திரு.கக்கனின் பிறந்தநாள் இன்று!

திரு.காமராசரோடு ஒப்பிடுகையில் திரு.கக்கன் ஒருபடி மேலாகவே போற்றுதலுக்குரிய ஆளுமைமிக்க மாமனிதர். மறதியை வழமையாக கொண்ட தமிழனுக்கு தொடர்ச்சியாக நினைவூட்ட திரு.காமராசருக்கு 'நாடார் சங்கம்' போல, திரு.கக்கனுக்கு பின்புலத்தில் அவர் சார்ந்த எந்தவொரு சாதி சங்கமும் முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை!

திரு.கக்கனின் பிறந்தநாள் இன்று!

ஹெல்மெட் அணிய சொன்னால் மட்டும் போதுமா?

பைக்ல பின்னாடி பயணிக்கிறவங்களும் ஹெல்மெட் போடணும்ன்னு சட்டம் போடுறதுக்கு முன்னாடி, தமிழ்நாடெங்கும் குண்டும் குழியுமாக உள்ள சாலையை ஒழுங்க போடணும். அதுக்கு முன்னாடி குடியும் குடித்தனமாக சாலையோர டாஸ்மாக் வாசலில் சரக்கு அடிச்சிட்டு எது ப்ரேக்? எது ஆக்சிலேட்டர்?ன்னு தெரியாம வண்டிய ஓட்ட வக்கிறவனை ஊக்கப்படுத்தும் டாஸ்மாக்கை இழுத்து மூடணும். அதையெல்லாம் செய்த பிறகு அரசாங்க சம்பளம் வாங்கியும், நூறு ரூபா இருக்கா? இருநூறு ரூபா இருக்கா?ன்னு காக்கி உடையில் பிச்சையெடுக்கும் கயவர்களை கண்டிக்கணும். அதுக்கெல்லாம் வக்கில்லாமல் சாலை விபத்தை தடுக்கிறோம்ன்னு குடிமக்கள் மேல நீங்க அக்கறை வைக்கிற உங்க புத்தியை த்தூ ன்னு துப்பத்தான் தோணுது. தேர்தல் நிதிக்கு, எந்த ஹெல்மெட் கம்பெனி காரன் சிக்கினான்னு தெரியல.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அகமுடையார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்?

அகமுடையார் இனக்குழுவினர் அனைவரும் இந்த பதிவை கண்டிப்பாக படித்து, மற்றவர்களுக்கும் பகிரவும்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அகமுடையார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? இந்த கேள்வியை பல இடங்களில் பலதரபட்டோர் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். எதற்காக இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்று பார்த்தால் பல விசயங்களின் மூலம் இந்த கேள்வி சரியேயென படும். பொதுவாக பசும்பொன் தேவர் தன்னை சாதிய அடையாளத்தோடு காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் கூட, ஒரேவொரு முறை அவர் சார்ந்த ஆப்பநாடு மறவர் சங்க மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார். இது மட்டுமே அவர் கலந்து கொண்ட சுயசாதி கூட்டமாக இருக்கின்றது. மேலும் எந்த இடத்திலும் தன்னை மறவரென சொல்லிக்கொள்ளாமல் சாதி கடந்து தேசிய அரசியலில் ஈடுபட்டவர். அப்படிப்பட்டவரையே மறவர் என்று பெருமை பேசும் சம்பவங்களும் இங்கே அரங்கேறி கொண்டுதான் வருகின்றன.

முக்குலத்தோர் என அடையாளப்படும் கள்ளர் - மறவர் - அகமுடையாரில், மறவர் உரிமை கொண்டு பசும்பொன் தேவரை கொண்டாட பல காரணங்கள் இருக்கின்றன. அதுபோலவே கள்ளர்களும் பசும்பொன் தேவரை கொண்டாட காரணம் உண்டு. ஆங்கிலேயரின் அடக்குறையால் தமிழகத்தில் குற்றப்பரம்பரை சட்டத்தை நிறுவி திட்டமிட்டே கள்ளர் உட்பட பலதரப்பட்ட இனக்குழுக்குளை அடக்கி ஒடுக்கினர். அந்த கைரேகை சட்டத்தை பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு காலக்கட்டங்களில் எதிர்த்து கொண்டிருந்த போது, பசும்பொன் தேவரும் தன் பங்களிப்பை கொடுத்து அதற்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை கொண்டு வர பாடுபட்டார். கடைசியாக அந்த சட்டம் கைவிட பட்டது. ஏதோவொரு வகையில் உதவியிருக்கிறார் என்ற காரணத்திற்காகவே கள்ளர்களும் பசும்பொன் தேவரை கொண்டாடுகிறார்கள்.

இந்த இரண்டு இனக்குழுக்குளும் பசும்பொன் தேவரை கொண்டாட அழுத்தமான காரணங்கள் உண்டு. ஆனால் அகமுடையார்களும் இன்று பசும்பொன் தேவரை கொண்டாட என்ன காரணம் இருக்க முடியுமென ஆராய்ந்தால் நிச்சயமாக ஒன்றுமே இல்லை என்பது தான் பதிலாக கிடைக்கிறது. அகமுடையார்களுக்கு சேர்வை, முதலியார், உடையார், பிள்ளை என்ற பட்டங்கள் போலவே தேவர் என்ற பட்டமும் பெரும்பான்மையாக வழங்கப்பட்டு வருகிறது. அகமுடையார்களுக்கு தஞ்சை - திருவாரூர் - நாகப்பட்டினம் உள்ளடக்கிய டெல்டா பகுதியெங்கும் இந்த தேவர் பட்டமே இருக்கின்றது. இதுபோல கோவை, மதுரை, திருச்சியென தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தேவர் பட்டம் அகமுடையாருக்கு இருக்கின்றன. இந்த தேவர் பட்டம் இருக்கும் அகமுடையாரில் பெரும்பாலானோருக்கு பசும்பொன் தேவரை மறவரென தெரியவே இல்லை, மாறாக, பசும்பொன் தேவரை அகமுடையார் எனவே நம்பிக்கொண்டிருக்கும் நபர்களும் பலருண்டு. இதை நான் என் கண் கூடாகவே பார்த்து, கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.

என் பெரிய தாத்தாவான அ.பக்கிரிசாமித்தேவர் கூட நேதாஜி படையில் இருந்தவர் தான். எங்கேயோ உள்ள சுபாஷ்சந்திரபோஸுக்கும், திருக்குவளை அருகிலுள்ள பக்கிரிசாமித்தேவருக்கும் என்ன தொடர்பு?யென யோசித்தால், சட்டென பசும்பொன் தேவரே நினைவுக்கு வருவார். அந்த காலம் தொட்டே பசும்பொன் தேவரை, அகமுடையாரென நம்பியிருந்ததை நம்மால் அறிய முடிகிறது. எந்த வகையிலும் அகமுடையாருக்கு ஆதரவாக இல்லாத பசும்பொன் தேவரை, இன்றைக்கு தலையில் வைத்து கொண்டாடி வருவதும் அதே அகமுடையார் இனக்குழு தான். டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் அகமுடையார் வீட்டு திருமணவிழா பதாகைகளில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் படம் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பசும்பொன் தேவர் படம் இருக்கும். அந்த அளவுக்கு பைக், கார் என எல்லா இடங்களிலும் அகமுடையாரோடு பசும்பொன் தேவரும் இருக்கின்றார் என்றால் அது அகமுடையாரின் அன்பை தான் வெளிப்படுத்துகிறது.

அப்படிப்பட்ட அகமுடையாரை வரலாறு எழுதுகிறேன் என்ற பெயரில் மருதுபாண்டியரையும், அகமுடையாரையும் ஓரம்கட்டிவிட்டு முக்குலத்தோர் என அறியப்படும் கள்ளர்-மறவர்-அகமுடையாரில் இருகுலத்தோர் மட்டும் செயல்படுவது வேதனையான விசயமே. ஆனாலும், அகமுடையாரை புறக்கணித்து விட்டு எந்த வரலாறையும் எழுதவும் முடியாது. இனி எந்த புது வரலாற்றையும் படைக்கவும் முடியாது. இது தான் எதார்த்தம். அகமுடையாருக்கு முக்குலம் தேவையில்லாமல் கூட வருங்காலத்தில் போகலாம். ஆனால் முக்குலம் என்ற குடைக்கு அகமுடையார் கண்டிப்பாக தேவை. ஏற்கனவே முக்குலமென்ற குடைக்குள் பல ஓட்டைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. அதை சரி செய்ய வக்கில்லாமல், அகமுடையாரை ஒதுக்கினால் முக்குலம் என்ற குடை கிழிந்து தொங்குவதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் கூட வெளிப்படையாகவே சொல்கிறேன், எழுத்து என்ற ஆயுதத்தை முக்குலத்தோரில் அகமுடையார் மட்டுமே மிக வீரியமாக பயன்படுத்த முடியும். மற்ற இருவரை விட வரலாற்றை எழுத அதிகம் தகுதி படைத்தவர்கள் அகமுடையார்களே. அதற்கு பல உதாரணங்கள் உண்டு, இன்றைக்கு பசும்பொன் தேவரை பற்றிய வரலாற்று நூலாக பெரிதும் மதிக்கப்படும், "முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்" என்ற நூலை எழுதியதே ஏ.ஆர்.பெருமாள் என்ற அகமுடையார் தான்!

உண்மை வரலாற்றை அகமுடையாரும் எழுத தொடங்கினால் முக்குலம் என்ற பலூன் உடைய தொடங்கும். அகமுடையாரை அனுசரித்து போகவில்லையென்றால், இழப்பு அனைவருக்கும் தான். ஏற்கனவே அரசியலிலும் சரி, பதவியிலும் சரி முக்குலத்தோர் என்ற அடிப்படையில் அகமுடையாருக்கு இழப்பு தான். அதனால் இனி ஏற்படும் எந்த இழப்பும் அகமுடையாருக்கும் பெரிய விசயமே இல்லை என்பதையும் மற்ற இருகுலத்தோரும் புரிந்து கொண்டால் சரி.

- இரா.ச.இமலாதித்தன்

ஆண்ட பரம்பரை வரலாற்று ஆய்வாளர்களுக்கு


சேர - சோழ - பாண்டிய - பல்லவ - சாளுக்கிய இப்படி எல்லா மன்னர் பரம்பரையும் நீங்க மட்டும் தான்யா. உங்க வரலாற்று திரிபுக்கு அகமுடையாரை ஏன்யா தேவையில்லாம இழுக்குறீங்க? வரலாற்றில் அகமுடையார்ன்னு ஒரு சாதி இல்லவே இல்லை.ஏறத்தாழ அகமுடையார்ன்னு ஒரு சாதி சமீபமா ஒரு எழுபது வருசத்துக்கு முன்னாடி தான் தனியா உருவானுச்ச்சு. அந்த அகமுடையார் சாதி கூட உங்க சாதியில இருந்துதான் பிறந்துச்சு. உங்க சாதி தான் மூத்தக்குடி. உலகையே ஆண்ட சாதி நீங்க மட்டும் தான். தமிழ்நாட்டுல கூட ஏதோ ஒருசில ஊர்களில் மட்டும் தான் அகமுடையார் சாதியை சேர்ந்தவங்க இருக்காங்க. அரசியலில் பெரிய அளவுக்கு ஓட்டு கூட இந்த அகமுடையார் சாதிக்கு ஒன்னும் கிடையாது. தமிழ்நாட்டின் எல்லா தொகுதிகளிலும் வெற்றியை தீர்மானிப்பது உங்க சாதி மட்டும் தான். சராசரியா தமிழ்நாடெங்கும் எல்லா தொகுதிகளிலும் லட்சகணக்கான ஓட்டுகளும் உங்க சாதி ஆளுங்களுக்கு மட்டும் தான் இருக்கு. போதுமா!? உங்க பொய் புளுகு வரலாற்று கழிசடைகளுக்கு இந்த அகமுடையார் சாதியை ஏன்யா இழுத்துக்கிறீங்க. அகமுடையார்களுக்கு ஆண்ட பரம்பரை கிரீடமெல்லாம் ஒன்னும் வேணாம். அகமுடையாரை விட்டு தொலைங்கய்யா. உங்களுக்கு புண்ணியமா போகும்!

மதுரை ஆதினம் எனும் சந்தர்பவாதி!

மதுரை ஆதினத்திற்கு வேற வேலை மயிரே கிடையாதா? சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி நடிகர் சங்க தேர்தல் வரைக்கும் வாயை வச்சி தொலையிராரு. பேசாமல் ஆன்மீகத்தை விட்டு தொலைஞ்சுட்டு, லெட்டர்பேடு அரசியல் கட்சி ஆரம்பிச்சு ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்க கிளம்பிடலாமே. அடிக்கடி சிவபெருமான் கனவுல வந்தாருன்னு, உமாசங்கர் மாதிரி எதையாவது அடிச்சு விட்டால், இணைய போராளிகளுக்கும் டைம்பாஸ் ஆகும்ல?!

தமிழ் பொதுவுடைமைவாதிகளை மறந்த சமூகம் சேகுவேராவை கொண்டாடுகிறது!

ஆதிக்கசாதி என அடையாளப்பட்டும் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, தன் சொந்தசாதி பண்ணையார்களையே எதிர்த்து களம்கண்ட அகமுடையார் இனக்குழுவை சார்ந்த வாட்டக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி போன்ற பொதுவுடைமைவாதிகளை மறந்த சமூகம் தான், தன் மொழி, பண்பாடு, கலச்சாரம் பற்றியே தெரியாத வேற்று நாட்டு சே குவேராவை தலையில் தூக்கி வைத்து, சட்டையில் படம் போட்டு கொண்டாடுகிறது! சேவை கொண்டாடுங்கள், அதே சமயம் தன் இனத்தானையும் மறக்காதீர்கள்! சேவின் பிறந்தநாளில் டெல்டா தேவர்களான வாட்டக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி போன்ற கம்யூனிச மாவீரர்களை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

முகநூல் முத்துகள்!


எதை சொன்னாலும் சரியான தருணத்தில் அதற்கு தகுதியானவங்க கிட்டத்தான் சொல்லணும். அப்போதான் சொன்னதுக்கு மரியாதை கிடைக்கும்!
- இமலாதித்தவியல்

Conscious Mind - Sub Conscious Mind - Super Conscious Mind என இது மாதிரி எப்படி வகைபடுத்தினாலும், (வெளி - உள் - ஆழ்) மனதை வென்ற உச்சப்பட்ச அறிவுதான் கடவுளாகி விடுகிறது. பரந்து விரிந்த அறிவு, அன்பை கொடுக்கும். அந்த பாரபட்சமற்ற அன்புக்கு அறிவே தேவைப்படாது. அன்பு மட்டுமல்ல அறிவும் கடவுள் தான்!

தன் பெயரை இன்னொருத்தியின் பெயருக்கு பின்னால் வாழ்நாள் முழுதும் போட்டு கொள்வதை பார்த்து ரசிக்கும் தருணம் ஒவ்வோர் ஆண்மகனுக்கும் புனிதமே!

மூடி இல்லாத பேனாவை போல தான் வாழ்வும் அமைகிறது, புரிதல் இல்லாத ஆணுக்கும் பெண்ணுக்கும்! எனக்கு பென்சில் போதும் முருகா!

சில பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சா ஹஸ்பண்ட் ஆகுறோமோ இல்லையோ, காலம் முழுக்க அசிஸ்டண்ட் ஆய்டுவோம்!

மனசு சொல்றதை கேட்டால் காதலிச்சு கல்யாணம் பண்ண வைக்கும். அறிவு சொல்றதை கேட்டால் கல்யாணம் பண்ணி காதலிக்க வைக்கும்.

மனசுங்கிறது குழந்தை மாதிரி; யார்கிட்ட வேணும்னாலும் சீக்கிரம் போய்டும். அதுனால தான் சம்பந்தமே இல்லாம சிரிக்கும், அழுவும்!

ஆர்.கே.நகருக்கு பின்னாலும் அரசியல்!

ஆர்கே நகரில் கம்யூக்கு ஆதரவு என்ற திகவை நினைத்து சிரிக்கும் வேளையில் திமுகவின் நிலைப்பாட்டை சூசகமாக வீரமணி சொல்கிறாரா என சிந்திக்க தோணுகிறது.


ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பம்பரமாய் சுற்றித்திரியும் வாழும் பசும்பொன் தேவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகள்! சாதியை வைத்து பிச்சையெடுக்கிற பொழைப்புக்கு வேற ஏதாவது செய்து வயிற்றை கழுவலாம். அக்டோபர் மாசம் மட்டும் இல்லைன்னா பாதி பேரு உயிரோட இருக்கிறதே இங்கே யாருக்கும் தெரியப்போறதில்ல.

அம்மா உணவகத்தின் முன்னோடி ராமு சேர்வை!

அரசியல் விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட 'அம்மா உணவக'த்திற்கு முன்னோடியாக, விளம்பரம் ஏதுமின்றி 'வள்ளி ஹோட்டல்' என்ற பெயரில் மதுரையில் கடந்த 48 ஆண்டுகளாக குறைந்த விலையில் உணவளித்து சேவை செய்து வந்த திரு.இராமு சேர்வையின் மனைவியான பூர்ணத்தம்மாள் உடல்நலக்குறைவால் இரு நாட்களுக்கு முன்பாக இயற்கை எய்தினார்.
சொல்றவன் இல்ல; செய்றவன் தான் சேர்வை!

தமிழக அரசின் போலி என்கவுண்டர்!

நெல்லையில் ரவுடி கிட்டப்பா என்கவுன்டரில் கொலை!ன்னு ப்ளாஷ் போடுறாய்ங்க. ரவுடின்னு எதை வைத்து முடிவு பண்றாங்கன்னு தெரியல. காவல் நிலையத்தில் இருக்கும் குற்றவாளிகளில் பாதி பேர் தான் குற்றவாளிகள். மிச்சமிருப்பவர்கள் அரசியல் பலமிக்க பதவியில் இருப்பவர்கள். போலிஸ்காரனுக்கு என்கவுன்டர் பண்ணனும் முடிவு பண்ணிட்டா அவன் ரவுடி ஆகுறது இயல்பான ஒன்று தான். ஆனால், நெல்லை உட்பட தென் தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் நூற்றுகணக்காக நடந்தேறிய (பள்ளர் - மறவர்) சாதிய கொலைகளை கட்டுப்படுத்த வக்கில்லாமல் மறவர் சாதியை சேர்ந்த ஒருவரை ரவுடி என்ற முகமூடியோடு கொலை செய்து அப்பகுதி மக்களிடம் உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. இந்த என்கவுன்டர் பட்டியலில் இன்னும் ஓரிரு நாட்களில் இன்னொரு ரவுடியும் என்கவுன்டர் செய்யப்படலாம். அதுல உன்னிப்பாக பார்த்தீங்கன்னா, அந்த ரவுடி பள்ளர் சாதியை சேர்ந்தவராக இருப்பார். இதுதான் இத்தனை வருட திராவிட அரசின் சாதனை!

- இரா.ச.இமலாதித்தன்

அகமுடையாரின் கனிவான கவனத்திற்கு!

இந்த பதிவு அகமுடையார் இனக்குழுவினருக்கு மட்டும்:-

தமிழகத்தில் அரசு வேலை கூட சாதி கோட்டோவின் மூலமாகவே பிரித்து கொடுக்கப்படுகிறது. கீழே அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இருக்கிறது. இதை கூர்ந்து கவனித்தால், முக்குலத்தோர் அரசியல் செய்யும் வீதிக்கொரு தலைவர்களின் இயலாமை என்னவென்று புரியும். முக்குலத்தோர் என அடையாளப்படுவது் கள்ளர் - மறவர் - அகமுடையார் என்ற இந்த மூன்று இனகுழுக்கள் தான். இதில் பிசி/எம்பிசி/டிஎன்சி என மூன்றிலுமே கள்ளர் - மறவர் என்ற இருகுலத்தாரும் இருப்பார்கள். ஆனால் இந்த அகமுடையார் மட்டும் பிசி பட்டியலில் மட்டும் தான் இருக்கின்றனர். முக்குலத்தோர் என அடையாளப்பட்டாலும் அரசியல் பதவியிலும் சரி, அரசாங்க சலுகைகளிலும் சரி், அனைத்திலும் புறக்கணிப்பட்ட ஒரே குலம் அகமுடையார் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

ஒரே மார்க் வாங்கிருந்தும் எம்பிசி/ டிஎன்சியில் உள்ள கள்ளரும்,மறவரும் ஓர் அரசாங்க பதவியிலோ, கல்வி ஒதுக்கீட்டிலோ இடம் கிடைத்து விடும். ஆனால் முக்குலமென மூச்சுக்கு முன்னூறு தடவை கத்தியே காலம் கழிக்கும் அகமுடையாருக்கு பட்டை நாமம் தான். முக்குலமும் ஒன்னுன்னு சொல்ற எவனும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான சாதி சலுகை அளிக்க வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டிருக்கின்றானா? அப்படி கேட்டாலும் வெறும் விளம்பரத்திற்காக கேட்டுவிட்டு நாங்களும் தான் இந்த வருசம், இந்த தேதியில் போராடினோம்ன்னு சொல்லிட்டு, வருசத்துக்கு ஒரு தடவை அக்டோபர் மாசம் பசும்பொன்னுக்கு கிளம்பிடுவாய்ங்க. இதுதான் முக்குலம் பேசும் அரசியல்வாதிகளின் உண்மை முகம். போராடுறது முக்கியமில்லை. அந்த போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெறவில்லையே? அப்பறம் ஏன் வீண் விளம்பரம் பண்ணிக்கிறாய்ங்கன்னும் தெரியல. எண்ணிக்கையை கணக்கில் சொல்லி அகமுடையார் முதுகில் சவாரி செய்வதுதான் முக்குலத்தோர் என்ற அடைமொழி பயன்படுமே அன்றி, ஒருபோதும் அது அகமுடையாருக்கு பயன் தராது. இதுதான் எதார்த்தம்.

தேர்தல் சமயத்தில் திராவிட கட்சிகளிடம் உன் சாதி பெயரையும், என் சாதி பெயரையும் சொல்லி இத்தனை வாக்காளர்கள் உள்ள எங்களுக்கு ஒரு ரெண்டு சீட்டாவது பிச்சை போடுங்க அம்மா, தாயே, அய்யான்னு பிச்சை எடுப்பாய்ங்க. அதுக்கு தான் இந்த முக்குலம் தேவைப்படும். இந்த கேடுகெட்ட சாதி தலைவர்கள் இல்லையென்றால் இந்நேரம் தமிழகத்தில் இந்த மூன்று இனக்குழுவும் அழிந்திருக்குமா என்ன? உங்க அரசியல் போதைக்கு அகமுடையாரை ஏன்யா ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிறீங்க? எங்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை கூட கொடுக்க வக்கில்லாத நீங்க, தயவு செய்து எங்களையும் விடுங்கய்யா. நாங்க ஆண்ட பெருமை பேசாமல், உழைச்ச்சு பொழைச்சு அறிவை வைச்சு மேலே வந்துக்கிறோம்.

- இரா.ச.இமலாதித்தன்

http://www.tn.gov.in/rti/proactive/bcmbc/handbook-bcmbc.pdf
http://www.tnpsc.gov.in/communities-list.html#mbc
http://www.tnpsc.gov.in/communities-list.html#dc
http://www.tnpsc.gov.in/communities-list.html#bc

சந்தானத்தை சாதி வட்டத்தில் அடைக்காதீர்!விஜய் டிவியின் 'லொள்ளு சபா' தொடங்கி இதுவரையிலும் திரு.சந்தானம் தன் சொந்த முயற்சியால் தான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவரையும் சாதி அடையாளத்தோடு மிகைப்படுத்தி அவரது எதிர்கால திரையுலக வாய்ப்பை கேள்விக்குறி ஆக்கி விடாதீர்கள். அவருக்கு ரசிகர்கள் வன்னியர்களில் மட்டுமல்ல!

திருப்பதி திருமலை திருமுருகா!

புரட்டாசி சனிக்கிழமை பிறந்ததால், ’பாலாஜி’ன்னு தான் எனக்கு பேரு வச்சாங்க. நான் பிறந்த அன்னைக்கு் என் தாய்மாமன் திருப்பதி போய்ட்டு வந்தாரம். அதுனாலேயே வீட்லயும் சரி, சொந்தகாராய்ங்களுக்கும் சரி ’பாலாஜி’ன்னு சொன்னாதான் என்னை தெரியும். ஆனால் எங்கப்பா தான் கேட்டை நட்சத்திரத்துக்கு ’இ’ ல ஆரம்பிக்கிற பேரு தான் வைக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. அதுலயும் தமிழ் வரலாற்றை சேர்ந்த மன்னர் பெயராத்தான் வைக்கணும்ன்னு ’இளஞ்செழியன், இளமாறன், இளந்திரையன்’ன்னு இப்படி என்னன்னமோ யோசிச்சு கடைசியா, ராஜராஜசோழனின் ஒரே பெண்ணான குந்தவையை கட்டிக்கொடுத்த விமலாதித்தனின் பெயரின் முதலெழுத்தை மட்டும் மாற்றி, ’இமலாதித்தன்’ன்னு வச்சிட்டாங்க.
எதுக்கு இந்த பெயர் பற்றிய சுய புராணம்ன்னு கேட்குறீங்களா? பாலாஜின்னு பேரு வச்சதுல இருந்து இதுவரைக்கும் நான் அந்த பாலாஜியை திருப்பதில போய் பார்த்தது இல்ல. 20,30 தடவைக்கு மேல பல தடவை முயற்சித்து நேற்றைய முந்தையநாள் தான் திருப்பதி போயிட்டு வந்தேன். அடிவாரத்துல இருந்து திருமலைக்கு நடந்தே பயணம். நல்ல தரிசனம்! என்னா அழகு?! அந்த அழகுக்கே கோடி ரூபாய் கொட்டி கொடுக்கலாம். நான் 50 ரூபாய் தான் உண்டியல்ல போட்டேன்.

ஊரே கோவிந்தா கோவிந்தான்னு கத்திக்கிட்டு கடந்துச்சு. அநேகமாக நான் மட்டும் தான் முருகா முருகான்னு முனுகிருப்பேன்னு நினைக்கிறேன். வேங்கடமுடையார் என்ற அழகு தமிழ் பெயர் கல்வெட்டுகளில் பல இடங்களில் சுவரெங்கும் காண முடிந்தது. திருப்பதியை தான் தெலுங்கரிடம் இழந்தோம், எம்பெருமான் முருகனான சேயோனின் திருத்தலத்தையும் மாயோனான பெருமாளிடம் இழந்துவிட்டோம் என்ற வருத்தம் மட்டுமே திரும்பி வருகையில் மிச்சம் இருந்தது; கூடவே பத்து லட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

தமிழகத்தில் அகமுடையார் ஒரு பார்வை

"வீட்டுக்கு ஓர் அவரைக்கொடியும், நாட்டுக்கு ஓர் அகமுடையார் குடியும் போதும்!" - முதுமொழி

வீட்டில் அவரைச்செடி விரிந்து படர்ந்து வளருமோ அதுபோலவே அகமுடையார் குடியும் நாடெங்கும் செறிந்து பெரும்பான்மையாக வாழ்வார்கள் என்று பொருள் படுகிறது. உண்மையாகவே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் இனக்குழு பூர்வகுடியாகவே இருக்கின்றது. தென் தமிழகம், டெல்டா, வடதமிழகம் என அனைத்து இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

Surnames:-

வட (பல்லவம்)தமிழகம்: முதலியார், பிள்ளை, உடையார்.
திருச்சியை உள்ளிட்ட (சோழம்) டெல்டா: தேவர், பிள்ளை, தேசிகர், பல்லவராயர்.
தென் (பாண்டியம்) தமிழகம்: சேர்வை, தேவர், பிள்ளை, மணியக்காரர், அதிகாரி.
கொங்கு மண்டலத்தில் அகமுடையார் அனைவருக்கும் பெரும்பான்மையாக தேவர் பட்டமே.

உடையார், பிள்ளை, நாயக்கர், பல்லவராயர், வானவராயன், வல்லவராயன், நாட்டார், மணியக்காரர், தேசிகர், அதிகாரி என 'அகமுடையார்' இனக்குழுவுக்கு தமிழகமெங்கும் பலப் பட்டப்பெயர்கள் (SurNames) இருந்தாலும், சேர்வை, முதலியார், தேவர் என்ற இந்த முப்பெரும் பட்டங்கள் தான் பெரும்பான்மையாக இருக்கின்றது.

