கள்ளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கள்ளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஏப்ரல் 2019

நாங்கள் அகமுடையாராகவே இருக்கிறோம்!



யார் கள்ளர்? யார் மறவர்? என்ற பாடங்களையெல்லாம் நாங்கள் எடுக்க விரும்பவில்லை. அது எங்கள் வேலையுமில்லை. அகமுடையாருக்கான வரலாற்றை மீட்டெடுப்பது; அதை ஆவணப்படுத்துவது; மக்கள் தொகை அடிப்படையிலான அகமுடையாருக்கான பிரதிநிதித்துவ அரசியலை உருவாக்குவது. தேவர், சேர்வை, முதலியார், பிள்ளை, உடையார், நாயகர் போன்ற பல்வேறு பட்டங்களால் சிதறிக்கிடக்கும் அகமுடையார்களை ஒருங்கிணைப்பது; இப்படியாக எங்களுக்கான பாதையில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம்.

ஆனால், தலா மூன்று மாவட்டங்களில் வாழும் கள்ளரும், மறவரும் தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழும் அகமுடையார்கள் யாரென்று இணையமெங்கும் பாடமெடுத்து கொண்டிருக்கின்றனர். உங்கள் அடையாளத்தோடு வாழப்பழகிக் கொள்ளுங்கள். இந்த பட்டமுள்ளவர்களே அகமுடையாரென்றும், இந்த பகுதியிலுள்ளவர்களே அகமுடையாரென்றும் புலம்பிக்கொண்டிருக்காமல், உங்களுக்கான அடையாளத்தை வெளியுலகுக்கு தயக்கமில்லாமல் சொல்லப் பழகுங்கள். எல்லா இடங்களிலும் அகமுடையார்களை இணைத்துக்கொண்டு முக்குலத்தோர் என்று போலியாக கட்டமைக்காதீர்கள்.

ஒட்டுமொத்த கள்ளர், மறவரின் எண்ணிக்கையை சேர்த்தாலும் அகமுடையார்களின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. அகமுடையார் என்பது உட்பிரிவு அல்ல. அது தனித்த பேரினக்குழு. அந்த பேரினக்குழுக்குள், ராஜகுலம், ராஜவாசல், ராஜபோஜ, கோட்டைப்பற்று, இரும்புத்தலை, கீழ்மன்று, மேல்மன்று, ஐவளிநாடு, பதினோறுநாடு, பில்லூர்நாடு, நாட்டுமங்கலம், புண்ணியரசுநாடு, கலியன், சானி, தொழுவ என பல உட்பிரிவுகள் உண்டு. அகமுடையார் எப்போதுமே தனித்து இயங்கக்கூடிய ஆண்வழி சமூகம். எங்களை மற்ற சாதிகள் நட்பு அடிப்படையில் பார்க்கலாமே ஒழிய, உறவு அடிப்படையில் பார்க்க கூடாது. அகமுடையார்களான நாங்கள், மாவலி வேந்தன் வழி வந்த வாணர் குலம். அகம்படவன், அகம்படி என்றும் எங்களுக்கு தனித்த பல அடையாளங்கள் உண்டு. எனவே, எங்களை மற்ற சாதியினர் உரிமை கோரும் கீழ்த்தரமான போக்கை கைவிடுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

30 அக்டோபர் 2018

அகமுடையாருக்கு, பசும்பொன்னா? காளையார்கோவிலா?



அகமுடையார்களெல்லாம் பசும்பொன்னுக்கு செல்லுங்கள்; செல்லாமல் இருங்கள்; அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், "திருப்பத்தூருக்கும் - காளையார் கோவிலுக்கும் ஸ்டாலின் வரவில்லை, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் வரவில்லை, திமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; முதல்வரோ, எதிர்க்கட்சித்தலைவரோ, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களோ, யாரும் வரவில்லை; ஆனால் பசும்பொன்னுக்கு மட்டும் இவர்கள் செல்கிறார்கள்; திட்டமிட்டே அகமுடையார்களை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்கின்றன." என்பது போன்ற விமர்சனங்களை தவிருங்கள்.

இன்னும் சொல்லப்போனால் இப்படியான விமர்சனங்கள் தேவையே இல்லை. அப்படி விமர்சித்தே ஆக வேண்டுமென நீங்கள் விரும்பினால், அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூருக்கு வராத, அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவிலுக்கு வராத அகமுடையார்களை முதலில் விமர்சியுங்கள். குறிப்பாக திருப்பத்தூருக்கும், காளையார்கோவிலுக்கும் வராமல், அக்டோபர் 30ஆம் தேதி மட்டும் பசும்பொன் செல்லும் அகமுடையார்களை விமர்சியுங்கள். இந்த விசயத்தில் முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல் கட்சி தலைவர்களல்ல; அவர்களை நாம் விமர்சிக்க வேண்டிய தேவையுமில்லை. அவர்கள் ஓட்டுரசியல் செய்யும் தலைவர்கள். அவர்களின் பார்வையில், கள்ளர் - மறவர் - அகமுடையர் என்ற 'சோ கால்டு' முக்குலத்தோர் போற்றும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் சென்று வந்தால், நமக்கும் அவர்களது ஆதரவு கிடைக்கும்; ஓட்டுரசியலுக்கு இந்த வாக்கு வங்கி தேர்தல் நேரங்களில் தங்களுக்கு பயன்படுமென்ற நம்பிக்கையில் தான் வருகின்றனர். அப்படியான அரசியல் கணக்கீடுகளோடு பசும்பொன் வருபவர்களை விமர்சிப்பது வீண்.

போலியான முக்குலத்தோர் அரசியலை நம்பி விலாங்கு மீன் போல, 'அகமுடையார் ஒற்றுமை - முக்குலத்தோர் ஒற்றுமை' என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் அகமுடையார்களிடம் முதலில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மக்கள்தொகை எண்ணிக்கையிலும், விகிதிச்சார அடிப்படையிலும், அகமுடையாருக்கு கிடைத்திருக்க வேண்டிய அரசியல் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவே இல்லை என்பதை தெளிவு படுத்துங்கள். அகமுடையாருக்கான தொகுதிகளை, பதவிகளை, கள்ளரும் - மறவரும் 'சோ கால்டு' முக்குலத்தோர் என்ற முகமூடிகளால் ஆக்கிரமித்து கொள்கின்றனர் என்ற உண்மையை உணர்த்துங்கள்.

அக்டோபர் 24ல் திருப்பத்தூருக்கோ, அக்டோபர் 27ல் காளையார் கோவிலுக்கோ, எத்தனை கள்ளர் / மறவர் வந்து போகிறார்கள்? வரவே இல்லையென்றும் சொல்ல முடியாது; ஆனால் பசும்பொன்னுக்கு செல்பவர்களில் எத்தனை சதவீதம் பேர் காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வந்தார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அமைப்பு சார்ந்தோ, தங்களது தலைவர்களுக்காகவோ ஒருவேளை அவர்கள் வந்திருக்கலாம். தனித்து, கள்ளரும் மறவரும் காளையார்கோவில் / திருப்பத்தூர் வந்திருப்பார்களா என்றால், மிக சொற்பமான எண்ணிக்கையில் வந்து இருக்கலாம். ஆனால் அகமுடையார்களின் நிலைப்பாடோ வேறொன்றாக இருக்கிறது. தொடர்ச்சியாக திருப்பத்தூருக்கோ, காளையார்கோவிலுக்கோ வருகிறார்களோ இல்லையோ, ஆனால் பசும்பொன்னுக்கு அகமுடையார்கள் செல்கின்றனர். இந்த விசயத்தில் மனமாற்றம் ஏற்படாத வரை, வெளியிலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட போவதே இல்லை.

அகமுடையார்கள் பசும்பொன்னுக்கு போவதோ, போகாமலிருப்பதோ அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வரவே மாட்டேன்; ஆனால் பசும்பொன்னுக்கு கண்டிப்பாக செல்வேனென இப்படியான எண்ணவோட்டத்தில் இருக்கும் அகமுடையார்கள் மாறாதவரை, ஹிந்திய தேசிய / திராவிட / தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் பார்வையும் மாறாது. அவர்களை விமர்சிக்கும் முன், இதுமாதிரி நமக்குள்ளேயே உள்ள முரண்களை கலைந்து, குறைகளை சரிசெய்ய நாம்தான் முன்வர வேண்டும். அப்போது தான், அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் முழுமையாக கிடைக்க வாய்ப்புகளும் உருவாகும்.

- இரா.ச. இமலாதித்தன்

27 நவம்பர் 2017

ராஜராஜன் அகமுடையாரா?!

Pandi Pandi: அண்ணா, ராஜராஜசோழர் அகமுடையார் வழிதோன்றலா? கள்ளர் வழிதோன்றலா?


இரா.ச. இமலாதித்தன்: சோழர்கள் ஆண்ட பகுதிகளிலெல்லாம் உடையார் பட்டமும், தேவர் பட்டமும் கொண்ட ஒரே இனக்குழு அகமுடையாராக மட்டுமே இருக்கின்றனர். ராஜசோழனின் மெய்கீர்த்தியில் கூட, ”உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்” என்றே பெயர் வருகிறது. அப்படியெனில் ராஜராஜசோழர் யாராக இருக்க முடியும்?

14 ஆகஸ்ட் 2017

அகமுடையார் அரசியல்! - sarahah




முக்குலத்தோர் என்ற போலியான கட்டமைப்பின் மீது நம்பிக்கையில்லை. தேவர் என்ற பட்டத்தையும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரையும் மையப்படுத்திய அரசியல் என்றைக்குமே தனித்த அரசியலை உருவாக்காது. கடைசி வரை திராவிட கட்சிகளோடு கை கோர்த்து, அகமுடையார் என்ற தனிப்பெரும் இனக்குழுவிற்கு கொடுக்கப்பட வேண்டிய பகிர்வு கிடைக்கவிடாமல் செய்ததற்கு போலியான முக்குலமே காரணம். உண்மையாகவே கள்ளர் - மறவர் என்ற அந்த இருகுலத்தோருக்கான அரசியல் லாபத்திற்காகவே அகமுடையார் இனக்குழு பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாயக்கர்களால் கிடைக்கப்பட்ட பாளையங்களும் - பட்டங்களும், மறவர் - கள்ளர்களுக்கு ஒரு ஆண்டபரம்பரை வரலாற்றை உருவாக்கி கொடுத்திருக்கலாம். அகமுடையாருக்கு அப்படியான கட்டமைக்கப்பட்ட அங்கீகாரம் தேவையேயில்லை. ஏனெனில் அகமுடையார்கள் குற்றப்பரம்பரையும் கிடையாது; பாலை நிலத்தவர்களும் கிடையாது.

மக்கள் தொகை அடிப்படையில் அகமுடையாரை விட கள்ளரும் மறவரும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கள்ளர், மறவரின் மொத்த அடர்த்தியே அகமுடையாரின் எண்ணிக்கைக்கு ஈடாகாது என்பதே எதார்த்தம். நிலைமை இப்படியிருக்க இம்மூவரில் சிறுபான்மையான மறவரிலிருந்து தான், அகமுடையார் தோன்றியதாக பொய் பரப்புரை செய்யும் காரிய கிறுக்கர்களுக்கு அடிப்படை அறிவில்லாமல் இருக்கலாம் என்பது தெளிவு. மேலும் பெரும்பான்மை இனக்குழுவிலிருந்து தான் சிறுபான்மை இனக்குழு உருவாகுமே தவிர, சிறுபான்மை இனக்குழுவிலிருந்து பெரும்பான்மை இனக்குழு உருவாகவே முடியாது.

மறவர் என்போர் பெண் வழி சமூகம். திருமண உறவு என்பதே தாய் வழியின் கிளை/கொத்துகளை வைத்தே அமைகிறது. தஞ்சை கள்ளர்கள் ஆண் வழி சமூகம் என்றாலும் கூட ஒரே பட்டத்தை கொண்டவர்களுக்குள் திருமண உறவில்லை. இதைத்தவிர அம்பலம் பட்டமிடும் கள்ளர், பிரான்மலை கள்ளர் என்ற ஒவ்வொரு கள்ளர்களுக்கும் தனித்த பாரம்பரியம் உண்டு. மறவர்களில் ஆப்பநாடு, கொண்டையன் கோட்டை என பல பிரிவுகள் இருந்தாலும் செம்பி நாட்டு மறவர்கள் மட்டுமே அகமுடையாரில் ஆதிகாலம் தொட்டு மண உறவு கொண்டிருக்கின்றனர். அதற்கும் கூட அரச ரீதியாக தொடர்புகள் உண்டு.

எதார்த்தம் இப்படி இருக்க, கள்ளர் மறவரோடு எவ்வித தொடர்புமில்லாத அகமுடையார்களை ஒரே குலமாக அடைப்பது பச்சைத்துரோகம். தமிழ் தேசிய கொள்கையோடு எந்த இனக்குழுவை சேர்ந்த தமிழன் ஆட்சியமைக்க நினைத்தாலும், தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து விரிந்து வாழும் அகமுடையார்களின் ஆதரவின்றி சாத்தியமாக போவதில்லை; இது வெறும் சுயசாதி பெருமை அல்ல. களநிலவரம் இது தான். முதலியார் - உடையார் - அதிகாரி - மலையமான் - பிள்ளை - சேர்வை - தேவர் என பல்வேறு பட்டங்களோடு இருந்தாலும் அந்தெந்த பகுதிகளில் தனித்த அரசியல் பலத்தோடு அகமுடையார்கள் இருக்கிறார்கள் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் புரிந்து கொண்டிருக்கலாம். கண்டிப்பாக தமிழ் தேசியத்தின் பக்கம் அகமுடையார் இனக்குழுவின் ஒட்டுமொத்த பார்வையும் விழும். அன்று முதல் தமிழராட்சி இம்மண்ணில் எழும்.

(பின் குறிப்பு: முக்குலத்தோர் என்பதற்கான எவ்வித ஆதாரமும் கி.பி. 1930க்கு முன்பாக கிடையாது. இல்லாத முக்குலத்தை பற்றிய 2015ல் எழுதப்பட்ட சிறு கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://emalathithan.blogspot.in/2015/09/blog-post_24.html

அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு!

1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக, கரந்தை திரு. உமாமகேசுவர பிள்ளை, பட்டுக்கோட்டை திரு. நாடிமுத்து பிள்ளை, திருத்துறைப்பூண்டி திரு. ராஜகோபால் பிள்ளை, நாகப்பட்டினம்-அந்தணப்பேட்டை திரு. திருஞானசம்பந்த பிள்ளை ஆகிய நால்வரும் முக்கிய பங்கு வகித்தனர்.

பிறகு, அகமுடையார் சங்க மாநில மாநாடு 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் நடந்தது.

அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சேதுபதி மன்னர் வகையினரான, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.

டிசம்பர் மாதம் 1933 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில், மாநில அகமுடையார் சங்கமானது, முக்குலத்தோர் சங்கமென முழுமையாக உருமாற்றம் பெற்றது. அந்த மாநாட்டின் பெயரானது மூவேந்தர் குல மாநாடு என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இன்றைக்கு பவளவிழா கண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்திற்கான விதையானது, 1926 ல் உருவாக்கப்பட்ட மாநில அகமுடையார் சங்கத்திடமிருந்து கிடைத்தது என்பது தான் மறுக்க முடியாத, மறக்கடிக்கப்பட்ட வரலாறு. இந்த விருட்சத்தின் பலனான நிழலானது, விதைக்கும் - வேர்க்கும் கிடைக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விசயம்.)

- இரா.ச. இமலாதித்தன்

emalathithan.sarahah.com

22 மார்ச் 2017

இரு செய்திகளுக்கு பின்னாலுள்ள அரசியல்!

இருகுலத்தோர் அரசியல்:

சின்னத்தை மட்டுமல்ல; கட்சிப்பெயரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. தமிழக அரசியலில் அதிமுக என்ற கட்சி, கள்ளர் அணி; மறவர் அணியென இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த போலியான முக்குலத்து சாதி அரசியலில், எப்போதுமே அகமுடையார் தனி என்ற நிலையும் மீண்டும் தெளிவாகியுள்ளது.

தமிழகத்தில் இத்தனை வருடங்களாக, கள்ளராலும் - மறவராலும் கட்டமைக்கப்பட்ட போலி சாதி கூட்டமைப்பான 'முக்குலத்தோர் அரசியல்' கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகிறது. இத்தனை காலம், மக்கள்தொகைக்கேற்ற உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட அகமுடையார் பேரினம், இனி மெல்ல மெல்ல தன் இருப்பை நிலை நிறுத்துமென நம்பிக்கையும் துளிர்விடுகிறது. மகிழ்ச்சி!

கூத்தாடி அரசியல்:

தமிழரல்லாத ரஜினி, சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கூட இருந்துவிட்டு போகட்டும். காலாவதியான அந்த பட்டத்தைப்பற்றியெல்லாம் கவலையேதுமில்லை. ஆனால், அரசியலில் அவர் செல்லாக்காசாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இலங்கைக்கு போனால் என்ன? போகவிட்டால் என்ன? ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவன அதிபரின் படமான 2.0 வில் நடிப்பதற்காக வாங்கிய கோடி கணக்கான பணத்திற்கான விசுவாசம் அது. அப்படி சுயலாபத்திற்காகவும், தன் படத்தினை புலம்பெயர் தமிழர்களிடம் விளம்பரப்படுத்தவும் தான், ரஜினியின் இலங்கை பயணம் திட்டமிடப்பட்டது. அதை எதிர்க்க திருமாவளவன், வைகோ போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த எதிர்ப்பை வைத்து பாஜகவினர் சிலர் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க மெனக்கெடுகின்றனர். ஆர்.கே.நகரில் ரஜினியே நின்றாலும் அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது என்பதுதான் களநிலவரம். அரசியலில் என்றைக்கோ அடையாளமற்று போன ரஜினிக்காக தொலைக்காட்சிகள் அரசியல் விவாதம் செய்வது ரொம்பவே அசிங்கமாக இருக்கிறது.

10 நவம்பர் 2016

இனி SC/ST பட்டியலில் முக்குலத்தோர்களா?




தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சீர்மரபினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் (DNC+MBC) 20 சதவீத ஒதுக்கீட்டில் பலன் பெற்று வருகிறார்கள். அதாவது முக்குலத்தோர் என்று கூறிக்கொண்டே கள்ளர், மறவர்கள் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டிலும் இருக்கிறார்கள் என்பதை பற்றிய விரிவான பார்வையை இங்கே பகிர்கிறோம்.

'சீர்மரபினர் கள்ளர்கள்' பிற கள்ளர்களுக்காகக்கூட இட ஒதுக்கீடு கேட்டு இதுவரை போராடவில்லை. அதுபோலவே 'சீர்மரபினர் மறவர்களும்' பிற மறவர்களுக்காக இட ஒதுக்கீடு கேட்டு, தங்களின் சலுகையை விரிவுபடுத்தி பிற உறவுகளுக்கும் கிடைத்திட போராடியதில்லை. மேலும் 'சோ கால்டு - முக்குலத்தோர்' என்ற வகையில் அகமுடையார்களுக்காக சலுகை பெற்றுவரும் எவரும் இது சம்பந்தமாக குரல் கொடுத்ததில்லை. பிறகு எப்படி 'சோ கால்டு - முக்குலம்' ஓரணியில் இருக்கும்? இருக்க முடியும்? இப்போது சீர்மரபினர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு ஒரு சதவீத ஒதுக்கீடுதான் உள்ளது. மேலும் பட்டியல் சாதிகளான ஆதி திராவிடர் என்று அடையாளப்படுகின்ற பள்ளர், பறையர், சக்கிலியர் எனப்படுவோருக்கு 18 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது. மொத்தமாக உள்ள இந்த 19 சதவீத ஒதுக்கீட்டில் தான், சீர்மரபினரும் சேர முயற்சிக்கிறார்கள்.

சீர்மரபினர் பட்டியலில் யாரையும் சேர்க்கவோ எடுக்கவோ அரசுகளுக்கு அதிகாரமில்லை. இப்போது வன்னியர்களுடன் (எம்.பி.சி. + டி.என்.சி) இடஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் சீர்மரபினர் பட்டியலில் உள்ள கள்ளர், மறவர்கள் இனி தலித் எனப்படும் பள்ளர், பறையர், சக்கிலியருடன் இட ஒதுக்கீட்டில் இருக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே இருந்துவரும் இடஒதுக்கீட்டில் முக்குலத்தோர் எல்லாரும் ஒரே இனமாக ஏற்கப்படவில்லை. 1995ல் தமிழக அரசால் போடப்பட்ட "தேவர்" அரசாணை நடைமுறைக்கு வரவே இல்லை. ஒட்டுமொத்த அகமுடையார்களும், பெரும்பான்மையான கள்ளர்களும், சில பகுதி மறவர்களும் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டில் தங்களுடன் பிற முக்குலத்தோர் இருக்க, சலுகை பெற்றுவரும் பிற முக்குல பிரிவினர் விரும்பாததால் இன்னும் முக்குலம் என்பதில் நம்பிக்கையற்று இளைஞர் சமுதாயம் தனித்தனிப்பிரிவாய் பிளவு படத்தொடங்கிவிட்டதை மருது பாணடியர்கள், பசும்பொன் தேவர், இராசராச சோழன் விழாக்களில் காணமுடிகிறது. இதன் அரசியல் பின்னணி புரியாத முக்குல அமைப்புக்களின் தலைமைகள், தலையாரி வீட்டில் தஞ்சமடையும் பழமொழியை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இனி முக்குலத்தோர் எனும் சொல் அவமானப்படுத்தப்படுவதும் கேவலமாக பார்க்கப்படுவதும் நடக்கும் என நம்பலாம்.

16 ஜூலை 2016

தேவர் பெயரில் போலி சாதி அரசியல்!

'தேவர் யாரு?'ன்னு டெல்டா முழுக்க உள்ள எந்த சாதிக்காரன் கிட்ட கேட்டாலும், அகமுடையாரை மட்டும்தான் எல்லாரும் காமிப்பாங்க. இங்கே தேவர் என்ற பட்டம் அகமுடையாருக்கானது. டெல்டா மட்டுமில்லாது, கோவை - திருப்பூர் - திருச்சி - விருதுநகர் என பல்வேறு பகுதிகளிலும் தேவர் பட்டம் அகமுடையாருக்கு உண்டு. அகமுடையாராகிய எங்களுக்கு, பட்டம் தேவர் - சேர்வை - முதலியார் - உடையார் - பிள்ளை எதுவென்றாலும் சாதி ஒன்று தான்!

பிள்ளை என்கிற பட்டம் அகமுடையாருக்கு இருப்பதால் வெள்ளாளரோடு மண உறவு கொள்வதில்லை; முதலியார் என்ற பட்டம் அகமுடையார்களுக்கு இருப்பதால் செங்குந்தரோடு மண உறவு கொள்வதில்லை; உடையார் என்ற பட்டமிருப்பதால் பார்க்கவ குலத்த்தோடு மண உறவு கொள்வதில்லை. சேர்வை என்ற பட்டம் இருப்பதால், எட்டுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கும் சேர்வை என்ற பட்டம் இருக்கின்ற காரணத்தால் அகமுடையார் அல்லாத எந்த சாதியோடும் மண உறவு கொள்வதில்லை; அது போலவே, தேவர் என்ற பட்டமும் அகமுடையாருக்கு இருப்பதால், பிரான்மலை கள்ளர் - மறவர் போன்ற மற்ற சாதிக்களோடும் மண உறவு செய்ய விரும்பியதில்லை.

இரா.ச. இமலாதித்தன்
பட்டம்: தேவர்
பிரிவு: பதினெட்டு கோட்டைப்பற்று
சாதி: அகமுடையார்

10 ஏப்ரல் 2016

அரசியலில் புறக்கணிக்கப்படும் அகமுடையார் சமூகம்!

கள்ளர் கட்சியான அதிமுகவில் அகமுடையாருக்கான அங்கீகாரமில்லை. முக்குலத்தோர் என்ற போர்வையில், பெரும்பான்மை சமூகமான அகமுடையார்களை புறக்கணிக்கும் அதிமுகவின் தலைமை, இனி அகமுடையார்களின் வாக்குகளும் தேவையில்லையென அறிவிக்க தயாரா?




அகமுடையார் வாக்கு அந்நியருக்கும் இல்லை! அதிமுகவுக்கும் இல்லை!


தமிழகத்திலேயே அதிக கிளைகளை கொண்ட அமைப்பாக விளங்கிய "தேவர் பேரவை"யின் நிறுவனர், மரு. வி.இராமகிருஷ்ணதேவர் பிறப்பெடுத்த அந்த அகமுடையார் இனத்தை தேர்தலில் ஒதுக்கியதற்கு வேற யார் காரணமாக இருக்க முடியும்? சசிகலாவை தவிர!

06 ஏப்ரல் 2016

முக்குலத்தோர் என்ற போர்வையில் வீழும் அகமுடையார்!

அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை கள ஆய்வு செய்தபின்னால், 60 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக அகமுடையார் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதைத்தவிர 234 தொகுதிகளில், வெற்றியை நிர்ணயம் செய்யும் இடங்களில் 40 தொகுதிகளில் அகமுடையார் ஒட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.

அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளையெல்லாம் 'முக்குலத்தோர் / தேவரினம்' அதிகமுள்ள தொகுதியென சொல்லிக்கொண்டு, தங்களது சாதி தொகுதிகளை மட்டும் 'கள்ளர், மறவர்' அதிகமுள்ள தொகுதிகளென சொல்லிக்கொள்ளும் ஈனப்புத்தியை என்னவென்று சொல்வது? அப்படியெனில் கள்ளர் - மறவர்களின் நோக்கம், அகமுடையார் என்ற பெயர் கூட வெளியே வரக்கூடாது என்பதுதானா?

இருகுலத்தோரின் அஜென்டா இதுதான்...

கள்ளர் - மறவர்கள் மைனாரிட்டியாக இருந்தாலும் கூட ஒரே இடத்தில் குழுமி வாழ்வதால் பெரும்பான்மை போல ஒரு மாயையை உருவாக்கி கொள்வது; அடுத்து, உண்மையாகவே பெரும்பான்மையாக உள்ள அகமுடையார்கள் தமிழகமெங்கும் பரவலாக வாழ்வதால் அவர்கள் முதுகில் முக்குலத்தோர் என சவாரி செய்வது. அதற்காகவே அக்டோபர் 30ம் தேதியை பயன்படுத்தி கொள்வது. கடைசி வரையிலும், அரசியல் அதிகாரத்தை அகமுடையார்களுக்கு கிடைக்கவிடாமல், இருகுலத்தோரும் ஏகபோகமாய் அனுபவிப்பது.

இப்படிப்பட்ட உயரிய நோக்கங்களோடு, அகமுடையார் முதுகிலேயே பல வருடங்களாக பயணித்து பழக்கப்பட்ட இருகுலத்தோரின் பயணம், என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும். அன்று அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்கக்கூடும்.

வாழ்க அகமுடையார் ஒற்றுமை!

- இரா.ச. இமலாதித்தன்

சசிகலாவின் சாதி ஆளுமை!


சசிகலாவின் ஆதரவால் அதிமுகவில் வன்னியர்களுக்கு அடுத்தபடியாக கள்ளர்களே அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்!
கள்ளர்களுக்கு, சாதி உணர்வுள்ள சசிகலா இருப்பது போல, அகமுடையார்களுக்கு என யாரும் உணர்வுள்ள அரசியல் ஆளுமைகளாக இதுவரை உருவாகவில்லை. இந்த ஆதங்கம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் சசிகலாவின் சாதி உணர்வை கண்டு ஆச்சர்யபட வேண்டியதாக இருக்கிறது.

வாழ்த்துகள்!

03 மார்ச் 2016

அகமுடையாரை புறக்கணிக்கும் ஜெயலலிதாவிற்கு நன்றி!


உண்மையாகவே அதிமுகவை பொறுத்தவரை முக்குலம் என்றால், அது கள்ளர் - மறவர் - வல்லம்பர்.

மேலும், அகமுடையார் தனி தமிழ் இனக்குழு என்பதால் தான் அவர்களுக்கு முக்குலத்தோர் கோட்டாவில் எந்த அங்கீகாரத்தையும் ஜெயலலிதா கொடுப்பதில்லை.

ஜெயலலிதாவிற்கு நன்றி!

அதிமுக முக்குலத்தோர் கட்சி என மற்ற அனைத்து தமிழ்சாதி உறவுகளும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர். அது தவறு. உண்மையில் அது கள்ளரான சசிகலாவின் ஆளுமையில் இயக்கப்படுகின்ற கட்சி. மேலும் மறவரான ஓ.பி.எஸ்சின் பின்புலத்தில் செயல்படுகின்ற கட்சி. மேலும் அரசியல் ஆதாயத்திற்காக கள்ளரும், மறவரும் முக்குலத்தோர் என சொன்னாலும் கூட அகமுடையாருக்கு அங்கீகாரம் இல்லாத கட்சி.
நிலைமை இப்படி இருக்கையில் அது எப்படி முக்குலத்தோர் கட்சி ஆகும்? ஒன்று கள்ளர் கட்சியென்று சொல்லுங்கள்; இல்லையெனில் மறவர் கட்சியென்று சொல்லுங்கள். அதிமுக முக்குலத்தோர் கட்சியும் இல்லை; அது, அகமுடையார் கட்சியும் இல்லை.

ஏனெனில், மிக முக்கியமாக அகமுடையார், முக்குலத்தோரும் இல்லை!

02 மார்ச் 2016

முக்குலதோர் என்பதே போலி கட்டமைப்பு!



முக்குலத்தோரும் இல்லை, தேவரினமும் இல்லை. தேவர் என்பது ஒரு பட்டமே, அது சாதி அல்ல.
- கள்ளர் பேரவை. (03.11.1994)

இதையே தான் அகமுடையார்களாகிய நாங்களும் சொல்கிறோம். அகமுடையார், முக்குலதோரும் இல்லை; தேவரினமும் இல்லை. பட்டமெல்லாம் சாதியாக முடியாது. எனக்கு தேவர் பட்டம்; ஆனால் சாதியால் நான் அகமுடையார்.

அனைத்து தமிழ் சாதிகளுடனும் இணக்கமாக நட்பாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால் அதுவே உறவென்றால், இனி அகமுடையார்களிடம் மட்டுமே என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

அகமுடையார் ஒற்றுமையை சீர்குலைக்கும் முக்குலத்தோர் அமைப்புகள்!


1780 - 1801 வரை மாமன்னர் மருதுபாண்டியர் ஆண்ட சிவகங்கை சமஸ்தானத்தில் அவர்களது பெயரை பதியவே வக்கில்லை. இந்த லட்சணத்தில் திருவண்ணாமலையில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பெயரில் பல்கலைகழகமா?

விரைவிலேயே இராமநாதபுரத்தில் "அகமுடையார் பல்கலை கழகம்" உருவாகும் என்று திருவண்ணாமலை அகமுடையார் திருப்புனை மாநாட்டில், திரு. ஸ்ரீபதி செந்தில்குமார் சொன்னாரே. அதற்கு போட்டியாகத்தான் இந்த வலியுறுத்தலா?!



ஒரு பக்கம் தெற்கில் உள்ள அகமுடையார்களிடம் தஞ்சாவூருக்கு அந்த பக்கம் உள்ளவங்களெல்லாம் அகமுடையாரே கிடையாதுன்னு சொல்லிக்கிட்டு, இன்னொரு பக்கம் வடக்கில் உள்ள அகமுடையார்களிடம் நாமெல்லாம் முக்குலத்தோரென ஆர்பாட்டம் பண்றாங்க.
என்னதான் உங்களுக்கு பிரச்சனை?

வடக்கோ - தெற்கோ - கொங்கோ - டெல்டாவோ நாங்கள் அகமுடையார் தான்; அகமுடையார் மட்டும் தான். அகமுடையார், முக்குலத்தோரே இல்லை. தேவர் என்பது சாதியும் இல்லை. அது பட்டம் தான்!


21 ஜனவரி 2016

அதிமுகவை அகமுடையார்கள் ஆதரிக்கலாமா?

அகமுடையார்கள் ஏன் அதிமுகவை ஆதரிக்க கூடாது என்பதற்கான ஒரு சின்ன உதாரணத்தை இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு தானே, விருப்ப மனுவை வாங்கி தொடங்கி இருக்கிறார் ஜெயலலிதா. இதன் பின்னால், சசிகலாவின் சாதியான கள்ளர்களுக்கே அதிக பட்ச தொகுதிகள் வழங்கப்படும். ஆனால் கள்ளர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த தொகுதிகளெல்லாம் முக்குலத்தோர் வேட்பாளர்கள் என ஊடகங்கள் மூலம் சொல்ல வைப்பார்கள். முக்குலத்தோரில் மூன்றில் இரண்டு பங்கு இருக்கும் அகமுடையாருக்கு, ஒருசில தொகுதிகள் சசிகலாவின் கருணையால் கிடைக்க கூடும். அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளிலும் கள்ளர்களும், மறவர்களும் வேட்பாளர் ஆவார்கள். இது தான் ஜெயலலிதாவின் திராவிட அரசியல். இதுதான் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் முக்குலத்து அரசியல்.

உதாரணமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதிமுகவின் மாவட்ட செயலாளர் பட்டியலை கவனித்து பார்த்தால் ஒன்று புரியும்; சசிகலாவின் கருணையால் எத்தனை கள்ளர்கள் மா.செ. பதவியில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் புரிய வரும். ஓர் அகமுடையாரை மாவட்ட செயலாளராக கூட ஆக்க மனமில்லாத சின்னம்மா சசிகலாவா, எம்.எல்.ஏ. ஆக்க போகிறார்? கள்ளர்கள் சிறுபான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் - அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் கூட, கள்ளரே மா.செ. ஆக நியமிக்கப்பட்டதன் உள்ளரசியல் புரிகிறதா? கள்ளருக்கும் - மறவருக்கும் பதவியை கொடுத்துவிட்டு, அகமுடையாருக்கு அல்வா கொடுத்து கொண்டிருக்கும் அதிமுகவை நிச்சயம் சொரணைவுள்ள அகமுடையார்கள் இந்த தேர்தலில் புறக்கணிப்பார்களென நம்புகிறேன். பார்க்கலாம்...

- இரா.ச.இமலாதித்தன்

26 டிசம்பர் 2015

முக்குலத்திலா அகமுடையார்?

முக்குலம் என அடையாளப்படும் மூன்று சாதிகள், கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட இந்த மூன்று மட்டுமே. ஆனால், வல்லம்பர் என்ற நான்காவதாக ஒரு சாதியை முக்குலத்தில் யார் இணைத்தது? அப்படி இணைத்தால் அது முக்குலமா? சாதி சான்றிதழில் அகமுடையாரென இருக்கும் உடையார் - முதலியார் - பிள்ளை பட்டம் போடும் வடக்கத்திய அகமுடையாரை ஏற்க மனமில்லாத கள்ளரும் - மறவரும், சாதி சான்றிதழில் வல்லம்பர் என இருக்கும் இன்னொரு சாதியை முக்குலத்தில் இணைத்து கொள்ள முயல்கிறார்கள் என்பது வெட்கக்கேடு.

நத்தம் விஸ்வநாதன் கூட வல்லம்பர் சாதி தான். ஆனால் அவருக்கு பட்டம் சேர்வை என்பதால், நத்தம் விஸ்வனாதன் அகமுடையார் ஆகிவிட முடியுமா? இப்படி பல குழப்பங்கள் நிறைந்த முக்குலம் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் தனித்த அடையாளத்தோடு அகமுடையராகவே இருந்து விட்டு போகிறோம். இன்னும் எத்தனை காலம் தான் முக்குலம் என்ற பெயரில் கள்ளர் - மறவரான உங்களை முதுகில் சுமப்பது? இப்போது போதாகுறைக்கு வல்லம்பர் சாதியையும் சுமக்க அகமுடையாருக்கு சகிப்புத்தன்மை இல்லை. நீங்கள் வேண்டுமானால் அவர்களை நிரந்தரமாக உங்களோடு முக்குலமாக சேர்த்து கொண்டு, அகமுடையாரை விட்டு விடுங்கள். உங்கள் குலங்களுக்கு புண்ணியமாக போகும்.

- இரா.ச.இமலாதித்தன்

25 டிசம்பர் 2015

அகமுடையார் ஓட்டு, அந்நியருக்கு இல்லை!



திமுகவோ அதிமுகவோ தேமுதிகவோ, எந்த கட்சியாக இருந்தாலும் அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் அகமுடையார் வேட்பாளரையே நிறுத்திட வேண்டும். அப்படி பார்த்தால் குறைந்த பட்சம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அகமுடையார்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே. காரணம் என்ன? முக்குலமென சொல்லி அகமுடையார் மிகப்பெரும்பான்மையாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளெல்லாம் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

டெல்டாவிலோ, வடக்கிலோ மறவருக்கு வாக்கு வங்கி இல்லை. வடக்கிலோ, கடைகோடி தெற்கிலோ கள்ளருக்கு வாக்கு வங்கி இல்லை. ஆனால், அகமுடையாருக்கு தெற்கு - வடக்கு - டெல்டா - கொங்கு என எல்லா பக்கமும் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய வாக்கு வங்கி உண்டு.
முக்குலமென சொல்லி அகமுடையாருக்கென கிடைக்க வேண்டிய பதவிகளையும் விழுங்கி ஆக்டோபஸ் போல அனைத்து பதவிகளையும் அனுபவித்து வருவதை இனியும் தட்டி கேட்காமல் இருக்க முடியாது. அந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய சொல்லி, ஆளும் - ஆளப்போகின்ற அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவே திருவண்ணாமலையில் அகமுடையார் திருப்புமுனை மாநாடு.

அகமுடையாருக்கான மாநாடு என்பது யாருக்கும் எதிரானதல்ல. எனவே மறுக்கப்பட்ட சமநீதியை நிலை நாட்ட 27.12.2015 அன்று திருவண்ணாமலையில் அகமுடையார்களாய் அணிதிரண்டு ஆளப்போகின்ற அரசாங்கத்திற்கு அடையாளப்படுத்தி கொள்ளலாம், அகமுடையார் என்ற சாதி தமிழகமெங்கும் பெரும்பான்மையாக இருக்கின்றதென!

- இரா.ச.இமலாதித்தன்

15 செப்டம்பர் 2015

இருகுலத்தோரின் முயற்சி வெற்றி பெறட்டும்!



மறவர்களான முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், முத்துராமலிங்கத்தேவர் உள்ளிட்டோர் கள்ளர் மஹா சங்கம் மூலம் கள்ளராகி போனார்கள்! அகமுடையாரான மாமன்னர் மருதுபாண்டியர்களின் படம் பதிக்காமல் போனதற்கு வருத்தமேதுமில்லை. ஆனால் எங்களை தயவு செய்து முக்குலத்தோரிலும் அடைக்காமல் இருந்தால் மகிழ்ச்சி. மற்றபடி இந்த இருகுலத்தோருக்கும் அகமுடையார் சார்பாக எம் வாழ்த்துகள்! டெல்டாவில், வாட்டாக்குடி இரணியன், வலிவலம் தேசிகர், நாடிமுத்து பிள்ளை, மலேயா கணபதி, உமாமகேசுவர பிள்ளை, ஜாம்பவனோடை சிவராமன் உள்ளிட்ட பல போராளி தலைவர்கள் அகமுடையாரில் எக்கசக்கம் இருந்தும், அவர்களை மறந்த இருகுலத்தோரின் முயற்சி வெற்றி பெறட்டும்.

18 ஜூன் 2015

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அகமுடையார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்?

அகமுடையார் இனக்குழுவினர் அனைவரும் இந்த பதிவை கண்டிப்பாக படித்து, மற்றவர்களுக்கும் பகிரவும்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அகமுடையார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? இந்த கேள்வியை பல இடங்களில் பலதரபட்டோர் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். எதற்காக இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்று பார்த்தால் பல விசயங்களின் மூலம் இந்த கேள்வி சரியேயென படும். பொதுவாக பசும்பொன் தேவர் தன்னை சாதிய அடையாளத்தோடு காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் கூட, ஒரேவொரு முறை அவர் சார்ந்த ஆப்பநாடு மறவர் சங்க மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார். இது மட்டுமே அவர் கலந்து கொண்ட சுயசாதி கூட்டமாக இருக்கின்றது. மேலும் எந்த இடத்திலும் தன்னை மறவரென சொல்லிக்கொள்ளாமல் சாதி கடந்து தேசிய அரசியலில் ஈடுபட்டவர். அப்படிப்பட்டவரையே மறவர் என்று பெருமை பேசும் சம்பவங்களும் இங்கே அரங்கேறி கொண்டுதான் வருகின்றன.

முக்குலத்தோர் என அடையாளப்படும் கள்ளர் - மறவர் - அகமுடையாரில், மறவர் உரிமை கொண்டு பசும்பொன் தேவரை கொண்டாட பல காரணங்கள் இருக்கின்றன. அதுபோலவே கள்ளர்களும் பசும்பொன் தேவரை கொண்டாட காரணம் உண்டு. ஆங்கிலேயரின் அடக்குறையால் தமிழகத்தில் குற்றப்பரம்பரை சட்டத்தை நிறுவி திட்டமிட்டே கள்ளர் உட்பட பலதரப்பட்ட இனக்குழுக்குளை அடக்கி ஒடுக்கினர். அந்த கைரேகை சட்டத்தை பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு காலக்கட்டங்களில் எதிர்த்து கொண்டிருந்த போது, பசும்பொன் தேவரும் தன் பங்களிப்பை கொடுத்து அதற்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை கொண்டு வர பாடுபட்டார். கடைசியாக அந்த சட்டம் கைவிட பட்டது. ஏதோவொரு வகையில் உதவியிருக்கிறார் என்ற காரணத்திற்காகவே கள்ளர்களும் பசும்பொன் தேவரை கொண்டாடுகிறார்கள்.

இந்த இரண்டு இனக்குழுக்குளும் பசும்பொன் தேவரை கொண்டாட அழுத்தமான காரணங்கள் உண்டு. ஆனால் அகமுடையார்களும் இன்று பசும்பொன் தேவரை கொண்டாட என்ன காரணம் இருக்க முடியுமென ஆராய்ந்தால் நிச்சயமாக ஒன்றுமே இல்லை என்பது தான் பதிலாக கிடைக்கிறது. அகமுடையார்களுக்கு சேர்வை, முதலியார், உடையார், பிள்ளை என்ற பட்டங்கள் போலவே தேவர் என்ற பட்டமும் பெரும்பான்மையாக வழங்கப்பட்டு வருகிறது. அகமுடையார்களுக்கு தஞ்சை - திருவாரூர் - நாகப்பட்டினம் உள்ளடக்கிய டெல்டா பகுதியெங்கும் இந்த தேவர் பட்டமே இருக்கின்றது. இதுபோல கோவை, மதுரை, திருச்சியென தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தேவர் பட்டம் அகமுடையாருக்கு இருக்கின்றன. இந்த தேவர் பட்டம் இருக்கும் அகமுடையாரில் பெரும்பாலானோருக்கு பசும்பொன் தேவரை மறவரென தெரியவே இல்லை, மாறாக, பசும்பொன் தேவரை அகமுடையார் எனவே நம்பிக்கொண்டிருக்கும் நபர்களும் பலருண்டு. இதை நான் என் கண் கூடாகவே பார்த்து, கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.

என் பெரிய தாத்தாவான அ.பக்கிரிசாமித்தேவர் கூட நேதாஜி படையில் இருந்தவர் தான். எங்கேயோ உள்ள சுபாஷ்சந்திரபோஸுக்கும், திருக்குவளை அருகிலுள்ள பக்கிரிசாமித்தேவருக்கும் என்ன தொடர்பு?யென யோசித்தால், சட்டென பசும்பொன் தேவரே நினைவுக்கு வருவார். அந்த காலம் தொட்டே பசும்பொன் தேவரை, அகமுடையாரென நம்பியிருந்ததை நம்மால் அறிய முடிகிறது. எந்த வகையிலும் அகமுடையாருக்கு ஆதரவாக இல்லாத பசும்பொன் தேவரை, இன்றைக்கு தலையில் வைத்து கொண்டாடி வருவதும் அதே அகமுடையார் இனக்குழு தான். டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் அகமுடையார் வீட்டு திருமணவிழா பதாகைகளில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் படம் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பசும்பொன் தேவர் படம் இருக்கும். அந்த அளவுக்கு பைக், கார் என எல்லா இடங்களிலும் அகமுடையாரோடு பசும்பொன் தேவரும் இருக்கின்றார் என்றால் அது அகமுடையாரின் அன்பை தான் வெளிப்படுத்துகிறது.

அப்படிப்பட்ட அகமுடையாரை வரலாறு எழுதுகிறேன் என்ற பெயரில் மருதுபாண்டியரையும், அகமுடையாரையும் ஓரம்கட்டிவிட்டு முக்குலத்தோர் என அறியப்படும் கள்ளர்-மறவர்-அகமுடையாரில் இருகுலத்தோர் மட்டும் செயல்படுவது வேதனையான விசயமே. ஆனாலும், அகமுடையாரை புறக்கணித்து விட்டு எந்த வரலாறையும் எழுதவும் முடியாது. இனி எந்த புது வரலாற்றையும் படைக்கவும் முடியாது. இது தான் எதார்த்தம். அகமுடையாருக்கு முக்குலம் தேவையில்லாமல் கூட வருங்காலத்தில் போகலாம். ஆனால் முக்குலம் என்ற குடைக்கு அகமுடையார் கண்டிப்பாக தேவை. ஏற்கனவே முக்குலமென்ற குடைக்குள் பல ஓட்டைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. அதை சரி செய்ய வக்கில்லாமல், அகமுடையாரை ஒதுக்கினால் முக்குலம் என்ற குடை கிழிந்து தொங்குவதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் கூட வெளிப்படையாகவே சொல்கிறேன், எழுத்து என்ற ஆயுதத்தை முக்குலத்தோரில் அகமுடையார் மட்டுமே மிக வீரியமாக பயன்படுத்த முடியும். மற்ற இருவரை விட வரலாற்றை எழுத அதிகம் தகுதி படைத்தவர்கள் அகமுடையார்களே. அதற்கு பல உதாரணங்கள் உண்டு, இன்றைக்கு பசும்பொன் தேவரை பற்றிய வரலாற்று நூலாக பெரிதும் மதிக்கப்படும், "முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்" என்ற நூலை எழுதியதே ஏ.ஆர்.பெருமாள் என்ற அகமுடையார் தான்!

உண்மை வரலாற்றை அகமுடையாரும் எழுத தொடங்கினால் முக்குலம் என்ற பலூன் உடைய தொடங்கும். அகமுடையாரை அனுசரித்து போகவில்லையென்றால், இழப்பு அனைவருக்கும் தான். ஏற்கனவே அரசியலிலும் சரி, பதவியிலும் சரி முக்குலத்தோர் என்ற அடிப்படையில் அகமுடையாருக்கு இழப்பு தான். அதனால் இனி ஏற்படும் எந்த இழப்பும் அகமுடையாருக்கும் பெரிய விசயமே இல்லை என்பதையும் மற்ற இருகுலத்தோரும் புரிந்து கொண்டால் சரி.

- இரா.ச.இமலாதித்தன்

06 ஏப்ரல் 2013

குற்றப்பரம்பரைச் சட்டம்





பெருங்காமநல்லூர் 

இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் மன்னர்கள் இடம் பெறுவர், மக்கள் இடம் பெறுவதில்லை என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவதுண்டு. ஆயினும், மன்னர்கள் அறம் பிறழ்ந்தபோதும் அநீதி இழைத்தபோதும், சாதாரண மக்கள் நீதியை நிலை நாட்டும் நெஞ்சுரம் கொண்டிருந்தனர். சாதாரண மக்கள் நீதிக்காகப் போராடிய வரலாற்றுக் குறிப்புகள் ஆங்காங்கே இலக்கியங்களில் புதைந்து கிடைப்பதையும் மறுக்க இயலாது. அத்தகைய மக்கள் வரலாற்றில் ஒரு பதிவுதான் ""தென்னக ஜாலியன் வாலாபாக்'' எனப் போற்றப்படும் வீரம் விளைந்த ""பெருங்காமநல்லுர்'' கிராமத்தில் நடைபெற்ற தீரச் செயல் ஆகும்.

ஜாலியன் வாலாபாக்:
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 21.03.1919-ல் "ரௌலட் சட்டம்' என்ற ஒரு கொடிய சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. எது குற்றம் - என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. ஆனால், "சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான வழக்கு விசாரணை இரகசியமாக நடைபெறும். சாட்சி விசாரணை கிடையாது. மேல் முறையீடு செய்ய வழிவகை இல்லை' என்று அதிகாரங்கள் தரப்பட்டிருந்தன.

பத்திரிகைகளின் குரலை ஒடுக்கி, மக்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்கிட இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்திய மக்கள் அனைவரும் இச்சட்டத்தை எதிர்த்தனர். இச்சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த மகாத்மா காந்தி, 10.04.1919-இல் கைது செய்யப்பட்டார். 13.04.1919 அன்று பஞ்சாப் மாகாணத்தின் அமிர்தசரஸில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

பெரிய மதில் அடைப்புச் சுவர்களும், சிறிய நுழைவாயிலும் கொண்ட ஜாலியன் வாலாபாக் திடலில், மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மக்கள் கலைந்து செல்வதற்கு எச்சரிக்கையும் கொடுக்காமல், குண்டு மழை பொழிந்து நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றும் - ஆயிரக்கணக்கானவர்களைப் படுகாயப்படுத்தியும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டான் ஜெனரல் டயர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகும்.

குற்றப்பரம்பரைச் சட்டம்:

ரௌலட் சட்டத்தைவிடக் கொடுமையானது "குற்றப்பரம்பரைச் சட்டம்'. வடஇந்தியாவில் கள்ள நாணயம் தயாரிப்பவர்களைக் கட்டுப்படுத்த, 1860-களில் இச்சட்டம் இயற்றப்பட்டது. சில பழங்குடியினரை உள்ளடக்கி 1871-இல் இச்சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

பின்னர் ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தித் தண்டிக்கும் வகையில் 1911-இல் இச்சட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 1913-இல் சென்னை இராஜதானியில் இச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி,

01) மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு சாதியையும் "குற்றப்பரம்பரை' என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.

02) குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் "பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம்.

03) அச்சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

04) இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்கட்கும் விதி விலக்கு கிடையாது.

05) பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

06) கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம்.

07) சந்தேகப்படும்படி ஒருவர் நடந்துகொண்டால்கூட 3 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு. இந்த சட்டத்தின் கீழ், ஒரு தீப்பெட்டியும், கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இப்படி ஏராளமான அடக்குமுறைப்பிரிவுகள் அச்சட்டத்தில் இருந்தன.

மக்களின் எதிர்ப்பலை:

"குற்றப்பரம்பரைச் சட்டம்', அப்பாவி மக்களிடம் எதிர்ப்பலையைக் கிளப்பியது. 25.11.1915 அன்று மதுரை மாவட்ட பிறமலைக் கள்ளர் வாழ்ந்த பகுதியில் உறப்பனுரைச் சேர்ந்த சிவனாண்டித்தேவன், பிரபல வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மூலம் சென்னை மாகாண ஆளுனருக்கு ஒரு ஆட்சேபனை மனுவினை அனுப்பி வைத்தார். அம்மனுவில் கீழ்க்கண்ட விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

01) 1860-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றவாளிகள் என விளம்புவது சமூக நீதிக்கு எதிரானது.

02) விவசாயமே எங்கள் வாழ்வாதாரம்.

