Posts

Showing posts from January, 2014

மந்திர சந்தேகம்

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.

- திருமந்திரம்

ஆதித்தனின் கதிர்கள் காலையில கிழக்கில் எழுந்து மாலையில் மேற்கில் மறைந்து விடுகிறது. நாம் காலையில் சூரியனின் உதவியோடு வெளிச்சத்தை பார்த்தாலும், சூரியனின் மறைவால் இரவில் அந்த வெளிச்சம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும், கன்றுகுட்டி கூட பிறந்த சிலகாலம் துள்ளி விளையாண்டாலும், கொஞ்ச காலத்துல காளையாகி வயலில் உழுது கடைசியில் முதுமை எய்தி ஒன்னுமில்லாமல் ஆய்விடுகிறது. அதுபோலத்தான் மனித வாழ்க்கையும். இங்கே இளமை என்பது நிரந்தரமல்ல; முதுமை வந்தே தீரும்ன்னு சொல்லிருக்கார் திருமூலர். இளமை மட்டுமல்ல இங்கே எதுவுமே நிரந்தரமில்லைத்தான். கன்றுகுட்டி கதைதான் மனித வாழ்க்கை நிலையும் என்றாலும் கூட என்னால் கன்றுக்குட்டியையும் - சூரிய ஆதித்தனையும் ஒன்றாக ஒப்பிட முடியவில்லை. ஏனெனில் ஆதித்த கதிர்களலானது காலையில் உதித்து மாலையில் மறைந்தாலும், மீண்டும் அடுத்த காலையில் இருளை நீக்கி வெளிச்சம் கொடுக்க உதிக்கும் பிரகாசமாக. மற்றபடி, இங்கே எதுவும் நிரந்தரமில்…

நிறம் அழகை தருமா?

நிறம் அழகை தருவதில்லை; ஏனெனில் எத்தனையோ சிவப்பான பெண்களை இதுநாள் வரை கடந்திருக்கின்றேன். ஆனால் அவர்களில் பலர் அழகில் குறைவாகவே இருந்திருக்கிறார்கள். அழகுக்கு நிறம் தேவையேயில்லை; ஏனெனில், எத்தனையோ கருப்பான பெண்களை இன்றைக்கு வரைக்கும் கடந்து வந்திருக்கின்றேன். அதில் பெரும்பாலானோர் அழகில் என்னை மிகவும் கவர்ந்தவராகவே இருந்திருக்கின்றனர். சிவப்போ - மாநிறமோ - கருப்போ இவையெல்லாம் வெறும் நிறம் மட்டும் தான். கண்டிப்பாக ஒருபோதும் இவை அழகை தரவதில்லை. பள்ளி பருவம் முதல் சிவப்பை விட கருப்பான பெண்களைத்தான் பிடிக்கும் என்பதுதான் என்னோட தனிப்பட்ட விருப்பமும் கூட!

- இரா.ச.இமலாதித்தன்

ஓடுகாலிகளை உருவாக்குவது யார்?

குலத்தை கெடுக்க வந்த கோடாறி காம்புகள் போல கண்டவன் பின்னாடியும் ஓடும் ஓடுகாலிகளால் ஒட்டுமொத்த சமூகத்துக்கே கெட்ட பேருதான். எவன் கூடவோ ஓடிபோயிட்டு ஒரு வாரத்துலயே பெத்தவங்க வீட்டுக்கு திரும்பி வந்துடுறாளுக. அந்த ஓடுகாலிகளை சில பேரு வெட்கம் மானத்தை விட்டு, பாசத்தால ஏத்துக்கிறாய்ங்க. சில பேரு வெட்டி சாய்ச்சிடுறாய்ங்க. ஆனால், அந்த ஓடுகாலிகளை உருவாக்குவதே இவிய்ங்கதான்னு கடைசி வரைக்கும் புரிஞ்சிக்க மாட்றாய்ங்க. மானம் பெருசுன்னு வீரத்தை மட்டும் சொத்தா வச்சிக்கிட்டு வாழுற வம்சம்ன்னு பெருமையை ஆம்பள புள்ளைக்கிட்ட மட்டும் சொல்லி வளர்த்து என்ன பிரயோசனம்? பொட்டை புள்ளைய்ங்க கிட்டையும் சாதி சனத்தை பத்தியும், ஊராண்ட வரலாறையும் சொல்லி வளர்த்திருக்கணும். ஆனால், இவிய்ங்க பொண்ணுங்கள கட்டி கொடுக்கிற வரைக்கும் மிரட்டியே வளர்க்கிறாய்ங்க. அதுனாலயே ஆசை வார்த்தை பேசுறவன் பின்னாடி, இந்த ஓடுகாலிக காதல்ன்னு சொல்லிக்கிட்டு ஓடிடுறாளுக. கொஞ்ச நாளு கழிச்சு கொஞ்சம் தெளிவு வந்தபிறகு, ஆயி அப்பன் வீட்டுக்கும் போகமுடியாம, ஓடி வந்தவன் கூடவும் வாழ முடியாம வாழ்க்கையையே தொலைச்சிட்டு நிர்கதியா நிக்கிறாளுக. இந்த …

பெண்மையை மதிப்போம்!

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலரும் இணையத்தில் வெளிப்படையாகவே தங்களது கருத்துகளை முன் வைக்கிறார்கள். குறிப்பாக முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் வலுவான கருத்துக்களை கூட வெகு இலகுவாக பலரிடம் கொண்டு சேர்க்கிறார்கள். சில பிரபல ஆண் எழுத்தாளர்கள் சொல்லும் கருத்துக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை விட, பெண் பதிவர்களுக்கு எளிமையாகவே உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. ஏனெனில் பெரும்பாலான ஆண்களின் ஆதரவும் இங்கே முதன்மையாக்கப்படுகிறது. அது எதிர் பாலினத்தின் மீதான கவர்ச்சியாக மட்டுமே பார்க்காமல், சமுதாய வளர்ச்சியாகவும் நாம் பார்க்கலாம். மாறாக, தங்களது கருத்துகளை வெளிப்படையாகவும் - தைரியமாகவும் - கொஞ்சம் கிண்டல் நையாண்டி கலந்து சொல்லும் பெண்களை தவறாக நினைப்பதும், மற்றவர்கள் மத்தியில் அப்பெண்களை தவறாக சித்தரிக்க முயல்வதும் மோசமான முன்னுதாரணமாகிவிடும். மேலும் அது நல்ல ஆண்மகனுக்கும் அழகுமல்ல. ஏனெனில், நாம் பெண்களை மதிக்கும் சமூகம். கடவுள் முதற்கொண்டு மண் - நீர் - நாடு என எல்லாவற்றையும் பெண்ணை முன்னிலைப்படுத்தி தாய்மையை போற்றக்கூடிய இனம் இது. இப்படியெல்லாம் புகழ்வதாலேயே, பெண்கள் போடும் பதிவுக்க…

பின்நவீனத்துவ கருத்துகள்!

ரொம்பநாள் கழித்து இன்றுதான் பார்த்தேன். அவள் பார்த்தாதாக தெரியவில்லை. நான் பார்த்தது கூட அவளுக்கு தெரிந்திருக்காது. அதுபோலத்தான் அவளும் என்னை பார்த்திருக்க கூடும். பார்வை மட்டும் என்ன செய்துவிட போகிறது? நேருக்கு நேராகவே பார்த்திருந்திருக்கலாம். அப்போது எனக்கும் புரியவில்லை; அவளுக்கும் இது புரிந்திருக்காது. புரிந்திருந்தால் தான், நேருக்கு நேராகவே பார்த்திருப்பாளே. நம்ம சாதித்திமிரை நம்மிடமே காட்டுகிறாளே யென்று யோசித்து கொண்டே, அந்த திமிர்பிடித்தவளை பார்க்க கூடாதென்று பிடிவாதமாக அதே திமிரோடு நாம இருந்தாலும் கூட, பிடிக்கத்தான் செய்கிறது அவளை!

#ஃபீலிங்

பிரபலம் என்பதாலேயே ஒரு சிலரை அன்பிரண்ட் பண்ணாமலே என் ஃப்ரெண்ட் லிஸ்டில் வைத்திருக்கின்றேன். மீதமுள்ள பிரபலங்கள் தானாகவே அன்பிரண்ட் செய்து விட்டு சென்றுவிட்டார்கள். உண்மை என்னவெனில் இங்கே யாரும் பிரபலமில்லை என்பதை ஒருசிலர் தான் உணர்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பிரபலமானது கூட அவர்களுக்கு தெரியவில்லை அல்லது அதை பொருட்படுத்தவில்லை என்பது கூட அதற்கு அர்த்தமிருக்கலாம். ஆனால், பிரபலமாகுவதும் நிர்மூலமாவதும் அவரவர் செயல்களிலேயே இருக…

இமலாதித்தவியல்

01.

வெளிப்படையாகவே பேசிப்பாருங்கள், நட்பு வட்டம் குறைலாம். ஆனால், குறைந்த பின்னால் உள்ள கூட்டம் நீடித்து நிலைத்திருக்கும். புகழ்வதால் மட்டுமே நட்பை வலுப்படுத்த முடியாது. விமர்சனங்களை நேரடியாக சொல்லி பழகும் போதுதான், பழக்க வழக்கமும் இன்னும் பலமாகும். எண்ணிக்கை முக்கியமல்ல; நம்பிக்கைத்தான் மூலதனம் நட்பில்!

02.
வெறும் மெளனமோ அல்லது வெற்று கூச்சலோ, எதுவாகினும் கண்டிப்பாக எதையும் செய்துவிடாது. வீர வேக விவேகம் கூடிய சரியான முன்னெடுப்பு வேண்டும். அப்போதுதான் வெற்றி நம் வசமாகும்!

தேசத்தந்தை நேதாஜி!

Image
தான் கொண்ட கொள்கையிலிருந்து கடைசிவரை விலகாத ஒரு தீவிரவாதி; விடுதலை வேட்கையை தன்னுள் கொண்டிருந்த ஒரு லட்சியபுருசன்; எதிரிகளை தகர்க்க யுத்தமொன்றே தீர்வாக இருக்குமென்று நம்பிய ஒரு போராளி; இரத்தத்தை கொடுத்து சுதந்திரத்தை அடையலாமென்ற நம்பிக்கையை விதைத்து களம்கண்ட ஒரு மாவீரன்; சாமானிய மக்களை பெரும்போர்படைகளாக கட்டமைத்த ஒரு மாபெரும் தலைவன்; காந்தி போன்ற சுயபுகழ் தேடியலைந்த நபர்களுக்கு மத்தியில் தன் சுயத்தை ஒருபோதும் இழக்காத எம் தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் இன்று. மேலும், நேதாஜியின் இறந்த தேதி அதிகாரபூர்வமாக யாருக்கும் இதுவரை தெரியாது. ஏனெனில், நேதாஜி இன்னும் இறக்கவில்லை; எம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நேதாஜி சொன்னது போல, உண்மையான சுதந்திரம் இன்னும் இந்தியாவிற்கு இதுவரை கிடைக்கவே இல்லையென்ற ஏக்கத்தோடு அடியேனின் தேசபக்தி தின வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த்!

என் அண்ணன் பிரபாகரனை பிடித்து போன அனைவருக்கும் கண்டிப்பாக, என் அண்ணனுக்கு பிடித்து போன நேதாஜியும் பிடிக்க வேண்டும் என்பதுதான் எதார்த்தம். ஆனால், இங்கே பிரபாகரனிசம் பேசும் பலரில் குறிப்பிடதக்க ஒருசாராருக்கு …

