Posts

Showing posts from 2016

ஆண்டின் முதல் நாள் உறுதிமொழி ஏதெனில்...

31 டிசம்பர் 2016க்கும், 01 ஜனவரி 2017க்கும் இடையே ஒரேவொரு நாள் மட்டுமே வித்தியாசம். மற்றபடி எந்தவித மாற்றமும் வந்துவிட போவதில்லை. நாம் நமக்குள்ளாகவே சிலவற்றை மாற்றிக்கொள்ளாத வரை எந்த மாற்றமும் நம்மை சுற்றி நடந்து விடாது. புத்தாண்டிலிருந்து ஏதாவதொரு கெட்டப்பழக்கத்தை விடப்போவதாக பலரும் சொல்லிக் கேள்விப்படுகிறோம். உண்மையில் எது கெட்டப்பழக்கம்?யென தெரிந்த பின்பே அந்த பழக்கம் நம்மோடு நிரந்தரமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் மனதளவில் அது கெட்ட பழக்கமென ஆழமாக பதிந்த பிறகு, அந்த பழக்கம் படிப்படியாக நம்மை விட்டு விலகிவிடும். முதலில் எது கெட்ட பழக்கம்? எது நல்ல பழக்கம்? என்ற சுய மதிப்பீடு செய்து பார்த்தாலே போதுமானது. தனியாக அதற்கென நாள் குறித்து எதையும் விட்டொழிக்க வேண்டியதில்லை.

பெரும்பான்மையானவர்கள் கெட்டப்பழக்கம் என அவர்களுக்குள்ளாகவே கருதுவது, குடிபழக்கத்தையும் - புகை பழக்கத்தையும் தான். தெரிந்த தவறுகளுக்கு தீர்மானம் போட்டு திருத்த வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர்களால் விட்டொழிக்க முடியாமல் போனபின்பு தான் இப்படியெல்லாம் மெனக்கெட வேண்டிருக்கிறது. இப்படியான புகை/மது போன்ற உடல் நலத்திற்கு சம்ப…

தமிழ்நாட்டு அரசியலில் டெல்டாவின் ஆதிக்கம்!

கால்நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் கவனிக்கதக்க விசயங்களாக, தஞ்சாவூர் மற்றும் 'So Called' முக்குலத்தோர் என்ற இந்த இரண்டு மட்டுமே தோன்றுகிறது.

முதலில் தஞ்சாவூர்...

தமிழக அரசியலில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய டெல்டா பகுதியே மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது; பங்காற்றி கொண்டும் இருக்கிறது. திமுகவில் மு.கருணாநிதி, க.அன்பழகன், முரசொலிமாறன், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு எனவும்... அதிமுகவில் எம்.நடராஜன் குடும்ப உறுப்பினர்களெனவும் பலரது பங்களிப்பு உலகறிந்த விசயம். ஆளுங்கட்சி - எதிர்கட்சி என்ற எல்லா நிலைகளிலும் டெல்டாவை சார்ந்தவர்களின் பங்கு பெருமளவு இருந்து கொண்டே வந்திருக்கிறது.

அடுத்ததாக 'So Called' முக்குலத்தோர்...

தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களாக வன்னியர், கொங்கு வெள்ளாளர், பட்டியல் சாதியினர் இருந்த போதும் கூட கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட 'So Called' முக்குலத்தோர் என்ற கூட்டமைப்பை சேர்ந்தவர்களே அரசியலில் அதிகளவுக்கு ஆளுமை செய்திருக்கிறார்கள். அது பரபரப்பான சூழலான இப்போதும் கூட தொடந்து கொண்டேதான் வருகிறது.

மூன்றாவதாக இடம் யாருக்கு?

அடுத்து…

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகான அரசியல்!

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகான நாள்தோறும் அரங்கேறும் அரசியல் சதுரங்கங்களில் சில...

01. ஊடகங்களின் நம்பகத்தன்மை:

ஏற்கனவே தந்தி போன்ற காட்சி ஊடகங்களை பற்றி சொல்லவே வேண்டாம். பாண்டே, ஹரிகரன் போன்றோர் வாய் கூசாமல் யாராருக்கோ கூஜா தூக்குகிறார்கள். ஆனால் ஓரளவுக்கு அச்சு ஊடகங்களாவது நேர்மையாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்காவது தூணும் துருபிடித்தே கிடக்கிறது. தி ஹிந்து போன்ற நாளிதழ் மீதான மதிப்பே கேள்விக்குறியாகிறது. நக்கீரன், ஜூவி, ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளில் வரும் அனுமானத்தின் அடிப்படையிலும், நேரில் பார்த்தது போலவே கற்பனையாக எழுதும் நாலாந்திர தகவல்களை அரை பக்கத்திற்கு வெளியிட்டு வருகிறார்கள்.

02. திராவிட அரசியல்வாதிகளின் நிலைப்பாடு:

கி.வீரமணி, வைகோ போன்றவர்களின் செயல்பாடுகளும், அறிக்கைகளும், சந்தேகம் கொள்ள வைக்கிறது. கட்சிக்காரர்களுக்கே இல்லாத அக்கறை இவர்களுக்கு எதற்கு? சொந்த கட்சியை வலுப்படுத்த வக்கில்லாதவர்கள், தன்னைவிட பலமடங்கு வலுவுள்ள கட்சிக்கு அறிவுரை வழங்குவதன் உள்நோக்கம் என்ன? என்பதும் புரியவில்லை.

03. சிகிச்சை பின்னணி:

அப்பல்லோவை மட்டும் குறை சொல்லும் யா…

ஜல்லிக்கட்டு தடை... அதை உடை!

அரசியல்வாதிகளை நம்பி பலனில்லை; நம் பாரம்பரியத்தை அழிக்க நினைக்கும் பீட்டா போன்ற இல்லுமினாட்டி கும்பலின் எச்சில் பணத்தை நக்கி பிழைக்கும் அரசியல்வாதிகளை நம்பி இனி எந்தவித பலனுமில்லை. காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கன்னடன் மதித்தானா? கன்னடனும் ஹிந்தியாவில் தானே குடிமகனாக இருக்கிறான்? ஆதித்தமிழிடமிருந்து மொழிவாரியாக பிரிந்து போன அவனுக்கே சட்டத்தை மதிக்க தோன்றவில்லை? நமக்கென்ன தயக்கம்?

தெலுங்கனும், கன்னடனும், மலையாளியும் 'திராவிடன்' என சொல்லி தமிழனிடம் அரசியல் செய்யும் எந்த திராவிட அமைப்பாவது இதுபற்றி உணர்வோடு வாயை திறந்ததா? திராவிடம் என்பதன் அர்த்தமே தென்னக பிராமணருக்கான அடையாளச்சொல் மட்டுமே. ஆனால் சம்பந்தமேயின்றி தமிழனும் திராவிடனாக்கப்பட்டான், இல்லுமினாட்டி ஏஜென்ட்டான ஈ.வெ.ரா.வால்...

குமரிலபட்டர் உருவாக்கிய திராவிடம் என்ற இச்சொல்லை, ஒப்பிலக்கணம் என்ற நூலால் ஆங்கிலப்படுத்திய ஆய்வாளர் கால்வெல்டினால் தமிழன் திராவிடனாக்கப்பட்டு விட்டான். இந்த திராவிடம் என்ற வகைபடுத்தப்பட்ட மொழிக்குடும்பத்திற்கு விதை மட்டுமே தமிழனுடையது. ஆனால் தமிழன், என்றைக்குமே திராவிடன் இல்லை. அப்படி ப…
கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு பொருளாதார நெருக்கடி கொடுக்கும் அண்டை நாட்டு பயங்கரவாதிகளின் கோபத்தை, கோடி கணக்கில் கருப்பு பணமாக பதுக்கி வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல்வாதிகளின் அறசீற்றத்தால் உணர முடிகிறது. பொதுவாக கேட்கிறேன்; வாழ்நாளில் எந்தவொரு நிலையிலும், யாரும் கூட்டமாக வரிசையில் நின்றதே இல்லையா என்ன? தனக்கு பிடித்த நடிகரின் படத்தை பார்க்க சொந்த காசை செலவழித்து தியேட்டர் வாசலில் மணி கணக்கில் வரிசையில் நின்று, 30ரூ டிக்கெட்டை 300ரூபாய்க்கு வாங்கியவர்களும் இங்கே உண்டு.

தன் மகன்/மகள்களின் அட்மிசன்களுக்காக பள்ளி/கல்லூரி வாசலில் தவம் போல காத்துக்கிடந்து, லட்ச கணக்கில் லஞ்சம் கொடுத்து கருப்பு பணத்திற்கு அடிகோலிட்டவர்களும் இங்கே உண்டு. இண்டர்நெட்/கால் அனைத்தும் இலவசம் என்று சொன்ன உடன் ஜியோ சிம் வாங்க, கால் கடுக்க ஒவ்வொரு செல்போன் கடை வாசல்களிலும் இரவுபகலாக காத்திருந்து, செக்யூரிட்டிகளிடம் கெஞ்சி கூத்தாடியவர்கள் இங்கே உண்டு. ரேஷன் கடையில் மாதமொரு முறை இலவச அரிசி வாங்கவோ, மானிய விலையில் மண்ணெணய், சக்கரை, பருப்பு வாங்கவோ பெரிய வரிசையில் நிற்பவர்கள் இங்கே உண்டு.சொந்த பணத்தை டெபாசிச் ச…

இனி SC/ST பட்டியலில் முக்குலத்தோர்களா?

Image
தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சீர்மரபினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் (DNC+MBC) 20 சதவீத ஒதுக்கீட்டில் பலன் பெற்று வருகிறார்கள். அதாவது முக்குலத்தோர் என்று கூறிக்கொண்டே கள்ளர், மறவர்கள் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டிலும் இருக்கிறார்கள் என்பதை பற்றிய விரிவான பார்வையை இங்கே பகிர்கிறோம்.
'சீர்மரபினர் கள்ளர்கள்' பிற கள்ளர்களுக்காகக்கூட இட ஒதுக்கீடு கேட்டு இதுவரை போராடவில்லை. அதுபோலவே 'சீர்மரபினர் மறவர்களும்' பிற மறவர்களுக்காக இட ஒதுக்கீடு கேட்டு, தங்களின் சலுகையை விரிவுபடுத்தி பிற உறவுகளுக்கும் கிடைத்திட போராடியதில்லை. மேலும் 'சோ கால்டு - முக்குலத்தோர்' என்ற வகையில் அகமுடையார்களுக்காக சலுகை பெற்றுவரும் எவரும் இது சம்பந்தமாக குரல் கொடுத்ததில்லை. பிறகு எப்படி 'சோ கால்டு - முக்குலம்' ஓரணியில் இருக்கும்? இருக்க முடியும்? இப்போது சீர்மரபினர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு ஒரு சதவீத ஒதுக்கீடுதான் உள்ளது. மேலும் பட்டியல் சாதிகளான ஆதி திராவிடர் என்று அடையாளப்படுகின்ற பள்ளர், பறையர், சக்கி…

முட்டாள்களாக்கப்படுவது வாக்காளர்கள் தான்!

சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் இதை சாப்பிட்டார்; அதை சாப்பிட்டார்; இரண்டு இட்லி சாப்பிட்டாரென ப்ளாஷ் நியூஷ்ல போட்டாய்ங்க. அதுல கூட ஒரு லாஜிக் இருந்துச்சு. ராம்குமார் சாப்பிட்ட அந்த எச்சில் தட்டை பார்த்தாவது குத்துமதிப்பா எதையாவது சொல்ல முடியும்.
ஆனால், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா விசயத்தில், அவர் தங்கிருக்கு அந்த ப்ளாக் / வார்டு பக்கமே எட்டிப்பார்க்க முடியாது. குறைந்த பட்சம் அவர் சாப்பிட்ட எச்சில் தட்டை கூட பார்க்க முடியாத அடிமைகள் கூட்டம், 'ஜெயலலிதா இரண்டு இட்லி சாப்பிட்டார்!' என்று சொல்வதையெல்லாம் ஊடகங்கள் ப்ளாஷ் நியூஷில் போடும்போது தான், விஜயகாந்த் காரித்துப்பினது ஞாபகத்துக்கு வருகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டால், அந்த அரசின் நிர்வாகத்தை முதலமைச்சருக்கு மாற்றாக தலைமையேற்கும் இடத்தில் இருக்கும் மாநில மாண்புமிகு ஆளுநரே, வார்டு பக்கம் மட்டும் தான் போக முடிந்திருக்கிறது என்பதை கவனிக்கையில், 'அதிகாரம் மையம்' யார்? என்பதில் கூட குழப்பம் வருகி…

சமூக ஊடகங்களால் நினைவூட்டப்படும், பிறந்தநாள் தேதி!

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் இல்லையென்றால் என் போன்ற பலரின் பிறந்தநாளெல்லாம் குறிப்பிட்ட ஒருசிலரை தவிர எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் நம்மை இணைத்த இணையத்திற்கு நன்றி! ஒருமுறை இப்படித்தான் சகோ. சக்தி கணேஷின் பிறந்தநாள் தவறுதலான தேதி பதியப்பட்டிருந்ததால் அதையே அவரது பிறந்த தேதி என நம்பி, பலரும் வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். வேற வழியில்லாமல், இல்லாத பிறந்த நாளுக்காக நன்றியையும் சகோ.சக்தி சொன்னார். என் விசயத்தில், இந்த வருட பிறந்த நாளுக்காக 20ம் தேதியே, "போராளிக்கு வாழ்த்துகள்!" என அண்ணன் கடிநெல்வயல் செந்தில் அவர்கள் முதல் வாழ்த்தை முதல் நாளே தொடங்கி வைத்திருந்தார்.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள், பங்காளி, அண்ணா, தம்பி, தோழர், நண்பா, சார், மகனே, மச்சி, மாப்ள, சகோ, பங்கு, ப்ரோ, சகோதரா, போராளி, தங்கமே, தலைவா, ஜி, இமல், இமலா, பாலாஜி, இமலாதித்தன் என பல்வேறு உறவு முறைகளோடு வாழ்த்துகளை சொன்ன அனைவரது வார்த்தைகளாலும் மகிழ்ச்சியடைந்தேன். அண்ணன் நாச்சிக்குளம் சரவணன், சகோ சத்தியேந்திரன், பங்காளி உதயகுமார், தம்பி விமல் போன்றோரின் போட்டோஷாப் வாழ்த்துகளும், பங்காளிகள் சிவ…

திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!

Image
மகாபலி என்ற அகம்படி குலத்தில் உதித்த மன்னனின் முற்பிறவி, எலியென்பது சமய நம்பிக்கை. முற்பிறவியில், வேதாரண்யம் என்ற திருமறைக்காட்டு நாதர் கோவிலுள்ள அணைகின்ற நிலையிலிருந்த விளக்கை எதேச்சையாக தூண்டிவிட்டதால், அடுத்த பிறவியில் மனிதம் போற்றும் மன்னனாக பிறந்ததாக மகாபலியின் முற்பிறவி பற்றிய புராண வரலாறு சொல்லுகிறது. சேர நாட்டை ஆண்ட தமிழ் மன்னனான மாவலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளில் தன் ஆண்ட மண்ணை காண வருகிறார் என்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு.

அனைவருக்கும் திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!

காவிரியும் தமிழனும்!

காவிரிக்காக, கன்னடமே தீப்பற்றி எரிகிறது; இங்கே, ஜெயலலிதா காலில் விழுந்து கிடப்பதை தவிர வேறவொன்றுமே சாதிக்காத, சாதி தலைவனெல்லாம் இப்போதே அக்டோபர் மாத அலப்பறைகளுக்காக அடி போட்டு கொண்டிருக்கின்றான். கல்லணையை கட்டிய கரிகாலன் பிறப்பெடுத்த இரும்புத்தலை மண்ணோ, இன்று துருபிடித்து கிடக்கிறது; பசும்பொன்னை தவிர வேறெந்த அரசியலும் தெரியாத செம்மறியாட்டு கூட்டத்தில், சாதி தலைவர்கள் ஊருக்கு ஒருத்தர் உண்டு; ஆனால், சாதிக்கத்தான் சங்கம் வளர்த்த இந்த தமிழ் நானிலத்தில் ஓர் ஆளில்லை.

கன்னட வெறியர்களிடம் அடிவாங்கியது அந்தவோர் அப்பாவி தமிழ் இளைஞன் மட்டுமல்ல; ஜெயலலிதா போன்ற தமிழரல்லாதவர்களை, வெறும் 200 ரூபாய்க்காக ஆட்சியில் அமர வைத்த ஒட்டுமொத்த தமிழ்நாட்டு காரனுக்குமான அடிதான் அது... இந்த மாதிரியான விசயத்துக்கெல்லாம் காந்திய வழியை விட, நேதாஜிய வழி தான் சரியாக இருக்கும். ஆனால், இங்கே நேதாஜியை ஆதரிக்கிற ஆட்கள் கூட, சீமானை எதிர்க்கிறார்கள்; அப்பறம் எப்படி மாற்றம் நிகழும்? யாராலும் விமர்சிக்கப்படாத ஓர் அரசியல்வாதி இதுவரையிலும் உண்டா? சீமானும் அரசியல்வாதிதான்; ஆனால் சீமான் கையிலெடுத்த அரசியல் தமிழனுக்கானது. அதை நாம…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே!"

- திருமூலர், திருமந்திரம்.

கோவில்கள் நிறைந்த ஊரென்றால் கும்பகோணம், காஞ்சிபுரம், மதுரை என பல்வேறுவிதமாக சொல்லப்பட்டாலும், நாகப்பட்டினத்திற்கும் கோவில்களுக்கும் அதிக தொடர்புண்டு. கிருத்துவர்களுக்கான வேளாங்கன்னி (வேல்நெடுங்கன்னி - சிக்கல் முருகன் கோவிலிலுள்ள அம்மனின் பெயர்) தேவாலயமும், இசுலாமியர்களுக்கான நாகூர் தர்காவும், நாகைக்கு உட்பட்ட 10 மைல் தொலைவிற்குள்ளாகவே இருக்கின்றன; இந்த ஒரு செய்தியே போதும், நாகப்பட்டினம் என்ற இந்த பழம்பெரும் நகரத்தின் ஆன்மீக சமத்துவ அடையாளத்தை புரிந்துகொள்ள முடியும்.

சோழர், பாண்டியர், பல்லவர் கலை நயம் மட்டுமில்லாத போர்த்துக்கீசியர் ஆட்சிக்காலத்தில் சீர்படுத்திக்கொடுத்த மலைக்கோவில், அகத்தியர் வழிப்பட்ட கோவில், யாளி பலிபீட வாகனமாய் இருக்கும் கோவிலெனெ புகழ் பெற்ற 12 சிவன்கோவில்கள் நாகையில் உண்டு. கோரக்கர், அழுகணி, ராமதேவர், சட்டமுனி, மாங்கொட்டை சித்தர் என பல ஜீவசமாதிகள் நாகையில் உண்டு. காசியில் இராமதேவரால் கண்டெடுக்கப்ப…

இங்கே யார் புனிதர்?

புனிதர் பட்டம் யாருக்கு? எதனடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா? இறந்தவர்களுக்கு (மட்டுமே) கொடுக்கப்படும் புனிதர் பட்டத்தின் பின்புலத்திலும் சில விதிமுறைகள் இருப்பதாக வாடிகன் தலைமையகம் சொல்லலாம். அதிலும், ரோமன் கத்தோலிக் கிருஸ்துவர் அல்லாத வேறு கிருஸ்துவர்களுக்கு இந்த புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. இறந்தபின்னால் ஓரிரு அற்புதங்கள் செய்யும் ஒருவருக்கே புனிதர் பட்டம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால், தமிழர்களின் குலதெய்வ வழிபாடான ஐயனார் போன்ற நாட்டார் வழிபாட்டுமுறையில் எத்தனையோ அற்புதங்கள் காலம்காலமாக நடைப்பெற்று கொண்டே இருக்கின்றன; அத்தகைய அற்புத நிகழ்வுகளுக்கு தொடர்புடைய பூசாரிகளும், சாமியாடிகளும், குறிசொல்லிகளும் கூட வாடிகன் விதிமுறைப்படி புனிதர்கள் தான்... நாம் தான் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுப்பதில்லை.

அன்னை தெரசா, அவர் வாழ்ந்த காலத்திலேயே புனிதர் தான்; அதில் எவ்வித மாற்றுகருத்தும் இல்லை. ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், ஏழை மக்களுக்காக அவர் எவ்வளவோ சேவை செய்த போதும், இந்தியாவில் கொண்டு வ…

'சேர்வை ப.அரங்கசாமி முதலியார்'

Image
('சேர்வை ப.அரங்கசாமி முதலியார்' இடம்: வேலூர்.)

அகமுடையார்களின் பட்டங்களான சேர்வையும், முதலியாரும் ஒரே பெயருக்குள்ளாகவே முன்னும்பின்னுமாக ஒன்றாகி போனதற்கான ஒரு சின்ன எடுத்துக்காட்டு இது. சேர்வை, தேவர், முதலியார், பிள்ளை, உடையார், நாயக்கர் என்று வட்டாரங்களுக்கேற்ப வெவ்வேறான பட்டங்களால் அறியப்பட்டாலும், இனக்குழுவாக #அகமுடையார் என்ற ஒற்றை அடையாளமாய் ஒன்றிணைந்தது தான் நிகழ்கால சாதனை. இதுவே வருங்காலத்திற்கான நிகழ்கால வரலாறு.

பட உதவி: விமல் உடையார், செல்வராஜ சோழன்

ஹிந்து எனும் போலி அடையாளம்!

அஷ்டமி - நவமி ஆகாதென்று சொல்வார்கள். ஆனால், ஆரிய நிறமான சிவந்த நிறத்தை கொண்டில்லாத கருமை நிற கண்ணன்/கிருஷ்ணன் - கோகுலாஷ்டமி என்ற அஷ்டமியிலும், கருமை நிற ராமன் - ராமநவமி என்ற நவமியிலும் அவதரித்ததாக சொல்வதிலுள்ள சூட்சமம் என்னவென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகிறது; அனைத்தையும் தன்வசம் படுத்தி ஏப்பமிடும் ஆக்டொபஸ் போல, ஆரியமும் காலம்காலமாக இம்மண்ணில் பலவற்றை ஏப்பமிட்டு வருகிறது.

சீதையால் கோழை என தூற்றப்பட்ட ராமனை கடவுளாக்கிய கம்பரை விட வால்மீகி நேர்மையாளர் என்பதை தெரிந்து கொள்ள கூட வடக்கத்திய மொழியறிவு தேவையாகிறது. நேர்மையற்ற முறையில் பல சூழ்ச்சிகளால் துரியோதனனை வீழ்த்திய கிருஷ்ணனுக்கும், வாலியை மறைந்திருந்து தாக்கிய ராமனுக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. தான் வாழ பிறரை கெடுப்பதுதான் இறைமொழியாயென்று சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் முடியவில்லை. கடவுள் போல தம் மக்கள் போற்றிய மாவலி மன்னனை, அந்தனனாய் போலி வேடம் தரித்து பிச்சை கேட்டு படுகொலை செய்த வாமனனுக்கும், கர்ணனிடம் யாசகம் கேட்டு இறப்பில்லா வரம்பெற்ற கவச குண்டலத்தை களவாடிய கிருஷ்ணனுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

ஆரிய அகராதிகளில் துரோக…

திருவள்ளுவர் சமணரா? திருக்குறள் சமண நூலா?!

”ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” - முதுமொழி

பல்லுக்கு உறுதி தரக்கூடியவைகளில், ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும் எந்தளவுக்கு உண்மையோ, அதுபோலவே நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதியென சொல்லிருக்கிறார்கள். இங்கே ”நாலும் இரண்டும்” என்பதில், நாலும் என்பது நான்கு அடிகளை கொண்ட நாலாடியாரும், இரண்டும் என்பது இரண்டு அடிகளை கொண்ட திருக்குறளும் குறிப்பிடப்படுகிறது. மேலும், நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை என்னால் முடிந்தளவுக்கு சிறிய ஒப்பீடு செய்திருக்கிறேன். அவை;

01. இந்த இரண்டுமே பதினென் கீழ் கணக்கு நூல்களில் இடம்பெற்று இருக்கின்றன.

02. இந்த இரண்டிலுமே, பாடல்களெல்லாம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

03. இந்த இரண்டு அறநூல்களுமே, அறத்துப்பால் - பொருட்பால் - இன்பத்து பால் என்ற மூன்று பெரும்பிரிவுகளை கொண்டுள்ளன.

04. நாலடியாரில், அறத்துப்பால் - 13 அதிகாரங்களும், பொருட்பால் - 24 அதிகாரங்களும், இன்பத்துப்பால் - 3 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 40 அதிகாரங்களை கொண்டுள்ளது.

05. திருக்குறளில், அறத்துப்பால் - 38 அதிகாரங்களும், பொருட்பால் - …

மாவலி மாவேந்தன்

மாவலி யென்பானொரு மாபெருஞ் சேரவேந்தன்,
மானமிகுந் தமிழ மறவனன்றோ.
பாவலரும் பின்னரே பகையொடு சேர்ந்தவனைப்
பழித்துவரும் மடமைத் திறமும் நன்றோ

நாவலந் தீவிலெங்கும் நாயகச்செங் கோலோச்சி
நன்மை பலவுஞ் செய்த காவலனே
யாவரும் எதிர்க்கினும் யானைத்திரளைக் கொல்லும்
யாளிபோல் வெல்லும் பெருமாவலனே

தேவருக் கென்றும்பல தீமைசெய்து வந்ததால்
திருமாலின் அடியினால் தீர்ந்தான் என்பார்
தேவுரையே மாற்றிலும் திருப்பற்று வாய்மை வண்மை
திடமாயவன் கொண்டதைத் தேர்ந்து முன்பார்

மாவலி மரபிலே வந்த சீர்த்தியைக் கிள்ளி
வளவனுந் தேவியாக மணந்திருந்தான்
மாவலி மருகராம் வாணகோ வரையரும்
வளவன்கீழ்ச் சிற்றரசாய் இணைந்திருந்தார்

ஆரியத்தை யெதிர்த்த அருந்தமிழ் வேந்தரெல்லாம்
அசுரரென்றே பண்டைநாள் அழிக்கப்பட்டார்
சீரிய அறிவியல் செழித்துவரு மிந்நாளும்
செந்தமிழ்த் தலைவரே பழிக்கப்பட்டார்

திருவோண நாளிலின்றும் குடிகளின் நலங்காணத்
திரும்பிவரும் மாவலி என்று சொல்வார்
அருளோடும் அவன்அந்நாள் அரசுபுரிந்த வுண்மை
அறிவிக்கும் இதுவொன்றே கண்டு கொள்வீர்

- ’மொழிஞாயிறு’ ஞா.தேவநேயப் பாவாணர்,
(”இசைத் தமிழ்க் கலம்பகம்”, 51. மாவலி மாவேந்தன்)

சைவ 'நந்தி தேவரே' சமண…

திருவள்ளுவரும் சாதி தலைவராகிறார்!

Image
திருவள்ளுவர் தலித் என்பதால் தான் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ அனுமதிக்கவில்லையென நவீன பார்பனராகி போன, திராவிட வைரமுத்து சொல்லிருக்கிறார். வடக்கத்தியனுக்கு தமிழ்நாட்டுக்காரன் எல்லாருமே தலித் தான் என்ற விசயம் கள்ளரான வைரமுத்துக்கு தெரியாது போல. திருவள்ளுவர் இந்த சாதியென சர்டிபிகேட் கொடுக்க யாருக்கும் இங்கே அறுகதை இல்லை. ஏனெனில் திருவள்ளுவர் பிறந்த ஊரையே இதுவரைக்கும் யாராலும் சரியாக நிரூபிக்க முடியவில்லை. மேலும், திருவள்ளுவர் இந்த சாதிதானென உறுதியாக சொல்லவும் எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. இதுதான் எதார்த்தம்.

கீழே இருக்கிற போஸ்ட்ரல இருக்கிற, 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பறையர் முதற்கே உலகு' என்ற புதுக்குறள் மாதிரி, ஒருசில வார்த்தையை மட்டும் மாற்றி புதிதாக போலியான வரலாற்றை உருவாக்கிட முடியுமே தவிர, ஒருபோதும் உண்மையை இவர்களால் வெளிக்கொணர முடியாது. அந்த முதற்குறளிலுள்ள 'பகவான்' என்ற சொல்லுக்கே பல பஞ்சாயத்து நடந்துக்கிட்டு இருக்கு. ஏனெனில், திருக்குறள் ஒரு சமணநூல். திருவள்ளுவரே சமண மதத்தை சார்ந்தவர் தான். எனவே அந்த குரலில் சொல்லப்பட்ட பகவான் என்பது சமணர்களின் கடவுளான ஆதிநா…

விஜய் டிவியின் டி.ஆர்.பி.க்கு பின்னாலுள்ள சாதி கோட்டா சிஸ்டம்!

இந்த விஜய் டிவிக்காரன் முன்னாடியெல்லாம் மெரிட்ல சீட் கொடுத்தாய்ங்க; க்வாலிட்டி இருந்துச்சு. ஆனா இப்போ ரெகமன்டேஷன் மூலமா மேனேஜ்மென்ட் கோட்டாவுல சீட் கொடுக்கிறாய்ங்க; அதுனால இப்போயெல்லாம் ஒர்த்தான க்வாலிட்டிவுள்ள அவுட்புட் ஒன்னுமே வர போறதில்ல... விஜய் டிவியோட மேனேஜ்மென்ட் கோட்டோவுல கூட, உள் ஒதுக்கீடுல கம்யூனிட்டி கோட்டா இருக்கு. அதுல ஒன்னு, பிராமின் கோட்டா; ரெண்டாவது கிருஸ்டியன் கோட்டா.

இந்த உள் ஒதுக்கீட்டில் இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா, சூப்பர் சிங்கர் மாதிரியான ரியாலிட்டி ஷோவுல நான்கு விதமான ரோஸ்டர் முறை உண்டு. அதுல ஒரு ஃபாரினர் ( ஈழத்தமிழருக்கு முன்னுரிமை), ஒரு மலையாளி, (கண்டிப்பா) ஒரு தெலுங்கர், போனா போகட்டும்ன்னு கஷ்டபடுற தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர்னு ஆட்களை ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க.

ஏற்கனவே சொன்ன அந்த பிராமின் - கிருஸ்டியன் கோட்டாவுல கூட சில ப்ரொசிஜர்ஸ் இருக்கு. பிராமின்ல (வைஷ்ணவ)ஐயங்கரா இருந்தாலும், கிருஸ்டியன்ல நாடாரா இருந்தாலும் சிறப்பு சலுகை உண்டு. இப்படியான கேஸ்ட் சிஸ்டத்துல தான் விஜய் டிவி செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இதுக்கிடையில, அடிக்கும் ஜால்ரா மற்றும் அட்ஜஸ்ட்…

தேவர் பெயரில் போலி சாதி அரசியல்!

'தேவர் யாரு?'ன்னு டெல்டா முழுக்க உள்ள எந்த சாதிக்காரன் கிட்ட கேட்டாலும், அகமுடையாரை மட்டும்தான் எல்லாரும் காமிப்பாங்க. இங்கே தேவர் என்ற பட்டம் அகமுடையாருக்கானது. டெல்டா மட்டுமில்லாது, கோவை - திருப்பூர் - திருச்சி - விருதுநகர் என பல்வேறு பகுதிகளிலும் தேவர் பட்டம் அகமுடையாருக்கு உண்டு. அகமுடையாராகிய எங்களுக்கு, பட்டம் தேவர் - சேர்வை - முதலியார் - உடையார் - பிள்ளை எதுவென்றாலும் சாதி ஒன்று தான்!

பிள்ளை என்கிற பட்டம் அகமுடையாருக்கு இருப்பதால் வெள்ளாளரோடு மண உறவு கொள்வதில்லை; முதலியார் என்ற பட்டம் அகமுடையார்களுக்கு இருப்பதால் செங்குந்தரோடு மண உறவு கொள்வதில்லை; உடையார் என்ற பட்டமிருப்பதால் பார்க்கவ குலத்த்தோடு மண உறவு கொள்வதில்லை. சேர்வை என்ற பட்டம் இருப்பதால், எட்டுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கும் சேர்வை என்ற பட்டம் இருக்கின்ற காரணத்தால் அகமுடையார் அல்லாத எந்த சாதியோடும் மண உறவு கொள்வதில்லை; அது போலவே, தேவர் என்ற பட்டமும் அகமுடையாருக்கு இருப்பதால், பிரான்மலை கள்ளர் - மறவர் போன்ற மற்ற சாதிக்களோடும் மண உறவு செய்ய விரும்பியதில்லை.

இரா.ச. இமலாதித்தன்
பட்டம்: தேவர்
பிரிவு: பதினெட்டு கோட்டைப…

சாதியம் தாண்டி, சாதித்த காமராஜர்!

கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட காமராஜர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல இந்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் இங்கே இல்லாமலே போயிருந்திருக்கும். மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையை, 27000 பள்ளிகளாக தன் ஆட்சிக்காலத்தில் மேம்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை முதன்முதலாக உருவாக்கிய உத்தமர் காமராஜர்.

மேலும், ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டதை ரத்து செய்த சமதர்மவாதி அவர். இந்திய அரசியலில் கிங்மேக்கராக விளங்கிய காமராஜர் காலத்தில் தான் என்.ஐ.டி. போன்ற தேசிய அளவிலான கல்வி நிலையங்களும் தமிழகத்தில் கால் பதித்தன. இது தவிர அவரால் தான் தமிழகத்தின் நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டது. காவிரி, அமராவதி, வைகை, மணிமுத்தாறு, மேட்டூர் போன்ற பல நீர்பாசன திட்டங்களும் காமராஜர் காலத்தில் தான் உருவாகப்பட்டது.

01. பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)

02. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

03. மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
(MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

04. இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)

05. நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சால…

மருதுபாண்டியர்களின் பள்ளிவாசல்!

Image
1780 முதல் 1801ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், நரிக்குடி-முக்குளத்தில் கட்டியெழுப்பிய "ஜமால் அவுலியா" என்ற பள்ளிவாசல்!

சுவாதி கொலைக்கு பின்னாலும் அரசியல்!

நிகழ்வு 1:

பேஸ்புக்ல ஒரு மணிநேரத்துக்கு ஒரு போட்டோவை அப்லோட் பண்ற பொண்ணுங்களை பார்த்தாலே எரிச்சலாகும். இன்னைக்கு நிலவரபடி, பொண்ணு பேருல ஒரு ஃபேக் ஐடி, ஸ்டேடஸ்ல ஒரேவொரு புள்ளி வச்சாலே இரண்டாயிரம் லைக், ஆயிரம் கமெண்ட், ஐநூறு ஷேர் பண்ற ஆளுக இங்க இருக்காங்க. இந்த லட்சணத்துல தன்னோட போட்டோவை போட்டு சந்தோசப்படுற பொண்ணுங்களும் இருக்கத்தான் செய்றாங்க. அந்த போட்டோவுக்கு, செல்லம், க்யூட், அழகு, சூப்பர்மா, கலக்குறடி, தேவதை, செம்ம, இப்படியாக வழியும் ஆண்கள் ஒருபக்கம் இருக்க, அதை தனக்கான அழகியலின் அளவீடாக எடுத்துக்கொண்டு பெருமை பட்டுக்கொள்ளும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்பறம் எவனாவது மனம்பிறழ்ந்தவன் அந்த போட்டோவை மார்பிங் செய்து, பலான வாட்சப்-ஃபேஸ்புக் குரூப்ல ஷேர் பண்ணின பிறகு நீலிக்கண்ணீர் வடித்து என்ன ஆகபோகுது?

ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள் நுழையவே முடியாது. ஆனால், ஊசிகள் தான் நூலை வலுக்கட்டாயமாக உள்ளே நுழைக்க பெரும் முயற்சிகள் செய்கின்றன என்பதுதான் சமகால எதார்த்தம். இங்கே சொல்லப்பட்டுள்ள எந்த வார்த்தையிலும் பெண்ணடிமைத்தனமோ, ஆணாதிக்கபோக்கோ இல்லை. கமெண்ட்களில் வழியும் ஆண்களோ, போட்டோக்…

இனிய வாழ்த்துகள் இளைய தளபதி!

Image
"அவமானங்களை சேகரித்து வை; வெற்றி உன் வசமாகும்!" - இந்த வாசகம் இளையதளபதி விஜய்க்கு தான் கச்சிதமாக பொருந்தும். அவர் சினிமா துறைக்கு வந்தது முதற்கொண்டு, இப்போது வரையிலும் அவரை விமர்சிக்காத வண்டு சிண்டுகளே கிடையாது. சமூக ஊடகங்கள் தலையெடுத்ததற்கு பின்னால், விஜயை எந்தளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்க முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தி வருகின்றனர் என்பது விஜய் உள்பட அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். விமர்சனம் தான் தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பதை தெளிவாக புரிந்து கொண்ட விஜய், இவற்றையெல்லாம் கண்டு சோர்வடைந்தது இல்லை.

கன்னடரான ரஜினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அதே கூட்டம், பச்சைத்தமிழனான விஜயை மட்டும் திட்டமிட்டே தமிழ்நாட்டில் அவமதிக்கிறது. ஒரு கமர்சியல் நடிகனாக, டான்ஸ் - ஃபைட் - காமெடி - செண்டிமெண்ட் என விஜயிடம் அனைத்துமே இருக்கிறது. ஆனாலும் அதையே குறை கூறி விஜயை விமர்சிக்கின்றனர் இணையதளவாசிகள். இந்த விசயத்தில் விஜய் தெளிவாகவே இருக்கிறார். 'தன்னுடைய படம் ரசிகர்களுக்கானது; அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே படம் நடிக்கிறேன்' என்பதே அவரது அளவீடாக இரு…

இனிய தந்தையர் திருநாள் வாழ்த்துக்கள்!

Image
ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கையின் முழுமைத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பிப்பதே, தனக்கென ஒரு குழந்தை பிறந்ததற்கு பிறகு தான்! அதுவரையிலும், எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலின்றி ஊர்சுற்றியாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் ஊதாரியாக இருந்த அனைத்து ஆண்களும், அப்பா என்ற பதவிக்கு வந்தபின்னால் தனக்கான பொறுப்புகளை உணர்ந்து தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள்; எதையுமே பொறுமையாக, கவனமாக, ரொம்பவே யோசித்து செயல்படுத்துகிறார்கள். இளமையின் வேகம் குறைந்து, அனுபவமிக்கவராகவும் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பெருமைகொண்ட மாண்புமிகு அப்பா என்ற பதவியை வகிக்கும் திரு. இரா.சம்பந்த தேவரான என் அப்பாவின் தியாகத்தையும் உழைப்பையும் இந்நாளில் நினைவுகூர்கிறேன். பக்கத்துல தான் அப்பா இருக்காங்க; இருந்தாலும் இந்த வாழ்த்துகளெல்லாம் நேரில் சொல்ல தோனவில்லை. அது பக்தி; பாசம்; பயம்; தலைமுறை இடைவெளி. இப்படி ஆயிரம் அர்த்தம் இருந்தாலும், விலகியே ரசிக்கிறேன் என் அப்பாவை.

இனிய தந்தையர் திருநாள் வாழ்த்துக்கள்!

உண்மையான கபாலி யார்?

ஜூன் 14ல் உலகில் எங்கோவொரு மூலையில் பிறந்த சே குவேராவை கொண்டாடும் அதே வேளையில், எம் டெல்டா மண்ணில் பிறப்பெடுத்த ”வாட்டக்குடி இரணியன் - ஜாம்பவனோடை சிவராமன் - மணலி கந்தசாமி - மலேயா கணபதி” போன்ற தமிழ்குடியான அகமுடையார் குலத்தில் தோன்றிய பொதுவுடைமை போராளிகளையும் போற்றி கொண்டாடுவோம்!

"கலகம் செய்து ஆண்டையரின்
கதை முடிப்பான்

பறையிசை அடித்திட்டு பாட்டு கட்டு
ஏய் இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரிகூட்டம் ஆடி போச்சே

நாங்க எங்க பிறந்தா
அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து நின்னவன்
தமிழன் தானடா

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது"

இந்த பாடல் வரிகளின் மூலம் புரிந்து கொண்டது ஒன்றைத்தான். அது, இப்போது தான் நீண்ட வருட உழைப்பினால் அனைத்து சாதியும் ஒன்றாக தமிழ் தேசிய பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம்; ஆனால், அந்த கருத்தியலை உடைக்கிறது கபாலி பாடல் வரிகள். மேட்டுக்குடி, ஆண்டை, போன்ற சக தமிழ் சாதிகளை சேந்த அனைவருமே ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரி என்பது போலவும், ஈ.வெ.ரா., ரஜினி போல எங்கே பிறந்தாலும் இங்கே பிழைப்புக்காக நடித்தால் அவர்களெல்லாம் தமிழன் தான்…

ஆன்மீகம் எதுவென உணருங்கள்!

நம் எண்ணங்களுக்கு அபூர்வமான ரகசிய சக்தி உண்டு. நாம் எதை நோக்கி அதிகம் கவனம் செலுத்துகிறோமோ, அது நம்மருகே எந்த முயற்சியுமே இல்லாமல் கவர்ந்திழுக்கப்படும். எதை அதிகமாக சிந்திக்கிறாமோ அது தொடர்பான அனைத்தும் நமக்கு வசமாகும். அதற்கு முதன்மையான அடிப்படை தகுதி, நம்பிக்கை மட்டுமே. ஒரு விசயம் கிடைக்குமென நம்பி, அதை கேட்டால், அதை நாம் நிச்சயம் பெற முடியும். இங்கே அதை யாரிடம் கேட்பது என்பதில் குழப்பம் வந்தால், ஒரு கருங்கல்லிடம் கூட கேட்கலாம். ஆனால் சந்தேகமில்லாமல், கேட்க வேண்டும்; கிடைக்குமென்ற ஒற்றை நம்பிக்கையோடு கேட்க வெண்டும். நிச்சயம் அது கிடைத்தே தீரும். தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த பரம்பொருள் நமக்காக வரங்களை கொடுக்க காத்திருக்கிறது. ஆனால், நாம் தான் அதை கவனிக்க தவறிக்கொண்டிருக்கிறோம்.

அந்த பரம்பொருளானது, எந்த மதத்தினாலும் காப்புரிமை வாங்கப்பட்டு, எவராலும் உருவாக்கப்பட்ட இறைவனல்ல. அது இயல்பாகவே நம்மை சூழ்ந்திருக்கும் ஒட்டுமொத்த 'பிரபஞ்சம்' தான். பல்லாயிர கிரகங்கள் உட்பட பலநூறு சூரிய சந்திரன்களையும் பால்வெளியில் பேரண்டமாய் சுமந்திருக்கும் அந்த ஒற்றை கூரையான பிரபஞ்சமே பேரம்பலம…

இந்த வார அரசியல்!

வைகோ மாதிரி தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி கொண்டாலே, பொய்யான மாயையை இந்த தேர்தலுக்கு பிறகும் கொஞ்ச காலம் சிலர் தக்க வைத்து கொள்ள முடியும்!

#

ஓரிரு நாட்களில் அதிமுகவில் மேலும் சில வேட்பாளர் மாற்றம் வரவும் வாய்ப்பிருக்கிறது.

#

கடைசி வரைக்கும் ஜெயலலிதாவின் வாசற்கதவு திறக்கப்படுமாயென காத்திருந்த கதையெல்லாம் இன்றைக்கு மறந்து போய் விடுமா என்ன? தேர்தல் முடிந்த பின்னால் ஓட்டுகளின் எண்ணிக்கை சொல்லிவிடும், சிலரது பல(வீன)த்தை!

காத்திருக்கிறேன்...

#

ஒருவேளை திருவாடானை தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்றால், 'எங்கள் ஓட்டுகளால் தான் அவர் வெற்றி பெற்றார். எங்களிடம் கை கால்களில் விழுந்து கெஞ்சியதால் ஓட்டு போட்டோம்'ன்னு சொல்வாய்ங்க. மாறாக, கருணாஸ் தோற்றுவிட்டால், 'எங்களுக்கு சீட் கொடுக்காத தொகுதியில் அகமுடையானை ஜெயிக்க வைத்துவிடுவோமா?!'ன்னும் சொல்வாய்ங்க.
போலியான சாதி அமைப்புகளின் உண்மை தன்மையை, நிச்சயமாக கருணாஸ் இந்த தேர்தலுக்கு பிறகு புரிந்து கொள்வார்.

மரு.சேதுராமனுக்கு சில கேள்விகள்!

Image
மாமன்னர் மருதுபாண்டியர் பிறந்த நரிக்குடி முக்குளத்திற்கு என்ன செய்தார், முக்குலத்தின் காவலரான சேதுராமன் அகமுடையார்?! குறைந்த பட்சம் மணிமண்டபம் கட்டலாமே? ஏன் தயக்கம்? வறண்ட சிவகங்கை என்பதாலா?!

சென்னையில் மருதுபாண்டியர் சிலை வைக்க நடவடிக்கை எடுப்பாரா, அகமுடையாராக பிறந்த சேதுராமன்?

சிவகங்கையில் சிலை வைக்கவோ, காளையார்கோவில் நினைவிடத்தை புணரமைக்கவோ முடியாத சேதுராமன், தானொரு அகமுடையார் என இப்போது சொல்லிக்கொள்வது ஏன்?

அகமுடையார் வேட்பாளர் பட்டியல் 2016

234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் அகமுடையார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்ற போதிலும், வேட்பாளராக களமிறங்குவோரில் 90% பேருக்கு நிச்சய வெற்றி கிடைக்குமென்பதே நேரடி கள நிலவரம். அகமுடையார்கள் 60 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருந்த போதிலும் அனைத்து கட்சிகளின் சார்பில் ஏறத்தாழ 40 தொகுதிகளில் மட்டுமே அகமுடையார் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆட்சியமைக்கும் வல்லமையுள்ள திமுக - அதிமுக என்ற இரு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களில் 10% கூட அகமுடையார் இல்லை என்பது தான் குறிப்பிடதக்க விசயம்.

அதிமுக கூட்டணி:- (08 / 234)

அதிமுக:

01. திருவண்ணாமலை - பெருமாள்நகர் கே.ராஜன்
02. கலசபாக்கம் - வி.பன்னீர்செல்வம்
03. போளூர் - சி.எம்.முருகன்
04. காட்பாடி - எஸ்.ஆர்.கே.அப்பு
05. கும்பகோணம் - ரத்னா
06. திருச்சுழி - கே.தினேஷ்பாபு
07. வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியம்

புலிப்படை:

01. திருவாடனை - சேது.கருணாஸ்

-----------

திமுக கூட்டணி:- (15 / 234)

திமுக:

01. புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு
02. திருக்கோவிலூர் - பொன்முடி
03. மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
04. வேலூர் - ப.கார்த்திகேயன்
05. போளூர் …

மாற்றம் - முன்னேற்றம் - ஜெயலலிதா!

Image
ஒரே மேடையில் வேட்பாளர்கள்...

சூறையாடப்படும் தமிழ்!

Image
அன்று, யாழ் நூலகத்தை 'சிங்களவன்' தீயிட்டி சூறையாடினான். இங்கு, திருக்குறள் மன்ற நூலகத்தை 'திராவிடன்' சூறையாடுகிறான்.
'நாம் தமிழர்' என உணராத வரை, நாம் இனவழிப்பு செய்யப்பட்டு கொண்டே இருப்போம்...

மற்றுமொரு புரட்சித்தலைவி!

Image
மற்றுமொரு புரட்சித்தலைவி, திருச்சியில் உருவாகி விட்டார்!
நடிகைகள் நாடாள்வதில் தவறில்லை; வருங்கால முதலமைச்சர் செல்வி. நமிதா அம்மையாருக்கு வாழ்த்துகள்!

கோவில்களுக்கு பின்னுள்ள அரசியல்!

Image
-01-

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள புள்ளிருக்கு வேளூர் என்ற வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள முத்துகுமாரசுவாமி கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் 'சடாயு குண்டம்' என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இது தவிர, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள கோடிக்கரையின் முனையின் 'ராமர் பாதம்' என்ற உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை இராமாயணத்தில் இராமர் இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும், அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.
திருமறைக்காடு என்ற எங்கள் ஊரையெல்லாம் இந்த வடக்கத்திய மேப்பில் காணவில்லையே?! இதுல எது உண்மை? எது பொய்?

-02-

முகாலயர்களின் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ சிவன் கோவில்களை ஆக்கிரமித்து தான் மசூதிகள் கட்டப்பட்டு இருக்கின்றன என்பதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதோ, அதற்கு நிகரான மற்றுமோர் உண்மை என்னவெனில், முகலாயர் காலத்திற்கு முன்பாக வே கணக்கிலடங்கா சமண கோவில்களை ஆக்கிரமித்து தான் பல சிவன் கோவில்களும் …

இது செம்ம ட்விஸ்ட்டா இருக்கே!

Image
அமைப்பின் பெயரில் முக்குலதோரும் இல்லை; புலிப்படை என்பது சாதிய அமைப்பும் இல்லை.

இந்திர விழா! - 2016

Image
'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி'

- திருக்குறள்

வேளாண்மை இருபெரும் பிரிவுகளாகவே பன்னெடுங்காலமாய் மருத நிலத்தில் இருந்து வந்தது. ஒன்று உழுவித்த வேளாளர், மற்றொன்று உழுதுண்ட வேளாளர். ஆதி நிலமான குறிஞ்சியிலிருந்து முல்லையும், முல்லையிலிருந்து ஒரே காலக்கட்டத்தில் ஒருபுறம் நெய்தலும், மறுபுறம் மருதமும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னாலே தான் மனிதனின் வளர்ச்சியே உருவெடுத்தது. அப்படிப்பட்ட பெருந்திணைகளில் ஒன்றான மருதத்தின் கடவுளாக போற்றக்கூடிய இந்திரனை, உழுவித்த வேளாளர்களான அகமுடையார் போன்ற சமூகத்தினரும் போற்றி வணங்கி இருந்திருக்க கூடும். ஏனெனில் '...கணத்ததோர் அகமுடையார், மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினரே!' - பழங்நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் இந்த மொழியாடலில் கூட கணம் என்பது காவலையும், வேள் என்ற பதத்தையும் தான் குறிப்பதாக இலக்கிய சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த வேள், கணம் என்ற ஆய்வே அகமுடையார்களின் வேளாண் - காவல் போன்ற துறைகளை பற்றி மிக நீண்ட வரலாற்றை மீட்க உதவுகிறது.

ஆண்டு தோறும் சித்திரை முழுநிலவு திருநாளில் சோழாநாடான (எங்…

ஜெயலலிதா பார்வையில் தமிழர்கள்!

Image
சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்து கொண்டிருந்த போது, "போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள்" என கூறிய ஜெயலலிதாவிடம், உங்கள் தேர்தல் பரப்புரையை பார்க்க வந்த நான்கு பேர் வெவ்வேறு இடங்களில் இறந்துள்ளனரே?! என கேள்வி கேட்பதே வீண் வேலை தான். ஒருவேளை இதையே விமர்சனமாக சொல்லி கேள்வி கேட்டாலும் பதில் இப்படியாகத்தான் இருக்கும்.

"வெயிலின் தாக்கத்தால் அண்டை மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்; ஆனால் நான் தலைமை வகிக்க என் தலைமையிலான ஆட்சியில் இதுவரை நான்கு பேர்தான் இறந்துள்ளனர். எனவே, இந்த பொற்கால ஆட்சி தொடர, நான் ஹெலிகாப்டரில் பறந்து வந்து, உங்கள் சகோதரியாய் மேடையில் பத்துக்கும் மேற்பட்ட ஏசிக்களின் உதவியுடன் தனியாளாய் அமர்ந்திருந்து, உங்களையெல்லாம் கொளுத்தும் வெயிலில் அமர வைத்தாலும், உயிரிழப்பு குறைவாகத்தான் இருக்குமென ஆண்டவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன். ஏனெனில் நான் சொன்னதையும் செய்வேன்; சொல்லாததையும் செய்வேன் என்பதை நீங்கள் சென்னை வெள்ளத்தின் போதே நன்றாகவே அறிந்திருப்பீர்கள்."

தெறி!

Image
அகமுடையார்களான, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் அட்லி உள்ளிட்ட இம்மூவேந்தர்களின் கூட்டணியில் உருவான 'தெறி' படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே படம் பிடித்து போனது. ஒவ்வொரு முறையும் துப்பாக்கி போலவே எல்லா படங்களையும் விஜயால் தர முடியாது; அப்படி அவர் அது மாதிரியான படங்களை தொடர்ச்சியாக தந்தால், விஜய் ஒரே மாதிரியான படங்களிலேயே நடிக்கிறாரென இணையதள நக்கீரன்கள் குற்றம் சுமத்துவார்கள். பொதுவாக விஜய் படத்தின் டீசர் வந்தாலே, அதையே திரைவிமர்சனம் போல பல்வேறு மீம்ஸ் உருவாக்கி தரம் தாழ்ந்து விமர்சித்து சுகம் காணும் கூட்டம் அதிகமாகி வரும் இச்சூழலில், சேகுவேரா படம் பதித்த டீசர்ட்டை அணிந்து கொள்வது போலவே விஜயை கிண்டல் செய்வதும் கூட ஒரு ட்ரெண்ட் செட்டாகி விட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

விஜய் - அஜித் என்ற ஒப்பீட்டுளவில், தெறியை வீரம் படத்தோடு ஒப்பிட்டால், என் பார்வையில் தெறி நூறு மடங்கு வீரத்தை விட சிறப்பாக தான் இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர தகுதியுள்ள நடிகரின் படம் எப்படி இருக்க வேண்டுமோ, அந்த திரை இலக்கணத்தின் படியே தெறி படமும் உரு…

யாருக்காக இந்த அரசு?

கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசாங்க பணிகளை புறக்கணித்து வரும், மிகப்பெரிய பொறுப்புகளிலுள்ள பதவியில் இருக்கும் அரசு பணியாளர்களை பற்றி எந்த ஊடகமும் வாயே திறக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு பணிகளும் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. ஆனாலும் அதை பற்றியெல்லாம் 'என் தலைமையிலான ஆட்சி' என்று நொடிக்கொரு முறை தம்பட்டம் அடித்து கொள்ளும் ஜெயலலிதாவுக்கும் கவலையில்லை.

அந்த அரசு அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளையாவது நிறைவேற்றி தரலாம். இல்லையென்றால் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி இந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட சொல்லலாம். எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு, ஒரு அரசு தேவையா?!
மக்களுக்காகவே அரசு. மக்களுக்கு சேவை செய்யவே, அரசாங்க அலுவலர்களுக்கு சம்பளம். மக்களின் தேவையறிந்து மக்களுக்கு பணியாற்றவே, அரசியல்வாதிகளுக்கு அரசாங்க பதவிகளை மக்கள் வழங்கியுள்ளனர். "மக்களுக்காகவே நான், எனக்கென்று யாருமில்லை" என்ற சொன்னதெல்லாம், வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறது என்பதை இனியாவது ஜெயலலிதா புரிந்து கொள்ளட்டும்.

- இரா.ச.இமலாதித…

அகமுடையார்!

சேர்வை பட்டம் 8 சாதிகளுக்கு உண்டு; பிள்ளை பட்டம் 80 சாதிகளுக்கு மேல் உண்டு; தேவர் பட்டம் 3 சாதிகளுக்கு உண்டு; முதலியார் பட்டம் 2 சாதிகளுக்கு உண்டு; இந்த அத்தனை பட்டங்களும் அகமுடையாருக்கு உண்டு. இந்த அடிப்படை வரலாற்று அறிவே துளியும் இல்லாமல், 'யாரெல்லாம் அகமுடையார்?' என வரையறுக்கும் சிலருக்கு பதில் அளிக்காமலே விலகி விடலாமென தோன்றுகிறது. ஆனால் பதில் நம்மிடம் இல்லையென அவர்கள் நினைத்து விட கூடாதென்பதாலும், அவர்களின் கருத்து தான் சரியென தவறாக புரிந்து கொண்டுவிட கூடாதென்பதாலும் தான் சில இடங்களில் பதில் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

முழுமையான வரலாறே தெரியாமல் அகமுடையார் யார் என சொல்ல யாருக்குமே அறுகதை இல்லை. அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்களது சுய தேவைக்காகவும் சாதியை வரையறை செய்யும் சிலரால் தான், ஒட்டுமொத்த வரலாறும் பாழாகிறது. அகமுடையாருக்கு பட்டங்கள் பலவாகினும், சாதி ஒன்றுதான். அடியேன், தேவர் பட்டமுள்ள அகமுடையார் சாதியை சேர்ந்தவன் என்பதையும், தேவர் என்று ஒரு சாதியே இல்லை என்பதையும், சிலருக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.

- இரா.ச. இமலாதித்தன்

கருணாஸூக்கு ஒரு புரிதல் வரலாம்!

இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரான கருணாஸுக்கு சில உண்மைகள் புரியவரும்!

01. முக்குலத்தோர் என்ற பெயரில் அகமுடையார் ஏமாற்றப்படுவது.

02. அகமுடையார்களை முக்குலத்தோர் என்று சொல்லும் மற்ற இரு குலத்தோரே, அரசியலில் வீழ்த்துவது.

03. முக்குலத்தோர் என்ற கட்டமைப்பே, கள்ளர் - மறவர் நலனக்கானது.
துரோகத்தின் வெளிப்பாட்டை கருணாஸ் அகமுடையார் புரிந்து கொள்ள இந்த தேர்தல் தான் ஒரு கருவி.

- இரா.ச. இமலாதித்தன்

காவிரித்தாயின் கோரத்தாண்டவம்!

Image
'காவிரித்தாய்க்கு பாராட்டு விழா' எடுத்த பொறம்போக்குகளின் நிலங்களில் ஹெலிபேடு அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலங்களை கூட ஆக்கிரமித்து தார் சாலையையும், சுற்று வட்டாரத்திலெல்லாம் கான்கிரீட்டையும் போட்டுக்கொள்ளட்டும். ஆனால், ஜெயலலிதா சுற்றுப்பயணம் சென்ற இடங்களில் விவசாய நிலங்களை ஏக்கர் கணக்கில் ஆக்கிரமித்து அழித்ததை எந்த பசுமை தீர்ப்பாயமும் கண்டு கொள்ளாது. ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரையை காண வந்த இடத்தில் நடைபெற்ற பல உயிரிழப்புக்காக எந்த மனித உரிமை ஆணையமும் வாயை திறக்காது. இதுதான் ஜெயலலிதாவின் ஆணவத்திற்கு அடித்தளமாகவும் அமைகிறது.

காவிரியின் மைந்தனாக ஒருங்கிணைந்த தஞ்சையான நாகையில் ஒரு விவசாய பெருங்குடியில் பிறந்த என்னைப்போன்ற பலருக்கு, ஹெலிபேடுக்காக ஏக்கர் கணக்கில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து அம்மண்ணின் அடிப்படை வளத்தையே அழித்தொழித்த ஜெயலலிதா, என்றைக்குமே அந்நியராகத்தான் தெரிவார். ஒருபோதும் காவிரித்தாயாக தெரிய மாட்டார். காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்; அந்த காலமும் நிச்சயம் வரும்.

- இரா.ச. இமலாதித்தன்

புத்தாண்டு வாழ்த்துகள்!

Image
தமிழ் கடவுளான சேயோன் என்ற முருகனை, சுப்ரமண்யனாக்கினார்கள் என்பதாலும்; தமிழ் கடவுளான மாயோன் பெருமாளை, பாலாஜி ஆக்கினார்கள் என்பதாலும்; அவர்களை வணங்குவதே தவறென சொல்வதை ஏற்கும் மனநிலை எனக்கில்லை. உருமாற்றம் பெற்ற பெயர் எதுவாகினும் ஆதியை பாதியில் விட மனமில்லை.

'மன்மதனை' மனமகிழ்வோடு வழியனுப்பி, 'துர்முகி'யை இன்முகத்தோடு வரவேற்கும் இனிய நாளான சித்திரை முதல்நாளான, தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!


அம்பேத்கர் ஜெயந்தி!

Image
சாதிய - அரசியல் - சமூக காரணங்கள் பல பின்புலமாக இருந்தாலும் கூட, பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இந்தியாவெங்கும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே தலைவரின் சிலையாக அம்பேத்கார் இருக்கிறாரென்பதை உணர்கையிலேயே அவரது ஆளுமையை புரிந்து கொள்ள முடியும். எந்த அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்க முடியாத பெருந்தலைவராக சமகாலத்திலும் விளங்கி வரும், 'அம்பேத்கர் ஜெயந்தி' வாழ்த்துகள்!

அரசியலில் அகமுடையார் துரோக வரலாறு!

Image
இந்த சுவரொட்டியில் நட்சத்திர குறியீட்டுக்குள் இருக்கும் அந்த ஆறு ⁠⁠⁠எழுத்துகளுக்கு பின்னாலுள்ள அகமுடையார் துரோக வரலாறு தெரியுமா?!

”ரா - மூ - ரா - ம - வே - த“

இந்த ஆறு எழுத்துகளும் ஒவ்வொருவரின் பெயரின் முதலெழுத்துக்கள். அந்த ஆறு பேரும் தான் மதுரையின் மாவட்ட செயலாளர்கள். அகமுடையார்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டு, அகமுடையார்களால் அடைக்கலமும் கொடுத்து வளர்த்தெடுக்கப்பட்டு, பின்னாட்களில் ஒட்டுமொத்த அகமுடையார் சமுதாயத்தையே அரசியலில் ஓரங்கட்டிய நன்றி மறந்தவர்களின் முதலெழுத்து.

01.

’ரா’ - செல்லூர் ராஜூ - (பிரான்மலை கள்ளர்) - அதிமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- பழக்கடை பாண்டி (அகமுடையார்).

02.

’மூ’ - மூர்த்தி (கள்ளர் - அம்பலம்) - திமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- தா.கிருட்டிணன் & டி.ஆர்.பாலு (அகமுடையார்).

03.

’ரா’ - ராசன் செல்லப்பா (பிரான்மலை கள்ளர்) - அதிமுக;
அரசியலில் அடையாளப்படுத்தி வளர்த்தெடுத்தவர்:- வக்கில் சுந்தரபாண்டியன் (முதல் அதிமுக மதுரை மா.செ.) அகமுடையார்.

04.

’ம’ - மணிமாறன் (சேடப்பட்டி முத்தையா மகன் - மறவர்) - திமுக;
அரசியல…

மாமன்னர்களின் சிலை சேதம்!

Image
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மருதுபாண்டியர்களின் சிலையை உடைத்தவர்கள், நிச்சயமாக முக்குலத்தோருக்கு எதிரான மாற்று சாதிக்காரர்கள் இல்லை. அது முக்குலத்தோர் என அரசியல் செய்யும் ஈனபுத்தி கொண்ட துரோகிகளால் தான் மருதுபாண்டியர்களின் சிலை உடைக்கப்பட்டுள்ளதாகவே உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளது.

அகமுடையார்கள் தனித்த அடையாளத்தோடு முக்குலத்தோர் என்ற போலி அரசியல் கட்டமைப்பை விட்டு வெளியேறுவதால், அது முக்குலத்தோர் என அரசியல் செய்பவர்களுக்கு பெருத்த அடியாக இருப்பதால் தான் இம்மாதிரியான கேவலமானதொரு செயலில் இவர்கள் இறங்கிருக்கிறார்கள்.
என்னமாதிரியான கீழ்த்தரமான செயல்களில் இறங்கினாலும், முக்குலத்தோர் என அரசியல் செய்யும் துரோகிகளினால் அகமுடையார் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது; இதன் மூலம், மென்மேலும் அகமுடையார்களின் ஒற்றுமை பலமடையத்தான் செய்யும் என்பதை இனி துரோகிகள் புரிந்து கொள்வார்கள்.


 இந்திய போராட்டத்தின் விடிவெள்ளியாக, உலகிலேயே முதன்முறையாக வெள்ளையனுக்கு எதிராக திருச்சி - திருவரங்கத்தில் 'ஜம்புதீவு' போர் பிரகடனத்தை வெளியிட்டு, 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பை …

வாக்காளரும் - முதல்வர் வேட்பாளரும்!

Image
எங்களுக்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைக்கும் ஜெயலலிதாவோ, குளிரூட்டப்பட்ட காற்றோடு மேடையில் அமர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார். ஆனால், முதல்வர் பதவியை தர காத்திருக்கும் தொண்டர்களோ கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் புறக்கணிக்கப்படும் அகமுடையார் சமூகம்!

Image
கள்ளர் கட்சியான அதிமுகவில் அகமுடையாருக்கான அங்கீகாரமில்லை. முக்குலத்தோர் என்ற போர்வையில், பெரும்பான்மை சமூகமான அகமுடையார்களை புறக்கணிக்கும் அதிமுகவின் தலைமை, இனி அகமுடையார்களின் வாக்குகளும் தேவையில்லையென அறிவிக்க தயாரா?
அகமுடையார் வாக்கு அந்நியருக்கும் இல்லை! அதிமுகவுக்கும் இல்லை!


தமிழகத்திலேயே அதிக கிளைகளை கொண்ட அமைப்பாக விளங்கிய "தேவர் பேரவை"யின் நிறுவனர், மரு. வி.இராமகிருஷ்ணதேவர் பிறப்பெடுத்த அந்த அகமுடையார் இனத்தை தேர்தலில் ஒதுக்கியதற்கு வேற யார் காரணமாக இருக்க முடியும்? சசிகலாவை தவிர!

படிப்படியாக மதுவிலக்கு?!

Image
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்! - ஜெயலலிதா

இந்த 'கோவன்'ன்னு ஒரு நாட்டுப்புற பாடகரை 'டாஸ்மாக்' பற்றி பாட்டு எழுதி பாடினதுக்காக தேச துரோக வழக்கெல்லாம் போட்டீங்களே! அது எத்தனையாவது படி?

முக்குலத்தோர் அரசியல்!

இத்தனை வருடங்களாக அதிமுகவை முக்குலத்தோர் கட்சி, தேவர் கட்சியென சொல்லிக்கிட்டே இருந்ததன் விளைவு, கருணாஸ் தவிர வேறெந்த முக்குலத்தோர் அமைப்புகளுக்கும் இதுவரையிலும் அதிமுக கூட்டணியில் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை.

தொடர்ச்சியாக கூட்டணியில் இருந்த எந்த முக்குலத்தோர் கட்சிக்கும் அதிமுக கூட்டணியில் இடமில்லை என்பதற்கான மூலக்காரணமே, அதிமுகவிற்கு முக்குலத்தோர் கட்சியென்ற பிம்பத்தை உருவாக்கியதனால் தான் என்பதை இதுவரை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

மேலும், ஜெயலலிதாவின் பார்வையில், முக்குலத்தோர் அனைவருமே நம் பக்கம் இருக்கையில், தனியாக ஏன் சாதி அமைப்புகளுக்கு இடம் தர வேண்டுமென்று கூட நினைத்திருக்கலாம். அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், அதிமுக எங்க அமைப்போட தலைவரை அவமதித்து விட்டதென சொல்லவதையெல்லாம் ஜெயலலிதா கண்டுகொள்ளவே போவதில்லை. எனவே, இருக்கின்ற சில நாட்களிலாவது நல்லதொரு முடிவை எடுத்து வெற்றிவாய்ப்புள்ள கூட்டணியோடு தேர்தலை சந்திப்பதுதான் விவேகமென முக்குலத்தோர் அமைப்பின் தலைவர்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா?!

- இரா.ச. இமலாதித்தன்