திருவண்ணாமலை, வேலூர் போன்ற பகுதிகளில் வீதிகளுக்கே உதாரணத்திற்கு ”சேர்வை மாணிக்க முதலியார் தெரு” என்று பல இருக்கின்றன. பல்லவராயர் பட்டப்பெயர்களோடு திருச்சி திருவெறும்பூருக்கு அருகிலுள்ள சுற்று வட்டார பகுதிகளில் அகமுடையார்கள் வசிக்கின்றனர். நாகையின் கல்வி தந்தை வலிவலம் தேசிகர் பெயரிலேயே கல்வி நிறுவனங்கள் உண்டு. நாட்டார் பட்டம், பேராவூரணி பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ”புண்ணியரசு நாட்டு” அகமுடையார்களுக்கு உண்டு.

திமுகவின் முன்னாள் அமைச்சரான திரு பொன்முடியின் பட்டமும் உடையார் தான். திருக்கோவிலூர் என்ற நடுநாட்டை சுற்றியுள்ள அகமுடையார்களுக்கு உடையார் பட்டம் பெருமளவுக்கு உண்டு. காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு கே.வி.தங்கபாலுவின் பட்டமும் கூட அகமுடைய நாயக்கர் தான். தஞ்சைக்கு அருகிலுள்ள கரந்தை தமிழ்வேள் உமாமகேசுவரன் பிள்ளை மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு அகமுடையார் அனைவரும் ஃபார்வேர்ட் கம்யூனியிட்டிலேயே இருந்திருப்போம். அவரின் முயற்சியால் தான் இன்று அகமுடையார்கள் பிசி பட்டியலில் இருக்கின்றனர். இல்லையென்றால் இந்நேரம் பார்பனர்களோடு முட்டி மோதி கொண்டிருந்திருக்க வேண்டும். பட்டங்கள் இங்கு பல உண்டு. ஆனால் அனைவரும் அகமுடையார் என்ற புரிதலும் வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

பட்டம்: தேவர்
பிரிவு: பதினெட்டு கோட்டை பற்று
இனக்குழு: அகமுடையார்

செம்பியன் மகாதேவியின் சித்திரை கேட்டை திருவிழா!

தன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் மற்றும் சுந்தர சோழரின் மகளான குந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர் இவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்த செம்பியன் மாதேவியின் ஜென்ம நட்சத்திரத்தில் தான் நானும் பிறந்திருக்கிறேன் என்பதில் சின்ன மகிழ்ச்சி.


நாகை மாவட்டம் செம்பியன்மகாதேவி என்ற ஊரில் செம்பியன் மகாதேவியாலேயே கட்டியெழுப்பப்பட்ட சிவன் கோவில் உள்ளது. அங்கு செம்பியன்மாதேவியின் பிறந்த நாளான சித்திரை மாத கேட்டை நட்சத்திர நாளில் வருடம் தோறும் கேட்டை விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஊர் மக்களே சீர் எடுத்து வந்து அங்குள்ள செம்பியன்மாதேவி கற்சிலைக்கு சிறப்பு செய்து வழிபடுவார்கள்! இன்று அந்த கோவிலும் கேட்பாரற்று தான் கிடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு நவகிரக கோவில்கள் போன்ற வருமான தரும் கோவில்களை கணக்கிலெடுத்து கல்லா கட்டத்தான் நேரம் சரியா இருக்கு.

ஆளப்பிறந்தவன்...

இரா.ச.இமலாதித்தன்

காக்கா முட்டையும் என் நண்பனும்!

என் நண்பன் Jai இணை இயக்குனராக பணியாற்றிய தேசிய விருதுகள் பெற்ற “காக்கா முட்டை” பற்றி இணையமெங்கும் பலரும் பாராட்டும் போது பெருமையாக இருக்கு. இயக்குனர் மணிகண்டனுக்கும் காக்கமுட்டை குழுவினருக்கும் என் வாழ்த்துகள்!
மாப்ள! சீக்கிரமாகவே நீயும் இதை விட சிறந்த படைப்பை உருவாக்குவாயென்ற நம்பிக்கை என்னுள் இருக்கிறது. ஜெய் அட்வான்ஸ் வாழ்த்துகள் டா!

ஜூன் 1,2,3,4

ஜூன் 1:

திருமுருகனின் அவதார திருநாளான வைகாசி விசாகத்திருநாள் நல் வாழ்த்துகள்!

ஜூன் 2:

தென்கோடி பண்ணைபுரத்தை பலகோடி பேர்களுக்கு பாதை போட்டு காட்டி, இசை போதையூட்டிய இளைய இசையரசனுக்கு என்றும் பதினாறே! ‪#‎HBDRajasir‬

ஜூன் 3:

எளியவனும் உச்சத்தை தொட முடியுமென்ற நம்பிக்கையை ஊட்டிய திருக்குவளையாருக்கு 92ம் அகவை வாழ்த்துகள்!

ஜூன் 4:

நான்கு தலைமுறைகளாக பல்வேறு மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடிவரும் எஸ்.ப்பி.பிக்கு இனிய வாழ்த்துகள்!
‪#‎HBDspb‬

மு.க. 92 !