மீத்தேன் எதிர்ப்பு நடைபயணம்

Image
'சோழநாடு சோறுடைத்து' யென்ற பெருமை கொண்ட எம் மண்ணில், மத்திய சர்க்காரின் ஆதரவோடு மீத்தேன் எடுக்கும் வாழ்வாதார அழிப்பு திட்டத்தால் டெல்டா பகுதிகளிலுள்ள விளைநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விவசாய பெருங்குடி மக்களுக்கு கொண்டு செல்வதற்காக, விழிப்புணர்வு நடை பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ள என் அன்பு சகோதரன். திரு. கணேசமூர்த்திக்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
நீங்களும் உங்களது வாழ்த்துகளையும் - பாராட்டுகளையும் - ஆதரவையும், சகோ திரு. கணேசமூர்த்திக்கு தெரிவிக்க +91 9500796349 இந்த எண்ணிற்கு அழைத்து இன்னும் உற்சாகம் கொடுங்கள். விருப்பமிருந்தால் இச்செய்தியை அனைவரும் பகிரவும். — with Ganesa Moorthy Roja.

- இரா.ச.இமலாதித்தன்

கடம்பூர் தரிசனம்!

கந்தா கடம்பா கதிர்வேலா என்ற சொற்தொடரிலுள்ள கடம்பா என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடப்போய், நிறைய புதுப்புது தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் நீட்சியாக, கடம்பூர் என்ற ஊரை பற்றியும் தேடி, அங்குள்ள இரு (மேலக்கடம்பூர் - கீழக்கடம்பூர்) சிவாலயங்களை இன்று மாலை சென்று வழிபட்டும் வரமுடிந்தது. இந்த இரு கோவில்களும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் வரக்கூடிய முக்கிய இடமாகும். இங்கே தான் வந்தியதேவன் ஒரு முக்கிய நபரை சிறை வைத்தாராம். மேலும், இராஜராஜசோழனும் இங்கு வந்து இரகசிய முகாம் அமைத்து முக்கிய பேச்சுவார்த்தைகளும் நடத்திருக்காராம். அருகருகே உள இந்த இரு ஊர் கோவில்களிலும் சுரங்கம் இருப்பதும், அது தஞ்சாவூருக்கும் - கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும், கரக்கோவில் எனும் வகைப்படுத்தப்பட்ட கோவில்களில், இந்த மேலக்கடம்பூர் கோவில் மட்டும் உலகில் உள்ளது என்பது பெருமைக்குரிய விசயமாகும். தேர்வடிவ கோவில் இது. இங்கே எமனும் இருக்கிறார். பிரம்மா - விஷ்ணு - வலம்புரி விநாயகரோடு எம்பெருமான் முருகனும் இருக்கிறார். வேல் மட்டுமல்ல, தவமிருந்து வில்லும்…

அம்மா குடிநீருக்கு அரசு பேருந்து!

Image
அம்மா குடிநீரை எடுத்துவரவும் அரசாங்க பேருந்துதான்! இப்படி செய்தால் ஏன் டீசல் தட்டுப்பாடு வராது? விலை ஏன் ஏறாது? இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கான பண பட்டுவாடா ஏன் குறையாது?

இடம்: நாகப்பட்டினம் பேருந்து நிலையம்.

ஒரு போஸ்டர் - நிறைய நம்பிக்கை!

Image
கேணல் கிட்டு அவர்களின் 21ம் ஆண்டு நினைவேந்தலுக்காக எங்க ஊரு நாகப்பட்டினத்தில் (16.0.1.2014) ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்.

இரு அறிக்கை; ஒரே நோக்கம்!

தமிழ் நாடு ஆம்ஆத்மி கட்சியில் தலித்களுக்கு முன்னுரிமை!

- அரவிந்த் கேஜ்ரிவால்

அப்போ, கருணாநிதியின் அடுத்தக்கட்ட நகர்வு, திருமாவளவனை கழட்டிவிட்டு, கெஜ்ரிவாலோடு கூட்டணி வைக்கவும் வாய்ப்பிருக்கு. நூறில் 20% க்கும் குறைவான வாக்கு வங்கிகளை உடைய தலித்களையே எல்லாரும் குறி வைக்கிறாய்ங்களே... மீதமுள்ள 80% வாக்கு வங்கியை பற்றி யோசிக்கவே மாட்டாய்ங்களா? ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...

