20 மே 2015

மே 20 - சமுதாய சீர்திருத்த நாள்



இன்றைய தலித் இயக்கஙகளுக்கெல்லாம் முன்னோடியாகவும், நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை இன்றைய அச்சு வடிவ பிரதியாக வர காரணமாகவும் இருந்து, தன் வாழ்நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய திரு.அயோத்தி தாச பண்டிதர் பிறந்தாளான மே 20ம் தேதியில் தான், காஞ்சி பெரியவா என அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதியும் பிறந்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

1845ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் காத்தவராயனாக பிறந்து, 19ம் நூற்றாண்டில் தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான அரசியல், ஹிந்து சமயத்தில் புரையோடிக்கிடந்த வர்ண சாயங்களை கடந்த சமய சீர்திருத்தம், சித்த மருத்துவம், சமூக சேவையுடன் கூடிய தமிழறிஞரென, தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த பலதுறைகளில் தொண்டாற்றினார் அயோத்தி தாசர்.

அதை போலவே,1894ம் ஆண்டில் விழுப்புரத்தில் சுவாமிநாதனாக பிறந்து ஹிந்து மதத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளை அகற்றி, சமயத்திற்கு புதிய வடிவம் தந்து காஞ்சி பெரியவா எனவும் அழைக்கப்பட்டார்.

இந்த இருவரின் பிறப்பும் போற்றதலுக்குரியது என்பதை அவர்களின் செயல்பாடுகளே நமக்கு பல கதைகள் சொல்லி புரிய வைக்கின்றன. ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகமாகவும், இன்னொருவர் உயர்வகுப்பு சமூகமாகவும் இருந்த போதிலும் முற்போக்கான சமூக சீர்திருத்தவாதிகளாகவே தங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது அவர்களின் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். அப்படிப்பட்ட மாபெரும் மனிதர்களான இருவரின் பிறந்தநாளும் போற்றுப்பட வேண்டிய நாளே!

மே 20 - சமுதாய சீர்திருத்த நாள்

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக