்த தீர்ப்பை நினைக்கும் போது, பிரபு பாரதி குமார் போன்றோர்களும் நினைவுக்கு வந்து போகிறார்கள்.

 -o0o-

உங்க அம்மா விடுதலை ஆயாச்சு. தற்கொலை செய்து கொண்ட (பா)ஆவிகளே உங்களது ஆன்மா இனியாவது சாந்தியடையட்டும்!

 -o0o-

நீதியரசர் குமாரசாமியும் ஒருநாள் தன் சுயசரிதையை எழுதாமலா போய் விடுவார்? அப்போது தெரியும் மிச்ச கதை.

 -o0o-

குற்றம் சாட்டப்பட்டவர்களிலேயே சாந்தன் முருகன் பேரறிவாளன் மட்டும் தான் குற்றவாளிகள் போல.

  -o0o-

இனிமே சட்டம் படிக்கும் போதே, கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம் தெரியுதான்னு செக் பண்ணிட்டு வக்கில் ஆக்குங்கய்யா!

 -o0o-
 
 +2ல நாலு சப்ஜெக்ட்டுக்கு வாத்தியாரே இல்ல. ட்யூசன்ல குலாம் சார்கிட்ட படிச்சு தான் கணக்குல 120 மார்க் வாங்கினேன். ஜட்ஜ் ஆகிருக்கலாமோ?

  -o0o-

ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான். ஆனால் கடைசியில ‪#‎கணக்கு‬ பண்ணி கை விட்ருவான்!

 -o0o-

ஒருங்கிணைந்த தஞ்சை தரணி பெற்றெடுத்த ஆன்மீக தலைமகனுக்கு நாகப்பட்டினத்து காரனாய் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ‪#‎HappyBirthdaySriSri‬

 -o0o-

அக்னிநட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயில் கொளுத்திக் கொண்டிருக்க, இயற்கையென்ற கடவுளுக்கு தான் என்னவொரு கருணை? இந்த வாரம் முழுக்க மழை!

 -o0o-

வாழ்க்கை என்னவென்று உணரும் தருவாயில் உறவெல்லாம் ஒவ்வொரு மூலைக்கு சென்றுவிட, தனித்து நிற்கிறோம் நம் தாய் தந்தையை இளமையில் உணராததை போலவே!

 -o0o-

ஊர் ஊராக சுற்றி திரிபவர்களை நாடோடின்னும் சொல்லலாம், நரேந்திரமோடின்னும் சொல்லலாம்!

 -o0o-

ஈழத்தை வைச்சு ஒருபக்கம் அரசியல் ப்ரோக்கர்கள் புகழ் தேடிக்கிறாங்க. மறுபக்கம் மீடியாக்கள் டீஆர்பியை கூட்டிக்கிறாங்க. நல்ல பொழப்பு.

 -o0o-

நாயாக தெருவோரம் கூட நிம்மதியாக படுக்க முடியாது சல்மான்கான்கள் நிறைந்த ஊர் இது. நீதி கூட நேர்மையாக கிடைக்காது குமாரசாமிக்கள் நிறைந்த உலகமிது!

 -o0o-

ஆட்சியில இருந்தாலும், இல்லாவிட்டாலும் இத்தனை வருசங்களா தொடர்ச்சியா மீடியாவுக்கு தீனி போடுற அந்த திறமைக்காகவே பிடிக்கும் ‪#‎WhyILikeMK‬

 -o0o-

சமகிருதம், ஹீப்ரு, அரபி மொழிகள் மட்டுமே தெரிந்த கடவுள்கள், இன்றுவரையுமா தன் மொழியறிவை வளர்த்து கொள்ளாமல் இருக்கின்றன? ஓ மை காட்! சோ சேட் 

 -o0o-

மழையில் நனைந்து வருகையில் உரிமையோட தலை துவட்ட, தாய் பாசமின்றி இன்னொரு கை கிடைக்குமென்றால் அதுவும் சொர்க்கம் தான்! ‪#‎IamWaiting‬

 -o0o-

டிவியை ஆஃப் பண்ணினாலும் கூட கல்யாண் ஜூவலர்ஸ் பிரபுவும், அமிர்தா காலேஜ் ராதிகாவும் வந்துவிட்டு போகிறார்கள். டிவி பக்கம் போகவே பயமாயிருக்கு!

 -o0o-

இன்று எகிப்து நாட்டின் முன்னாள் அதிபருக்கு தூக்கு தண்டனையென தீர்ப்பு. இங்கே மாநில முதல்வருக்கு கூட நேர்மையான தீர்ப்பை வழங்க முடியல.

 -o0o-

உன் துக்கத்தை இன்னொருவராலும் உணர முடியுமானால் அதுதான் நிகரற்ற அன்பு! இது காதல் - நட்பு - உறவு என அனைத்துக்கும் பொருந்தும்.

 -o0o-

இறைவனின் திருப்பெயரால் தமிழ்தேசியம் பேசும் போராளி இயக்கங்களை ஆதரிக்கின்ற அனைத்து தோழர்களுக்கும், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை பிடிக்கும்.

  -o0o-

எல்லாம் தெரிஞ்சி வச்சுக்கணும். ஆனால், எதுவுமே தெரியாத மாதிரி கேட்டுக்கணும். அப்போதான் லவ்வும் / லைஃப்பும் நல்லாருக்கும்!

  -o0o-

இனப்படுகொலை மே 18 மட்டுமல்ல. அது காலங்காலமாய் திட்டமிட்டே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் தன் சுயத்தை இழக்கவில்லை எம் தமிழினம்!

  -o0o-

அழகாய் உள்ள பெண்களை விட, நொடிப்பொழுதில் அழத்தெரிந்த பெண்களே அதிர்ஷ்டசாலிகள்! பாவப்பட்ட ஜென்மங்களான சக ஆண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  -o0o-

ஓர் உயரிய நோக்கோடு முத்துகுமரனும், செங்கொடியும் உயிர்தியாகம் செய்ய கையாண்ட தீக்குளிப்பை கூட ரத்தத்தின் ரத்தங்கள் களங்கப்படுத்தி விட்டனர்.

  -o0o-

'என்ன பண்ற'ங்கிற வார்த்தை மட்டும் தெரியலைன்னா, சாட்ல எப்படி ஆரம்பிக்கிறதுன்னே தெரியாம முழிக்க வேண்டியது தான்!

  -o0o-

சாயுங்காலமானால் கையெல்லாம் நடுங்கும் குடிகாரன் போல எனக்கும் ஆகிவிடுகிறது, ஆன்லைனில் நீயில்லையென்றால்!
காலம்போன கடைசில கன்றாவியான ஃபீலிங்?!

 -o0o-

Money is Always Ultimate தான். ஆனால் அது நிலையான நிம்மதியையோ, உண்மையான அன்பையோ, எதிர்பார்ப்பில்லா உறவையோ தருவதில்லை. பயத்தை தான் கொடுக்கிறது

  -o0o-

”காசு அதிகமா கொடுத்து வாங்குற போன்ல, பட்டன் கூட வைக்க மாட்டாறாய்ங்களே தம்பி!”ன்னு தெரிஞ்ச ஒருத்தரு ரொம்ப ஃபீல் பண்ணி கேட்டுட்டு போறாரு.
 
 -o0o-

மே 20 - சமுதாய சீர்திருத்த நாள்



இன்றைய தலித் இயக்கஙகளுக்கெல்லாம் முன்னோடியாகவும், நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை இன்றைய அச்சு வடிவ பிரதியாக வர காரணமாகவும் இருந்து, தன் வாழ்நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய திரு.அயோத்தி தாச பண்டிதர் பிறந்தாளான மே 20ம் தேதியில் தான், காஞ்சி பெரியவா என அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதியும் பிறந்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

1845ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் காத்தவராயனாக பிறந்து, 19ம் நூற்றாண்டில் தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான அரசியல், ஹிந்து சமயத்தில் புரையோடிக்கிடந்த வர்ண சாயங்களை கடந்த சமய சீர்திருத்தம், சித்த மருத்துவம், சமூக சேவையுடன் கூடிய தமிழறிஞரென, தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த பலதுறைகளில் தொண்டாற்றினார் அயோத்தி தாசர்.

அதை போலவே,1894ம் ஆண்டில் விழுப்புரத்தில் சுவாமிநாதனாக பிறந்து ஹிந்து மதத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளை அகற்றி, சமயத்திற்கு புதிய வடிவம் தந்து காஞ்சி பெரியவா எனவும் அழைக்கப்பட்டார்.

இந்த இருவரின் பிறப்பும் போற்றதலுக்குரியது என்பதை அவர்களின் செயல்பாடுகளே நமக்கு பல கதைகள் சொல்லி புரிய வைக்கின்றன. ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகமாகவும், இன்னொருவர் உயர்வகுப்பு சமூகமாகவும் இருந்த போதிலும் முற்போக்கான சமூக சீர்திருத்தவாதிகளாகவே தங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது அவர்களின் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். அப்படிப்பட்ட மாபெரும் மனிதர்களான இருவரின் பிறந்தநாளும் போற்றுப்பட வேண்டிய நாளே!

மே 20 - சமுதாய சீர்திருத்த நாள்

- இரா.ச.இமலாதித்தன்

18 மே 2015

உலகம் சுற்றும் வாலிபன்




 ஹலோ! நரேந்திரமோடியா? எப்போ சார் இந்தியா வருவீங்க?
#ModiInSouthKorea




 ஜஸ்ட் மிஸ் ஆகிடுது....





தில்லானா மோகனாம்பாள் - ரீமேக்!

11 மே 2015

தீர்ப்புக்கு பின்னால்...

இந்த தீர்ப்புக்கு பின்னால் தமிழக சட்டமன்ற கூட்டணியும், அதன் தொடர்ச்சியாக குறைந்த பட்சம் 20 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு கிடைக்கலாம். மக்களின் முதல்வர் என்ற கேவலமானதொரு அடைமொழியை இனியாவது விட்டொழிவார்கள் என நம்பலாம். மக்களின் வரி பணத்தால் கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்ட பல திட்டங்கள் இனி செயல் பட தொடங்கலாம். நட்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களின் புதிய கிளைகள் இனி திறக்கப்படலாம். முக்கியமாக, அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் சந்தோசப்படலாம். ஆனால், உண்மையில் அரசு பதவியில் லஞ்சம் வாங்கி கொள்ளையடித்த அமைச்சர்கள் சார்ந்த கூட்டமெல்லாம், இந்த தீர்ப்புக்கு பின்னால் இனி பதவி மாற்றம் வருமேயென கதி கலங்கி நிற்கலாம். சாமானியனுக்கு ஒரு நீதி, சாக்கடை அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியென பாகுபாடு பார்க்கும் இந்த இழிநிலை இனியாவது மாற்றம் பெற இளைஞர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அரசியலை அவர்களே கைப்பற்ற வேண்டும். இந்த தீர்ப்பு நிச்சயமாக நேர்மையான தீர்ப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் இன்னும் மெளனியாய் வேடிக்கை பார்ப்பது தான் கேவலம். அது தான் எல்லாருக்கும் பழகி போய்விட்டது. வசதியாகவும் போய் விட்டது.

- இரா.ச.இமலாதித்தன்

07 மே 2015

பாஸ் ஆய்டலாம் பாஸ்!

முதல் மார்க் வாங்கினவங்க மட்டும் தான் வாழ்க்கையில ஜெயிச்சிருக்காங்க என்பது போன்ற விளம்பரங்கள் இன்னும் ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்களால் வந்து கொண்டிருக்கும். அதையெல்லாம் கவலைப்படாம, புடிச்சதையோ, கிடைச்சதையோ படிச்சாலே வாழ்க்கையில ஜெயிக்கலாம். ஆனால், இங்கே வெற்றிங்கிறது ஊருல உள்ள எல்லாரையும் தோற்கடிப்பது தான் என்பது போன்ற மாயை சூழ்ந்திருக்கு. 2002ல என் கூட ப்ளஸ்டூ படிச்சு ஸ்கூல்ல முதல் மார்க் வாங்கின பொண்ணுக்கு இன்னைக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அவ்ளோ தான். மாநில அளவில் முதல் மார்க் வருசா வருசம் பல பேரு வாங்குறாங்க. இதுவரைக்கும் அவங்க யாரும் பெருசா வாழ்க்கையை புரட்டி போடல. ஆர்வ கோளறுல மீடியாவுக்கு பேட்டிக்கொடுக்கிறப்போ, கலெக்டராகி-டாக்டராகி சேவை செய்வேன்’னு சொல்றதெல்லாம் சுத்த பொய். கடைசியில எல்லாம் காசு பணம் சம்பாரிக்க தான் பார்ப்பாய்ங்க.

ஃபெயில் ஆயிடுவோம்ன்னு நினைச்சு, எதிர்பார்க்காம பார்டர்ல பாஸ் ஆன அனைவருக்கும் என் வாழ்த்துகள்!


-o-o-o-o-o-o-o-o-


ஆன்மீகத்துக்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தமே இல்லை. ஆன்மீகத்தில் இருப்பவனெல்லாம் ஆண்டவனோடு ஐக்கியமாகிவிடுவதில்லை. ஆண்டவனை அடைந்தவரோல்லாம் அப்படியே ஆன்மீகமாதி அல்ல. அதில் பெரும்பான்மையானோர் சுயநலவாதியே. இன்னொரு பக்கம் ஆண்டவனை பற்றிய விழிப்பே இல்லாதோரெல்லாம் அயோக்கியனும் இல்லை. பகுத்தறிவாதியும் இல்லை. ஆன்மீக நாட்டமே இல்லாமல் ஆண்டவனை அடைந்தோர் இங்கே அனேகம் உண்டு. ஆண்டவன் எப்போதும் விளம்பரபடுத்தி, அழைப்பிதழ் கொடுத்து யாரிடமும் அடையாளப்படுத்தி கொள்வதில்லை. சக உயிர்களை தன் உயிரென நினைக்கும் அனைவருமே ஆண்டவனுக்கு அருகே தான் பயணிக்கிறார்கள். இங்கே மந்திர தந்திர உடல் வருத்தி ஏதுமில்லை.

- ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச இமலாதித்தனந்தா