30 ஜனவரி 2014

மந்திர சந்தேகம்

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.

- திருமந்திரம்

ஆதித்தனின் கதிர்கள் காலையில கிழக்கில் எழுந்து மாலையில் மேற்கில் மறைந்து விடுகிறது. நாம் காலையில் சூரியனின் உதவியோடு வெளிச்சத்தை பார்த்தாலும், சூரியனின் மறைவால் இரவில் அந்த வெளிச்சம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும், கன்றுகுட்டி கூட பிறந்த சிலகாலம் துள்ளி விளையாண்டாலும், கொஞ்ச காலத்துல காளையாகி வயலில் உழுது கடைசியில் முதுமை எய்தி ஒன்னுமில்லாமல் ஆய்விடுகிறது. அதுபோலத்தான் மனித வாழ்க்கையும். இங்கே இளமை என்பது நிரந்தரமல்ல; முதுமை வந்தே தீரும்ன்னு சொல்லிருக்கார் திருமூலர். இளமை மட்டுமல்ல இங்கே எதுவுமே நிரந்தரமில்லைத்தான். கன்றுகுட்டி கதைதான் மனித வாழ்க்கை நிலையும் என்றாலும் கூட என்னால் கன்றுக்குட்டியையும் - சூரிய ஆதித்தனையும் ஒன்றாக ஒப்பிட முடியவில்லை. ஏனெனில் ஆதித்த கதிர்களலானது காலையில் உதித்து மாலையில் மறைந்தாலும், மீண்டும் அடுத்த காலையில் இருளை நீக்கி வெளிச்சம் கொடுக்க உதிக்கும் பிரகாசமாக. மற்றபடி, இங்கே எதுவும் நிரந்தரமில்லை. எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டதே!

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக