நிறம் அழகை தருமா?

நிறம் அழகை தருவதில்லை; ஏனெனில் எத்தனையோ சிவப்பான பெண்களை இதுநாள் வரை கடந்திருக்கின்றேன். ஆனால் அவர்களில் பலர் அழகில் குறைவாகவே இருந்திருக்கிறார்கள். அழகுக்கு நிறம் தேவையேயில்லை; ஏனெனில், எத்தனையோ கருப்பான பெண்களை இன்றைக்கு வரைக்கும் கடந்து வந்திருக்கின்றேன். அதில் பெரும்பாலானோர் அழகில் என்னை மிகவும் கவர்ந்தவராகவே இருந்திருக்கின்றனர். சிவப்போ - மாநிறமோ - கருப்போ இவையெல்லாம் வெறும் நிறம் மட்டும் தான். கண்டிப்பாக ஒருபோதும் இவை அழகை தரவதில்லை. பள்ளி பருவம் முதல் சிவப்பை விட கருப்பான பெண்களைத்தான் பிடிக்கும் என்பதுதான் என்னோட தனிப்பட்ட விருப்பமும் கூட!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment