திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஜூன் 2015

செம்பியன் மகாதேவியின் சித்திரை கேட்டை திருவிழா!

தன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் மற்றும் சுந்தர சோழரின் மகளான குந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர் இவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்த செம்பியன் மாதேவியின் ஜென்ம நட்சத்திரத்தில் தான் நானும் பிறந்திருக்கிறேன் என்பதில் சின்ன மகிழ்ச்சி.


நாகை மாவட்டம் செம்பியன்மகாதேவி என்ற ஊரில் செம்பியன் மகாதேவியாலேயே கட்டியெழுப்பப்பட்ட சிவன் கோவில் உள்ளது. அங்கு செம்பியன்மாதேவியின் பிறந்த நாளான சித்திரை மாத கேட்டை நட்சத்திர நாளில் வருடம் தோறும் கேட்டை விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஊர் மக்களே சீர் எடுத்து வந்து அங்குள்ள செம்பியன்மாதேவி கற்சிலைக்கு சிறப்பு செய்து வழிபடுவார்கள்! இன்று அந்த கோவிலும் கேட்பாரற்று தான் கிடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு நவகிரக கோவில்கள் போன்ற வருமான தரும் கோவில்களை கணக்கிலெடுத்து கல்லா கட்டத்தான் நேரம் சரியா இருக்கு.

ஆளப்பிறந்தவன்...

இரா.ச.இமலாதித்தன்

20 ஜூன் 2014

பேரரசர் இராஜேந்திர சோழனின் 1000வது ஆடி திருவாதிரை திருவிழா!



"பூர்வதேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்" எனக் கல்வெட்டுகளல் புகழப்படுபவன் முதலாம் இராசேந்திர சோழன். இராசராசசோழனுக்கும் திரிபுவனமாதேவி என்ற பெயர் பெற்ற சேரர்குலப் பெண் வானவன்மாதேவிக்கும் மகனாக திருவாதிரையில் பிறந்தவன். இவனது இயற்பெயர் மதுராந்தகன். கி.பி.1012-இல் இளவரசாக முடிசூட்டியபோது அபிடேக பெயராக இராசேந்திரன் என்ற பெயரைக் கொண்டான். கி.பி.1014வரை தன் தந்தையுடன் இணைந்து ஆட்சி புரிந்தான். இவன் கங்கைகொண்டசோழன், மும்முடிசோழன், உத்தமசோழன், பண்டித்சோழன்,வீரசோழன், பூர்வதேசம் கங்கையும் கடாரமும் கொண்ட ஐயன் என்ற பட்டபெயர்களைச் சூடியவன். இவனது ஆட்சிக்காலம் 1012 முதல் 1044 வரை. "வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், குடதிசை மகோதையும், குணதிசை கடாரமும்" இம்மன்னனது நாட்டின் எல்லைகளாகக் குறிக்கப்படுகின்றன. இவன் இளவரசனாக இருந்தபோது சுமார் ஒன்பது லட்சம் வீரர்களுக்கு தலைமை தாங்கி வடக்கே பீசப்பூர் வரை படையெடுத்து வெற்றிவாகை சூடி சாளுக்கியரை வென்ற புகழாளன். இந்திய நாட்டின் பல பகுதிகளை வென்றதோடு கடல் கடந்து பல கீழ்த்திசை நாடுகளையும் தன் அடிமைப்படுத்தி சோழர் தம் கொடியைப் பறக்க விட்ட மாபெரும் சோழப் பேரரசனும் இவனே!

24.07.2014, 25.07.2014 ஆகிய இரு தினங்களும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளானா ஆடி - திருவாதிரை திருவிழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அருகிலுள்ள தமிழின உறவுகள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!

நன்றி: இராஜாராம் கோமகன்