பேரரசர் இராஜேந்திர சோழனின் 1000வது ஆடி திருவாதிரை திருவிழா!"பூர்வதேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்" எனக் கல்வெட்டுகளல் புகழப்படுபவன் முதலாம் இராசேந்திர சோழன். இராசராசசோழனுக்கும் திரிபுவனமாதேவி என்ற பெயர் பெற்ற சேரர்குலப் பெண் வானவன்மாதேவிக்கும் மகனாக திருவாதிரையில் பிறந்தவன். இவனது இயற்பெயர் மதுராந்தகன். கி.பி.1012-இல் இளவரசாக முடிசூட்டியபோது அபிடேக பெயராக இராசேந்திரன் என்ற பெயரைக் கொண்டான். கி.பி.1014வரை தன் தந்தையுடன் இணைந்து ஆட்சி புரிந்தான். இவன் கங்கைகொண்டசோழன், மும்முடிசோழன், உத்தமசோழன், பண்டித்சோழன்,வீரசோழன், பூர்வதேசம் கங்கையும் கடாரமும் கொண்ட ஐயன் என்ற பட்டபெயர்களைச் சூடியவன். இவனது ஆட்சிக்காலம் 1012 முதல் 1044 வரை. "வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், குடதிசை மகோதையும், குணதிசை கடாரமும்" இம்மன்னனது நாட்டின் எல்லைகளாகக் குறிக்கப்படுகின்றன. இவன் இளவரசனாக இருந்தபோது சுமார் ஒன்பது லட்சம் வீரர்களுக்கு தலைமை தாங்கி வடக்கே பீசப்பூர் வரை படையெடுத்து வெற்றிவாகை சூடி சாளுக்கியரை வென்ற புகழாளன். இந்திய நாட்டின் பல பகுதிகளை வென்றதோடு கடல் கடந்து பல கீழ்த்திசை நாடுகளையும் தன் அடிமைப்படுத்தி சோழர் தம் கொடியைப் பறக்க விட்ட மாபெரும் சோழப் பேரரசனும் இவனே!

24.07.2014, 25.07.2014 ஆகிய இரு தினங்களும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளானா ஆடி - திருவாதிரை திருவிழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அருகிலுள்ள தமிழின உறவுகள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!

நன்றி: இராஜாராம் கோமகன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment