ஆரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஆகஸ்ட் 2016

ஹிந்து எனும் போலி அடையாளம்!

அஷ்டமி - நவமி ஆகாதென்று சொல்வார்கள். ஆனால், ஆரிய நிறமான சிவந்த நிறத்தை கொண்டில்லாத கருமை நிற கண்ணன்/கிருஷ்ணன் - கோகுலாஷ்டமி என்ற அஷ்டமியிலும், கருமை நிற ராமன் - ராமநவமி என்ற நவமியிலும் அவதரித்ததாக சொல்வதிலுள்ள சூட்சமம் என்னவென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகிறது; அனைத்தையும் தன்வசம் படுத்தி ஏப்பமிடும் ஆக்டொபஸ் போல, ஆரியமும் காலம்காலமாக இம்மண்ணில் பலவற்றை ஏப்பமிட்டு வருகிறது.

சீதையால் கோழை என தூற்றப்பட்ட ராமனை கடவுளாக்கிய கம்பரை விட வால்மீகி நேர்மையாளர் என்பதை தெரிந்து கொள்ள கூட வடக்கத்திய மொழியறிவு தேவையாகிறது. நேர்மையற்ற முறையில் பல சூழ்ச்சிகளால் துரியோதனனை வீழ்த்திய கிருஷ்ணனுக்கும், வாலியை மறைந்திருந்து தாக்கிய ராமனுக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. தான் வாழ பிறரை கெடுப்பதுதான் இறைமொழியாயென்று சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் முடியவில்லை. கடவுள் போல தம் மக்கள் போற்றிய மாவலி மன்னனை, அந்தனனாய் போலி வேடம் தரித்து பிச்சை கேட்டு படுகொலை செய்த வாமனனுக்கும், கர்ணனிடம் யாசகம் கேட்டு இறப்பில்லா வரம்பெற்ற கவச குண்டலத்தை களவாடிய கிருஷ்ணனுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

ஆரிய அகராதிகளில் துரோகம் தான், தர்ம புண்ணியமாக கணக்கிடப்படுகிறது. தமிழனெல்லாம் அரக்கனாக சித்தரிக்கப்படுகிறான். இந்த ஆரிய அட்டூழியங்களை ஒழிக்க வந்த 24ம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் இறப்பை தீபாவளி ஆக்கியதோடு மட்டுமில்லாமல், அவரையே நரகாசுரனாக்கி நயவஞ்சக தீயை மூட்டி குளிர் காய்வதும் இதே ஆரியம் தான். இன்னும் எவ்வளவோ இருக்கு ஆரிய சூழ்ச்சி. வேற வழியில்லை. சிக்குண்டோம், ஹிந்து, ஹிந்தியா, ஹிந்தியென... உலக மொழிக்களுக்கெல்லாம் தகப்பன் மொழியான எம் தாய்மொழி தமிழை நீஷபாஷையென சொல்லி அழிக்க காலம்காலமாய் போராடும் தேவபாஷை சமஸ்கிருதமும் இம்மண்ணில் வாழ்ந்துவிட்டு போகட்டும், துரோகத்தின் எச்சமாய்!

- இரா.ச. இமலாதித்தன்

01 மார்ச் 2016

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நிலை!



செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் கூட தமிழ் இல்லை என்பதுதான் ஹிந்தியத்தின் வெற்றி!

'மெல்ல தமிழி இனி சாகும்!' என அன்று பாரதி சொன்னதை, இன்று நினைவாக்கி கொண்டிருக்கும் ஹிந்திய பா.ஜ.க - காங்கிரஸ் போன்ற மத்திய சர்க்காருக்கு ஆழ்ந்த நன்றி! ஆரியமும் - திராவிடமும் ஹிந்தியத்தின் இரு கண்கள் போன்றது. அது இரண்டும் வளரும் வரை, தமிழ் தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வரும்.

(படம்: திரு. மறைமலை இலக்குவனார்)

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நிலை!



செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் கூட தமிழ் இல்லை என்பதுதான் ஹிந்தியத்தின் வெற்றி!

'மெல்ல தமிழி இனி சாகும்!' என அன்று பாரதி சொன்னதை, இன்று நினைவாக்கி கொண்டிருக்கும் ஹிந்திய பா.ஜ.க - காங்கிரஸ் போன்ற மத்திய சர்க்காருக்கு ஆழ்ந்த நன்றி! ஆரியமும் - திராவிடமும் ஹிந்தியத்தின் இரு கண்கள் போன்றது. அது இரண்டும் வளரும் வரை, தமிழ் தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வரும்.

(படம்: திரு. மறைமலை இலக்குவனார்)

29 பிப்ரவரி 2016

தமிழன் தொலைத்த ஆதி விளையாட்டு!

உலகின் மூத்த இனமான தமிழர்களின் வீர விளையாட்டுகளில் கபாடியும் ஒன்று. ஆனால் இன்றைக்கு ஹிந்தியர்களின் விளையாட்டாக உலகிற்கு அறியப்படுகிறது. தற்போது சில வாரங்களாக நடைபெற்று வரும் 'ப்ரோ கபாடி' என்ற லீக் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளிலும் ஹிந்தியின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. அநேகமாக பாஸ்கர் என்ற பயிற்சியாளரை தவிர மற்ற அணிகளின் பயிற்சியாளர்களோ, வீரர்களோ தமிழரே இல்லையென்றே நினைக்கிறேன். காலப்போக்கில் கபாடி என்பது ஹிந்தியத்தின் விளையாட்டாக மாறிவிடும். அப்போது நம் தமிழ்நாட்டு திராவிடர்கள் அந்த விளையாட்டை எதிர்ப்பார்கள்.

எப்படி, 'ஆசீவகம்' என்ற நம் ஆதி வழிபாட்டு ஆன்மீக முறைகளையும், 'மாயோன் - சேயோன்' என்ற நம் மொழி சார்ந்த நம்மின கடவுள்களை வந்தேறிய ஆரியர்கள் கைப்பற்றி அவர்களுடைய வழிபாட்டு தெய்வமாக்கி கொண்ட போது, அதை கைப்பற்ற வக்கில்லாமல், நாத்திகம் என்ற பெயரில் தமிழர்களின் ஆதி ஆன்மீகத்தை எதிர்க்கும் திராவிடர்கள் போல, கபாடியும் நிலையும் மாறிப்போகலாம்.

இப்படியாக ஆரிய வந்தேறிகளாலும், திராவிட துரோகிகளாலும் நம்மை விட்டு நம் பாரம்பரியக்கூறுகள் ஒவ்வொன்றாய் கூறுபோட்டு களவாடப்படுகிறது, நமக்கே தெரியாமல். இதுபோல தமிழர் இழந்ததையெல்லாம், ஒவ்வொன்றாய் மீட்டெடுப்போம்; நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்!

- இரா.ச. இமலாதித்தன்

12 நவம்பர் 2015

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும்!

பகுத்தறிவு பேசும் திராவிடனும், ஹிந்துத்வா பேசும் ஆரியனும் ஒரே மாதிரியாக செயல்படுகிறார்கள். ஒரு பக்கம் கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு, இன்னொரு பக்கம் கடவுள் அழிச்சாத சொல்ற நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அந்த பக்கம் பார்த்தால், வர்ணாசிரம கொள்கையெல்லாம் இனி தேவையில்லை; நாமெல்லாம் ஒன்றென சொல்லி, கடவுள் கொல்றதெல்லாம் தமிழன் என்பது மாதிரியே கதை புனைகிறார்கள்.
திராவிட-ஆரிய கூத்தாடிகளுக்கு, தமிழன் என்ற ஒருவன் இல்லையென்றால் அரசியல் பிழைப்பே இருக்காது போல.

05 டிசம்பர் 2014

ஆரியம் - திராவிடம் - தலித்தியம்!

கேள்வி:

தமிழர்களுக்கு ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்தானதா?

பதில்:


அந்நியன் படத்துல ஒரு வசனம் வரும். தப்பு என்ன பனியன் சைஸா? மீடியம், லார்ஜ், எக்சல், டபுள் எக்சல்ன்ன்னு... அது போலத்தான் இந்த கேள்வியும் இருக்கு.ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்துன்னு சொல்றதோ, தலித்தியத்தை விட ஆரியம் ஆபத்துன்னு சொல்றதோ, சரியான ஒப்பீடு கிடையாது. ஆரியமும், திராவிடமும் சம விகிதத்தில் தமிழனுக்கு ஆபத்தானவை தான். ஆரியம், தமிழனின் தேசியத்தை வீழ்த்துகிறது; தலித்தியம், தமிழனின் தெய்வீகத்தை வீழ்த்துகிறது. ஆனால், ஆரியம் - திராவிடம் என்ற இந்த இரண்டிற்கும் இடையில் திராவிடத்தின் சூழ்ச்சியும் இருக்கின்றது என்பதை தமிழன் புரிந்து கொண்டு, ஆரியம் - திராவிடம் - தலித்தியம் இந்த மூன்றையும் புறந்தள்ளும் காலம் வந்த பிறகு, தமிழன் உலகையே ஆள்வான்!

- இரா.ச.இமலாதித்தன்

22 அக்டோபர் 2014

தீபஒளி வாழ்த்துகள்!

தீபாவளியை கொண்டாட வேண்டாம் ! - சீமான்.

அண்ணன் சீமான் அவர்களே,

தீபாவளி வேண்டாம்ன்னு சொன்னீங்க மகிழ்ச்சி. அப்படியே உங்க மதப் பண்டிகையான கிருஸ்துமஸ் உள்ளிட்ட ரம்ஜான் - மெஹரம், பக்ரீத் பண்டிகைகளையும் கொண்டாட வேண்டாம்ன்னு சொல்றதுக்கு உங்களுக்கு வக்கு இருக்கா? அது இல்லைன்னா மூடிக்கிட்டு உங்க வீட்டு கிச்சன்லேயே களமாட வேண்டியது தானே? அப்பறம் என்ன மசிருக்குண்ணே எங்க காலுல வந்து விழுறீங்க?

தீயத்தன்மை யாருக்குள் இருந்தாலும் அது அசுரகுணம்; அவன் அசுரன் தான். அதில் தமிழன் - ஆரியன் என்ற வேறுபாடில்லை என்பது என் யூகம். ஆகையால் ஆரிய அசுரர்களின் இருள் நிறைந்த எண்ணமெல்லாம் இந்த தீப ஒளியால் ஒழியட்டும். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தமிழனின் தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

08 மே 2014

ஜல்லிக்கட்டோடு மல்லுக்கட்டும் ஆரியம்!

தமிழர்களின் பாரம்பரியத்தை ஒவ்வொன்றாக அழித்தொழிக்கும் செயல்களை காலம்காலமாக செய்துவரும் ஆரியத்தின் வெற்றியாகவே, ஜல்லிக்கட்டு மீதான தடையென்ற உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாம் பார்க்க வேண்டும். வீரம்செறிந்த மறத்தமிழர்களின் வீரவிளையாட்டான ஏறு தழுவதல் என்ற ஜல்லிக்கட்டானது, பண்டையகாலம் தொட்டே தமிழர்களிடையே நடைபெற்றுவரும் கலச்சாரம் சார்ந்த பண்பாட்டு நிகழ்வு. இதை இன்றைக்கு விலங்குகளுக்கு பாதுகாப்பில்லை என்ற பொய்யான பரப்புரையை புதிதாக கையில் எடுத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது ஆரியம்.

அசுவமேத யாகம் என்ற பெயரில் பசுக்களை நெருப்பிலிட்டு கொலை செய்யலாம். அதே மாடுகளை பீப் கறிக்காக அடிமாடாக விலைக்கு விற்கலாம். ஆனால், வருடம் ஒருமுறை பாரம்பரியத்தின் நீட்சியாக அதே பசுவை கெளரவிப்பதற்காக் விழா எடுத்து, ஏறுதழுவதல் என்ற ஜல்லிக்கட்டை நடத்தினால் தடை! தமிழன் மாடுகளை மனிதனை விட உயர்வாக நினைக்கும் கூட்டம் என்பதை மறந்து விடுகின்றார்கள்.


ஆடு, மாடுகளை தன் குடும்ப உறவுகள் போல பேணி காத்து, ஒரு ஆட்டுக்குட்டியோ, கன்று குட்டியோ இறந்தால் மூன்றுநாள் துக்கத்தில் பட்டினியாக கிடக்கும் இரக்க குணம் கொண்ட என் தமிழினம், எப்படி அவ்விலங்கினத்தை துன்புறுத்தும்? ஒருவேளை துன்புறுத்துவது உண்மையென கொண்டால் கூட, அதை கட்டுபடுத்த தானே முதலில் முயற்சி எடுத்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக ஓரினம் சார்ந்த அடையாளத்தையே தடை செய்வது எவ்வகையில் நியாயமான தீர்ப்பாக இருக்கும்?

விலங்கை கூட குடும்பத்தில் ஒருவர் போல முக்கியத்துவம் கொடுத்து அன்பு செலுத்தும் பண்பை இன்றைக்கும் ஒவ்வொரு கிராமங்களிலும் நேரடியாக பார்க்க முடியும். அப்படிப்பட்ட அன்பிற்கு அடிபணியும் வீரம்செறிந்த கூட்டமான என் சக தமிழர்கள், ஈழத்தில் கொத்து கொத்தாக லட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்ட போது, இன்றைக்கு விலங்கிற்காக போலியாக நீலிக்கண்ணீர் வடிக்கும் இதே ஆரியம் தான், ஆயுதம் கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவியது என்பதுதான் தமிழனின் சோக வரலாறு. மேலும், தமிழனை ஒரு மனிதனாக கூட பொருட்படுத்தாமல், விலங்கிற்கு கொடுக்கும் முக்கியவத்தை கூட கொடுக்காமல் பலிவாங்கிய ஆரியத்திற்கு, தமிழனின் உயிர் என்பது விலங்கை விட மலிவானதாகி போய் விட்டது என்பதையும் ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். ஆரிய சூழ்ச்சியின் நீட்சியாக தமிழனின் அடையாளம் ஒவ்வொன்றாக சிதைக்கப்படுவதற்கு பாரம்பரிய ஜல்லிக்கட்டு தடையும் ஓர் உதாரணம் என்பதை, ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.

ஹரப்பா - மெகஞ்சோதரா யென்று பழங்கால நாகரீகத்தை பற்றி பெருமை பேசும் தமிழரல்லாத பலருக்கும், அன்றைய நாகரீக காலத்தில் தோன்றிய காளையை அதே பாரம்பரிய இனப்பெருக்க ஜீன்களோடு கலப்பில்லாமல் வளர்த்து, இன்றைக்கும் பண்டைய பாரம்பரிய அடையாளத்தை பாதுகாத்து வருவது என் தமிழினம் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்!


ஆடு மாடுகளுக்காகவே வருடத்தில் ஒரு நாள் மாட்டு பொங்கல் வைத்து விழா காண்கின்ற பண்பாட்டு தமிழன், ஆடு மாடு இறந்தால் ஊரையே கூட்டி ஒப்பாரி வைத்து மூன்றுநாள் பட்டினியாக கிடக்கும் பாசக்கார தமிழன், பசுவையே தெய்வமாக வணங்கும் பாரம்பரிய தமிழன், ஜல்லிக்கட்டின் போது வாடியில் இருந்து வெளியே வந்து பத்து நிமிடம் யாரும் அடக்க முடியாத அளவுக்கு திமிராக களம்காணுவதற்காகவே, வருடம் முழுவதும் தீணி போட்டு வளர்க்கும் வீர்ம்செறிந்த தமிழனா, மாட்டை கொடுமைப்படுத்த போகிறான்?

உணர்வில்லா உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், கேராளவிற்கு அடிமாடாக போகும் மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த போகின்றதே தவிர வேறொன்றும் புரட்சி நடந்துவிட போவதில்லை. போராட்ட குணத்தையே மறந்து போன எம்மினத்தான் என்ன செய்ய போகிறான் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சக தமிழனாக, இன்றைய ஜல்லிக்கட்டு தடையென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது வெறுப்பும் - கோபமும் - ஏமாற்றமும் மட்டுமே என்னுள் மிஞ்சி நிற்கிறது.
- இரா.ச.இமலாதித்தன்