______________________________________________________________ஒரு இளவரசன் போனால் ஆயிரம் இளவரசன் உருவாவார்கள்!

- திருமாவளவன்

பொண்ணை பெத்தவங்களோட வலியும் வேதனையும், திருமாவளவன் போன்ற 'காதல்' யென்ற பெயரில் 'காமத்தை' ஊக்குவிக்கும் நபர்களுக்கு எப்படி தெரியப்போகிறது?

அடையாளமின்றி வாழ்வது வீண்!

சாதியை மறந்து தமிழர்ன்னு இணைய சொல்றீங்க; ஏன் தலைய சுத்தி காதை தொடுறீங்க. நேரடியா உயிரினம்ன்னு எல்லோரும் ஒன்னா இணைஞ்சிடலாமே, குரங்கு - புலி - சிங்கம் - நரின்னு பாகுபாடு இல்லாமல்...

முதலில் சாதியை விடுன்னு சொல்லுவாய்ங்க. அடுத்து மதத்தை விடு; அதுவும் நம்மள பிரிக்குதுன்னு சொல்லுவாய்ங்க. அப்பறம், இந்தியன்ன்னு இருப்போம்ன்னு சொல்லுவாய்ங்க. அதுக்கு பிறகு, மொழியை விடு; உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுற ஆங்கிலத்தை முன்னிறுத்துவோம்ன்னு சொல்லுவாய்ங்க. அதுக்கப்பறமா, மனிதம் முன்னிறுத்தி, மனிதனாக மட்டும் வாழ்வோம்ன்னு சொல்வாய்ங்க. அதற்கு பிறகு, மனிதன் - விலங்கு - பறவைன்னு பாகுபாடு இப்போவும் இருக்கு. அதுனால, உயிரினமாக மட்டும் வாழ்வோம்ன்னு சொல்வாய்ங்க. கடைசியா, ஒவ்வொரு அடையாளத்தையும் தொலைத்து விட்டு, அமீபாவாய் அகதியாக்கப்படுவோம்.

- இரா.ச.இமலாதித்தன்

அமாவாசைக்கும் அப்துல்லாக்கும் என்ன சம்பந்தம்?

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்: உச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

- வினவு செய்தி

தில்லை நடராச கோவில் தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தை பாராட்டுகிறேன். இதை பாரிய அளவில் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று, மிகப்பெரிய போராட்டக்களத்தை உருவாக்க வேண்டும். ஆனால், என் சந்தேகம், ஏன் இந்த போராட்டத்தை ஈ.வெ.ரா சிலைக்கு முன்பாக வைத்தார்கள் என்பதுதான்... ஆன்மீக உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட போராட்டத்தில், கடவுளே இல்லையென்று சொன்ன ஈ.வெ.ரா.வின் சிலைக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த போராட்டம் சரியானதாக படவில்லை. தேசியம் உடல்; தெய்வீகம் எனது உயிர்; என்று சொல்லி தன் கடைசிகாலம் வரை ஆன்மீகபற்றுள்ள தேசிய அரசியல் தலைவரான ஸ்ரீ பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் யென்ற மாபெரும் தமிழரின் சிலைக்கு முன்பாக நடத்திருந்திருக்கலாம். இல்லையென்றால், ஸ்ரீ பரமஹம்ச விவேகானந்தர் சிலைக்கு முன்பாக இப்போராட்டத்தை நடத்தி இருக்கலாமே? அமாவாசைக்கும் அ…

ஜோதிடமும் - பணமும்!

ஜோதிடமும் - எதிர்காலமும்!

எல்லோருக்கும், 'ராசி' தெரியும்; 'நட்சத்திரம்' தெரியும்; சிலருக்கு, எத்தனையாவது 'பாதம்' என்பது கூட தெரியும்; ஆனால், வெகு சிலருக்கே, 'லக்னம்' என்ன என்பதே தெரியும்.