03) சட்டத்தை மதித்து முறையாக நிலவரி செலுத்திக் கண்ணியமாக வாழ்ந்து வருகிறோம்.

04) மதுரை திருமலை நாயக்கர், கள்ளர் சமுதாயத்தின் எட்டு நாட்டுக்குத் தலைமை ஏற்கும் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்ததற்கான தாமிரப் பட்டையங்கள் உள்ளன.

எனவே, நீதிக்குப் புறம்பான இச்சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என அந்த மனுவில் கேட்டிருந்தார். அவரது நியாயமான கோரிக்கை, மனிதாபிமானமற்ற முறையில் அரசால் நிராகரிக்கப்பட்டது.

பெருங்காமநல்லுர் துப்பாக்கிச் சூடு:
மதுரை மாவட்டம் பிறமலைக் கள்ளர் நாட்டில், அதிகாரிகள் இச்சட்டத்தை அமல்படுத்தி வருகையில், இறுதிமுகமாக பெருங்காமநல்லுர் கிராமத்திற்கு வந்தனர். மக்கள் இச்சட்டத்திற்கு அடிபணிய மறுத்தனர். ""சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் உகந்த சட்டங்கட்கு நாங்கள் கட்டுப்படுவோம். சமூக நீதிக்கு எதிரான சட்டத்திற்குக் கட்டுப்பட முடியாது'' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

எந்த வகையில் - என்ன செய்தாகிலும் சரி, சட்டத்தை அங்கே அமல்படுத்தியே ஆக வேண்டும் என அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டார்.

02.04.1920 இரவில் ஆயுதப்படை மற்றும் குதிரைப்படைகளுடன் பெருங்காமநல்லுர் செல்வதற்காக அதிகாரிகள் சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் முகாம் இட்டனர். தகவல் அறிந்த பெருங்காமநல்லுர் மக்கள் ஒன்று கூடி விவாதித்தனர். "ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடிபணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து காவல் நிலையத்தில் கைரேகை பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். உயிரினும் மானம் பெரிது. அடுத்த நாள் அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தால், படாங்கு வேட்டுப் போட்டுப் பக்கத்து ஊர் மக்களையும் வரவழைத்துப் போராட வேண்டும்' என முடிவு செய்தனர்.
 03.04.1920 அன்று அதிகாலை குதிரைப்படை மற்றும் ஆயுதப்படையுடன் அதிகாரிகள் பெருங்காமநல்லுர் கிராமத்தை முற்றுகையிட்டனர். முக்கிய அதிகாரிகள், மந்தையில் இருந்து கொண்டு ஊர்ப் பெரியவர்கள் சிலரை அங்கே வரவழைத்தனர்.

சட்டத்தை மறுப்பது குற்றம் என அதிகாரிகள், பெரியவர்களிடம் எடுத்துரைத்தனர்.

 ""நாங்கள் செய்த குற்றம் என்ன? அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோமா, கொலை கொள்ளையில் ஈடுபட்டோமா, சாதி - சமயச் சண்டையில் ஈடுபட்டோமா? எதற்காக இங்கே இவ்வளவு குதிரைப்படை, ஆயுதப்படையோடு வந்து எங்களைப் பயமுறுத்துகிறீர்கள்? குற்றவாளி, அப்பாவி என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்த கள்ளர் சமுதாயத்தையும் குற்றவாளி என சட்டம் போட்டது குற்றம் இல்லையா? அச்சட்டத்தைக் கூறி எங்களைப் பயமுறுத்தி கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? நாங்கள் கைரேகை பதிக்க மறுப்பது எங்களைப் பொறுத்தவரை தன்மானப் பிரச்னையாகும். அதை குற்றம் என்று நீங்கள் சொல்வது சரியா?'' எனக் கேட்டனர். வாக்குவாதம் மணிக்கணக்கில் தொடர்ந்தது. விவாதம் முடிவின்றி இழுபறியாக நீடித்தது.

 ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு தயாராவதுபோல அணி வகுத்தனர். மக்கள் படாங்கு வேட்டை வெடித்தனர். பக்கத்து ஊர் மக்கள் வேட்டு சத்தம் கேட்டதும் படை திரண்டு வந்தனர். இந்த மக்களை அடி பணிய வைப்பது எளிதான செயல் அல்ல என்பதை அதிகாரிகள் புரிந்துகெண்டனர்.

"சட்ட அமலாக்கத்தில் தோல்வி அடைந்துவிட்டோம்' என்ற எண்ணம் அதிகாரிகள் நெஞ்சில் உறுத்தியது. பின்வாங்குவதுபோல் பாவனை செய்து, அதிகாரிகள் ஊருக்குக் கீழ்புறம் அரை பர்லாங் தூரம் சென்றனர். பெரும் திரளான மக்களிடமிருந்து முனைப்புடன் நின்றவர்களைப் பிரித்து இழுக்கவே அவர்கள் இந்த உத்தியைக் கையாண்டனர்.

முன்னணி வீரர்கள் ஆயுதப்படையின் அருகில் சென்றதும், தங்கள் தோல்வியை மறைத்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்கும் சுயநல உள்நோக்கத்துடன் துப்பாக்கியைத் தூக்கினர். மாயக்காள் என்ற பெண் உட்பட 16 பேர்களின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. வீர மரணம் அடைந்த 16 பேர்களின் உடலை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.

துப்பாக்கி சூட்டில் நிலைகுலைந்து சிதறி ஓடிய மக்களில் சுமார் 200 நிரபராதிகளை அதிகாரிகள் பிடித்து ஒரு கை, ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு நடைப்பயணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலத்திற்கு ஆடு, மாடுகளைப் போல் நடத்திச்சென்று நீதிமன்றத்தில் "ரிமாண்ட்' செய்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப், "ரிமாண்டு' செய்யப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வாதாடி வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தார்.

கள்ளர் சீரமைப்பு:

பெருங்காமநல்லுர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேறத் தொடங்கின. அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தமாக இதனைக் கொள்ளலாம்.

ஒப்பிடலாம்:

ஆங்கில அதிகார வர்க்கம் நடத்திய கொலைக்களம் என்ற வகையில் ஜாலியன் வாலாபாக்கையும், பெருங்காமநல்லுரையும் ஒப்பிடலாம். ஜாலியன் வாலாபாக்கில் பலியானவர்கள் அங்கு நடந்த கண்டனக் கூட்டத்தைப் பார்க்க வந்த அப்பாவிகள் மற்றும் அருகில் இருந்த கோவில் வழிபாட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள்.

பெருங்காமநல்லுரில் பலியானவர்கள் தன்மானம் காத்த மாவீரர்கள். ஒரு கொள்கைக்காக நேருக்கு நேர் இறுதிவரை உறுதியாகப் போராடி வீர மரணத்தைத் தழுவியவர்கள். இம்மாவீரர்கட்கு பெருங்காமநல்லுரில் நடுகல் நட்டு ஆண்டு தோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின், "குற்றப் பரம்பரைச் சட்டம்' இறுதியாக 5.6.1947-இல் ரத்தானது.

வீரர்களாக இருங்கள் என்று முழங்கினார் சுவாமி விவேகாநந்தர். அநீதி எந்தத் திசையில் இருந்து வந்தாலும் அதை எதிர்க்கும் துணிவும், திறனும், இன்றைய இளைஞர்களிடம் வேர் ஊன்றினால், அதுவே பெருங்காமநல்லுர் வீரத் தியாகிகட்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கமாக அமையும்.

கட்டுரையாளர்:  என்.எஸ். பொன்னையா, வழக்குரைஞர், தினமணி, 2013.