ஆண்ட பரம்பரையென்ற போலியான புகழ் தேவையில்லை!டெல்டாவில் எந்தவொரு சாதி அரசியலும் தலை தூக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு வடசேரி நிகழ்வும் ஓர் உதாரணம். அது கள்ளரோ, அகமுடையரோ, பள்ளரோ, பறையரோ, வன்னியரோ, முத்தரையரோ, வெள்ளாளரோ யாருமிங்கே சாதியரசியலில் களம் கண்டு இங்கு வெல்லவே முடியாது. துயரம் என்னவெனில், வடசேரியை சேர்ந்த அகமுடையார் இளைஞர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என்பதுதான்.

விவேகமில்லாத வீரமும், வீரமில்லாத விவேகமும் எதற்கும் உதவாது. என்னைக்கோ ஒருத்தன் அவனது குடும்பம் மட்டும் மன்னராக இருந்ததால் அவன் என் சாதியென்ற வரலாற்று சான்றுகளை வைத்து கொண்டு, அரசாண்ட பரம்பரை என்ற பீற்றல்களால் இனியொரு மயிரும் ஆகப்போவதில்லை.

அன்றைய காலக்கட்டத்தில், அரசாட்சியை காப்பாற்றி கொள்ள சாதிவேறுபாடின்றி அனைவரோடும் மண உறவு கொண்டனர். அதனால் இங்கே கல்ப்பில்லாத ஒரே சாதியை சார்ந்த மன்னர் வழிவந்த சுத்த இரத்தமுள்ள ஆண்ட சாதி எதுவுமில்லை. முடிந்தால் அறிவால் இந்த அரசை ஆளுங்கள், அரச பதவியோடு. இந்த வருட இறுதிக்குள் தமிழகரசு தேர்வாணையத்தின் மூன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெறவுள்ளது. தேர்வில் வெற்றி பெற்று, அனைவரும் அரச பதவியை வகிக்க விவசாயி மகனாக எம் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment