பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 செப்டம்பர் 2022

காசுக்காக காலை நக்கும் உலகம்!

”ஃப்ரெண்ட் விசயத்துல கணக்கு பார்க்க மாட்டேன். கணக்கு விசயத்துல ப்ரெண்ட்டே பாக்க மாட்டேன்” என சிறுத்தை படத்தில் பாதி மொட்டை அடித்து பணம் பிரிக்கும் காட்சியில் சந்தானத்திடன் கார்த்தி சொல்வாப்ள. அந்த மாதிரி காசு விசயத்தில் அனைவருமே கார்த்தி வகையறா தான்!

இதே கார்த்தி, சிறுத்தை போன்றதொரு திரைப்படத்தில்
மட்டுமில்லாது, தெலுங்கு திரைப்பட விழாவில் கூட “எனக்கு தமிழ் ஆடியன்ஸை விட டெபனட்டா தெலுகு ஆடியன்ஸ தான் பிடிக்கும்!” என பிசினஸிற்காக கூச்சமே படாமல் சொல்வாப்ள. அது போலத்தான் இங்கே பலரும்.
இதில் அப்பா, அம்மா, மாமனார், மாமியார், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மச்சான், சகலை, நாத்தனார், ஓப்பிடியா என எந்த வேறுபாடும் இல்லை. இடத்துக்கு தகுந்தாற்போல எல்லாரும் பணம் காசு வச்சிருக்க ஆளுக்கு தான் பல்லாக்கு தூக்குவாங்க. செருப்படி வாங்குறதுல கூட காசு இருக்கவன் தங்க செருப்பால அடிச்சா, ரெண்டு அடி எக்ஸ்ட்ராவா கேட்டு வாங்கிப்பாங்க.
”என்ன பண்ணி தொலைக்கிறது. காசுக்கு எச்சில் விட்டு, வசதி படைத்தவனின் காலை நக்கும் இந்த சொந்தக்கார நாய்களை நம்ம வீட்ல நடக்குற நல்லது கெட்டதுக்காக சகித்து கொள்றோம்” என மனதிற்குள் புழுங்கி கொள்வர்களே இங்கு அதிகம். ”காசுக்கு பீ திங்கிறதை காரணங்காட்டி நாம் ஒதுங்கி போனாலும், ’சொந்தம் பந்தம்ன்னு யாருமே இல்ல போல’ என ஊருதெருவுல உள்ளவன் நம்மள காறி துப்புவானுங்களே” என்ற பயத்தில் தான் முக்கால்வாசி பேர் இந்த ஈனக்கூட்டத்தை சகித்துக்கொண்டு போகிறார்கள்.

ஒருவன் கஷ்டப்படுகின்ற காலங்களிலோ, சாதாரண நிலையிலோ, அவனிடமிருந்து தூர நின்று கண்டும் காணாமாலும் கடந்து சென்று விட்டு, திடீரென காசு பணம் பதவி புகழென என கஷ்டப்பட்டவன் செட்டிலான காலங்களில் அவனது காலை நக்கி பிழைக்கும் நயவஞ்சகர்களுக்கு பெயர் சொந்தக்காரர்கள்!

- இரா.ச. இமலாதித்தன்

13 நவம்பர் 2016

கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் அண்டை நாட்டு பயங்கரவாதிகளின் கோபத்தை, கோடி கணக்கில் கருப்பு பணமாக பதுக்கி வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல்வாதிகளின் அறசீற்றத்தால் உணர முடிகிறது. பொதுவாக கேட்கிறேன்; வாழ்நாளில் எந்தவொரு நிலையிலும், யாரும் கூட்டமாக வரிசையில் நின்றதே இல்லையா என்ன? தனக்கு பிடித்த நடிகரின் படத்தை பார்க்க சொந்த காசை செலவழித்து தியேட்டர் வாசலில் மணி கணக்கில் வரிசையில் நின்று, 30ரூ டிக்கெட்டை 300ரூபாய்க்கு வாங்கியவர்களும் இங்கே உண்டு.

தன் மகன்/மகள்களின் அட்மிசன்களுக்காக பள்ளி/கல்லூரி வாசலில் தவம் போல காத்துக்கிடந்து, லட்ச கணக்கில் லஞ்சம் கொடுத்து கருப்பு பணத்திற்கு அடிகோலிட்டவர்களும் இங்கே உண்டு. இண்டர்நெட்/கால் அனைத்தும் இலவசம் என்று சொன்ன உடன் ஜியோ சிம் வாங்க, கால் கடுக்க ஒவ்வொரு செல்போன் கடை வாசல்களிலும் இரவுபகலாக காத்திருந்து, செக்யூரிட்டிகளிடம் கெஞ்சி கூத்தாடியவர்கள் இங்கே உண்டு. ரேஷன் கடையில் மாதமொரு முறை இலவச அரிசி வாங்கவோ, மானிய விலையில் மண்ணெணய், சக்கரை, பருப்பு வாங்கவோ பெரிய வரிசையில் நிற்பவர்கள் இங்கே உண்டு.சொந்த பணத்தை டெபாசிச் செய்ய கூட மணி கணக்கில் வரிசையில் நிற்க வைக்கும் எத்தனையோ வங்கிக்கிளைகள் இங்கே இருக்கின்றது. அப்போதெல்லாம் மக்கள் படும் அவதி பற்றி, கோபம் வரவில்லை இந்த அரசியல்வாதிகளுக்கு.

இன்றைக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பொங்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் பினாமியே இல்லையென்று சொல்ல முடியுமா? இதுவரையிலும் வரி ஏய்ப்பு செய்ததே இல்லையென்று சொல்ல அவர்களுக்கு அருகதை இருக்கிறதா? ஊரை ஏமாற்றி மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்து அரசுக்கு சேர வேண்டிய வரியையும் ஆடிட்டிங் மூலமாக ஏமாற்றி கருப்பு பணமாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளே பெரும்பான்மையாக இருக்கின்றனர். எவனும் மக்கள் சேவையாற்ற அரசியலுக்கு வரவில்லை. புகழ்/ பதவி/ பணம்/ பாதுகாப்பு போன்ற தன் சுயநலத்திற்காக தான் அரசியல்வாதியாய் அவதாரம் எடுக்கின்றனர் என்பது தெளிவு.

எனவே, மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர் என ஆடு நனைவதற்காக ஓநாய் அழுகின்ற கதை போல, நீலிக்கண்ணீரை ஏன் வீணாய் விடவேண்டும்? முதலில் போய் வரியை ஒழுங்காக செலுத்தி, பதுக்கி வைத்திருக்கும் பினாமி சொத்துகளை வெள்ளையாக்க முயற்சி செய்யுங்கள். மக்களின் கஷ்டம் இன்றைக்கு தான் புதிதாக உங்களுக்கு தெரிகிறதா? காலம் முழுக்க காத்து கிடந்தே வாழ பழகிவிட்டோம். எங்கள் வலியை நாங்கள் தாங்கி கொள்கிறோம். இதை வாய்ப்பாக பயன்படுத்தி, உங்கள் அரசியலை எங்கள் முதுகில் ஏற்றாதீர்கள்.

பாதிக்கப்படும் வணிகர்கள்:

மனசாட்சியுள்ள ஒரு சிறு/குறு வணிகர், தன்னுடைய வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்க, பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை வாங்கிக்கொண்டு வியாபாரம் செய்வதாக வைத்துக்கொள்வோம். அவரிடம் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ 4,000க்கு குறையாமல் பழைய ரூபாய் நோட்டுகள் இருக்கக்கூடும். அவரிடம் கைகளில் இருப்பது பத்து விரல்களுக்கு பதில் பனிரெண்டு விரல்கள் இருப்பதாக கணக்கில் கொண்டால் கூட, எத்தனை நாட்களுக்கு அவரது விரல்களுக்கு வங்கி ஊழியர்கள் மை வைப்பார்கள்?

சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்று விடுமா என்ன? இப்படி முட்டாள்தனமான யோசனைகளை கொடுத்து, இப்போதிருக்கும் இக்கட்டான சூழலில் அரசிற்கு மேலுமோர் அவப்பெயரை வாங்கி தருவது யார்? இன்னும் ஒரு வாரத்திற்கு ஊடகங்கள் இந்த பணப்பிரச்சினை பற்றி விவாதங்களோ, நேரடி பேட்டியோ, ப்ளாஷ் நியூஸ் என எதையாவது சொல்லி மக்களை பதற்றப்படுத்தி பயமுறுத்தாமல் இருந்தாலே போதும். பாதி பிரளயம் முடிவுக்கு வந்துவிடும்.

எதார்த்தம்:

அம்மாவா? ஐநூறு - ஆயிரமா? என கேட்கவே தேவையேயில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக அப்பல்லோ வாசலை கோவிலாக மாற்றி மண்சோறு / ஹோமம் என காவடி எடுத்த கும்பலெல்லாம், அப்பல்லோவை அநாதையாக விட்டுவிட்டு இரு நாட்களாக பேங்க் வாசலில் நிற்கிறது. இதுதான் எதார்த்தம். யாரும் அடிமைகள் அல்ல; எல்லோரும் காரிய கிறுக்கர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

07 ஜனவரி 2014

ஜோதிடமும் - பணமும்!

ஜோதிடமும் - எதிர்காலமும்!

எல்லோருக்கும், 'ராசி' தெரியும்; 'நட்சத்திரம்' தெரியும்; சிலருக்கு, எத்தனையாவது 'பாதம்' என்பது கூட தெரியும்; ஆனால், வெகு சிலருக்கே, 'லக்னம்' என்ன என்பதே தெரியும்.

இங்கே ராசி என்பது உடல். ஆனால், லக்னம் என்பது உயிர். வெறும் உடலை வைத்து, அடையாளம் மட்டுமே காண முடியும். ஆனால், உயிர் இருந்தால்தான் இயங்க முடியும். எனவே, என்ன ராசி என்பதை விட, என்ன லக்னம் என்பதை தெரிந்து வைத்து கொண்டு, அதன் மூலம் ஜோதிடத்தை அணுகுவதுதான் சிறந்தது. ராசிக்கட்டத்தில் லக்னம் என்பது தான் முதலிடம். அதை தொடர்ந்துதான், மற்ற ராசிகளும் கடிகார சுழற்சி முறையில் அணிவகுத்து வரும். லக்னத்தை வைத்தே, எல்லா தோசங்களும் - யோகங்களும் அமைகின்றன.

அடியேன், விருச்சிக ராசி - கேட்டை நட்சத்திரம் - 4ம் பாதம் - விருச்சிக லக்னம்!

இந்த பதிவை படிக்கும் எத்தனை பேருக்கு, உங்களது ராசி - நட்சத்திரம் - பாதம் - லக்னம் உள்பட யெல்லாம் தெரியும்?

பணமும் - எதிர்காலமும்!


பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டம்!

ஏன் அப்போ மட்டும் கள்ள நோட்டு அடிக்க மாட்டாய்ங்களா என்ன? ரிசர்வ் வங்கி ஆயிரம் கட்டு அடிக்கிறதுக்குள்ள, அவிய்ங்க லட்சம் கட்டு அடிச்சிடுவாய்ங்க. இனி வரும்காலங்களில், பண புழக்கத்தை குறைக்க வேண்டுமானால் ஏதாவது வழிவகை செய்யலாம். என்னளவில், அந்தகாலம் மாதிரி பண்ட பரிமாற்று முறை கூட சிறப்பாகதான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

ரூபாய் நோட்டு தாளில் இருப்பதால் டேமேஜ் ஆகலாம். ஆனால், அது இயற்கைக்கோ உடலுக்கோ பாதிப்பை தருவதில்லை. ஏனெனில் தாள், மரத்திலிருந்து உருவாக்கபடுகின்றன. ஓருவேளை, ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக்கில் புழக்கத்தில் விட்டால், உடலுக்கும் பாதிப்பு, இயற்கைக்கும் பாதிப்பு தானே?


- இரா.ச.இமலாதித்தன்