கோவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஏப்ரல் 2016
25 நவம்பர் 2015
என் பார்வையில் இந்த வாரம்
விஜய் தொலைக்காட்சியின் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற தமிழ் வார்த்தைகளை
கண்டுபிடிக்கின்ற மாணவர்களுக்கான அறிவுபூர்வமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின்
இன்றைய பகுதியில், பெரும்பாலான வார்த்தைகளில் தமிழில்லை; சமக்கிருதம்
தான்!
#
விகடன் மீது அ.தி.மு.க.விற்கும், தந்தி மீது தி.மு.க.விற்கும், ஆமீர்கானின் மனைவி சொன்ன 'அது' இல்லை போல!
#
பல லட்ச மக்களை தங்களது பேச்சுகளாலும், எழுத்துகளாலும் கட்டிப்போட்டு ஆட்சியை பிடித்த தி.மு.க., இன்று தந்தி டி.வி.போன்ற ஊடக விவாதக்களங்களில் ஒருசிலர் மத்தியில் கூட தனது ஆளுமையை நிரூபணம் செய்ய முடியாமல் ஒதுங்கி செல்வது ஆச்சர்யம் தான்.
களத்தில் வெற்றி தோல்வி என்பதை விட, தோல்வியடைவோம் என்ற எண்ணத்தில் அந்த களத்தையே இழப்பது தான் பலவீனம் என்பது போலவே தி.மு.க.வின் இந்த முடிவும் அமைந்திருக்கிறது.
#
திரு. நெப்போலியன் ரெட்டியாரும், பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவரானார்!
வாழ்க தமிழக பா.ஜ.க.!
#
கருணாநிதியை சந்தித்த கோவன் மீதான புரட்சி - புடலங்காய் - நம்பிக்கையெல்லாம், இனி சந்தேகத்திற்கு உள்ளானாலும் துளியும் தவறில்லை.
#
கூகிள் போன்ற இணைய தேடுபொறிகளில், Tiger என தேடினால் புலி வருமா என தெரியாது. கண்டிப்பாக எம் அண்ணன் பிரபாகரன் வருவார்.
#Hbd_TamilTiger
#
கோமள விலாஸ் உணவகம்
தமிழ் முரசு பத்திரிகை
தமிழ்
சிங்கப்பூர்!
இந்தியா
நரேந்திர மோடி
ஹிந்தி

31 அக்டோபர் 2015
கோவன் கைதை கண்டிப்போம்!
தமிழக அரசின் மதுக்கடைகளை எதிர்த்து 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் மூலமாக, “மூடு டாஸ்மாக்கை மூடு", "ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது 124 ஏ - தேசத்துரோக நடவடிக்கை, 153 - சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 - அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துரிமை, பேச்சுரிமையை கூட கொடுக்க இயலாத கையாலாகாத மக்களாட்சி அரசின் வெளிப்பாடுதான் இந்த செயல். தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களை கூட ஆதரித்து பேச, எழுத, செயல்பட உரிமை கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வழங்கிய ஜனநாயகத்தின் நேர்மை இதுதானா?
எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும் என்பதை கூட ஆளும்
அரசாங்கங்கள் முடிவெடுத்தால், அது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்?
சர்வாதிகாரத்தின் உட்சம் இது. நாட்டுப்புற பாடகர் தோழர் கோவனை அரசு விடுதலை
செய்ய அனைத்து தமிழ் அமைப்புகளும் மிகப்பெரிய அளவிலான போரட்டக்களங்களை
உருவாக்க வேண்டும்.
நம்மை அடிமை படுத்திய அந்நியன் அன்று, பேச்சுரிமையை அடக்க பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மீது வாய்ப்பூட்டு சட்டம் தான் போட்டான். இன்று தேவரது ஜெயந்தி நாளில் அவருக்கு போட்ட வாய்பூட்டு சட்டத்தை விட மோசமான கைதை அரங்கேற்றிய அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன? குடிபோதைக்கு அடிமையாகி தமிழன் தன் சுயத்தை இழக்க வேண்டும் என்பது தானா? தமிழனின் சிந்தனையை மழுங்கடித்தால் தானே, அந்நியர்கள் ஆட்சியில் அமர முடியுமென்ற ராஜதந்திரமா? தமிழனே போதையிலிருந்து விழித்தெழுந்து தமிழ் மண்ணை தமிழனே ஆள வழிவகை செய்!
- இரா.ச.இமலாதித்தன்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)