திருவள்ளுவரும் சாதி தலைவராகிறார்!


திருவள்ளுவர் தலித் என்பதால் தான் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ அனுமதிக்கவில்லையென நவீன பார்பனராகி போன, திராவிட வைரமுத்து சொல்லிருக்கிறார். வடக்கத்தியனுக்கு தமிழ்நாட்டுக்காரன் எல்லாருமே தலித் தான் என்ற விசயம் கள்ளரான வைரமுத்துக்கு தெரியாது போல. திருவள்ளுவர் இந்த சாதியென சர்டிபிகேட் கொடுக்க யாருக்கும் இங்கே அறுகதை இல்லை. ஏனெனில் திருவள்ளுவர் பிறந்த ஊரையே இதுவரைக்கும் யாராலும் சரியாக நிரூபிக்க முடியவில்லை. மேலும், திருவள்ளுவர் இந்த சாதிதானென உறுதியாக சொல்லவும் எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. இதுதான் எதார்த்தம்.

கீழே இருக்கிற போஸ்ட்ரல இருக்கிற, 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பறையர் முதற்கே உலகு' என்ற புதுக்குறள் மாதிரி, ஒருசில வார்த்தையை மட்டும் மாற்றி புதிதாக போலியான வரலாற்றை உருவாக்கிட முடியுமே தவிர, ஒருபோதும் உண்மையை இவர்களால் வெளிக்கொணர முடியாது. அந்த முதற்குறளிலுள்ள 'பகவான்' என்ற சொல்லுக்கே பல பஞ்சாயத்து நடந்துக்கிட்டு இருக்கு. ஏனெனில், திருக்குறள் ஒரு சமணநூல். திருவள்ளுவரே சமண மதத்தை சார்ந்தவர் தான். எனவே அந்த குரலில் சொல்லப்பட்ட பகவான் என்பது சமணர்களின் கடவுளான ஆதிநாதரையே குறிப்பதாக பல சான்றுகளை இப்போது திரு.பானுகுமார் போன்ற பல ஆய்வாளர்கள் நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்று சொன்னவருக்கே தாடி ஜடைமுடி கொடுத்த உலகமிது. இவர்களிடமிருந்து, திருவள்ளுவரையும், பா.ரஞ்சித்தையும் தலித் ஆக்க முடியுமே தவிர, கடைசி வரை தமிழராக்கவே முடியாது.

கபாலிடா
பறையர்டா
ரஞ்சித்டா
தலித்டா
திருவள்ளுவர்டா

இப்படியே கத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான், கடைசிவரைக்கும்...

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment