பிறந்தநாள் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்தநாள் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜூன் 2015

திரு.கக்கனின் பிறந்தநாள் இன்று!

திரு.காமராசரோடு ஒப்பிடுகையில் திரு.கக்கன் ஒருபடி மேலாகவே போற்றுதலுக்குரிய ஆளுமைமிக்க மாமனிதர். மறதியை வழமையாக கொண்ட தமிழனுக்கு தொடர்ச்சியாக நினைவூட்ட திரு.காமராசருக்கு 'நாடார் சங்கம்' போல, திரு.கக்கனுக்கு பின்புலத்தில் அவர் சார்ந்த எந்தவொரு சாதி சங்கமும் முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை!

திரு.கக்கனின் பிறந்தநாள் இன்று!

04 ஜூன் 2015

ஜூன் 1,2,3,4

ஜூன் 1:

திருமுருகனின் அவதார திருநாளான வைகாசி விசாகத்திருநாள் நல் வாழ்த்துகள்!

ஜூன் 2:

தென்கோடி பண்ணைபுரத்தை பலகோடி பேர்களுக்கு பாதை போட்டு காட்டி, இசை போதையூட்டிய இளைய இசையரசனுக்கு என்றும் பதினாறே! ‪#‎HBDRajasir‬

ஜூன் 3:

எளியவனும் உச்சத்தை தொட முடியுமென்ற நம்பிக்கையை ஊட்டிய திருக்குவளையாருக்கு 92ம் அகவை வாழ்த்துகள்!

ஜூன் 4:

நான்கு தலைமுறைகளாக பல்வேறு மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடிவரும் எஸ்.ப்பி.பிக்கு இனிய வாழ்த்துகள்!
‪#‎HBDspb‬

03 ஜூன் 2015

மு.க. 92 !

இன்னும் கூட மிகப்பெரிய வளர்ச்சியடையாத திருக்குவளை போன்ற ஒரு கிராமத்திலிருந்து சென்று, இத்தனை சாதனை செய்த ஒரு காரணமே போதும் திரு.கருணாநிதியின் திறமையை உணர. மஞ்சப்பையோடு திருட்டு ரயிலிலில் வந்ததாக திரு.கருணாநிதி அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும் கூட, அப்படி மஞ்சப்பையோடு வந்த எத்தனை பேர் இதுவரையிலும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கின்றனர் என்பதை யோசித்தாலே தெரியும் அவரின் வெற்றியின் தன்மையை. பார்பன - ஆரிய சக்திகள் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், வெகுஜன சாமானியனாக ஒரு கட்சியின் தலைமைக்கு வந்து, அதை தொடர்ந்து தக்க வைப்பதும் அவ்வளவு எளிதான செயல் கிடையாது. சாமானியனும் சரித்திரத்தில் இடம்பெற முடியுமென்ற சாதனையை நிகழ்த்திக்காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர்களை போலவே, எந்தவித அரசியல்/சாதிய/வாரிசு/நட்சத்திர பின்புலமும் இல்லாமல் தமிழக அரசியல் சரித்திரத்தில் நீக்கமுடியாத அளவுக்கு நிரந்தரமாய் இடம்பிடித்த திரு.கருணாநிதிக்கு, சக நாகை மாவட்டத்துக்கு காரனாய் என் வாழ்த்துகள்!

22 ஜூன் 2014

இளையதளபதி பிறந்தநாள்!

ஜூன் 22ல் 40வது அகவை காணும் எங்கள் 'இளைய தளபதி' விஜய் அவர்கள் எம்பெருமான் முருகன் அருளோடு வாழ்க வளமுடன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!

Time to Lead :-)

12 டிசம்பர் 2013

பிரபலங்களின் பிறந்த வாழ்த்துகள்!

