ரயில் பட்ஜெட்

புதிய ரயில் அறிவிப்பும் இல்லை, பயணிகள் ரயில் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. இந்த ரயில்வே பட்ஜெட்டை பாராட்டவும் முடியவில்லை; குறை கூறவும் முடியவில்லை.

விஜய் டிவிக்கு த்தூ!

பெயர் : வாக்குகள்

ஜெசிகா : 1,03,53,440

அனுசுயா : 21,03,555

ஸ்பூர்த்தி :13,11,630

ஸ்ரீஷா :11,02,017


ஹரிப்ரியா : 5,06,221


பரத் : 4,63,309


மொத்த வாக்குகள்: 1,58,40,172

ஒருவேளை இது உண்மையா இருந்துச்சுன்னா Vijay Television விஜய் டிவியை காறி துப்ப வேண்டியது தான். அடத்தூ

சீமானுக்கு வாழ்த்துகள்!

சீமானின் செயல்பாடுகளோடு பலவற்றில் வேறுபட்டிருந்தாலும், வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பை ஆதரிப்பது அவசியமாகிறது. நாடு முழுவதும் விநாயக சதுர்த்தியன்று ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு விநாயகரை தலையில் வைத்து கொண்டாட மட்டும் தானே நேரம் இருக்கு. ஆனால், முருகனுக்காக எந்த ஹிந்துத்துவா அமைப்பும் நாடு முழுவதும் தைபூசத்தை கொண்டாவில்லையே. தைபூசத்தன்று முருகனை கொண்டாடி வீரத்தமிழர் முன்னணியை தொடங்கி வைத்த கிருஸ்துவ மதத்தை சார்ந்த சீமானை, சோ கால்டு ஹிந்து மதத்தை சார்ந்தவனாக மனதார பாராட்டுகிறேன்.

அம்மாவின் பிறந்த நாள் தெரியுமா?

தன்னை பெத்த அம்மாவோட பொறந்தாளு என்னைக்குன்னு தெரியாதவய்ங்க தான், இன்னைக்கு யாருக்கு அம்மான்னே தெரியாத ஒருத்தருக்காக ஊரு முழுக்க அம்மா தாயேன்னு ராப்பிச்சை எடுக்குற மாதிரி ப்ளக்ஸ் அடிச்சு வச்சிருக்காய்ங்க. பத்து மாசம் வயித்துல சுமந்தவள கண்டபடி அடிச்சு உதைச்சு அவளே, இவளே, நாயே, பேயேன்னு சகட்டுமேனிக்கு பேசுறவனுங்கயெல்லாம், பதவிக்காகவும், பணத்துக்காகவும், ஓசியில சம்பாரிக்கிறதுக்காகவும் வாயுல தேனுறுற மாதிரி புகழ்ந்து ப்ளக்ஸ்ல அடைமொழி கொடுத்து இருக்காய்ங்க. இவிய்ங்கல்ல முக்காவாசி பேரு பெத்த தாயை புகழ வேணாம்; குறைந்த பட்சம் மரியாதையா கூட நடத்த வக்கில்லாதவய்ங்களா தான் நெசத்துல இருக்காய்ங்க. காசுக்காக கண்டவங்க காலை நக்கும் இவிய்ங்க கிட்ட இருந்து வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்? முதுகெலும்பில்லா முட்டாள்களுக்கு திராவிடம் தான் போக்கிடம்.

வன்னியர் அரசியலை கற்பார்களா தேவரின தலைவர்கள்?

தேவன்னு சொல்லிக்கிற எவனுக்கும் தன்னோட தலைமையில் தன்னெழுச்சியாக மாற்று அரசியலுக்கான கூட்டணியை உருவாக்கி சுயமாக தேர்தலை சந்திக்க வக்கில்லை. தமிழ் தேசியம்ன்னு இன்னைக்கு எத்தனை பேரு பேசினாலும் அதில் முழுமையாக வெற்றியடையணும்ன்னா திராவிடத்தை ஒழிச்சா தான் முடியும். அந்த திராவிடத்திற்கு தெலுங்கர்கள் வேராக இருந்தாலும், தேவன்னு சொல்லிக்கிறவனெல்லாம் பெரிய விழுதாக திராவிடத்தை தமிழகத்தில் தாங்கி பிடிச்சிக்கிட்டு இருக்கான். முதலில் வேரை பிடிங்கியெறிய முடியாது. ஆனால் விழுதை திராவிடத்திலிருந்து பிரிக்க முடியும். இதை செய்யாத எந்த தமிழ் தேசிய வியூகங்களாலும் கண்டிப்பா திராவிடத்தையும் ஒழிக்க முடியாது, தமிழ் தேசியத்தையும் கட்டியெழுப்ப முடியாது. இதற்கெல்லாம் புது மாற்றாக வன்னியர்களின் அரசியலுக்கான தனியெழுச்சி வெற்றி பெற எம் வாழ்த்துகள்!

கெளரவ கொலைகளுக்கு பின்னால்...

தமிழகத்தில் கெளரவ கொலைகள் நடைபெறவில்லை. அப்படி நடந்தால், அதை தடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது.

- முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இதன் பின்னாலுள்ள அரசியல் பற்றியெல்லாம் பேசவே தேவையில்லை. முதலில் கெளரவ கொலைகளுக்கு காரணமே, கலப்பு திருமனம் என்ற சாதி மறுப்பு திருமணங்களே. அந்த சாதி மறுப்பு திருமணத்தின் படி காதல் திருமணம் செய்து கொண்ட ஆண் மற்றும் பெண்ணின் சாதி இரண்டுமே முற்று முழுதாக மறுக்க படுவதில்லை. மாறாக ஏதாவதொரு வடிவத்தில் ஆணின் சாதிய பின்புலத்திலுள்ள சாதிய பரிமாணமோ அல்லது பெண்ணின் சாதிய பின்புலத்திலுள்ள சாதிய பரிமாணமோ தான் தங்களது சந்ததிகளுக்கும் தொடர்ந்து வருகிறது. இதில் எங்கே சாதி ஒழிப்பு நடந்துள்ளது என்பதை பற்றி, சாதி ஒழிப்பு போராளிகள் என அடையாளப்படும் யாரும் விளக்கம் தருவதே இல்லை.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் குளறுபடி!

மூன்று ரூபாய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி ஓட்டு போடுறதுக்கும், திறமைக்கும் என்னங்கடா சம்பந்தம் இருக்கு? இவிய்ங்க பண்ற அலப்பறைய தாங்க முடியலயே... இந்த ஷோவுல இருக்கிற ஜட்ஜ் பேனல்ல ஒரு ஆளு கூட தமிழன் கிடையாது. இந்த லட்சணத்துல மொழி, மதம், சாதின்னு ஏதாவதொரு பின்ணணியை மனதில் வைத்துக்கொண்டு மறைமுக சப்போர்ட்டோடு மார்க் போடும் அந்த திறமைசாலி ஜட்ஜெல்லாம், போன மாசம் லைவ் ஸ்டேஜ்ல பாட வக்கில்லாமல் கேரளாவில் அசிங்கப்பட்டதையெல்லாம் ஊரு உலகம் பார்த்துக்கிட்டு தானே இருக்கு. இதுக்கு இடையில ஜூனியர் குழந்தைகளை பிஞ்சுலேயே பழுக்க வைக்கிற மாதிரியான ரவுண்டுகளை வைத்து, டபுள் மீனிங் டயலாக் பேசி, கண்றாவியான காஸ்ட்யூம் போட்டு கலச்சாரத்தையும் காலி பண்றாய்ங்க. முக்கியமா, யாரு டைட்டில் வின் பண்ணனும்ன்னு முன்னாடியே முடிவு பண்ணிக்கிட்டு மக்களை ஏமாத்துற இவிய்ங்களுக்கு என்னைக்கு எண்ட் கார்ட்ன்னு தெரியலையே முருகா!?

Vijay Television

வருங்கால முதல்வர் வளர்மதி!

ஜெயலலிதாவை விட 46,233 வாக்குகள் அதிகம் பெற்று, ஜெயலலிதாவை விட 55,027க்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திருவரங்கத்தில் வெற்றி பெற்றுள்ள வளர்மதிக்கு வாழ்த்துகள்! வரபோகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுக்கும் 1000/-ரூபாய்க்கு குறையாமல் கொடுத்தால் தான் எந்தவொரு கட்சிக்கும் வெற்றி நிச்சயம் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது. ஒரு கழுதையை வேட்பாளாராக்கினாலும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் ராஜதந்திரம் பணத்திற்கு உண்டு என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டிய தருணமிது.

2011 சட்டசபைத் தேர்தல்:

ஜெயலலிதா (அ.இ.அ.தி.மு.க) 1,05,328 வாக்குகள்
ஆனந்த் (தி.மு.க) 63,840 வாக்குகள்
வித்தியாசம் 41,488 வாக்குகள்

2015 இடைத் தேர்தல் :

வளர்மதி (அ.இ.அ.தி.மு.க) 1,51,561 வாக்குகள்
ஆனந்த் (தி.மு.க) 55,046 வாக்குகள்
வித்தியாசம் 96,515 வாக்குகள்

வருங்கால முதல்வர் வளர்மதிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!!!

துடைப்பத்திற்கு வாழ்த்துகள்!

பாரத தலைநகரத்தின் தலையெழுத்து போர் வாளில்லாமல் கெஜ்ரிவால் என்ற தனிமனிதனால் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அதிகார பலம், ஆளும் பலம், ஆட்பலம், முக்கியமாக வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டுரிமையை விலை பேசும் தந்திரம் போன்ற அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளையெல்லாம் தூள்தூளாக்கிய சாமானிய மக்களின் வெற்றியாகவே இதை பார்க்கின்றேன். இந்நாட்டிற்கான நல்லதொரு மாற்றம் ஏற்பட இது மீண்டுமொரு தொடக்கமாக இருக்கட்டும். வாழ்த்துகள்!

தமிழர் முன்னணி!?

பா.ஜ.கவுக்கு எப்படி அரசியலில் பங்கெடுக்காத இந்து முன்னணியோ, தி.மு.க.விற்கு எப்படி அரசியலில் பங்கெடுக்காத திராவிட கழகமோ, அதுபோல நாம் தமிழர் கட்சியின் தோழமை அமைப்பாக வீரத்தமிழர் முன்னணியை சீமான் இன்று தொடங்கி வைக்கிறார். நாம் தமிழர் கட்சியானது அரசியல் தளத்தில் தொடர்ந்து செயல்படும். வீரத்தமிழர் முன்னணியானது இனிவரும் காலங்களில் அரசியல் சார்பற்ற அமைப்பாக செயல்படும். அதுக்குள்ள பலபேரு பலவிதமா புரளியை கிளப்பி விடுறாய்ங்க. ஒருத்தரை பிடிக்கவில்லை என்பது வேறு. அதற்காக வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்புவது சரியா? ஒரு விசயத்தை பற்றி ஆழமாக தெரியாவிட்டால் ஏன் அவசரகுடுக்கை போல முந்திக்கொண்டு தவறான தகவலை பரப்ப வேண்டும்? பொய்யான பரபரப்பால் சில லைக்குகள் அதிகம் கிடைக்குமே தவிர, மற்றபடி ஒன்றும் நடந்து விடாது.

பார்வார்ட் ப்ளாகிற்கு பின்னால் தேவர் சாதி அமைப்புகள்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரால் தமிழகத்தில் உச்சம் தொட்ட அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியை இன்றைக்கு யார் யாரோ வளர்த்தெடுக்க, கைப்பற்ற நினைக்கிறார்கள். நல்ல விசயம். ஆனால், ”பசும்பொன் தேவரின் பேரன்” என்ற அடையாளத்தோடு அரசியலில் கால் பதித்த திரு.வெள்ளைச்சாமித்தேவரோ, அவருக்கு பின்னால் அரசியலில் நுழைந்த அவரது அண்ணன் திரு.ஜோதி முத்துராமலிங்கத்தேவரோ, ஏன் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணையாமல் தனியாக, ’பசும்பொன் தேசிய கழகம்’ என்ற அமைப்பில் இருக்க காரணம் என்ன? தேவரின் பேரன் என சொல்லும் இவர்களையே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணைய தடுப்பது யார்? எது இவர்களுக்கு இடையூறாக இருக்கின்றது? தேவரை வைத்து தெருவுக்கு தெரு கட்சி - அமைப்பு - பாசறை - கழகம் - இயக்கம் என அரசியல் செய்யும் யாருக்கும் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பமில்லையா?

அஜித் பற்றி தம்பி ஒருவரோடு சாட்ல...

நிகழ்வு:01

தம்பி: வணக்கம் அண்ணே

நான்: வணக்கம், எப்படி இருக்கீங்க?

தம்பி: நல்லாருக்கேன்’ண்ணே. நீங்க?

நான்: நானும் நல்லாருக்கேன். அப்பறம் என்ன விசேசம்?

தம்பி: ஒரு டவுட்டுண்ணே

நான்: என்ன டவுட்டு?

தம்பி: அஜீத் நம்மாளுண்ணே. தேவரா இருந்துகிட்டே நீங்க ஏன்ண்ணே அஜீத்தை எதிர்க்குறீங்க?

நான்: நான் ஒன்னும் எதிர்க்கலையே...

தம்பி: என்னை அறிந்தால் படத்துல கூட பாருங்க தலயோட பேரு சத்யதேவ்’ண்ணே. போன, வீரம் படத்துல அஜீத் கடையில சாமி போட்டோ பக்கதுல தேவர் போட்டோ இருக்கும்ண்ணே. கமல் மாதிரி அஜீத்தும் நம்ம சாதி தான்ண்ணே.

நான்: கமல், தமிழ் பிராமின்; அஜித், மலையாள பிராமின். வேணும்ன்னா விக்கிபீடியாவுல அஜித் குமார்ன்னு தேடி போய் பாருங்க. அதுல தெளிவா போட்டு இருப்பாங்க.

தம்பி: அதுல பொய்யா போட்டுருப்பாங்கண்ணே. கமல் பரமக்குடி தேவர்’ண்ணே. கமல் மாதிரியே அஜீத்தும் தேவர் தான்’ணே. அவரு ஊரு என்னான்னு எனக்கு சரியா தெரியல. ஃப்ரெண்ட்கிட்ட் விசாரிச்சு சொல்றேன்ணே..

நான்: விசாரிச்சு சொல்லுங்க. நன்றி நிகழ்வு: 02

அஜித் படம் நல்லா இல்லைன்னு பதிவு போட்டவரின் பதிவுல கண்டபடி ஒருமையில் கண்ணியமற்ற தனிநபர் தாக்குதல் நடத்துற முட்டாள்த்தனமான ரசிகனுங்க இருக்கிற வரைக்கும் ஒரு மயிறும் இங்க ஆகப்போறதுல்ல. மீசையை முறுக்கிக்கிட்டு வேறவொருத்தன் கிட்ட அடிமையா கிடக்குறதுதான் இவனுங்களுக்கு காலம்காலமா கைவந்த கலை. அதே மாதிரி அஜித்தையும் அரியணை ஏத்தி வச்சிட்டு ”எங்க ஆளு அஜித்!”ன்னு பெருமை பேசத்தான் அடிபோட்டுக்கிட்டு கிடக்குறானுங்க. இப்போ இருக்க நிலைமையில அடுத்த வேலை சோத்துக்கே அடுத்தவன் கிட்டதானே அடிமையா வேலை பார்க்குறோம்ன்னு யோசிக்காத முட்டாபயலுக, என்னைக்குமே திருந்த வாய்ப்பே இல்லை.

திருக்குராவடி எனும் திருவிடைக்கழியில் முருகனும் சிவனும்!முருகப்பெருமானும், லிங்க வடிவ சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரியும் அற்புத தலம் திருவிடைக்கழி. சோழநாட்டுத் திருச்செந்தூர் எனப் போற்றப்படும் இந்தக் கோவில், நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தூரத்திலும், தில்லையாடிக்கு மேற்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் (திருப்புகழ்), சேந்தனார் (திருவிசைப்பா) ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.

திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தபின், சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசூரன் தன் உருவை, தான் கற்ற மாயையால் சுறா மீனாக மாற்றிக் கொண்டான். பின்னர் திருச்செந்தூரில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் உள்ள கீழச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான். உயிர்களை காக்கும் பொருட்டு கீழச்சமுத்திரம் வந்து, மாயையால் மறைந்து இருந்த இரண்யாசூரனை, வைகாசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தார். 

சிவபக்தனாகிய இரண்யாசூரனை சம்ஹாரம் செய்ததால் அந்த பாவம் நீங்குவதற்காக திருவிடைக்கழி சென்று சரவணபொய்கையில் நீராடி, இத்தலத்தில் இருந்த திருக்குரா மரத்தின் நிழலடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குரா மலரால் பூஜை செய்து வழிபட்டார். குமரன் பூஜித்த சிவலிங்கம் முருகனின் முன்னால், ஸ்படிகலிங்கமாக விளங்குகிறது. மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம், திருவிடைக்கழியில் சம தளமான மண்ணிலும் வளர்ந்து தல விருட்சமாகவும் உள்ளது என்பது அதிசமான நிகழ்வு.

இந்த ஆலயத்தில் வழிபட்டால், ஒருவருக்கு ஜாதகரீதியாக உள்ள மாங்கல்யதோஷம், நாகதோஷம், புத்திரதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி, சுபீட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.
ஆண்டு முழுவதும் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. சிறப்பு திருவிழாவாக வைகாசி சதய திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நான் அடிக்கடி செல்லும் கோவில்களில், என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கோவில் இது. தைப்பூசம் என்பதால் இன்றைக்கும் சென்று வந்தேன். ஒருமுறை நீங்களும் வந்து தரிசித்து பாருங்கள்.

இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துகள்!

தை பூச திருநாள்!

வாடிய பயிரை கண்டபோதல்லாம் வள்ளலார் வாடினார். தைப்பூச திருநாளான இன்னைக்கு நிலைமையே வேற, வாடி போன பயிரை கூட பார்க்க முடியல. விளை நிலங்களையெல்லாம், விலை நிலங்களா ஆக்கிட்டாங்க.

ஜோதிடப்படி விசாக நட்சத்திரத்திற்கான விலங்கு: புலி. மேலும், விசாக நட்சத்திரத்திற்கு உரியவரான எம்பெருமான் திருமுருகனுக்கான ஆதித்தமிழரின் வழிபாட்டு முறையில் காந்தள் மலர் (கார்த்திகை பூ) தான் முதலிடம் பிடித்திருந்தது. இந்த இரண்டுமே விடுதலை புலிகளுக்கு நெருக்கானவை.

விசாக நட்சத்திரத்தின் மொத்தமுள்ள் நான்கு பாதங்களில் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், மீதமுள்ள நான்காம் பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்துள்ளது. ஜாதக்கப்படி என்னோட நட்சத்திரம் கேட்டை. அதுல பாதம் நான்கு. ஒருவேளை எம்பெருமான் திருமுருகனின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் பாதமானது நான்காம் பாதமாக இருக்குமானால், நானும் அவர் ராசி தான். விருச்சிகம்! தமிழ்தேசியத்தலைவர் அண்ணன் வே.பிரபாகரனும் விருச்சிக ராசி தான். எப்படியெல்லாம் பெருமை பட்டுக்க வேண்டிருக்கு.


என் காதலன்
அவன் மாயவன்
பகலவன் சேயவன்
எம் தாயவன்
மன தூயவன்
தமிழ் ஆண்டவன்
யாரவன்
விசாகன் வேலவன்!
சேயோன் போற்றி!
மயிலோன் போற்றி!
சேவற்கொடியான் போற்றி!
வேலேந்தியோன் போற்றி!
செந்தமிழோன் போற்றி!
வெற்றிகொண்டான் போற்றி!


வெற்றி வேல்! வீர வேல்!

உறவுகள் அனைவருக்கும் தைப்பூசத்திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்