இங்கே ராசி என்பது உடல். ஆனால், லக்னம் என்பது உயிர். வெறும் உடலை வைத்து, அடையாளம் மட்டுமே காண முடியும். ஆனால், உயிர் இருந்தால்தான் இயங்க முடியும். எனவே, என்ன ராசி என்பதை விட, என்ன லக்னம் என்பதை தெரிந்து வைத்து கொண்டு, அதன் மூலம் ஜோதிடத்தை அணுகுவதுதான் சிறந்தது. ராசிக்கட்டத்தில் லக்னம் என்பது தான் முதலிடம். அதை தொடர்ந்துதான், மற்ற ராசிகளும் கடிகார சுழற்சி முறையில் அணிவகுத்து வரும். லக்னத்தை வைத்தே, எல்லா தோசங்களும் - யோகங்களும் அமைகின்றன.

அடியேன், விருச்சிக ராசி - கேட்டை நட்சத்திரம் - 4ம் பாதம் - விருச்சிக லக்னம்!

இந்த பதிவை படிக்கும் எத்தனை பேருக்கு, உங்களது ராசி - நட்சத்திரம் - பாதம் - லக்னம் உள்பட யெல்லாம் தெரியும்?

பணமும் - எதிர்காலமும்!

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டம்!

ஏன் அப்போ மட்டும் கள்ள நோட்டு அடிக்க மாட்டாய்ங்களா என…

குறுக்கு வழியில் அரசியல்வாதியாக உருவெடுக்க சில வழிகள்

01. மனசுகுள்ள கருமைநிற இருளை வைத்துக்கொண்டாலும், வெளியில் வெள்ளை நிற வேட்டி - சட்டையோட பளிச்சுன்னு தெரியணும்.

02. சலவைக்கு போட்டு, அயர்ன் பண்ணின அந்த வெள்ளை சட்டையின் பாக்கெட்ல, முக்கியமான தலைவர் படத்தை வச்சிக்கணும்.

03. யார்கிட்ட பேசினாலும், வயதில் இளையவர் என்றால் தம்பின்னும், வயதில் மூத்தவரென்றால் அய்யான்னும், சமவயதினர் என்றால் அண்ணேன்னும் சொல்லிடணும்.

04. கூட்டநெரிசலில் பேசினாலும், தனியறையில் பேசினாலும், குரல் ஏற்ற இறக்கத்துடன்தான் பேசணும்.

05. கண்டிப்பா கையில ஒரு ஹேண்ட்பேக் வச்சிக்கணும். அப்போதான் ஒரு லுக் கிடைக்கும். அந்த பேக்குல டைரி - தண்ணீர் பாட்டில் - வெத்தலை பாக்கு - பீடி சிகரெட் - சரக்கு பாட்டில் - சைடிஸ்ன்னு எல்லாத்தையும் வச்சிக்கலாம். ஒருவேளை சால்வை போத்தினாலோ - நினைவு பரிசு கொடுத்தாலோ, அதை எடுத்துட்டு போக வசதியா இருக்கும்.

06. எனக்கு எல்லாமே தெரியும், அனைத்து அரசியல் நிகழ்வுகளும் எனக்கு அத்துப்படி, பல தலைவர்கள் எனக்கு தோழர்கள், இன்னும் சில இளைய தலைவர்களை உருவாக்கியதே நான்தான், இப்படியாக யார்கிட்ட பேசினாலும் அரைமணி நேரம் கேட்குறவன் கன்ஃபூஸ் ஆகுற அளவுக்கு அடிச்சு விடணும்.…

ஜோதிடமும் - நீயா? நானா? கருத்துகளமும்!

நேற்றைய நீயா? நானா?வில், 2014ம் ஆண்டின் 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்களை பற்றி விவாதம் செய்யப்பட்டது. அந்த விவாதத்தில், நம்ம ராசி விருச்சிகத்தை பற்றியும் நல்லாத்தான் சொன்னாய்ங்க. ஆனால், ஜோதிடர்களாக பங்கேற்ற ஒருதரப்பினர்களுக்கு இடையேயுள்ள கருத்து மோதல்கள், பலருக்கு குழப்பத்தைத்தான் ஏற்படுத்திருக்க வேண்டும். ஏனென்றால், ஒருராசிக்கு ஒருத்தர் இந்த வருசம் நல்லாருக்கும்ன்னு சொல்றதை, இன்னொருவர் அந்த ராசிக்கு இந்த வருசம் நல்லாவே இருக்காதுன்னு சொல்றாரு. இப்படி நேரெதிர் கணிப்புகள் வந்துகொண்டே இருந்தன. அதிலும் சிலர், ஜோதிடர்கள் தொலைக்காட்சி / நாளிதழ் / மாத இதழ் / வார இதழ் போன்ற ஊடகங்களில் செய்யும் சிலவற்றை சுட்டிக்காட்டி அது தவறென்று மிக வெளிப்படையாக பதிவு செய்தனர்.

