29 பிப்ரவரி 2016

தமிழன் தொலைத்த ஆதி விளையாட்டு!

உலகின் மூத்த இனமான தமிழர்களின் வீர விளையாட்டுகளில் கபாடியும் ஒன்று. ஆனால் இன்றைக்கு ஹிந்தியர்களின் விளையாட்டாக உலகிற்கு அறியப்படுகிறது. தற்போது சில வாரங்களாக நடைபெற்று வரும் 'ப்ரோ கபாடி' என்ற லீக் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளிலும் ஹிந்தியின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. அநேகமாக பாஸ்கர் என்ற பயிற்சியாளரை தவிர மற்ற அணிகளின் பயிற்சியாளர்களோ, வீரர்களோ தமிழரே இல்லையென்றே நினைக்கிறேன். காலப்போக்கில் கபாடி என்பது ஹிந்தியத்தின் விளையாட்டாக மாறிவிடும். அப்போது நம் தமிழ்நாட்டு திராவிடர்கள் அந்த விளையாட்டை எதிர்ப்பார்கள்.

எப்படி, 'ஆசீவகம்' என்ற நம் ஆதி வழிபாட்டு ஆன்மீக முறைகளையும், 'மாயோன் - சேயோன்' என்ற நம் மொழி சார்ந்த நம்மின கடவுள்களை வந்தேறிய ஆரியர்கள் கைப்பற்றி அவர்களுடைய வழிபாட்டு தெய்வமாக்கி கொண்ட போது, அதை கைப்பற்ற வக்கில்லாமல், நாத்திகம் என்ற பெயரில் தமிழர்களின் ஆதி ஆன்மீகத்தை எதிர்க்கும் திராவிடர்கள் போல, கபாடியும் நிலையும் மாறிப்போகலாம்.

இப்படியாக ஆரிய வந்தேறிகளாலும், திராவிட துரோகிகளாலும் நம்மை விட்டு நம் பாரம்பரியக்கூறுகள் ஒவ்வொன்றாய் கூறுபோட்டு களவாடப்படுகிறது, நமக்கே தெரியாமல். இதுபோல தமிழர் இழந்ததையெல்லாம், ஒவ்வொன்றாய் மீட்டெடுப்போம்; நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக