கல்யாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்யாணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 பிப்ரவரி 2016

ஸ்டிக்கர் கல்யாணம்!

ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணவே வக்கில்லாம இன்னொரு கட்சிக்காரன் கிட்ட போய், கண்ட இடத்துல ஸ்டிக்கர் ஒட்டிக்கிற அடிமைகளே உங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? 'கல்யாணம் பண்ண கூட காசு பணம் இல்ல'ன்னு அந்த அடிமைகளுக்கு, அரசியலில் அடிமையாகி போன சிலர் சப்பைக்கட்டு கட்டலாம். அந்த 'சோ கால்டு' ஏழைகளுக்கு திருமணம் செய்ய ஒரு மஞ்சள் கயிறும், கோவில் வளாகமும் போதாதா? 'காசு பணம் இல்லங்கிறதுனால தான் கல்யாணம் பண்ணி வச்சவங்க, கண்ட இடத்துல ஸ்டிக்கர் ஒட்டினா கூட சகிச்சுக்கிட்டோம்' ன்னு சொல்லக்கூடும்.
என் கேள்வி இதுதான், கல்யாணத்துகு பிறகு குடும்பம் நடத்த காசும் பணமும் தேவைப்படுமே? அப்போ எதை சகித்து கொள்வீர்கள்? ஒருவேளை "எதை" வேண்டுமானாலும் சகித்து கொள்வீர்களா?

ஒரு பெண்ணை ஒருநாளில் தாலிக்கட்டிட்டு அந்த பெண்ணுக்கு புருசனாக மாறுவது பெருமை இல்லை. கல்யாணத்துக்கு பிறகும், அந்த பெண்ணை பொருளாதாரத்துக்காக வேறு யாரிடமும் கையேந்த வைக்காத ஆண்மை இருக்கணும். அதுக்கு வக்கற்றவர்கள், கல்யாணமே பண்ணிக்காம தனிக்கட்டையாவே வாழ்ந்துட்டு போய்டணும். த்தூ...





ஸ்டிக்கர் ஒட்டின அடிமைகளை விட, ஓசியில தாலிக்கு ஓடிப்போன இந்த அடிமைகளை தான் காரி துப்பணும்...

29 மே 2015

ஃபீலிங் என்றால் என்ன? :)



கேள்வி:

ஃபீலிங் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்? அதை உதாரணத்துடன் விளக்குக.


ஃபீலிங் என்பது மனம் சார்ந்த ஒன்று. அது மனக்குமுறலாகவும் இருக்கலாம். இந்த ஃபீலிங்கானது மனதுக்கும் அறிவுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். அது பல வகைப்படும். இப்போது உதாரணமாக திருமண விழாமேடையை எடுத்து கொள்ளலாம். அதாவது, கல்யாண வீட்டுக்கு போறோம், அங்க புதுப்பொண்ணு புது மாப்பிள்ளையெல்லாம் பாக்குறோம். அப்போ நிறையா ஃபீல் வரும்.

01. நமக்கு எப்போடா கல்யாணம்ன்னு ஃபீல் பண்ணலாம்.

02. அந்த பொண்ணுக்கு மாப்பிள்ள சுத்தமா மேட்ச் இல்லையேன்னு ஃபீல் பண்ணலாம்.

03. ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கேன்னு ஃபீல் பண்ணலாம்.

04. இந்த மூஞ்சிக்கெல்லாம் இப்படிப்பட்ட பார்ட்னரா?ன்னு ஃபீல் பண்ணலாம்.

05. மணமேடையில நிக்கிற மத்த எந்த பொண்ணையாவது பார்த்து ஃபீல் பண்ணலாம்.

06. கல்யாணமே பண்ண கூடாதுடா சாமின்னும் ஃபீல் பண்ணலாம்.

07. இந்த பயலுக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சிடுச்சே? நம்மளும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்ன்னு ஃபீல் பண்ணலாம்.

08. கல்யாணத்தை பிரமாண்டமா பண்ணிருக்காய்ங்களே. நம்மாள இந்த அளவுக்கெல்லாம் பண்ண முடியாதேன்னு ஃபீல் பண்ணலாம்.

09. இதை விட கிராண்டா கல்யாணம் பண்ணனும்ன்னும் ஃபீல் பண்ணலாம்.

10. இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணலாம்ன்னு ஃபீல் பண்ணலாம்.

இதுபோல, பல மாதிரியாகவும் ஃபீல் பண்ணலாம். மேலும் இந்த ஃபீலிங்கானது இடத்துக்கு இடம் மாறுபடும்.

- இரா.ச.இமலாதித்தன்

25 மே 2015

ஓகே காதல்! ஓகே கல்யாணம்! ஓகே கண்மணி!



”ஆதித்யா வரதராஜன், தாரா காலிங்கராயர், கணபதி அங்கிள், பவானி ஆன்ட்டி...” ச்சே என்ன மாதிரியான கதை மாந்தர்கள்? இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களோடு வரும் இன்னும் சிலரின் சிறுச்சிறு பாத்திரங்களின் நடிப்பும் சான்சே இல்ல.மணிரத்னத்தின் ஃப்ரெஷான கதைக்களத்துடன் கூடிய திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் நேர்த்தியான பின்ணனி / பாடல் இசை, பி.சி.ஸ்ரீராமின் காணொளி உருவாக்கமென எல்லாமும் நச்சுன்னு பொருந்திருக்கு. முதல்நாள் திரையரங்கில் பார்க்கும் போது என்னையும் சேர்த்து ஆக மொத்தம் பத்தே பேர் தான் இருந்தனர். எத்தனை தடவ பார்த்தாலும் அலுப்பே வராத காதல் காவியமான, ஓ காதல் கண்மணி, அடுத்த தலைமுறையினரையும் காலம் கடந்து நிச்சயம் ரசிக்க வைக்கும். என்னை வெகுவாக பாதித்த காதல் திரைப்படங்களில் மெளனராகம், இயற்கை, சங்கமம், அலைபாயுதே, கல்லூரி, நீதானே என் பொன்வசந்தம் போன்றவற்றையெல்லாம் விட, இந்த ஓ காதல் கண்மணி ஒரு படி மேலாகவே மனதை கவர்கிறது. ரஹ்மான், மணிரத்னம், ஸ்ரீராம் என அனைவருமே வயதில் நாற்பத்தந்தை கடந்த பின்னாலும், இன்னமும் இளமையை கொட்டி கொடுப்பதில் தான் அடங்கிருக்கிறது இவர்களின் வெற்றியின் ரகசியம்!

- இரா.ச.இமலாதித்தன்

21 மே 2015

கல்யாணம் முதல் கலாய்த்தல் வரை!

அண்ணன் ஒருத்தரு சாட்ல வந்து, மிச்சத்த உன் கல்யாணத்துல பேசிக்கலாம்ன்னு சொன்னாரு. அதுக்கு இன்னும் காலம் இருக்குண்ணான்னு சொன்னேன். ஏன் உன் லவ்வை இன்னும் உங்க அப்பாகிட்ட சொல்லலையான்னு கேட்குறாரு. என்னது லவ்வா?ன்னு கேட்டேன். பதிலே சொல்லாம ஆஃப்லைன் போயிட்டாரு.


-o-o-o-o-o-o-o-o-o-

 பங்காளிக யெல்லாம் கல்யாண பத்திரிகை வைக்கிறாய்ங்க. இல்லைன்னா ஜாதகம் பொண்ணுன்னு பேசுறாய்ங்க. ப்ரொஃபைல்ல என்கேஜூடுன்னு மாத்திடுறாய்ங்க. யோவ், உங்களையெல்லாம் நம்பித்தான் கொஞ்சம் ஆறுதலா இருக்கேன். நீங்க பாட்டுக்கு திடுதிப்புன்னு இப்படி பண்ணிட்டா நான் எங்கய்யா போறது? தனிமரமா ஆக்கிட்டு போய்டாதீங்கய்யா... என் மனசு தாங்காது!

16 அக்டோபர் 2014

நாகையின் நாயகர்கள்!

கண்ணகி, காரைக்கால் அம்மையார், கம்பன் மட்டுமல்ல, இந்த இமலாதித்தனும் பிறந்த ஊருதாங்க நம்ம நாகப்பட்டினம்!

நாகப்பட்டினத்தில் பிறந்த கம்பனுக்கு கல்யாணம் ஆய்டுச்சா? இல்லையா?ன்னு தெரியல. இவரை தவிர நாகப்பட்டினத்தில் பிறந்த காரைக்கால் அம்மையாருக்கும், கண்ணகிக்கும் கல்யாணம் ஆனது என்னவோ உண்மைதான். ஆனால், கல்யாணத்துக்கு பிறகு தான் ஒரு மிகப்பெரிய வரலாறே உருவானது. ஒன்று மாங்கனியால்! இன்னொன்று சிலம்பினால்! இன்று இருவருமே வள்ளுவர் சொன்னது போல தெய்வத்துள் வைக்கப்பட்டு விட்டனர். இதை எதுக்கு சொல்றேன்னா, நாங்களும் நாக்கு தமிழ் மணக்கும் நாகப்பட்டினத்து காரன் தான்... எங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணம் ஆனதுக்கு அப்பறமா நாங்களும் தெய்வம் தான்!

”எப்போ கல்யாணம்? எப்போ கல்யாண சாப்பாடு போடுவீங்க? சீக்கரமா மெரேஜ் ட்ரீட் கொடுங்க.”ன்னு ஒருநாளைக்கு ரெண்டு பேராவது சுழற்சி முறையில் இப்படி கேட்குறதுனாலேயே, இனி நித்தியானந்தா மாதிரி ஆய்டலாம்ன்னு இருக்கேன்.

சீடர்கள்* தொடர்புக்கு:-

ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சா இமலாதித்தனந்தா
ஆதித்த பாலபீடம்
ஆதித்தனந்தபுரம்
நாகப்பட்டினம்.

( *பெண்களுக்கு முன்னுரிமை )


- இரா.ச.இமலாதித்தன்

கல்யாணம் சீக்கிரம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்: பகுதி -1


01. சாயுங்காலம் ஆறு மணிக்கு சேவக்கோழி மாதிரி வீட்டுக்குள்ள அடைஞ்சிடணும்.

02. பலவருட உயிர் நண்பன்கிட்ட போன்ல பேசும் போது கூட வெயிட்டிங் கால் வராத மாதிரி எச்சரிக்கையா இருக்கணும்.

03. சம்பளம் போடுற ஏடிஎம் கார்டோடு பின் நம்பரையும் ஒரு மாசத்துக்குள்ள மறந்துட வேண்டிருக்கும்.

04. இந்த மாதிரி ஃபேஸ்புக்ல ரொம்ப நேரம் வெட்டியா மொக்கை போட முடியாது.

05. ஈமெயில், ஃபேஸ்புக் போன்ற இணையம் சார்ந்த பாஸ்வேர்டுகள் அனைத்தும் பொதுவுடைமையாக்கப்படும்.

06. நம்ம நல்ல சம்பளத்துல வேலை பார்க்கிறோமோ இல்லையோ, ஆனால் நமக்கு மச்சான் முறையில் உள்ள அரியரே கிளியர் பண்ணாத படிப்பாளிக்கு நல்ல சம்பளத்துல வேலை வாங்கி கொடுத்திடணும்.

07. பெத்தெடுத்த அம்மா-அப்பாவையெல்லாம் சண்டைக்காரன் மாதிரி பகையாளியாக்க தயாரா இருக்கணும்.

08. காய்கறி கட் பண்ண தெரிஞ்சா மட்டும் போதாது, ருசியா சமைக்க தெரியணும், கூடவே சமையல் பாத்திரமும் கழுவ தெரிஞ்சிருக்கணும்.

09. வாரத்துக்கு ரெண்டு நாளு பொண்டாட்டி துணிமணியெல்லாம் துவைச்சு கொடுத்துடணும்.

10. பொண்டாட்டியோட ஒன்னுவிட்ட சித்தப்பனோட பெரியப்பன் பேத்திக்கு வேலைநாளுல கல்யாணம் வச்சாலும் ரெண்டு நாளு முன்னாடியே லீவு போட்டு கல்யாணத்து போய்டணும், முக்கியமா மணமக்களுக்கு மோதிரம் போடணும்.

தொடரும்...

- இரா.ச.இமலாதித்தன்.

13 அக்டோபர் 2014

கல்யாணம் என்னும் கடல் தேடி!

ஒரு பைசாவுக்கு ப்ரோயசனம் இல்லாம ஊர்ல உரண்ட இழுத்து, பஞ்சாயத்தை கூட்டி வீட்டுக்கு செலவை வச்சிக்கிட்டு திரிஞ்ச பயலுகயெல்லாம், பொண்டாட்டி புள்ளைங்களோட பைக்ல ட்ரிபிள்ஸ் போய்கிட்டே "அண்ணே எப்போ கல்யாணம்?"ன்னு நக்கலா கேட்டுகுறாய்ங்க. பின்னாடி உள்ள அவன் பொண்டாட்டி யாருன்னு பார்த்தா, பக்கத்து ஊர்ல மூக்கு ஒழுகிக்கிட்டு கிடந்த வண்டு சிண்டா இருக்குது. இவன் இப்படி கேட்ட உடனே அது கூட நம்மள பார்த்து நக்கலா சிரிக்குது. முருகா! என்னடா இது உன் பக்தனுக்கு வந்த சோதனை?

கொஞ்ச நேரம் ஓவர்டைம் ஒர்க் பண்ணினாலேயே, "உங்களுக்கு என்ன ஜி குடும்பமா? குட்டியா? நைட் ஃபுல்லா இங்கயே கிடக்கலாம். நாங்களாம் அப்படியா? இருட்டுறதுக்குள்ள வீட்டுல போய் அடைஞ்சிடணும்"ன்னு நக்கல் பண்றாய்ங்க! என்னய்யா இது, கல்யாணம் ஆனாத்தான் குடும்பமா? கல்யாணமாகாத எங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்குய்யா... முருகா! இதுக்கெல்லாம் காரணம் நீ தான்.

 - இரா.ச.இமலாதித்தன்

10 ஜூன் 2014

கல்யாண கலவரம்!

கல்யாணத்துக்கு முன்னாடியே நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மொபைல் போனை மாப்ள வாங்கி கொடுத்து, கல்யாண பொண்ணுகிட்ட பேசுங்க மாப்ளன்னு பொண்ணுவீட்டு காராய்ங்க சொல்லுவாய்ங்க. நம்ம மாப்ளயும் தாலிக்கட்டுறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் ஆர்வகோளாறுல நம்ம வருங்காலபொண்டாட்டி தானேன்னு அந்த பொண்ணுக்கிட்ட உளறி வச்சிடுவாய்ங்க. அதோட ரிசல்ட் கல்யாண மேடையிலேயே தெரியும். மாப்ள, பயந்து உட்கார்ந்திருப்பான்; மணப்பொண்ணு கெத்தா உட்கார்ந்திருக்கும். அப்பறம் என்ன? தாலிக்கட்டின அடுத்த நிமிடத்திலிருந்து அந்த பொண்ணுக்கு அடிமை ரெடி ஆய்ட்டான்னு அர்த்தம். என் நண்பர்களின் திருமணத்தில், மாப்பிள்ளை தோழனாக இருந்ததால தெரிஞ்சிக்கிட்ட விசயம் இது மட்டும்தான்!