இந்த பொதுப்பலன்கள் என்பது எல்லா ராசிக்காரகளுக்கும் அப்படியே பொருந்துமா என்று கேட்டால், கண்டிப்பாக 90% பொருந்தப்போவதில்லை. வேண்டுமென்றால், நமக்கு விருப்பமான செய்திகளை மட்டும் நம்மோடு பொருத்தி, சந்தோசமும் - ஆறுதலும் அடையலாம். ஆனால், அது உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தமிழ்நாட்டின் ஏழரை கோடி மக்கள் தொகையில், ஏறத்தாழ ஒரே ராச…

அண்ணன் - தம்பி!

மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்; புறக்கணிக்கப்படும் அழகிரி. கருணாநிதியின் கண்ணுக்கு எதிராகவே, அண்ணன் - தம்பிக்கான பதவி போட்டி வெடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. விரைவில், 'கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம்' என்ற கட்சிக்கூட உருவாகலாம். மக்களாட்சி காலத்திலும் மன்னராட்சி போல, வாரிசு அரசியலை உருவாக்கினால், அதன் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்பதற்கான சான்று இது. இதே போல, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலிலும், அண்ணன் - தம்பி போட்டி உச்சத்தில் இருக்கிறது.

விட்டுக்கொடுத்தலிலும் - விவேகத்திலும் - வீரத்திலும் - ஆளுமையிலும் - அரசாள்வதிலும், அண்ணன் - தம்பியாக வெற்றி வகை சூடியவர்கள், மாமன்னர் மருது பாண்டியர்கள் மட்டுமே!

போலீஸ் விசாரணையில் ஆட்டோ டிரைவர் பலி

நாகப்பட்டினத்தில் புத்தாண்டு ஆரம்பத்திலேயே காவல்துறை தனது பணியை செவ்வனே செய்திருக்கிறது. குடிபோதையில் தகராறு என்று சொல்லி நேற்றிரவு (டிசம்பர் 31) விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்து, ஆட்டோ டிரைவரை அடித்தே கொலை செய்துவிட்டது காவல்துறை. ஓர் உயிரை கொல்லும் உரிமையை யார் தந்தது இவர்களுக்கு? மக்களை பாதுகாக்க தானே காவல்துறை? அப்பாவியை அடித்து துன்புறுத்தவும், பயமுறுத்தவும் தான் காவல்துறையா? ஒருவன் குற்றமே செய்தாலும் கூட, அந்த குற்றத்திற்கான தண்டனையை நீதிமன்றம் தானே வழங்கவேண்டும்? இப்படியான ஆதிக்க மனபோக்கை காவலர்களுக்கு தந்தது யார்? தமிழ்நாட்டின் காவல்துறையின் அமைச்சகத்தை கையில் வைத்திருக்கும் தமிழக முதலவர் ஜெயலலிதா, இதற்கு என்ன சொல்ல போகிறார்? வழக்கம்போல லட்சம் ரூபாய் நிவாரணத்தை கொடுத்து சம்பந்தபட்டவர்களை வாயடைக்க போகிறாரா? காவல்துறையின் அராஜக போக்கை கண்டிக்க யாருமே இல்லையா? நாகை மருத்துவமனை வாசலில் இப்போது வரை ஆட்டோ தொழிற்சங்கத்தின் மூலமாகவும், நாகை வட்டார ஆட்டோ ஓட்டுனர்களாலும், காவல்துறையை கண்டித்து சாலை மறியல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரையிலும் எந்த (நாளிதழ் …