அரசாங்க பதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசாங்க பதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஏப்ரல் 2016

யாருக்காக இந்த அரசு?

கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசாங்க பணிகளை புறக்கணித்து வரும், மிகப்பெரிய பொறுப்புகளிலுள்ள பதவியில் இருக்கும் அரசு பணியாளர்களை பற்றி எந்த ஊடகமும் வாயே திறக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு பணிகளும் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. ஆனாலும் அதை பற்றியெல்லாம் 'என் தலைமையிலான ஆட்சி' என்று நொடிக்கொரு முறை தம்பட்டம் அடித்து கொள்ளும் ஜெயலலிதாவுக்கும் கவலையில்லை.

அந்த அரசு அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளையாவது நிறைவேற்றி தரலாம். இல்லையென்றால் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி இந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட சொல்லலாம். எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு, ஒரு அரசு தேவையா?!
மக்களுக்காகவே அரசு. மக்களுக்கு சேவை செய்யவே, அரசாங்க அலுவலர்களுக்கு சம்பளம். மக்களின் தேவையறிந்து மக்களுக்கு பணியாற்றவே, அரசியல்வாதிகளுக்கு அரசாங்க பதவிகளை மக்கள் வழங்கியுள்ளனர். "மக்களுக்காகவே நான், எனக்கென்று யாருமில்லை" என்ற சொன்னதெல்லாம், வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறது என்பதை இனியாவது ஜெயலலிதா புரிந்து கொள்ளட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

08 செப்டம்பர் 2015

ஆண்ட பரம்பரையென்ற போலியான புகழ் தேவையில்லை!



டெல்டாவில் எந்தவொரு சாதி அரசியலும் தலை தூக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு வடசேரி நிகழ்வும் ஓர் உதாரணம். அது கள்ளரோ, அகமுடையரோ, பள்ளரோ, பறையரோ, வன்னியரோ, முத்தரையரோ, வெள்ளாளரோ யாருமிங்கே சாதியரசியலில் களம் கண்டு இங்கு வெல்லவே முடியாது. துயரம் என்னவெனில், வடசேரியை சேர்ந்த அகமுடையார் இளைஞர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என்பதுதான்.

விவேகமில்லாத வீரமும், வீரமில்லாத விவேகமும் எதற்கும் உதவாது. என்னைக்கோ ஒருத்தன் அவனது குடும்பம் மட்டும் மன்னராக இருந்ததால் அவன் என் சாதியென்ற வரலாற்று சான்றுகளை வைத்து கொண்டு, அரசாண்ட பரம்பரை என்ற பீற்றல்களால் இனியொரு மயிரும் ஆகப்போவதில்லை.

அன்றைய காலக்கட்டத்தில், அரசாட்சியை காப்பாற்றி கொள்ள சாதிவேறுபாடின்றி அனைவரோடும் மண உறவு கொண்டனர். அதனால் இங்கே கல்ப்பில்லாத ஒரே சாதியை சார்ந்த மன்னர் வழிவந்த சுத்த இரத்தமுள்ள ஆண்ட சாதி எதுவுமில்லை. முடிந்தால் அறிவால் இந்த அரசை ஆளுங்கள், அரச பதவியோடு. இந்த வருட இறுதிக்குள் தமிழகரசு தேர்வாணையத்தின் மூன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெறவுள்ளது. தேர்வில் வெற்றி பெற்று, அனைவரும் அரச பதவியை வகிக்க விவசாயி மகனாக எம் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்