கல்லூரி காலம் தொட்டு சுமார் 10 வருடங்களாக என் நண்பனாக இருக்கும் சிவநேசனுக்கு போன டிசம்பர் 8ம் தேதி அன்று பிறந்தநாள். போன மாதம் தான் அவனுக்கு கல்யாணம் நடைப்பெற்றது என்பதால் அவனது மனைவியான என் உடன்பிறவா தங்கைக்கும் என்னைப்பற்றி தெரியும். ஏனெனில், பெண் பார்க்க போனதிலிருந்து, மாப்பிள்ளை தோழனாக இருந்தது வரை அப்போதே எங்களின் நட்பை சிவநேசனின் மனைவியான என் உடன்பிறவா தங்கையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனாலும், அவனது பிறந்த தேதியன்று ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியாமல் போனதை பற்றித்தான் இங்கே சொல்ல வருகிறேன்.

தொடர்ச்சியாக பயணத்திலும், மற்ற வேலைப்பளுக்களும் இருந்ததால் வாழ்த்துகள் சொல்லவே மறந்துட்டேன். டிசம்பர் 8ம் தேதி சாயுங்காலம் சிவநேசனை பார்க்க அவனது வீட்டுக்கு சென்றேன். புதுமண தம்பதிகளால் நல்ல உபசைப்பு எனக்கு கிடைத்தது. கொஞ்ச பேசிக்கொண்டிருக்கும் போதுதான் கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னான். எனக்கு சரியா புரியல. என்ன திடீர்ன்னு கோவிலுக்கு போகணும்ன்னு கூப்பிடுறான்னு யோசிச்சேன். உடனேயே, அவனது மனைவி சொன்னச்சு,

அண்ணா! "உங்க பிறந்தநாளுக்கு அந்த அண்ணன் ஒரு விஷ் கூட பண்ணலயா? காலைலர்ந்து அந்த அண்ணன் விஷ் பண்ணுனாங்களா?ன்னு உங்கள பத்தி கேட்டுக்கிட்டே இருந்தேன்"ன்னு சொன்னுச்சு.

உடனே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... ஒருவழியா "அப்படியில்லம்மா, எங்க ஃப்ரெண்ட்ஷிப்க்குள்ள எந்த ஃபார்மாலிட்டியும் கிடையாது..." அப்படி இப்படின்னு சொல்லி சமாளிச்சிட்டேன்.

இதை ஏன் இங்கே சொல்றேன்ன்னா, பிரபலங்களின் பிறந்தநாளை தேடிப்பிடிச்சு, போட்டிப்போட்டுக்கொண்டு வாழ்த்துகள் சொல்வதை விட, கூட இருக்கிறவங்களோட - கூட பழகுறவங்களோட - கூட பிறந்தவங்களோட - தன்னை உருவாக்கி பெத்தவங்களோட பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொல்ல முதலில் பழகிக்குங்க. அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு. மற்றபடி இந்த பிரபலங்களுக்கு வாழ்த்து சொல்வது என்பது சில சமயம்தான் ஒத்துவரும். மீதி எல்லா நேரங்களிலும் அது வெறும் விளம்பர நோக்கில்தான் அமையும். புகழ் வெளிச்சத்தில் இருப்பவனை பாராட்ட வேண்டிய அவசியமே இல்லை. புகழ் கிடைக்காமல் இருட்டில இருக்கிறவனை அங்கீகரிக்க இந்த வாழ்த்துகளும் பாராட்டுகளுமே புது உந்துதலை கொடுக்கும் ஊக்க மருந்தாக அமையும்.

எனிவே, இன்னைக்கு பிறந்த அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவென மனமகிழ்வோடு வாழ்த்துகிறேன். குறிப்பாக என் ப்ரெண்ட் லிஸ்டில் உள்ள என் நண்பன் திரைப்பட துணை இயக்குனர் Jai Ganeshக்கும், Ragu Ammu, Rock Jaisankar, Govan Thevan, Muthu Pandian, Rajamanickam Raja, Jai Sankar, Thirumagan Anand AP, Sugumaran Muthusamy மற்றும் எங்க சோழமண்டலத்து காரர் இரா. பாலமுருகன்க்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

முக்கியமா, என் நண்பன் Siva Nesanக்கு Belated Wishes!

- இரா.ச.இமலாதித்தன்