சிவகங்கை சீமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவகங்கை சீமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஜூன் 2017

கண்ணதாசன் என்றும் நிரந்தரமானவன்!





"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு" என்று வெளிப்படையாகவே தன்னைப்பற்றி விமர்சனம் செய்து கொண்ட கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே. தான் எழுதிய சினிமா பாடல்களில், அரசியல், காதல், தத்துவம், ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், அனுபவம் என அனைத்தையுமே விரிவாக வரிகளாக்கிய பெருமை கவியரசரை மட்டுமே சேரும்.

தன்னை கவிஞராக மட்டுமின்றி, நடிகராகவும், இதழாசிரியராகவும் பன்முகத்தன்மையை வெளிக்காட்டியவர். அதிலும் முக்கியமாக சிவகங்கையில் நகரத்தார் பின்புலத்தில் பிறந்து வளர்ந்ததால், சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை பெரும்பொருட்செலவில் 'சிவகங்கை சீமை' என்ற பெயரில் திரைக்காவியத்தையும் தயாரித்து தன் ஊருக்கு பெருமை சேர்த்தவர். மேலும், கவியரசர் எப்போது வெளிநாடு போவதாக இருந்தாலும் அகமுடையார் குலத்தோன்றலான சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார் என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

"பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!"

இப்படியாக ஐயாயிரத்துகும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் மூலம், தமிழால் தமிழர்கள் மத்தியில் இன்று வரைக்கும் மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் செட்டிநாட்டு முத்தையாவான கவியரசர் கண்ணதாசனின் இடத்தை நிரப்ப இன்னும் ஒரு கவிஞர் இதுவரை இங்கில்லை.

தான் அனுபவித்த வாழ்க்கையையே ஆய்வு செய்து எழுத்துகளாக்கி, எட்டாவது வரை படித்திருந்தாலும், யாரும் எட்டாத உயரத்தை அடைந்த கவியரசர் கண்ணதாசன் என்ற கவிதை பொக்கிஷம் அவதரித்த 90ம் அகவை நாள் இன்று!

புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

24 அக்டோபர் 2015

இலட்சிய நடிகருக்கு, முதலாம் ஆண்டு நினைவேந்தல்



மாமன்னர் மருதுபாண்டியரின் புகழை உலகறிய செய்யும் விதமாக, ’கவியரசர் கண்ணதாசன்’ தயாரித்த 'சிவகங்கமை சீமை' என்ற திரைக்காவியத்தில் ’முத்தழகு சேர்வை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ’இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ அவர்கள், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 214வது நினைவேந்தலில் நாளான இன்று (24.10.2015) முதலாம் ஆண்டு நினைவேந்தல்.
மேலும், அவருடைய மகன்களில் ஒருவரது பெயர் ”மருதுபாண்டியன்” என்பதும் குறிப்பிடதக்க ஒன்று.

28 நவம்பர் 2014

மிகப்பெரும் தமிழர் அடையாளம்!



சிங்களத் தீவோ, ஈழ மண்டலமோ, இலங்கையோ அல்லது சேது நாடோ, சின்ன மறவர் நாடோ, சிவகெங்கையோ இந்த பெயரிலுள்ள வேறுபாட்டை விட, பகுதி சிறியது என்றாலும் உயிர்கொடை கொடுக்கும் படை வீரர்கள் - சாதி மத வேறுபாடில்லா மக்களின் பலம் - அம்மக்களுக்கான உயரிய கொள்கையுடன் கூடிய நேர்மையான ஆட்சி - எதிரிகளுக்கு எதிரான அதிகார பகிர்மானம் - தொலைநோக்கு பார்வை என மேம்பட்ட ஆட்சி செய்த ’தமிழீழ விடுதலைப்புலிகள்’ இயக்கத்தின் ’தமிழ் தேசிய தலைவர்’ பிரபாகரனும், ’மாமன்னர்’ மருதுபாண்டியர்களும், எதிரிகளும் - துரோகிகளும் கூட மறுக்க முடியாத மாட்சிமை பொருந்திய மிகப்பெரும் தமிழர் அடையாளமாய் திகழும் வரலாற்று பொக்கிசம்.

- இரா.ச.இமலாதித்தன்

24 ஜூன் 2014

கவிக்கு வயது 88!

'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்களை எழுத்து, சமுதாய உணர்வு, தெளிவான பேச்சு, சுயத்தை இழக்காத வெளிப்படையான தன்மை உள்பட பல விசயத்துல முன்மாதிரியாக நான் எடுத்துக்கொண்டாலும், மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை வெளிக்காட்ட "சிவகங்கை சீமை" என்ற திரைக்காவியத்தை தயாரித்து, தமிழால் என்னை ஆட்கொண்ட 'செட்டிநாடு தந்த செல்வர்' 'கவியரசு' கண்ணதாசனின் 88வது பிறந்தநாள் இன்று!