இன்னும் கூட மிகப்பெரிய வளர்ச்சியடையாத திருக்குவளை போன்ற ஒரு கிராமத்திலிருந்து சென்று, இத்தனை சாதனை செய்த ஒரு காரணமே போதும் திரு.கருணாநிதியின் திறமையை உணர. மஞ்சப்பையோடு திருட்டு ரயிலிலில் வந்ததாக திரு.கருணாநிதி அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும் கூட, அப்படி மஞ்சப்பையோடு வந்த எத்தனை பேர் இதுவரையிலும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கின்றனர் என்பதை யோசித்தாலே தெரியும் அவரின் வெற்றியின் தன்மையை. பார்பன - ஆரிய சக்திகள் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், வெகுஜன சாமானியனாக ஒரு கட்சியின் தலைமைக்கு வந்து, அதை தொடர்ந்து தக்க வைப்பதும் அவ்வளவு எளிதான செயல் கிடையாது. சாமானியனும் சரித்திரத்தில் இடம்பெற முடியுமென்ற சாதனையை நிகழ்த்திக்காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர்களை போலவே, எந்தவித அரசியல்/சாதிய/வாரிசு/நட்சத்திர பின்புலமும் இல்லாமல் தமிழக அரசியல் சரித்திரத்தில் நீக்கமுடியாத அளவுக்கு நிரந்தரமாய் இடம்பிடித்த திரு.கருணாநிதிக்கு, சக நாகை மாவட்டத்துக்கு காரனாய் என் வாழ்த்துகள்!

அகமுடையாரின் அரசியல் பார்வை!


பொது தளத்தில், அரசியல் பங்களிப்புக்கு வேண்டுமேனால் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு முக்குலத்தோர் என்ற கட்டுமானம் தேவைப்படலாம். உண்மையில் முக்குலத்தோர் என்ற கட்டுமானத்தால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கும் ஒரேவோர் இனக்குழு அகமுடையார் தான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அகமுடையார் முதுகில் எளிதாக சவாரி செய்யவே இந்த முக்குலத்தோர் என்ற கட்டுமானம் தேவைப்படுகிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

முக்குலமாக இருக்கும் வரையிலும் அரசியலில் அகமுடையார் என்றைக்குமே தீண்டதகாதவர்கள் தான்! - இதுதான் 100% உண்மை. ஆனால் எந்த இரு(முக்)குலத்து தலைவருக்கு பின்னாலும் சாணக்கிய பின்புலமாக ஓர் அகமுடையார் தான் இருக்கின்றார் என்பது மட்டுமே ஒரு சின்ன ஆறுதல்.

அரசியல் தெளிவே இல்லாத எந்தவொரு இனக்குழுவும் என்றைக்குமே முன்னேற வாய்ப்பில்லை. ஏற்கனவே இருந்தவற்றையெல்லாம் இழந்து கொண்டிருக்கும் இந்த இனக்குழு, இன்னமும் வெறும் உணர்ச்சிவயப்படலின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் அணுகுவது வேதனையான விசயம். குறிப்பாக அடுத்த தலைமுறை அரசியலை கையிலெடுக்கும் பெரும்பாலான இளைஞர்கள் யாருக்கும் தொலைநோக்குடன் கூடிய பார்வையே இல்லை. கடந்தகால வரலாற்றை பேசி பெருமை கொள்ளும் அதே சமயம், இடைக்காலத்தில் நடந்தேறிய வரலாற்றை மறந்துவிடுவதை பற்றி சொல்வதற்கொன்றுமில்லை. எதையுமே முழுதாக தெரியாமல் அரைகுறையாக கும்மியடிக்கும் என் செம்மறியாட்டு கூட்டமே இனியாவது திருந்து.

- இரா.ச.இமலாதித்தன்

சூப்பர் ஸ்டார் ரஜினியெனும் ஒரு முதியவரின் கலைச்சேவை!?

சூப்பர் ஸ்டார் லிஸ்ட்லிருந்து தூக்கியெறியப்பட்ட ரஜினியின் இந்த படமும் ஃப்ளாப் ஆனாதான் ஹிரோவாவே நடிக்கிறதை(?) விட்டு தொலைப்பாருன்னு நினைக்கிறேன். திரும்பவும் ஐஸ்வர்யாராய் தான் ஹிரோயினா வேணும்ன்னு அவர் ஆசைப்படலாம். ஆனால் பாவம் ரஞ்சித்! இப்போது தான் நல்ல இயக்குனரென்று திரையுலகில் அடையாளப்பட்டிருக்கிறார். உடனே, ஓடுற குதிரை மேல பந்தயத்தை கட்டிவிட்டார் இந்த ரஜினி. ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழுக்கும் தமிழர்க்கும் இதுவரையிலும் ஒரு மயிரையும் செய்யாத ரஜினி இந்த படத்துல வாங்குற கோடி கணக்கான கருப்பு வெள்ளை சம்பளத்தை மட்டும் ஏழை எளிய மக்களுக்காக கொடுக்க போறார்? பஞ்ச் டயலாக், நூறு பேரை அடித்து நொறுக்கும் ஆக்‌ஷன் சீக்வன்ஸ், பேத்தி வயசுல உள்ள பொண்ணோட டூயட், ஐம்பது பேரோட சேர்ந்து ஆடாமாலே ஓர் ஓபனிங் சாங், இறக்குமதி செய்யப்பட்ட ஆறடி உயர வில்லன் என மொக்கையான கமர்சியல் மசாலாவை உருவாக்கி, ரஞ்சித்தின் கதைக்களத்தையே குளறுபடி செய்ய சொல்லிருப்பார் ரஜினி. முருகா! போன ரஜினி படத்துக்கு கேட்டதை தான் இந்த தடவையும் கேட்குறேன், இந்த படமும் அட்டு ப்ளாக் ஆகிடணும்! ஏதாவது பார்த்து பண்ணி விடு.
பவர் ஸ்டாருக்கு கூடத்தான் வயசானாலும் படம் 365 நாள் ஓடுது. அதுக்காக அவரை ரஜினியோட கம்பேர் பண்ண முடியுமா? சீனிவாசன் கோவிச்சிக்க மாட்டாரா என்ன? சூப்பர் ஸ்டார்ங்கிற மட்டும் என்ன மொத்தமா ரஜினிக்கு குத்தகைக்கு விட்டுருக்கா என்ன? மக்கள் திலகம் முதல்வர் ஆனார். நடிகர் திலகம் ஒரு கட்சியின் தலைவரானர். ஒன்னுக்குமே வழியில்லையே இவர்கிட்ட. அப்பறமென்ன பட்டம் மட்டும் வாழுதாக்கும்.

வயசான காலத்துல கலைத்துறையை தனியாளா சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கிடே ஏன் தூக்கி சுமக்கணும்.தகுதியான ஆளுங்க வந்த பிறகும் அடம்பிடிக்கலாமா? பட்டத்தை கொடுத்தது மக்கள்.அதை பிடுங்கவும், அதை இன்னொருவருக்கு மாற்றி கொடுப்பதும் மக்களிடம் தான் உள்ளது.நான் மட்டும்தான்னு அடம்பிடிக்க கூடாது

- இரா.ச.இமலாதித்தன்

மன்னர் பரம்பரையென்ற வரலாற்று குழப்பம்!

வரலாறு என்பது சுவாரசியமான போதை. அந்த வரலாற்று தேடல் மூலமாக, எதை வேண்டுமானாலும் நமக்கு சாதகமாகவோ அல்லது இன்னொரு சமூகத்துக்கு எதிராகவே தரவுகள் மூலமாகவே நிறுவ முடியும் என்பது தான் நிதர்சனம். கடந்த கால வரலாறு முற்றிலுமே குழம்பிய குட்டை போல தான், திறமையிருந்தால் எந்த மீனையும் எளிதில் பிடித்து விடலாம். ஏன், இன்னொருவனுக்கு உரிய மீனை கூட தனதாக்கி கொள்ளலாம். இதை அபகரிப்பு என்றோ திறமை என்றோ சொல்லிக்கொள்ளலாம். உண்மையில் அது உண்மையில்லை. இன்றைக்கு பலரும் தங்களது இனக்குழுவை மன்னர் பரம்பரை என்று சொல்லிக்கொள்வதில் முழு முனைப்போடு வரலாறென்ற குட்டையை தெளிவாக குழப்புகிறார்கள். தமிழ் மொழிவளத்தின் உறுதுணையால் எல்லாவற்றையும் தங்களுக்கு சாதகமாக்கியும் கொள்கிறார்கள். அரச பரம்பரை என்று இன்றைக்கு அநேக சாதி சங்கங்களும் தங்களை முன்னிறுத்தி விட்டன.

ஒன்று மட்டும் தெளிவாக்கி கொள்ளுங்கள். பொதுவாகவே மன்னன் என்பவன் பல மனைவிகளுக்கு கணவனாகி இருக்கின்றான். சாதி பார்த்து எந்த பெண்ணையும் மண உறவு கொள்ளவில்லை அவன். போர் வியூகங்களுக்காகவும், மோகத்திற்காகவும், அரசியல் சாதக பாதகங்களின் போது ஏற்பட்ட இக்கட்டான சூழலின் போதும் மாற்று சாதி பெண்களை மணமுடித்திருக்கின்றான். ஒரு குறிப்பிட இனக்குழுவினர் மட்டும் தான் மன்னர் பரம்பரை என்று யாராவது நம்பிக்கொண்டிருந்தால் அது அவர்களின் அறியாமையே. மேலும், அரசபரம்பரையினர் என அடையாளப்பட்ட யாருமே ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு உள்ளாக மட்டுமே திருமண உறவு செய்து கொள்ளவில்லை என்பதையும் முதலில் உணர்தல் வேண்டும்.

இன்னும் முக்கியமாக, தமிழ் சாதிகளில் பெரும்பான்மையினோர் போர்குடிகளே. முழுநேர போர்குடிகளாக ஒருசில இனக்குழுக்களும், பகுதி நேர போர்குடிகளாக பெரும்பான்மையான இனக்குழுக்களும் இருந்துள்ளன. போர்குடியும் மன்னர் பரம்பரையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். ஆனால், ஒட்டுமொத்த போர்குடி இனக்குழுவும் மன்னராக இருக்க தகுதி படைத்திருக்கவில்லை என்பதையும் புரிதல் கொள்ள வேண்டும். ஓர் எடுத்துக்காட்டுக்கு, இன்றைக்கு தமிழக அரசியலில் திரு கருணாநிதி நான்கு முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருக்கார். ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அவர் சார்ந்த இசைவேளாளர் சமூகமே தமிழ்நாட்டை ஆண்ட பரம்பரை என்று சொல்வதை இன்றைக்கு நம்மால் ஏற்க முடியுமா?

மன்னர் பரம்பரை என்று பீற்றி கொள்ளும் எல்லா இனக்குழுக்குளிலும் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஏழை எளிய வறுமையில் வாடும் குடும்பங்கள் இங்குண்டு. முதலில் சொந்த சாதியில் வறுமையில் வாடும் குடும்பங்களை மேலேற்றி விட பாடுபடுங்கள். அவர்களுக்கு இந்த மன்னர் பரம்பரை கதைகளை சொல்லி உளவியல் ரீதியாக சமூகத்தில் உயரிய இடத்து கொண்டு முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் இந்த வரலாற்று குட்டையை குழப்பலாம்.

நானும் இந்த வரலாற்று குட்டையை, அகமுடையார் இனக்குழு சார்ந்து குழப்பத்தான் வெகு நாட்களாக காத்திருக்கிறேன். நான் குழப்பினால், முக்குலத்தோர் என கட்டமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தின் அடித்தளமே ஆட்டம் காணுமோ என்ற குழப்பத்திலேயே பழைய குப்பைகளையெல்லாம் கிளறாமல் வேடிக்கை பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

- இரா.ச.இமலாதித்தன்